மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.9.15

வீட்டில A/C இருக்கா...எச்சரிக்கையாக இருங்க சாமிகளா!


வீட்டில A/C இருக்கா...எச்சரிக்கையாக இருங்க சாமிகளா!

உங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்,// படித்து பகிரவும் //

நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக...
இனி, குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது.

விடிந்துவிட்டாலும் கூட, ஏ.சி. மெஷினை அணைக்க மனமில்லாமல்,
குதூகல தூக்கத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் பலரும்.
 இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வந்த பத்திரிகை செய்தி,
ஏ.சி-க்கார பார்ட்டிகளை எல்லாம் திகிலில் ஆழ்த்தியிருக்கிறது.

சென்னை, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீவள்ளி, முதல் நாள் இரவு தன்
இரண்டு குழந்தைகளுடன், ஏ.சி. அறையில் தூங்கச் சென்றதுதான் தெரியும்.
மறுநாள் காலையில் அந்த வீட்டிலிருந்து புகை மட்டும் வந்து

கொண்டிருக்க... ஆள் அரவம் எதையும் காணோம். அக்கம் பக்கத்தினர்
ஓடோடி வந்து, கதவை உடைத்துக் கொண்டு போய் பார்த்தால்..
ஸ்ரீவள்ளியும் அவர் மகனும் மயங்கிக் கிடக்க.. ஒன்றரை வயது
பெண் குழந்தை மோனிஷா கட்டிலிலேயே பரிதாபமாக இறந்து கிடக்க... இந்தக் காட்சியைக் கண்ட அத்தனை பேருமே அதிர்ந்துதான் போனார்கள்.

'ஏ.சி-யில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம்' என்று சொல்லியிருக்கிறது போலீஸ். இந்தச் செய்தியையும், புகைப்படங்களையும் பார்த்த பலரும்,
அந்தக் குடும்பத்துக்கு இரண்டு நிமிட அனுதாபத்தை வஞ்சகம்
இல்லாமல் செலுத்திய அதேநிமிடம், 'ஆகா... ஏ.சி. மேல ஒரு கண் வெச்சிக்கிட்டேதான் தூங்கணும் போல...' என்று பதைபதைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எலெக்ட்ரானிக்ஸ் அயிட்டங்கள் என்றாலே எச்சரிக்கை தேவைதான். அதற்காக நிம்மதியான உறக்கத்தை தரும் ஏ.சி., உயிருக்கே உலை
வைக்கும் சாதனமாக மாறுமா? இந்தக் கேள்விக்கு... ஏ.சி.
மெஷின்களைப் பொருத்துவது, பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்துவரும் சென்னையைச் சேர்ந்த 'ஃபெர்ஃபெக்ட் ஏ.சி. சர்வீஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் மைக்கேல் பதில் சொல்கிறார்...

''அந்தச் செய்தியை படிச்சதும் எனக்கும் திக்னு ஆயிடுச்சு. எரிஞ்சு
போனது ஸ்பிளிட் ஏ.சி. எனக்கு தெரிஞ்சு, ஸ்பிளிட் ஏ.சி. கோளாறு
காரணமா இப்படி ஒரு சோக சம்பவம் நடந்ததுங்கிறதே இதுதான்
முதல் தடவை.

ஸ்பிளிட் ஏ.சி-யில்மூணு விதமான ஒயர் கனெக்ஷன் கொடுக்கப்
பட்டிருக்கும். அது சரியா பொருத்தப்படாம இருந்தா, ஒண்ணோட
ஒண்ணு உரசி விபத்து நடந்திருக்கலாம். பொதுவா... ஸ்பிளிட்டை
விட, விண்டோ ஏ.சி-யி லதான் பாதிப்பு அதிகம்'' என்று சொன்னவர்,
ஏ.சி. மெஷின்களை பயன்படுத்துவோருக்கு உதவும் வகையில்
பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு டிப்ஸ்களை வாரி வழங்கினார்...

புதிதாக ஏ.சி. வாங்குபவராக இருந்தால் உங்கள் வீட்டில் ஏ.சி. பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக்
கொண்டு தேர்வு செய்யுங்கள். 1.5 டன், 2 டன், 3 டன் என்று நம் பயன்
பாட்டுக்கு ஏற்ற ஏ.சி. மெஷின்கள் உள்ளன. 150 சதுர அடி கொண்ட
அறையாக இருந்தால் 1.5 டன் அளவுள்ள ஏ.சி. போதுமானது. பெரிய
ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.உதிரிபாகங்களை குறைந்த
விலையில் வாங்காதீர்கள்.

நல்ல விலையில் தரமானவற்றை வாங்குங்கள். ஏ.சி. வாங்கியதும், அதற்கேற்ற தரமான 'ஃப்யூஸ் ஒயர்', 'டிரிப்பர்' போன்றவற்றை பொருத்தவேண்டும். மலிவான விலைகளில் வாங்கினால், உங்கள்
உயிருக்கு ஆபத்தாக முடியும். உதாரணத்துக்கு ஸ்பிளிட் ஏ.சி. 1.5 டன்
எனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ஃப்யூஸை பொருத்துங்கள்.
இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர்
தானாக ஆஃப் ஆகி ஏ.சி-யைக் காப்பாற்றி விடும்.ஏ.சி. வாங்கும்போது இலவசமாகக் கொடுக்கப்படும் ஸ்டெபிலைசர்கள் தரம் குறைந்தவையாக இருக்கக் கூடும். தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை
வாங்குங்கள்.

எல்லா ஏ.சி. நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் அட்வைஸ்... ஏ.சி. வாங்கி பொருத்தியதும், அது எப்போதும்
23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக்
 கொண்டு போகும்போது ஏ.சி. அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சி-க்கு செல்லும் ஒயர் என எல்லா
பகுதியும் சூடாகிவிடும். இதனாலும் தீப்பிடிக்க அதிக வாய்ப்பு
இருக்கிறது. எக்காரணம் கொண்டும் 16 டிகிரியில் ஏ.சி-யை கொண்டு போகாதீர்கள்.வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை முன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்யவேண்டும்.
ஸ்பிளிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்டுங்கள். இதனால், எந்தவித
இடையூறும் இல்லாமல் குளுமையாக காற்று வரும்.ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்ப்ரே அடிப்பது மிகவும் தவறு.

பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி,
சீக்கிரத்தில் மெஷினை ரிப்பேராக்கிவிடும்.நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்காண்டிருக்கும்போதே ஃபேனை போடாதீர்கள்
============================================================
2
அடுத்த எச்சரிக்கை!



ஐஸ் வாட்டர் குடிக்கறீங்களா? இதை படிச்சுட்டு குடிங்க...

உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ச ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம்.

பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர்.

உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும் கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்றைக்கு பெரும்பாலும் பிரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கிராமமோ நகரமோ இன்றைக்கு குளிர்ந்த நீர்தான். கோடை காலம் தொடங்கிவிட்டால் காலை உணவில் தொடங்கி இரவு உணவு வரைக்கும்
நம் நாட்டவர்கள் உபயோகிப்பது ஜில் தண்ணீர்தான்.

இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள்.

இது இதயத்தை பாதிக்கிறது புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால்
அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய் துகள்களை
கெட்டியாக்கி விடுகிறது.

இதனால் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.

அதுமட்டுமன்றி உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும்
அது காரணமாகி விடுகிறது.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போது கூல் தண்ணீரை தொடவே கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றார்கள்.

ஜில் தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படும் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

நெஞ்செரிச்சல், உயர் ரத்தஅழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம்,வயிற்றுவலி,மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய்,
பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன.

டாக்டர்களின் இந்த எச்சரிக்கை உண்மைதானா? என்பதை நீங்களே ஆய்வு செய்து நிரூபித்துக் கொள்ளலாம். நீங்கள் அடிக்கடி அல்வா சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், அதில் சிறு பகுதியை எடுத்து அப்படியே

பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.

அரை மணி நேரம் கழித்து அதை எடுத்துப் பாருங்கள். அல்வா கெட்டியாகி இருக்கும். ஏற்கனவே அதில் இருந்த எண்ணெய்ப் பசை சுத்தமாக காணாமல் போய் இருப்பது போன்று தோன்றும். ஆனால், அந்த எண்ணெய்

அல்வாவில் அப்படியே ஆங்காங்கே படிந்து திண்ணமாக வெள்ளை நிறத்தில் மாறியிருக்கும்.

உங்கள் விரலை அதில் வைத்தால் உடனே அது உருகிவிடும். சாப்பிட்டு முடித்ததும், நம் உடலுக்குள் ஐஸ் வாட்டர் சென்றால், எண்ணெய்த்
துகள்கள் இதுபோன்றுதான் மாறி சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன.

எனவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள் அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

இனி ஐஸ் வாட்டர் குடிக்க யோசிப்பீங்க தானே  தண்டோரா  போட்டு சொல்லுங்க... எல்லோருக்கும். புரியும்படியாக!
======================================================
அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22 comments:

  1. Anbudan vathiyaar ayya vukku vanakkam

    A/C ....tragedy Really pathetic ...second tips very good. ,!! now days every one drink cold water,,,,,,

    Both are precaution habit ..t hank you. Ayya

    ReplyDelete
  2. ஐயா

    காலத்திற்கேற்ற பயனுள்ள யோசனை.
    எந்த ஒரு விசயமும் தங்கள் வழியாக பெரும் போது ஒரு முழுமை கிடைக்கிறது.
    அதற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் தான்.

    எம்.திருமால்
    பவளத்தானூர்

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா
    அப்பாடா எங்களிடம் ஏசி மெசினும் இல்ல. பிரிஜ்ம் இல்லப்பா
    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  4. போலீஸ் அறிக்கையை நம்பாதீங்க அவை
    போலியானவையாக இருக்கலாம்

    பெற்ற குழந்தையை கொன்ற தாயை காப்பாற்ற
    பெற்றுக்கொண்டது சில லட்சம் என்பது

    உண்மை தகவல் என்பது
    ஊருக்கே தெரியும்

    ஏ சி பற்றிய செய்தி
    என்னவோ தெரியாது

    எங்கள் வீட்டில் சாதாரணமாக
    எல்லோருடைய வீட்டிலும் இருக்கும்

    ஐயெந்து பொருட்கள் இல்லை அவை
    கட்டில் தொலைக்காட்சி ரேடியோ காலேண்டர் கடிகாரம்

    ReplyDelete
  5. ஜில் தண்ணீர் வேண்டாம் என
    கோர்ட் சொன்னாதான் கேட்பானுங்க

    ஹெல்மெட் மாதிரி அவுங்க
    சொன்ன தான் நம்ம மக்கா கேட்குங்கிரேன்

    ReplyDelete
  6. Informative posts.

    People buying Rs.50/lt on coke. (1 lt coke =50 litres of water wasted) and govt not giving proper price for Aavin on milk yet subsidize coke factories!!
    Fertilizers companies, allopathic medical abuses, food crimes, drinking water, pollution from textile/industries,etc.,. At least British took only materialistic wealth last 200 years, nowlast 20 years these guys take basic life factors from us. So much organized crime in front of everyone, yet no one realize to act than react.

    Many talk on issues, wish someone think on solutions.

    ReplyDelete
  7. Alert useful information required to the all generation thank you sir

    ReplyDelete
  8. /////Blogger Nagendra Bharathi said...
    உண்மை/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  9. /////Blogger hamaragana said...
    Anbudan vathiyaar ayya vukku vanakkam
    A/C ....tragedy Really pathetic ...second tips very good. ,!! now days every one drink cold water,,,,,,
    Both are precaution habit ..t hank you. Ayya////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  10. ////Blogger Thirumal Muthusamy said...
    ஐயா
    காலத்திற்கேற்ற பயனுள்ள யோசனை.
    எந்த ஒரு விசயமும் தங்கள் வழியாக பெரும் போது ஒரு முழுமை கிடைக்கிறது. அதற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் தான்.
    எம்.திருமால்
    பவளத்தானூர்////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா
    அப்பாடா எங்களிடம் ஏசி மெசினும் இல்ல. பிரிஜ்ம் இல்லப்பா
    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா/////

    இல்லாவிட்டால் என்ன? இருப்பவர்களுக்கு யோசனை சொல்லுங்கள் ராசா!

    ReplyDelete
  12. ////Blogger வேப்பிலை said...
    போலீஸ் அறிக்கையை நம்பாதீங்க அவை
    போலியானவையாக இருக்கலாம்
    பெற்ற குழந்தையை கொன்ற தாயை காப்பாற்ற
    பெற்றுக்கொண்டது சில லட்சம் என்பது
    உண்மை தகவல் என்பது
    ஊருக்கே தெரியும்
    ஏ சி பற்றிய செய்தி
    என்னவோ தெரியாது
    எங்கள் வீட்டில் சாதாரணமாக
    எல்லோருடைய வீட்டிலும் இருக்கும்
    ஐயெந்து பொருட்கள் இல்லை அவை
    கட்டில் தொலைக்காட்சி ரேடியோ காலேண்டர் கடிகாரம் /////

    அதெல்லாம் ஏன் இல்லை என்று விளக்கம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் வேப்பிலையாரே!

    ReplyDelete
  13. ////Blogger வேப்பிலை said...
    போலீஸ் அறிக்கையை நம்பாதீங்க அவை
    போலியானவையாக இருக்கலாம்
    பெற்ற குழந்தையை கொன்ற தாயை காப்பாற்ற
    பெற்றுக்கொண்டது சில லட்சம் என்பது
    உண்மை தகவல் என்பது
    ஊருக்கே தெரியும்
    ஏ சி பற்றிய செய்தி
    என்னவோ தெரியாது
    எங்கள் வீட்டில் சாதாரணமாக
    எல்லோருடைய வீட்டிலும் இருக்கும்
    ஐயெந்து பொருட்கள் இல்லை அவை
    கட்டில் தொலைக்காட்சி ரேடியோ காலேண்டர் கடிகாரம் /////

    அதெல்லாம் ஏன் இல்லை என்று விளக்கம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் வேப்பிலையாரே!

    ReplyDelete
  14. /////Blogger வேப்பிலை said...
    ஜில் தண்ணீர் வேண்டாம் என
    கோர்ட் சொன்னாதான் கேட்பானுங்க
    ஹெல்மெட் மாதிரி அவுங்க
    சொன்ன தான் நம்ம மக்கா கேட்குங்கிரேன்////

    நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும் வேப்பிலையாரே!

    ReplyDelete
  15. ////Blogger kmr.krishnan said...
    Very useful tips, Sir///

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  16. ////Blogger selvaspk said...
    Informative posts.
    People buying Rs.50/lt on coke. (1 lt coke =50 litres of water wasted) and govt not giving proper price for Aavin on milk yet subsidize coke factories!!
    Fertilizers companies, allopathic medical abuses, food crimes, drinking water, pollution from textile/industries,etc.,. At least British took only materialistic wealth last 200 years, nowlast 20 years these guys take basic life factors from us. So much organized crime in front of everyone, yet no one realize to act than react.
    Many talk on issues, wish someone think on solutions./////

    நல்லது. நன்றி நண்பரே!!

    ReplyDelete
  17. /////Blogger Gajapathi Sha said...
    Alert useful information required to the all generation thank you sir////

    நல்லது. நன்றி நண்பரே!!

    ReplyDelete
  18. மிகவும் பயனுள்ள தகவல்கள். இவற்றைப் படித்தவர்கள் தாங்களும் எச்சரிக்கை முறைகளைப் பின்பற்றுவதோடு தனக்குத் தெரிந்த அத்துனை பேருக்கும் இத்தகவல்களை பகிர்வது உத்தமம். தற்காலத்தில் அன்றாட உபயோகத்திலுள்ள உபகரணங்களைப் பற்றிய தரமான தகவல்கள் தந்த வாத்தியாருக்கு நன்றி!

    ReplyDelete
  19. //////Blogger வரதராஜன் said...
    மிகவும் பயனுள்ள தகவல்கள். இவற்றைப் படித்தவர்கள் தாங்களும் எச்சரிக்கை முறைகளைப் பின்பற்றுவதோடு தனக்குத் தெரிந்த அத்துனை பேருக்கும் இத்தகவல்களை பகிர்வது உத்தமம். தற்காலத்தில் அன்றாட உபயோகத்திலுள்ள உபகரணங்களைப் பற்றிய தரமான தகவல்கள் தந்த வாத்தியாருக்கு நன்றி!////

    தங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  20. வணக்கம் ஜயா,

    நீங்கள் சொல்வது எல்லாம் மிகவும் அருமையான விசயம், உண்மையில் A/C, Cooling water இதுலாம் தேவையில்லாத ஒன்று தான். வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தாலே போது... யார் கேட்ப்பார்கள்?!!! ஆயிரங்களை செலவு செய்தாவது ஒரு A/C வாங்கி, மாதம் மாதம் E.B Bill கட்ட முடிந்த நமக்கு... ஒரு மரம் வைத்து பராமரிக்க நேரம் இல்லை... இயற்கையோடு சேர்ந்து வாழ்வதே இன்பம், பாதுகாப்பும் கூட. விளையில்ல குழந்தையின் இழப்பு துயரமே!!! மேலும் இன்றைய cell phoneனால இன்னும் நிறையா பாதிப்புகளை வரும் காலங்களில் உணர்வோம், அது வரை யாரும் கவலைப்படுவதில்லை. smartphoneல் எனக்கு தெரிந்து ரொம்ப smartஆக வேலை செய்கிறது, உறவுகளில் இருந்து..., மனதையும், உடலையும் கெடுக்கிறது...

    நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com