மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.9.11

Short Story: சொந்த வீடு

----------------------------------------------------------------------------------------
சிறுகதை: சொந்த வீடு
-----------------------------------------
                
சிங்காரச் சென்னையில் கடந்த இருபத்திரெண்டு ஆண்டுகளாக வசித்துவரும் தெய்வானை ஆச்சிக்கு ஒரு தீராத மனக்குறை உண்டு. சொந்த வீடு ஒன்று இல்லையே என்ற குறைதான் அது.

திருமணமான மூன்றாம் நாள் மாலையும் கழுத்துமாக, அன்புக்கணவனுடன் காரைக்குடியில் இரயில் ஏறி சென்னைக்கு வந்த ஆச்சி, முதலில் குடியிருக்கத் துவங்கியது சென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் ஒரு ஸ்டோர் வீட்டில். மூன்று ஆண்டுகள் கழித்து, அதே செளகார் பேட்டையில், நாராயண மேஸ்திரி தெருவின் விரிவாக்கப் பகுதியான விநாயக மேஸ்திரி தெருவிற்குக் குடிபெயர்ந்த ஆச்சி இன்றுவரை அதே  வீட்டில்தான் குடியிருக்கிறார்கள்.

அதை வீடு என்று சொல்ல முடியாது. பதினைந்திற்குப் பத்தில் ஒரு பெரிய அறை, அதற்கு எதிர் வரிசையில், தனியாக பத்திற்குப் பத்தில் ஒரு  சமையல்  அறை, அவ்வளவுதான். அதே வரிசையில் தனியாக ஒரு குளியலறையும், கழிப்பறையும் உண்டு. அந்தத் தளத்தில் இருக்கும் மற்ற அறைகள் எல்லாம் அரிசி குடோன்களுக்கு வாடகைக்கு விடப் பெற்றுள்ளது.

மேலே உள்ள மற்ற தளங்களில் எல்லாம் மார்வாரிக் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். தீடீரென்று வருபவர்களுக்கு, ஜெய்ப்பூரில் இருப்பது  போன்ற உணர்வு ஏற்படும்.

கட்டட உரிமையாளர் புரசைவாக்கத்தில் இருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வாடகைப் பணத்தை வாங்கி வங்கில் போடுவதற்காக  வருவார்.

ஆச்சியின் கணவர் பழநியப்ப அண்ணனுக்கு, அதே ஏரியாவில், ஆண்டர்சன் தெருவில் உள்ள பேப்பர் கடை ஒன்றில் வேலை. மொத்த வியாபாரம். நகரத்தார் ஒருவருக்குச் சொந்தமான ஐந்து கடைகளில் அதுவும் ஒன்று. பத்து காகித ஆலைகளுக்கு விநியோகஸ்தர்கள். கேட்க வேண்டுமா? கொடிகட்டிப் பறக்கும் அளவிற்கு வியாபாரம்.

துவக்கத்தில் குமாஸ்தாவாகச் சேர்ந்த பழநியப்ப அண்ணன், தன் நேர்மை, மற்றும் சுறுசுறுப்பால் பதவி உயர்வு பெற்று, கடையின் மேலாளர்  என்ற அந்தஸ்த்தை எட்டிப் பிடித்திருக்கிறார்.

“எத்தனை நாளைக்குத்தான் இப்படி வாடகை வீட்டில் கஷ்டப்படுவது? நான் என்ன அடையாறில் பங்களா வேண்டுமென்றா ஆசைப் படுகிறேன்? நானூறு சதுர அடியில் சின்னதாக இருந்தாலும், சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டாமா? இந்த கந்தகோட்ட முருகன்  என்றைக்குக் கண்ணைத் திறந்து என்னைப்  பார்க்கப் போகிறான் என்று தெரியவில்லை!” என்று ஆச்சி அடிக்கடி புலம்பலாகச் சொல்லிக்  கண்ணைக் கசக்குவார்.

ஆச்சியின் அன்புக் கணவர் பழநியப்ப செட்டியாருக்கு அது பழகிப் போய்விட்டது.

“போடி புரியாதவளே! வால்டாக்ஸ் ரோட்டில் போய்ப்பார். எத்தனை பேர் பிளாட்பாரத்தில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று  தெரியும். அவர்களெல்லாம் சந்தோஷமாக இல்லையா? சந்தோஷம் என்பது சொத்தில் இல்லை. வீட்டில் இல்லை. நம் மனதில் இருக்கிறது.”

“உங்கள் முதலாளிச் செட்டியாருக்குச் சென்னையில் மட்டும் பதினைந்து வீடுகள் இருக்கின்றன. அவரைப் பார்த்தாவது உங்களுக்கு ஆசை  வர வேண்டாமா? ஆசை வந்தால் அல்லவா மனதில் ஒரு வேகம் வரும். வேகம் வந்தால் அல்லவா அதைச் செயல்படுத்த முடியும்?”

ஆச்சி கடுகடுவென்று பேசினால், செட்டியார் நீட்டி, நிதானமாகப் பேசுவார்.

“தெய்வானை எதையும் குறையாக நினைத்தால், குறையாகவே போய்விடும். எல்லாப் பறவைகளும் ஒரே உயரத்தில் பறக்காது. குருவிக்கென்று  ஒரு உயரம், புறாவிற்கென்று ஒரு உயரம். கழுகிற்கென்று ஒரு உயரம் இருக்கும். ஆகவே நமக்கு விதிக்கப்பட்ட உயரத்தில்தான் நாம் பறக்க  முடியும். அதை நினைவில் வை. நிம்மதியாக இரு. முதலாளிச் செட்டியாரைப் பற்றிச் சொல்கிறாயே, அவருக்கு உள்ள மனக்கவலை என்ன  வென்று தெரியுமா உனக்கு? அவருக்கு இரண்டும் பெண் குழந்தைகள். வீட்டிற்கு ஆண் வாரிசு இல்லையே - தனக்குப் பின்னால்  இந்தத்  தொழிலை யார் முன்நின்று நடத்தப்போகிறார்கள் என்ற கவலை அவருக்கு உண்டு. அதெல்லாம் உனக்கு எங்கே தெரியப்போகிறது?”

“வேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்களைத்தான் சொல்ல முடியும். ஒன்று தேவை. இன்னொன்று ஆசை. ஆனால் வேண்டாம் என்பதற்கு  நூறு காரணங்களைச் சொல்லலாம். நீங்கள் எதையாவது சொல்லி என் வாயை அடைப்பதே வழக்கமாகிவிட்டது”

“சரி நானும் நீ ஒப்புக்கொள்ளும் விதமாக ஒரே ஒரு காரணத்தைச்  சொல்கிறேன். கையிருப்பு இல்லாததுதான் அந்த ஒரே ஒரு காரணம்.”

அதற்குப் பிறகு ஆச்சி மெளனமாகி விட்டார்கள். பழநியப்ப அண்ணனும் ஈரிழைத் துண்டைக் கையில் எடுத்துக் கொண்டு குளியலறையை  நோக்கி நடந்தார். காலை மணி எட்டாகிவிட்டது. ஒன்பது மணிக்கெல்லாம் கடையில் இருக்க வேண்டும் 
----------------------------------------------------------------

“உன் உடம்பே உனக்குச் சொந்தமில்லை. நீ என்ன சொத்தைப் பற்றிப் பேசுகிறாய்?” என்று கவியரசர் கண்ணதாசன் அடிக்கடி சொல்வாராம்.

கண்ணதாசனின் புத்தகங்களை விரும்பிப் படித்து மனதில் ஏற்றி வைத்துள்ளதால், பழநியப்பஅண்ணனுக்கு அந்த சிந்தனை எப்போதும் உண்டு.

“நம் உடம்பே நமக்குச் சொந்தமில்லை. ஒரு நாள் இந்த உடம்பை விட்டு விட்டு நாம் போகப் போகிறோம்” என்பார்

“நாம் என்பது நம்முடைய ஆன்மா. நம்முடைய ஆன்மா, உடம்பு என்னும் வாடகை வீட்டில் குடியிருக்கிறது. ஒவ்வொரு பிறவிக்கும் கடவுள்  கொடுத்தது அந்த வீடு. குடக்கூலி இல்லை. அதாவது மாத வாடகை இல்லை. ஆண்டிற்கு ஒருமுறை வெள்ளையடிக்க வேண்டாம்.  அப்படிப்பட்ட வீடு அது. அதை ஒழுங்காக வைத்திருக்கிறோமா என்றால் - இல்லை! கண்டதையும் தின்று வீட்டின் எல்லாச் சுவர்களும்  தள்ளிக்கொண்டு நிற்கின்றன. விரிசல் விட்டிருக்கின்றது. அத்துடன் சிகரெட், வெற்றிலை பாக்கு, பான்பராக் என்று லாகிரி வஸ்துக்களை எல்லாம் உள்ளே தள்ளி வீட்டின் உட்புறம் நாளுக்குநாள் கெட்டுக்கொண்டிருக்கிறது. வீட்டுக்காரன் கேட்டால் என்ன சொல்வது? வீட்டுக்காரன்  கேட்க மாட்டான் என்பது சர்வ நிச்சயமாக நமக்குத்
தெரியும். அதனால் எந்தவொரு பயமுமில்லாமல் இருக்கிறோம்!”
என்று அதற்கு விளக்கமும் சொல்வார்.

காரைக்குடி செஞ்சி பகுதியில் அவருக்குப் பொது வீடு ஒன்று இருந்தது. இப்போது இல்லை. அவருக்குத் திருமணமானபோது, வீட்டின்  முகப்புப் பகுதியில் ஒரு பாதி இடிந்து விட்டிருந்தது. முட்டுக்கொடுத்து நிறுத்தி வைத்திருந்தார்கள். பங்கு வீடு. எண்ணிக்கையில் பதின்மூன்று  புள்ளிகள். (குடும்பங்கள்) வம்சாவழி உரிமையில் 24ல் ஒரு பங்கு.

பராமரிக்கும் விஷயத்தில் ஒற்றுமை இல்லாததால், வீட்டை இடித்துத்
தரை மட்டமாக்கிவிட்டு, இடத்தைப் பங்கு வைத்துக்கொண்டார்கள். ஒரு
புண்ணியவான் ஆட்களை வைத்து இடித்துக் கொடுத்ததோடு, எடுத்துக்கொண்ட தேக்கு மரங்களுக்காக, இடிக்கச் செலவு செய்த கூலி
போக இரண்டரை லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டுப்போனான்.
அது நடந்து பதினைந்து ஆண்டுகள் இருக்கும். அன்றையத் தேதியில்
அது  ஒரு நல்ல தொகை.

பழநியப்ப அண்ணன் பங்கிற்கு, ஆயிரம் சதுர அடி இடமும், பத்தாயிரம்
ரூபாய் பணமும் கிடைத்தது. இன்று வரை அது அப்படியே உள்ளது.

அந்த இடத்தை விற்றுவிட்டு, சென்னையின் புறநகர்ப் பகுதியில் சின்னதாக ஒரு வீட்டை வாங்கலாம் என்று ஆச்சி சொன்னபோது, அண்ணன் ஒப்புக் கொள்ளவில்லை.

“அந்த இடம் பூர்வீகச் சொத்து. அதை விற்கும் உரிமை நமக்கில்லை.
நமக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் தலை எடுத்து, அங்கே ஒரு 
வீட்டைக் கட்டிக்கொள்ளட்டும். கொப்பாத்தாள் அருளால், அது நம் காலத்திலேயே நடந்தால், வயதான காலத்தில், நாம் அங்கே சென்று  தங்கிக்கொள்ளலாம் இப்போது நீ சும்மா இரு. அதை வைத்துக் குழப்பம்
செய்து என்னைச் சிக்கலில் மாட்டிவிடாதே” என்று உறுதியாகச்  சொல்லிவிட்டார்.

என்ன நடந்தது?

ஆண்டவன் சித்தப்படி, அதாவது தலை எழுத்துப்படி எல்லாம் நடந்தது.

---------------------------------------------------------------------------------

நாதஸ்வரம், திருமதி செல்வம் போன்ற தொலைக் காட்சி சீரியல்களில்,
தன் கவலைகளை மறந்து, ஆச்சி முங்கிக் களிக்க இரண்டாண்டுகள்  ஓடிப்போனது.

வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சி அதிசயமானது. கீழே இருக்கும் பகுதி
ஒருநாள் மேலே வரும்.வசந்தகாலம், கோடைகாலம், இலையுதிர்காலம்,  குளிர்காலம் என்று பருவங்களில் மாற்றம் ஏற்படுவதைப் போல, மனித வாழ்க்கையிலும் ஏற்படும்.

அப்படியொரு வசந்தகாலம் ஆச்சியின் வாழ்க்கையிலும் ஏற்பட்டது.

ஆச்சியின் ஒரே மகன் கணேசன் இறையருளாலும், கடை முதலாளி தொடர்ந்து செய்த கல்விக்கட்டண உதவிகளாலும், கிண்டி பொறியியற்
கல்லூரியில் மேல் நிலைப் பொறியாளர் படிப்பைப் படித்து முடித்தான்.

படிப்பை முடிக்க முடிக்கவே அவனுக்கு காம்பஸ் இன்டர்வியூவில்,
அதாவது கல்லூரி வளாக நேர்காணலில் பன்னாட்டு நிறுவனமொன்றில்
நல்ல  வேலை கிடைத்துவிட்டது.

துவக்கத்தில் ஆண்டிற்கு 32 லட்ச ரூபாய்கள் சம்பளம். விசா, பயணச்
சீட்டு, கைச் செலவிற்கு டாலரில் பணம் என்று எல்லாவற்றையும் 
அவர்களே ஏற்பாடு செய்துகொடுத்துவிட்டார்கள்.

முதல் மூன்று மாதம் கலிஃபோர்னியாவில் பயிற்சி. அதற்குப் பிறகு,
தென் கொரியாவில் உள்ள தங்கள் கிளை நிறுவனத்தில் வேலை என்று 
எல்லா உத்தரவுகளையும் கையில் கொடுத்து விட்டார்கள்

ஒரு நல்ல நாளில் பையனும் புறப்பட்டுப் போய்விட்டான்.

ஆச்சிக்கு நிலை கொள்ளாத சந்தோஷம்.

இருக்காதா பின்னே?

                     +++++++++++++++++++++++++++++++++++++++++++

அதற்கு அடுத்து வந்த ஆறு மாத காலத்தில், ஆச்சி அவர்கள் தன் நீண்டநாள் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதாவது  வீடூ ஒன்றை வாங்கும் முயற்சியில் இறங்கினார்கள்.

இன்றைய நிலவரத்தில் நடுத்தரக் குடும்பங்களுக்குத் தனி வீடெல்லாம் சாத்தியமில்லாத நிலையால், ஆச்சி அவர்கள் அடுக்குமாடிக்  குடியிருப்பில் ப்ளாட் ஒன்றைத் தேடத் துவங்கினார்கள்.

ஆச்சிக்கு சென்னையில் மிகவும் பிடித்த பகுதி தியாகராய நகர்தான்.
வடக்கு உஸ்மான் சாலை பகுதி நாதமுனி தெருவில் இரண்டொரு
அடுக்கு  மாடி வளாகங்களைப் பார்த்தார்கள். ஒன்றும் பிடிபடவில்லை.

தாங்கள் தற்போது இருக்கும் செளகார்பேட்டை அல்லது மண்ணடிப்
பகுதியில் பார்க்கலாம் என்று செட்டியார் சொன்னபோது ஆச்சி அவர்கள்  அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இது மிகவும் நெரிசலான பகுதி. இங்கே கஷ்டப்பட்டது போதும். எங்கள் அத்தை மக்கள் மூவரும்  தி.நகரில்தான் இருக்கிறார்கள். அங்கேதான் பார்க்க வேண்டும் என்று பிடிவாதமாகக்
கூறி விட்டார்.

நடேசன் பூங்கா அருகே, மைலை ரங்கநாதன் தெருவில், புதிதாகக் கட்டப்பெற்றிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின், முன்றாவது தளத்தில்
ப்ளாட் ஒன்று அமைந்தது. அந்தக் கட்டடத்தின் முதல் தளத்திலேயே
ப்ளாட் ஒன்று இருந்தாலும் ஆச்சி அவர்கள் மூன்றாவது தளத்தைத்தான் தெரிவு செய்தார்கள். காற்று நன்றாக வரும். கொசுத் தொல்லை
இருக்காது என்று அதற்குக் காரணத்தையும் சொன்னார்கள்.

ஆச்சியின் திருக்குமாரன் வேலைக்குச் சென்ற ஆறாவது மாதம் சொந்த வீட்டுக் கனவு நனவாகியது.

ப்ளாட்டின் விலை பத்திரப் பதிவுச் செலவுடன் சேர்த்து நாற்பது லட்ச ரூபாய்கள். ஆச்சியின் அத்தை மகன் முத்தப்பன், தேசிய வங்கி ஒன்றில்
மேலாளராக இருந்ததால், வங்கி கைகொடுக்க, வீடு கைக்கு வந்தது.
வங்கிக்கு நாலில் ஒரு பங்கு வரம்புத் தொகை கட்ட, ஆச்சி அவர்களின் 
உபரி நகைகளும், ஸ்ரீதனமாக வந்த வெள்ளிச் சாமான்களும் உதவின.

“எனக்கு என்ன பெண் பிள்ளையா இருக்கிறது? இவற்றையெல்லாம் வங்கி லாக்கரில் வைத்து இனிமேலும் எதற்காக காப்பாற்ற வேண்டும்?”  என்று சொல்லி எல்லாவற்றையும் மொத்தமாக விற்றுக் காசாக்கிப் பணத்தை வங்கியில் வீட்டுக் கடனின் வரம்புத் தொகைக்காகச் செலுத்தி  விட்டார்.

ஒரு நல்ல முகூர்த்த நாளில், கணபதி ஹோமம் செய்து, பால் காய்ச்சும் வைபவத்தை வைத்துப் புது ப்ளாட்டில் குடியேறினார்கள்.

விதி வேறுவிதமாகப் பாதை போட்டிருந்தது. அன்றே ஆச்சியின் வாழ்வில் அந்த துக்க சம்பவமும் அரங்கேறியது.

பால் காய்ச்சும் வைபவத்திற்குப் பையன் வரவில்லை. வந்து போனால், பயணச் செலவே ஒரு லட்ச ரூபாய் ஆகுமென்பதால், ஆச்சி அவர்களே
நீ வரவேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் என்று  மொத்தம் நூறு பேர்கள் வந்து கலந்து கொண்டு
விட்டுப் போனார்கள்.

வந்திருந்த அனைவருக்கும் சரவணபவனில் ஆர்டர் கொடுத்து,
வரவழைத்து, காலைச் சிற்றுண்டியும் மதிய விருந்தும் வழங்கினார்கள்.

வந்திருந்தவர்களெல்லாம் சென்ற பிறகு மாலை நான்கு மணிக்குத்தான்
அது நடந்தது.

வந்திருந்தவர்களில் ஒருவர் கைப்பையை மறந்து வைத்துவிட்டுப் போக,
அது ஆச்சியின் கண்களில் பட, பையைப் பிரித்துப் பார்த்தார்கள்.

உள்ளே நிறையப் பணம் இருந்தது. கீழ்த் தளத்தில் இடது பக்கம் இருக்கும் வீட்டுக்காரர்தான் கடைசியாக வந்தார். கைப்பை அவருடையதாகத்தான் இருக்கும். விசாரித்துக் கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்று ஆச்சி
கீழே இறங்கி வரும்போதுதான் அது நடந்தது.

மின்தடை இருந்ததால் லிஃப்ட் வேலை செய்யவில்லை. ஆச்சி படி
வழியாக இறங்க முற்பட்டார்கள்.

ஏதோ நினைப்பில், முதல் படிக்கும் இரண்டாம் படிக்கும் அடுத்தடுத்துக் கால்களை இறக்கிவைக்காமல், வேகத்தில் மூன்றாம் படியில் காலை
வைக்க, ஏற்பட்ட தடுமாற்றத்தில் எல்லாம் முடிந்துவிட்டது.

தடுமாற்றத்தில் தலை குப்புற விழுந்தவர், அதே வேகத்தில், அசுர
வேகத்தில் படிகளில் சறுக்கிக் கீழ் நோக்கி இறங்கி, வராந்தாவில்
இருந்த  தூணில், தடால் என்ற ஓசையுடன், உச்சந்தலைப் பகுதி மோத
“ஆத்தா” என்ற பலத்த குரலோசையுடனும் விழுந்தார்கள்

விழுந்தார்கள் என்று சொல்வதைவிட, விழுந்து இறந்தார்கள் என்று சொல்வதுதான் சரியா இருக்கும்.

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை. ஆச்சியின் வாழ்க்கைக்குக் காலதேவன் முற்றுப் புள்ளி வைத்துவிட்டான் அவ்வளவுதான்.

ஆச்சிக்குப் பலமாகத்தலையில் அடிபட்டதுடன், அதிர்ச்சியில் ஸ்ட்ரோக்கும் ஏற்பட்டதால் இறந்து விட்டதாக மருத்துவமனைக் குறிப்பில்  எழுதியிருந்தார் கள்.

செட்டியார் மனதளவில் நொறுங்கிப் போயிருந்தார். தகவலறிந்த நெருங்கிய உறவினர்கள் வந்திருந்திருந்து ஆச்சியின் இறுதி யாத்திரைக்கு  வேண்டியதைச் செய்தார்கள்.

கொரியாவில் இருந்து பையன் அடுத்த நாளே வந்திறங்கினான். கண்ணம்மா பேட்டை மின் மாயானத்தில் ஆச்சியின் உடல் அக்கினிக்கு இரையானது.

நான்கு நாட்களில் பழநியப்ப அண்ணன் தன் நிலைக்குத் திரும்பினார்.

“அங்கும் இங்கும் அலைபோலே - தினம்
ஆடிடும் மானிட வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் - அது
எங்கே முடியும் யாரறிவார்?”


என்னும் கவியரசர் கண்ணதாசனின் வைரவரிகள் அவ்வப்போது அவர் மனதிற்குள் வந்து நிழலாடின.

புது வீட்டில் ஒரு நாள் கூடத் தங்கி, படுத்து உறங்காமல் தன் மனைவி காலமானதில் பழநியப்ப அண்ணனுக்கு மிகுந்த வருத்தம்.

அப்போதுதான் ஞானி ஒருவர் சொன்னது நினைவிற்கு வந்தது.

“கடவுளால் உனக்குத் தரப்பட்டதை யாராலும் பறிக்க முடியாது;
கடவுளால் உனக்கு மறுக்கப்பட்டதை யாராலும் தர முடியாது”


“நிதர்சனமான உண்மை. தன் மனைவிக்கு வீடு பாக்கியம் இல்லை போலும். அதனால்தான் காரைக்குடியில் இருந்த பூர்வீக வீடு, அவள் திருமணமாகி
வந்த ஓரிரு ஆண்டுகளிலேயே தரை மட்டமாகிவிட்டது. போராடி இங்கே வாங்கிய வீட்டிலும் அவளால் ஒரு நாள் கூட தங்க  முடியாமல் போய்
விட்டது” என்று பழநியப்ப அண்ணன் சிந்தனை வயப்பட்டார்.

ஆச்சி இறந்து ஒருவாரம் கழித்து, அவருடைய மகன் கொரியாவிற்குப் புறப்பட்ட போது, அவனைக் கட்டிக்கொண்டு அழுது தீர்த்துவிட்டார்.

“அப்பச்சி, உங்கள் வயதிற்கு நீங்கள் அழுகக்கூடாது. எனக்கு ஆறுதல்
சொல்ல வேண்டிய நீங்களே அழுதால் எப்படி?”

“ஆசையாய் வாங்கிய புது வீட்டில் என்னை மட்டும் தனியாக விட்டுவிட்டு அவள் போய் விட்டாளேடா!”

“நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்று யார் சொன்னது?”

“என்னடா சொல்றே?”

“ஆத்தாளும் உங்களோடுதான் இருக்கிறாள். உருவமில்லாத அருவமான நிலையில் உங்களோடுதான் இருக்கிறாள். இந்த வீட்டில்தான் இருக்கிறாள். எந்தப் பெண்ணுமே செய்ய யோசிக்கின்ற காரியத்தை ஆத்தா செய்தார்கள். , நகைகளை விற்று ஆத்மார்த்தமாக இந்த வீட்டை  வாங்கினர்கள். அப்படி  வாங்கிய தன் வீட்டைவிட்டு ஆத்தா ஒரு நாளும் போகமாட்டார்கள். அவர்களுடைய உடம்புதான் போய்விட்டது.  ஆத்மா இங்கேதான்
இருக்கிறது. நமக்குத் துணையாக அது என்றும் இங்கேதான் இருக்கும்.  மனதைத் தளரவிடாமல் இருங்கள்.”

பழநியப்ப அண்ணனின் மனதில் ஒரு தெளிவு பிறந்தது.

“உருவாய், அருவாய், உளதாய், இலதாய்” என்று பல வடிவங்களிலே அதுவும் குறிப்பாக உருவமில்லாத வடிவில் இருக்கக் குமரக்கடவுள்
ஒருவரால்தான் முடியுமா? ஆத்மார்ந்தமான செயல்களில் ஈடுபடும்
மனித ஆன்மாக்களுக்கும் அது சாத்தியமே!

அப்படிபட்ட ஆன்மாக்களைத்தான் ‘குலதெய்வங்கள்’ என்ற பெயரில்
காலம் காலமாக நாம் வணங்கி வருகிறோம்! படையல் போடுகிறோம்.
------------------------------------------------------------------------------------------------------
- மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதிய கதை. நீங்களும் படித்து மகிழ, உங்களுக்காக, இன்று வலையில் ஏற்றியுள்ளேன். படித்து  மகிழ்ந்தவர்கள் ஒரு வார்த்தை சொல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்

19.9.2011
-------------------------------------------------------
நம் வலைப்பூவின் டெம்ப்ளேட்டைத் தவிர மற்றவற்றை எல்லாம் மாற்றிக் கொண்டிருக்கிறேன். இதுவரை இங்கே எழுதியவைகள் மொத்தம் 925
பதிவுகள் அவற்றில் சைடு பாரில் உள்ள Label எனப்படும் குறிச்சொல் பகுதியை படிப்பதற்கு வசதியாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். அந்தப் பணியில் எழுபது சதவிகிதம் முடிந்துள்ளது. மீதமுள்ளவைகள் இரண்டொரு நாளில் முடிந்து விடும்.

நமது வகுப்பறையின் மூத்த மாணாக்கர்களில் ஒருவரும், நமது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரியவருமான திருவாளர் வி.கோபாலன்  அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அந்தப் பணிகள் முடியும் முன்பாகவே மீண்டும் பாடங்களைத் துவங்கியுள்ளேன்
----------------------------------------------------------           
வாழ்க வளமுடன்!

56 comments:

  1. ஐயா,
    நான்தான் புதுப்பித்த வீட்டிற்கு முதலாவதாக வருகிறேனோ?!!!!
    என் அம்மாவை நினைவூட்டிய அருமையான சிறந்த கதை.
    வாழ்வில் எவ்வளவோ இருந்தும் ஆச்சியின் கணவர் போல என் தந்தை வீடு வாங்க ஆர்வம் காட்டியதில்லை.
    கடைசியாக பிளாட் போன்ற ஒரு வீடு கிட்டிய பொழுது மூட்டுவலி ஏற்பட்டு வீட்டிலேயே நடக்க முடியாமல், வலியும், அது தந்த வேதனயும் உயிரை குடித்துவிட, இறக்கும் தருவாயில் போதும் இந்த வாழ்கை என்ற வேதனயுடன் மன மகிழ்ச்சி இன்றியே இறந்தார் அம்மா.
    உண்மை...
    “கடவுளால் உனக்குத் தரப்பட்டதை யாராலும் பறிக்க முடியாது;
    கடவுளால் உனக்கு மறுக்கப்பட்டதை யாராலும் தர முடியாது”
    அழகான புதுபித்தல் ஐயா ...என் வேண்டுகோள் முடிந்தால் “Dont Right Click Here! Function Disabled”
    நீக்கமுடியுமா? உங்கள் பக்கத்தை விட்டு நீங்காமல் அடுத்த பக்கம் செல்ல அது உதவியாய் இருக்கும்.
    வாழ்த்துக்கள்.
    மாணவி தேமொழி

    ReplyDelete
  2. “உருவாய், அருவாய், உளதாய், இலதாய்” என்று பல வடிவங்களிலே அதுவும் குறிப்பாக உருவமில்லாத வடிவில் இருக்கக் குமரக்கடவுள்
    ஒருவரால்தான் முடியுமா? ஆத்மார்ந்தமான செயல்களில் ஈடுபடும்
    மனித ஆன்மாக்களுக்கும் அது சாத்தியமே!

    அப்படிபட்ட ஆன்மாக்களைத்தான் ‘குலதெய்வங்கள்’ என்ற பெயரில்
    காலம் காலமாக நாம் வணங்கி வருகிறோம்! படையல் போடுகிறோம்.//

    நிறைவாய் மனதில் நிறைந்த வரிகள்.

    ReplyDelete
  3. அருமையான கதைக்கரு, இயல்பான நடை, மொத்தத்தில் சிறப்பான கதை.

    ReplyDelete
  4. ஆசிரியருக்கு வணக்கம்,

    புதுப் பொலிவுடன் காட்சி தரும் வகுப்பறை தோற்றம் நன்று... அதிலும் கலைமகள் பாரதியின் தோற்றம் மிகவும் அருமை....

    சொந்தவீடு அருமையாகப் போய்க் கொண்டிருக்கும் போதே "ஈரிழைத் துண்டு" என்ற வார்த்தை என்னை ஒரு கணம் நிறுத்தி பொருள் கொள்ளச் செய்தது... அது தான் தொழில் புத்தி என்பார்கள்... உங்களின் தொழிலில் உங்களின் பக்தி... தன்னையும் மீறி விழுந்த வார்த்தை என்பதை உணர்த்திற்று...
    மிகவும் எதார்த்தமான கதையாக இருந்தாலும், அற்புத தத்துவார்தமானக் கருத்துக்களை தாங்கியக் கதை... அதில் உள்ளார்ந்த அர்த்தம் அருமை... நடக்கப் போவதை யாரும் மாற்ற முடியாது... மாற்றம் நடந்ததையும் அப்படியே ஏற்றுக் கொண்டு அடுத்த படிக்கு போகவேண்டும் என்பதும்...அருமை..

    கதையின் கடைசி பகுதி கண்கலங்க வைத்து விட்டது... எவ்வளவு திறமையும், அறிவும், நியாயமான ஆசை இருந்தாலும்; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதில் கூட அதற்கு பின்னே அருவமாக இருக்கும் அருளால் தான் அத்தனையும் நடக்கிறது என்பதை அருமையாகச் சொல்லி யுள்ளீர்கள்.

    வாழ்வாங்கு வாழ்த்த வீட்டை இடிப்பவன் புண்ணியவான் ஆவதில்லை, என்பதை நேர்மறையாக உணர்த்தி யுள்ளீர்கள் அதிலே உங்களின் ஆதங்கம் தெரிகிறது... எத்தனை சம்பாதித்தாலும் சிக்கனத்தின் அருமையை... ஒரு லட்சம் செலவழித்து மகன் வரவேண்டாம் என்ற ஆச்சியின் முடிவு.. அவரின் நிதானத்தை உணர்த்துகிறது...

    பழனியப்பன் அண்ணனின் தெளிவிற்கு ஒரு அர்த்தம் கொடுத்ததும், குலதெய்வங்கள் என்பவர்கள் யாவர்? எப்படி உருவாகின என்பதையும் இந்தன் மூலம் மீண்டு கூறியிருக்கிறீர்கள்....

    தனியாக இருக்கும், பழனியப்பன் அண்ணன் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவதையோ.. அல்லது இரண்டு பெண்களைக் கொண்ட தனது முதலாளி யின் பெண் குழந்தைகளின் திருமணத்தை தொடர்பு படுத்தி... கதையின் அடுத்த பகுதிக்கு ஒரு ஆரம்பம் எங்காவது வைத்திருப்பீர்கள் என்று நினைத்தேன் இல்லை... அது மட்டுமே ஏமாற்றம்...

    வழக்கமாக என்று சொல்ல மாட்டேன் இதில் ஒரு புது போக்கை, இளகிய தத்துவமேவியக் கருக்களத்தைக் (எப்போதும் இருந்தாலும் இதில் சற்று ஆழ இருப்பதாக எனக்கு தோன்றுகிறது) காண்கிறேன். அருமை.
    நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  5. Dear Sir,

    Superb story. Kathaiyin mudivil en manam nekilnthu vizhikazhil kanneer thuzhikal.
    As Iam a middle class person, I know the importance of owning a house.
    Kathaiyai solli ennai Kalangaka vaithu vitrikal vaathiyare.

    ReplyDelete
  6. Ayya,

    It happened to me and my father. When I was in Swiss, my father started construction after 20yrs of rented house experience. My father expired when the constrcution at first floor roofing itself.He got Tetanus due to small iron piece pinched his leg. This story remembering my 3yrs back life. I am not able to control my tears.

    Sincere Student,
    Trichy Ravi

    ReplyDelete
  7. "கடவுளால் உனக்குத் தரப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது
    கடவுள் தர மறுப்பதை உனக்கு யாராலும் தர முடியாது" இது ஒரு அற்புதமான வாக்கியம். எனது வேண்டுகோளை மதித்துத் தங்களது வகுப்பறையை மீண்டும் துவக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி. எனது வேண்டுகோளையும் குறிப்பிட்டதில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. உங்களது கதை வழக்கம் போல அபூர்வமான சிந்தனையை வெளிக்கொணரும் விதத்தில் அமைந்துள்ளது. வீட்டு ராசி இல்லை போலிருக்கிறது ஆச்சிக்கு என்று சொல்லிய இடத்திலும், அவர் தன் ஸ்தூல உடம்போடு அல்லாமல் அரூபமாக அங்கேயே இருக்கிறார் என்பதும் மனதை உருக்கும் காட்சிகளாகும். வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களே, தங்கள் பணி தொடரட்டும், எங்கள் மனங்கள் களிக்கட்டும். வாழ்க!

    ReplyDelete
  8. /////Blogger மாணவி தேமொழி said...
    ஐயா,
    நான்தான் புதுப்பித்த வீட்டிற்கு முதலாவதாக வருகிறேனோ?!!!!///////

    நீங்கள் வெறும் தேமொழியல்ல - புதிப்பித்த வீட்டிற்கு வந்த மகாலெட்சுமி. உங்களின் முதல் வருகைக்கு நன்றி தாயே!(அல்லது சகோதரி!)

    //////என் அம்மாவை நினைவூட்டிய அருமையான சிறந்த கதை.
    வாழ்வில் எவ்வளவோ இருந்தும் ஆச்சியின் கணவர் போல என் தந்தை வீடு வாங்க ஆர்வம் காட்டியதில்லை.
    கடைசியாக பிளாட் போன்ற ஒரு வீடு கிட்டிய பொழுது மூட்டுவலி ஏற்பட்டு வீட்டிலேயே நடக்க முடியாமல், வலியும், அது தந்த வேதனயும் உயிரை குடித்துவிட, இறக்கும் தருவாயில் போதும் இந்த வாழ்கை என்ற வேதனயுடன் மன மகிழ்ச்சி இன்றியே இறந்தார் அம்மா.
    உண்மை...
    “கடவுளால் உனக்குத் தரப்பட்டதை யாராலும் பறிக்க முடியாது;
    கடவுளால் உனக்கு மறுக்கப்பட்டதை யாராலும் தர முடியாது”
    அழகான புதுப்பித்தல் ஐயா//////

    உங்களின் உள்ளப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ////////என் வேண்டுகோள் முடிந்தால் “Dont Right Click Here! Function Disabled” நீக்கமுடியுமா? உங்கள் பக்கத்தை விட்டு நீங்காமல் அடுத்த பக்கம் செல்ல அது உதவியாய் இருக்கும்.
    வாழ்த்துக்கள்.
    மாணவி தேமொழி////////

    பதிவின் டெம்ப்ளேட்டில் அந்த வரி உள்ளது. தேடிப்பிடித்து அதை நீக்குகிறேன். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  9. //////Blogger இராஜராஜேஸ்வரி said...
    “உருவாய், அருவாய், உளதாய், இலதாய்” என்று பல வடிவங்களிலே அதுவும் குறிப்பாக உருவமில்லாத வடிவில் இருக்கக் குமரக்கடவுள்
    ஒருவரால்தான் முடியுமா? ஆத்மார்ந்தமான செயல்களில் ஈடுபடும்
    மனித ஆன்மாக்களுக்கும் அது சாத்தியமே!
    அப்படிபட்ட ஆன்மாக்களைத்தான் ‘குலதெய்வங்கள்’ என்ற பெயரில்
    காலம் காலமாக நாம் வணங்கி வருகிறோம்! படையல் போடுகிறோம்.//
    நிறைவாய் மனதில் நிறைந்த வரிகள்./////

    ஆமாம். மனதை நிறைக்கும் வரிகள். எழுதும்போது உணர்ச்சிப் பிரவாகத்தில் எழுதுபவனுக்கு தானாகவே வந்து விழுகும் வரிகள் அவைகள்
    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  10. ////Blogger Karthikeyan said...
    அருமையான கதைக்கரு, இயல்பான நடை, மொத்தத்தில் சிறப்பான கதை.////

    உங்களின் பாரட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ////Blogger தமிழ் விரும்பி said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    புதுப் பொலிவுடன் காட்சி தரும் வகுப்பறை தோற்றம் நன்று... அதிலும் கலைமகள் பாரதியின் தோற்றம் மிகவும் அருமை....
    சொந்தவீடு அருமையாகப் போய்க் கொண்டிருக்கும் போதே "ஈரிழைத் துண்டு" என்ற வார்த்தை என்னை ஒரு கணம் நிறுத்தி பொருள் கொள்ளச் செய்தது... அது தான் தொழில் புத்தி என்பார்கள்... உங்களின் தொழிலில் உங்களின் பக்தி... தன்னையும் மீறி விழுந்த வார்த்தை என்பதை உணர்த்திற்று.../////

    ஆமாம். துண்டுகளில்தான் எத்தனை வகைகள். ஈரிழைத்துண்டு, குற்றாலம் துண்டு, தேங்காய்ப்பூத் துண்டு (Turkey Towel) எஸ்.ஆர் துண்டு என்றழைக்கப்பெறும் மேல் துண்டு!

    /////மிகவும் எதார்த்தமான கதையாக இருந்தாலும், அற்புத தத்துவார்தமானக் கருத்துக்களை தாங்கியக் கதை... அதில் உள்ளார்ந்த அர்த்தம் அருமை... நடக்கப் போவதை யாரும் மாற்ற முடியாது... மாற்றம் நடந்ததையும் அப்படியே ஏற்றுக் கொண்டு அடுத்த படிக்கு போகவேண்டும் என்பதும்...அருமை..
    கதையின் கடைசி பகுதி கண்கலங்க வைத்து விட்டது... எவ்வளவு திறமையும், அறிவும், நியாயமான ஆசை இருந்தாலும்; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதில் கூட அதற்கு பின்னே அருவமாக இருக்கும் அருளால் தான் அத்தனையும் நடக்கிறது என்பதை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
    வாழ்வாங்கு வாழ்த்த வீட்டை இடிப்பவன் புண்ணியவான் ஆவதில்லை, என்பதை நேர்மறையாக உணர்த்தி யுள்ளீர்கள் அதிலே உங்களின் ஆதங்கம் தெரிகிறது... எத்தனை சம்பாதித்தாலும் சிக்கனத்தின் அருமையை... ஒரு லட்சம் செலவழித்து மகன் வரவேண்டாம் என்ற ஆச்சியின் முடிவு.. அவரின் நிதானத்தை உணர்த்துகிறது...//////

    (அந்தக் காலத்து) ஆச்சிகள் என்றால் சிக்கனம் தானே!

    //////பழனியப்பன் அண்ணனின் தெளிவிற்கு ஒரு அர்த்தம் கொடுத்ததும், குலதெய்வங்கள் என்பவர்கள் யாவர்? எப்படி உருவாகின என்பதையும் இதன் மூலம் மீண்டும் கூறியிருக்கிறீர்கள்..../////

    குலதெய்வங்களின் அடிப்படைப் பிண்ணனி அதுதான்!

    /////தனியாக இருக்கும், பழனியப்பன் அண்ணன் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவதையோ.. அல்லது இரண்டு பெண்களைக் கொண்ட தனது முதலாளி யின் பெண் குழந்தைகளின் திருமணத்தை தொடர்பு படுத்தி... கதையின் அடுத்த பகுதிக்கு ஒரு ஆரம்பம் எங்காவது வைத்திருப்பீர்கள் என்று நினைத்தேன் இல்லை... அது மட்டுமே ஏமாற்றம்...//////

    சிறுகதை. அதையெல்லாம் எழுதினால் நெடுங்கதையாகிவிடாதா?

    /////வழக்கமாக என்று சொல்ல மாட்டேன் இதில் ஒரு புது போக்கை, இளகிய தத்துவமேவியக் கருக்களத்தைக் (எப்போதும் இருந்தாலும் இதில் சற்று ஆழம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது) காண்கிறேன். அருமை./////

    தோண்டத் தோண்ட ஆழம் அதிகமாகுமல்லவா. அதைப்போல எழுத எழுத ஆழம் அதிகமாகிறதோ என்னவோ?

    ////////நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.//////

    நீங்கள்தான் தமிழ்விரும்பி என்ற புனைப்பெயரில் வருகிறவர் என்பதை எல்லோரும் (including our KMRK) இன்று தெரிந்துகொண்டிருப்பார்கள்.
    நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  12. /////Blogger dhilse said...
    Dear Sir,
    Superb story. Kathaiyin mudivil en manam nekilnthu vizhikazhil kanneer thuzhikal.
    As Iam a middle class person, I know the importance of owning a house.
    Kathaiyai solli ennai Kalangaka vaithu vitrikal vaathiyare.//////

    இந்தக் கதை சிலரது வாழ்க்கையைப் பிரதிபலிப்பதைப் பார்க்கும்போது, கதையின் உண்மை நிலை (யாதார்த்தம்) தெரிய வருகிறது. உங்களின் உள்ளப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. //////Blogger Ravichandran said...
    Ayya,
    It happened to me and my father. When I was in Swiss, my father started construction after 20yrs of rented house experience. My father expired when the constrcution at first floor roofing itself.He got Tetanus due to small iron piece pinched his leg. This story remembering my 3yrs back life. I am not able to control my tears.
    Sincere Student,
    Trichy Ravi/////

    16 ஆண்டுகளுக்கு முன்பு நான் வீடுகட்டுக்கொண்டிருக்கும்போது அதே நிகழ்வை நானும் சந்தித்திருக்கிறேன். லின்ட்டல் லெவல் முடிந்து ஆர்.சி போட்டு முடித்து க்யூரிங் ஆகும் நிலையில், அது போடப்பெற்ற மூன்றாம் நாள், வீட்டு கட்டுமானப் பணியை அதுவரை மேற்பார்வையிற்றுக் கொண்டிருந்த என் தந்தையார் தீடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டார். கட்டுமானம் முடிந்த நிலையில், அந்த வீட்டிற்குக் குடி போகாமல், வாடகைக்கு விட்டிருந்தேன். தொடர்ந்து பல பிரச்சினைகள். இறுதியில் மூன்று ஆண்டுகள் கழித்து, அந்த வீட்டை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டு நிம்மதியடைந்தேன். கட்ட அலைந்ததைவிட, அதை விற்க அலைந்தது பெரிய கதை. பின்னொரு நாளில் அதை எழுதுகிறேன்.

    ReplyDelete
  14. /////Blogger thamurali said...
    Arumai./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. ////Blogger Thanjavooraan said...
    "கடவுளால் உனக்குத் தரப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது
    கடவுள் தர மறுப்பதை உனக்கு யாராலும் தர முடியாது" இது ஒரு அற்புதமான வாக்கியம். எனது வேண்டுகோளை மதித்துத் தங்களது வகுப்பறையை மீண்டும் துவக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி. எனது வேண்டுகோளையும் குறிப்பிட்டதில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. உங்களது கதை வழக்கம் போல அபூர்வமான சிந்தனையை வெளிக்கொணரும் விதத்தில் அமைந்துள்ளது. வீட்டு ராசி இல்லை போலிருக்கிறது ஆச்சிக்கு என்று சொல்லிய இடத்திலும், அவர் தன் ஸ்தூல உடம்போடு அல்லாமல் அரூபமாக அங்கேயே இருக்கிறார் என்பதும் மனதை உருக்கும் காட்சிகளாகும். வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களே, தங்கள் பணி தொடரட்டும், எங்கள் மனங்கள் களிக்கட்டும். வாழ்க!/////

    உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மேன்மைக்கு நன்றி சார்!

    ReplyDelete
  16. மனதை நெருடிய ஒரு நல்ல கதை

    ReplyDelete
  17. /////Blogger shameer said...
    nice story tks a lot sir!/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. //////Blogger sekar said...
    மனதை நெருடிய ஒரு நல்ல கதை/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. வணக்கம் வாத்தியார் ஐயா.

    பாச மலர் என்னும் படத்தில் உயர் திரு சிவாஜி கணேசன் அவர்கள் அற்புதமான வரிகளை கொண்ட வசனத்தை பேசுவார்கள்
    அன்பு தங்கையிடம் .

    உனது மகளின் பெயர் என்ன என்று கேட்பார்கள் அதற்க்கு சாவித்திரி அவர்கள் கூறுவார்கள் " சாந்தி " என்று, இதனை கேட்ட நடிப்பு திலகம் கூறுவார்கள் எனக்கு வாழ்வில் கிடைக்காத

    "நிம்மதியை ",

    உனது மகளுக்கு சாந்தி என்று
    பெயர் வைத்து உள்ளாய் என்று கண்கலங்குவார்.

    மேற்கண்டதை நினைவிற்கு கொண்டும் வரும் பொருட்டு வாத்தியார் ஐயாவின் புதிய வலைப்பூவின் படங்கள் அமைந்து உள்ளன.

    ஆம்! டீன் ஏஜ் என்று கூறப்படுகின்ற விடலைபருவதில் கல்விக்கு அதிபதியான " சரஸ்வதி தேவி " ஒரே சீராக என்னுள்ளில் குடி கொள்ளாமல் Sine wave மாதிரியாக மேலும் கிளும்மாக அமைந்ததை நினைத்து ஏக்கம் கொண்டேன் ஐயா

    --
    Life is beautiful !!!

    ReplyDelete
  20. vannakkam Aiya,
    Siru kathai migavum yathartham matrum sogam...ithu en aachikkum nandanththu polave ullathu...indru avar engaludan puthu veetil varum munbe iranthu vittar...

    I miss her a lot in my Life...thanx for reminding my Aachi...

    ReplyDelete
  21. கதை அருமை. இந்த கதையிலிருந்தே நிறைய கருத்துக்களை எடுத்துக்கொள்ள முடியும். வீடு வாங்கும் / கட்டும் யோகம் எல்லாருக்குமே அமையாது என்பதை நானும் பார்த்திருக்கிறான். என் உறவினர்களில் சிலர் அரசாங்க வேலையில் இருந்தும் இதுவரை வீடு வாங்கவில்லை (ஓய்வும் பெற்றுவிட்டனர்). இத்தனைக்கும் அவர்களுக்கு அப்படி வேறு எந்த கமிட்மென்ட்டும் இல்லை.

    ReplyDelete
  22. Superb story line. based on the story , what could be Aachi's 4th house status.?

    ReplyDelete
  23. Superb story. The character is going to live live in my memory for many years for sure. idhu Oru nalla sirukadhaikku illakkanam.

    ReplyDelete
  24. ///////Blogger kannan said...
    வணக்கம் வாத்தியார் ஐயா.
    பாச மலர் என்னும் படத்தில் உயர் திரு சிவாஜி கணேசன் அவர்கள் அற்புதமான வரிகளை கொண்ட வசனத்தை பேசுவார்கள்
    அன்பு தங்கையிடம் .
    உனது மகளின் பெயர் என்ன என்று கேட்பார்கள் அதற்க்கு சாவித்திரி அவர்கள் கூறுவார்கள் " சாந்தி " என்று, இதனை கேட்ட நடிப்பு திலகம் கூறுவார்கள் எனக்கு வாழ்வில் கிடைக்காத "நிம்மதியை ", உனது மகளுக்கு சாந்தி என்று பெயர் வைத்து உள்ளாய் என்று கண்கலங்குவார். மேற்கண்டதை நினைவிற்கு கொண்டும் வரும் பொருட்டு வாத்தியார் ஐயாவின் புதிய வலைப்பூவின் படங்கள் அமைந்து உள்ளன.ஆம்! டீன் ஏஜ் என்று கூறப்படுகின்ற விடலைபருவதில் கல்விக்கு அதிபதியான " சரஸ்வதி தேவி " ஒரே சீராக என்னுள்ளில் குடி கொள்ளாமல் Sine wave மாதிரியாக மேலும் கீழுமாக அமைந்ததை நினைத்து ஏக்கம் கொண்டேன் ஐயா --
    Life is beautiful !!!///////

    Life is beautiful and at the same time it is short. ஆகவே நடந்ததை எண்ணி வருந்தாமல். நடக்க வேண்டியதை உற்சாகமாக செயல் படுத்துங்கள். மீதமுள்ள வாழ்க்கை beautifulஆக இருக்கும்!

    ReplyDelete
  25. ////Blogger R.Srishobana said...
    vannakkam Aiya,
    Siru kathai migavum yathartham matrum sogam...ithu en aachikkum nandanththu polave ullathu...indru avar engaludan puthu veetil varum munbe iranthu vittar...I miss her a lot in my Life...thanx for reminding my Aachi.../////

    நல்லது. உங்களின் உள்ளப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  26. Blogger Uma said...
    கதை அருமை. இந்த கதையிலிருந்தே நிறைய கருத்துக்களை எடுத்துக்கொள்ள முடியும். வீடு வாங்கும் / கட்டும் யோகம் எல்லாருக்குமே அமையாது என்பதை நானும் பார்த்திருக்கிறேன். என் உறவினர்களில் சிலர் அரசாங்க வேலையில் இருந்தும் இதுவரை வீடு வாங்கவில்லை (ஓய்வும் பெற்றுவிட்டனர்). இத்தனைக்கும் அவர்களுக்கு அப்படி வேறு எந்த கமிட்மென்ட்டும் இல்லை.//////

    அதுதான் வாங்கி வந்த வரம். ஆனால் அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கபெற்றிருக்கும். ஏனென்றால் எல்லோருக்குமே எண்ணிக்கையில் வரத்தின் அளவு 337 தான்!

    ReplyDelete
  27. //////Blogger RAMADU Family said...
    Superb story line. based on the story , what could be Aachi's 4th house status.?///////

    நான்காம் அதிபதி நீசம் பெற்றிருந்தாலும், அஷ்டகவர்க்கத்தில் நான்காம் வீட்டில் 20ம் அல்லது அதற்குக் குறைவான பரல்களும் இருந்தால் வீடு வாங்கும் யோகம் இருக்காது!

    ReplyDelete
  28. //////Blogger RAMADU Family said...
    Superb story. The character is going to live live in my memory for many years for sure. idhu Oru nalla sirukadhaikku illakkanam.//////

    எனது மற்ற கதைகளைப் படித்திருக்கிறீர்களா?. இதுவரை 78 சிறுகதைகளை எழுதியுள்ளேன். பாதிக்கதைகள் இப்படி உணர்சிப் பிரவாகமாகத்தான்/இலக்கணமாகத்தான் இருக்கும்! நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. புதிய பொலிவுடன் வகுப்பு அறை கண்டதும் மிக்க மகிழ்ச்சி,

    சிறுகதை - சொந்த வீடு

    நிறைய தத்துவங்களை தாங்கி வந்துள்ளது,

    நன்றி

    ReplyDelete
  30. வீடு வாங்கும் கனவு
    வீனானது என்று சொன்னால்; என்னை

    பாவமாக பார்க்கும் பலருள் சிலர்
    கோபமாகவும் பார்ப்பார்கள்..

    கருத்துச் சொல்லும் இந்த அய்யர்
    கடுகளவு மாறு பாடுகின்றார்.. அது சரி

    துண்டு பற்றிய
    துண்டுச் செய்தியை தந்து..

    துண்டு துண்டாக வாத்தியாரிடமிருந்து
    துண்டு பற்றி எழுத வைத்த

    அன்புச் சகோதரர் சிங்கைச் செல்வர்
    ஆலாசியம் அவர்களுக்கு நன்றி..

    ஏமாற்றங்கள்.. இல்லாத.. புதிய
    மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்..

    வழக்கம் போல் இந்த
    வகுப்பில் கவிஞரின் வரிகளைசொல்லி

    "வீடு வரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ "

    ReplyDelete
  31. Sir,

    Thanks for presenting a nice touching story.Please post atleast one story per month from your writings.

    ReplyDelete
  32. அக்னி ஹோத்ர பூஜை மந்திரம்
    ( சூர்ய பூஜை மந்திரம்).

    சூர்யாய ஸ்வாகா சூர்யாய இதம் ந நமக
    ப்ரஜபத்தியாய ஸ்வாக பிரஜ பத்தியாய இதம் ந நமக!.

    அக்னியாய ஸ்வாக அக்னியாய இதம் ந நமக

    ப்ரஜபத்தியாய ஸ்வாக பிரஜ பத்தியாய இதம் ந நமக!.

    ReplyDelete
  33. தங்களுடைய புத்திமதிக்கு மிக்க நன்றி ஐயா.

    எல்லாத்தையும் எல்லா இடத்திலையும் எதிபார்க்க முடியாது அல்லவா ஐயா.

    அதனால் தான் அன்பு உள்ள இடத்தில எண்ணத்தில் தோன்றியதை கூறினேன் ஐயா.

    படிக்காத மேதை என்னும் சித்திரத்தில் ஒரு வசனம் வரும், தந்தைக்கு வருட திதி கொடுப்பது வீணான செலவு தானே அது வேணுமா என்று ஒரு மகன் தனது தாயிடம் கேட்பார்.

    அதற்க்கு தாயி கூறுவாள் திதி மற்றும் கர்ம கடன்கள் எல்லாம் செய்வது நாம் காலம் சென்றவரின் மேல் உள்ள பாசத்தால் கொடுப்பது ஆகும். அது வேணுமா என்று கேட்ட பின்னர் அதை கொடுக்கவும் வேண்டுமா என்று கண்ணீர் கவலையுடன் கூறுவாள் தாய்.

    எதோ முடிந்த வரைக்கும் ஐயாவின் வகுப்பறைக்கு வருவதின் மூலம் நல்ல பழக்கம் வழக்கத்தை கடைபிடிக்க முடிகின்றது ஐயா.

    பாசம் உள்பட இல்லையா ஐயா ?

    ReplyDelete
  34. அண்ணாச்சி ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  35. ///கருத்துச் சொல்லும் இந்த அய்யர்
    கடுகளவு மாறு பாடுகின்றார்.. அது சரி////

    கடுகளவோ?, திணையளவோ!, நெல்லின் நுனியளவோ?
    கருத்து மாறினும் உருத்தாக விருத்தம் போல் அர்த்த மிகு
    வரிகளை அந்தத்திலே வைத்து அருமையாக ஒரு
    தன்னூட்டம் மிட்டோய்... அன்பிற்கு நன்றிகள் ஐயரே!

    கவிஞரின் கேளிவிக்கு பதிலையும் இருத்தி இருக்கலாமே?
    "கடைசியில் ஈசன் உந்தன் இணையடி நிழலே" என்று...
    நன்றிகள்,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  36. மன்னிக்கணும், பிழை திருத்தம்..
    நன்றிகள் விசு ஐயர் அவர்களே!

    ReplyDelete
  37. கதையா உண்மைச் சம்பவம்மா என்று சொல்ல முடியாத அளவுக்கு உங்கள் நடை உள்ளது ஐயா! முன்னர் என் ஆக்கத்தில் என் மூத்த‌ சகோதரர் நான் வீடுகட்ட வாஸ்து பூஜை போட்ட அன்று இறந்துபோனது பற்றி எழுதியுள்ளேன்

    ReplyDelete
  38. சென்னையில் குறிப்பிட்ட அந்தப் பகுதிக்குப் போயிருந்தபோது ஜெயப்பூருக்குப் போனதுபோல உணர்வு ஏற்பட்டது முற்றிலும் உண்மை...
    இப்படிக் கதையில் அங்காங்கே, வரிக்குவரி சொல்லிக்கொண்டே போகக்கூடிய இடங்கள் ஏராளம்..
    டஞ்சன் வீடுகளில் வசிக்கும் சென்னை நகரத்தாருக்கு(?) சொந்த வீட்டுக் கனவு நனவாகுமா என்பது பெரும் கேள்விக்குறியே..
    பூர்வீகத்தில் சொத்துபத்துக்கள் இருந்தும் விற்று முதலாக்க மனமில்லாமல் ரீ-பேமென்ட் கெபாசிட்டி வரும்வரை காத்திருந்து கையிருப்பைக் காலிசெய்து(நகையையும் சேர்த்துதான்) வங்கியில் வைத்துத்தான் பலரும் ஆச்சியைப் போலே தன் கனவுதானென்ற போதிலும் அடுத்த தலைமுறைக்காகவாவது சொந்தவீட்டை அடைய எடுக்கும் முயற்சி
    உணர்வுப்பூர்வமாக வாத்தியாரின் வைரவரிகளில் பதிவாக்கப்பட்டுள்ளது..
    அப்படி ஒரு பாசிடிவ் விஷன் கொண்ட ஆச்சியை படைப்பாளர்
    இவ்வளவு சீக்கிரம் தொலைத்துவிட்டிருக்கக் கூடாது..
    இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்..

    ReplyDelete
  39. ////Blogger RMURUGARAJAN said...
    புதிய பொலிவுடன் வகுப்பு அறை கண்டதும் மிக்க மகிழ்ச்சி,
    சிறுகதை - சொந்த வீடு
    நிறைய தத்துவங்களை தாங்கி வந்துள்ளது,
    நன்றி//////

    எல்லாம் உங்களைப் போன்ற வாசகர்கள் மன நிறைவு அடைவதற்காகத்தான் முருகராஜன்!

    ReplyDelete
  40. /////Blogger Senthil said...
    super sir, enjoy the feelings/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  41. ////Blogger iyer said...
    வீடு வாங்கும் கனவு வீனானது என்று சொன்னால்; என்னை
    பாவமாக பார்க்கும் பலருள் சிலர் கோபமாகவும் பார்ப்பார்கள்..
    கருத்துச் சொல்லும் இந்த அய்யர் கடுகளவு மாறுபடுகின்றார்..
    அது சரி, துண்டு பற்றிய
    துண்டுச் செய்தியை தந்து..
    துண்டு துண்டாக வாத்தியாரிடமிருந்து
    துண்டு பற்றி எழுத வைத்த
    அன்புச் சகோதரர் சிங்கைச் செல்வர்
    ஆலாசியம் அவர்களுக்கு நன்றி..
    ஏமாற்றங்கள்.. இல்லாத.. புதிய
    மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்..
    வழக்கம் போல் இந்த
    வகுப்பில் கவிஞரின் வரிகளைசொல்லி
    "வீடு வரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ "//////

    கடைசிவரை வாத்தியாரின் பதிவுகளும், உங்களின் பின்னூட்டங்களும் நிலைத்து நிற்கும் விசுவநாதன்!
    அது கூகுள் ஆண்டவரின் கையில் இருக்கிறது!

    ReplyDelete
  42. ///Blogger Subramanian said...
    Sir,
    Thanks for presenting a nice touching story.Please post atleast one story per month from your writings.//////

    அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  43. ///Blogger kannan said...
    அக்னி ஹோத்ர பூஜை மந்திரம்
    ( சூர்ய பூஜை மந்திரம்).
    சூர்யாய ஸ்வாகா சூர்யாய இதம் ந நமக
    ப்ரஜபத்தியாய ஸ்வாக பிரஜ பத்தியாய இதம் ந நமக!.
    அக்னியாய ஸ்வாக அக்னியாய இதம் ந நமக
    ப்ரஜபத்தியாய ஸ்வாக பிரஜ பத்தியாய இதம் ந நமக!.///////

    வடமொழியில் உள்ளதே கண்ணன். தமிழில் கோளறு திருப்பதிகத்தில் சூரியனுக்கான மந்திரம் உள்ளது!

    ReplyDelete
  44. ////Blogger kannan said...
    தங்களுடைய புத்திமதிக்கு மிக்க நன்றி ஐயா.
    எல்லாத்தையும் எல்லா இடத்திலையும் எதிபார்க்க முடியாது அல்லவா ஐயா.
    அதனால் தான் அன்பு உள்ள இடத்தில எண்ணத்தில் தோன்றியதை கூறினேன் ஐயா.
    படிக்காத மேதை என்னும் சித்திரத்தில் ஒரு வசனம் வரும், தந்தைக்கு வருட திதி கொடுப்பது வீணான செலவு தானே அது வேணுமா என்று ஒரு மகன் தனது தாயிடம் கேட்பார்.
    அதற்கு தாய் கூறுவாள் திதி மற்றும் கர்ம கடன்கள் எல்லாம் செய்வது நாம் காலம் சென்றவரின் மேல் உள்ள பாசத்தால் கொடுப்பது ஆகும். அது வேணுமா என்று கேட்ட பின்னர் அதை கொடுக்கவும் வேண்டுமா என்று கண்ணீர் கவலையுடன் கூறுவாள் தாய்.
    எதோ முடிந்த வரைக்கும் ஐயாவின் வகுப்பறைக்கு வருவதின் மூலம் நல்ல பழக்கம் வழக்கத்தை கடைபிடிக்க முடிகின்றது ஐயா.
    பாசம் உள்பட இல்லையா ஐயா ?/////

    எல்லோரும் அப்படியா என்றால் - இல்லை. உங்களைப் போல சிலர் இருக்கிறார்கள். அதற்காக பழநி அப்பனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்! என்னை எழுத வைப்பவர் அவர்தான். உங்களைப் படிக்க வைப்பவரும் அவர்தான்! இல்லை என்றால் இங்கே எப்படி 2626 தொடர்பவர்கள் இருப்பார்கள்?

    ReplyDelete
  45. ///Blogger nellai அண்ணாச்சி said...
    அண்ணாச்சி ரொம்ப நல்லா இருக்கு////

    நல்லது. சொகமா இருங்க அண்ணாச்சி!

    ReplyDelete
  46. /////Blogger தமிழ் விரும்பி said...
    ///கருத்துச் சொல்லும் இந்த அய்யர்
    கடுகளவு மாறு பாடுகின்றார்.. அது சரி////
    கடுகளவோ?, திணையளவோ!, நெல்லின் நுனியளவோ?
    கருத்து மாறினும் உருத்தாக விருத்தம் போல் அர்த்த மிகு
    வரிகளை அந்தத்திலே வைத்து அருமையாக ஒரு
    தன்னூட்டம் மிட்டோய்... அன்பிற்கு நன்றிகள் ஐயரே!
    கவிஞரின் கேளிவிக்கு பதிலையும் இருத்தி இருக்கலாமே?
    "கடைசியில் ஈசன் உந்தன் இணையடி நிழலே" என்று...
    நன்றிகள்,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.//////

    திருத்திவிட்டேன் ஆலாசியம். இப்போது பாருங்கள்!

    வீடுவரை உறவு
    வீதிவரை மனைவி
    காடுவரை பிள்ளை
    கடைசிவரை ஈசன்!

    ReplyDelete
  47. /////Blogger தமிழ் விரும்பி said...
    மன்னிக்கணும், பிழை திருத்தம்..
    நன்றிகள் விசு ஐயர் அவர்களே!////

    எங்கே திருத்தம்?

    ReplyDelete
  48. ////Blogger kmr.krishnan said...
    கதையா உண்மைச் சம்பவம்மா என்று சொல்ல முடியாத அளவுக்கு உங்கள் நடை உள்ளது ஐயா! முன்னர் என் ஆக்கத்தில் என் மூத்த‌ சகோதரர் நான் வீடுகட்ட வாஸ்து பூஜை போட்ட அன்று இறந்துபோனது பற்றி எழுதியுள்ளேன்////

    ஆமாம். மறக்கூடிய சம்பவமா அது? நினைவூட்டியதற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  49. ////Blogger vprasanakumar said...
    nalla siru kadhai
    miga nanru////

    நல்லது. நன்றி பிரசன்ன குமார்!

    ReplyDelete
  50. ////Blogger minorwall said...
    சென்னையில் குறிப்பிட்ட அந்தப் பகுதிக்குப் போயிருந்தபோது ஜெயப்பூருக்குப் போனதுபோல உணர்வு ஏற்பட்டது முற்றிலும் உண்மை...
    இப்படிக் கதையில் அங்காங்கே, வரிக்குவரி சொல்லிக்கொண்டே போகக்கூடிய இடங்கள் ஏராளம்..
    டஞ்சன் வீடுகளில் வசிக்கும் சென்னை நகரத்தாருக்கு(?) சொந்த வீட்டுக் கனவு நனவாகுமா என்பது பெரும் கேள்விக்குறியே..
    பூர்வீகத்தில் சொத்துபத்துக்கள் இருந்தும் விற்று முதலாக்க மனமில்லாமல் ரீ-பேமென்ட் கெபாசிட்டி வரும்வரை காத்திருந்து கையிருப்பைக் காலிசெய்து(நகையையும் சேர்த்துதான்) வங்கியில் வைத்துத்தான் பலரும் ஆச்சியைப் போலே தன் கனவுதானென்ற போதிலும் அடுத்த தலைமுறைக்காகவாவது சொந்தவீட்டை அடைய எடுக்கும் முயற்சி உணர்வுப்பூர்வமாக வாத்தியாரின் வைரவரிகளில் பதிவாக்கப்பட்டுள்ளது..
    அப்படி ஒரு பாசிடிவ் விஷன் கொண்ட ஆச்சியை, படைப்பாளர் இவ்வளவு சீக்கிரம் தொலைத்துவிட்டிருக்கக் கூடாது..
    இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்..///////

    உங்களின் கண்டிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது மைனர். ஆச்சி இறந்ததால்தான் கதையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஆச்சியின் ஆன்மா அந்த வீட்டில் குடியிருக்கும் என்ற செய்தியைச் சொல்ல முடிந்தது. கதை எழுதுபவர்களுக்குக் கதையில் ஒரு knot, ஒரு turning point, ஒரு message
    ஆகிய மூன்றும் முக்கியம். அதனால் கதை எழுதும் உத்திக்கு (டெக்னிக்கிற்கு) இவை அவசியம் என்பதை உணர்ந்து உங்களின் கண்டிப்பை வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள் மைனர்!:-))))

    ReplyDelete
  51. கதை உண்மைக்கதையாகிப் போனதால் போர்டிங் பாஸ் கொடுத்த படைப்பாளனை நான் கண்டித்தேன்..

    நீங்கள்தான் படைப்பாளி என்று சொல்லியிருப்பதன் மூலம் கதை உண்மையல்ல என்றும் கற்பனைதான் என்றும் புரியவைத்திருக்கிறீர்கள்..

    ReplyDelete
  52. ///////Blogger minorwall said...
    கதை உண்மைக்கதையாகிப் போனதால் போர்டிங் பாஸ் கொடுத்த படைப்பாளனை நான் கண்டித்தேன்..
    நீங்கள்தான் படைப்பாளி என்று சொல்லியிருப்பதன் மூலம் கதை உண்மையல்ல என்றும் கற்பனைதான் என்றும் புரியவைத்திருக்கிறீர்கள்../////

    என்னைக் கண்டித்தால் பரவாயில்லை மைனர். படைப்பாளிக்கு சில கட்டாயங்கள் இருக்கின்றன. ஆகவே அவரை விட்டுவிடுங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com