மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.9.11

துறவின் மகத்துவம்!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
துறவின் மகத்துவம்!

பக்தி மலர்

'ஆசேது ஹிமாச்சலம்' என்று புராணக்கதைகள் உபன்யாசம் செய்பவர்கள் சொல்வார்கள்.அதாவது 'இராமேஸ்வரத்திலிருந்து இமயமலை வரை' என்று பொருள்.

எப்படி தெற்கே உள்ள நமக்குக் காசியாத்திரை முக்கியமோ அதுபோலவடக்கே உள்ளவர்க‌ளுக்கு  ஒருமுறையாவது இராமேஸ்வரம் வரவேண்டும் என்பது பேராவ‌ல்.

இத்த‌னைக்கும் அங்குள்ள சாமானியர்க‌‌ளுக்கு இராமநாத‌ சுவாமி சிவ‌பெருமான் என்ப‌து கூடத் தெரிய‌வில்லை. நாங்க‌ள் காசி யாத்திரை சென்ற‌போது முக‌ல்ச‌ராயிலிருந்து காசிக்குச் செல்லும் ரயிலில் சில சாதாரண மக்கள் 'இராமேஸ்வரத்தில் உறையும் தெய்வம் யாது?' என்று கேட்டனர். நான் 'ஷிவ்ஜி' என்று கூறியவுடன்  'அதெப்படி ஷிவ்ஜிக்கு ராமர் பெயர்?' என்று கேட்டனர். இராமர், இராவணனைக் கொன்ற‌தால் ஏற்பட்ட‌ தனது பிரமஹத்தி தோஷம் போக இராமேஸ்வரத்தில் சிவனை வழிபட்டதாகச் சொல்லப்படும் ஸ்தலபுராணக் கதையை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நான் 'ராம் கா ஈஷ்வர் ராமேஷ்வர்' என்று சொல்லியவுடன் அவர்கள் 'காரே மூரே'என்று கூச்சல் போட ஆரம்பித்துவிட்டனர்.நாங்கள் இடம் மாற்றி உட்கார வேண்டியதாகிவிட்டது.

கா‌சியாத்திரை துவ‌ங்கும் முன் நாம் இராமேஸ்வ‌ர‌ம் சென்று அங்கு ம‌ண் எடுத்துக் கொண்டு திருவேணி சங்க‌‌ம‌த்தில்(அலகாபாத்) கொண்டு சேர்க்க‌
வேண்டும்.அங்கிருந்து காசி சென்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு,காலபைரவர், பிந்துமாதவர் எல்லோரையும் தரிசித்து மீண்டும்
அலகாபாத் சங்கமத்தில் கங்கை நீரை எடுத்துக்கொண்டு இராமேஸ்வரம் வந்து அந்தப் புனித நீரால் இராமநாதருக்கு அபிடேகம் செய்தல் வேண்டும். அப்போதுதான் காசியாத்திரை நிறைவு பெறும்.


ஸ்ரீராம‌கிருஷ்ண‌ர் காசிக்கு யாத்திரை சென்றார். ஆனால் அவ‌ர் தெற்கே இராமேஸ்வ‌ர‌த்திற்கு வ‌ர‌வில்லை.காசியில் உள்ள‌ வேப்ப‌ம‌ர‌மும், த‌ட்சிணேஸ்வ‌ர‌ வேப்ப‌ம‌ர‌மும் த‌ன‌க்கு ஒன்றாக‌வே உள்ள‌தாகக் கூறினார்.

"நீங்க‌ள் க‌ங்கையில் இற‌ங்கிய‌வுட‌ன் உங்க‌ள் பாவ‌மெல்லாம் உங்க‌ளுடைய‌ உட‌லைவிட்டுக் கிள‌ம்பி க‌ரையிலுள்ள மரங்களில் போய் அமர்ந்து கொண்டு நீங்கள் வெளியில் வரக்  காத்திருக்கும்.நீங்கள் நீரில் இருந்து வெளியில் வந்தவுடன் உங்கள் உடலுக்குள் புகுந்துவிடும்" என்றார்.என்ன பொருள்? உண்மையான மனமாற்றம் இல்லாமல் வெறும் கங்கைக் குளியல் மட்டும் போதுமானது ஆகாது என்பதே ஆகும்.

ஸ்ரீப‌ர‌ம‌ஹ‌ம்ச‌ரின் த‌ந்தை க்ஷூதிராம் அவ‌ர்க‌ள் ந‌ட‌ந்தே இராமேஸ்வ‌ர யாத்திரை வ‌ந்து வ‌ங்காள‌ம் மீண்டு இருக்கிறார்.

த‌ன் உல‌க‌ திக்விஜ‌ய‌த்தை முடித்துக் கொண்டு திரும்பிய சுவாமி விவேகாநந்தர் இராமேஸ்வரத்தில்தான் முதலில் தன் திருப்பாதங்களைப் பதித்தார்.இராமநாத‌புரம் மன்னர் பாஸ்கர சேதுபதி சுவாமிஜியின் முன்னர் மண்டியிட்டு அவர் பாதங்களைத் தன் தலையில் ஏந்திக் கொண்டார். கோவிலில் தரிசனம் செய்த பின்னர் "சிலையில் மட்டுமே தெய்வத்தைக் காண்பவர்களுடைய வழிபாட்டைக் காட்டிலும், எல்லா உயிர்களிடமும் உள்ள ஆன்டவனை வழிபடுவதே உயர்வான வழிபாடு" என்று உரையாற்றினார். அந்தப் பொன்மொழிக‌ள் இன்று இராமேஸ்வ‌ர‌க்கோயில் தூண்களில் பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து சிற‌ப்பு.

தூய அன்னையார் ஸ்ரீசார‌தாம‌ணிதேவியார் இராமேஸ்வரத்திற்கு யாத்திரை வந்துள்ளார். அது ஸ்ரீராமகிருஷ்ணருடைய‌ ச‌மாதிக்குப் பின்ன‌ர்தான். அதுவும்
ம‌ட‌மும் மிஷ‌னும் ஓர‌ள‌வு கால் கொண்ட பின்ன‌ர்தான்.அப்போதும் ம‌ன்ன‌ர் பாஸ்க‌ர‌சேதுப‌தி ஸ்ரீஅன்னையாரை த‌க்க‌ ம‌ரியாதைக‌ளுட‌ன் வ‌ர‌வேற்று த‌ரிச‌ன‌ம் செய்து வைத்தார்.

அருள்மிகு இராமநாத‌சுவாமியினை த‌ரிசித்த‌பின்ன‌ர் ஸ்ரீ அன்னையார் "நான் அப்போது பிடித்துவைத்த‌ வ‌டிவ‌த்திலேயே இப்போதும் இருக்கிறாரே!"
என்று த‌ன்னை ம‌ற‌ந்து கூறினாராம். கேட்டுக்கொண்டிருந்த‌ சீட‌ப்பெண் 'என்ன‌ சொன்னீர்கள்? என்று தூண்டிக் கேட்ட‌போது 'ஒன்றுமில்லை' என்று மழுப்பி விட்டாராம்.அப்ப‌டியானால் ஸ்ரீசீதாப்பிராட்டியார்தான் ஸ்ரீ சார‌தாம‌ணி தேவியாராக‌ மீண்டும் அவ‌த‌ரித்தாரா?

ம‌ன்ன‌ர் சேதுப‌தி த‌ன் க‌ட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நகைகள் ஆபரணங்களை காட்சி ஆக்கி ஸ்ரீ அன்னையைக் காண‌ச் செய்தாராம். ஸ்ரீ அன்னை அவ‌ற்றினைப் பார்வையிட்ட பின்ன‌ர் ஏதாவ‌து ஒரு ஆப‌ர‌ண‌த்தை அன்னை த‌ன் விஜ‌ய‌த்தின் நினைவாக‌ எடுத்துக்கொள்ள‌ ம‌ன்ன‌ர்  வேண்டினாராம்.

அன்னை த‌ன‌க்கு ஒன்றும் வேண்டாம் என்றும்,த‌ன் கூட‌ வ‌ந்துள்ள‌ ந‌ளினி என்ற‌ குழ‌ந்தை வேண்டுமானால் எதையாவ‌து ஒன்றை எடுத்துக் கொள்ள‌ட்டும்

என்றார்களாம்.அப்படிச் சொல்லிவிட்டு ம‌னதில் ஸ்ரீ குருதேவ‌ரிட‌ம் அந்தப் பெண் குழந்தைக்கு ந‌கை ஆசையை அந்தச் ச‌ம‌ய‌த்திலாவ‌து போக்கிவிடுங்க‌ள் என்று  வேண்டிக்கொண்டாராம்.

ந‌கைக‌ளைப் பார்வையிட்ட‌ குழ‌ந்தை த‌ன‌க்கு ஒன்றுமே பிடிக்க‌வில்லை என்றும், த‌ன‌து பென்சில் எங்கேயோ விழுந்துவிட்ட‌தாக‌வும் அத‌னை அர‌ச‌ர் க‌ண்டு பிடித்துக்கொடுப்பாரா என்றும் கேட்ட‌தாம்.

துற‌வின் ம‌க‌த்துவ‌த்தை ம‌ன்ன‌ர் அந்த‌ த‌ருண‌த்தில் உண‌ர்திருப்பார் அல்ல‌வா?
 
வ‌குப்ப‌றை ஆசான், மாண‌வ‌ர்க‌ள் அனைவ‌ரையும் அருள்மிகு ப‌ர்வ‌த‌வ‌ர்தினி  ச‌மேத‌ ஸ்ரீ ராம‌நாத‌சுவாமி காக்க‌ட்டும்!

வாழ்க‌ வ‌ள‌முட‌ன்!

ஆக்கம் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான
கே. முத்துராம‌கிருஷ்ண‌ன். லால்குடி
முகாம்: இல‌ண்ட‌ன்



12 comments:

  1. இலங்கைக்கு கடல் கடந்த போதும்
    இந்த ராமனின் நினைவு அனுமானுக்கு

    இந்தியக் கடல் தாண்டிய பின்னரும்
    இராமேஸ்வரம் நினைவு உங்களுக்கு

    கலங்கமில்லாதது தானேபண்பாட்டின்
    கலங்கரை விளக்கம் இருந்தாலும்

    துறவு பற்றி சமயம் சொல்வது
    துறக்க அல்ல மனதை திறக்க.

    பதிவில் "கொலை" என்ற சொல்லை
    பத்திரமாக தவிர்த்திருக்கலாம்

    வழக்கம் போல் வள்ளுவ சிந்தனை
    வகுப்பறை தோழர்களுக்கு..

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.

    ReplyDelete
  2. குரு ஜி நமஸ்காரம்.

    ஸ்ரீ முத்துராமக்ரிஷ்ணன் ஐயா கூறியது போல சரியான சாஸ்திரம் தெரியாததினால் தெரிந்த வரைக்கு இறைவனை மனதில் வேண்டி கொண்டு

    " மனம் நன்றாக இருந்தால் மந்திரம் சொல்ல தேவை இல்லை",

    என்ற சித்தனின் வாக்கை மனதில் கொண்டு, இறைவன் மேல் இருந்த அதிகமான பாச உணர்வாலும் தந்தையார் இறந்த மறு வருடம் அதாவது 1999 ல் காசிக்கு சென்று தர்ப்பணம் கொடுத்து விட்டு பின்னர் திரி வேணி சங்கமதீர்க்கு சென்று கங்கா, யமுனா, சரஸ்வதி கூடும் இடத்தில் எல்லாம் வல்ல முன்னோர்கள், குல தெய்வம்,
    பரமசிவனையும் முப்பத்தி முக்கோடி தேவர்களையும், நாற்பத்தி எண்ணாயிரம் கோடி அசுரர்களையும், சித்தர்களையும் , யானிகள்' ரிசிகள் மற்றும் ஒரு அறிவு பெற்ற புள் பூண்டு முதல் அனைத்து ஜீவ ராசிகளையும் கண்ணீர் மல்க நினைத்து மனம் உருக வேண்டி தர்ப்பணம் கொடுத்து புனித நீர் ஆடினேன் .

    காசிக்கு செல்லும் முன்னரும் பின்னரும் இராமேஸ்வரம் சென்று முடி காணிக்கை கொடுத்துள்ளேன் ஐயா. வாங்கி வந்த கருமங்கள் யம்மை விட்டு விலகவும் இத்தோடு பிரவாம்மை என்னும் வரத்தை வேண்டியும் ஐயா.

    மேலும் இராமேஸ்வரம் சென்று தலை முடி இறக்கி தான் கண்ணன் என்று பெயர் வச்சோம் என்று தாய் தந்தையர் கூற கேட்டு இருக்கின்றேன்.

    அதிகாலை பொழுதில் யன்ன ஒரு அழகான, மிகவும் அற்புதமான ஆன்மிக படைப்பு வாத்தியார் ஐயா.

    ReplyDelete
  3. என் ஆக்கத்தைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதற்கு நன்றி ஐயா!இலண்டனில் கைவசம் புத்தகங்கள் இல்லாமல் நினைவிலிருந்து எழுதுகிறேன். வாத்தியார் ஐயா,தஞ்சாவூர் பெரியவர், நண்பர் ஹாலாஸ்யம் போன்ற வாசிப்புப் பழக்கங்கள் இருப்பவர்கள் என் ஆக்கத்தில் தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டப் பணிந்து வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. உண்மையானத் துறவின் மகத்துவம்.
    அருமை, அருமை... அது
    மனதை தொலைத்ததால் கிடைத்த மகோன்னதம்.
    நன்றி.

    ReplyDelete
  5. இன்று வகுப்பறைக்கு வருவதற்கு மிகவும் தாமதமாகி விட்டது. ஒரு முறையாவது தாங்கள் இங்கு குறிப்பிட்ட இடங்களுக்கு போய் வர வேண்டும் என்ற ஆவல் வந்து விட்டது. எல்லாம் அந்த இறைவனின் சித்தப் படிதானே நடக்கும். துறவு என்பதும் ஒரு அறம்தான். அதற்கு என் ஜாதகத்தில் இடமில்லை. அதனால் வருத்தமுமில்லை.

    ReplyDelete
  6. Kasi yathirai patri naan ariyatha silla thagavalgalaiyum melum thuravarum kurithu vilakkam alitha krishnam ayyavukku mikka nanri...

    ReplyDelete
  7. அய்யா வணக்கம்!

    குழந்தைகளுக்கு திருமணம் செய்து 'செட்டில்' ஆன பின்னர் தான் காசி யாத்திரை செல்ல வேண்டும் என்கிற வழக்கு உள்ளதே! அதைப் பற்றி, தங்களின் வழிகாட்டுதல் வேண்டுகிறேன்!

    ReplyDelete
  8. அன்புள்ள ரம்மி அவர்களே! நீங்கள் சொல்லும் நடைமுறை மிகப் பழங்காலத்திற்குத் தான் பொருந்தும். வாகன வசதிகள் இல்லாத அக்காலத்தில் காசி யத்திரை என்பது நீண்ட நாட்கள், மாதங்கள் வருடங்கள் ஆகும் என்பதாலும், காசியில் போய் இறப்பை எதிர்நோக்கித் தங்கும் நோக்கத்துடன் கிளம்புவதாலும், 'கடமை முடிந்தபின் காசி யாத்திரை' என்று அப்போது சொல்லப்பட்டது.வாகன வசதிகள் உள்ள இந்த நாட்களில் அதிகபக்ஷ‌ம் 2 வரத்தில் ஊர் திரும்பிவிடலாம். விமானப்பயணம் எனில் 4 நாட்களில் யாத்திரை முடிந்து சொந்த ஊர் வந்துவிடலாம். எனவே தயக்கம் இல்லாமல் செல்ல‌லாம். சென்று வந்து உங்களுடைய அநுபவத்தை வகுப்பறையில் எழுதலாமே!

    ReplyDelete
  9. மிக அற்புதமாக காசி மற்றும் ராமேஷ்வரம் யாத்திரை பற்றியும்,அன்னையார் ஸ்ரீசார‌தாம‌ணிதேவியார் மற்றும் ஸ்வாமி விவேகாநந்தரின் இராமேஸ்வர யாத்திரையும் விளக்கமாக பதிவு தந்தமைக்கு, மிக்க நன்றி,
    அத்தோடு உண்மையான மனமாற்றம் இல்லாமல் வெறும் கங்கைக் குளியல் மட்டும் போதுமானது ஆகாது என்ற அற்புதமான விளக்கம்
    மிகச்சிறந்தது.
    இரண்டு மாதங்களுக்கு முன்பு எனது குடும்பத்துடன் ராமேஷ்வரம் சென்று இறைவன் அருள்மிகு இராமாநாத ஸ்வாமி,தாயார் பர்வதவர்த்தினியும் தரிசிக்கும் புண்ணியம் கிடைத்தது.

    நன்றி,
    முருகராஜன்.

    ReplyDelete
  10. திருமதி மனோசாமிநாதன் குறிப்பிடுவது வாத்தியார் ஐயாவின் 'தந்திமீனி ஆச்சி' சிறுகதையைப் பற்றி.....


    வாத்தியாரின் மாணவர்கள் சார்பில் திருமதி மனோ சாமிநாதன் அவர்களுக்கு
    ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றீயாஈத்தேறீவீத்தூக்கொள்கிறோம்.

    ReplyDelete
  11. குறிப்பாக இந்த பக்கங்களை பார்க்கவும் .....

    சிறுகதை முத்துக்கள் (திருமதி. மனோ சாமிநாதன்)
    http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_03.html

    தந்தி மீனி ஆச்சி
    http://classroom2007.blogspot.com/2011/03/short-story_07.html

    நன்றி kmr.krishnan அவர்களுக்கு

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com