மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.9.11

லண்டன் மாநகரைப் பற்றிச் சுவையான செய்திகள் - பகுதி 3

லண்டன் மாநகரில் உள்ள ஒரு நூலகத்தின் எழில்மிகு தோற்றம்!
---------------------------------------------------------------------------------------
லண்டன் மாநகரைப் பற்றிச் சுவையான செய்திகள் - பகுதி 3
அதுதானய்யா இங்கே அழகு!

வாரமலர்

இங்கிலாந்தில் என் மனதுக்கு மிகவும் பிடித்தது நூலகங்களைப் பராமரிக்கும் அழகு.

ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெரிய நூலகமும் பல கிளை நூலகங்களும் நிறுவப்ப‌ட்டு எல்லா நூலகங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.ஒரு கிளை நூலகத்தில் புத்தகங்களை எடுத்துவிட்டு வேறு எந்தக் கிளையிலும் திருப்பி அளிக்கலாம். ஒவ்வொரு புத்தகத்திலும் 'பார்கோட்'அளிக்கப்பட்டு அதனைக் கணினி மூலம் இயக்குவதால் இது சாத்தியமாகிறது.கிளை நூலகங்கள் மக்கள் நடமாடும் கடைகளுக்கு அருகே எல்லோரும் காணத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பொருள் வாங்க‌ வரும் போதே நூலகத்திலும் புத்தகம் மாற்றிக் கொள்ள வசதியாக நூலகங்கள் இருக்கும் இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளை நூலகத்திற்கு வரவழைக்கப் பல ஆக்கபூர்வமான யுக்திகளைக் கையாள்கிறர்கள்.வயதிற்கேற்ற புத்தகங்கள் பிரித்து அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.நம் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற புத்தகங்களை எடுத்துக் கொடுக்கலாம். ஒரே ச‌ம‌ய‌த்தில் 5,6 புத்த‌க‌ங்க‌ள் கூட‌ எடுத்துக் கொள்ள‌லாம்.

ப‌ள்ளிக‌ளுக்குக் கோடை விடுமுறை இங்கு 45 நாட்க‌ள் போல‌. ஜூலை க‌டைசி வார‌ம் முத‌ல் செப்ட‌ம்ப‌ர் முத‌ல் வார‌ம் வ‌ரை கோடை விடுமுறை. இந்த‌ ச‌ம‌ய‌த்தில் நூல‌க‌ங்க‌ள் ஒரு போட்டியை ஏற்பாடு செய்து விள‌ம்ப‌ர‌ப் ப‌டுத்துகின்ற‌‌ன‌. 3 முறையாவ‌து நூல‌க‌த்துற்கு சிறார் வ‌ர‌ வேண்டும். 6 புத்த‌க‌ங்க‌ளையாவ‌து எடுக்க‌ வேண்டும்.ஒவ்வொரு முறையும் எதாவ‌து சிறிய‌ விளையாட்டுச் சாமான் ப‌ரிசாக‌க் கொடுக்க‌ப்ப‌டுகிற‌து. மூன்றாவ‌து முறை வ‌ந்த‌வுட‌ன் மெட‌ல் அளிக்க‌ப்ப‌டுகிற‌து. சான்றித‌ழ் ப‌ள்ளிக்கு அனுப்பப் ப‌டுகின்ற‌து. புத்த‌க‌ம் ப‌டிக்கும் ஆர்வ‌த்தை இந்த‌க் க‌ணினி ம‌ய‌மான‌ நாட்க‌ளிலும் இங்கே ஊக்குவிப்ப‌தைக் க‌ண்டு ம‌ன‌ம் ம‌கிழ்ந்தேன்.

என் பேத்திக்கு(வ‌ய‌து 4+) நூலக‌ மெட‌ல் கிடைத்துவிட்ட‌து. அந்தக் குழ‌ந்தையின் ம‌கிழ்ச்சியைக் காணும் போது, அந்த‌ நூல‌க‌ நிர்வாக‌த்தைக் கை எடுத்துக் கும்பிட‌த் தோன்றிய‌து.

ஏதோ குழந்தை‌க‌ளுக்குத்தான் நூல‌க‌ம் என்று நினைக்காதீர்க‌ள்.வ‌ய‌து முதிர்ந்தோருக்குக் க‌ண் பார்வைக் குறைவைக் க‌ண‌க்கில் கொண்டு பெரிய‌ எழுத்துள்ள‌ புத்த‌க‌ங்க‌ள் என்று த‌னிப்ப‌குதி உள்ள‌து.ந‌ம் ஊரில் பெரிய‌ எழுத்து விக்ர‌மாதித்ய‌ன் க‌தை போல‌! ப‌ல‌ புத்த‌க‌ங்க‌ள் பெரிய எழுத்துருக்களில் (large fontகளில்) கிடைக்கின்ற‌ன‌.  The case for God  என்ற‌ புத்த‌க‌ம் 550 ப‌க்க‌ங்க‌ள் உள்ள‌தை பெரிய‌ எழுத்தில் வாசித்தேன். வெளியீட்டாள‌ர்க‌ளின் முன் யோச‌னையைப் பாராட்டாம‌ல் இருக்க‌ முடியுமா?

2

அடுத்துப் ப‌ள்ளிக் க‌ல்வி. என் பேத்தி இப்போது Reception  என்ற‌ வ‌குப்புக்குப் போக‌ப்போகிறாள். ந‌ம் ஊர் யு கே ஜி போன்ற‌‌து.இதுவ‌ரை ந‌ர்ச‌ரி வ‌குப்பு.
புத்த‌க‌ம், சில‌ப‌ஸ் என்று ஒன்றும் இல்ல‌ம‌ல் விளையாட்டாக‌ எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்க‌ள்.

எடுத்துக்காட்டாக‌, அவ‌ர்க‌ளுடைய‌ ப‌ள்ளித் தோட்ட‌த்தில் ஒரு ம‌ர‌த்தினைச் சுற்றி ஒரு மேடை. அது அறு கோண‌த்தில் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.ஒவ்வொரு ப‌க்க‌த்திலும் சுற்றி வ‌ந்து அத‌ன் ப‌க்க‌ங்க‌ளை என் பேத்தி எண்ணி 'இந்த‌ மேடைக்கு ஆறு ப‌க்க‌ங்க‌ள் உள்ள‌ன‌ 'என்றாள். என் ம‌க‌ள் அத‌ன் பெய‌ர் 'ஹெக்ஸ‌க‌ன்'என்றாள். 'அப்ப‌டியானால் நான்கு ப‌க்க‌ம் இருந்தால் அத‌ன் பெய‌ர் என்ன‌?' என்று குழ‌ந்தை கேட்ட‌து. இந்த‌ச் செய்தியை வ‌குப்பு ஆசிரியையிட‌ம் சொன்ன‌ போது, அவ‌ர்க‌ள் அத‌னை ஒரு விளையாட்டாக‌ மாற்றி எல்லா குழ‌ந்தைக‌ளுக்கும், ட்ரை ஆங்கிள், ஸ்கொய‌ர், ரெக்டாங்கிள், ச‌ர்கிள் எல்லா‌வ‌ற்ற‌யும் புரிய‌ வைத்து விட்ட‌ன‌ர்.

வீட்டில் வ‌ந்து குழ‌ந்தை 'Mr.Haaris said today....' அல்ல‌து 'Mrs.Howson told a story in the class..' என்று சொல்லுவாள். YAAR அவ‌ர்க‌ள் என்று கேட்ட‌ போது 'எங்க‌‌ள் த‌லைமை ஆசிரிய‌ர் , எங்க‌‌ள் வ‌குப்பு ஆசிரியை' என்றாள்.

என் ம‌க‌ள் , 'இந்த‌ ஊரில் ப‌த‌வியை விட‌ அவ‌ர் அவ‌ர்க‌ளுடைய‌ பெய‌ரைச் சொல்லி அழைப்ப‌தையே விரும்புவார்க‌ள். அத‌னால் குழ‌ந்தையிலேயே அந்த‌ப் ப‌ழ‌க்க‌ம் வ‌ரும்ப‌டி ப‌ள்ளியிலேயே ப‌ழ‌க்கி விட்டு விடுவார்க‌ள்'என்றாள்.

("பெத்துப் பேர் வ‌ச்ச‌ மாதிரி பேர் சொல்லிக் கூப்பிட‌றியே!"‍‍இது ந‌ம்ம‌ ஊர்!)

ப‌ள்ளிக‌ளுக்கு (இன்ஸ்பெக்ஷ‌‌ன்)  உண்மையாக‌ ந‌டை பெறுகிற‌து.3 வார‌ங்க‌ளுக்கு மேல் குழு ப‌ள்ளியில் அம‌ர்ந்து ஆய்வு செய்கிற‌து. ஒவ்வொரு பிரிவும் விவ‌ர‌மாக‌ விசார‌ணை செய்து முடிவு எடுக்க‌ப்ப‌டுகிற‌து.அதில் பெற்றோருக்கான‌ ப‌ங்கும் உண்டு.பெற்றோரிட‌ம் ஒரு வினாத்தாள் அளிக்க‌ப்ப‌ட்டு அதில் ப‌ள்ளியின் ந‌டைமுறைக‌ளைப் ப‌ற்றி அவ‌ர்க‌ளுடைய‌ அபிப்ராய‌ங்க‌ள் கேட்க‌ப்ப‌ட்டு ப‌ள்ளிக்கான‌ ம‌திப்பீட்டில் அத‌ற்கு ம‌திப்பெண் கொடுக்க‌ப்ப‌டுகிற‌து. குழ‌ந்தைக‌ளிட‌ம் த‌னித் த‌னியாக‌ ஆசிரிய‌ர்க‌ளின் ப‌யிற்றுவிக்கும் திற‌மை ப‌ற்றி கேட்டு அறிய‌ப்ப‌டுகிற‌து.எல்லாவ‌ற்றையும் க‌ண‌க்கில் எடுத்துக் கொண்டு ப‌ள்ளிக‌ளுக்குத் த‌ர‌வ‌ரிசை அளிக்க‌ப்ப‌டுகிற‌து.

எல்லாம் ந‌ன்றாக‌ இருந்தும், 16 வ‌ய‌தில் வேலைக்குச் செல்ல‌லாம் என்ப‌தால், பெரும்பாலும் மேல் ப‌டிப்புக்குப் போகாம‌ல் ப‌ண‌ம் ச‌ம்பாதித்து பெற்றோரின் க‌ட்டுப்பாட்டில் இருந்து வெளியேறும் இளைஞ‌ர்க‌ள், அர‌சு அளிக்கும் க‌ல்விச் ச‌லுகைக‌ளை அனுப‌வ‌ப்ப‌தில்லை என்று என‌க்குப்ப‌டுகிற‌து.மேலும் ப‌ல‌க‌லைப் ப‌டிப்புக் க‌ட்ட‌ண‌ங்க‌ளும் மிக‌ அதிக‌ம்.

இந்தியாவில் ஒரு குறைந்த‌ ச‌ம்ப‌ள‌, சாதார‌ண‌ வேலையில் இருப்போர் த‌ன் ம‌க‌வுக‌ளைக் க‌ல்லூரிக்கு அனுப்ப‌முடியும். இங்கிலாந்த்தில் அது சாத்திய‌ம் இல்லை.

(இன்னும் வ‌ரும்)
வாழ்க‌ வ‌ள‌முட‌ன்!
ஆக்க‌ம்: வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான
கே.முத்துராம‌ கிருஷ்ண‌ன்(லால்குடி)
முகாம்: இல‌ண்ட‌ன்

வாழ்க வளமுடன்!

16 comments:

  1. ஆ‌க்கத்தை வெளியிட்டமைக்கு மிக்க‌ நன்றி அய்யா!

    'கோவில்‌ எத்த‌னை கோவில‌டா!'என்ற த‌லைப்பு dashboard ல் காண்கிற‌து.ஆனால் பிர‌சுர‌மாக‌வில்லையே!

    ம‌னோ சாமின‌த‌ன் நேற்று பின்னூட்ட‌த்தில் த‌ங்க‌ளின் 'த‌ந்திமீனி ஆச்சி சிறுக‌தையை த‌ன்னுடைய‌ வ‌லைப்பூவில் பாராட்டியுள்ள‌தைக்குறிப்பிட்டுள்ளார்.

    அந்த‌ வ‌லைப்பூவின் முக‌வ‌ரி
    http://blogintamil.blogspot.com

    ReplyDelete
  2. //இந்தியாவில் ஒரு குறைந்த‌ ச‌ம்ப‌ள‌, சாதார‌ண‌ வேலையில் இருப்போர் த‌ன் ம‌க‌வுக‌ளைக் க‌ல்லூரிக்கு அனுப்ப‌முடியும். இங்கிலாந்த்தில் அது சாத்திய‌ம் இல்லை// -ஒரு நல்ல ஜோக் !

    ReplyDelete
  3. ஆசிரியரே வணக்கம்.

    அன்று முதல் இன்று வரை வெள்ளைகாரர்கள் அடுத்தவருக்கு முன் உதாரணமாக தான் உள்ளார்கள். நன்றி ஐயா தங்களுடைய பொன்னான நேரத்தை முதலிடு செய்து வார மலரை வெளியிட்டமைக்கு வாத்திக்கும் முதல் பெஞ்சு மாணவருக்கும் தங்கமான நன்றிகள்.

    இப்படிக்கு கடைசி பெஞ்சு மாணவன்.

    ReplyDelete
  4. கிட்டத்தட்ட வளர்ந்த நாடுகளின் நிலை இதுதானோ?
    ஜப்பானில் கூட இதே நிலைதான்.சராசரி ஜப்பானியனுக்கு கல்லூரி என்பது கனவுதான்..
    குடும்பச் சூழலில் கட்டணக் கணக்குப் போட்டு மலைத்து கிடைத்த வேலைக்குப் போகும் விதிவசப்பட்ட வாழ்க்கை வாழும்பலர் இருக்கவே செய்கிறார்கள்..
    ஒரு பதினைந்துரூபாய் செலவு செய்து எலெக்ட்ரிக் ட்ரெயினில் சென்னையில் ஒரு மணிநேர தூரத்தைக் கடந்து போய்ச்சேர முடியும்.
    அதே தூரத்தைக்கடக்க இங்கே ஜப்பானில் கிட்டத்தட்ட
    600-700 ரூபாய் (இந்திய மதிப்பில்) செலவாகிறது.அதுவும் புல்லெட் ட்ரெயின் அல்ல..சாதாரண ட்ரெயின்தான்..
    ஆனால் குறித்த நிமிடத்தில் குறித்த இடத்தை திட்டமிட்டபடி போய்ச் சேரலாம்..
    சீட் வசதிகள் கொஞ்சம் அதிகம்..A /C செய்யப்பட்டது..ஆட்டோமாடிக் டோர், டிஜிடல் ஸ்டேஷன் இன்டிகேடர் ,ஆட்டோமாடிக் என்ட்ரி,எக்ஸ்யட் டிக்கெடிங் மஷின், எஸ்கலடர்,லிப்ட் , fare அட்ஜஸ்ட்மென்ட் மெஷின்(இது சிங்கப்பூரில் இல்லை) என்று ஸ்டேஷன் சர்வீஸ் வசதிகளில் வித்தியாசம் இருந்தாலும் ஒன்றுமே வசதிகள் இல்லாவிட்டாலும் ஜப்பானில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவன் பயணிக்க என்று குறைந்த கட்டணத்தில் இந்தியாவை போலே ட்ரெயின் (வசதிகள்????) என்ற வாய்ப்பு சுத்தமாக இல்லை..
    புல்லெட் ட்ரெயின் என்றால் அப்டியே 6000ரூபாய் ஆகும்..
    நேரம் பாதி மிச்சமாகும்..flight லே பறப்பதுபோன்ற அனுபவம்தான்..கொஞ்சம்கூட வித்தியாசம் இல்லை..என்றாலும் காசைக் கணக்குப் பண்ணினால் வித்தியாசம் எங்கோ?

    ReplyDelete
  5. உயர்வும் தாழ்வும்
    ஒப்பீடு என்றே கொள்ள வேண்டும்

    ஒப்பீடு செய்யத் தொடங்கினால்
    உண்மையிலேயே நமக்கு அதிகமாக

    தாழ்வு மனப்பாண்மை உள்ளது என
    தவறாமல் சொல்லிவிடலாம்.

    உணவு விடுதிக்கு சென்றபோதும்
    உங்களுக்கு வந்தது போல தோசை

    ரோஸ்டாக இல்லை எனக்கு எல்லாம்
    வேஸ்டுன்னு அங்காலாய்கும்

    அல்பத்தனமான
    ஆசாமிகளா நாம்..

    முதுகை சொறிந்துகொள்ள
    முக்காலடி விசிறியை எடுத்தபடி..

    ReplyDelete
  6. நல்லது நல்ல விஷயம் தான்....
    இரண்டுத் தகவல்களும் நண்பர் மைனர்வாள் சொன்னது போல் அவைகள் தான் வளர்ந்த நாடுகள் என்பதைக் குறிக்கும்...
    குறிப்பாக நூலகம் தொடர்பான தகவல்கள் தாங்கள் சொன்னது போல், இங்கேயும் (சிங்கப்பூரிலும்) அப்படித்தான் இன்னும் சொன்னால்.. நடமாடு நூலகமும் உண்டு அவை சிறப்பு பேரூந்து ஒன்றை தயார் செய்து ரயில் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு வரும்... இன்னொரு வசதி ஆன் லயனில் புத்தக வாசிப்பு காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்...

    ///இந்த‌ச் செய்தியை வ‌குப்பு ஆசிரியையிட‌ம் சொன்ன‌ போது, அவ‌ர்க‌ள் அத‌னை ஒரு விளையாட்டாக‌ மாற்றி எல்லா குழ‌ந்தைக‌ளுக்கும், ட்ரை ஆங்கிள், ஸ்கொய‌ர், ரெக்டாங்கிள், ச‌ர்கிள் எல்லா‌வ‌ற்ற‌யும் புரிய‌ வைத்து விட்ட‌ன‌ர்./////

    இது தான் அவர்களின் சிறப்பு யார் கூறினார்கள் என்றுப் பார்க்க மாட்டார்கள்... அதில் பயன் இருந்தால் அனைவரையும் சென்றடைய செய்துவிடுவார்கள்... இதே நம்மவர்கள் என்றால் பெரும்பாலும் ... காதில் போட்டுக் கொள்ள மாட்டார்கள் என்பதைவிட அதிகப் பிரசங்கி என்று முணுமுணுத்துக் கொண்டு ஒருப் பார்வையும் இருக்கும்...

    பள்ளியின் தரவரிசை சிங்கப்பூரில் செவிவழியாகவும் அங்கு படிக்கும் மாணவர்களின் மதிப்பெண் பொருட்டும் மக்களாக பிரித்துக் கொள்கிறோம்... குறைந்தது இவ்வளவு மதிப்பெண் வாங்கி இருந்தால் அந்தப் பள்ளியில் இடம் உண்டு என்பதை நிர்வாகம் சொல்லிவிடும்...

    ஆனால் இன்னொரு சிறப்பு.. ஆனால் அதனால் சிலருக்கு அது கசப்பும் கூட... அதாவது பள்ளியில் முதல் வகுப்பில் எல்லோரு ஒன்றாகப் படித்தாலும்... இரண்டாம் வகுப்பு போகும் பொது முதல் வகுப்பில் மொத்தப் பள்ளியில் முதல் நாற்பது ரேங்க் வாங்கும் பிள்ளைகள் முதல் வகுப்பு (பேண்ட் ஓன்று) அப்படியே இரண்டு, மூன்று என்று போய்... எப்படி சொல்லித் தந்தாலும் புரிந்துக் கொள்ளாத மாணவர்களை கடைசி வகுப்பில் வைத்து அவர்களின் புரிந்துக் கொள்ளும் திறனுக்கு ஏற்ற வகையில் பாடம் சொல்லித் தரப் படுகிறது... இதில் முதல் வகுப்பில் உள்ள பிள்ளைகள் கடைசிக்கும்... கடைசியில் இருக்கும் பிள்ளைகள் முத்த வகுப்பிற்கும் அவர்களின் தெர்சியைப் பொறுத்து அனுப்பக் கூடும்...

    இவைகள் எல்லாம் நன்று தான்... நம்ம ஊர் அரசியல் வாதிகள் குண்டு சட்டியிலே குதிரை ஓட்டாமல் வெளியில் சென்று வந்து இது போன்று கொண்டு வர முயற்சிக்க வேண்ண்டும்..

    அதிகாரிகளே லஞ்சம் தந்து தான் பதவி உயர் பெரும் நிலை உள்ளது போல் அவர்களுக்கு அக்கறை எப்படி வரும்.. என்னமோ போங்க! இந்திய மூளை வீணாவது வருத்தத்திற்கு உரியதே...
    நல்லப் பதிவு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  7. சுவாரசியமான தகவல்கள்! உங்கள் பேத்தி போட்டோவும் போட்டிருக்கலாமே!

    ReplyDelete
  8. இன்று வாத்தியார் (ஆசிரியர்) தினம் நல்வாழ்த்துகள்,

    சிறந்த நகைசுவை கார்டூன்
    நம் நாட்டின் மிக மோசமன நிலமை,

    இன்று கூட கர்னாடகவில் மிக பெரிய சுரங்க முறைகேடுக்கு முன்னாள் அமைச்சர் கைது,

    எங்கு போய் முடியுமோ, ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்,

    நன்றி,

    ReplyDelete
  9. /////Blogger kmr.krishnan said...
    ஆ‌க்கத்தை வெளியிட்டமைக்கு மிக்க‌ நன்றி அய்யா!
    'கோவில்‌ எத்த‌னை கோவில‌டா!'என்ற த‌லைப்பு dashboard ல் காண்கிற‌து.ஆனால் பிர‌சுர‌மாக‌வில்லையே!/////

    அது வரைவு பகுதியில் உள்ளது. கூடிய சீக்கிரம் வெளியாகும் சார்!

    /////// ம‌னோ சாமின‌த‌ன் நேற்று பின்னூட்ட‌த்தில் த‌ங்க‌ளின் 'த‌ந்திமீனி ஆச்சி சிறுக‌தையை த‌ன்னுடைய‌ வ‌லைப்பூவில் பாராட்டியுள்ள‌தைக்குறிப்பிட்டுள்ளார்.
    அந்த‌ வ‌லைப்பூவின் முக‌வ‌ரி
    http://blogintamil.blogspot.com/////

    அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்!

    ReplyDelete
  10. ///Blogger முரசொலி மாறன்.V said...
    //இந்தியாவில் ஒரு குறைந்த‌ ச‌ம்ப‌ள‌, சாதார‌ண‌ வேலையில் இருப்போர் த‌ன் ம‌க‌வுக‌ளைக் க‌ல்லூரிக்கு அனுப்ப‌முடியும். இங்கிலாந்தில் அது சாத்திய‌ம் இல்லை// -ஒரு நல்ல ஜோக்!///////

    இப்போது இந்தியாவிலும் நிலைமை மாறிவிட்டது. கல்விக் கட்டணங்கள் தாறுமாறாக ஏறிவிட்டது. கல்வி வியாபாரமாகிவிட்டது என்பதென்னவோ உண்மைதான்.

    ReplyDelete
  11. //////Blogger kannan said...
    ஆசிரியரே வணக்கம்.
    அன்று முதல் இன்று வரை வெள்ளைகாரர்கள் அடுத்தவருக்கு முன் உதாரணமாக தான் உள்ளார்கள். நன்றி ஐயா தங்களுடைய பொன்னான நேரத்தை முதலிடு செய்து வார மலரை வெளியிட்டமைக்கு வாத்திக்கும் முதல் பெஞ்சு மாணவருக்கும் தங்கமான நன்றிகள்.
    இப்படிக்கு கடைசி பெஞ்சு மாணவன்.//////

    உங்களை முதல் பெஞ்சில் அல்லவா உட்காரவைத்திருந்தேன். கடைசி பெஞ்சிற்கு ஏன் சென்றீர்கள்?

    ReplyDelete
  12. ////Blogger minorwall said...
    கிட்டத்தட்ட வளர்ந்த நாடுகளின் நிலை இதுதானோ?
    ஜப்பானில் கூட இதே நிலைதான்.சராசரி ஜப்பானியனுக்கு கல்லூரி என்பது கனவுதான்..
    குடும்பச் சூழலில் கட்டணக் கணக்குப் போட்டு மலைத்து கிடைத்த வேலைக்குப் போகும் விதிவசப்பட்ட வாழ்க்கை வாழும்பலர் இருக்கவே செய்கிறார்கள்..
    ஒரு பதினைந்துரூபாய் செலவு செய்து எலெக்ட்ரிக் ட்ரெயினில் சென்னையில் ஒரு மணிநேர தூரத்தைக் கடந்து போய்ச்சேர முடியும்.
    அதே தூரத்தைக்கடக்க இங்கே ஜப்பானில் கிட்டத்தட்ட
    600-700 ரூபாய் (இந்திய மதிப்பில்) செலவாகிறது.அதுவும் புல்லெட் ட்ரெயின் அல்ல..சாதாரண ட்ரெயின்தான்..
    ஆனால் குறித்த நிமிடத்தில் குறித்த இடத்தை திட்டமிட்டபடி போய்ச் சேரலாம்..
    சீட் வசதிகள் கொஞ்சம் அதிகம்..A /C செய்யப்பட்டது..ஆட்டோமாடிக் டோர், டிஜிடல் ஸ்டேஷன் இன்டிகேடர் ,ஆட்டோமாடிக் என்ட்ரி,எக்ஸ்யட் டிக்கெடிங் மஷின், எஸ்கலடர்,லிப்ட் , fare அட்ஜஸ்ட்மென்ட் மெஷின்(இது சிங்கப்பூரில் இல்லை) என்று ஸ்டேஷன் சர்வீஸ் வசதிகளில் வித்தியாசம் இருந்தாலும் ஒன்றுமே வசதிகள் இல்லாவிட்டாலும் ஜப்பானில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவன் பயணிக்க என்று குறைந்த கட்டணத்தில் இந்தியாவை போலே ட்ரெயின் (வசதிகள்????) என்ற வாய்ப்பு சுத்தமாக இல்லை..
    புல்லெட் ட்ரெயின் என்றால் அப்டியே 6000ரூபாய் ஆகும்..
    நேரம் பாதி மிச்சமாகும்..flight லே பறப்பதுபோன்ற அனுபவம்தான்..கொஞ்சம்கூட வித்தியாசம் இல்லை..என்றாலும் காசைக் கணக்குப் பண்ணினால் வித்தியாசம் எங்கோ?////

    உங்களின் தகவல் பகிர்விற்கு நன்றி மைனர்!

    ReplyDelete
  13. ////Blogger iyer said...
    உயர்வும் தாழ்வும்
    ஒப்பீடு என்றே கொள்ள வேண்டும்
    ஒப்பீடு செய்யத் தொடங்கினால்
    உண்மையிலேயே நமக்கு அதிகமாக
    தாழ்வு மனப்பாண்மை உள்ளது என
    தவறாமல் சொல்லிவிடலாம்.
    உணவு விடுதிக்கு சென்றபோதும்
    உங்களுக்கு வந்தது போல தோசை
    ரோஸ்டாக இல்லை எனக்கு எல்லாம்
    வேஸ்டுன்னு அங்காலாய்கும்
    அல்பத்தனமான
    ஆசாமிகளா நாம்..
    முதுகை சொறிந்துகொள்ள
    முக்காலடி விசிறியை எடுத்தபடி../////

    முக்காலடி விசிறி ஒன்றை எனக்கும் அனுப்பிவையுங்கள் விசுவநாதன்!

    ReplyDelete
  14. //////Blogger தமிழ் விரும்பி said...
    நல்லது நல்ல விஷயம் தான்....
    இரண்டுத் தகவல்களும் நண்பர் மைனர்வாள் சொன்னது போல் அவைகள் தான் வளர்ந்த நாடுகள் என்பதைக் குறிக்கும்...
    குறிப்பாக நூலகம் தொடர்பான தகவல்கள் தாங்கள் சொன்னது போல், இங்கேயும் (சிங்கப்பூரிலும்) அப்படித்தான் இன்னும் சொன்னால்.. நடமாடு நூலகமும் உண்டு அவை சிறப்பு பேரூந்து ஒன்றை தயார் செய்து ரயில் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு வரும்... இன்னொரு வசதி ஆன் லயனில் புத்தக வாசிப்பு காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்...
    ///இந்த‌ச் செய்தியை வ‌குப்பு ஆசிரியையிட‌ம் சொன்ன‌ போது, அவ‌ர்க‌ள் அத‌னை ஒரு விளையாட்டாக‌ மாற்றி எல்லா குழ‌ந்தைக‌ளுக்கும், ட்ரை ஆங்கிள், ஸ்கொய‌ர், ரெக்டாங்கிள், ச‌ர்கிள் எல்லா‌வ‌ற்ற‌யும் புரிய‌ வைத்து விட்ட‌ன‌ர்./////
    இது தான் அவர்களின் சிறப்பு யார் கூறினார்கள் என்றுப் பார்க்க மாட்டார்கள்... அதில் பயன் இருந்தால் அனைவரையும் சென்றடைய செய்துவிடுவார்கள்... இதே நம்மவர்கள் என்றால் பெரும்பாலும் ... காதில் போட்டுக் கொள்ள மாட்டார்கள் என்பதைவிட அதிகப் பிரசங்கி என்று முணுமுணுத்துக் கொண்டு ஒருப் பார்வையும் இருக்கும்...
    பள்ளியின் தரவரிசை சிங்கப்பூரில் செவிவழியாகவும் அங்கு படிக்கும் மாணவர்களின் மதிப்பெண் பொருட்டும் மக்களாக பிரித்துக் கொள்கிறோம்... குறைந்தது இவ்வளவு மதிப்பெண் வாங்கி இருந்தால் அந்தப் பள்ளியில் இடம் உண்டு என்பதை நிர்வாகம் சொல்லிவிடும்...
    ஆனால் இன்னொரு சிறப்பு.. ஆனால் அதனால் சிலருக்கு அது கசப்பும் கூட... அதாவது பள்ளியில் முதல் வகுப்பில் எல்லோரு ஒன்றாகப் படித்தாலும்... இரண்டாம் வகுப்பு போகும் பொது முதல் வகுப்பில் மொத்தப் பள்ளியில் முதல் நாற்பது ரேங்க் வாங்கும் பிள்ளைகள் முதல் வகுப்பு (பேண்ட் ஓன்று) அப்படியே இரண்டு, மூன்று என்று போய்... எப்படி சொல்லித் தந்தாலும் புரிந்துக் கொள்ளாத மாணவர்களை கடைசி வகுப்பில் வைத்து அவர்களின் புரிந்துக் கொள்ளும் திறனுக்கு ஏற்ற வகையில் பாடம் சொல்லித் தரப் படுகிறது... இதில் முதல் வகுப்பில் உள்ள பிள்ளைகள் கடைசிக்கும்... கடைசியில் இருக்கும் பிள்ளைகள் முத்த வகுப்பிற்கும் அவர்களின் தேர்ச்சியைப் பொறுத்து அனுப்பக் கூடும்...
    இவைகள் எல்லாம் நன்று தான்... நம்ம ஊர் அரசியல் வாதிகள் குண்டு சட்டியிலே குதிரை ஓட்டாமல் வெளியில் சென்று வந்து இது போன்று கொண்டு வர முயற்சிக்க வேண்ண்டும்..
    அதிகாரிகளே லஞ்சம் தந்து தான் பதவி உயர் பெரும் நிலை உள்ளது போல் அவர்களுக்கு அக்கறை எப்படி வரும்.. என்னமோ போங்க! இந்திய மூளை வீணாவது வருத்தத்திற்கு உரியதே...
    நல்ல பதிவு நன்றிகள் ஐயா!//////

    நல்ல பின்னூட்டம். நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Blogger Uma said...
    சுவாரசியமான தகவல்கள்! உங்கள் பேத்தி போட்டோவும் போட்டிருக்கலாமே!//////

    அடுத்த பதிவில் போடுவார். பொறுத்திருங்கள் சகோதரி!

    ReplyDelete
  16. /////Blogger RMURUGARAJAN said...
    இன்று வாத்தியார் (ஆசிரியர்) தினம் நல்வாழ்த்துகள்,
    சிறந்த நகைசுவை கார்டூன் நம் நாட்டின் மிக மோசமான நிலமை,
    இன்று கூட கர்னாடகவில் மிக பெரிய சுரங்க முறைகேடுக்கு முன்னாள் அமைச்சர் கைது,
    எங்கு போய் முடியுமோ, ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்,
    நன்றி,////

    யாரைக் காப்ப்பாற்ற வேண்டும் - மக்களைத்தானே? அதெல்லாம் காப்பாற்றுவார். பொருத்திருந்து பாருங்கள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com