மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.8.10

மண்டபத்தில் ‘அதையும்’ எழுதிக் கொடுப்பார்களா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மண்டபத்தில் ‘அதையும்’ எழுதிக் கொடுப்பார்களா?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 9
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
-----------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.25
திருநாராயணன்
ஸ்ரீரங்கம்
   
வணக்கம் அய்யா
கேள்விகள் எல்லாம் என்னுடைய சொந்த கற்பனையே!
யாரோ ஒருவர் மண்டபத்தில் உருவாக்கி கொடுத்து கேட்கப்பட்டது 
அல்ல! சுத்த அக்மார்க் திருநாராயணனால் கேட்கப்பட்டது.
நன்றி அய்யா!

அதையெல்லாம் நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அதுபோகட்டும், மண்டபத்தில் எழுதிக்கொடுக்கிற ஆட்கள் உங்கள் ஊரில் உள்ளதுபோல் தெரிகிறது. கேள்விகளை மட்டும்தான் எழுதித் தருவார்களா? கேள்விகளுக்குப் பதில்களையும் எழுதித்தருவார்களா? கேட்டுச் சொல்லுங்கள்:-))))

1. “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” என்பதன் அர்த்தம் என்ன?

திருமணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகச்
சொல்லப்படும் சொல்லடை அது! இப்போது எல்லோரும் உஷாராக இருக்கிறார்கள். பத்துப் பொய்களைக்கூடச் சொல்ல முடியாது.
சொன்னால், பிறகு மகளிர் காவல்நிலைத்தில் நிற்க வேண்டிய
நிலைமை ஏற்படலாம். அதையும் யோசித்துப் பொய்களைச்
சொல்வது நல்லது.

2. குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?

மூன்று பேர்கள் ஒரே ராசியாக இருந்தால் கோச்சாரத்தில் கிரகங்கள்
மூன்று பேரையும் ஒரே சமயத்தில் படுத்தி எடுக்கும். ஏழரைசனி,
அஷ்டமச் சனி எல்லாம் ஒரே நேரத்தில் வந்து உலகக்கோப்பை
ரேஞ்சிற்கு விளையாடும்.ராசிநாதனாக உள்ள கிரகத்தின் கோவிலுக்கு, அடிக்கடி சென்று வணங்கிவிட்டு வரலாம். உதாரணம் சிம்ம ராசியாக இருந்தால் சூரியனார் கோவில். மகரம் அல்லது கும்ப ராசியாக இருந்தால் திருநள்ளாறு. அல்லது தனித்தனியாக அவரவர்களுக்கு நடக்கும்
தசையை வைத்து, தசாநாதனின் கோவிலுக்குச் சென்று வணங்கிவிட்டு வரலாம். வசதியில்லாதவர்கள், தங்களின் ஜென்மநட்சத்திரத்தன்று
உள்ளூர் சிவன் கோவிலுக்குச் சென்று மனம் உருகி சிவனை வழி பட்டு
விட்டு வரலாம். அர்ச்சனை செய்துவிட்டு வரலாம்.  நல்ல பலன்
கிடைக்கும். நம்பிக்கையுடன்  வணங்குவது முக்கியம்.

3. ஜாதகத்தில் மனைவிக்கு கண்டம் எனக் கூறப்பட்டிருந்தால் அதனை 
மாற்ற முடியுமா?

மாற்ற முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் நம்மால் (மனிதப் பிறவிகளால்) அதை மாற்ற முடியாது!

4. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கைந்து குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழப்பது ஏன்?

பெற்றவர்களின் ஜாதகத்தில் கடுமையான புத்திர தோஷம் இருக்கும்.
அதன் காரணமாக அவர்கள் ஒரே நாளில் ஒரே பாதக நிகழ்வில் தங்கள் குழந்தைகளைப் பறி கொடுக்க நேரிடலாம். 12ஆம் வீட்டில் மாந்தி
இருந்தாலும்ஜாதகனுக்கு இதுபோன்ற திடீர் இழப்புக்கள் ஏற்படும்! அது குழந்தைகளாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. பொன், பொருள், வீடு, வாசல், நிலம் நீச்சு என்று எதுவாக வேண்டுமென்றாலும்
இருக்கலாம்!It is called as sudden loss to the native

5. ஒருவர் செய்யும் செயல்களை வைத்து அவர்களுக்கு கற்பனையான 
ஜாதகம் உருவாக்க முடியுமா?(உதாரணம்‍_ பூவரசி)

குணங்களை வைத்து லக்கினத்தை உருவாக்கலாம். ஆனால் செயல்கள் எனும்போது கஷ்டம். முழு ஜாதகத்தையும்  கற்பனையாக உருவாக்க முடியாது. பிறப்பு விவரங்களை ஜாதகத்துடன் இணக்க முடியாது. அல்லது உருவாக்கிய  ஜாதகத்துடன் அவற்றைக் கொண்டுவர முடியாது. ஒன்றிற்கொன்று இடக்காக இருக்கும்!
---------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.26
C.குமரேசன்
   
/////பஞ்சாங்கத்தில் சந்தேகம்.
ரிஷிகள் ஜோதிடம் பார்க்கையில் அல்லது எழுதுகையில் வாக்கிய முறையைத்தான் பயன்படுத்தினார்கள். அப்படி என்றால் அவர்கள் எழுதி வைத்திருக்கும் ஜாதக புத்தகங்களும், பலன்களும் அவற்றின் அடிப்படையில்தானே  இருக்க முடியும். இப்பொழுது நாம் திருக்கணிதப் பஞ்சாங்கம் பயன்படுத்தினால் பலன்கள் மாறாதா? நாம் கோள்சாரத்தில் நவீன அறிவியலைப் பயன்படுத்துகிறோம் என்றால் பலன்களையும் மாற்றிக்கொள்ள  வேண்டும் அல்லவா? அவர்கள் உடலுக்குத் தகுந்த சட்டையை அவர்கள் அணிந்திருந்தார்கள்.  இப்பொழுது  நமக்கு?//////

திருக்கணிதத்தை வகுத்த மேதைகளையே அதையும் மாற்றி எழுதித் தரச்சொல்லலாமே!

எத்தனை நாகரீக மாற்றங்கள் வந்தாலும் அம்மாவை அம்மா என்றுதான் கூப்பிடுகிறோம். அம்மாவும் தன் தாய்ப்பாசத்தில் எந்தக் குறையும் இல்லாமல்தான் நடந்துகொள்கிறார்.

ஆடுமாடுகள் எல்லாம் அதே நான்கு கால்களுடன்தான் பிறக்கின்றன. பிறக்கும் குழந்தைகளும் பத்து வயதுவரை குழந்தைகளாகத்தான் இருக்கின்றன.

இயற்கையில் மாற்றம் இல்லை.பருவங்களில் மாற்றம் இல்லை. கிரகங்களின் சுழற்சியிலும் மாற்றம் இல்லை. சுழற்சிப் பாதையிலும் மாற்றம் இல்லை. சுழற்சி வேகத்திலும் மாற்றமில்லை.

ஹோண்டா சிட்டி கார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதைப்போல அல்லது புல்லட் ரயில் 300 கிலோமீட்டர்  வேகத்தில் போவதைப்போல (அதாவது வாகனங்கள் வேகத்தில் விஞ்ஞானத்தின் தாக்கம் இருப்பதைப்போல)  கிரகங்களில் எந்தத்தாக்கமும் இல்லை. சூரியன் தன்னுடைய சுற்றை முடிப்பதற்கு ஒரு ஆண்டு காலத்தைத்தான்
எடுத்துக்கொள்கிறது. நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் ஆறு
மாதத்திலோ அல்லது எட்டு மாதத்திலோ தன்சுற்றை  முடித்துக்கொள்வதில்லை. முடித்துக்கொண்டால் என்ன ஆகும்?
சூரியனுக்கு செமஸ்டர் சிஸ்டம் எல்லாம்கிடையாது. அரியர்ஸ்
எல்லாம் வைக்க முடியாது. தனக்குப்   பதிலாக ஃப்ராக்ஸி எல்லாம்
கொடுக்க முடியாது.

அதுபோல சந்திரன் 27 நாட்களைத்தான் எடுத்துக்கொள்கிறது. (27 நட்சத்திரங்கள். 27 நாட்கள்). சந்திரனும் எந்த பம்மாத்து வேலையும் செய்வதில்லை.

புரிகிறதா?

அதுபோல ரிஷிகள் கணித்துவைத்துவிட்டுப்போயிருக்கும், கிரகங்கள் அவற்றின் வீடுகள். அதனதன் பலன்களிலெல்லாம் ஒரு மாற்றமும் ஏற்படாது. ஏற்படுத்த முடியாது. நீங்கள் குழப்ப நினைக்கும், அல்லது குழம்பி நிற்கும், திருக்கணித ஜாதகத்திலும், 9 கிரகங்கள் 12 வீடுகள்தானே  இருக்கின்றன?

திருக்கணித ஜாதகத்திற்கும் வாக்கிய ஜாதகத்திற்கும் சுமார் 2 பாகைகள் வித்தியாசம் உள்ளது உண்மை. அதனால் லக்கின சந்திப்பில் பிறந்த ஜாதகர்களுக்கு மட்டும் நட்சத்திர பாகையில் வித்தியாசம் ஏற்படும்.
சிலருக்குதிருக்கணிதத்தில் ஒரு லக்கினமும், வாக்கியத்தில் ஒரு
லக்கினமும் வரும்.

நான் காலசந்திப்பில் பிறந்தவன். திருக்கணிதத்தின்படி என்னுடைய
லக்கினம் கடகம்! வாக்கியத்தின்படி சிம்ம லக்கினம். அதேபோல ராமன் அயனாம்சத்தின்படியும் சிம்ம லக்கினம்தான். என் பாட்டனார் எழுதிவைத்திருக்கும்  ஜாதகத்தில் சிம்ம லக்கினம் என்றுதான் குறிபிட்டுள்ளார். சிம்மலக்கினத்தைவைத்துப் பார்க்கையில்
மட்டுமே என்ஜாதகப் பலன்கள் சரியாக வருகின்றன. ஆகவே நான் திருக்கணிதத்துடன் டூ விட்டுவிட்டேன்.

இதை வைத்து ஒருவருக்கு அருள் வந்து என்னுடன் கும்மி ஆடினார்.
நீங்கள் துவக்க காலத்தில் திருக்கணிதத்தை ஆதரித்தது ஏன் என்று கேட்டு என்னை மடக்கினார். அஷ்டகவர்க்கம் இல்லாதவர்களுக்கான கணினி ஜாதகத்தைச்சிபாரிசு செய்தேன். துவக்கத்தில் (எனக்குத் தெரிந்து) திருக்கணிதம் மட்டுமே program செய்யப்பட்டிருந்தது. இப்போது கணினி ஜாதகத்தில் எல்லா முறைகளுக்குமே option வந்து விட்டது.

சிலருடைய அப்பாவிற்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள். அவர்கள்
வீட்டுக் குழந்தைகளைக்கேட்டால், இந்த  இருதாரக் குடும்பங்களில்
உள்ள அவலங்கள் தெரியும். அதுபோல காலசந்திப்பில் பிறந்தவர்
களுக்கு சில அவலங்கள் உண்டு. முக்கியமான அவலம். ஜோதிடன்
சொல்லும் பலன்களில் பாதி சரியாக இருக்காது. பலன்கள்  சரியாக
இருக்க வேண்டும் என்றால், வாக்கியத்தை வைத்து ஜாதகத்தைக்
கணித்துப் பலன்களைப் பார்க்க  வேண்டியதுதான் ஒரே வழி! அப்பா எழுதிவைத்திருக்கும் ஜாதகத்தை பத்திரமாக வைத்துக்கொள்வது
முக்கியம்.

இல்லை, விஞ்ஞானம், நாகரீகம், திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கு
வக்காலத்து என்று ஏங்குபவர்கள் எல்லாம், வாக்கியத்தை மறந்து
விட்டு அல்லது வாக்கியத்தின் நம்பகத்தன்மையைக் கேள்வி 
கேட்பதை விட்டு விட்டுத் திருக்கணிதத்தின்படி தங்கள் ஜாதகத்தை வைத்துக்கொள்ளலாம் இல்லையென்றால் மண்டையைப் பிய்த்துக் கொண்டுஅலைய வேண்டிய திருக்கும்

அவருக்கு (காலசந்திப்பில் பிறந்தவர்களுக்கு) அந்த இரண்டு
லக்கினங்களின் குணாதியம்சங்களும் இருக்கும்.

திருக்கணிதம் பிடித்திருந்தால், அதுதான் நாகரீக, விஞ்ஞான
வளர்ச்சியின் சாதனை என்று நினைப்பவர்கள்,  அதையே கடைப்
பிடிக்கலாம். உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள். ஒரு பெண்
சேலை கட்டிக்கொள்ளலாம்,சுடிதார் போட்டுக்கொள்ளலாம்.  
2 piece dressஆக Top & Midi போட்டுக்கொள்ளலாம். எல்லாம்
அவளது  விருப்பம். அதுபோல நீங்கள் எதை வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளுங்கள் (கடைப்பிடியுங்கள்) அது  உங்கள் விருப்பம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.27
V.சுந்தரேசன்
புனைப்பெயர்: சுந்தர் வேலவன்
துபாய்
வயது 30
     
Dear sir,
I have two Doubts

1. Reshba lakanthirku 9 and 10 owner same planets(saturns) intha jathakathuku Dharmakarma athipathi Yogam unda?

ஏன் இல்லை. 9 & 10ஆம் இடங்கள் இரண்டிற்கும் சனீஷ்வரனே அதிபதியாகிவிடுவதால், ஜாதகத்தில் அவர் திரிகோண வீடுகளில் அல்லது கேந்திரங்களில் இருந்தால் அந்த யோகம் உண்டு.

2. Guru vin VAKRA parviku pallan unda?

குருவின் வக்கிர பார்வைக்குப் பலன் உண்டு!

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. சங்கு சுட்டாலும் வெண்மை
தரும். குரு எப்படி இருந்தாலும்  நன்மைகளையே செய்வார். வக்கிரம் பெற்றதால் குறைந்த அளவே செய்வார். குறைந்த அளவு  என்றவுடன்,  எத்தனை சதவிகிதம் குறையும் என்று ஒருவர் கேட்டார். அதை
அளந்து சொல்ல டிஜிட்டல் தராசு இல்லை.

அழகான மனைவி கிடைப்பாள் என்று சொல்லும்போது, எப்படிபட்ட
அழகுடன் இருப்பாள் என்று கேட்டால்  என்ன சொல்ல முடியும்?

கிளியோபட்ராவும் அழகுதான். மோனாலீசாவும் அழகுதான். மர்லின் மன்றோவும் அழகுதான். எலிசபெத் டெயிலரும் அழகுதான். கண்ணாம்பாவும் அழகுதான், டி.ஆர். ராஜகுமாரியும் அழகுதான். பானுமதியும் அழகுதான். பத்மினியும் அழகுதான். செளகார் ஜானகியும் அழகுதான். அஞ்சலிதேவியும் அழகுதான் சாவித்திரியும் அழகுதான்., சரோஜாதேவியும் அழகுதான். தேவிகாவும் அழகுதான் விஜயகுமாரியும் அழகுதான். கே.ஆர்.விஜயாவும் அழகுதான், வாணிஸ்ரீயும் அழகுதான், சரிதாவும் அழகுதான், ரேவதியும் அழகுதான், அம்பிகாவும் அழகுதான், ராதாவும் அழகுதான், அமலாவும் அழகுதான், பானுப்பிரியாவும் அழகுதான் ஸ்ரீதேவியும் அழகுதான்,
மீனாவும் அழகுதான், தேவயானியும் அழகுதான், சிம்ரனும் அழகுதான், ஜோதிகாவும்அழகுதான், நயன்தாராவும் அழகுதான், நமீதாவும்
அழகுதான், ரம்பாவும் அழகுதான் ஷ்ரேயாவும் அழகுதான், ஷில்பா
செட்டியும் அழகுதான், அனுஷ்கா சர்மாவும் அழகுதான், அஸினும்
அழகுதான், பிரியா மணியும் அழகுதான், பாவ்னாவும் அழகுதான்
தமன்னாவும் அழகுதான!

அழகு என்பது அவரவர்கள் கண்ணுக்கு  மாறுபடும்.

தேவையும் மாறுபடும்.ஒருவருக்கு மாதம் இருபதாயிரம் இருந்தால்
போதும். ஒருவருக்கு இருபது லட்சம் கிடைத்தாலும் பத்தாது.
இந்தியாவின் டாப் டென் பணக்காரர்களுக்கு அதுவே ஆயிரம்
கோடியென விரிவடையும்.

அதுபோல வக்கிர பலன் என்பது ஜாதகத்திற்கு ஜாதகம் மாறுபடும்.
ஒரு நாளில் 12 வித்தியாசமான லக்கினங்களில் பிறக்கும் 12 விதமான லக்கினங்களுக்கும் அது மாறுபடும். அதன் பலன்களும் மாறுபடும்.

ரேசன்கடையில் உள்ள மேலாளரை, அளவு குறைத்தால், சட்டையைப் பிடித்துக்கொண்டு அல்லது கழுத்தைப் பிடித்துக் கொண்டு கேட்பதைப்
போல கிரகங்களைக் கேட்க முடியாது.

ஆகவே கிடைத்தவரை சரி என்று சந்தோஷமாகப் போய்விட
வேண்டியது தான்!

ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, உங்களுக்கு அடுத்து வருவது சுக்கிர தசை.
அதில் உங்களுக்கு செல்வம் சேரும்  என்று ஒரு ஜோதிடர் சொன்னால், எவ்வளவு செல்வம் வரும்? எந்த வழியில் வரும்? வருவது தங்குமா?
எந்த  அளவு தங்கும்? என்று நீங்கள் கேள்வியை அடுக்கினால்,
அதற்கெல்லாம் அவரால் பதில் சொல்ல முடியாது. செல்வம் வரும்
என்று பொதுவான சந்தோசத்துடன் இருங்கள். எவ்வளவு வரும்?
அதை எப்படி ஒளித்து  வைப்பது? எப்படி இன்கம்டாக்ஸில் இருந்து
தப்பிப்பது போன்ற கவலைகளை எல்லாம் விட்டொழியுங்கள்.
வருகின்ற அன்றைக்கு அதைப் பார்த்துக்கொள்ளலாம்.

எதற்கும் அளவு கிடையாது!
ஆசைக்கு அளவு உண்டா?
தேவைக்கு அளவு உண்டா?
ஆனால் ஒன்றிற்கும் மட்டும் அளவு உண்டு.
அனைவருக்கும் அது ஒரே அளவுதான்!
அதுதான் ஜாதகத்தின் மொத்த மதிப்பெண்
அதன் அளவு அனைவருக்கும் 337 மட்டுமே!
-----------------------------------------------
மின்னஞ்சல் எண்.28
ராஜா,
மும்பை.
வயது 45
(நான் உங்கள் பதிவேட்டில் இருக்கிறேன்)

ஐயா வணக்கம்,

ரிஷப லக்கினத்திற்கு சனி 9 -ம் மற்றும் 10 -ம் இடத்திற்கு அதிபதியாகிறான். எனவே, சனி  9 -ம் இடத்திலோ அல்லது 10 -ம் இடத்திலோ இருந்தால் 'தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகுமா ?.

இன்றையப் பதிவில் மின்னஞ்சல் எண் 27லிலும் இதே கேள்வி. அதற்கான பதில்தான் உங்களுக்கும் படித்துக் கொள்ளுங்கள்.
===========================================================
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

61 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்.
    அழகு என்றவுடன் நான் ஆறாம் வகுப்பில் படித்தப் பாடம் நினைவுக்கு வருகிறது.
    அழகு என்பது நிறத்தில், மூக்கு கண்ணாடியில், கழுத்துச் சுருக்கில், பட்டாடையில், பிற அணிகலன்களில் அமைந்திருப்பது அன்று. மூளை, இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளினுள் தடைபடாத குருதி ஓட்டத்தினால் முகிற்கும் தசைஇடை எழும்புவதே அழகாகும் - திரு.வி.க.

    குழந்தைக்கு அம்மா அழகு,
    குழந்தையின் அப்பாவிற்கும்
    அவள் (அம்மாதான்) அழகு!
    (உதை வாங்குவது யாரு)
    அக்காவிற்கு அவள்தான் அழகு!
    அண்ணனுக்கு அடுத்தவீட்டு
    பெண் அழகு!
    கண்ணாம்பாவிற்கு வசனம் அழகு
    பத்மினிக்கு நடனம் அழகு
    கே.ஆர்.விஜயாவிற்கு சிரிப்பழகு..........
    ரம்பாவுக்கு ------------ அழகு
    சிம்ரனுக்கு இடுப்பழகு..
    நமீதாவிற்கு...............
    ஐயோ வேண்டாம்!!!

    நீங்கள் சொல்வது புரிகிறது.....
    இதோடு நிறுத்தினால் எனக்கு அழகு!
    Just for fun only....

    ReplyDelete
  2. /////Shyam Prasad said...
    மிக்க நன்றி.////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  3. /////Selvaraj said...
    Good Morning Sir,
    am present./////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  4. ////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்.
    அழகு என்றவுடன் நான் ஆறாம் வகுப்பில் படித்தப் பாடம் நினைவுக்கு வருகிறது.
    அழகு என்பது நிறத்தில், மூக்கு கண்ணாடியில், கழுத்துச் சுருக்கில், பட்டாடையில், பிற அணிகலன்களில் அமைந்திருப்பது அன்று. மூளை, இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளினுள் தடைபடாத குருதி ஓட்டத்தினால் முகிற்கும் தசைஇடை எழும்புவதே அழகாகும் - திரு.வி.க.
    குழந்தைக்கு அம்மா அழகு,
    குழந்தையின் அப்பாவிற்கும்
    அவள் (அம்மாதான்) அழகு!
    (உதை வாங்குவது யாரு)
    அக்காவிற்கு அவள்தான் அழகு!
    அண்ணனுக்கு அடுத்தவீட்டு
    பெண் அழகு!
    கண்ணாம்பாவிற்கு வசனம் அழகு
    பத்மினிக்கு நடனம் அழகு
    கே.ஆர்.விஜயாவிற்கு சிரிப்பழகு..........
    ரம்பாவுக்கு ------------ அழகு
    சிம்ரனுக்கு இடுப்பழகு..
    நமீதாவிற்கு...............
    ஐயோ வேண்டாம்!!!
    நீங்கள் சொல்வது புரிகிறது.....
    இதோடு நிறுத்தினால் எனக்கு அழகு!
    Just for fun only...////.

    இலைமறைவு காய்மறைவாக சில விஷயங்களைச் சொல்லிப் புரியவைப்பது வாத்தியாருக்கு அழகு!

    ReplyDelete
  5. மண்டபத்தில் தருமிக்கு எழுதிக் கொடுத்தவர் சிவபெருமான். இவரோ நாராயணன், ஊரோ திருவரங்கம். அவருக்கு சிவன் எப்படி எழுதிக் கொடுப்பார்? நிச்சயமாக அவரே கூறுவது போல சுத்த சுயம்பிரகாச நாராயணனே எழுதியதுதான் ஐயா! எனக்குப் புரிகிறதோ இல்லையோ, இந்தப் பகுதியில் வரும் கேள்விகளும், உங்கள் பதிலும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  6. இரண்டு பஞ்சாஙம் வகுப்பறயையே இரண்டாக்கிவிடும் போல் உள்ளதே!வயதில் மட்டும் பெரியவனான நான் சொல்கிறேன்.இத்தோடு இர‌ட்டைப் பஞ்சாங்கத்தைப் பற்றிய விவாதம் முற்றுப் பெறட்டும்.


    அது அதற்கு அது அது அழகுதான்.மூக்கு அழகாக இல்லை எனறு அழகான மூக்கு வரம் கேட்ட தம்பதிகளைப்போல, அழ‌கைப்பற்றிய புரிதல் சரி இல்லை என்றால் எல்லாம் அனர்த்தமாகி விடும்.
    'கண்ணுக்கு மை அழகு;கவிதைக்குப் பொய் அழகு' என்ற பாடல் கூட உண்டே.கண்ணுக்கு அழகான மைய்யை ஆடையில் தீற்றிக்கொள்வதும், கவிதையில் மிகைப்படச் சொல்வதை வாழ்க்கையிலும் கடைப்பிடித்தால் என்ன ஆகும்?

    ReplyDelete
  7. Thanjavooraan has left a new comment on your post "மண்டபத்தில் ‘அதையும்’ எழுதிக் கொடுப்பார்களா?":

    வாலி நல்ல கவிஞர்தான். பல நல்ல பாடல்களை எழுதியவர்தான். எம்.ஜி.ஆருக்குப் புகழ் சேர்த்த பல பாடல்களை இயற்றிய திருவரங்கத்துக் கவிஞர் பின்னாளில் கேவலமான 'நரஸ்துதி' செய்து, தானும் கெட்டுத் தன் கவிதைத் திறத்தையும் கெடுத்து விட்டார். "மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ, உன்னை நம்பியோ தமிழை ஓதினேன்" என்று சோழ மன்னனிடம் சொல்லிவிட்டு நாட்டைவிட்டுப் பிரிந்து போன தமிழ்க்கவிஞன், கவிச்சக்கரவர்த்தி கம்பன் எங்கே? ஆதாயத்துக்காக முகஸ்துதி செய்யும் இந்த நாள் கவிஞர் எங்கே? முன்னவர் காலத்தால் நிலைத்து நிற்பார். நரஸ்துதி செய்வோர் கவிதைகள் ஆற்று நீரில் எழுதிய எழுத்து போல மறைந்து போகும். இங்கு நீங்கள் குறிப்பிடும் பாடல் ஒரு நல்ல தத்துவப் பாடல். நன்றி.

    ReplyDelete
  8. அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி யிலிருந்து...

    இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
    வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
    நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
    வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே.

    கவியரசர் கண்ணதாசன் அவர்களின் விளக்கவுரை....
    அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே! குளிர்ச்சியான மொழிகளையுடையவளே! வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே!

    பார்ப்பவர்களை எல்லாம் அன்னை பராசக்தியாகவே பார்த்தார் அபிராமி பட்டர். ஆகவே சத்தியமாக அவர் இதைப் பாடும் போது எந்த விரசமும் அணுவினும் சிறிதளவுகூட இல்லாமல் தனது ஞானக் கண்களில் குழந்தையாக நின்று கண்டுத் தன்னைப் படைத்த அன்னையை உலகமாதாவை பாடியிருக்கிறார் என்பதே முக்காலும் உண்மை. இதை நான் இங்கு எழுதும் போது என் மனதின் நிலையை அன்னை அபிராமியும் நன்கு அறிவாள். என்னையும் ஆட்கொள்வாய் அம்மா, தாயே! அபிராமி!....

    காட்சியில் பிழை வராது காண்பவரின் சிந்தையில் பிழை இல்லாத போது.

    "அழ‌கைப்பற்றிய புரிதல் சரி இல்லை என்றால் எல்லாம் அனர்த்தமாகி விடும்"
    உண்மைதான் கிருஷ்ணன் சார் நீங்கள் கூறுவதை அப்படியே ஏற்கிறேன்.

    ReplyDelete
  9. அய்யா,

    இன்றைய பதில்கள் மேலும் சிறப்பானவையாக இருந்தன. உங்கள் பதில் அளிக்கும் விதமும் விளக்கங்களும் மிகவும் நேர்த்தி ஆக உள்ளது.

    அன்புடன்
    வெங்கடேசன்

    ReplyDelete
  10. எமது அருமை ஆசானே
    பொன்னான வணக்கக்கள்

    இன்றைய வகுப்பை மிகவும் காரசாரமான பதில்களுக்கு முதலில் நன்றி ஆசானே
    தங்களின் கடை நிலை மாணவனின் இயபாடு ஒன்று உள்ளது ஐயா
    இன்னாருக்கு என்று என்னாரு என்று ஒருவர் பிறந்து உள்ளார் என்பது தானே உம்மை அப்படி இருக்க நாம் ஏன் நம்மளுக்கு உரியவலை விட்டு விட்டு அடுத்தவருக்கு உரிமையானதர்க்கு ஆசை படனும் இது தவறு தானே ஐயா ? இந்த்த தரரில் இருந்த தப்பிக்க தங்களுடைய மாணவனுக்கு வழி சொல்லுங்கள் ஐயா அதுதான் எனக்கு என்று piranthavalai

    ReplyDelete
  11. எமது அருமை ஆசானே
    பொன்னான வணக்கக்கள்

    இன்றைய வகுப்பை மிகவும் காரசாரமான பதில்களுக்கு முதலில் நன்றி ஆசானே
    தங்களின் கடை நிலை மாணவனின் இயபாடு ஒன்று உள்ளது ஐயா
    இன்னாருக்கு என்று என்னாரு என்று ஒருவர் பிறந்து உள்ளார் என்பது தானே உம்மை அப்படி இருக்க நாம் ஏன் நம்மளுக்கு உரியவலை விட்டு விட்டு அடுத்தவருக்கு உரிமையானதர்க்கு ஆசை படனும் இது தவறு தானே ஐயா ? இந்த்த தரரில் இருந்த தப்பிக்க தங்களுடைய மாணவனுக்கு வழி சொல்லுங்கள் ஐயா அதுதான் எனக்கு என்று piranthavalai

    ReplyDelete
  12. ////Thanjavooraan said...
    மண்டபத்தில் தருமிக்கு எழுதிக் கொடுத்தவர் சிவபெருமான். இவரோ நாராயணன், ஊரோ திருவரங்கம். அவருக்கு சிவன் எப்படி எழுதிக் கொடுப்பார்? நிச்சயமாக அவரே கூறுவது போல சுத்த சுயம்பிரகாச நாராயணனே எழுதியதுதான் ஐயா! எனக்குப் புரிகிறதோ இல்லையோ, இந்தப் பகுதியில் வரும் கேள்விகளும், உங்கள் பதிலும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. நன்றி.////

    ஜோதிடத்தில் ஆர்வம் இல்லை என்று தெளிவாக, முன்னரே சொல்லிவிட்ட உங்களுக்கு, கேள்வி பதில் பகுதி சுவாரசியத்தைக் கொடுக்கிறதென்றால், உங்கள் பின்னூட்டம் மேலும் தொடர்ந்து எழுதுவதற்கு எனக்கும்
    சற்று தெம்பைக் கொடுக்கிறது. நன்றி அய்யா!

    ReplyDelete
  13. வணக்கம் அய்யா.
    என்னுடைய கேள்விகளுக்கு
    பதில் அளித்தமைக்கு நன்றி அய்யா.
    ஸ்ரீப்ரியா அவர்களும், ஜெயசித்ரா
    அவர்களும் அழகுதான்.மறந்தது ஏனோ?
    நன்றி அய்யா.

    ReplyDelete
  14. /////kmr.krishnan said...
    இரண்டு பஞ்சாஙம் வகுப்பறயையே இரண்டாக்கிவிடும் போல் உள்ளதே!வயதில் மட்டும் பெரியவனான நான் சொல்கிறேன்.இத்தோடு இர‌ட்டைப் பஞ்சாங்கத்தைப் பற்றிய விவாதம் முற்றுப் பெறட்டும்.
    அது அதற்கு அது அது அழகுதான்.மூக்கு அழகாக இல்லை எனறு அழகான மூக்கு வரம் கேட்ட தம்பதிகளைப்போல, அழ‌கைப்பற்றிய புரிதல் சரி இல்லை என்றால் எல்லாம் அனர்த்தமாகி விடும்.
    'கண்ணுக்கு மை அழகு;கவிதைக்குப் பொய் அழகு' என்ற பாடல் கூட உண்டே.கண்ணுக்கு அழகான மைய்யை ஆடையில் தீற்றிக்கொள்வதும், கவிதையில் மிகைப்படச் சொல்வதை வாழ்க்கையிலும் கடைப்பிடித்தால் என்ன ஆகும்?/////

    உண்மைதான் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  15. /////Jack Sparrow said...
    one doubt cleared today. hehehe....////////

    உங்களுக்கு க்ளியரானதில் எனக்கும் மகிழ்ச்சியே...ஹி.ஹி...!

    ReplyDelete
  16. /////Thanjavooraan said...
    ////////////Thanjavooraan has left a new comment on your post "மண்டபத்தில் ‘அதையும்’ எழுதிக் கொடுப்பார்களா?":
    வாலி நல்ல கவிஞர்தான். பல நல்ல பாடல்களை எழுதியவர்தான். எம்.ஜி.ஆருக்குப் புகழ் சேர்த்த பல பாடல்களை இயற்றிய திருவரங்கத்துக் கவிஞர் பின்னாளில் கேவலமான 'நரஸ்துதி' செய்து, தானும் கெட்டுத் தன் கவிதைத் திறத்தையும் கெடுத்து விட்டார். "மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ, உன்னை நம்பியோ தமிழை ஓதினேன்" என்று சோழ மன்னனிடம் சொல்லிவிட்டு நாட்டைவிட்டுப் பிரிந்து போன தமிழ்க்கவிஞன், கவிச்சக்கரவர்த்தி கம்பன் எங்கே? ஆதாயத்துக்காக முகஸ்துதி செய்யும் இந்த நாள் கவிஞர் எங்கே? முன்னவர் காலத்தால் நிலைத்து நிற்பார். நரஸ்துதி செய்வோர் கவிதைகள் ஆற்று நீரில் எழுதிய எழுத்து போல மறைந்து போகும். இங்கு நீங்கள் குறிப்பிடும் பாடல் ஒரு நல்ல தத்துவப் பாடல். நன்றி./////

    அவர் என்ன செய்வார் பாவம்? ஆட்சியாளர்களின் விருப்பத்திற்குக் கவிஞர்களும் இரையாகும் காலம். கலி முற்றுகிறது. வேறேன்ன சொல்லமுடியும்?

    ReplyDelete
  17. /////kannan said...
    yes sir!/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  18. /////Alasiam G said...
    அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி யிலிருந்து...
    இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
    வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
    நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
    வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே.
    கவியரசர் கண்ணதாசன் அவர்களின் விளக்கவுரை....
    அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே! குளிர்ச்சியான மொழிகளையுடையவளே! வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே!
    பார்ப்பவர்களை எல்லாம் அன்னை பராசக்தியாகவே பார்த்தார் அபிராமி பட்டர். ஆகவே சத்தியமாக அவர் இதைப் பாடும் போது எந்த விரசமும் அணுவினும் சிறிதளவுகூட இல்லாமல் தனது ஞானக் கண்களில் குழந்தையாக நின்று கண்டுத் தன்னைப் படைத்த அன்னையை உலகமாதாவை பாடியிருக்கிறார் என்பதே முக்காலும் உண்மை. இதை நான் இங்கு எழுதும் போது என் மனதின் நிலையை அன்னை அபிராமியும் நன்கு அறிவாள். என்னையும் ஆட்கொள்வாய் அம்மா, தாயே! அபிராமி!....
    காட்சியில் பிழை வராது காண்பவரின் சிந்தையில் பிழை இல்லாத போது.
    "அழ‌கைப்பற்றிய புரிதல் சரி இல்லை என்றால் எல்லாம் அனர்த்தமாகி விடும்"
    உண்மைதான் கிருஷ்ணன் சார் நீங்கள் கூறுவதை அப்படியே ஏற்கிறேன்./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  19. //////venkatesan.P said...
    அய்யா,
    இன்றைய பதில்கள் மேலும் சிறப்பானவையாக இருந்தன. உங்கள் பதில் அளிக்கும் விதமும் விளக்கங்களும் மிகவும் நேர்த்தி ஆக உள்ளது.
    அன்புடன்
    வெங்கடேசன்//////

    நல்லது. நன்றி வெங்கடேசன்!

    ReplyDelete
  20. /////kannan said...
    எமது அருமை ஆசானே
    பொன்னான வணக்கக்கள்
    இன்றைய வகுப்பை மிகவும் காரசாரமான பதில்களுக்கு முதலில் நன்றி ஆசானே
    தங்களின் கடை நிலை மாணவனின் இயபாடு ஒன்று உள்ளது ஐயா
    இன்னாருக்கு என்று என்னாரு என்று ஒருவர் பிறந்து உள்ளார் என்பது தானே உண்மை. அப்படி இருக்க நாம் ஏன் நம்மளுக்கு உரியவளை விட்டு விட்டு அடுத்தவருக்கு உரிமையானதற்க்கு ஆசைப் படனும் இது தவறு தானே ஐயா ? இந்த்த தவறில் இருந்த தப்பிக்க தங்களுடைய மாணவனுக்கு வழி சொல்லுங்கள் ஐயா அதுதான் எனக்கு என்று piranthavalai/////

    உங்களுக்கென்று பிறந்தவள் கையில் சிலம்போடு வருவாள். பொறுமையாக இருங்கள்!

    ReplyDelete
  21. ///////thirunarayanan said...
    வணக்கம் அய்யா.
    என்னுடைய கேள்விகளுக்கு
    பதில் அளித்தமைக்கு நன்றி அய்யா.
    ஸ்ரீப்ரியா அவர்களும், ஜெயசித்ரா
    அவர்களும் அழகுதான்.மறந்தது ஏனோ?
    நன்றி அய்யா. /////

    உங்களுக்காகத்தான். நீங்கள் நினைவுபடுத்த ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டாமா?
    பட்டியலில் எம்.வி.ராஜம்மா, பண்டரிபாய், படாபட் ஜெயலெட்சுமி என்று ஏகத்துக்கும் பெயர்களை விட்டுவைத்திருக்கிறேன். நம் வகுப்பறைக் கண்மணிகள் இதையாவது முற்றிலுமாக நிறைவு செய்கிறார்களா பார்ப்போம்!

    ReplyDelete
  22. // அழகான மனைவி கிடைப்பாள் என்று சொல்லும்போது, எப்படிபட்ட
    அழகுடன் இருப்பாள் என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்?

    கிளியோபட்ராவும் அழகுதான். மோனாலீசாவும் அழகுதான். மர்லின் மன்றோவும் அழகுதான். எலிசபெத் டெயிலரும் அழகுதான். கண்ணாம்பாவும் அழகுதான், டி.ஆர். ராஜகுமாரியும் அழகுதான். பானுமதியும் அழகுதான். பத்மினியும் அழகுதான். செளகார் ஜானகியும் அழகுதான். அஞ்சலிதேவியும் அழகுதான் சாவித்திரியும் அழகுதான்., சரோஜாதேவியும் அழகுதான். தேவிகாவும் அழகுதான் விஜயகுமாரியும் அழகுதான். கே.ஆர்.விஜயாவும் அழகுதான், வாணிஸ்ரீயும் அழகுதான், சரிதாவும் அழகுதான், ரேவதியும் அழகுதான், அம்பிகாவும் அழகுதான், ராதாவும் அழகுதான், அமலாவும் அழகுதான், பானுப்பிரியாவும் அழகுதான் ஸ்ரீதேவியும் அழகுதான்,
    மீனாவும் அழகுதான், தேவயானியும் அழகுதான், சிம்ரனும் அழகுதான், ஜோதிகாவும்அழகுதான், நயன்தாராவும் அழகுதான், நமீதாவும்
    அழகுதான், ரம்பாவும் அழகுதான் ஷ்ரேயாவும் அழகுதான், ஷில்பா
    செட்டியும் அழகுதான், அனுஷ்கா சர்மாவும் அழகுதான், அஸினும்
    அழகுதான், பிரியா மணியும் அழகுதான், பாவ்னாவும் அழகுதான்
    தமன்னாவும் அழகுதான!

    கிளியோபாட்ராவுக்கு மூக்கு அழகு
    கண்ணாம்பாவோ முனகினால் அழகு.
    மர்லின் மன்றோ முக அழகு
    மீனாவோ கண்ணழகு.
    பானுமதியும் பத்மினியும்
    பதுமையோ என வியக்கும் அழகு.
    ப்ரியாமணியும் பாவனாவும் நடந்தால் அழகு.
    அசினோ அசைந்தாலே அழகு.
    அஞ்சலி கண்களில் கொஞ்சும் அழகு.
    சாவித்ரியும் சரோஜாவும் ஜாதி மல்லி அழகு.
    ரேவதி குறும்பழகு.
    விஜயாவோ சிரிப்பழகு.
    விஜயகுமாரியோ அழுதாலும் அழகு.
    அம்பிகா அடக்க அழகு.
    அமலாவோ அமானுஷ்ய அழகு.
    தேவயானி தேவதை அழகு அந்த
    ஜோதிகாவோ ஜில் அழகு.
    நயனும் நமீதாவும் வந்து நின்றாலே அழகு


    அழகு என்பது அவரவர்கள் கண்ணுக்கு மாறுபடும்.//

    அவரவருக்கு அவரவர் மனைவியே அழகோ அழகு.
    அவள் அழகுக்கு இணையுண்டோ அவனியிலே !!



    //அழகு என்பது அவரவர்கள் கண்ணுக்கு மாறுபடும்.//

    அழகைப் பார்ப்பதும் ரசிப்பதும் கண்கள்.
    அழகை உணர்வது மனங்கள்.



    அவனியிலே திரையினிலே
    ஆயிரம் அழகிகள்
    மின்னுவர் இருப்பினுமென்
    அகத்திலே நிலைகொண்ட என்
    இல்லக்கிழத்தியின் அழகுக்கோர்
    ஈடாமோ !!

    இதெல்லாம் ஒருபுறம் இருக்க,
    மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே
    ஈசன் எந்தன் இணையடி நிழலே ..
    என அந்த ஈசன் நிழலே
    இளைப்பாறுவோர்க்கு

    முருகனின் முறுவலழக்கோர்
    மூவுலகிலும் இணையுண்டோ ?

    சுப்பு ரத்தினம்.
    http;//kandhanaithuthi.blogspot.com

    ReplyDelete
  23. // அழகான மனைவி கிடைப்பாள் என்று சொல்லும்போது, எப்படிபட்ட
    அழகுடன் இருப்பாள் என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்?

    கிளியோபட்ராவும் அழகுதான். மோனாலீசாவும் அழகுதான். மர்லின் மன்றோவும் அழகுதான். எலிசபெத் டெயிலரும் அழகுதான். கண்ணாம்பாவும் அழகுதான், டி.ஆர். ராஜகுமாரியும் அழகுதான். பானுமதியும் அழகுதான். பத்மினியும் அழகுதான். செளகார் ஜானகியும் அழகுதான். அஞ்சலிதேவியும் அழகுதான் சாவித்திரியும் அழகுதான்., சரோஜாதேவியும் அழகுதான். தேவிகாவும் அழகுதான் விஜயகுமாரியும் அழகுதான். கே.ஆர்.விஜயாவும் அழகுதான், வாணிஸ்ரீயும் அழகுதான், சரிதாவும் அழகுதான், ரேவதியும் அழகுதான், அம்பிகாவும் அழகுதான், ராதாவும் அழகுதான், அமலாவும் அழகுதான், பானுப்பிரியாவும் அழகுதான் ஸ்ரீதேவியும் அழகுதான்,
    மீனாவும் அழகுதான், தேவயானியும் அழகுதான், சிம்ரனும் அழகுதான், ஜோதிகாவும்அழகுதான், நயன்தாராவும் அழகுதான், நமீதாவும்
    அழகுதான், ரம்பாவும் அழகுதான் ஷ்ரேயாவும் அழகுதான், ஷில்பா
    செட்டியும் அழகுதான், அனுஷ்கா சர்மாவும் அழகுதான், அஸினும்
    அழகுதான், பிரியா மணியும் அழகுதான், பாவ்னாவும் அழகுதான்
    தமன்னாவும் அழகுதான!

    கிளியோபாட்ராவுக்கு மூக்கு அழகு
    கண்ணாம்பாவோ முனகினால் அழகு.
    மர்லின் மன்றோ முக அழகு
    மீனாவோ கண்ணழகு.
    பானுமதியும் பத்மினியும்
    பதுமையோ என வியக்கும் அழகு.
    ப்ரியாமணியும் பாவனாவும் நடந்தால் அழகு.
    அசினோ அசைந்தாலே அழகு.
    அஞ்சலி கண்களில் கொஞ்சும் அழகு.
    சாவித்ரியும் சரோஜாவும் ஜாதி மல்லி அழகு.
    ரேவதி குறும்பழகு.
    விஜயாவோ சிரிப்பழகு.
    விஜயகுமாரியோ அழுதாலும் அழகு.
    அம்பிகா அடக்க அழகு.
    அமலாவோ அமானுஷ்ய அழகு.
    தேவயானி தேவதை அழகு அந்த
    ஜோதிகாவோ ஜில் அழகு.
    நயனும் நமீதாவும் வந்து நின்றாலே அழகு

    அழகு என்பது அவரவர்கள் கண்ணுக்கு மாறுபடும்.//

    அவரவருக்கு அவரவர் மனைவியே அழகோ அழகு.
    அவள் அழகுக்கு இணையுண்டோ அவனியிலே !!

    subbu rathinam (contd.)

    ReplyDelete
  24. //////sury said...
    // அழகான மனைவி கிடைப்பாள் என்று சொல்லும்போது, எப்படிபட்ட
    அழகுடன் இருப்பாள் என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்?
    கிளியோபட்ராவும் அழகுதான். மோனாலீசாவும் அழகுதான். மர்லின் மன்றோவும் அழகுதான். எலிசபெத் டெயிலரும் அழகுதான். கண்ணாம்பாவும் அழகுதான், டி.ஆர். ராஜகுமாரியும் அழகுதான். பானுமதியும் அழகுதான். பத்மினியும் அழகுதான். செளகார் ஜானகியும் அழகுதான். அஞ்சலிதேவியும் அழகுதான் சாவித்திரியும் அழகுதான்., சரோஜாதேவியும் அழகுதான். தேவிகாவும் அழகுதான் விஜயகுமாரியும் அழகுதான். கே.ஆர்.விஜயாவும் அழகுதான், வாணிஸ்ரீயும் அழகுதான், சரிதாவும் அழகுதான், ரேவதியும் அழகுதான், அம்பிகாவும் அழகுதான், ராதாவும் அழகுதான், அமலாவும் அழகுதான், பானுப்பிரியாவும் அழகுதான் ஸ்ரீதேவியும் அழகுதான், மீனாவும் அழகுதான், தேவயானியும் அழகுதான், சிம்ரனும் அழகுதான், ஜோதிகாவும்அழகுதான், நயன்தாராவும் அழகுதான், நமீதாவும்
    அழகுதான், ரம்பாவும் அழகுதான் ஷ்ரேயாவும் அழகுதான், ஷில்பா
    செட்டியும் அழகுதான், அனுஷ்கா சர்மாவும் அழகுதான், அஸினும்
    அழகுதான், பிரியா மணியும் அழகுதான், பாவ்னாவும் அழகுதான்
    தமன்னாவும் அழகுதான!////

    கிளியோபாட்ராவுக்கு மூக்கு அழகு
    கண்ணாம்பாவோ முனகினால் அழகு.
    மர்லின் மன்றோ முக அழகு
    மீனாவோ கண்ணழகு.
    பானுமதியும் பத்மினியும்
    பதுமையோ என வியக்கும் அழகு.
    ப்ரியாமணியும் பாவனாவும் நடந்தால் அழகு.
    அசினோ அசைந்தாலே அழகு.
    அஞ்சலி கண்களில் கொஞ்சும் அழகு.
    சாவித்ரியும் சரோஜாவும் ஜாதி மல்லி அழகு.
    ரேவதி குறும்பழகு.
    விஜயாவோ சிரிப்பழகு.
    விஜயகுமாரியோ அழுதாலும் அழகு.
    அம்பிகா அடக்க அழகு.
    அமலாவோ அமானுஷ்ய அழகு.
    தேவயானி தேவதை அழகு அந்த
    ஜோதிகாவோ ஜில் அழகு.
    நயனும் நமீதாவும் வந்து நின்றாலே அழகு
    அழகு என்பது அவரவர்கள் கண்ணுக்கு மாறுபடும்.//
    அவரவருக்கு அவரவர் மனைவியே அழகோ அழகு.
    அவள் அழகுக்கு இணையுண்டோ அவனியிலே !!
    //அழகு என்பது அவரவர்கள் கண்ணுக்கு மாறுபடும்.//
    அழகைப் பார்ப்பதும் ரசிப்பதும் கண்கள்.
    அழகை உணர்வது மனங்கள்.
    அவனியிலே திரையினிலே
    ஆயிரம் அழகிகள்
    மின்னுவர் இருப்பினுமென்
    அகத்திலே நிலைகொண்ட என்
    இல்லக்கிழத்தியின் அழகுக்கோர்
    ஈடாமோ !!
    இதெல்லாம் ஒருபுறம் இருக்க,
    மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே
    ஈசன் எந்தன் இணையடி நிழலே ..
    என அந்த ஈசன் நிழலே
    இளைப்பாறுவோர்க்கு
    முருகனின் முறுவலழக்கோர்
    மூவுலகிலும் இணையுண்டோ ?
    சுப்பு ரத்தினம். http;//kandhanaithuthi.blogspot.com //////

    முருகன் பெயரைச் சொல்லி முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திவிட்டீர்களே! Clean bowled!
    (யார் அவுட்டானது? வாத்தியார்தான்!)

    ReplyDelete
  25. Dear Sir

    Good Morning Sir..

    Kelviyum Bhadhilum Arumai.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  26. பஞ்சாங்க பதிலுக்கு வந்த வீச்சின் வேகத்தை உணர முடிகிறது . . .

    கொண்டு வந்த கர்மவினைகளும் எடுத்துச் செல்லும் பாவ புண்ணியமும்

    ஈசன் போட்ட கணக்கில் மாறுபட்டு நிற்குமோ . .

    அதை உணரா இவர்கள் ஏனோ . .

    கறுப்பு பூனையை கண் இல்லாத ஒருவன் இருட்டு அறையில் அது இல்லாத போது தேடுவதைப் போல தேடுகின்றனர் . .

    ReplyDelete
  27. அய்யா, வணக்கம்.

    எடக்கான கேள்விக்கும் நீங்கள் பதிலைச் சொல்லும் அழகே அழகு.

    உங்கள் ஜோதிடப் பாடங்களை ஒரே மூச்சில் நுனிப் புல் மேய்ந்தவன் நான். மற்றவர்கள் சுய ஜாதகத்தை வைத்துக் கேட்டலும் அதுவும் ஒரு உதவியே. It projects an extreme or hypothetical situation to other readers and extends the knowledge in the discussion forum.

    இந்த இரட்டை பஞ்சாங்க விவாதம் கூட நல்லதே. you are handling it nice and always you leave the option to the readers/listeners/party. It is good.

    ஒன்றை மறந்து விட்டோம். பஞ்சாங்கம் மட்டுமல்ல பலன் கூறும் முறையும், கட்டம் வரையும் முறையும் கூட பல வகை உண்டல்லவா? I mean Eastern (Northern and southern)and western astrology. அவ்வளவு ஏன். வாத்தியார் அஷ்டகவர்கத்தில் பலன் சொல்லும் போதே ஷட் பலாவைப் பற்றியும் சொல்லியிருக்கிறாரே. ஆரோக்கியமான விவாதம் அவசியமே.

    அய்யா, நான் எதேனும் சிறுபிள்ளைத் தனமாக உளறியிருந்தால் மன்னிக்கவும்.
    நான் பள்ளீயிறுதி முடித்தது 1971 ஆம் ஆண்டில்.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  28. Dear Sir,

    thanks for the answers, and thanks for your your patients in replying also.

    ReplyDelete
  29. எத்தனை முறை ஒரே கேள்வி கேட்டாலும் சலிக்காமல் பதில் சொல்லும் உங்களுக்கு நன்றி அய்யா.

    திருமணம் குறித்த ஒரு துணை கேள்வி "வயதில் மூத்த பெண்ணை (6 மதம் முதல் 1 வருடம் ) திருமணம் செய்யலாமா?" - "பெரியவர்கள் பார்த்துவைக்கும் திருமணம் அய்யா காதல் திருமணம் இல்லை :)"

    ReplyDelete
  30. //////Arulkumar Rajaraman said..
    Dear Sir
    Good Morning Sir..
    Kelviyum Bhadhilum Arumai.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman///////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  31. //////iyer said...
    பஞ்சாங்க பதிலுக்கு வந்த வீச்சின் வேகத்தை உணர முடிகிறது . . .
    கொண்டு வந்த கர்மவினைகளும் எடுத்துச் செல்லும் பாவ புண்ணியமும்
    ஈசன் போட்ட கணக்கில் மாறுபட்டு நிற்குமோ . .
    அதை உணரா இவர்கள் ஏனோ . .
    கறுப்பு பூனையை கண் இல்லாத ஒருவன் இருட்டு அறையில் அது இல்லாத போது தேடுவதைப் போல தேடுகின்றனர் . .///////

    அந்தக் கணக்குப் புத்தகம் தேடினாலும் கிடைக்காது. அதனால் விஷயம் அறிந்தவர்களே தேடுவதில்லை.
    விஷயம் அறியாதவர்களுக்கு, கடைசி வரை அப்படியொரு கணக்கு இருப்பதே தெரியப்போவதில்லை. அதானல்தான் கவியரசர் கண்ணதாசன் வீடு வரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை என்று நயம்படச் சொன்னவர் அடுத்தவந்த பாட்டின் கடைசிவரியை ”கடைசிவரை கணக்கு” என்று சொல்லாமல் ’கடைசி வரை யாரோ’ என்று சொல்லிவிட்டுப்போனார். கேட்டதற்கு விளக்கமும் கூறினார். தெரிந்தவனுக்கு தெரியட்டும், தெரியாதவனுக்குத் தெரியாமலே போகட்டும் என்றார்

    ReplyDelete
  32. //////Govindasamy said...
    அய்யா, வணக்கம்.
    எடக்கான கேள்விக்கும் நீங்கள் பதிலைச் சொல்லும் அழகே அழகு.
    உங்கள் ஜோதிடப் பாடங்களை ஒரே மூச்சில் நுனிப் புல் மேய்ந்தவன் நான். மற்றவர்கள் சுய ஜாதகத்தை வைத்துக் கேட்டலும் அதுவும் ஒரு உதவியே. It projects an extreme or hypothetical situation to other readers and extends the knowledge in the discussion forum.
    இந்த இரட்டை பஞ்சாங்க விவாதம் கூட நல்லதே. you are handling it nice and always you leave the option to the readers/listeners/party. It is good.
    ஒன்றை மறந்து விட்டோம். பஞ்சாங்கம் மட்டுமல்ல பலன் கூறும் முறையும், கட்டம் வரையும் முறையும் கூட பல வகை உண்டல்லவா? I mean Eastern (Northern and southern)and western astrology. அவ்வளவு ஏன். வாத்தியார் அஷ்டகவர்கத்தில் பலன் சொல்லும் போதே ஷட் பலாவைப் பற்றியும் சொல்லியிருக்கிறாரே. ஆரோக்கியமான விவாதம் அவசியமே.
    அய்யா, நான் எதேனும் சிறுபிள்ளைத் தனமாக உளறியிருந்தால் மன்னிக்கவும்.
    நான் பள்ளீயிறுதி முடித்தது 1971 ஆம் ஆண்டில்.
    நன்றி அய்யா./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி கோவிந்தசாமி!

    ReplyDelete
  33. //////Ram said...
    Dear Sir,
    thanks for the answers, and thanks for your your patients in replying also./////

    வாத்தியார் என்று வந்துவிட்டபிறகு, பொறுமையும், சகிப்புத்தன்மையும்தான் பிதானமானது. அது இல்லை என்றால் வகுப்பை நடத்த முடியாது!

    ReplyDelete
  34. //////தமிழ்மணி said...
    எத்தனை முறை ஒரே கேள்வி கேட்டாலும் சலிக்காமல் பதில் சொல்லும் உங்களுக்கு நன்றி அய்யா.
    திருமணம் குறித்த ஒரு துணை கேள்வி "வயதில் மூத்த பெண்ணை (6 மதம் முதல் 1 வருடம் ) திருமணம் செய்யலாமா?" - "பெரியவர்கள் பார்த்துவைக்கும் திருமணம் அய்யா காதல் திருமணம் இல்லை :)" ///////


    ஜோதிடத்தைத் தாண்டிவந்து இதற்குப் பதில் சொல்கிறேன். முன்பு எங்கள் பகுதியில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ஜாதகம் பார்க்காமலேயே நடந்துள்ளது. பல தம்பதியரின் ஜாதகங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் சுமார் 1/3 தம்பதியரில், மனைவி கணவனைவிட இரண்டு அல்லது 3 வயது மூத்தவர். அவர்கள் எல்லாம் நன்றாகத்தான் வாழ்ந்துள்ளார்கள். ஆகவே திருமணம் செய்துகொள்ளலாம். தவறில்லை.
    வாழ்க்கை இனிக்கும்! (இதற்கு சில அர்த்தம் உண்டு பதிவில் எழுத முடியாது)

    ReplyDelete
  35. ஐயா வணக்கம்...!

    வழக்கம்போல் இன்றைய கேள்வி பதில்களும் அருமை...! வாக்கிய பஞ்சாங்கத்திற்கான மீண்டும் ஒரு விளக்கம் மிகவும் அருமை..! குருவின் வக்கிரப் பார்வைக்கான விளக்கமோ அருமையிலும் அருமை..! அழகுக்கு அளித்த விளக்கமும் உதாரணங்களும், (கிளியோபாட்ராவில் இருந்து தமன்னாவரை) தாங்கள் அழகை ஆராதிக்கும் ஒரு நல்ல கலைஞர் cum கவிஞர் என்று நிரூபித்துவிட்டன...! மிக்க நன்றிகள்...!

    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  36. /////M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!
    வழக்கம்போல் இன்றைய கேள்வி பதில்களும் அருமை...! வாக்கிய பஞ்சாங்கத்திற்கான மீண்டும் ஒரு விளக்கம் மிகவும் அருமை..! குருவின் வக்கிரப் பார்வைக்கான விளக்கமோ அருமையிலும் அருமை..! அழகுக்கு அளித்த விளக்கமும் உதாரணங்களும், (கிளியோபாட்ராவில் இருந்து தமன்னாவரை) தாங்கள் அழகை ஆராதிக்கும் ஒரு நல்ல கலைஞர் cum கவிஞர் என்று நிரூபித்துவிட்டன...! மிக்க நன்றிகள்...!
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்///////

    விளக்கங்கள் எல்லாம் உங்களுக்காக (மாணவர்களுக்காக) எழுதியவை!
    மாணவர்களை ஆராதிக்கும் வாத்தியார்!அவ்வளவுதான்.
    There ends the matter!

    ReplyDelete
  37. இந்த பயனுள்ள பதிவிற்கு நன்றி ஐயா. சிறு சந்தேகம்.மாந்தி ஒரு (உ-ம் 12 ம்)வீட்டில் இருப்பின் அவன் எந்த நேரத்தில் வில்லத்தனம் செய்வான் என்று யூகிக்க முடியுமா?
    1.வீட்டு அதிபதியின் திசை புத்தியிலா?
    2.அதில் அமர்ந்திருக்கும் கோளின் திசை புத்தியிலா?
    3.மாந்தியை பார்க்கும் கோளின் திசை புத்தியிலா?
    மேலே உள்ளத்தில் எது ஐயா சரி? அனைத்துமா? அவனுக்கும் ஏழாம் பார்வை உண்டா?
    மன்னிக்கவும் நிறைய கேள்விகள் கேட்டுவிட்டேன்.
    என்றும் அன்புடன்
    இரா. புரட்சிமணி

    ReplyDelete
  38. என்னாது இது? இப்பிடி எல்லோரையும் உசுப்பேத்தி விட்டு வெச்சுருக்கீங்க? இதெல்லாம் அழகா இல்லை..
    சரி..ஆனது ஆச்சு..என் பங்குக்கு நானும் கொஞ்சம்..
    அழகில்..அழகு..தேவதை..ஆயிரம்
    (1738 - strength of classroom ) பாவலர் எழுதும் காவியம்..ஆகப் போகிறதோ இன்றைய பதிவு?

    அழகில் அழகு தேவதை
    ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
    அழகில் அழகு தேவதை
    கூந்தல் வண்ணம் மேகம் போல குளிர்ந்து நின்றது
    கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும் கேள்வியானது
    பொன்முகம் தாமரை...பூக்களே கண்களோ
    மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்
    அழகில் அழகு தேவதை
    சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன
    சேர்ந்த பல்லின் வரிசை யாவும் முல்லை போன்றன
    மூங்கிலே தோள்களோ...தேன்குழல் விரல்களோ
    ஒரு அங்கம் கைகள் அறியாதது
    அழகில் அழகு தேவதை
    பூவுலாவும் கொடியைப் போல இடையை காண்கிறேன்
    போகப்போக வாழை போல அழகை காண்கிறேன்
    மாவிலை பாதமோ...மங்கை நீ வேதமோ
    இந்த மண்ணில் இதுபோல் பெண்ணில்லையே
    அழகில் அழகு தேவதை
    ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
    அழகில் அழகு!

    'ஒரு அங்கம் கைகள் அறியாதது' என்று என்று புதிர் போட்டுப் பாடும் இவன் 'மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்' என்று அழகைத் தன் ராஜபார்வையால் வர்ணித்துப் பாடுவது அழகு..
    வர்ணித்து மட்டுமா?நல்லாத் தடவிப் பார்த்ததும்தான்..(குருடனாப் பொறந்தா இப்படியொரு சான்ஸா?எல்லாம் 337 பண்ற வேலை..)

    ReplyDelete
  39. Ayya Pathivu Nanru...

    இங்கே கேட்பதற்கு மன்னிக்கவும்.....Becoz I hav One Question ONli....

    Mars and Saturn Exchange is not good for Native u told(ie: GENERAL RULE)...

    If mars or saturn is LAGNATHIPATHI it is gud uh sir?

    And last question is....for mesha and viruchika lagna saturn is paathakathipathi........


    For magara and kumba mars is not too bad(ALL THAT IAM SAYING FOR PARIVARTHANA)..pls answer sir.

    நன்றி ஐயா...

    ReplyDelete
  40. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 9
    பதில்கள் நன்றாகவும், சிறப்பாகவும் உள்ளன.
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி
    2010-08-18

    ReplyDelete
  41. ஆசிரியர் ஐயா அவர்களுக்கு, கடந்த இரு நாட்களாக ஒரு ஆலய விழாவில் இருந்ததால் ஞாயிறு வெளிவந்த 'நினைவலைகளை' தாமதமாகத்தான் படிக்க நேர்ந்தது. அதில் கி.முத்துராமகிருஷ்ணன் எழுதிய தனது பள்ளி அனுபவத்தைப் படித்தேன். அவர் என்னிலும் இளையவர். அவரது தந்தை தியாகி கிருஷ்ணன் அவர்கள் ராஜாஜி தொடங்கிய திருச்செங்கோடு ஆசிரமத்தின் நிர்வாகியாக பல ஆண்டுகள் இருந்தவர். ராஜாஜி, கல்கி, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை ஆகியோருடைய நெருங்கிய நண்பர். தனது 83ஆம் ஆண்டில் மறைந்தவர். கடைசி வரை ஒரு காந்தியவாதியாக இருந்தவர். எல்லோரிடமும் அன்பு பாராட்டியவர். அவரோடு சில ஆண்டுகள் நெருங்கிய தொடர்பு இருந்தது எனக்கு. அவர் வாழ்க்கையில் துன்பங்களைத் தவிர வேறு எதையும் பெற்றவரல்ல. பல முறை சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவர். காவல்துறையினரால் தாக்கப்பட்டவர். தனது முதிர்ந்த வயதில் 1977ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று தனது மூத்த மகனை இழந்து துன்பத்தில் வாடியவர். அதன் பின் 8 ஆண்டுகள் வாழ்ந்தவர். கீதையின் உபதேசப்படி வாழ்வில் சுகம், துக்கம் இவற்றைச் சமமாக பாவித்தவர். நான் அவரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டபடி அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு நாள்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். ஒரு தனி மனிதனின் வாழ்க்கை போலன்றி, அது சுதந்திரப் போரின் வரலாறாக அமைந்திருக்கிறது. என்னுடைய சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரிசை எனும் வலைத்தளத்தில் அவர் வரலாற்றை விரைவில் வெளியிடவிருக்கிறேன். அந்த வலைத்தளத்தின் முகவரி: www.privarsh.blogspot.com

    ReplyDelete
  42. வாக்கியமா திருக்கணிதமா என்ற சர்ச்சையில் தாங்கள் கடைப்பிடிப்பது வாக்கியமோ திருக்கணிதமோ அதுதான் சரியாக இருக்கிறது என்று வாதிடுபவர்கள் இருப்பது போக இவை இரண்டுமே சரியில்லை என்று மூன்றாவதாக வேறு அயனாம்சம் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இதில் எதுவுமே இல்லாமல் மேல் நாட்டுக் காரர்கள் வேறு ஒரு அயனாம்சத்தைப் பயன் படுத்துகிறார்கள். அவர்கள் வரையில் அது சரியானது. இப்போதைக்கு நான் லாஹிரி அயனாம்சத்தையே பயன் படுத்துகிறேன். கால ஓட்டத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தில் மாற்றம் ஏற்படுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. மாற்றம் எற்படும் என்ற அடிப்படையில் உருவானதுதான் திருகணித முறை. இல்லையென்றால் வாக்கிய முறை சரியானது என்று சொல்ல வேண்டிதாக இருக்கும். இது என் கருத்துகளை பதிவு செய்ய. மேலும் சர்ச்சையை வளர்க்க அல்ல.

    ReplyDelete
  43. வாத்தியார் ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் அந்த பதிலை வைத்து மேலும் பல கேள்விகளைக் கேட்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். கஷ்டம் ஐயா.

    ReplyDelete
  44. R.Puratchimani said...
    இந்த பயனுள்ள பதிவிற்கு நன்றி ஐயா. சிறு சந்தேகம்.மாந்தி ஒரு (உ-ம் 12 ம்)வீட்டில் இருப்பின் அவன் எந்த நேரத்தில் வில்லத்தனம் செய்வான் என்று யூகிக்க முடியுமா?
    1.வீட்டு அதிபதியின் திசை புத்தியிலா?
    2.அதில் அமர்ந்திருக்கும் கோளின் திசை புத்தியிலா?
    3.மாந்தியை பார்க்கும் கோளின் திசை புத்தியிலா?
    மேலே உள்ளத்தில் எது ஐயா சரி? அனைத்துமா? அவனுக்கும் ஏழாம் பார்வை உண்டா?
    மன்னிக்கவும் நிறைய கேள்விகள் கேட்டுவிட்டேன்.
    என்றும் அன்புடன்
    இரா. புரட்சிமணி/////

    மாந்தி தான் அமர்ந்திருக்கும் இட அதிபதியின் தசா/புத்திகளில் தான் சேட்டைகளைச் செய்வான்!

    ReplyDelete
  45. //////minorwall said...
    என்னாது இது? இப்பிடி எல்லோரையும் உசுப்பேத்தி விட்டு வெச்சுருக்கீங்க? இதெல்லாம் அழகா இல்லை..
    சரி..ஆனது ஆச்சு..என் பங்குக்கு நானும் கொஞ்சம்..
    அழகில்..அழகு..தேவதை..ஆயிரம் (1738 - strength of classroom ) பாவலர் எழுதும் காவியம்..ஆகப் போகிறதோ இன்றைய பதிவு?
    அழகில் அழகு தேவதை
    ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
    அழகில் அழகு தேவதை
    கூந்தல் வண்ணம் மேகம் போல குளிர்ந்து நின்றது
    கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும் கேள்வியானது
    பொன்முகம் தாமரை...பூக்களே கண்களோ
    மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்
    அழகில் அழகு தேவதை
    சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன
    சேர்ந்த பல்லின் வரிசை யாவும் முல்லை போன்றன
    மூங்கிலே தோள்களோ...தேன்குழல் விரல்களோ
    ஒரு அங்கம் கைகள் அறியாதது
    அழகில் அழகு தேவதை
    பூவுலாவும் கொடியைப் போல இடையை காண்கிறேன்
    போகப்போக வாழை போல அழகை காண்கிறேன்
    மாவிலை பாதமோ...மங்கை நீ வேதமோ
    இந்த மண்ணில் இதுபோல் பெண்ணில்லையே
    அழகில் அழகு தேவதை
    ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
    அழகில் அழகு!
    'ஒரு அங்கம் கைகள் அறியாதது' என்று என்று புதிர் போட்டுப் பாடும் இவன் 'மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்' என்று அழகைத் தன் ராஜபார்வையால் வர்ணித்துப் பாடுவது அழகு..
    வர்ணித்து மட்டுமா?நல்லாத் தடவிப் பார்த்ததும்தான்..(குருடனாப் பொறந்தா இப்படியொரு சான்ஸா?எல்லாம் 337 பண்ற வேலை..)///////

    நன்றாக உள்ளது. ஆனால் பொருட் குற்றம் உள்ளது மைனர். அது என்ன என்பதை நான் பதிவில் எழுத முடியாது.

    ReplyDelete
  46. /////KingBhala said...
    Ayya Pathivu Nanru...
    இங்கே கேட்பதற்கு மன்னிக்கவும்.....Becoz I hav One Question ONli....
    Mars and Saturn Exchange is not good for Native u told(ie: GENERAL RULE)...
    If mars or saturn is LAGNATHIPATHI it is gud uh sir?
    And last question is....for mesha and viruchika lagna saturn is paathakathipathi........
    For magara and kumba mars is not too bad(ALL THAT IAM SAYING FOR PARIVARTHANA)..pls answer sir. நன்றி ஐயா.../////

    இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.
    நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்! எனக்கு தற்சமயம் அதற்கு நேரமில்லை.

    ஜோதிடப் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கும், தங்கள் சொந்த ஜாதகத்தில் ஏற்படுகின்ற சந்தேகங்களுக்கும் விளக்கம் கேட்டுத் தினமும் நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அதுபோல் வந்த மின்னஞ்சல்கள் அனைத்திற்கும் (100ற்கும் மேலாக) ஒரு தொடர் விளக்கத்தை முன்பு எழுதினேன். அது போல மீண்டும் ஒரு கேள்வி-பதில் sessionஐ வைக்க உள்ளேன். தற்சமயம் நேரம் இல்லை. இரண்டுமாதங்கள் பொறுத்திருங்கள்.
    அந்தச் சமயம் பதிவில் அறிவிப்பு வரும். அப்போது உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். அனைத்திற்கும் பதில் பதிவிலேயே (in the blog) கிடைக்கும்

    ReplyDelete
  47. ////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 9
    பதில்கள் நன்றாகவும், சிறப்பாகவும் உள்ளன.
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி

    ReplyDelete
  48. //////Thanjavooraan said...
    ஆசிரியர் ஐயா அவர்களுக்கு, கடந்த இரு நாட்களாக ஒரு ஆலய விழாவில் இருந்ததால் ஞாயிறு வெளிவந்த 'நினைவலைகளை' தாமதமாகத்தான் படிக்க நேர்ந்தது. அதில் கி.முத்துராமகிருஷ்ணன் எழுதிய தனது பள்ளி அனுபவத்தைப் படித்தேன். அவர் என்னிலும் இளையவர். அவரது தந்தை தியாகி கிருஷ்ணன் அவர்கள் ராஜாஜி தொடங்கிய திருச்செங்கோடு ஆசிரமத்தின் நிர்வாகியாக பல ஆண்டுகள் இருந்தவர். ராஜாஜி, கல்கி, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை ஆகியோருடைய நெருங்கிய நண்பர். தனது 83ஆம் ஆண்டில் மறைந்தவர். கடைசி வரை ஒரு காந்தியவாதியாக இருந்தவர். எல்லோரிடமும் அன்பு பாராட்டியவர். அவரோடு சில ஆண்டுகள் நெருங்கிய தொடர்பு இருந்தது எனக்கு. அவர் வாழ்க்கையில் துன்பங்களைத் தவிர வேறு எதையும் பெற்றவரல்ல. பல முறை சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவர். காவல்துறையினரால் தாக்கப்பட்டவர். தனது முதிர்ந்த வயதில் 1977ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று தனது மூத்த மகனை இழந்து துன்பத்தில் வாடியவர். அதன் பின் 8 ஆண்டுகள் வாழ்ந்தவர். கீதையின் உபதேசப்படி வாழ்வில் சுகம், துக்கம் இவற்றைச் சமமாக பாவித்தவர். நான் அவரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டபடி அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு நாள்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். ஒரு தனி மனிதனின் வாழ்க்கை போலன்றி, அது சுதந்திரப் போரின் வரலாறாக அமைந்திருக்கிறது. என்னுடைய சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரிசை எனும் வலைத்தளத்தில் அவர் வரலாற்றை விரைவில் வெளியிடவிருக்கிறேன். அந்த வலைத்தளத்தின் முகவரி: www.privarsh.blogspot.com/////

    கேட்கவே நெகிழ்ச்சியாக இருக்கிறது. அரிய பணி. செய்யுங்கள். செய்தபின் சுட்டியைத்தாருங்கள். வகுப்பறையின் வலைத்தளத்தில் அதன் URL ற்கு இணைப்புக் கொடுத்து, அனைவரையும் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கத்துடன்.
    அன்பன்
    SP.VR.சுப்பையா

    ReplyDelete
  49. ///////////// SP.VR. SUBBAIYA said...
    நன்றாக உள்ளது. ஆனால் பொருட் குற்றம் உள்ளது மைனர். அது என்ன என்பதை நான் பதிவில் எழுத முடியாது.\\\\\\\\\\\\\\\\
    வைரமுத்து பாட்டில் குற்றமா? இல்லே மைனர்வாள் பொருட்படுத்தியதில் குற்றமா?
    நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றம்தானா? நக்கீரர் என் மெயிலுக்கு குற்றப்பத்திரிகையை அனுப்புங்களேன்..
    (இரு கண்களுமே இல்லாத நண்பர்களின் பிரதிநிதியாக இதனை எழுதி உள்ள எனக்கு நெற்றிக்கண் இருப்பதாக சும்மா கற்பனை செய்து பார்த்தேன்..)

    ReplyDelete
  50. ///////ananth said...
    வாக்கியமா திருக்கணிதமா என்ற சர்ச்சையில் தாங்கள் கடைப்பிடிப்பது வாக்கியமோ திருக்கணிதமோ அதுதான் சரியாக இருக்கிறது என்று வாதிடுபவர்கள் இருப்பது போக இவை இரண்டுமே சரியில்லை என்று மூன்றாவதாக வேறு அயனாம்சம் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இதில் எதுவுமே இல்லாமல் மேல் நாட்டுக் காரர்கள் வேறு ஒரு அயனாம்சத்தைப் பயன் படுத்துகிறார்கள். அவர்கள் வரையில் அது சரியானது. இப்போதைக்கு நான் லாஹிரி அயனாம்சத்தையே பயன் படுத்துகிறேன். கால ஓட்டத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தில் மாற்றம் ஏற்படுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. மாற்றம் எற்படும் என்ற அடிப்படையில் உருவானதுதான் திருகணித முறை. இல்லையென்றால் வாக்கிய முறை சரியானது என்று சொல்ல வேண்டிதாக இருக்கும். இது என் கருத்துகளை பதிவு செய்ய. மேலும் சர்ச்சையை வளர்க்க அல்ல.//////

    நீங்கள் சொல்வது சரிதான். இளம் இரத்தங்களுக்கு இவை புரியவில்லை. அதுதான் பிரச்சினை!

    ReplyDelete
  51. /////ananth said...
    வாத்தியார் ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் அந்த பதிலை வைத்து மேலும் பல கேள்விகளைக் கேட்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். கஷ்டம் ஐயா.////

    ஆமாம். கஷ்டம்தான். க‌ஷ்டத்திலும் ஒரு சுகம் இருக்கிறது. வாத்தியார் என்று அன்புடன் அழைக்கிறார்கள்!
    அதனால் கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது.

    ReplyDelete
  52. ////minorwall said...
    ///////////// SP.VR. SUBBAIYA said...
    நன்றாக உள்ளது. ஆனால் பொருட் குற்றம் உள்ளது மைனர். அது என்ன என்பதை நான் பதிவில் எழுத முடியாது.\\\\\\\\\\\\\\\\
    வைரமுத்து பாட்டில் குற்றமா? இல்லே மைனர்வாள் பொருட்படுத்தியதில் குற்றமா?
    நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றம்தானா? நக்கீரர் என் மெயிலுக்கு குற்றப்பத்திரிகையை அனுப்புங்களேன்..
    (இரு கண்களுமே இல்லாத நண்பர்களின் பிரதிநிதியாக இதனை எழுதி உள்ள எனக்கு நெற்றிக்கண் இருப்பதாக சும்மா கற்பனை செய்து பார்த்தேன்..)/////

    ஆகா, அனுப்புகிறேன். நக்கீரராக அல்ல. வகுப்பறை வாத்தியாராக!

    ReplyDelete
  53. அழகைப் பற்றி நிறைய பின்னூடங்கள் உள்ளதால் இந்த உண்மையை சொல்ல நான் தள்ளப்பட்டேன்.
    உண்மையில் யார் அழகு?
    ஆணா பெண்ணா?
    அழகியத் தோகை உடையது எது?
    அழகியத் தந்தங்களை உடையது எது ?
    அழகியக் கொண்டையை உடையது எது?
    இந்தப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.இவை எல்லாம் ஆண் இனத்திற்கே உடையது. உண்மையில் ஆணே அழகு. சிற்றின்ப ஆசையால் ஆண் இனம் பெண் இனத்திற்கு முக்கியத்துவம் தருகின்றது. மற்றபடி ஆணே அழகு.

    ReplyDelete
  54. ////R.Puratchimani said...
    அழகைப் பற்றி நிறைய பின்னூடங்கள் உள்ளதால் இந்த உண்மையை சொல்ல நான் தள்ளப்பட்டேன்.
    உண்மையில் யார் அழகு?
    ஆணா பெண்ணா?
    அழகியத் தோகை உடையது எது?
    அழகியத் தந்தங்களை உடையது எது ?
    அழகியக் கொண்டையை உடையது எது?
    இந்தப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.இவை எல்லாம் ஆண் இனத்திற்கே உடையது. உண்மையில் ஆணே அழகு. சிற்றின்ப ஆசையால் ஆண் இனம் பெண் இனத்திற்கு முக்கியத்துவம் தருகின்றது. மற்றபடி ஆணே அழகு./////

    எந்த உலகத்தில் இருக்கிறீர்? இறைவனின் படைப்பில் பெண்தான் அழகு. ஆண்களை ஈர்க்கும் சக்திக்காகப் பெண்ணிடம் அழகை வைத்தான் இறைவன். பறவைகள், விலங்குகளில் ஆண் இனத்தை அழகுறப் படைத்தான். அதைவைத்துக் கும்மி அடிக்காதீர்கள்!

    ReplyDelete
  55. /////பஞ்சாங்கத்தில் சந்தேகம்.
    ரிஷிகள் ஜோதிடம் பார்க்கையில் அல்லது எழுதுகையில் வாக்கிய முறையைத்தான் பயன்படுத்தினார்கள். அப்படி என்றால் அவர்கள் எழுதி வைத்திருக்கும் ஜாதக புத்தகங்களும், பலன்களும் அவற்றின் அடிப்படையில்தானே இருக்க முடியும். இப்பொழுது நாம் ///

    அய்யா மெற்கண்ட கேள்விக்கு தாங்கள் சொல்லிய பதில் சூப்பர்

    ReplyDelete
  56. /////INDIA 2121 said...
    /////பஞ்சாங்கத்தில் சந்தேகம்.
    ரிஷிகள் ஜோதிடம் பார்க்கையில் அல்லது எழுதுகையில் வாக்கிய முறையைத்தான் பயன்படுத்தினார்கள். அப்படி என்றால் அவர்கள் எழுதி வைத்திருக்கும் ஜாதக புத்தகங்களும், பலன்களும் அவற்றின் அடிப்படையில்தானே இருக்க முடியும். இப்பொழுது நாம் ///
    அய்யா மேற்கண்ட கேள்விக்கு தாங்கள் சொல்லிய பதில் சூப்பர்//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  57. பஞ்சாமிர்தச் சுவை போல் இருக்கு இந்த ப்ளாக்

    ReplyDelete
  58. /////Several tips said...
    பஞ்சாமிர்தச் சுவை போல் இருக்கு இந்த ப்ளாக் //////

    பஞ்சாமிர்தத்தோடு திருநீறும் உண்டு. அதைக் கவனித்தீர்களா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com