மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.8.10

சைடு டிஷ் இல்லாமல் சாப்பிட முடியாதா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சைடு டிஷ் இல்லாமல் சாப்பிட முடியாதா?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 2

சீஸன் என்னும் சொல் விஜய் தொலைக்காட்சி உபயம்

உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்

இதன் முதல் பகுதி 29.7.2010 அன்று வெளியானது. அதற்கான சுட்டி இங்கே!

+++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.3
ராம்குமார்
சென்னை
வயது 32+
   
Dear Sir,
You have taken most of the lessons, but u have not taken the lessons on Dosams, which are mainly playing the spoiler role in lot of girls and boys marriage. just explain us on the some of them such as Chevvai, Kalasurbam,
with regards,
P.Ramkumar

நமது வகுப்பறையில் நிறைய திருமணம் ஆகாத அல்லது கூடிவராத இளைஞர்கள் இருக்கிறார்கள். திருமண வயதில் பெண் குழந்தைகளை
வீட்டில் வைத்திருக்கும் பெரியவர்களும் இருக்கிறார்கள். அவர்களைக்
கலவரப்படுத்த வேண்டாம் என்றுதான் செவ்வாய் தோஷத்தைப் பற்றி விரிவாக எழுதவில்லை.

செவ்வாய் தோஷத்தைப் பற்றி ஜோதிடர்களிடையே இரு வேறு கருத்துக்கள் உள்ளன. சிலர் இருக்கு என்பார்கள். சிலர் அதையே இல்லை என்பார்கள்.

தன் சொந்த வீட்டில் மற்றும் உச்ச வீட்டில் இருக்கும் செவ்வாய் தோஷத்தைக் கொடுக்காது. அது தனக்குத்தானே  தோஷத்தை செய்து கொள்ளாது என்பவர்கள் ஒரு சாரார். இல்லை எங்கே இருந்தாலும் செவ்வாய் செவ்வாய்தான் தோஷம் உண்டு என்று மற்றொரு சாரார் சொல்வார்கள்.

2, 4, 7, 8 & 12ஆம் வீடுகளில் இருக்கும் செவ்வாயால் ஜாதகனுக்குத்
தோஷம் உண்டு. 7 & 8ஆம் வீடுகளில்  முழு அளவும், மற்ற
இடங்களில் குறைந்த அளவும் இருக்கும். திருமணத்திற்கு செவ்வாய் தோஷத்தைப் பார்த்துத்திருமணம் செய்வதுதான் நல்லது. தோஷமுள்ள ஜாதகிக்கு, தோஷமுள்ள ஜாதகனைத் திருமணம் செய்வதுதான் நல்லது. பெண்ணை விட ஆணுக்குத் தோஷம் குறைவாக இருக்கக் கூடாது.

தோஷம் இல்லாத ஒருவரையும், கடுமையான தோஷம் இருக்கும் ஒருவரையும் இணைத்தால் என்ன ஆகும்?

இருவரில் ஒருவரைத் தூக்கிவிடும். (தூக்கிவிடும் என்றால் என்ன வென்று தெரியுமல்லவா?) அல்லது (நீதி மன்றம்வரை சென்று) ஒருவரை ஒருவர் பிரிய நேரிடும். The marriage will end in separation. விளக்கம் போதுமா?

காலசர்ப்ப தோஷம் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களில் உள்ளது!
-----------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் 4
தமிழ்மணி மாணிக்கம்.
பெங்களூர்
வயது 29

வணக்கம் அய்யா,
எனது சந்தேகங்கள்...

1. ஜாதக நிபுணராக (குறைந்தபட்சம் ஜாதக அறிவு பெற) நமது ஜாதகம் அமைப்பு எப்படி இருக்கவேண்டும்.?

குறைந்தபட்ச அறிவு பெற ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். நிபுணத்துவம் எனும்போதுதான் சிக்கல். படித்தது எல்லாம் விளங்க
வேண்டும். மண்டையில் ஏற வேண்டும். மறக்காமல் நினைவில்
இருக்க வேண்டும்.தேவைப்படும் சமயத்தில் வெளிப்பட வேண்டும்.
அதற்கு ஜாதகத்தில் புதன் நன்றாக இருக்க வேண்டும். புதன் ஆட்சி
அல்லது உச்சம் பெற்றிருக்க வேண்டும். அல்லது கேந்திரங்கள்
அல்லது திரிகோண வீடுகளில் இருக்கவேண்டும். சுபர்களின் சேர்க்கை/
பார்வையைப் பெற்றிருக்காவிட்டாலும், தீயவர்களின் சேர்க்கை/
பார்வையைப்  பெற்றிருக்கக்கூடாது.

2. குலதெய்வ வழிபாட்டிற்கும் ஜாதகத்திற்கும் தொடர்பு உண்டா?

ஜாதகத்திற்கு இல்லை. ஆனால் சுபிட்சமான, அம்சமான குடும்ப
வாழ்க்கைக்கு உண்டு. குடும்ப ஒற்றுமைக்கும், குடும்ப மகிழ்ச்சிக்கும் குலதெய்வங்கள் வழிகாட்டும்.

2-A குலதெய்வ வழிபாட்டை இரண்டு மூன்று தலை முறை செய்யவில்லை என்றால்?

அறியாமல் செய்யவில்லை என்றால் ஒன்றும் ஆகாது.

2 -B, குலதெய்வம் என்ன என்பது தெரியவில்லை என்றால் மீண்டும் 
எவ்வாறு குலதெய்வ வழிப்பாட்டைத்  தொடர்வது?

கருப்பர், அய்யனார் என்று ஒவ்வொரு குடும்பத்தினருக்கும்
குலதெய்வம் இருக்கும். ஒரு நல்ல காரியத்தைத்  துவங்கும்
முன்பாகக் குல தெய்வத்தை வழிபட்ட பிறகுதான் துவங்குவார்கள்.
எங்கள் பகுதியில்  முன்னோர்களையே குல தெய்வங்களாக
வழிபடும் பல குடும்பங்கள் உண்டு. படைப்பு (படையல்) வைத்து
அனைவரும் சேர்ந்து வழிபடுவார்கள். ஆகவே நீங்களும் உங்கள் முன்னோர்களைக் குல தெய்வங்களாக நினைத்து வழி படலாம்.
உங்களின் தாய், தந்தை, தாத்தா, பாட்டி, கொள்ளுத்தாத்தா,
கொள்ளுப்பாட்டிஅனைவரும் குல தெவங்களே! குல தெய்வம்
என்பது குடும்ப தெய்வம். நீங்கள் வழிபடுவதற்கான முதல் தெய்வம்.

3.. நவக்கிரக தோசங்களுக்கு செய்யப்படும் பரிகாரம் அல்லது பரிகார ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மீண்டும் மீண்டும் குறிபிட்ட இடைவெளியில் செய்யவேண்டுமா? அல்லது ஒருமுறை 
செய்தால் போதுமா?

பணத்தைச் செலவழித்துச் செய்யும் பரிகாரங்கள் எல்லாம்
பரிகாரமாகாது. பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம். அது உங்கள்
வசதியையும், பொருளாதார சூழ்நிலையையும் பொறுத்தது. அந்தந்த ஸ்தலங்களுக்குச் சென்று வருவதை ஒரு முறை செய்தால் போதும். ஒருமுறை கூடச் செய்ய இயலாதவர்கள், தங்கள் இருப்பிடத்தில்
இருந்தே கோளறு திருப்பதிகத்தைப் பாராயணம் செய்து வழிபடலாம்.
செலவே இருக்காது. வசதி இருக்கிறவர்கள்அடிக்கடி சென்று வரலாம்.

4.  6 , 8 , 12  போன்ற மறைவிடங்களில் நிற்கும் லக்கினாதிபதிக்கு அது 
சொந்த வீடாக இருந்தாலும் வலு  இல்லையா?

மேஷ லக்கினத்திற்கு, விருச்சிக லக்கினத்திற்கு அதிபதி செவ்வாய்.
ரிஷப, துலா லக்கினங்களுக்கு அதிபதி சுக்கிரன்.
மிதுன, கன்னி லக்கினங்களுக்கு அதிபதி புதன்
மீன, தனுசு லக்கினங்களுக்கு அதிபதி குரு
மகர, கும்ப லக்கினங்களுக்கு அதிபதி சனி
கடக லக்கினத்திற்கு அதிபதி சந்திரன்
சிம்ம லக்கினத்திற்கு அதிபதி சூரியன்
சிலருக்கு மட்டுமே 6, 8, 12ஆம் இடங்கள் எப்படி சொந்த வீடாக அமையும். உதாரணத்திற்கு மேஷ லக்கின செவ்வாய், விருச்சிகத்தில் இருந்தால்
(8ஆம் இடம்) அது அவருக்கு சொந்த வீடு. துலா லக்கினச் சுக்கிரன்,
ரிஷபத்தில் இருந்தால் அது அவருக்கு சொந்த வீடு. அதுபோல
இருவருக்கும் 6ஆம் இடமும் சொந்த இடமே!.

மிதுன புதனுக்கு 4ஆம் வீடும், கன்னி புதனுக்கு 10ஆம் வீடும் சொந்த வீடுகள். மற்றபடி வேறு எந்த இடமும்  சொந்த இடமாகாது. குரு பகவானுக்கு மீனத்தில் இருந்து 10ஆம் வீடும், தனுசுவில் இருந்து 4ஆம் வீடும் சொந்த  வீடு. வேறு இடங்கள் சொந்த வீடாகாது.

கும்ப சனிக்கு அதன் 12ஆம் வீடான மகரம், மட்டுமே சொந்த வீடு

கடகச் சந்திரனுக்கும், சிம்மச் சூரியனுக்கும் தங்கள் லக்கினத்தைத் தவிர வேறு சொந்த இடம் எதுவும் இல்லை.

6, 8 & 12ஆம் இடங்கள் தீய இடங்கள். (inimical places) அங்கே
அமரும் லக்கினாதிபதிகள் ஜாதகனுக்கு உரிய  நன்மையைச் செய்ய மாட்டார்கள். சொந்த வீடாக இருந்தாலும் செய்ய மாட்டார்கள்.
உரிய எனும் சொல்லைக்கவனிக்கவும். ஜாதகன் அத்தனைக்கும்
எதிர் நீச்சல் போட வேண்டியதாக இருக்கும்.

ஆட்சி வீடுகள் = சொந்த வீடுகள். இங்கே அமரும் கிரகங்கள் அதிகாரத்துடன் இருக்கும். உச்ச வீடுகள்: மாமியார் வீடுகள் எனலாம். இங்கே சர்வ அதிகாரத்துடன் இருக்கும்.நட்பு வீடுகள்: விருந்தினராகத் தங்கும் வீடு. அதற்குரிய செல்வாக்கு மட்டும் இருக்கும் 6, 8 & 12 பகை
வீடுகள் பாம்புகள் அதிகமாக இருக்கும் வனம். இங்கே அமரும்
கிரகங்கள் ஜாதகனுக்கு உரிய பலனைத்தரமுடியாமல் இருக்க நேரிடும்.
நீச வீடுகள்: நீரில்லா பாலைவனம். அங்கே கிரகங்கள் எப்படி இருக்க
நேரிடும் என்பதை உங்கள் கற்பனைக்கே  விட்டு விடுகிறேன்! (ஒரு உதாரணத்திற்காக இவற்றைச் சொல்லியிருக்கிறேன்)
------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் 5
தாமோதரன்
பிறந்த ஊர்: திருச்செந்தூர்
வசிக்கும் ஊர்: மதுரை
வயது: 26
   
அய்யா,
கேள்வி :

1. மேஷம், துலாத்தில் சனியும், சூரியனும் சேர்ந்திருப்பது மற்றும் 
ரிஷபத்தில் ராகுவும், சந்திரனும் சேர்ந்திருப்பது  இந்த அமைப்பு
நீசபங்க ராஜ யோகம்.  சனிக்கு,  சூரியனும் மற்றும் ராகுவுக்கு, 
சந்திரனும்  எதிரிகள் என்பதால் நீசபங்க ராஜ யோகம் முழுப் 
பலனையும்  தருமா ? எத்தனை சதவீதம் பலன் கிடைக்கும் ?

ஏன் இந்த சந்தேகம்? அடிப்படைப் பாடத்தையே சந்தேகப்படலாமா? அடிப்படைப்பாடத்தை சந்தேகப் படுவது  பெற்ற அன்னையை சந்தேகப் படுவதற்கு நிகரானது. யோகம் யோகம்தான். ரிஷபத்தில் உச்சமான
சந்திரன்  ஜாதகத்தில் தான் எந்த வீட்டிற்கு (எண்ணிக்கையில்)
அதிபதியோ, அந்த வீட்டிற்கான அதிகபட்ச பலனைத் தருவார்.
மற்ற கிரகங்களும் அப்படியே தருவார்கள். தங்கள் தசா/புத்திகளில் தருவார்கள். இல்லையென்றால் யோகத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விடாதா? அதை எழுதிவைத்த ரிஷிகளின் வாக்கும்
பொய்யாகிப்  போய்விடாதா? எத்தனை சதவிகிதம் பலன் என்பதைத்
தராசு வைத்தா பார்க்கமுடியும்? லக்கினாதிபதி, சுகாதிபதி,
பூர்வபுண்ணியாதிபதி, பாக்கியாதிபதி, லாபாதிபதி போன்றவர்களின் அமைப்பை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

நான் பிறந்த வருடம் 1984. இந்த வருடத்தில் கேது விருசிகத்தில்(உச்சம) ராகு ரிசபத்தில் (நீசம்) என்னுடைய நண்பர்கள் இருவர் விறுசிகம் மற்றும் ரிசப ராசிகரர்கள். அவர்களுடைய ஜாதகத்தை வாங்கி அதன் மூலம் ஒப்பிட்டு படித்து வருகிறேன். அவர்களுடைய ஜாதகத்தில்  நீச பங்க ராஜ யோகம் அமைப்பு வுள்ளது.   என்னுடைய தனிப்பட்டு ஜாதக விளக்கம் பெறுகிறேன் என்று இந்த வினாவைத் தவிர்த்து விட வேண்டாம். சென்ற
முறை தங்கள் என்னுடை வினாவை தவிர்த்து விட்டீர்கள். தயவு கூர்ந்து என்னுடைய சந்தேகத்தை விளக்கவும்.
நன்றி !

வேண்டுமென்று எதையும் நான் தவிர்ப்பதில்லை. வகுப்பறை
மாணவர்களில் 99% எனக்குத் தெரியாத முகங்களே. அவர்களில்
எனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்னும் பேச்சிற்கே
இடமில்லை. சொந்த ஜாதகங்களை வைத்துக் கும்மி அடிப்பதை
மட்டுமே தவிர்ப்பேன். சென்றமுறை அதுதான் நடந்திருக்கும்.
---------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.6
புனைப்பெயர்: Miss Sija
நிஜப் பெயர்: நிஷாந்தி
வசிக்கும் ஊர்: Swiss
வயது 20க்கு மேல், 25க்கு உள்ளே :)

வணக்கம் ஐயா!

இதோ எனது கேள்வி:
1. திருமணத்திற்காக 10 பொருத்தம் பார்ப்பார்கள். மணமகள், மணமகன் ஜாதகத்தில் திருமணவாழ்க்கை நன்றாக இருக்கும் என்றிருந்தாலும், இருவருக்கும் 10 பொருத்ததில் ஒரு பொருத்தமும் இல்லை என்றால்..இருவருக்கும்  திருமணம் பண்ணி வைத்தால் சந்தோஷமாக 
வாழ மாட்டார்களா? இந்த 10 பொருத்தத்துக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? இரண்டு ஜாதகமும் நல்லா இருந்தால் பொருத்தம் தேவை இல்லையா?

சைடு டிஷ் இல்லாமல் சாப்பிட முடியாதா?
சட்னி, சாம்பார் இல்லாமல் வெறும் இட்லியைச் சாப்பிட முடியாதா?
காரக் குழம்பு இல்லாமல் வெறும் சோற்றைத் திங்க முடியாதா?
காய்கறிகள் இல்லாமல் வெறும் உணவை உண்ணக்கூடாதா?
தாளக் கருவிகள் இல்லாமல் பாடலுக்கு இசை அமைக்க முடியாதா?
ஜதி, அடவுகள் இல்லாமல் நடனம் ஆட முடியாதா?

  “இரண்டு ஜாதகமும் நல்லா இருந்தால் பொருத்தம் தேவை இல்லையா?” என்று கேட்பது, பாசுமதி அரிசிச்  சாதம் என்றால் சாம்பார், ரசம், தயிர், காய்கறிகள், ஊறுகாய் இல்லாமல்  சாப்பிடலாமில்லையா
என்று கேட்பதைப்போல உள்ளது.

முடியாது என்று எதுவும் இல்லை. எல்லாம் மனதைப் பொறுத்த விஷயங்கள்.

ஜாதகத்தைப் பார்த்தால்தானே இந்தப் பிரச்சினைகள். ஜாதகத்தைப் பார்க்காமலேயே திருமணம் செய்து  கொள்ளலாம். விதிப்படி
நடக்கட்டும் என்று விட்டு விடலாம். இறைவன் பார்த்துக்கொள்வான்
என்று விட்டு விடலாம்.

பார்த்தால் இரண்டையுமே பார்க்க வேண்டும். பொருத்தமும்
வேண்டும். ஜாதகங்களும் அமைப்பாக இருக்க  வேண்டும். வசியப்
பொருத்தம் (mutual attraction) ரஜ்ஜுப் பொருத்தம் (duration of married life)
மகேந்திரப் பொருத்தம் (குழந்தை பாக்கியம்) என்று பத்து விதமான பொருத்தங்கள் இருந்தாலும், தினம், கணம், யோனி, ராசி  &
ரச்சு ஆகிய ஐந்தும் முக்கியமானவை என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

அதுபோல, பெண்ணின் நட்சத்திரம் மூலமாயின் மாமனாருக்கும், ஆயில்யமானால் மாமியாருக்கும்,  கேட்டையானால் மூத்த
மைத்துனருக்கும், விசாகமானால் இளைய மைத்துனருக்கும்
ஆகாது என்றும் மேற்படிதோஷங்கள் புருஷ நட்சத்திரங்களூக்கு
இல்லை என்றும்  நூல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் இருவரின் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம் இருக்கிறதா
அல்லது இல்லையா என்றும் பார்க்க வேண்டும். தசா சந்திப்பு உள்ளதா
என்றும் பார்க்க வேண்டும். இருவருக்கும் ஏழாம் இடத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட தீயகிரகங்கள் ஒன்றாக இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும்.

தலை சுற்றுகிறதா? ஆமாம் சுற்றும்!

இதற்கு ஏதாவது மாற்று வழி இல்லையா?

ஏன் இல்லை?

ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, நடப்பது நடக்கட்டும்
என்று ஜாதகத்தைப் பார்க்காமல் திருமணம் செய்வதுதான் உத்தமம்.
ஜாதகம் பார்க்க ஆரம்பித்தால் திருமணம் தள்ளிக்கொண்டே போகும்.
ஜாதகம் பொருந்தினால், ஆசாமியைப் பிடிக்காது. ஆசாமியைப்  பிடித்திருந்தால் ஜாதகம் பொருத்தமாக இருக்காது. பெரிய
தலைவலியாக இருக்கும்! உங்கள் மொழியில் சொன்னால்
மண்டைக் குடைச்சலாக இருக்கும்:-)))))

ஜாதகம் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், வருவதைத் தவிர்க்க முடியாது. விதியைத் தடுக்க முடியாது. அதை மனதில் வையுங்கள்.
----------------------------------------------------------------------------------------
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

48 comments:

  1. 2,4,7,8,12 ம் இடத்தில செவ்வாய் இருந்து , அந்த இடத்தில செவ்வாய் உச்சம் அல்லது சொந்த வீடாக இருந்தால் , செவ்வாய் தோஷம் கிடையாது என்று படித்து உள்ளேன் . Exception scenarios பற்றி தாங்கள் விளக்கமாக எழுதவும் .

    மிக்க நன்றி

    ReplyDelete
  2. ////Shyam Prasad said...
    மிக்க நன்றி////

    நன்றி என்று விடைபெற்றுச் சென்றவர், மீண்டும் வந்து அடுத்த பின்னூட்டத்தைப் போட்டிருக்கிறீர்களே:-)))

    ReplyDelete
  3. /////Shyam Prasad said...
    2,4,7,8,12 ம் இடத்தில செவ்வாய் இருந்து , அந்த இடத்தில செவ்வாய் உச்சம் அல்லது சொந்த வீடாக இருந்தால் , செவ்வாய் தோஷம் கிடையாது என்று படித்து உள்ளேன் . Exception scenarios பற்றி தாங்கள் விளக்கமாக எழுதவும் .
    மிக்க நன்றி /////

    நானும் படித்திருக்கிறேன். பலமுறை படித்திருக்கிறேன். ஆனால் சொந்த அனுபவம் வேறுவிதமானது. எனக்கு மிகவும் பரீட்சயமான குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணிற்கு, மகரச் செவ்வாய். உச்சம். ஒன்றும் செய்யாது என்று செவ்வாய் தோஷம் இல்லாத வரனுக்குத் திருமணம் செய்தார்கள். ஒரே வருடத்தில் செவ்வாய் அந்தப் பெண்ணின் மணவாழ்க்கையை முறித்துப்போட்டுவிட்டுப் போய் விட்டார். பிணக்கம் நீதிமன்றம்வரை சென்று விவாகரத்தில் முடிந்துவிட்டது. இதை என்னவென்பது? அதனால்தான் இருவேறு கருத்துக்கள் உள்ளன என்றேன். ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், பார்த்துச் செய்வதே நல்லது.

    ReplyDelete
  4. "ஜாதகம் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், வருவதைத் தவிர்க்க முடியாது. விதியைத் தடுக்க முடியாது. அதை மனதில் வையுங்கள்."

    என்ற‌ வ்ரிகள் முக்காலும் உண்மை.எனக்கும் என் துணவியாருக்கும் ஏக லக்னம், ஜன்மம் அனு ஜன்மம், தசா சந்திப்பு.35 வருடங்கள் கஷ்டமோ நஷ்டமோ, திட்டோ வாழ்த்தோ,சண்டையோ சமாதனமோ எல்லாவற்றையும் ஆண்டவனிடம் ஒப்படைத்து விட்டு 3 பெண்களின் நலன் கருதி ஒற்றுமையாக வாழ்ந்துவிட்டோம் அய்யா. இப்போது இருவரும் பணி ஓய்வு பெற்று விட்டோம்.உதவிக்கு யாரும் இல்லாமல் தனிமையில் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்கிறோம்.நான் வலைதளங்களில் உலா வந்தால், அவர்கள் சீரிய‌லில் மூழ்கிவிடுவார்கள்.புன்னை நல்லூர் மாரியாத்தாளை அடிக்கடி சேர்ந்து சென்று சேவிப்போம்.

    ReplyDelete
  5. என்னைக் கேட்டால் வெறும் செவ்வாய் தோஷத்திற்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என்பேன். திருமணம், விவாகரத்து போன்ற விஷயத்திற்கு களத்திரகாரகன் சுக்கிரன், களத்திரஸ்தானாதிபதி, மற்றும் 2ம் அதிபதி இவர்களையும் பார்த்துதான் பலன் சொல்ல முடியும். குடும்பஸ்தானமும், அதன் ஸ்தானாதிபதியும் பலமாக இருந்தால் விவாகரத்து எப்படி ஆகும். செவ்வாய் ஒருவரே சர்வ வல்லமை படைத்தவரா என்ன.

    ReplyDelete
  6. வணக்கம் ஆசிரியரே!
    எனக்கு இரண்டில் செவ்வாய் உச்சம் (ஐந்திற்கு அதிபதி) என் மனைவியின் புதிய சரியான ஜாதகப் படி துலாம் லக்னம், லக்னத்தில் செவ்வாய் (இரண்டாம் வீட்டுக்கு அதிபதி / செயல் புலி), இரண்டாம் வீட்டில் லக்னதிபதியோடு, குருவும் கூட்டணி. எனக்கு செவ்வாய் திசையும் அடுத்த வருடம் ஆரம்பம் ஆகிறது. கருத்து வேறுபாடு என்பதை விட ரசனை வேறுபாடு (அதுவும் கருத்துதானே) உண்டு.
    இருந்தும், தாங்கள் கூறுவது போல், ஒன்றை வைத்து முடிவுக்கு வரமுடியாதல்லவா? குழைந்தைகளின் ஜாதகம், நான்கு, ஏழு மற்றும் ஒன்பதாம் வீட்டின் பலம் இவைகளும் கணக்கில் கொல்லவேண்டு அல்லவா!
    நன்றி.

    ReplyDelete
  7. மிக தெளிவான பதில்கள். லக்னாதிபதி பற்றிய பதில் எனக்கு பல சந்தேகங்களுக்கு விடையாக அமைந்திருந்தது.

    நன்றி ஆசானே..

    ReplyDelete
  8. //////kmr.krishnan said...
    "ஜாதகம் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், வருவதைத் தவிர்க்க முடியாது. விதியைத் தடுக்க முடியாது. அதை மனதில் வையுங்கள்."
    என்ற‌ வரிகள் முக்காலும் உண்மை.எனக்கும் என் துணவியாருக்கும் ஏக லக்னம், ஜன்மம் அனு ஜன்மம், தசா சந்திப்பு.35 வருடங்கள் கஷ்டமோ நஷ்டமோ, திட்டோ வாழ்த்தோ,சண்டையோ சமாதனமோ எல்லாவற்றையும் ஆண்டவனிடம் ஒப்படைத்து விட்டு 3 பெண்களின் நலன் கருதி ஒற்றுமையாக வாழ்ந்துவிட்டோம் அய்யா. இப்போது இருவரும் பணி ஓய்வு பெற்று விட்டோம்.உதவிக்கு யாரும் இல்லாமல் தனிமையில் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்கிறோம்.நான் வலைதளங்களில் உலா வந்தால், அவர்கள் சீரிய‌லில் மூழ்கிவிடுவார்கள்.புன்னை நல்லூர் மாரியாத்தாளை அடிக்கடி சேர்ந்து சென்று சேவிப்போம்./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. /////ananth said...
    என்னைக் கேட்டால் வெறும் செவ்வாய் தோஷத்திற்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என்பேன். திருமணம், விவாகரத்து போன்ற விஷயத்திற்கு களத்திரகாரகன் சுக்கிரன், களத்திரஸ்தானாதிபதி, மற்றும் 2ம் அதிபதி இவர்களையும் பார்த்துதான் பலன் சொல்ல முடியும். குடும்பஸ்தானமும், அதன் ஸ்தானாதிபதியும் பலமாக இருந்தால் விவாகரத்து எப்படி ஆகும். செவ்வாய் ஒருவரே சர்வ வல்லமை படைத்தவரா என்ன.?////////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  10. /////Blogger Alasiam G said...
    வணக்கம் ஆசிரியரே!
    எனக்கு இரண்டில் செவ்வாய் உச்சம் (ஐந்திற்கு அதிபதி) என் மனைவியின் புதிய சரியான ஜாதகப் படி துலாம் லக்னம், லக்னத்தில் செவ்வாய் (இரண்டாம் வீட்டுக்கு அதிபதி / செயல் புலி), இரண்டாம் வீட்டில் லக்னதிபதியோடு, குருவும் கூட்டணி. எனக்கு செவ்வாய் திசையும் அடுத்த வருடம் ஆரம்பம் ஆகிறது. கருத்து வேறுபாடு என்பதை விட ரசனை வேறுபாடு (அதுவும் கருத்துதானே) உண்டு.
    இருந்தும், தாங்கள் கூறுவது போல், ஒன்றை வைத்து முடிவுக்கு வரமுடியாதல்லவா? குழைந்தைகளின் ஜாதகம், நான்கு, ஏழு மற்றும் ஒன்பதாம் வீட்டின் பலம் இவைகளும் கணக்கில் கொள்ளவேண்டுமல்லவா!//////


    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  11. /////Blogger இராகவன் நைஜிரியா said...
    மிக தெளிவான பதில்கள். லக்னாதிபதி பற்றிய பதில் எனக்கு பல சந்தேகங்களுக்கு விடையாக அமைந்திருந்தது.
    நன்றி ஆசானே..////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. palarudaiya doubtil ennudaiya sila doubtum theerndhathu . .. hehehe...indrodu third week . viradham successfully started. :).. one small doubt sir. example. In Ayanamsa, lahairi(thirukanitham) chandra dasa's 9.5th year is running for a person & if we change it to B.V.Raman(vakyam) it shows chevvai dasa 1yr over . why one year difference between those two &which dasa should be taken into consideration?. thaangal vakyam matrum thirukanithathai patri thaniyaga vilakamalithirundhalum..oru varudam vithyasam ennai kulapugindrathu..ennada ipadi kelvi ketkindrein endru ninaika vendam...pooriyavillai endral 100murai ketavadu therindhu kolvein..thank u .

    ReplyDelete
  13. குல தெய்வம் தெரியாதவர்கள், 5 ஆம் இடத்தில் உள்ள கிரகத்தின்படி வழிபடலாம். எ.கா. கேது என்றால் பிள்ளையார், சூர் என்றால் சிவன், செவ் என்றால் முருகன். அல்லது, திருப்பதி வெங்கடாசலபதியை, குல்தெய்வமாக ஏற்றுக்கொள்ளலாம்.

    ReplyDelete
  14. Dear Sir

    Kelviyum Badhilum Arumai Sir..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  15. மிக்க நன்றி அய்யா.....

    செவ்வாய் தோசம் பற்றிய ஒரு கேள்வி

    லக்கினத்திற்கு 2,4,7,8,12 ம் இடத்தில செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம்.

    மேலும் சுக்கிரன் இருக்கும் இடத்தில இருந்து 2,4,7,8,12 ம் இடத்தில செவ்வாய் இருந்தாலும், எழலாம் இடத்து அதிபதி இருக்கும் இடதில் இருந்து 2,4,7,8,12 ம் இடதில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோசம் உண்டு என்று கேள்விபட்டேன். உண்மையா?

    ReplyDelete
  16. செவ்வாய் தோசத்தை பத்தி இத்தனை விவாதங்களா . . . (அட.. என்னுடைய கேள்வியும் செவ்வாய் தோஷத்தை பத்திதான் . . ) பதில் எப்போ வருமோ . . எப்படி வருமோ . .

    ReplyDelete
  17. என்னுடைய கேள்விகள் இடம்பெறவில்லை .கொஞ்சம் ஏமாற்றம் ஐயா.

    ReplyDelete
  18. இந்த சோதிட கேள்வி பதில் பகுதியைப் போல்
    அவர்களின் சொந்த சாதகத்திலிருந்து ஓரே ஒரு கேள்வி மட்டும் (வாத்தியாரின் நேரத்தை கருத்தில் கொண்டு) என ஒரு பகுதியினை ஒரு முறை வலம் வரச் செய்யலாமே . .

    ReplyDelete
  19. நெஞ்சை தொட்ட வரிகளில். . .
    வரிகளை மட்டும் எழுதினால் போதாதா . .
    முழு பாடலையும் எழுத வேண்டுமா . .

    அத்தனை வரிகளும் நெஞ்சை தொட்டிருந்தாலும் தொட்டு கிழித்தவைகளை மட்டும் தரலாமே . .

    மற்ற வரிகளை மற்ற நாட்களுக்கு வைத்துக் கொள்ளலாமே . .

    வாத்தியார் எது செய்தாலும் சரிதான்
    ஆனாலும் எங்கள் எண்ணம் கருத்து . .

    வாத்தியாரின் கரும்பலகையில் எழுதி வைக்கிறோம் . .

    ReplyDelete
  20. /////Jack Sparrow said...
    palarudaiya doubtil ennudaiya sila doubtum theerndhathu . .. hehehe...indrodu third week . viradham successfully started. :).. one small doubt sir. example. In Ayanamsa, lahairi(thirukanitham) chandra dasa's 9.5th year is running for a person & if we change it to B.V.Raman(vakyam) it shows chevvai dasa 1yr over . why one year difference between those two &which dasa should be taken into consideration?. thaangal vakyam matrum thirukanithathai patri thaniyaga vilakamalithirundhalum..oru varudam vithyasam ennai kulapugindrathu..ennada ipadi kelvi ketkindrein endru ninaika vendam...pooriyavillai endral 100murai ketavadu therindhu kolvein..thank u .///////

    இதை சந்தேகங்கள் பகுதிக்கு மின்னஞ்சலில் அனுப்பாமல், பின்னூட்டம் வாயிலாகக் கேட்டால் என்ன செய்வது?

    ReplyDelete
  21. /////Uma said...
    குல தெய்வம் தெரியாதவர்கள், 5 ஆம் இடத்தில் உள்ள கிரகத்தின்படி வழிபடலாம். எ.கா. கேது என்றால் பிள்ளையார், சூர் என்றால் சிவன், செவ் என்றால் முருகன். அல்லது, திருப்பதி வெங்கடாசலபதியை, குல்தெய்வமாக ஏற்றுக்கொள்ளலாம்.///////

    உத்தரவு அம்மணி! தாய்க்குலம் சொல்லிவிட்டால் - அதற்கு மறுப்பேது? அம்பிகையை விட்டுவிட்டீர்களே? ராகு இருந்தால் துர்கையை வழிபடலாம்! இப்போதெல்லாம் காசு பணம் வேண்டித்தான் எல்லோரும் வழிபட விரும்புகிறார்கள். அப்படி விருப்பம் உள்ளவர்கள் பத்மாவதித் தாயாரை வழிபடலாம்!

    ReplyDelete
  22. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Kelviyum Badhilum Arumai Sir..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    எல்லாம் உங்களுக்காகத்தான் ராஜாராமன்!

    ReplyDelete
  23. ///தமிழ்மணி said...
    மிக்க நன்றி அய்யா.....
    செவ்வாய் தோசம் பற்றிய ஒரு கேள்வி
    லக்கினத்திற்கு 2,4,7,8,12 ம் இடத்தில செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம்.
    மேலும் சுக்கிரன் இருக்கும் இடத்தில இருந்து 2,4,7,8,12 ம் இடத்தில செவ்வாய் இருந்தாலும், எழாம் இடத்து அதிபதி இருக்கும் இடதில் இருந்து 2,4,7,8,12 ம் இடதில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோசம் உண்டு என்று கேள்விபட்டேன். உண்மையா?/////

    இப்படி எல்லா வழிகளிலும் தாக்குதல் நடத்தினால் 90% ஜாதகர்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாகத் தோன்றும். அதனால் ஒரு முனைத் தாக்குதல் (லக்கினத்தில் இருந்து) மட்டும் போதும்!

    ReplyDelete
  24. /////iyer said...
    செவ்வாய் தோசத்தை பத்தி இத்தனை விவாதங்களா . . . (அட.. என்னுடைய கேள்வியும் செவ்வாய் தோஷத்தை பத்திதான் . . ) பதில் எப்போ வருமோ . . எப்படி வருமோ . .//////

    வரும். வரவேண்டிய வரிசைப்படி வரும்.

    ReplyDelete
  25. ///ngs said...
    என்னுடைய கேள்விகள் இடம்பெறவில்லை .கொஞ்சம் ஏமாற்றம் ஐயா.////

    வரும். வரவேண்டிய வரிசைப்படி வரும். பொறுமை காக்கவும். 25 மின்னஞ்சல்கள். 100ற்கும் மேற்பட்ட கேள்விகள். அனைத்திற்கும் ஒரே நாளில் எப்படிப்பதில் எழுத முடியும்? எப்படி நீங்கள் அனைத்தையும் ஒரே ஷாட்டில் படிக்க முடியும்?

    ReplyDelete
  26. /////iyer said...
    இந்த சோதிட கேள்வி பதில் பகுதியைப் போல்
    அவர்களின் சொந்த சாதகத்திலிருந்து ஓரே ஒரு கேள்வி மட்டும் (வாத்தியாரின் நேரத்தை கருத்தில் கொண்டு) என ஒரு பகுதியினை ஒரு முறை வலம் வரச் செய்யலாமே . //////.

    அடடா, என்னைச் சிக்கலில் மாட்டிவிடப் பார்க்கிறீர்களே?

    சிவன் ஒரு வரம் தருவதாகச் சொன்ன போது ஒருவன் ஒரு வரத்தை இப்படிக்கேட்டானாம்: நான் என்னுடைய 90 வது வயதில், எட்டு மாடிகள் கொண்ட என்னுடைய மாளிகையின் மேல் மாடிக்கு, நானே ஏறிச் சென்று, தோட்டத்தில் என் கொள்ளுப்பேரனுக்குத் தங்கத் தட்டில் என் மனைவி சோறு ஊட்டும் காட்சியை என் கண்ணால் காண வேண்டும். அதுதான் வேண்டும் வரம் என்றானாம்.

    அதுபோல நமது மாணவக் கண்மணிகள் கேட்பார்கள். அதற்குப் பெயர் கொக்கிக் கேள்வி. ஒரே கேள்விதான். அதில் பத்து முதல் 15 கொக்கிகளாக உட் கேள்விகள் இருக்கும்.

    சார், என் எதிர் காலத்தைப் பற்றி (about my future) சொல்லுங்கள் என்று 24 வயது இளைஞர் (திருமணமாகாதவர், இன்னும் நல்ல வேலை அமையாதவர்) கேட்பார். அதுவும் ஒரு கேள்விதான். நான் 50 பக்கங்களுக்குப் பதில் எழுத வேண்டியதிருக்கும். புரிகிறதா?

    ReplyDelete
  27. //////iyer said...
    நெஞ்சை தொட்ட வரிகளில். . .
    வரிகளை மட்டும் எழுதினால் போதாதா . .
    முழு பாடலையும் எழுத வேண்டுமா . .
    அத்தனை வரிகளும் நெஞ்சை தொட்டிருந்தாலும் தொட்டு கிழித்தவைகளை மட்டும் தரலாமே . .
    மற்ற வரிகளை மற்ற நாட்களுக்கு வைத்துக் கொள்ளலாமே . .
    வாத்தியார் எது செய்தாலும் சரிதான்
    ஆனாலும் எங்கள் எண்ணம் கருத்து . .
    வாத்தியாரின் கரும்பலகையில் எழுதி வைக்கிறோம் . .//////

    முதலில் அப்படித்தான் எழுதிக்கொண்டிருந்தேன். உங்களைப் போன்ற அன்பர் ஒருவர், கண்ணதாசன் பாடல்களில்
    எல்லா வரிகளுமே நெஞ்சைத் தொடுமே. கரும்பில் எந்தப் பகுதி சுவையில்லாதது. ஆகவே முழுப்பாடலையும் தாருங்கள். என்ன குறைந்து விடப்போகிறது? என்றார். அதற்கு என்ன சொல்வது?

    ReplyDelete
  28. ////முதலில் அப்படித்தான் எழுதிக்கொண்டிருந்தேன். உங்களைப் போன்ற அன்பர் ஒருவர், கண்ணதாசன் பாடல்களில்
    எல்லா வரிகளுமே நெஞ்சைத் தொடுமே. கரும்பில் எந்தப் பகுதி சுவையில்லாதது. ஆகவே முழுப்பாடலையும் தாருங்கள். என்ன குறைந்து விடப்போகிறது? என்றார். அதற்கு என்ன சொல்வது?////

    உண்மை தான் . . .
    எதைச் செய்தாலும் குறைகளும் குற்றங்களும் சொல்லும் உலகம் தான் . .(மீன் விற்கப்படும் கதை மாதிரி)

    அனைத்தையும் அரை நிமிடத்தில் படித்து ரசிக்க முடியாது என்பதால் ரசினை ருசிக்கும் ஆசையை துண்டும் படி இருக்க வேண்டும் என்பதால் . .

    அண்டா நிறைய பாயசம் இருந்தாலும் சில தேக்கரண்டிகளே உண்ணும் படி அமைக்க வேண்டும் என்பதே கருத்து . .

    அண்ணடா வேண்டாம் ஸ்பூனே போதும் . .

    ReplyDelete
  29. வணக்கம் சார்,
    பாடம் மிகவும் நன்றாகாயிருந்தது. அதைவிட் சாப்பாடு சுவையாக இருந்தது. ரொமப நன்றி சார். தங்களுக்கும் வகுப்பறை சகோதர சகோதரிகளுக்கும் ஆடி கிருத்திகை வாழ்த்துகள் nice picture nice lesson nice food sister uma comment and ur reply also very nice
    சுந்தரி

    ReplyDelete
  30. /////iyer said...
    ////முதலில் அப்படித்தான் எழுதிக்கொண்டிருந்தேன். உங்களைப் போன்ற அன்பர் ஒருவர், கண்ணதாசன் பாடல்களில்
    எல்லா வரிகளுமே நெஞ்சைத் தொடுமே. கரும்பில் எந்தப் பகுதி சுவையில்லாதது. ஆகவே முழுப்பாடலையும் தாருங்கள். என்ன குறைந்து விடப்போகிறது? என்றார். அதற்கு என்ன சொல்வது?////
    உண்மை தான் . . .
    எதைச் செய்தாலும் குறைகளும் குற்றங்களும் சொல்லும் உலகம் தான் . .(மீன் விற்கப்படும் கதை மாதிரி)
    அனைத்தையும் அரை நிமிடத்தில் படித்து ரசிக்க முடியாது என்பதால் ரசினை ருசிக்கும் ஆசையை துண்டும் படி இருக்க வேண்டும் என்பதால் . .
    அண்டா நிறைய பாயசம் இருந்தாலும் சில தேக்கரண்டிகளே உண்ணும் படி அமைக்க வேண்டும் என்பதே கருத்து . .
    அண்டா வேண்டாம் ஸ்பூனே போதும் . ./////

    இப்போது ஸ்பூன் போட்டிருக்கிறேன். சுவையான வரிகளை சிவப்பு எழுத்துக்களில் தந்திருக்கிறேன்.

    ReplyDelete
  31. /////sundari said...
    வணக்கம் சார்,
    பாடம் மிகவும் நன்றாகாயிருந்தது. அதைவிட் சாப்பாடு சுவையாக இருந்தது. ரொமப நன்றி சார். தங்களுக்கும் வகுப்பறை சகோதர சகோதரிகளுக்கும் ஆடி கிருத்திகை வாழ்த்துகள் nice picture nice lesson nice food sister uma comment and ur reply also very nice
    சுந்தரி/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  32. Dear Sir,

    Thanks for the answers. delibilated Chevvai can reduce the effect orChevvai dossam or (if chevvai in Viruchigam).

    ReplyDelete
  33. Uma said...
    குல தெய்வம் தெரியாதவர்கள், 5 ஆம் இடத்தில் உள்ள கிரகத்தின்படி வழிபடலாம். எ.கா. கேது என்றால் பிள்ளையார், சூர் என்றால் சிவன், செவ் என்றால் முருகன். அல்லது, திருப்பதி வெங்கடாசலபதியை, குல்தெய்வமாக ஏற்றுக்கொள்ளலாம்.///////

    உத்தரவு அம்மணி! தாய்க்குலம் சொல்லிவிட்டால் - அதற்கு மறுப்பேது? அம்பிகையை விட்டுவிட்டீர்களே? ராகு இருந்தால் துர்கையை வழிபடலாம்! இப்போதெல்லாம் காசு பணம் வேண்டித்தான் எல்லோரும் வழிபட விரும்புகிறார்கள். அப்படி விருப்பம் உள்ளவர்கள் பத்மாவதித் தாயாரை வழிபடலாம்!


    @ வாத்தியாரையா & சகோதரி உமா : எனக்கு 5 ஆம் இடதில் குரு , புதன் , சனி என மூன்று கிரகங்கள் உள்ளது. நான் எந்த தெய்வத்தை குல தெய்வமாக வணங்கலாம் ?

    @வாத்தியாரையா :
    பின்னூட்டத்திற்கு பின்னுட்டமா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது அய்யா, எல்லாம் ஒரு ஆர்வக்கோளறு.....

    ReplyDelete
  34. //////Ram said... Dear Sir,
    Thanks for the answers. delibilated Chevvai can reduce the effect or Chevvai dossam or (if chevvai in Viruchigam).////

    விருச்சிகத்தில் இருக்கும் செவ்வாய் எப்படி சாமி நீசமாகும்? இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்!

    ReplyDelete
  35. /////தமிழ்மணி said...
    Uma said...
    குல தெய்வம் தெரியாதவர்கள், 5 ஆம் இடத்தில் உள்ள கிரகத்தின்படி வழிபடலாம். எ.கா. கேது என்றால் பிள்ளையார், சூர் என்றால் சிவன், செவ் என்றால் முருகன். அல்லது, திருப்பதி வெங்கடாசலபதியை, குல்தெய்வமாக ஏற்றுக்கொள்ளலாம்.///////
    உத்தரவு அம்மணி! தாய்க்குலம் சொல்லிவிட்டால் - அதற்கு மறுப்பேது? அம்பிகையை விட்டுவிட்டீர்களே? ராகு இருந்தால் துர்கையை வழிபடலாம்! இப்போதெல்லாம் காசு பணம் வேண்டித்தான் எல்லோரும் வழிபட விரும்புகிறார்கள். அப்படி விருப்பம் உள்ளவர்கள் பத்மாவதித் தாயாரை வழிபடலாம்!
    @ வாத்தியாரையா & சகோதரி உமா : எனக்கு 5 ஆம் இடதில் குரு , புதன் , சனி என மூன்று கிரகங்கள் உள்ளது. நான் எந்த தெய்வத்தை குல தெய்வமாக வணங்கலாம் ?
    @வாத்தியாரையா :
    பின்னூட்டத்திற்கு பின்னுட்டமா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது அய்யா, எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு...../////

    நீங்கள் மீண்டும் கேள்வி கேட்காமல் பழநி அப்பனை வணங்குங்கள். அவர் எல்லா நலன்களையும் நல்குவார்!

    ReplyDelete
  36. //////Jack Sparrow said...
    ok. emailil anupugindrein. thank u/////

    அதை அனுப்பி வைக்க வேண்டியதுதானே! ஒரு பின்னூட்டத்தை வேஸ்ட் செய்துவிட்டீர்களே!

    ReplyDelete
  37. அன்புடன் வணக்கம் , செவ்வாய் தோஷம்---- 1969 to 1972 வருடத்தில் குமுதம் இதழில் ஒரு பெரிய டாக்டர் கோவை சேர்ந்த்தவர் இதுபோன்ற செவ்வாய் தோஷம் உள்ளவர்களை ஆராய்ந்து பார்த்ததில் அவர்களின் ரத்த பிரிவு B+ தவிர்த்து மாற்ற பிரிவில் இருக்கும் என்று எழுதி இருந்தார் .பொதுவாக இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு B+ ரத்த பிரிவுதான் எனது அனுபவத்தில் செவ்வாய் தோஷம் என்று சொல்லும் நபர்களை விசாரித்தால் அவர்களின் ரத்த பிரிவு O+,O-, AB+,AB- இப்படி ?சரியா தவறா நீங்கள் தான் சொல்லவேண்டும் இதில் ஒரே பிரிவு இருந்தால் தான் வம்சம் விருத்தி இருக்கும் நமது முன்னோர்கள் பரிசோதனை சாலை இல்ல்லாமல் கண்டுபிடித்தா விஷயம் !!!கோடி நமஸ்காரம் செய்தாலும் மிகையாகாது !!####.குலதெய்வம் இல்லாதவர்கள் ஸ்ரீ _பூர்ணகலா &, புஷ்கலா சமேத ஸ்ரீ மஹா சாஸ்த வை வழிபாடு செயலாம் எனது குருதேவர் அருள் மொழி கந்த புராணத்தில் இந்திரன் தனது பத்தினி இந்திராணிய இவருடிய பாதுகாப்பில் விட்டு தவம் செய போனதாக வரும் அந்த இடத்தில உலக மக்களுக்கு குலதெய்வமாம் என்று சொல்லபடுகிறது...

    ReplyDelete
  38. ஐயா!!!

    மாலை வணக்கம்...இன்றைய கேள்வி பதில் பகுதி பழைய பாடங்களை நினைவூட்டுவதாக இருந்தது...மிக்க நன்றி...

    ReplyDelete
  39. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கேள்விகளுக்கான தங்களின் பதில்களில் புதியதாக பல விபரங்களை தெரிந்துக் கொள்ள முடிகிறது.நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி
    2010-08-03

    ReplyDelete
  40. /////hamaragana said...
    அன்புடன் வணக்கம் , செவ்வாய் தோஷம்---- 1969 to 1972 வருடத்தில் குமுதம் இதழில் ஒரு பெரிய டாக்டர் கோவை சேர்ந்த்தவர் இதுபோன்ற செவ்வாய் தோஷம் உள்ளவர்களை ஆராய்ந்து பார்த்ததில் அவர்களின் ரத்த பிரிவு B+ தவிர்த்து மாற்ற பிரிவில் இருக்கும் என்று எழுதி இருந்தார் .பொதுவாக இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு B+ ரத்த பிரிவுதான் எனது அனுபவத்தில் செவ்வாய் தோஷம் என்று சொல்லும் நபர்களை விசாரித்தால் அவர்களின் ரத்த பிரிவு O+,O-, AB+,AB- இப்படி ?சரியா தவறா நீங்கள் தான் சொல்லவேண்டும் இதில் ஒரே பிரிவு இருந்தால் தான் வம்சம் விருத்தி இருக்கும் நமது முன்னோர்கள் பரிசோதனை சாலை இல்ல்லாமல் கண்டுபிடித்தா விஷயம் !!!கோடி நமஸ்காரம் செய்தாலும் மிகையாகாது !!####.குலதெய்வம் இல்லாதவர்கள் ஸ்ரீ _பூர்ணகலா &, புஷ்கலா சமேத ஸ்ரீ மஹா சாஸ்த வை வழிபாடு செயலாம் எனது குருதேவர் அருள் மொழி கந்த புராணத்தில் இந்திரன் தனது பத்தினி இந்திராணிய இவருடிய பாதுகாப்பில் விட்டு தவம் செய போனதாக வரும் அந்த இடத்தில உலக மக்களுக்கு குலதெய்வமாம் என்று சொல்லபடுகிறது...//////

    செவ்வாய்க்கும் நமது இரத்தத்திற்கும் தொடர்பு உள்ளது என்பதை அறிவேன். ஆனால் நீங்கள் கூறும் வகைப்படுத்தும் செய்தி புதியது. நன்றி!

    ReplyDelete
  41. ////Arul said...
    ஐயா!!!
    மாலை வணக்கம்...இன்றைய கேள்வி பதில் பகுதி பழைய பாடங்களை நினைவூட்டுவதாக இருந்தது...மிக்க நன்றி.../////

    பழைய பாடங்களில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் கூறும்போது அப்படி ஏற்படுவது இயற்கைதான் நண்பரே. நன்றி!

    ReplyDelete
  42. //////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கேள்விகளுக்கான தங்களின் பதில்களில் புதியதாக பல விபரங்களைத் தெரிந்துக் கொள்ள முடிகிறது.நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  43. sister uma comment and ur reply also very nice//

    thank u sundari

    ReplyDelete
  44. //////Uma said...
    sister uma comment and ur reply also very nice//
    thank u sundari /////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  45. Dear Sir,

    sorry for the wrong info, change the Virichigam to Kadagam.

    the correct question is if the Chevvai in Kadagam then it was from 2, 4, 7, 8 & 12 what will be the effect

    ReplyDelete
  46. /////Ram said...
    Dear Sir,
    sorry for the wrong info, change the Virichigam to Kadagam.
    the correct question is if the Chevvai in Kadagam then it was from 2, 4, 7, 8 & 12 what will be the effect //////

    கடகத்தில் செவ்வாய் நீசம். மேஷ லக்கின ஜாதகமாக இருந்தால், லக்கினாதிபதி நீசம். துலா லக்கின ஜாதகமாக இருந்தால் ஏழாம் அதிபதி நீசம். கும்ப லக்கினமாக இருந்தால் பத்தாம் அதிபதி நீசம். இப்படி இடங்களை வைத்து செவ்வாயின் தன்மைகள் மாறும்.. பலன்களும் மாறும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com