மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

20.6.18

கடைசிவரை பற்றை ஏன் விடமுடியவில்லை?


கடைசிவரை பற்றை ஏன் விடமுடியவில்லை?

"தென்கச்சி சுவாமிநாதன் சொன்ன கதை" 
             
கோயில் வாசலில் உள்ள பெட்டிக்கடையில், பக்திப் பழமாக உட்கார்ந் திருப்பார் ஒருவர். அவர், 'எனக்கு ஆசையே இல்லை.
 பந்தங்களில் இருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை!' என்றபடியே இருப்பார்.

ஒருநாள்! கோயிலுக்கு வந்த சந்நியாசியிடமும் இதையே சொல்லிப் புலம்பினார் அந்த ஆசாமி.

இதைக் கேட்டதும், ''நீ சரின்னு சொன்னா இப்பவே உன்னை அழைச்சிக்கிட்டுப் போயிடுறேன். என்ன சொல்றே?'' - கேட்டார் சந்நியாசி.

''நானும் இதைத்தான் நினைச்சேன். ஆனா, வீட்ல விவரம் தெரியாத வயசுல புள்ளைங்க இருக்கறப்ப, எப்படி விட்டுட்டுப் போறதுன்னுதான் ஒரு யோசனை.  அவங்களுக்கு கல்யாணம் காட்சின்னு ஆயிட்டா... அப்புறம் நிம்மதியா கிளம்பிடலாம்!'' என்றார் ஆசாமி.

சிரித்தபடியே கிளம்பிச் சென்றார் சந்நியாசி.

ஆண்டுகள் ஓடின!

ஒருநாள்... கோயிலுக்கு வந்தார் சந்நியாசி! அதே சந்நியாசி; அதே பெட்டிக்கடை; அதே ஆசாமி!
''எனக்கு ஆசையே இல்லை.  பந்தங்களிலிருந்து விடுபட விரும்பறேன். ஆனா, இன்னும் அதற்கான வேளை வரலை'' - அதே புலம்பல்.

சந்நியாசி மெள்ள புன்னகைத்தபடி, ''சரி... இப்பவாவது புறப்படேன்!'' என்றார்.
''பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். பேரப் பிள்ளைங்களையும் கண்ணாலே பார்த்துட்டா. என் கவலையெல்லாம் தீர்ந்துடும்!'' என்று விவரித்தார் நம்ம ஆள்!

சில ஆண்டுகளுக்குப் பிறகு, சந்நியாசி வந்தார்.

''எனக்கு ஆசையே இல்லை...''- வழக்கம்போல் கேட்டது குரல்!

''இப்போதாவது வருகிறாயா?''- இது சந்நியாசி.

''கோர்ட்ல கேஸ் இருக்கு. வழக்கு முடிஞ்சிட்டா வந்துடலாம்''- பதிலுரைத்தார் ஆசாமி. வழக்கமான புன்னகையுடன் கிளம்பினார் சந்நியாசி.

ஆண்டுகள் பல கழிந்தன. மீண்டும் வந்தார் சந்நியாசி. ஆனால், அந்த ஆசாமியைக் காணோம். கடையில் இருந்தவரிடம் நம்மவர் குறித்து விசாரித்தார் சந்நியாசி.

கடையில் இருந்தவர், ''சாமி... எங்க அப்பாதான் அவரு. 'எல்லா பந்தங்களையும் விட்டுட்டு உங்ககூட வந்துடணும்னு சொல்லிகிட்டே இருந்தாரு, போன வருஷம் ஒருநாள்... நெஞ்சு வலின்னவரு, பொட்டுனு போயிட்டாரு. அப்பா இந்நேரம் உயிரோட இருந்திருந்தா, நிச்சயம் உங்க கூட வந்துருப்பாரு சாமீ...''- கவலையுடன் சொன்னார் நம்மவரின் மகன்.

இதைக் கேட்ட சந்நியாசி, ''உங்க அப்பன் எங்கேயும் போயிடலே. இங்கதான் இருக்கான். அதோ... அங்கே பார்... அதென்ன?''

''அது நாய்... இங்கேதான் சுத்திக்கிட்டிருக்கு!''

''அதான் உங்க அப்பன். இப்ப பாரு'' என்றவர், கையைத் தட்டினார்.

அந்த நாய் வாலாட்டியபடியே ஓடி வந்தது. நாயின் தலையைத் தட்டினார்.

உடனே அது, ''எனக்கு ஆசையே இல்லே...'' என பேசத் துவங்கியது.

''அடேய்... என்னோட வந்துடறியா?'' - சந்நியாசி கேட்டார்.

''சாமி! ஏராளமா சொத்து சேத்து வச்சுட்டேன். பிள்ளைங்க அதை சரியா காப்பாத்துவாங்கன்னு தோணலீங்க.   கடையை சரியா பூட்டாமே போயிட றாங்க. அதுதான் நாயா பிறந்து காவல் காத்துக்கிட்டு கிடக்கிறேன்!''- இப்படி நாய் சொன்னதும், 'கடகட'வெனச் சிரித்தார் சந்நியாசி.

இந்த கதை நமக்கும் பொருந்தலாம்!!!!

படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Good morning sir very nice thanks sir vazhga valamudan

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள்
வியப்புக் கதைகளை வேடிக்கையாய்ச் சொல்வார்கள்! படித்திருக்கிறேன்,டிவியிலும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்!அவைகள் அமர கதைகள்! ஒவ்வொன்றிலும் நீதி இருக்கும்.
அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற
வேண்டிய கருத்துடன் கூடியவையாக
இருக்கும்! இன்றையப் பதிவில் வந்துள்ள கதையும் பெரும்பான்மையான மனிதர்களின்
விந்தையான மனநிலையை விளாசி
இருக்கிறார்! மிகவும் சுவாரசியமான
கதை, வாத்தியாரையா!

Kannan L R said...

ஐயா வணக்கம்
நகைச்சுவை உடன் கூடிய கருத்து மிக அருமை
நன்றி

கண்ணன்

kiran said...

[4:08 PM, 6/13/2018] +91 91762 14797: Thank you for sharing such useful and informative article. keep sharing
[4:09 PM, 6/13/2018] +91 91762 14797: The Best School in Perambur
The Best School in Vyasarpadi

kmr.krishnan said...

Excellent

Subbiah Veerappan said...

/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir very nice thanks sir vazhga valamudan/////

நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள்
வியப்புக் கதைகளை வேடிக்கையாய்ச் சொல்வார்கள்! படித்திருக்கிறேன்,டிவியிலும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்!அவைகள் அமர கதைகள்! ஒவ்வொன்றிலும் நீதி இருக்கும். அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய கருத்துடன் கூடியவையாக
இருக்கும்! இன்றையப் பதிவில் வந்துள்ள கதையும் பெரும்பான்மையான மனிதர்களின் விந்தையான மனநிலையை விளாசி
இருக்கிறார்! மிகவும் சுவாரசியமான கதை, வாத்தியாரையா!

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!

Subbiah Veerappan said...

/////Blogger Kannan L R said...
ஐயா வணக்கம்
நகைச்சுவை உடன் கூடிய கருத்து மிக அருமை
நன்றி
கண்ணன்////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

/////Blogger kiran said...
Thank you for sharing such useful and informative article. keep sharing/////

நல்லது. நன்றி நண்பரே!!!!!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
Excellent/////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!