மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

13.6.18

சொத்துக்களை எப்படிப் பங்கு வைத்தார் அந்த தர்மவான்?


சொத்துக்களை எப்படிப் பங்கு வைத்தார் அந்த தர்மவான்?

"பெரிய வீடு" எஸ்.கோவிந்தசாமி  நாயுடுவிற்கு, வெங்கடசாமி,ரங்கசாமி,கங்கா,நாராயணசாமி என்று நான்கு மகன்கள்.கோவிந்தசாமி பிறந்தது மிகப் பெரிய குடும்பத்தில்.

அடிப்படையில் அவர்கள் அனைவருமே விவசாயிகள்,கடும் உழைப்பாளிகள்.

கோவிந்தசாமி தன் உழைப்பில் சேர்ந்த சொத்துக்களை ஐந்து பாகங்களாகப் பிரித்தார்.

"என் சொத்துக்களை ஐந்து சரிபகுதி பாகங்களாகப் பிரிந்துள்ளேன்.எனக்கு மகன்கள் நீங்கள் நான்கு பேர்கள் தான்.ஆனால் ஐந்தாவதாகவும் ஒரு சகோதரர் உங்களுக்கு இருக்கிறார்.அது தான் இந்த தமிழ்ச் சமூகம்.அதற்கு நம் காலம் உள்ளவரை,நம் தலைமுறைகளுக்கும் நாம் சேவை செய்ய வேண்டும்.அதற்காக ஒரு அறக்கட்டளையை உருவாக்கி இருக்கிறேன்.அது தான் அந்த ஐந்தாவது சகோதரர்.அவருக்கும் சம பங்கை எழுதி வைக்கிறேன்." என்று தன் மகன்களிடம் சொன்னார்.அதை அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

சொன்னபடியே கிட்டத்தட்ட 2,01100 ரூபாய்களை எழுதியும் வைத்தார்.இது நடந்து கிட்டத்தட்ட நூறாண்டுகளை நெருங்கப் போகின்றது.ஆனால் இன்றுவரையில் அந்த ஐந்தாவது சகோதரருக்கான பங்களிப்பும் தொடர்கிறது.

அப்படி அந்த ஐந்தாவது சகோதரன் அறக்கட்டளையால் வந்தவை தான் கோவை PSG கல்வி நிறுவனங்கள்.

இது தான் நூறாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அந்த பங்கு பத்திரம்...இதற்கான படம் இதோ.


படித்து வியந்ததைப் பகிர்ந்துள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

kmr.krishnan said...

Great man!

adithan said...

வணக்கம் ஐயா,நல்ல மனம் வாழ்க!இன்று பலருக்கு பணமிருந்தும், மனமில்லை.நன்றி.

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Good morning sir new information thanks sir vazhga valamudan

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
அற்புதமான தகவல்!புகழ் பெற்ற
பிஎஸ்ஜி பற்றிய புதையல் செய்தி!
ஆழ்ந்த நுண்ணறிவும் அறிவார்ந்த
சிந்தனையும் கொண்ட அக்கால
கட்டத்தில், எத்துனை கூர்ந்த நோக்கோடு மறைந்த மாபெரும்
மாமனிதர் தமிழச் சமுதாயத்தை
முன்வைத்து ஒரு பங்கையும்
கொடுத்ததன் பலனை இன்றளவும்,
மற்றும் இனிவரும் தலைமுறையினரும் அநுபவிக்க
முடியும் என்ற வசதியை செய்துள்ளது எவ்வளவு இனிமை!!
பிஎஸ்ஜி குடும்பத்தாருக்கு நம் தமிழ்
சமுதாயத்தின் சார்பில் மனமார்ந்த
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
Great man!////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,நல்ல மனம் வாழ்க!இன்று பலருக்கு பணமிருந்தும், மனமில்லை.நன்றி./////

பணம் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பணம் வந்ததில்லை!!
-கவிஞர் வாலி

Subbiah Veerappan said...

////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir new information thanks sir vazhga valamudan /////

நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
அற்புதமான தகவல்!புகழ் பெற்ற பிஎஸ்ஜி பற்றிய புதையல் செய்தி!
ஆழ்ந்த நுண்ணறிவும் அறிவார்ந்த சிந்தனையும் கொண்ட அக்கால
கட்டத்தில், எத்துனை கூர்ந்த நோக்கோடு மறைந்த மாபெரும்
மாமனிதர் தமிழச் சமுதாயத்தை முன்வைத்து ஒரு பங்கையும்
கொடுத்ததன் பலனை இன்றளவும், மற்றும் இனிவரும் தலைமுறையினரும் அநுபவிக்க
முடியும் என்ற வசதியை செய்துள்ளது எவ்வளவு இனிமை!!
பிஎஸ்ஜி குடும்பத்தாருக்கு நம் தமிழ் சமுதாயத்தின் சார்பில் மனமார்ந்த
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!/////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!