மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.12.15

Face Book (முகநூலின்) அசுர வளர்ச்சி!

Face Book (முகநூலின்) அசுர வளர்ச்சி!

ஃபேஸ்புக் எம்!

டெக்னாலஜியின் அடுத்த கட்டம்…

டெக்னாலஜியின் தீர்க்கதரிசியாக வலம்வரும் ஃபேஸ்புக் தற்போது தொட்டிருப்பது ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI) என்னும் உச்சத்தை. அதன் புதிய கண்டுபிடிப்பான ஃபேஸ்புக் – எம் (Facebook M)-ஐ அமெரிக்காவில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஏரியா மக்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தி யிருந்தாலும் உலகம்  முழுவதும் அதன்  மெஸ்மெரிஸத்தில் திகைத்துப் போயிருக்கிறது.

ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஃபேஸ்புக் மெஸன்ஜர் ஆப்புக்குள்ளேயே வலம் வருகிறது இந்த ஃபேஸ்புக் – எம். மைக்ரோசாஃப்ட்டும் ஆப்பிளும் கூகுளும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸில் முன்பே பாதம் பதித்திருந்தாலும் ஃபேஸ்புக் அவற்றைவிட ஒருபடி அல்ல, பல படிகள் மேலே சென்று நிற்கிறது என்பதே உண்மை என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் பலர். நீங்கள் நினைத்துப் பார்க்காத எண்ணற்ற நாம் கேட்கிற கேள்விகளுக்கு ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸின் துணையுடன் பதில் தருவதோடு, அதை ஒரு ஹ்யூமன் டச் கலந்து தருவது ஃபேஸ்புக் – எம்-மின் சிறப்பு.

உதாரணமாக, நீங்கள் வாங்க விரும்பும் ஹெட்போனின் விலை இன்று அமேசானில் சற்று அதிகமாக இருக்கிதே என்று ஃபேஸ்புக் -எம்-மிடம் நீங்கள் வருத்தம் தெரிவித்தால் போதும்.

அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் விலை குறைந்த ஹெட்போனுடன் ஃபேஸ்புக் – எம் உங்களை அணுகி  விடுகிறதாம்.

நீங்கள் பார்க்க விரும்பும் படத்துக்கு கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்க வில்லையா? கவலையை விடுங்கள்; அடுத்த ஆறு நிமிடத்தில் ஃபேஸ்புக் – எம் உங்களுக்கான ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டை கன்ஃபார்ம் செய்வதோடு மட்டும் அல்லாமல், அதற்கான காப்பியை உங்களுக்கு மெயிலில் அனுப்பவா என கேட்கவும் செய்கிறது. ‘சரி’ என்று நீங்கள் அனுப்பிய அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் உங்கள் இன்பாக்ஸில் மெயில் இருப்பது உறுதி என்கிறார்கள்.

உங்கள் காதலிக்கு ஒரு கவிதை எழுதித் தர சொன்னால், அடுத்த இரண்டு நிமிடங்களில் நச்சென்ற கவிதை எழுதித் தந்து அசத்துகிறதாம் இந்த ஃபேஸ்புக் -எம். இதில் ஆச்சர்யத்தின் உச்சகட்டமாக நீங்கள் ஏதேனும் ஒரு பிரபலத்தை வரைந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்ல ஆசைப்பட்டால், அந்தப் பிரபலத்தையும் வரைந்து அதனருகில் ‘ஹேப்பி பர்த்டே’ என்று எழுதி வைத்துவிடுகிறதாம். (ஃபேஸ்புக் – எம் தொடங்கப்பட்ட புதிதில் தான் வரைந்த படங்களில்  M என்று கையெழுத்திட்டு வந்ததாம். இப்போதுவரும் படங்களில் அந்த M-ஐக் காணவில்லையாம்!).

இதைப் பார்த்த சில குசும்பர்கள், ஃபேஸ்புக்கின் தலைவர் மார்க் ஜகர்பெர்க்கை ஒரு எரிமலையின் உச்சியில் நிற்பதைப் போல் வரைந்து கொடுக்கச் சொன்னார்கள். எரிமலையின் உச்சியில் ஒரு மனிதன் நிற்பதைப் போன்ற படத்தை வரைந்து அதனருகில் அவ்வாறு வரையச் சொன்னவர்களின் பெயரை போட்டுவிட்டதாம்.

அமெரிக்காவில் சில ஆயிரம் பேர் வசிக்கும் அந்த பே (Bay) ஏரியாவில் மட்டுமே இந்த ஃபேஸ்புக் – எம் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இவர்களில் சிலர் கேட்கும் படத்தை வரைந்து தரலாம்; கவிதையை எழுதிக் கொடுக்கலாம். ஆனால், உலகெங்கும் மூலைமுடுக்குகளில் உள்ள பல கோடிக்கணக்கானவர்கள் கேட்டால், இப்படி வரைந்து கொடுப்பது சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறதில்லையா?

ஃபேஸ்புக் இதற்கும் பதில் வைத்திருக்கிறது. அவர்கள் பயன்படுத்தும் அந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸானது, நம் ஒவ்வொரு நாள் நடவடிக்கைகளையும் கவனித்து நம் விருப்பங்களுக்கு ஏற்ற மாதிரி தன்னை வளர்த்துக்கொண்டே வருமாம்.

அதாவது, நம்மைப் பற்றிய டேட்டாபேஸையே உருவாக்கிக்கொள்ளும். உங்களது ப்ரிஃபரன்ஸ்களை நீங்கள் ஒவ்வொரு முறையும் பதிவு செய்யவேண்டியதில்லை. நாளாக நாளாக அவற்றை புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றார்போல் நடந்துகொள்ளுமாம் இது. இதனை ‘டீப் லேர்னிங் டெக்னாலஜி’ என்கிறது ஃபேஸ்புக்.

நிறை என்று இருந்தால் குறை என்ற ஒன்று இருக்கத்தான் செய்யுமல்லவா? இந்த ஃபேஸ்புக் – எம் சில இடங்களில் தடுமாறிப் போகிறதாம். குறிப்பாக, பெயரில் பெரிதாகவே குழம்புகிறதாம். உதாரணமாக, ஒரே பெயரில் இரண்டு நண்பர்கள் இருந்தால், யாரிடம் எதை சொல்வது என்பதில் இந்த எம்-முக்கு குழப்பம் வருகிறது. தவிர, அரசியல் பற்றியோ, சர்ச்சையான விஷயங்கள் பற்றியோ இந்த எம்-மிடம் கேள்வி கேட்டால், பதில் எதுவும் கிடைக்காது.

இதில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்க ட்ரைனர்ஸ் (Trainers) என்பவர்களை நியமித்திருக்கிறது ஃபேஸ்புக். இந்த எம்-மின் செயல்பாடுகளை பொதுவாக நான்கு நிலைகளாகப் பிரிக்கிறார்கள். முதல் நிலையில், நாம் எழுப்பும் கேள்வி உள்ளே செல்லும். இரண்டாவதில், ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் அதற்கு பதில் தரும். மூன்றாவதாகத்தான் இந்த ‘ட்ரைனர்’கள் வருவார்கள். இவர்கள் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் தரும் பதில்களை சரி பார்க்கிறார்கள். சமயத்தில் நமக்கு தேவைப்படும் பதில்களை இவர்களே எழுதித் தருகிறார்களாம்.  (கவிதை எழுதுவதும் படங்கள் வரைவதும் இவர்களே என்று கூறுகின்றனர்). இவ்வாறு அவர்கள் அளிக்கும் பதில்களை ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் பார்த்துக் கற்றுக் கொள்கிறதாம். நான்காவது நிலையில்தான் பதில் நம்மை அடைகிறது.
ஆக,  நம் எல்லா விஷயங்களையும் ‘ட்ரைனர்’களே செய்தால், பிறகு ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் என்பது எதற்கு என்று பலர் ஃபேஸ்புக்கை விமர்சிக்கின்றனர். ஆனால், ஃபேஸ்புக்கோ, ஒரு குறுகிய பகுதி மட்டுமே இவர்களால் செய்யப்படுகிறது என்று சொல்கிறது.

லேட்டஸ்ட் டெக்னாலஜி என்கிற அளவில் இந்த ஃபேஸ் – புக் ஆர்வமூட்டும் விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால், இது நடைமுறையில் என்னென்ன சிக்கல்களை சந்திக்கும் என்பது இனிமேல்தான் தெரியும்!

நமக்கு இந்தச் செய்தியை அறியத்தந்தவர் நமது வகுப்பறை மாணவர் கே.வரதராஜன். அவருக்கு நம் நன்றி உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்
==========================================================
2
திகைக்கவைக்கும் புகைப்படங்கள்!

நமக்கு அறியத்தந்தவர்: நமது வகுப்பறை மாணவர் பொன்னுச்சாமி அண்ணன்
--------------------------------------------------------
Touching Stories Behind these Pictures…. 2015
  
And yet, in many cases it still unable to convey the entire story.
In 2015, there were some heartbreaking moments -- from desperate refugees drinking rainwater to hippos out on the street, to children running from death in Syria.
Reuters photographers tell the story behind some of the most iconic pictures of the year.

Ghazal, 4, (left) and Judy, 7, carrying 8-month-old Suhair, run away after the shelling of a Red Crescent convoy in Damascus, Syria on May 6.

The story: I was covering the Syrian Arab Red Crescent convoy’s visit to the Douma neighborhood of Damascus, which was carrying medical aid and supplies used to give psychological support to children affected by war. Every time the aid convoy arrived, children would gather around it, happy that they were going to be supplied with food and medicine.
Before the shell landed on the convoy I was sitting on the pavement relaxing; the children gathered around me so I could photograph them. While I was taking these photos, the shell exploded. It killed a female volunteer and wounded many people and volunteers nearby.
The children were terrified and began to scream and cry, especially when they saw a female volunteer covered with blood from a head injury. The challenge to portray this image was just like the challenges we face daily in time of war. I knew that there might be another shell falling within a matter of seconds; then one did exactly that a little further away. Do you want to protect yourself, like everyone else, by walking into a shop or home? Help carry the injured or be satisfied to take photos while others transfer them to ambulances? Do you want to calm screaming children? Or do you just want to cry because of what’s happened?
All these questions need answers in a matter of seconds before you can capture such an image. In this particular photograph, it was the first time I had seen how children’s innocent laughter could turn into screams, fear and tears. It was a very sad moment when I put my eye to the viewfinder to take pictures of laughing children; then when I looked back after taking the picture, I saw the same children crying, distraught. It takes only a few seconds for life to turn to ashes and blood.
Photograph: Bassam Khabieh/Reuters
Crossing over for a better life
Syrian migrants cross under a fence into Hungary at the border with Serbia, near Roszke in August

The story: Rail tracks, unguarded, line the border with Serbia. Most refugees used the tracks, a few miles long, as a highway into Hungary. I arrived at the border every day at 6.00 am. The crossing was the only spot still not blocked. A triple coil of razor wire was up everywhere else as Hungary prepared to fence off the border. The rail crossing was easy enough but many migrants chose to jump the fence to avoid the police waiting a few hundred metres inside. The razors were not too sharp to handle with heavy gloves.
Dozens of other photographers and I paced the fence, some way from the rail tracks. Among the shrubs we could make out the contours of migrants waiting for the right moment. Everyone watched everyone else. We watched the refugees, who watched the police, who watched us. It was like an elaborate board game. It was more than just waiting. The people on the other side of the fence filled the atmosphere with strange, unspeakable tension.
This family decided they had waited enough. They started for the fence. Aware of the stakes, they lifted the razor wire, looked around, then went for it. Once across they vanished in the woods. I never saw them again. Photographing the migrants was the ultimate test of staying out of the story: observe keenly, wait, shoot. Don’t cut the wire, don’t invite the refugees in, don’t alert the police. There was little human contact with the thousands of refugees scaling the fence. You learnt nothing about them. They came and went. But those who walked along the tracks stopped and talked. They accepted water or the odd chocolate bar. They even shared stories - stories that will haunt me forever.
There is no way to shake the emotional impact. Once I put the camera down and had time to reflect it all came back. You have to let the story wash through you to remain human.
Photograph: Bernardett Szabo/Reuters
A bloody evening in Paris

An injured man is carried out of the Bataclan following fatal shootings in Paris, France, in November.
The story: The weekend appeared calm. I had the evening off. Just before 10, the phone rang: in a grave voice my editor told me that a shooting had occurred at a cafe in eastern Paris and I should get there as quickly as possible.
Around the same time, colleagues who were covering the France v Germany match heard explosions at the Stade de France. They turned their lenses away from the match and scanned the crowd to try and catch something. I took the bulletproof vest from my car -- it had been there since the Charlie Hebdo attacks in January -- and got on my scooter. I stopped by the bureau to pick up a 400mm lens, certain that the security perimeter would be wide.
En route I heard about another shooting incident. When I arrived at the Bataclan, police warned journalists that we could be considered targets. They ordered us to take cover. The streets were silent. Security forces evacuated some victims, who were taken to safety. Special Forces units started arriving on the scene in huge numbers.
With two colleagues we decided to seek shelter. A young man let us into his apartment and we took up position at the windows. Just before midnight explosions were heard at the music hall. We could not see what was happening; no angle gave us a direct view to the entrance to the Bataclan.
Once the Special Forces operation finished, people covered in blood and wrapped in blankets came flooding out of the theatre. We descended from our window perches to photograph the victims. We tried to record the emotion that these instants provided. Some people, covered in blood, spoke to us. Their stories were chilling. The moments they lived will remain with them forever. They also mark the life of a photojournalist.
Photograph: Christian Hartmann/Reuters
Hope floats
Download Image
This image from September captures a Syrian refugee holding a baby swims towards the Greek island of Lesbos.
The story: Another inflatable boat packed with dozens of migrants and refugees heading towards the shore. That’s what I noticed in the distance. The sea was calm and they were cheering on the dinghy. Suddenly, some 200 metres away, the rear of the boat deflated for no obvious reason, and people started falling into the sea.
Screams replaced cheers as they frantically tried to stay afloat on life tubes, or by clinging on to the boat. Those who could swim tried to help those who couldn’t. As this dramatic scene unfolded and people drifted away from each other, the biggest challenge was to capture as many of the different scenes as I could.
There were people falling overboard; two men trying to keep their friend afloat; a man still on the boat lifting his child in the air; another man, nearing collapse from exhaustion, swimming towards the shore; volunteers rushing towards the boat. In this hectic moment, one man, tense and yelling really loudly, caught my eye so I shot some frames.
Later, as he tried to catch his breath on the beach, I asked him where he was from. “Syria,” he told me before heading towards a volunteer holding a baby. The distance of the shot hadn’t allowed me to see the details of the picture clearly. It was only when I began editing that I could make out the tiny head of a baby in a life tube, and the screaming man trying to keep himself and the baby above water.
Everything I cover, from riots to politics and sports, trains me to be on the alert and try to get the best from what I am shooting. I learned from this experience that disaster can occur even in what appears to be the calmest of situations.
Looking back, the most memorable moment was when I opened the picture and saw the baby, who looked fast asleep as if in a cradle - dreaming or listening to a lullaby.
Photograph: Alkis Konstantinidis/Reuters
Lookout, there’s a hippo on the street!
In June, Tbilisi was lashed with heavy rains, causing many animals, including this hippopotamus to flee the zoo and roam the flooded streets.
-----------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

  1. ஐயா,
    இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மை, தீமை இரண்டுமே ஏராளம். எதுவும் மனித மூளைக்கு ஈடாகாது! அதுதான் இயற்கையின் அழுத்தமான முத்திரை. அதை யாரும், ஒருபோதும் விஞ்சிவிட முடியாது என்பதை மட்டுமே எந்த ஒரு நவீன தொழில்நுட்பமும் இறுதியில் (இறுதியில் !) நமக்கு உணர்த்திவிடுவது.
    இன்றைய எத்தனை நவீனங்கள் நம்மை மீண்டும் பழமையே சிறப்பானது என்று திரும்பிப் பார்க்க வைத்துள்ளது!
    அதுவே முடிபு. அதனை சிறப்பாக செய்கிறது நவீனம். எவ்வளவுக்கு எவ்வளவு நவீனம் சிறக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு பழமை உயர்வை அடைகிறது. ஆனாலும், நவீனத்திற்கு ஒரு சலாம் போடவே வேண்டும்; கிணற்றுத்தவளைகளாக இருந்த பல நாடுகள், மனிதர்களை, இன்று உலகையே அறிந்து கொள்ள வைத்த பெருமை இந்த நவீனத்துவத்தையே சாரும். பல கசப்பான உண்மைகளை சிரமமின்றி எல்லோரையும் அடைய வைத்த செயல் பாராட்டப் படவேண்டிய ஒன்றே. இதுவே தீமையில் நமக்கு கிடைத்த மிகப் பெரிய நன்மை!!!
    நிற்க;
    இரண்டாவது பகிர்வு தொடர்பாக; ஐயா, இன்று எது எந்த நிலையை அடைகிறது என்பதை காலம், இடம், சூழ்நிலை, அதைச்சார்ந்தவர்கள் என்பவையே முடிவு செய்கின்றன என்பதையே இந்த படங்களும், கதைகளும்
    சொல்கின்றன. மூலை, முடுக்கெல்லாம் இதை விட அதிக கொடுமைகள் நிகழ்ந்திருக்க, எது எந்த இடத்தை
    அடைய வேண்டும் என்பதை உலக அரசியல் நிர்ணயிக்கிறது.
    தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ச்சியடைந்த பின்னரும் நாமும் இவற்றை மட்டுமே ஏற்றுக் கொண்டு, பகிர்ந்து கொண்டிருப்பது என்பது எமது இன்னமும் பகுத்தறிய முடியாத தன்மைக்கு எடுத்துக் காட்டோ?
    ஒரு உதாரணப் படம்:
    Vulture Stalking a Child

    kevin-carter-vulture

    In March 1993, photographer Kevin Carter made a trip to southern Sudan, where he took now iconic photo of a vulture preying upon an emaciated Sudanese toddler near the village of Ayod. Carter said he waited about 20 minutes, hoping that the vulture would spread its wings. It didn’t. Carter snapped the haunting photograph and chased the vulture away. (The parents of the girl were busy taking food from the same UN plane Carter took to Ayod).

    The photograph was sold to The New York Times where it appeared for the first time on March 26, 1993 as ‘metaphor for Africa’s despair’. Practically overnight hundreds of people contacted the newspaper to ask whether the child had survived, leading the newspaper to run an unusual special editor’s note saying the girl had enough strength to walk away from the vulture, but that her ultimate fate was unknown. Journalists in the Sudan were told not to touch the famine victims, because of the risk of transmitting disease, but Carter came under criticism for not helping the girl. “The man adjusting his lens to take just the right frame of her suffering might just as well be a predator, another vulture on the scene,” read one editorial.

    Carter eventually won the Pulitzer Prize for this photo, but he couldn’t enjoy it. “I’m really, really sorry I didn’t pick the child up,” he confided in a friend. Consumed with the violence he’d witnessed, and haunted by the questions as to the little girl’s fate, he committed suicide three months later.
    https://iconicphotos.wordpress.com/2009/08/12/vulture-stalking-a-child/

    ReplyDelete
  2. இரண்டு தகவல்களுமே அருமை. என்ன சிறிது நீளமாகப் போய்விட்டன.பரவாயில்லை. விருப்பமுள்ளவர்கள் விடுமுறையில் மெதுவாகப் படித்துக் கொள்ளட்டும்.

    ReplyDelete
  3. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    உலகில் அனுதினமும் எவ்வளவோ அற்புதங்களும்,அசகாய சூரத்தனங்களும் நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில் - இயற்கையின் தத்துவமும் தனது வேலையை மிக நேர்த்தியாக எந்த சத்தமோ ஆரவாரமோயின்றி அமைதியாகச் செய்துகொண்டுள்ளது!!!
    எந்த ஒரு வினை(செயலுக்கும்)க்கும் எதிர்வினை உண்டு,நடக்கும் என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளது!!! நவீன விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி, மனித குலத்தை திகைக்க வைத்தாலும் - நாளைய மனிதன் குளோனிங் முறையில் டயனோசரை உருவாக்கி உலவ விட்டால் என்ன ஆகும்??? ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றதே - ஒரு பக்கம் விஞ்ஞானத்தின் வளர்ச்சியும், மறுபக்கம் மனித குலத்தின் வீழ்ச்சியும்!!!
    இயற்கையின் சமன்பாடான என்கிற (E=MC2)விதி மாறாது,மாற்றமுடியாதது அல்லவா?
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  4. அப்படியானால் நான் இனி தேவையில்லை...
    அப்போ நான் கிளம்பறேன்

    ReplyDelete
  5. குரு வந்தனம்.
    மனமுவந்து புதிய செய்தியினை வகுப்பறையில் பகிரந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியினை வாத்தியாருக்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
    திகைக்க வைக்கும் புகைப்படங்களும், அத்துடள் உள்ள செய்திகளும் மனதை அசர வைத்து விட்டது!Created almost different feelings according to the news in a few seconds! Really great!

    ReplyDelete
  6. நல்ல செய்திகளை அறியத் தந்தீர்கள்...
    திகைக்க வைக்கும் புகைப்படங்களும் அது பற்றிய கருத்துக்களும் அருமை.

    ReplyDelete
  7. எனது பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கிலோ, குத்திக்காட்டும் நோக்கிலோ
    அமைந்திருந்தால் மன்னிக்கவும். அப்படி நினைத்து எழுதவில்லை.

    ஆனால், பல சந்தர்ப்பங்களிலும் பல விடயங்களையும் பார்த்தும், படித்தும், தெரிந்தும் கூட
    நம்மில் பலர் (நானும் கூட சில சந்தர்ப்பங்களில் என்னையே நொந்து கொள்வதுண்டு இந்தக்
    குணத்திற்காக), பார்த்த உடன் ஒரு செய்தி ஏற்படுத்தும் உணர்வில் உந்தப்பட்டு அதை அப்படியே
    ஏற்றுக் கொண்டு விடுவது. அவசரம், அல்லது நேரக்குறைவு அல்லது வேறு வேலையில் சிந்தனை இப்படியான பல விடயங்களாலும், சுய பகுத்தறிவுக்கண்ணை விடுத்து, எழுந்தமானத்திற்கு முடிவையோ, கருத்துகளையோ வெளியிட்டு விடுவது. ஆனால், உண்மையோ முற்றிலும் வேறாக,கசப்பானதாக அமைந்து விடும். அந்த விசனம் எனது சிந்தனையில் இருந்ததால் தான் இந்த பதிவு எனது கோவத்தை சிறிது கிளறி விட்டது.

    நானும் கூட எனது மேற்பதிவில் இப்படி எழுதும் போது, அது அதனை பகிர நினைத்தவர்களையும், வாத்தியாரையும் புண்படுத்தலாம் என்பதை, சிறிது நேரம் எடுத்து பதிந்திருந்தால், கவனத்தில் எடுத்து அதைத் தவிர்க்கும் முகமாக கருத்தை எழுதியிருக்கலாம். என்னிலும் தவறு உள்ளது.

    பெரியோர் மன்னிக்கவும்.

    ReplyDelete
  8. /////Blogger Mrs Anpalagan N said...
    ஐயா,
    இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மை, தீமை இரண்டுமே ஏராளம். எதுவும் மனித மூளைக்கு ஈடாகாது! அதுதான் இயற்கையின் அழுத்தமான முத்திரை. அதை யாரும், ஒருபோதும் விஞ்சிவிட முடியாது என்பதை மட்டுமே எந்த ஒரு நவீன தொழில்நுட்பமும் இறுதியில் (இறுதியில் !) நமக்கு உணர்த்திவிடுவது.
    இன்றைய எத்தனை நவீனங்கள் நம்மை மீண்டும் பழமையே சிறப்பானது என்று திரும்பிப் பார்க்க வைத்துள்ளது!
    அதுவே முடிபு. அதனை சிறப்பாக செய்கிறது நவீனம். எவ்வளவுக்கு எவ்வளவு நவீனம் சிறக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு பழமை உயர்வை அடைகிறது. ஆனாலும், நவீனத்திற்கு ஒரு சலாம் போடவே வேண்டும்; கிணற்றுத்தவளைகளாக இருந்த பல நாடுகள், மனிதர்களை, இன்று உலகையே அறிந்து கொள்ள வைத்த பெருமை இந்த நவீனத்துவத்தையே சாரும். பல கசப்பான உண்மைகளை சிரமமின்றி எல்லோரையும் அடைய வைத்த செயல் பாராட்டப் படவேண்டிய ஒன்றே. இதுவே தீமையில் நமக்கு கிடைத்த மிகப் பெரிய நன்மை!!!
    நிற்க;
    இரண்டாவது பகிர்வு தொடர்பாக; ஐயா, இன்று எது எந்த நிலையை அடைகிறது என்பதை காலம், இடம், சூழ்நிலை, அதைச்சார்ந்தவர்கள் என்பவையே முடிவு செய்கின்றன என்பதையே இந்த படங்களும், கதைகளும்
    சொல்கின்றன. மூலை, முடுக்கெல்லாம் இதை விட அதிக கொடுமைகள் நிகழ்ந்திருக்க, எது எந்த இடத்தை
    அடைய வேண்டும் என்பதை உலக அரசியல் நிர்ணயிக்கிறது.
    தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ச்சியடைந்த பின்னரும் நாமும் இவற்றை மட்டுமே ஏற்றுக் கொண்டு, பகிர்ந்து கொண்டிருப்பது என்பது எமது இன்னமும் பகுத்தறிய முடியாத தன்மைக்கு எடுத்துக் காட்டோ?
    ஒரு உதாரணப் படம்:
    Vulture Stalking a Child
    kevin-carter-vulture
    In March 1993, photographer Kevin Carter made a trip to southern Sudan, where he took now iconic photo of a vulture preying upon an emaciated Sudanese toddler near the village of Ayod. Carter said he waited about 20 minutes, hoping that the vulture would spread its wings. It didn’t. Carter snapped the haunting photograph and chased the vulture away. (The parents of the girl were busy taking food from the same UN plane Carter took to Ayod).
    The photograph was sold to The New York Times where it appeared for the first time on March 26, 1993 as ‘metaphor for Africa’s despair’. Practically overnight hundreds of people contacted the newspaper to ask whether the child had survived, leading the newspaper to run an unusual special editor’s note saying the girl had enough strength to walk away from the vulture, but that her ultimate fate was unknown. Journalists in the Sudan were told not to touch the famine victims, because of the risk of transmitting disease, but Carter came under criticism for not helping the girl. “The man adjusting his lens to take just the right frame of her suffering might just as well be a predator, another vulture on the scene,” read one editorial.
    Carter eventually won the Pulitzer Prize for this photo, but he couldn’t enjoy it. “I’m really, really sorry I didn’t pick the child up,” he confided in a friend. Consumed with the violence he’d witnessed, and haunted by the questions as to the little girl’s fate, he committed suicide three months later.
    https://iconicphotos.wordpress.com/2009/08/12/vulture-stalking-a-child///////

    உங்களுடைய கருத்துப் பகிர்விற்கும் நீண்ட பின்னூட்டட்த்த்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  9. ////Blogger kmr.krishnan said...
    இரண்டு தகவல்களுமே அருமை. என்ன சிறிது நீளமாகப் போய்விட்டன.பரவாயில்லை. விருப்பமுள்ளவர்கள் விடுமுறையில் மெதுவாகப் படித்துக் கொள்ளட்டும்.////

    ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. //////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    உலகில் அனுதினமும் எவ்வளவோ அற்புதங்களும்,அசகாய சூரத்தனங்களும் நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில் - இயற்கையின் தத்துவமும் தனது வேலையை மிக நேர்த்தியாக எந்த சத்தமோ ஆரவாரமோயின்றி அமைதியாகச் செய்துகொண்டுள்ளது!!!
    எந்த ஒரு வினை(செயலுக்கும்)க்கும் எதிர்வினை உண்டு,நடக்கும் என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளது!!! நவீன விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி, மனித குலத்தை திகைக்க வைத்தாலும் - நாளைய மனிதன் குளோனிங் முறையில் டயனோசரை உருவாக்கி உலவ விட்டால் என்ன ஆகும்??? ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றதே - ஒரு பக்கம் விஞ்ஞானத்தின் வளர்ச்சியும், மறுபக்கம் மனித குலத்தின் வீழ்ச்சியும்!!!
    இயற்கையின் சமன்பாடான என்கிற (E=MC2)விதி மாறாது,மாற்றமுடியாதது அல்லவா?
    அன்புடன்,
    -பொன்னுசாமி./////

    வளர்ச்சியை விட வீழ்ச்சிதான் மனதை அரிக்கிறது பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  11. ////Blogger வேப்பிலை said...
    அப்படியானால் நான் இனி தேவையில்லை...
    அப்போ நான் கிளம்பறேன்/////

    என்ன ஆச்சு உங்களுக்கு? சொல்லிவிட்டுக் கிளம்புங்கள் வேப்பிலையாரே!

    ReplyDelete
  12. /////Blogger வரதராஜன் said...
    குரு வந்தனம்.
    மனமுவந்து புதிய செய்தியினை வகுப்பறையில் பகிரந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியினை வாத்தியாருக்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
    திகைக்க வைக்கும் புகைப்படங்களும், அத்துடள் உள்ள செய்திகளும் மனதை அசர வைத்து விட்டது!Created almost different feelings according to the news in a few seconds! Really great!/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////Blogger பரிவை சே.குமார் said...
    நல்ல செய்திகளை அறியத் தந்தீர்கள்...
    திகைக்க வைக்கும் புகைப்படங்களும் அது பற்றிய கருத்துக்களும் அருமை.//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. ////////Blogger Mrs Anpalagan N said...
    எனது பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கிலோ, குத்திக்காட்டும் நோக்கிலோ
    அமைந்திருந்தால் மன்னிக்கவும். அப்படி நினைத்து எழுதவில்லை.
    ஆனால், பல சந்தர்ப்பங்களிலும் பல விடயங்களையும் பார்த்தும், படித்தும், தெரிந்தும் கூட
    நம்மில் பலர் (நானும் கூட சில சந்தர்ப்பங்களில் என்னையே நொந்து கொள்வதுண்டு இந்தக்
    குணத்திற்காக), பார்த்த உடன் ஒரு செய்தி ஏற்படுத்தும் உணர்வில் உந்தப்பட்டு அதை அப்படியே
    ஏற்றுக் கொண்டு விடுவது. அவசரம், அல்லது நேரக்குறைவு அல்லது வேறு வேலையில் சிந்தனை இப்படியான பல விடயங்களாலும், சுய பகுத்தறிவுக்கண்ணை விடுத்து, எழுந்தமானத்திற்கு முடிவையோ, கருத்துகளையோ வெளியிட்டு விடுவது. ஆனால், உண்மையோ முற்றிலும் வேறாக,கசப்பானதாக அமைந்து விடும். அந்த விசனம் எனது சிந்தனையில் இருந்ததால் தான் இந்த பதிவு எனது கோவத்தை சிறிது கிளறி விட்டது.
    நானும் கூட எனது மேற்பதிவில் இப்படி எழுதும் போது, அது அதனை பகிர நினைத்தவர்களையும், வாத்தியாரையும் புண்படுத்தலாம் என்பதை, சிறிது நேரம் எடுத்து பதிந்திருந்தால், கவனத்தில் எடுத்து அதைத் தவிர்க்கும் முகமாக கருத்தை எழுதியிருக்கலாம். என்னிலும் தவறு உள்ளது.
    பெரியோர் மன்னிக்கவும்.//////

    எதற்காக இந்தத் தன்னிலை விளக்கம்? புரியவில்லை சகோதரி!

    ReplyDelete
  15. முறையாக எழுதவில்லையோ என்ற ஓர் உணர்வு...
    நம் கண்ணுக்கு சாதாரணமாக பட்டது, வேறு பொருள் படுவதாகவும்
    அமைந்திருக்கலாம் என்ற குற்ற உணர்ச்சி. அவ்வளவே.
    மன்னிப்பு கேட்டு விடுவதில் தவறில்லை என்பதால்...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com