மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.12.15

முன்னேற்றத்திற்கு எது முக்கியம் - அதிர்ஷ்டமா - உழைப்பா?

முன்னேற்றத்திற்கு எது முக்கியம் - அதிர்ஷ்டமா - உழைப்பா?

அதிர்ஷ்டத்தை காட்டிலும் உழைப்பே முன்னேற்றமடைய செய்யும்.!

அன்று சலூன் கடை ஒன்றின் உரிமையாளர்.ஓனர், இன்று 209 சலூன் கார்களின் உரிமையாளர்!

பார்பர் டு பில்லினியர்’ - இது என்ன அடுத்த ரஜினி படத்தின் ஒரு வரிக் கதையா? இது கதையல்ல... நிஜம். ஆம்! பெங்களூரைச் சேர்ந்த ரமேஷ் பாபு, சிகை அலங்காரக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி, 42-வது வயதில், உலகின் விலை உயர்ந்த கார்களில் ஒன்றான ரோல்ஸ்ராய்ஸ் காரின் உரிமையாளர் ஆனவர். பெங்களூருவில் இன்னர் ஃபேசஸ் ஹேர் சலூன் மற்றும் ரமேஷ் டூர்ஸ் & டிராவல்ஸ் ஆகிய  நிறுவனங்களை நடத்திவருகிறார்.

என்ன சொல்கிறார் அவர்? தொடர்ந்து படியுங்கள்:

"எனக்கு ஏழு வயது இருக்கும்போது, என் அப்பா இறந்துவிட்டார். அவர் நடத்திவந்த சலூனை என் சித்தப்பா நடத்த ஆரம்பித்தார். அதற்காக தினமும் எங்களுக்கு ஐந்து ரூபாய் கொடுத்துவந்தார். வீட்டில் நான், தம்பி, தங்கை, அம்மா, பாட்டி ஆகிய ஐந்து பேர். அம்மா வீட்டு வேலைக்குப் போக ஆரம்பித்தார். படிப்பு, சாப்பாடு என தேவைகள் கழுத்தை நெறிக்கவே, என்னுடைய 12 வயதில், பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர, நானும் சின்னச் சின்ன வேலைகள் செய்ய ஆரம்பித்தேன். 10-ம் வகுப்புக்கு மேல் தொடர்ந்து முழு நேரமாகப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. அதனால், படிப்பை பகுதி நேரம் ஆக்கிக்கொண்டு, முழு நேரமாக சலூனை எடுத்து நடத்த ஆரம்பித்தேன். ப்ளஸ் டூ முடித்த பிறகு, பகுதி நேரமாக டிப்ளமோ சேர்ந்தேன். ஆனால், வேலைப் பளு காரணமாக அதைப் பாதியிலேயே கைவிட நேர்ந்தது.

அளவான வருமானம் தரும் தொழிலாகத்தான் சலூன் இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, எந்த இளைஞனுக்கும் ஏற்படும் கார் ஆசை எனக்கும் வந்தது. என் தாத்தா கடன் மூலம் ஒரு மாருதி ஆம்னி வாங்கிக் கொடுத்தார். கொஞ்ச நாட்களிலேயே காருக்கான தவணை செலுத்த முடியாமல் திணறினேன். அப்போது, என் அம்மா வீட்டு வேலை செய்துகொண்டிருந்த வீட்டு முதலாளி நந்தினி அக்கா, காரை வாடகைக்கு விடலாம் என யோசனை சொல்லி, அவர் வேலை செய்த நிறுவனத்திலேயே கான்ட்ராக்ட்டும் வாங்கிக்கொடுத்தார்.

அந்த நிறுவனம் வளர வளர, நானும் வளர்ந்தேன். 1994-ல் ஒரு காருடன் இந்தத் தொழிலில் நுழைந்தேன். 1996-ல் எனக்குத் திருமணம் ஆனபோது, ஆறு கார்கள் ஆகியிருந்தன. இப்போது நான் 209 கார்களின் உரிமையாளன்.

மற்ற நிறுவனங்கள்போல நாமும் காரை வாடகைக்கு விடுகிறோம்; ஏதாவது வித்தியாசமாகச் செய்யலாமே என யோசித்து, யாரும் வாடகைக்குவிடாத கார்களாக விட நினைத்தேன். 2004-ல் புதிய பென்ஸ் காரை வாங்கி வாடகைக்கு விட்டேன். அதுவரை இங்கு, புதிய பென்ஸ் காரை யாரும் வாடகைக்கு விட்டது இல்லை. நல்ல வரவேற்பு கிடைக்கவே, 2009-ல் பிஎம்டபிள்யூ, ஆடி கார்களையும்  வாங்கினேன்.

ரோல்ஸ்ராய்ஸ் காரை வாடகைக்கு விடலாம் என்கிற எண்ணம்2011-ல் ஏற்பட்டது. நான் ரோல்ஸ்ராய்ஸ் வாங்கும்போது, பெங்களூருவில் ஐந்து பேரிடம் மட்டுமே அந்த கார் இருந்தது. என் வளர்ச்சி வெறும் அதிர்ஷ்டம் என நான் நம்பவில்லை. கடின உழைப்பு இல்லை என்றால், எந்த அதிர்ஷ்டம் அடித்தாலும் ஒரு உபயோகமும் இல்லை” என்று சொல்லும் ரமேஷ்பாபு, இன்னும் சலூன் கடையையும் நடத்திக்கொண்டிருக்கிறார்.
நம்பிக்கை மனிதர்!

தகவல்: நன்றி:  விகடன்.காம்
-----------------------------------------------
மேலதிகத் தகவல்:
Determination, hard work and some help turned a hairstylist into an entrepreneur

   By  P C Vinoj Kumar
   Bangalore
07 Dec 2015
Posted 09-Mar-2013
Vol 4 Issue 10
He could well be the richest barber in the country. But G Ramesh Babu charges only Rs.75 for a haircut. He has his salon at the famous Bowring Institute on St. Mark’s Road in Bangalore, one of the oldest clubs in the city.

The 42-year-old hairstylist attends to around eight customers a day, working in two shifts of 2-3 hours each, morning and evening. But what he does in between the two shifts is the stuff fairy tales are made of.
Ramesh Babu owns a fleet of 68 luxury cars
The man who wields the scissors at Bowring sits at a different office during rest of the day as CEO of a large car rental company that owns a fleet of luxury cars, including a dazzling Rs.3.3 crore Rolls Royce, and a range of Mercs, BMWs, Volkswagens, and Innovas.

His company, Ramesh Tours and Travels Private Limited, owns a total of 127 cars and has on its rolls around 120 employees. Most of them are drivers who draw a monthly pay of not less than Rs.14000, with additional overtime incentives.

“We are one of the top companies in the country in this field,” says Ramesh, who lost his father when he was just 7 years old, and later braved poverty and hunger to reach this position.

His rise to success is marked by hard work, a burning desire to succeed, and the favour shown by a few good-hearted men and women.

(Learn more about the success mantras of Champions. Sarath Kumar, top international motorcycle racer, and the first Indian to secure a podium finish at an international motorsports event, was a child laborer once. To Read his story Click Here)

He says, “We had a hair salon at Brigadier Road. The shop was called ‘Modern Hair Dressers’ and it was started in 1928 by my grandfather. My father was running the shop till his death. I was 7 then and I had two other younger siblings.

“The responsibility of bringing us up fell on my mother, who started working as a housemaid to support the family. For many years, we survived on one meal a day. I became so used to it that even today I don’t have my breakfast.”

In spite of the situation at home, Ramesh studied well and was among the top three rankers in class. He was a sportsman too. He played football in school and represented Karnataka in the junior nationals in 1500 metres athletic event.

At 13, he took up a part-time job as a newspaper delivery boy and earned Rs.60 per month. His mother took up small tailoring jobs and made some extra money. But that hardly changed the situation for the family.

He recalls an incident that happened when he was in class five. At that time, the family’s hair salon was being run by his uncle – father’s brother – who used to pay them about Rs.5 daily as their share of the income.
Bollywood actors and top industrialists travel in his cars when they are in Bangalore
“I was in class 5 and we were instructed to use fountain pens for the first time at school. Until then we were using pencils for writing. I went to our shop and told the person working there - an employee who had been appointed by my father – that I needed a pen.

He gave Rs.3.50 and I bought a Pilot pen with the money. In the evening, when I went to the shop my uncle was furious. He snatched the pen from me and said I don’t need such expensive pens and gave me a cheaper pen instead. That incident fuelled my ambition to succeed in life,” says Ramesh, who has the fortune of putting his own children in top schools.

He has two daughters and a son. The eldest daughter is studying in class ten at a well-known residential school in Kothagiri and he spends around Rs.1.5 lakh on her education per annum.

An important decision he took early in life was to learn the barbering skills of his father. He took charge of the family’s hair salon in 1990 and renamed it ‘Inner Space’. He became a hit with youngsters who started making a beeline to his shop and there were days when he had worked up to 3 am to cater to waiting customers.

Though he was not able to complete his PUC (Pre University Course), he managed to obtain a diploma in electronics later.

For couple of years, he worked as a marketing executive for a private company. But the turning point in his life came after he purchased a Maruti Omni in 1995 on a  loan. Based on the advice of a well-wisher, he decided to rent out his car.

His first client was Intel, which had a small office in Bangalore then. His business grew as Intel expanded its operations.

“Intel had just four employees when we started working with them. But they grew fast. We looked after their transport needs till 2000 by which time they had around 250 employees and 25 of our cars were on duty for them,” he recalls.
Ramesh always looks back on the path he has travelled
Meanwhile, Ramesh’s client list continued to grow. He entered the luxury car segment in 2004 when he bought his first Mercedes Benz. He now owns a fleet of 68 luxury cars. Bollywood actors, celebrities, and top industrialists travel in his cars when they are in Bangalore.

In 1997, he had opened a hair salon at Bowring Institute. Though he has closed the other shop due to lack of parking space and other issues that cropped up with Bangalore’s exponential growth in the last couple of decades, Ramesh has no such plans for the one at Bowring.

Ask him why he needs to continue cutting hair, and he shoots back, “Why not? How can I forget the job that has made me what I am?”

Nor has he forgotten those who helped him in his hard days. He makes special mention of two people: Ms. Nandini Ashok and Mr. Philip Louise.

Take a bow, Nandini and Philip. You have helped a worthy man! 

=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20 comments:

  1. Ulaipillatha athirstam - may not sustain but if he is bright he can sustain the luck. You may hit jackpot,unless you know what to do you will be back to streets in no time.

    Athirstam illatha ulaipu - never goes waste. Materialistic minds may say it failure. Idealistic says You get satisfaction and experience. Philosophical says Geetha. Reality says careful.

    Its same 337 ;) as you say.

    Destiny is stronger than anything. There is no right or wrong in hands of destiny.

    ReplyDelete
  2. Very nice real life story Sir.Inspiring. Hope giving.

    ReplyDelete
  3. ஐயா வணக்கம்
    உழைப்பே உயர்வு தரும்.
    கண்ணன்

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy morning... Motivating and Inspiring post...

    Have a great Tuesday.

    With best regards,
    Ravi-avn

    ReplyDelete
  5. உழைத்து உழைத்து
    ஒன்றும் இல்லாமல் போனவரும் உண்டு

    அதிர்ஷ்டத்தால் இப்படி
    அண்ணாந்து பார்க்கும்படி

    உயர்ந்தவரும்
    உண்டு

    அது சரி..
    அந்த சேவை வரியாக

    எவ்வளவு அரசுக்கு தருகிறீர்கள்
    என்பதை நம்பி தான் அரசும்

    நாங்களும் இருக்கிறோம்..
    நலமுடன் வாழ்க...

    ReplyDelete
  6. Ayyaa vanakkam!
    A ricksha puller works very hard through out the day, a clerk in the Gvtmt office works hard, an Industrialist works hard but they might stayed with little improvement after so long years.
    A man starting his life with small investment in a small paan shop, may become a millioner like Mr.Ramesh.
    It doesn't mean those formers were not intend to work hard.But the result was not fruitful,why?
    Hard work with luck only will give a best result! Am I right Guru?????
    Anpudan,
    -Ponnusamy

    ReplyDelete
  7. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .
    உழைப்பு...,கண்டிப்பாக முன்னேற்றத்திற்கு தேவை ...!!!""""அறிவுஜீவிதனமும்""" .....,எந்த வகையில் முதலீடு செய்தால் லாபம் ..முன்னேறலாம் ...என்ற பொருளாதாரம் சேர்ந்த அறிவு திறன் இவரிடம் ...ஜெயித்தார் !!!

    ReplyDelete
  8. //////Blogger selvaspk said...
    Ulaipillatha athirstam - may not sustain but if he is bright he can sustain the luck. You may hit jackpot,unless you know what to do you will be back to streets in no time.
    Athirstam illatha ulaipu - never goes waste. Materialistic minds may say it failure. Idealistic says You get satisfaction and experience. Philosophical says Geetha. Reality says careful.
    Its same 337 ;) as you say.
    Destiny is stronger than anything. There is no right or wrong in hands of destiny//////.

    உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ////Blogger kmr.krishnan said...
    Very nice real life story Sir.Inspiring. Hope giving./////

    உண்மைதான். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. /////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    உழைப்பே உயர்வு தரும்.
    கண்ணன்/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Motivating and Inspiring post...
    Have a great Tuesday.
    With best regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி அவனாசி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  12. /////Blogger வேப்பிலை said...
    உழைத்து உழைத்து
    ஒன்றும் இல்லாமல் போனவரும் உண்டு
    அதிர்ஷ்டத்தால் இப்படி
    அண்ணாந்து பார்க்கும்படி
    உயர்ந்தவரும்
    உண்டு
    அது சரி..
    அந்த சேவை வரியாக
    எவ்வளவு அரசுக்கு தருகிறீர்கள்
    என்பதை நம்பி தான் அரசும்
    நாங்களும் இருக்கிறோம்..
    நலமுடன் வாழ்க...//////

    அரசு இருப்பது சரிதான். நீங்கள் எதற்காக நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள் வேப்பிலையாரே!

    ReplyDelete
  13. ///Blogger ponnusamy gowda said...
    Ayyaa vanakkam!
    A ricksha puller works very hard through out the day, a clerk in the Gvtmt office works hard, an Industrialist works hard but they might stayed with little improvement after so long years.
    A man starting his life with small investment in a small paan shop, may become a millioner like Mr.Ramesh.
    It doesn't mean those formers were not intend to work hard.But the result was not fruitful,why?
    Hard work with luck only will give a best result! Am I right Guru?????
    Anpudan,
    -Ponnusamy////

    If you want to come up in life, you must have 4 things
    Education, ambition, hard work and luck
    But without luch the other 3 things will not work properly
    -----a famous proverb

    ReplyDelete
  14. ////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .
    உழைப்பு...,கண்டிப்பாக முன்னேற்றத்திற்கு தேவை ...!!!""""அறிவுஜீவிதனமும்""" .....,எந்த வகையில் முதலீடு செய்தால் லாபம் ..முன்னேறலாம் ...என்ற பொருளாதாரம் சேர்ந்த அறிவு திறன் இவரிடம் ...ஜெயித்தார் !!!////

    உழைப்பு + புத்திசாலித்தனம் + தெய்வ அருள் மூன்றும் கிடைத்தால்தான் ஜெயிக்க முடியும்!

    ReplyDelete
  15. ////Blogger Nagendra Bharathi said...
    அருமை////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. இவர் ஜாதகத்தில் விபரீத ராஜயோகம் கன்டிப்பாக இருக்கும் அய்யா.
    எல்லாம் விதி...
    விதியை மதியால் வெல்ல கூட ஜாதகத்தில் குடுப்பனை இருந்தால் தான் முடியும்.

    ReplyDelete
  17. /////Blogger vj said...
    இவர் ஜாதகத்தில் விபரீத ராஜயோகம் கன்டிப்பாக இருக்கும் அய்யா.
    எல்லாம் விதி...விதியை மதியால் வெல்ல கூட ஜாதகத்தில் குடுப்பனை இருந்தால் தான் முடியும்./////

    உண்மைதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. முயற்சி திருவினையாக்கும்.விடாமுயற்சியாலும் அதேநேரத்தில அவரது கிரகநிலை அவரிற்கு சார்பாக இருந்தபடியாலும் அவரை வெற்றி வரவேற்றது.
    பகிர்ந்தமைக்கு நன்றி, வாத்தியார் சார்.
    அன்புடன்
    ராஜம் ஆனந்த்

    ReplyDelete
  19. ////Blogger Rajam Anand said...
    முயற்சி திருவினையாக்கும்.விடாமுயற்சியாலும் அதேநேரத்தில அவரது கிரகநிலை அவரிற்கு சார்பாக இருந்தபடியாலும் அவரை வெற்றி வரவேற்றது.
    பகிர்ந்தமைக்கு நன்றி, வாத்தியார் சார்.
    அன்புடன்
    ராஜம் ஆனந்த்/////

    ஆமாம். நம் ஜாதகத்திலும் அதற்கு ஏற்ற அமைப்பு இல்லையென்றால் வெற்றி பெறுவது கடினம்தான். நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com