மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.12.15

கூட்டமாகத் தவறு செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்களா?"

கூட்டமாகத் தவறு செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்களா?"

இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கின்றன...
ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....
உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்..நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்..ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே என்றார்....உண்மை தான் என்றோம்.

இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது...

ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது....

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...

" Fault makers are majority, even they protected in most situations ".

இன்றை நிலை....
"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கபடுகிறான்...
தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"
-----------------------------
2
உறவு முறைகள் ....பற்றி ....மிகவும் சிந்திக்கவேண்டிய விஷயம்: 

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன்,பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன், இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்

காரணம், ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!
அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?

பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை! திருமணத்தின் போது அரசாணைக்கால் நட எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை, குழந்தைக்கு மோட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்? கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள்,

இனி யார் போவார்?

ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்கப் போகிறார்கள்
ஒவ்வொரு ஆணும் தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்படப் போகிறார்கள்
அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,
அந்த ஒரு குழந்தையும் வெளியூருக்கோ இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும் இதே நிலைதான் !

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!

சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்  எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான் வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்! கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு
முதலில் வந்து நிற்பார்கள்!

ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!

பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!
ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!

கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,
வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு
ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?
=======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. அய்யா வணக்கம்,
    "நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கபடுகிறான்...
    தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"

    பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!
    ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!

    என்னே வரிகள்! காலைப் பனியால் உடல் சிலிர்க்கவில்லை.
    வார்த்தைகளால் சிலிர்த்துவிட்டேன்.

    ReplyDelete
  2. ////ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது.... இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படிதான் இருக்கிறது.
    "நல்லதை தனியாக செய்பவன் தண்டிக்கபடுகிறான்...
    தவறை கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"///////

    குருவிற்கு வணக்கம்.
    இந்த வரிகள் திருக்குறள் போல. எந்த சதுர் யுகத்திற்கும் பொருந்தும்.
    ஆனால் எவரும் கடவுள் போல நடக்கவேண்டும். அவரிடம் நீதி மயிரிழை கூட மாறாதது.
    ரயில் வராத இடத்தில், யாருக்கும் தொந்தரவு தராமல், தவறே செய்யாத குழந்தை
    கண்டிப்பாக அவரிடம் தண்டனை பெறாது.
    தங்களின் மாணவர்,
    சந்தானம், சேலம்.

    ReplyDelete
  3. ஆமாம்....
    அந்த நல்லதை தனியாக செய்ய முடியாது

    அதனால் தான்
    அம்மாவும் தண்டிக்க பட்டார்கள்

    என்பதை தமிழகம்
    எப்போதும் மறக்காது....

    ............

    பகையான உறவுகளை விட
    பண்புள்ள நண்பர்களுடன்

    உறவுகள் அற்ற அனாதையாக
    உடலை விட்டு உயிர் போவது தவறில்லை...

    ReplyDelete
  4. தண்டவாளக் கதை அருமை. இங்கு பாதிக்கப்பட்டது அந்த ஒரு குழந்தை மட்டுமே
    அல்ல, இந்த விளைவைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஏனைய நற்குழந்தைகளும் கூட
    அந்த 10 குழந்தைகளை போலவே இருந்துவிட முடிவெடுத்து விடும். இது தான்
    இன்றைய உலகின் யதார்த்தம். இப்படித்தான் நல்லவனை நல்லவனாக இருக்க இன்றைய
    உலகம் விடுவதில்லை. பலரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் குற்றவாளிகளாகி உள்ளும்
    புறமும் புழுங்கி கொண்டிருக்கின்றனர்.

    அதனால் தான் தனித்தவனின் கூக்குரல் பெரும் சந்தடியில்
    யார் காதிலும் விழுவதில்லை. குறைகுடங்கள் கூக்குரலிட்டே வாழ்ந்து விடுகின்றன.
    நிறைகுடம் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.

    இரண்டாவது கூற்றுக்கு நம் கண்முன்னே உதாரணமாக சீனா உள்ளதே.
    உலக நாடுகளின் கூக்குரலுக்கு பின்விளைவை பற்றி சிந்திக்காது சீனா அன்று எடுத்த
    முடிவு இன்று சீனாவை மட்டுமே பாதித்துள்ளது. இன்று அது தன் முடிவை மாற்றினாலும்,
    அது தற்காலிக பிரச்னையை தீர்த்து விடாது. அடுத்த சந்ததிப் பிரச்சனையையாவது தீர்க்கட்டும்.

    நிற்க,
    இன்றைய இந்த அவலத்திற்கு இன்றைய தம்பதியர் மட்டுமே காரணம் அல்லர். ஒட்டு மொத்த சமூகமும், அதன் மனநிலையுமே காரணம். அரசுகள் கூட இன்றைய குடும்பங்களின் இந்த நிலைக்கு காரணம்.
    தண்டவாளக் கதையே இதற்கும் பொருந்தும். 'ஊருடன் ஒத்தோடு' என்பதற்கிணங்க எல்லோரும் செய்வதையே குழப்பம் மனதில் இருந்தாலும், ஏனையோரும் பின்பற்றி விட்டுப்போக நினைப்பது.

    வேலைக்குப் போகும் மருமகளையே கணவரும், புகுந்த வீடும் விரும்புகிறது. மகள் வேலைக்குப் போனால், எந்த பிரச்சனையையும் தானே சமாளித்து விடுவாள் என்று பெற்றவர் மனதும் நினைக்கிறது. இது இன்றைய பிரச்சனைக்கான தற்காலிக தீர்வை தேடும் விதமே தவிர, அதனால் உருவாகும் ஆயிரம் பிரச்சனைகளுக்கும் தீர்வை தந்து விடாது. இன்றைய இந்த அவலத்திற்கு நாம் மட்டுமல்ல, நம் பெற்றோரும் ஒரு காரணமே.
    அதன் பலனை நாம் மட்டுமல்ல, அவர்களும், எமது அடுத்த சந்ததியான பிள்ளைகளுமே அனுபவிக்க போகின்றனர், அனுபவித்தும் வருகின்றனர்.

    பட்ட பின்தானே புத்தி!

    இன்றைய தேதியில் எங்கு பார்த்தாலும் பெற்றோரை காப்பகத்தில் விடும் பிள்ளைகளை பற்றியே பேச்சு.
    ஆனால் அதில் முழுச்சமூகத்தினதும் பங்கு உள்ளது என்பதை மட்டும் மறந்து விடுகின்றனர். பெற்ற பிள்ளைகளை தானே வளர்க்க முடியாமல் வேலைக்கு போகும் தாய்க்கு, தவிப்புடன் எல்லோரும் செய்கின்றனர்தானே என்று பச்சிளம் குழந்தைகளை காப்பகத்தில் விட்டு போகும் தாய்க்கு, வயதான மாமா, மாமியோ, பெற்றோரோ பெரிதாகப் படுவதில்லை என்பதில் வியப்பேதுமில்லை.
    என்ன காரணத்திற்காக பெண்கள் வேலைக்கு போக நினைத்தார்களோ, இன்று அதை தவிர எல்லாவற்றையும் அந்த வேலையை வைத்து செய்து கொண்டிருக்கிறார்கள். ஆபத்து காலத்தில் பிள்ளைகளை வளர்த்து முடிக்க என ஆரம்பித்த வேலை, பின்னர் பிள்ளைகளை வளர்ப்பதை தவிர எல்லாவற்றுக்கும் மட்டும் பயன்பட்டுப் போனது.
    எனது பிள்ளையை என்னால் வளர்த்து ஆளாக்கி அது என் வளர்ப்பு என்று சொல்ல முடியாமல் போகும்போது, எனக்கேன் பிள்ளை? யார் கவனிப்பிலோ வளரும் பிள்ளைக்கும், அநாதை விடுதியில் வளரும் பிள்ளைக்கும் என்ன வித்தியாசம் அதிகம் இருந்து விடப்போகிறது? அந்தப் பிள்ளைக்கோ, அல்லது நமக்கோ தாய் பிள்ளை உறவோ, பாசமோ வந்து விடுமா? நாம் பிள்ளை பெற்று வளர்க்க நினைக்கிறோமா அல்லது ஒரு இயந்திரத்தை உருவாக்குகிறோமா? அந்தப் பிள்ளைக்கு எந்த விதமான உணர்ச்சிகள் இருந்து விடப் போகிறது?

    தூர நோக்கு என்பது நமக்கு இல்லாமல் போய், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று அன்ன நடை நடக்க வெளிக்கிட்டு தன்னடையும் கெட்டது காகம் ஆகிப் போனாலும் பரவாயில்லை, இங்கே நடை கெட்டது நம்மூர் மயில்களுக்கெல்லோ!!!

    ReplyDelete
  5. வணக்கம் குரு,

    நல்லதோர் சிந்திக்க வேண்டிய கட்டுரை. தந்தமைக்கு நன்றி. செல்வம்

    ReplyDelete
  6. Very nice experience based articles. Thank you very much.

    ReplyDelete
  7. /////Blogger Sakthi- 2014 said...
    அய்யா வணக்கம்,
    "நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கபடுகிறான்...
    தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"
    பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!
    ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!
    என்னே வரிகள்! காலைப் பனியால் உடல் சிலிர்க்கவில்லை.
    வார்த்தைகளால் சிலிர்த்துவிட்டேன்./////

    உங்களின் உணர்வு பூர்வமான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. Blogger slmsanuma said...
    ////ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது.... இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படிதான் இருக்கிறது.
    "நல்லதை தனியாக செய்பவன் தண்டிக்கபடுகிறான்...
    தவறை கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"///////
    குருவிற்கு வணக்கம்.
    இந்த வரிகள் திருக்குறள் போல. எந்த சதுர் யுகத்திற்கும் பொருந்தும்.
    ஆனால் எவரும் கடவுள் போல நடக்கவேண்டும். அவரிடம் நீதி மயிரிழை கூட மாறாதது.
    ரயில் வராத இடத்தில், யாருக்கும் தொந்தரவு தராமல், தவறே செய்யாத குழந்தை
    கண்டிப்பாக அவரிடம் தண்டனை பெறாது.
    தங்களின் மாணவர்,
    சந்தானம், சேலம்./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சந்தானம்!

    ReplyDelete
  9. ////Blogger வேப்பிலை said...
    ஆமாம்....
    அந்த நல்லதை தனியாக செய்ய முடியாது
    அதனால் தான்
    அம்மாவும் தண்டிக்க பட்டார்கள்
    என்பதை தமிழகம்
    எப்போதும் மறக்காது................
    பகையான உறவுகளை விட
    பண்புள்ள நண்பர்களுடன்
    உறவுகள் அற்ற அனாதையாக
    உடலை விட்டு உயிர் போவது தவறில்லை...////

    உங்களின் கருத்தைச் சொன்னமைக்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  10. //////Blogger Mrs Anpalagan N said...
    தண்டவாளக் கதை அருமை. இங்கு பாதிக்கப்பட்டது அந்த ஒரு குழந்தை மட்டுமே
    அல்ல, இந்த விளைவைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஏனைய நற்குழந்தைகளும் கூட
    அந்த 10 குழந்தைகளை போலவே இருந்துவிட முடிவெடுத்து விடும். இது தான்
    இன்றைய உலகின் யதார்த்தம். இப்படித்தான் நல்லவனை நல்லவனாக இருக்க இன்றைய
    உலகம் விடுவதில்லை. பலரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் குற்றவாளிகளாகி உள்ளும்
    புறமும் புழுங்கி கொண்டிருக்கின்றனர்.
    அதனால் தான் தனித்தவனின் கூக்குரல் பெரும் சந்தடியில்
    யார் காதிலும் விழுவதில்லை. குறைகுடங்கள் கூக்குரலிட்டே வாழ்ந்து விடுகின்றன.
    நிறைகுடம் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.

    இரண்டாவது கூற்றுக்கு நம் கண்முன்னே உதாரணமாக சீனா உள்ளதே.
    உலக நாடுகளின் கூக்குரலுக்கு பின்விளைவை பற்றி சிந்திக்காது சீனா அன்று எடுத்த
    முடிவு இன்று சீனாவை மட்டுமே பாதித்துள்ளது. இன்று அது தன் முடிவை மாற்றினாலும்,
    அது தற்காலிக பிரச்னையை தீர்த்து விடாது. அடுத்த சந்ததிப் பிரச்சனையையாவது தீர்க்கட்டும்.
    நிற்க,
    இன்றைய இந்த அவலத்திற்கு இன்றைய தம்பதியர் மட்டுமே காரணம் அல்லர். ஒட்டு மொத்த சமூகமும், அதன் மனநிலையுமே காரணம். அரசுகள் கூட இன்றைய குடும்பங்களின் இந்த நிலைக்கு காரணம்.
    தண்டவாளக் கதையே இதற்கும் பொருந்தும். 'ஊருடன் ஒத்தோடு' என்பதற்கிணங்க எல்லோரும் செய்வதையே குழப்பம் மனதில் இருந்தாலும், ஏனையோரும் பின்பற்றி விட்டுப்போக நினைப்பது.
    வேலைக்குப் போகும் மருமகளையே கணவரும், புகுந்த வீடும் விரும்புகிறது. மகள் வேலைக்குப் போனால், எந்த பிரச்சனையையும் தானே சமாளித்து விடுவாள் என்று பெற்றவர் மனதும் நினைக்கிறது. இது இன்றைய பிரச்சனைக்கான தற்காலிக தீர்வை தேடும் விதமே தவிர, அதனால் உருவாகும் ஆயிரம் பிரச்சனைகளுக்கும் தீர்வை தந்து விடாது. இன்றைய இந்த அவலத்திற்கு நாம் மட்டுமல்ல, நம் பெற்றோரும் ஒரு காரணமே.
    அதன் பலனை நாம் மட்டுமல்ல, அவர்களும், எமது அடுத்த சந்ததியான பிள்ளைகளுமே அனுபவிக்க போகின்றனர், அனுபவித்தும் வருகின்றனர்.
    பட்ட பின்தானே புத்தி!
    இன்றைய தேதியில் எங்கு பார்த்தாலும் பெற்றோரை காப்பகத்தில் விடும் பிள்ளைகளை பற்றியே பேச்சு.
    ஆனால் அதில் முழுச்சமூகத்தினதும் பங்கு உள்ளது என்பதை மட்டும் மறந்து விடுகின்றனர். பெற்ற பிள்ளைகளை தானே வளர்க்க முடியாமல் வேலைக்கு போகும் தாய்க்கு, தவிப்புடன் எல்லோரும் செய்கின்றனர்தானே என்று பச்சிளம் குழந்தைகளை காப்பகத்தில் விட்டு போகும் தாய்க்கு, வயதான மாமா, மாமியோ, பெற்றோரோ பெரிதாகப் படுவதில்லை என்பதில் வியப்பேதுமில்லை.
    என்ன காரணத்திற்காக பெண்கள் வேலைக்கு போக நினைத்தார்களோ, இன்று அதை தவிர எல்லாவற்றையும் அந்த வேலையை வைத்து செய்து கொண்டிருக்கிறார்கள். ஆபத்து காலத்தில் பிள்ளைகளை வளர்த்து முடிக்க என ஆரம்பித்த வேலை, பின்னர் பிள்ளைகளை வளர்ப்பதை தவிர எல்லாவற்றுக்கும் மட்டும் பயன்பட்டுப் போனது.
    எனது பிள்ளையை என்னால் வளர்த்து ஆளாக்கி அது என் வளர்ப்பு என்று சொல்ல முடியாமல் போகும்போது, எனக்கேன் பிள்ளை? யார் கவனிப்பிலோ வளரும் பிள்ளைக்கும், அநாதை விடுதியில் வளரும் பிள்ளைக்கும் என்ன வித்தியாசம் அதிகம் இருந்து விடப்போகிறது? அந்தப் பிள்ளைக்கோ, அல்லது நமக்கோ தாய் பிள்ளை உறவோ, பாசமோ வந்து விடுமா? நாம் பிள்ளை பெற்று வளர்க்க நினைக்கிறோமா அல்லது ஒரு இயந்திரத்தை உருவாக்குகிறோமா? அந்தப் பிள்ளைக்கு எந்த விதமான உணர்ச்சிகள் இருந்து விடப் போகிறது?
    தூர நோக்கு என்பது நமக்கு இல்லாமல் போய், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று அன்ன நடை நடக்க வெளிக்கிட்டு தன்னடையும் கெட்டது காகம் ஆகிப் போனாலும் பரவாயில்லை, இங்கே நடை கெட்டது நம்மூர் மயில்களுக்கெல்லோ!!!//////

    உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  11. /////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு,
    நல்லதோர் சிந்திக்க வேண்டிய கட்டுரை. தந்தமைக்கு நன்றி. செல்வம்//////

    நல்லது. நன்றி செல்வம்!

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    Very nice experience based articles. Thank you very much./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  13. அன்புள்ளம்கொண்ட அய்யா அவகளுக்கு வணக்கங்கள்!
    வகுப்பறையில் வாத்தியார் அய்யா மற்றும் சக மாணவ கண்மணிகள், நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு (2016) நல் வாழ்த்துக்கள்!! வாழ்க வளமுடன்!!! எங்கும் மங்களம் பொங்கட்டும்!!!.
    இன்றைய பதிவு மிக அருமை.”ஒரு குடும்பம் வாழ,ஒரு மனிதனை இழப்பதில் தவறில்லை. ஒரு தெரு வாழ,ஒரு குடும்பம் இழப்பதில் தவறில்லை. ஒரு கிராமம் வாழ,ஒரு தெருவை இழப்பதில் தவறில்லை” - நல்லவனோ,கெட்டவனோ அவனுடைய இழப்பு பலருக்கு நல்லதை விளைவிக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதே!!!
    அய்யா இது கலிகாலம்! பிறக்கும் குழந்தையே அளப்பறியா அறிவுடனும்,திறமைகளுடனும் பிறக்கின்றன - இதில் பல குழந்தைகள்??? - கட்டுப்படுத்த இயலுமா?
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  14. நேற்று அமெரிக்காவில் நடந்த சம்பவம் கேளுங்கள் ....
    டெக்சாஸ் மானிலத்தில் இருந்து ஒரு (இந்து-பிராமின் ) கல்யாண பத்திரிக்கை எனக்கு வந்தது.
    அமாவாசை அன்று கல்யாணம் வைத்துள்ளார்கள் .
    அவர்களை கூப்பிட்டு பேசினேன் .
    அதற்கு அவர்கள் " ஓ அப்படியா " என்று கூறிவிட்டார்கள் .
    உங்களுக்கு கல்யானம் எப்படி நடந்தது என்று கேட்டேன்.
    எங்கள் அப்பா அம்மா எங்களுக்கு மதுரையில் கல்யாணம் செய்துவைத்தார்கள் .
    என்ன செய்தார்கள் என்று எங்களுக்கு அப்பொழுது தெரியவில்லை.
    பிறகு நான் காரணங்களை கூறி பத்திரிகையை மாற்ற சொன்னேன்.

    நீங்கள் 2050 சென்றுவிட்டீர்கள் .
    சில விஷயங்களில் வேகமான மாற்றம் வேகமாக அழிவை சந்திக்கிறது .

    ReplyDelete
  15. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம்கொண்ட அய்யா அவகளுக்கு வணக்கங்கள்!
    வகுப்பறையில் வாத்தியார் அய்யா மற்றும் சக மாணவ கண்மணிகள், நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு (2016) நல் வாழ்த்துக்கள்!! வாழ்க வளமுடன்!!! எங்கும் மங்களம் பொங்கட்டும்!!!.
    இன்றைய பதிவு மிக அருமை.”ஒரு குடும்பம் வாழ,ஒரு மனிதனை இழப்பதில் தவறில்லை. ஒரு தெரு வாழ,ஒரு குடும்பம் இழப்பதில் தவறில்லை. ஒரு கிராமம் வாழ,ஒரு தெருவை இழப்பதில் தவறில்லை” - நல்லவனோ,கெட்டவனோ அவனுடைய இழப்பு பலருக்கு நல்லதை விளைவிக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதே!!!
    அய்யா இது கலிகாலம்! பிறக்கும் குழந்தையே அளப்பறியா அறிவுடனும்,திறமைகளுடனும் பிறக்கின்றன - இதில் பல குழந்தைகள்??? - கட்டுப்படுத்த இயலுமா?
    அன்புடன்,
    -பொன்னுசாமி./////

    உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  16. //////Blogger Chandrasekaran Suryanarayana said...
    நேற்று அமெரிக்காவில் நடந்த சம்பவம் கேளுங்கள் ....
    டெக்சாஸ் மானிலத்தில் இருந்து ஒரு (இந்து-பிராமின் ) கல்யாண பத்திரிக்கை எனக்கு வந்தது.
    அமாவாசை அன்று கல்யாணம் வைத்துள்ளார்கள் .
    அவர்களை கூப்பிட்டு பேசினேன் .
    அதற்கு அவர்கள் " ஓ அப்படியா " என்று கூறிவிட்டார்கள் .
    உங்களுக்கு கல்யாணம் எப்படி நடந்தது என்று கேட்டேன்.
    எங்கள் அப்பா அம்மா எங்களுக்கு மதுரையில் கல்யாணம் செய்துவைத்தார்கள் .
    என்ன செய்தார்கள் என்று எங்களுக்கு அப்பொழுது தெரியவில்லை.
    பிறகு நான் காரணங்களை கூறி பத்திரிகையை மாற்ற சொன்னேன்.
    நீங்கள் 2050 சென்றுவிட்டீர்கள் .
    சில விஷயங்களில் வேகமான மாற்றம் வேகமாக அழிவை சந்திக்கிறது ./////

    இந்த அவலங்களுக்கெல்லாம் மனிதர்களின் பணத் தேடலும், அதனால் ஏற்பட்டுள்ள நேரமின்மையும்தான் காரணம்! நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com