மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.12.15

எதை விதைக்கிறீர்களோ, அதைத்தான் அறுவடை செய்ய நேரிடும்!

எதை விதைக்கிறீர்களோ, அதைத்தான் அறுவடை செய்ய நேரிடும்!

ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன்
மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். இந்தக் கட்டுரையை முழுமையாகப்
படியுங்கள்! விபரம் தெரியும்!

அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும்
கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும்
அந்தஸ்தையும் வழங்கினான்.

மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.

""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள்.
"செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்குகள் ஏதாவது
இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்,'' என்று நினைத்தான் மன்னன்.அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்.
""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்குக் களப்பயிற்சி தரப் போகிறேன்.

உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.

உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும். அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம்.

அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்துவிடுவோம். அவன் அதை
உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்..

இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்.''

மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.
 காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும்
அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும்
காய் கனிகள்தான் உணவு. மூன்று அதிகாரிகளும் அரண்மனை
போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.

அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.
முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார். நாம் துன்பப்பட்டாலும்
இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது. சாக்குப்பையை நிரப்ப
அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது. ஆனால்,
உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார். சோதித்தாலும்
மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று
வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? அப்படியே செய்தார் அந்த மகானுபாவர். அவர் ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.

மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை. பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற
நினைப்பில் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் போட்டு பையை
நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார். ஒரு நாழிகைப் பொழுதில்

வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள்
முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.

""இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள். அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள்.

சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும். அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம். அவர்கள்
சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.

''மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்.

இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார். ஆனால், அவர்
உடல்நலம் கெட்டுவிட்டது. மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான
காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்.

மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவத்தை
நச்சென்று விளக்குகிறது

மகாபாரதத்தில் வரும் ஒரு ஸ்லோகம்.. அதன் உட்பொருள் இதுதான்.

ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன. தன் தாயைத் தேடி வரும்
ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில்
கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும்.''
வினையை விதைத்துவிட்டு அறுவடைக்காலத்தில் சாமர்த்தியமாக
வெளியூர் சென்று விட்டாலும் வினையிடமிருந்து தப்ப முடியாது.

வினையை விதைத்தால் வினையை அறுவடை செய்தேயாக வேண்டும். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தேயாக வேண்டும்.நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு பார்ப்பதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான். ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான்.

நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே
கண்காணிப்பதில்லை.. ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

ஒருவர் தன் நண்பரோடு கூட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
நண்பரை ஏமாற்றிக் கோடிக்கணக்கில் பணம் சுருட்டினார்.
கூட்டு வியாபாரம் நொடித்துப் போனது. தான் சுருட்டிய பணத்தை வைத்துக்கொண்டு புது வியாபாரம் தொடங்கினார். இந்த முறை தன் மனைவியை மட்டுமே கூட்டாளியாகச் சேர்த்துக் கொண்டார். வியாபாரம் தழைத்தது.

"அநியாயம் செய்தவன் அமோகமாக இருக்கிறானே' என்று அனைவரும் அங்கலாய்த்தார்கள்.வருடங்கள் உருண்டோடின.

அவரது மனைவிக்கும் வேறு ஒரு தொழிலதிபருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இவர் எப்படித் தன் கூட்டாளியின் பணத்தைக் கொள்ளை அடித்தாரோ, அதே பாணியில் இவரது மனைவி இவரது பணத்தைக் கொள்ளையடித்தார்.

இன்று விவாகரத்தாகி, செல்வத்தை எல்லாம் இழந்து ஏறக்குறையத் தெருவில் நிற்கிறார்

.நீங்கள் செய்த வினை உங்களுடைய கன்றுக்குட்டி. ஆயிரம் பசுக்களுக்கு மத்தியில் அது உங்களைக் கண்டுபிடித்து உங்களிடம் வந்து சேர்ந்துவிடும்.

"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். அக்கிரமம் செய்பவன் இப்போதுதான்
காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்.

விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும். அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும்.

இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி. இதற்கு விதிவிலக்கு இல்லை!!!!!
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22 comments:

  1. Respected sir,

    Happy morning... Really wonderful...

    Thanks for sharing...

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. உண்மை தான் ஐயா.
    விதை விதைத்தவன் போல், உரிய காலத்தில் மாத்திரமே இந்த அறுவடையும்!

    ReplyDelete
  3. வணக்கம் குரு,

    அருமையான பகிர்வு.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  4. Vanakkam ayya arumaiyana neethi kathai nantri vazhga valamudan

    ReplyDelete
  5. This kind of story leads to live a better life.
    thank u sir.

    ReplyDelete
  6. சிரிப்பாக வருகிறது...
    சிந்திக்க முடியவில்லை...

    பல ஆண்டுகளாக பொது மக்கள்
    பணத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சிலர்

    அரசியல்வாதிகள் மட்டுமல்ல...
    அந்த கார்போரேட் நிறுவன முதலைகளும்

    நிம்மதியாக அடுத்த பல தலைமுறை வரை
    நிதானமாக வாழுந்து கொண்டு இருக்கிறது...

    இந்த கதை... படிக்க நல்லா இருக்கு...
    இதை பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ள முடியாது...

    கொஞ்சம் வெளி உலகிற்கு வாங்க...
    பஞ்சமில்லாமல் அக்கிரமகாரர்களை பாருங்கள்...

    ReplyDelete
  7. குரு வந்கனம்.
    உண்மைதான். வினை விதைத்தவன் 'வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்' என்று படித்தது ஞாபகத்திலுள்ளது. கிராமங்களில் பணக்காரர்கள், கொலையாளிகளை விடுவிக்கும் வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள், ஆதரவற்ற மக்களைத் தெரிந்தே சித்திரவதை செய்யும் கிராதகர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம், பாவிகளை?! நம் கண் முன்னே அவரகள் மேலே குறிப்பிட்டுள்ளது போன்ற அடாவடிச் செயல்கள் செய்யும்போதும் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால், அவர்கள் தனக்குத் தானே விதை விதைக்கிறார்கள் எனபதுதான் அர்த்தம்.
    இறைவனுக்குத் தெரியும் யாரை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று! எனவே, அவன்பால்்பிரார்த்திப்பது மட்டுமே நமது செயலாக இருக்கவேண்டும், பிறரை நிந்திப்பதோ அல்லது இறைவனை தூஷிப்பதோ தவறாகும். இரண்டு கதை
    கள் மூலமும் அழகாகச் சொல்கிறார், நம் வாத்தியார்!
    நன் போதனகளைத் தந்த நல்லாசிரியருக்கு நன் நன்றிகள்!

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    Nice moral. Thank you. Sir./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. /////Blogger ravichandran said...
    Respected sir,
    Happy morning... Really wonderful...
    Thanks for sharing...
    With kind regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசிக்காரரே!

    ReplyDelete
  10. /////Blogger Mrs Anpalagan N said...
    உண்மை தான் ஐயா.
    விதை விதைத்தவன் போல், உரிய காலத்தில் மாத்திரமே இந்த அறுவடையும்!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  11. /////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு,
    அருமையான பகிர்வு.
    நன்றி
    செல்வம்//////

    நல்லது. நன்றி செல்வம்!

    ReplyDelete
  12. /////Blogger Gajapathi Sha said...
    Vanakkam ayya arumaiyana neethi kathai nantri vazhga valamudan/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////Blogger gunasekar E said...
    This kind of story leads to live a better life.
    thank u sir./////

    உண்மைதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger srinits78 said...
    really good////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Blogger Sanjai said...
    அருமை :)//////

    நன்றி சஞ்சை!

    ReplyDelete
  16. /////Blogger வேப்பிலை said...
    சிரிப்பாக வருகிறது...
    சிந்திக்க முடியவில்லை...
    பல ஆண்டுகளாக பொது மக்கள்
    பணத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சிலர்
    அரசியல்வாதிகள் மட்டுமல்ல...
    அந்த கார்போரேட் நிறுவன முதலைகளும்
    நிம்மதியாக அடுத்த பல தலைமுறை வரை
    நிதானமாக வாழுந்து கொண்டு இருக்கிறது...
    இந்த கதை... படிக்க நல்லா இருக்கு...
    இதை பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ள முடியாது...
    கொஞ்சம் வெளி உலகிற்கு வாங்க...
    பஞ்சமில்லாமல் அக்கிரமகாரர்களை பாருங்கள்...//////

    எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. பொறுத்திருந்து பாருங்கள் வேப்பிலையாரே!

    ReplyDelete
  17. //////Blogger வரதராஜன் said...
    குரு வந்கனம்.
    உண்மைதான். வினை விதைத்தவன் 'வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்' என்று படித்தது ஞாபகத்திலுள்ளது. கிராமங்களில் பணக்காரர்கள், கொலையாளிகளை விடுவிக்கும் வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள், ஆதரவற்ற மக்களைத் தெரிந்தே சித்திரவதை செய்யும் கிராதகர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம், பாவிகளை?! நம் கண் முன்னே அவரகள் மேலே குறிப்பிட்டுள்ளது போன்ற அடாவடிச் செயல்கள் செய்யும்போதும் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால், அவர்கள் தனக்குத் தானே விதை விதைக்கிறார்கள் எனபதுதான் அர்த்தம்.
    இறைவனுக்குத் தெரியும் யாரை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று! எனவே, அவன்பால்்பிரார்த்திப்பது மட்டுமே நமது செயலாக இருக்கவேண்டும், பிறரை நிந்திப்பதோ அல்லது இறைவனை தூஷிப்பதோ தவறாகும். இரண்டு கதை
    கள் மூலமும் அழகாகச் சொல்கிறார், நம் வாத்தியார்!
    நன் போதனகளைத் தந்த நல்லாசிரியருக்கு நன் நன்றிகள்!/////

    நல்லது. உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  18. அருமையான பதிவு.நன்றி ஐயா!தங்களின் சோதிட பதிவுகளை சில வாரங்களாக படித்து வருகின்றேன்.அனைத்து பதிவுகளும் அருமை.படிப்பதற்க்கு மிகமிக எளிதாக உள்ளது.மலேசியாவில் தங்களின் புத்தகம் கிடைக்க வாய்ப்பு உண்டா?தங்களின் இந்த அறிய சேவை தொடர எனது வாழ்த்துகள் ஐயா.
    மல்லிகா முத்தையா
    மலேசியா.

    ReplyDelete
  19. ////Blogger Mallika Muthiah said...
    அருமையான பதிவு.நன்றி ஐயா!தங்களின் சோதிட பதிவுகளை சில வாரங்களாக படித்து வருகின்றேன்.அனைத்து பதிவுகளும் அருமை.படிப்பதற்க்கு மிகமிக எளிதாக உள்ளது.மலேசியாவில் தங்களின் புத்தகம் கிடைக்க வாய்ப்பு உண்டா?தங்களின் இந்த அறிய சேவை தொடர எனது வாழ்த்துகள் ஐயா.
    மல்லிகா முத்தையா
    மலேசியா.////

    மலேசியாவில் கிடைக்காது. இங்கிருந்து மலேசியாவிற்கு அஞ்சலில் அனுப்பிவைக்க முடியும். பதிப்பகத்தாருக்கு மின்னஞ்சலில் தகவல் கொடுங்கள் அவர்களின் முகவரி umayalpathippagam@gmail.com

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com