மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.12.15

தமிழகத்தைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ?

தமிழகத்தைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ?

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள் 

1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?

7வது இடம்

2 )  இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

23 வது இடம்

3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

16வது இடம்

4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

15வது இடம்

5 ) இந்தியாவின்
 கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

 14வது இடம்

6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?

மதுரை

7 )  சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

 2004

 8 )  தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?

 72993

9 )  தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?

 சென்னை

10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

 1076 கி.மீ

11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது

 1986

12 )  தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?

 கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)

 13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?

சென்னை (23,23,454)

 14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?

சென்னை (46,81,087)

 15 )  தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

 68.45 ஆண்டுகள்

16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?

13 மாவட்டங்கள்

17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

 234

 18 )  தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?

 1

 19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?

 12 துறைமுகங்கள்
 தமிழகத்தில் உள்ளன

20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?

 சென்னை

21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

 71.54 ஆண்டுகள்

22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

 15979

23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

 561

 24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

 146

25 )  தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

 18

 26 )  தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

 39

27 )  தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?

தர்மபுரி (64.71 சதவீதம்)

 28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?

பெரம்பலூர் 5,64,511

 29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?

சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)

30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?

நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)

 31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?

 3,74,901

 32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?

 32

33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?

அரியலூர்

34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?

திருப்பூர்

 35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்

80.33 சதவீதம்

36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?

17.58 சதவீதம்

37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?

 வரையாடு

38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?

 சென்னை, எண்ணூர், தூத்துக்குடி

39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?

காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி

40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2.  கோவை
3. மதுரை
4. திருச்சி  
5 தூத்துக்குடி
6 சேலம்

41 )  தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?

 999பெண்கள்(1000 ஆண்கள்)

42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?

1. நீலகிரி        
2. சேலம்        
3. வேலூர்        
4. கன்னியாக்குமாரி

43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?

1. திருவாரூர்    
2. இராமநாதபுரம்
3. தூத்துக்குடி    
4. கடலூர்

44 )  தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?

மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)

 45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?

www.tn.gov.in

46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

 சென்னை

47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?

ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்

48 )  தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?

 திருவில்லிபுத்தூர் கோபுரம்

49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?

 கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்

50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?

 நீராடும் கடலுடுத்த

51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?

பரத நாட்டியம்

52 )  தமிழ்நாட்டின் மாநில பறவை எது?

மரகதப்புறா

53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

பனைமரம்

54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

செங்காந்தர் மலா்

55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?

 கபடி

56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?

 1,30,058 ச.கி.மீ

57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?

7,21,38,958              
ஆண் 36158871      
பெண் 35980087

கண்டிப்பாக பகிரவும் மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள்
அன்புடன்
வாத்தியார்...
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. அய்யா
    வகுப்பறை ஜோதிடம் தொகுதி இரண்டு எப்போது வெளியாகும் ?
    ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  2. அட போங்க சார்...
    அவுங்க தமிழகத்தை பிரிக்க திட்டம் வைச்சு இருக்காங்க...

    ஹைதராபாத் தை பிரித்தது போல்
    அப்படி தமிழ் நாட்டை 3 ஆக பிரிச்சுடுவாங்க

    மதுரையை தலைமையாக கொண்டு ஒன்று
    மத்திய சென்னையை தலைமையாக கொண்டு ஒன்று

    வேலூர் ஐ தலைமையாக கொன்று ஒன்று..
    வாரிசு 3 பேருக்கும் ஆளுக்கு ஒன்று...

    ReplyDelete
  3. இந்தியாவின்
    கல்வியறிவில் தமிழகம் 7 வது இடம்
    இடத்தில் உள்ளது.
    M.Santhi

    ReplyDelete
  4. அன்புள்ள அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    அட வாத்தியாரின் வித்தியாசமான அற்புதமான பதிவு!என்னைப் போன்ற (அறிவு?) ஜீவிகள் எல்லாம் தெரிந்ததைப் போன்று மார்தட்டிக் கொண்டாலும், நம்முடைய மாநிலத்தைப் பற்றி விபரமாக தெரிந்து கொண்டது இன்றைய பதிவில்தான்!! மிக்க நன்றிகள்!!!
    அன்புடன்,
    -பொன்னுசாமி

    ReplyDelete
  5. மேலை நாட்டு தீர்க்க தரிசிகளில் முக்கியமானவர் 16வது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டர்டாம்ஸ். இவரது கணிப்புகள் கணிப்புகள் இன்றளவும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் உள்ளன. சாதாரண ஜோதிடம் பயின்ற இவர் அதைப் பயன்படுத்தி தனது கணிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில் பல பலித்துள்ளன என்பதுதான் நாஸ்டர்டாம்ஸின் கணிப்புகளுக்கு இன்றளவும் உலக மக்களிடையே ஆர்வம் அதிகமாக இருக்க முக்கியக் காரணம்.

    நாஸ்டிர் டாம்சின் பல கணிப்புகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. காரணம், பல முக்கிய வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை. கென்னடி சகோதரர்களின் படுகொலை, ஹிட்லரின் எழுச்சி, நெப்போலியனின் வீழ்ச்சி, 9/11 தாக்குதல் என பல உண்மைச் சம்பவங்களை முன் கூட்டியே கணித்தவர் அவர்.
    நாஸ்டர்டாம்ஸ் 2016ம் ஆண்டில் கணித்துள்ள குறிப்புகளை இங்கு கானலாம்

    நாஸ்டர்டாம்ஸின் 2016ம் ஆண்டுக்கான கணிப்புகளில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது அதிபர் ஒபாமாவைப் பற்றி அவர் கூறியுள்ளது. அவர்தான் அமெரிக்காவின் கடைசி அதிபராக இருப்பார் என்று நாஸ்டிர்டாம்ஸ் கூறியுள்ளார். அப்படியானால் ஒபாமா ஆட்சியோடு அமெரிக்கா அழியப் போகிறதா அல்லது அமெரிக்காவில் அதிபர் ஆட்சி முறை மறைந்து விடுமா அல்லது சீனா, ரஷ்யா போன்ற புதிய வல்லரசு நாடுகள் எழுச்சி பெறுமா என்பது குறித்துத் தெரியவில்லை.

    2016ம் ஆண்டு அதி பயங்கரமான வானிலை மாற்றங்களை உலகம் சந்திக்கும் என்று நாஸ்டர் டாம்ஸ் கூறியுள்ளார். இயற்கைப் பேரிடர்கள், பேரழிவுகள், கடல் கொந்தளிப்புகள் அதிக அளவில் இருக்குமாம். பூமியே கடலுக்குள் போய் விட்டதைப் போன்ற அளவுக்கு வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும். ஏற்கனவே இந்தக் கணிப்பு பலிக்கமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

    2016ம் ஆண்டு கோள்கள் வழக்கத்திற்கு மாறாக இடம் மாறும். இந்த கோள்கள் மாற்றத்தால் பூமியில் பல அதி பயங்கர நிகழ்வுகள் ஏற்படலாம். அது என்ன மாதிரியான நிகழ்வுகள் என்பதை நாஸ்டர்டாம்ஸ் சொல்லவில்லை. 2016ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பேரழிவு ஆண்டாக அமையும். அங்குள்ள பெட்ரோலியக் கிணறுகள் பல பற்றி எரியும். பெரும் சேதத்தை இவை சந்திக்கும்.

    மத்திய கிழக்கு நாடுகள் குறித்த இன்னொரு கணிப்பில் அங்கு அதிக அளவில் குண்டுவெடிப்புகள் நடைபெறும் என்று நாஸ்டர்டாம்ஸ் கூறியுள்ளார். கடந்த 4 வருடமாகவே மத்திய கிழக்கு அமைதியிழந்து போர்க்களமாக காணப்படுவது நினைவிருக்கலாம்.

    இந்த ஆண்டில் விமானங்கள் அதிக அளவில் காணாமல் போகுமாம். ஏற்கனவே மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடந்த வருடம் காணாமல் போனது. இன்னொரு விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே 2016ல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

    அமெரிக்கா உலகத்தையே அழிக்கும் திட்டத்துடன் செயல்படும் என்பது நாஸ்டர் டாம்ஸின் இன்னொரு கணிப்பாகும். வெள்ளை மாளிகை இதற்கான திட்டமிடல்களில் ஈடுபடும் என்று கூறியுள்ளார். மத்திய கிழக்கிலிருந்து இந்த போர் விளையாட்டை ஆரம்பிக்கும் அமெரிக்கா என்பதுதான் இதில் முக்கியமான அம்சம்.

    2016ல் நடக்கும் என நாஸ்டர் டாம்ஸ் கணித்துள்ள இன்னொரு முக்கிய அம்சம் துருவப் வெப்பம் அதிகரித்து துருவப் பகுதிகள் உருக ஆரம்பிக்கும் 2016ம் ஆண்டு இஸ்ரேலுக்கு பேராபத்து வரும் என்பது இன்னொரு கணிப்பாகும். 2016-18ம் ஆண்டிற்குள் உலகில் பெரும்பகுதி அழிந்து விடும் என்று கூறியுள்ளார் அவர். ஈராக் போர்தான் உலக அழிவுக்கான முதல் படி என்றும் அவர் கூறியுள்ளார்.
    https://www.facebook.com/groups/siddhar.science/

    ReplyDelete
  6. தமிழ்நாட்டுக்கு என்று கொடியிருக்கிறதா? உதாரணமாக அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஒவ்வொரு மாநிலத்துக்கும், மாகாணத்துக்கும் வெவ்வேறு கொடியுண்டு. இலங்கையிலும் ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனிக்கொடியுண்டு.

    ReplyDelete
  7. குரு வந்தனம்.
    கலக்கலான செய்திகள்.உண்மையில் தமிழ்நாட்டைப் பற்றிய இத்தனை செய்திகளும் தமிழ்நாட்டுப் பாடப்புத்தகங்களில் காணப்படுமா? பொதுஅறிவுப் போட்டி வைத்தால் எத்தனை தமிழக மக்கள் மிகச் சரியான விடையளிப்பர் என்பது தெரியாது! அதிலுள்ள 57 கேள்விகளில் என்னால் 40 க்கு மட்டுமே சரியான விடை தெரிந்தன. மிக நல்ல அறிவு சார்ந்த பகிர்ப்புக்காக வாத்தியாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பலபபல.

    ReplyDelete
  8. ///////Blogger slmsanuma said...
    அய்யா
    வகுப்பறை ஜோதிடம் தொகுதி இரண்டு எப்போது வெளியாகும் ?
    ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.//////

    பொறுத்திருங்கள். கூடிய சீக்கிரம் வெளியாகும்!

    ReplyDelete
  9. //////Blogger வேப்பிலை said...
    அட போங்க சார்...
    அவுங்க தமிழகத்தை பிரிக்க திட்டம் வைச்சு இருக்காங்க...
    ஹைதராபாத் தை பிரித்தது போல்
    அப்படி தமிழ் நாட்டை 3 ஆக பிரிச்சுடுவாங்க
    மதுரையை தலைமையாக கொண்டு ஒன்று
    மத்திய சென்னையை தலைமையாக கொண்டு ஒன்று
    வேலூர் ஐ தலைமையாக கொன்று ஒன்று..
    வாரிசு 3 பேருக்கும் ஆளுக்கு ஒன்று...///////

    அடடா, தகவல் புதியதாகவும் சூப்பராகவும் உள்ளதே வேப்பிலையாரே!

    ReplyDelete
  10. //////Blogger amuthavel murugesan said...
    இந்தியாவின்
    கல்வியறிவில் தமிழகம் 7 வது இடம்
    இடத்தில் உள்ளது.
    M.Santhi//////

    ஆமாம். கேட்க வருத்தமாகத்தான் உள்ளது நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ள அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    அட வாத்தியாரின் வித்தியாசமான அற்புதமான பதிவு!என்னைப் போன்ற (அறிவு?) ஜீவிகள் எல்லாம் தெரிந்ததைப் போன்று மார்தட்டிக் கொண்டாலும், நம்முடைய மாநிலத்தைப் பற்றி விபரமாக தெரிந்து கொண்டது இன்றைய பதிவில்தான்!! மிக்க நன்றிகள்!!!
    அன்புடன்,
    -பொன்னுசாமி/////

    எல்லாம் உங்களுக்காகத்தான் பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  12. /////Blogger C.Senthil said...
    மேலை நாட்டு தீர்க்க தரிசிகளில் முக்கியமானவர் 16வது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டர்டாம்ஸ். இவரது கணிப்புகள் கணிப்புகள் இன்றளவும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் உள்ளன. சாதாரண ஜோதிடம் பயின்ற இவர் அதைப் பயன்படுத்தி தனது கணிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில் பல பலித்துள்ளன என்பதுதான் நாஸ்டர்டாம்ஸின் கணிப்புகளுக்கு இன்றளவும் உலக மக்களிடையே ஆர்வம் அதிகமாக இருக்க முக்கியக் காரணம்.
    நாஸ்டிர் டாம்சின் பல கணிப்புகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. காரணம், பல முக்கிய வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை. கென்னடி சகோதரர்களின் படுகொலை, ஹிட்லரின் எழுச்சி, நெப்போலியனின் வீழ்ச்சி, 9/11 தாக்குதல் என பல உண்மைச் சம்பவங்களை முன் கூட்டியே கணித்தவர் அவர்.
    நாஸ்டர்டாம்ஸ் 2016ம் ஆண்டில் கணித்துள்ள குறிப்புகளை இங்கு கானலாம்
    நாஸ்டர்டாம்ஸின் 2016ம் ஆண்டுக்கான கணிப்புகளில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது அதிபர் ஒபாமாவைப் பற்றி அவர் கூறியுள்ளது. அவர்தான் அமெரிக்காவின் கடைசி அதிபராக இருப்பார் என்று நாஸ்டிர்டாம்ஸ் கூறியுள்ளார். அப்படியானால் ஒபாமா ஆட்சியோடு அமெரிக்கா அழியப் போகிறதா அல்லது அமெரிக்காவில் அதிபர் ஆட்சி முறை மறைந்து விடுமா அல்லது சீனா, ரஷ்யா போன்ற புதிய வல்லரசு நாடுகள் எழுச்சி பெறுமா என்பது குறித்துத் தெரியவில்லை.
    2016ம் ஆண்டு அதி பயங்கரமான வானிலை மாற்றங்களை உலகம் சந்திக்கும் என்று நாஸ்டர் டாம்ஸ் கூறியுள்ளார். இயற்கைப் பேரிடர்கள், பேரழிவுகள், கடல் கொந்தளிப்புகள் அதிக அளவில் இருக்குமாம். பூமியே கடலுக்குள் போய் விட்டதைப் போன்ற அளவுக்கு வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும். ஏற்கனவே இந்தக் கணிப்பு பலிக்கமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
    2016ம் ஆண்டு கோள்கள் வழக்கத்திற்கு மாறாக இடம் மாறும். இந்த கோள்கள் மாற்றத்தால் பூமியில் பல அதி பயங்கர நிகழ்வுகள் ஏற்படலாம். அது என்ன மாதிரியான நிகழ்வுகள் என்பதை நாஸ்டர்டாம்ஸ் சொல்லவில்லை. 2016ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பேரழிவு ஆண்டாக அமையும். அங்குள்ள பெட்ரோலியக் கிணறுகள் பல பற்றி எரியும். பெரும் சேதத்தை இவை சந்திக்கும்.
    மத்திய கிழக்கு நாடுகள் குறித்த இன்னொரு கணிப்பில் அங்கு அதிக அளவில் குண்டுவெடிப்புகள் நடைபெறும் என்று நாஸ்டர்டாம்ஸ் கூறியுள்ளார். கடந்த 4 வருடமாகவே மத்திய கிழக்கு அமைதியிழந்து போர்க்களமாக காணப்படுவது நினைவிருக்கலாம்.
    இந்த ஆண்டில் விமானங்கள் அதிக அளவில் காணாமல் போகுமாம். ஏற்கனவே மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடந்த வருடம் காணாமல் போனது. இன்னொரு விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே 2016ல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.
    அமெரிக்கா உலகத்தையே அழிக்கும் திட்டத்துடன் செயல்படும் என்பது நாஸ்டர் டாம்ஸின் இன்னொரு கணிப்பாகும். வெள்ளை மாளிகை இதற்கான திட்டமிடல்களில் ஈடுபடும் என்று கூறியுள்ளார். மத்திய கிழக்கிலிருந்து இந்த போர் விளையாட்டை ஆரம்பிக்கும் அமெரிக்கா என்பதுதான் இதில் முக்கியமான அம்சம்.
    2016ல் நடக்கும் என நாஸ்டர் டாம்ஸ் கணித்துள்ள இன்னொரு முக்கிய அம்சம் துருவப் வெப்பம் அதிகரித்து துருவப் பகுதிகள் உருக ஆரம்பிக்கும் 2016ம் ஆண்டு இஸ்ரேலுக்கு பேராபத்து வரும் என்பது இன்னொரு கணிப்பாகும். 2016-18ம் ஆண்டிற்குள் உலகில் பெரும்பகுதி அழிந்து விடும் என்று கூறியுள்ளார் அவர். ஈராக் போர்தான் உலக அழிவுக்கான முதல் படி என்றும் அவர் கூறியுள்ளார்.
    https://www.facebook.com/groups/siddhar.science///////

    உங்களின் தகவல்கள் கலக்கத்தைத் தருவதாக இருந்தாலும், அப்படி ஏதும் நடக்கக்கூடாது என்று மனம் பிரார்த்தனை செய்கிறது செந்தில்!

    ReplyDelete
  13. /////Blogger viyasan said...
    தமிழ்நாட்டுக்கு என்று கொடியிருக்கிறதா? உதாரணமாக அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஒவ்வொரு மாநிலத்துக்கும், மாகாணத்துக்கும் வெவ்வேறு கொடியுண்டு. இலங்கையிலும் ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனிக்கொடியுண்டு./////

    தமிழ்நாட்டில் உள்ள அளவு பெரிய மற்றும் உதிரிக்கட்சிகளும், கொடிகளும் வேறு எங்கேனும் உள்ளதா?

    ReplyDelete
  14. //////Blogger வரதராஜன் said...
    குரு வந்தனம்.
    கலக்கலான செய்திகள்.உண்மையில் தமிழ்நாட்டைப் பற்றிய இத்தனை செய்திகளும் தமிழ்நாட்டுப் பாடப்புத்தகங்களில் காணப்படுமா? பொதுஅறிவுப் போட்டி வைத்தால் எத்தனை தமிழக மக்கள் மிகச் சரியான விடையளிப்பர் என்பது தெரியாது! அதிலுள்ள 57 கேள்விகளில் என்னால் 40 க்கு மட்டுமே சரியான விடை தெரிந்தன. மிக நல்ல அறிவு சார்ந்த பகிர்ப்புக்காக வாத்தியாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பலபபல./////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  15. Truly all these facts are not known for many people. Interesting news

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com