மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.2.15

Quiz.no.78 Answer: நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே!


Quiz.no.78 Answer: நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே!

நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே
- கவியரசர் கண்ணதாசன்

புதிர் எண் 78 ற்கான விடை

25.2.2015
--------------------------------------


நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து
2 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. ஜாதகருக்குத் திருமணம் ஆயிற்றா அல்லது ஆகவில்லையா?
2. ஆயிற்று என்றால் திருமண வாழ்க்கை எப்படி இருந்தது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?

சரியான பதில்:

1.  ஜாதகருக்கு அவருடைய 25வது வயதில் திருமணம் நடைபெற்றது.
2. ஆனால் அது ஒராண்டிற்கு மேல் நிலைக்கவில்லை. விவாகரத்தில் முடிந்துவிட்டது.

ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!

மகர லக்கின ஜாதகம்.
லக்கினம் மற்றும் லக்கினாதிபதியை உள்ளடக்கிய கால சர்ப்ப தோஷம்
உள்ள ஜாதகம்.
ஏழாம் வீடு கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. ஏழில் செவ்வாயும், ராகுவும். அத்துடன் சனியின் பார்வையும் உள்ளது.
ஆனால் ஏழாம் வீட்டின் மேல் குருவின் பார்வையும் உள்ளது. குருபகவான் தன்னுடைய மகா திசையில் சுக்கிரபுத்தியில் ஜாதகனின் திருமணத்தை நடத்திவைத்தார்.
ஏழாம் வீட்டுக்காரன் சந்திரன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் 
அமர்ந்துள்ளது கேடாகும். அது கணவன் மனைவிக்குள் பிரிவை 
உண்டாக்கும் அமைப்பு. அதன்படியே நடந்தது.

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 32 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில்  9. பேர்கள் மட்டுமே சரியான பதிலை  எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

விவாகம் ரத்தாகும் என்பது தான் முக்கியமான பதில்! (key answer)
அதைக் குறிப்பிட்டு எழுதி 100% மதிப்பெண்கள் பெற்ற ஒன்பது அன்பர்களின் பெயர்களும் கீழே உள்ளது!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
///////Blogger thozhar pandian said...
இலக்கினாதிபதி சனி இலக்கினத்தில் 2ம் வீட்டிற்கு 12ல் மறைந்தார். 7ம் அதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு 12ல், இலக்கினத்திற்கும், இலக்கினாதிபதிக்கும், 6ம் வீட்டில், மறைந்தார். களத்திரகாரகன் சுக்கிரன் இலக்கினத்திக்கு 3ல் 7ம் வீட்டிற்கு 8ல் மறைந்தார். சந்திர இலக்கினத்தில் இருந்து 7ம் வீட்டில் மாந்தி. 7ம் வீட்டில் பாதகாதிபதி செவ்வாய் நீசம் பெற்று இராகுவுடன் கூட்டணி. 7ம் வீட்டிற்கும், களத்திரகாரகர் மற்றும் குடும்பகாரகருக்கும் சனி பார்வை. ஆனால் அவர் இலக்கினாதிபதியாக இருப்பதால், குரு தசையில் திருமணம் நடந்திருக்கும். சங்கடங்கள் நிறைந்த திருமண வாழ்க்கை. பிரிவில் முடிந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Tuesday, February 24, 2015 5:23:00 AM /////
-------------------------------------------
2
//////Blogger Thavam Mani said...
before 29 marrige he got divioce . 7 th house athipathi moon in oopaya rasiyil nirga many parter, but sani 7m parvai in 7 th place is not good, delay marriage. parter was elder. marriage was done 35 old. that was good.
Tuesday, February 24, 2015 9:33:00 AM /////
--------------------------------------------
3
//////Blogger anand tamil said...
1.ஜாதகருக்கு திருமண‌ம் ஆகிவிட்டது.
2.திருமண‌ வாழ்க்கை சிறப்பாக இல்லை. தோல்வியில் முடியும்.
இருவரும் பிரிந்து வாழ்வர் .
காரணங்கள்:
1.7ம் வீட்டின் மேல் லக்கினாதிபதி சனி மற்றும் குருவின் பார்வை.
களத்திரக்காரன் சுக்கிரனும் , குருவும் லக்கினாதிபதி சனியின் பிடியில். மேலும் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதால்
2.7ம் வீட்டின் அதிபதி சந்திரன் 6இல் மறைவு.இது 7ம் வீட்டிற்க்கு 12ம் வீடு. மேலும் சந்திரன் மேல் சுப கிரகங்களின் பார்வை இல்லை.
7ம் வீட்டில் செவ்வாய் மற்றும் ராகு ஆதிக்கம் .
Tuesday, February 24, 2015 1:15:00 PM ////////
-----------------------------------------------------
4
//////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
அமுதும் தேனும் எதற்க்கு?” கேள்விக்கு பதில் “சட்டி சுட்டதடா, கை விட்டதடா” என்பதுதான்.
1).அன்பருக்கு 34 வயதில் சனி தசை புதன் புத்தியில் திருமணம் நடந்தது.
2).திருமண வாழ்வு துயரத்தில் முடிந்தது. மனைவி,அவரது 43 வது வயதில் இறந்திருப்பார்.சனி தசா-சந் புத்தி-சனி அந்தரம்.
1).மகர லக்னம்.லக்னாதிபதி சனி ஆட்சி,கேதுவுடன் கூட்டணி.7ம் வீடான கடகத்தில் அமர்ந்த நீச்ச செவ்வாய்+ராகு கூட்டணியின் நேரடி பார்வை லக்கினத்தின் மேல்.மகர லக்கின பாதகாதிபதி செவ்வாய். 7ம் பதி சந்திரனோ 6ல் அமர்வு.தன் வீட்டிற்க்கு 12ல் (நோய் ஸ்தானம்).
மூன்றில் அமர்ந்த உச்ச குருவின் 5ம் பார்வையும், அவருடன் கூட்டு சேர்ந்த உச்ச களத்திர காரகன் சுக்கிரனின் அமர்வும் களத்திர ஸ்தானத்தின் மீது லக்னாதி சனியின் பார்வையும் திருமணம் நடத்தியது.
2). குடும்ப ஸ்தான பதி சனி தன் வீட்டிற்கு 12ல் மறைவு.7ல் அமர்ந்த பாதகாதிபதி நீச்ச செவ்வாயின் 8ம் பார்வை. 4 மிட சுக ஸ்தானாத்தில் உச்சம் பெற்ற 8மாதி சூரியன் அமர்வு.7ம் பதி சந்திரன் (தன் வீட்டிற்கு 12மிடமான 6ல் இருந்து) 12மிடத்தை பார்வை செய்கின்றார்.
2மிடத்திற்கு சுபர் பார்வையில்லை.
அன்பருக்கு திருமண வாழ்வு பயனின்றி விரயமாகி விட்டது.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
Tuesday, February 24, 2015 1:26:00 PM ///////
----------------------------------------------
5
Blogger asbvsri said...
Quiz No 78: Answer
ஐய்யா அவர்களுக்கு வணக்கம்.
ஜாதகர் கால சர்ப யோகத்தில் உள்ளவர். லக்னாதிபதி நல்ல நிலையில் ஆட்சியில் வலுவாக பாப கர்த்தாரி யோகத்தில் உள்ளார்.
5 ஆம் அதிபதி சுக்ரன் யோககாரகன், களத்திரகாரகன் ராசியில் உச்சம் – நவாம்சத்தில் ஆட்சி. கேந்திரம் / கோணாதிபதி
3க்கும் 12க்கும் (போகஸ்தானம்) அதிபதி குரு ஆட்சி. அவர் களத்திரஸ்தானத்தை 5 ஆம் பார்வையாக பார்க்கிறார். ஆனால் 12 ம் இடம் போகஸ்தானத்தில் மாந்தி. போகத்தை மறுக்கிறது.
7 ஆம் இடத்தில் செவ்வாய் ராசியில் நீச்சம். ஆனால் நவாம்சத்தில் உச்சம். ராஹு வர்க்கோத்தமம்.
ஜாதகருக்கு கண்டிப்பாக திருமணம் நடந்திருக்கும்.
ராஹு தசை 15 வயது வரை. பிறகு குரு தசையில் யோககாரகன் சுக்ரன் புக்தியில் 26 வது வயதில் திருமணம் நடந்திருக்கும். இது தவறியிருந்தால் 36 வது வயதில் சனி தசையில் சுக்ர புக்தியில் திருமணம் நடந்திருக்கும்.
களத்திரஸ்தானாதிபதி சந்த்ரன் 6 ஆம் இடத்தில் – ரோக ஸ்தானம். ஆதலால் மனைவி நோய்வாய்ப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். 12 ம் இடம் போகஸ்தானத்தில் மாந்தி. போகத்தை மறுக்கிறது. ஆதலால் திருமணமாகி சில காலங்களுக்குப்பிறகு சன்யாசி மாதிரி துறவி வாழ்க்கை வாழ வேண்டிய நிலையில் இருந்திருப்பார்.
K R Ananthakrishnan, Chennai
Tuesday, February 24, 2015 3:16:00 PM//////
--------------------------------------------
6
////Blogger Kirupanandan A said...
1) திருமணம் நடந்தது. களத்திரகாரகன் சுக்கிரன் உச்சமாகி இன்னொரு சுப கிரகமான ஆட்சி பெற்ற குருவுடன் இருக்கிறார்.
2) மிகவும் சண்டை சச்சரவு மிகுந்த திருமண வாழ்க்கை. முடிவில் விவாகரத்தானது. 7ம் அதிபதி 6ல் மறைந்துள்ளார். 7ல் 2 பாப கிரகங்கள். இதில் செவ்வாய் நீசமாகி இருக்கிறார்.
Tuesday, February 24, 2015 8:41:00 PM ///////
---------------------------------------------------
7
/////////Blogger Siva Radjane said...
1. ஜாதகர் திருமணம் ஆனவர்.
2.திருமண வாழ்கை போராட்டமாக இருந்திருக்கும். மனைவியை பிரிந்தவராய் இருப்பார். 
1.laknaathipathi சனிஸ்வரன் laknaththil amarnthu 7 ம் வீட்டை தன பார்வையில் வைத்துள்ளார். maylum 7 ம் veettiRku guru'vin paarvai. sukkiran ucham. சந்திரன்க்கு 7 ம் அதிபன் 'குரு' ஆட்சி.sevvaai ,sani பார்வை..மற்றும் 7ல் செவ்வாய் ராகு சேர்க்கை ஆகியவற்றால் ஜாதகருக்கு 31 வயதில் குரு thisai ,ராகு புத்தியில் திருமணம் நடந்திருக்கும்.
2. 2ம் அதிபன் சனி 2க்கு 12ல் மறைவு. 2ம் விட்டிற்கு செவ்வாயின் 8ம் பார்வை.7ம் அதிபன் சந்திரன் laknathiRku 6ல் ,7க்கு 12ல் மறைவு. 7ல் தீய கிரகங்களான செவ்வாய் ,ராகு கூட்டணி.சந்திரனுக்கு 2ல் செவ்வாய் ,ராகு சேர்க்கை . ஆகையால் ஜாதகரின் திருமண வாழ்கை போராட்டமாக இருந்திருக்கும்.மனைவியை பிரிந்தவராய் இருப்பார்.
Sivarajan (pondicherry)
Wednesday, February 25, 2015 12:42:00 AM /////
--------------------------------------------------
8
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO. 78 வணக்கம்.
28/04/1963 ஆம் ஆண்டு ஞாயிறு கிழமை காலை 1.30.35 மணிக்கு திருவாதிரை நட்சத்திரத்தில் மகர லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்:சென்னை)
1. ஜாதகருக்கு திருமணம் 23 வயதில் நடைபெற்றது.
2. 42வயதில் திருமணம் விவாகரத்து எற்பட்டது.
மகர லக்கினத்திற்கு யோககாரகன் புதன்,சுக்கிரன். இந்த ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரன் உச்சம்.மகர லக்கினத்திற்கு 5 மற்றும் 10ஆம் இடங்களுக்கு உரியவன்.
1. லக்கினாதிபதி சனி மகர ராசியில் லக்கினத்திலேயே உள்ளார். லக்கினம் 37 பரல். கேதுவுடன் கூட்டு. துரதிர்ஷ்ட்டம். உடல் நல கேடு. உடல் குறைபாடுகள், வியாதி, ஜாதகரை ஒரு வழி ஆக்கிவிடும்.
2. மகர லக்கினதிற்க்கு ராஜ யோககாரன் செவ்வாய் 7ல் ராகுவுடன் கூட்டு சேர்ந்து இருப்பதால் கெட்டு போய் இருக்கிறார்.
3. ஆரம்ப ராகு தசையில் ஜாதகர் மிகவும் கஷ்ட்டப்ப்ட்டு இருப்பார்.
4. இந்த ஜாதகத்தில் யோககாரனான சுக்கிரன் உச்சம்(4 பரல்) 3ம் வீட்டில் மீன‌ ராசியில். மேலும், குருவுடன் கூட்டு.
5. குருவின்(3 பரல்) 5ம் பார்வை 7ம் வீட்டின் மீது உள்ளது.
6. உச்சமான சுக்கிரனின் 7ம் பார்வையும், குருவின் 7ம் பார்வையும் பாக்கியஸ்தானமான 9ம் வீட்டின் மீது உள்ளது. 9ம் வீட்டின் அதிபதி புதன் மூல திருகோணத்தில் 5ம் வீட்டில் இருக்கிறார்.
7. சந்திர லக்கினதிலிருந்து 7ம் வீடு தனூர் ராசி. அதாவது 12ம் வீடு.அதன் அதிபதி குரு 3வீட்டில் சுக்கிரனுடன் கூட்டு.அந்த வீடு சந்திரனிருந்து கேந்திரத்தில் இருப்பதால் அது கஜகேசரி யோகம் பெற்றுள்ளது.
8.மேலும், லக்கினாதிபதி சனியின் 3ம் பார்வை 3ம் வீட்டில் உள்ள சுக்கிரன், குருவின் மீது உள்ளது.
9. குருதசை சுக்கிர புக்தியில் 23 வயதில் திருமணம் நடைபெற்று இருக்கும்.
10. 5ம் வீட்டு அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று குருவுடன் சேர்ந்து இருப்பதால் அவருக்கு ஒரு பெண் குழந்தை அதே சுக்கிர தசையில் கிடைத்தது.
11. 2ம் வீட்டு அதிபதி லக்கினத்தில் அதவது அந்த வீட்டிற்க்கு 12ல்.வீட்டின் மீது செவ்வாயின் 8ம் பார்வை உள்ள‌து.அந்த வீட்டில் 30 பரல்கள் உள்ளன.
12. குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருந்தது.காரணம், 7ம் வீட்டு அதிபதி சந்திரன் 6ல் அமர்ந்துள்ளதால் திருமணம் பிரிவில் முடியும். மேலும், சனி, சந்திரனின் 8/6 நிலைமை.
சனி தசையில் சந்திர புக்தியில் 42 வயதில் விவாக ரத்து எற்பட்டது.
13. நவாம்சத்திலும் ராகு 7ம் வீட்டில் உள்ளார்.
14. சூரியனுக்கு 4ம் வீட்டில் ராகு இருப்பதால் ஜாதகருக்கு செல்வாக்கு, புகழ், பெயர் எல்லம் கிடைக்காமல் போய்விட்டது.
15. 7ல் ராகு இருப்பதால் மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. பெண்னினால் அவமானம் எற்படும்., கேதுவின் 7ம் பார்வை 7ம் வீட்டின் மீது இருப்பதாலும்,திருமணம் பிரிவில் முடியும்.
சந்திரசேகரன் சூரியநாரயணன்
Wednesday, February 25, 2015 12:52:00 AM /////
--------------------------------------------
9
Blogger ravichandran said...
Respected sir,
My answer for our Quiz No. 78:-
1. He has married but delayed marriage.
2. His marriage life was not happy and ended with divorce or other reason.
Reasons for Delayed marriage:
i) Kala sarpa dhosa horoscope as well as seventh house and seventh house lord is affected. seventh house lord is sitting 12th place from its own house.
ii) kalathra karaga as well as yoga karaga Venus is exalted and associated with Jupiter and Jupiter is aspecting seventh house.
iii) Bagyathipathi is in good position and lagna lord is in own house.
Hence, He married but delayed ( after his 36th age) might be Saturn dasa, Venus bhuthi.
Reasons for unhappy married life:
i) Mars and Rahu is in seventh place and kethu aspecting.
ii) Lagna lord and seventh house lord is in 6/8 position as well as both are enemies.
iii) Second house lord is sitting 12th place from its own house and mars is aspecting second house.
iv) In 12th place Manthi is there.
v) From seventh house, eitgth house( i.e. second house) is indicating life partner's life. Here affected. 
Hence, marriage life was not happy and ended with divorce or other reason.
With kind regards,
Ravichandran M
Wednesday, February 25, 2015 1:58:00 AM ///////
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23 comments:

  1. From today's lesson i learned that jupiter is only responsible for getting married not for saving a marriage. also i thought lagna lord's 7th aspect will save his marriage inspite of ill effects. so 7th lord and planet sitting in 7th house decides divorce.

    thank you!

    ReplyDelete
  2. sir

    pls clarify this.

    according to jaimini sutra astrology
    when a planet goes to a certain house it becomes dead.
    this particular horoscope has 3 planets dead.
    jupiter in 3rd house.
    saturn in 1st house
    mars in 7th house

    so the planets become totally powerless?

    thanks
    sree

    ReplyDelete
  3. //போட்டியில் 32 பேர்கள் கலந்து கொண்டார்கள்.//

    32 + ஒருவர் பாடல் போட்டியில் கலந்துக் கொண்டார்.

    ReplyDelete
  4. விடை சரியோ தவறோ. நமக்கு வழ வழ கொழ கொழ என்பதெல்லாம் பிடிக்காது. சுருங்க சொல்லி விளங்க வைத்தல் என்பது போல் எதையும் சுருக்கமாகச் சொல்வதுதான் என் பாணி.

    ReplyDelete
  5. எனது பெயர் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் வராவிட்டாலும்,நாடி சோதிட விதிகளின் படி முய‌ற்சி செய்து பார்த்தேன்.ஆட்சி பெற்ற குருவின் பார்வை
    7ம் இடத்திற்குக் கிடைப்பதால் பிரிவினை சமாதானம் ஆகும் என்பது அங்கே சொல்லும் விதியாகும். அதன் படி கூறினேன்.


    Astrosage
    என்ற வலைதளத்தில் புதிர் எண் 24 :
    பிறந்த தேதி: 18 மார்ச் 1974; பிறந்த நேரம்:21;35(இரவு 9:35)பிறந்த இடம் ஆக்ரா
    கேள்வி:ஜாதகரின் வேலை:1.மருத்துவர்; 2:மென்பொருள் பொறியாளர்; 3.ஐ ஏ எஸ் அதிகாரி; 4.ஐ பி எஸ் அதிகாரி. இவற்றில் எது ஜாதகரின் பணி?

    புதிருக்கான விடைக்குக் கடைசி நாள்:19 மார்ச் 2015. விடை வெளியிடும் நாள்
    20 மார்ச் 2015.

    விருப்பமுள்ள அன்பர்கள் கலந்து கொள்ளலாம்.
    http://www.astrosage.com/quiz/astrologyquiz24.asp

    kmrk1949@gmail.com

    ReplyDelete
  6. வெற்றி பெற்றவர் பட்டியலில் இடம்
    பெறவில்லை எனது பெயர்...

    பாடலாக பதில் அளித்ததால்
    பட்டியலில் இல்லை என்றாலும்

    பாடலாக கேட்ட கேள்விக்கு
    பாட்டாகத்தானே பதில் தர முடியும்

    வருத்தமில்லை என்றாலும்
    வருவேன் இதுபோன்ற பதில்களுடன்

    ReplyDelete
  7. நிலவை பார்த்து வானம் சொன்னது
    என்னை தொடாதே

    இந்த பாடல் பதிலாக
    இருந்தாலும்

    அய்யர் பதிவிட்ட
    அந்த பதிலாக வந்த நிலவு பாடல்

    நிலவே என்னிடம்
    நெருங்காதே என்ற பாடல்

    உங்கள் நிலா பாட்டு
    காதலை வளர்க்கும் பாட்டு

    பதிவு செய்த நிலா பாட்டு
    பதிலாக வந்தது

    ReplyDelete
  8. //From today's lesson i learned that jupiter is only responsible for getting married not for saving a marriage//

    இதைப் படித்தவுடன் யானையைப் பார்த்த குருடர்கள் கதை ஞாபகத்திற்கு வருகிறது.

    ReplyDelete
  9. அய்யா வணக்கங்கள்.
    சுவராஸ்யமான பகுதி திரு.அய்யர் அய்யா அவர்களின் பங்களிப்பே.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  10. Quiz.no.78ற்கன பதிளே விரிவக எலுதாமைகு மிகவும் வருந்துகிரன் enimel enrha thavaru nadagamal parthu kolkireen iya

    ReplyDelete
  11. //////OpenID guest2015 said...
    From today's lesson i learned that jupiter is only responsible for getting married not for saving a marriage. also i thought lagna lord's 7th aspect will save his marriage inspite of ill effects. so 7th lord and planet sitting in 7th house decides divorce.
    thank you!/////

    புரிதலுக்கு நன்றி!

    ReplyDelete
  12. ////OpenID guest2015 said...
    sir
    pls clarify this.
    according to jaimini sutra astrology
    when a planet goes to a certain house it becomes dead.
    this particular horoscope has 3 planets dead.
    jupiter in 3rd house.
    saturn in 1st house
    mars in 7th house
    so the planets become totally powerless?
    thanks
    sree//////

    ஜெய்மானி முனிவர் சொன்னது பற்றி எனக்குத் தெரியாது. கிரகங்கள் எத்தனை மோசமான இடங்களில் இருந்தாலும் தங்கள் சக்தியை இழக்காது. ஆதிபத்தை வைத்து நல்லதோ அல்லது கெட்டதோ அதைச் செய்யத் தவறுவதில்லை.

    ReplyDelete
  13. ////Blogger MS RAJU said...
    Namaskar, attendance please!/////

    வருகைப் பதிவு போட்டாயிற்று!

    ReplyDelete
  14. //////Blogger Kirupanandan A said...
    //போட்டியில் 32 பேர்கள் கலந்து கொண்டார்கள்.//
    32 + ஒருவர் பாடல் போட்டியில் கலந்துக் கொண்டார்.//////

    நல்லது. உங்கள் பரிந்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  15. /////Blogger Kirupanandan A said...
    விடை சரியோ தவறோ. நமக்கு வழ வழ கொழ கொழ என்பதெல்லாம் பிடிக்காது. சுருங்க சொல்லி விளங்க வைத்தல் என்பது போல் எதையும் சுருக்கமாகச் சொல்வதுதான் என் பாணி./////

    பட்டயக் கணக்காளர் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். Balance sheetஐ மட்டும் கொடுத்தால் போதும்!

    ReplyDelete
  16. /////Blogger kmr.krishnan said...
    எனது பெயர் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் வராவிட்டாலும்,நாடி சோதிட விதிகளின் படி முய‌ற்சி செய்து பார்த்தேன்.ஆட்சி பெற்ற குருவின் பார்வை 7ம் இடத்திற்குக் கிடைப்பதால் பிரிவினை சமாதானம் ஆகும் என்பது அங்கே சொல்லும் விதியாகும். அதன் படி கூறினேன்./////

    நல்லது. அடுத்த முறை நம் வழக்கப்படியே ஆராய்ந்து பதிலைச் சொல்லுங்கள் நண்பரே!

    ReplyDelete
  17. ////Blogger வேப்பிலை said...
    வெற்றி பெற்றவர் பட்டியலில் இடம்
    பெறவில்லை எனது பெயர்...
    பாடலாக பதில் அளித்ததால்
    பட்டியலில் இல்லை என்றாலும்
    பாடலாக கேட்ட கேள்விக்கு
    பாட்டாகத்தானே பதில் தர முடியும்
    வருத்தமில்லை என்றாலும்
    வருவேன் இதுபோன்ற பதில்களுடன்/////

    ஆஹா...வாருங்கள்!

    ReplyDelete
  18. //////Blogger Kirupanandan A said...
    //From today's lesson i learned that jupiter is only responsible for getting married not for saving a marriage//
    இதைப் படித்தவுடன் யானையைப் பார்த்த குருடர்கள் கதை ஞாபகத்திற்கு வருகிறது./////

    அவர் கருத்தை அவர் கூறியுள்ளார். ஆகவே அதில் தவறில்லை!

    ReplyDelete
  19. ///Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா வணக்கங்கள்.
    சுவராஸ்யமான பகுதி திரு.அய்யர் அய்யா அவர்களின் பங்களிப்பே.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.//////

    அய்யர் அவர்களின் கையில் வேப்பிலை இருப்பதைக் கவனித்தீர்களா பொன்னுசாமி?

    ReplyDelete
  20. ////Blogger siva kumar said...
    Quiz.no.78ற்கன பதிலை விரிவாக எழுதாமைக்கு மிகவும் வருந்துகிரன் enimel enrha thavaru nadagamal parthu kolkireen iya/////

    அதற்கு எதற்கு வருத்தம்? ஒன்றும் நஷ்டமில்லை. அடுத்தடுத்து பாடங்கள் வரும். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  21. //அவர் கருத்தை அவர் கூறியுள்ளார். ஆகவே அதில் தவறில்லை!//

    அவர் கருத்தாகச் சொன்னால் தவறில்லை. அதை conclusionஆக சொன்னதுதான் தவறு. திருமணம் நடந்ததற்கு களத்திரகாரகன் சுக்கிரன் உச்சமாக இருப்பதும் ஒரு காரணம். திருமணம் நிலைத்திருக்க குரு பார்வை உதவவில்லை என்பதை விட 7ம் இடத்தின் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பாப கிரகங்கள் ஆதிக்கம் செலுத்தியதும் 7ம் அதிபதி சந்திரன் அந்த ஸ்தானத்திற்கு 12ல் மறைந்ததும் காரணம். லக்கினாதிபதி லக்கினத்தில் இருந்தாலும் அவர் 2ம் அதிபதியுமாகிறார். லக்கினம் என்பது 2ம் இடத்திற்கு (குடும்பஸ்தானம்) 12ம் இடம் அல்லவா? குடும்பம் நிலைக்காததற்கு இதுவும் காரணம். (லக்கினாதிபதிக்குரிய பலனைக் கொடுத்து குடும்பாதிபதிக்குரிய பலனைக் கொடுக்கவில்லை என்பதாகச் சொல்லலாம்). இவற்றையும் சேர்த்துக் கொண்டுதான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். திருமணம் நடந்ததற்கும், அது நிலைக்காததற்கும் குரு மட்டுமே காரணம் என்பது போல் சொன்னது தவறு. அதைதான் சுட்டிக்காட்டினேன்.

    ReplyDelete
  22. //அவர் கருத்தாகச் சொன்னால் தவறில்லை. அதை conclusionஆக சொன்னதுதான் தவறு. திருமணம் நடந்ததற்கு களத்திரகாரகன் சுக்கிரன் உச்சமாக இருப்பதும் ஒரு காரணம். திருமணம் நிலைத்திருக்க குரு பார்வை உதவவில்லை என்பதை விட 7ம் இடத்தின் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பாப கிரகங்கள் ஆதிக்கம் செலுத்தியதும் 7ம் அதிபதி சந்திரன் அந்த ஸ்தானத்திற்கு 12ல் மறைந்ததும் காரணம். லக்கினாதிபதி லக்கினத்தில் இருந்தாலும் அவர் 2ம் அதிபதியுமாகிறார். லக்கினம் என்பது 2ம் இடத்திற்கு (குடும்பஸ்தானம்) 12ம் இடம் அல்லவா? குடும்பம் நிலைக்காததற்கு இதுவும் காரணம். (லக்கினாதிபதிக்குரிய பலனைக் கொடுத்து குடும்பாதிபதிக்குரிய பலனைக் கொடுக்கவில்லை என்பதாகச் சொல்லலாம்). இவற்றையும் சேர்த்துக் கொண்டுதான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். திருமணம் நடந்ததற்கும், அது நிலைக்காததற்கும் குரு மட்டுமே காரணம் என்பது போல் சொன்னது தவறு. அதைதான் சுட்டிக்காட்டினேன்.//

    Jus my thoughts only!
    I Would like to clarify my views on your reply.. this is what i meant... In some horoscopes like the one here chances of having a married life is very less because of malefic(s) in kendra.. another reason jupiter is not strong in the horoscope. it has only 3 benefic points. i partly agree with your concept of lagna lord view. i don't think that might be the reason for separation. Also this is one such complicated chart where in matching is very essential. this is kalasarpa dosha horoscope. usually while making match there should be similarity. girl's horoscope should have rahu-ketu from 1-7 or 2-8. well..also mars should be in 2,4,7,8,12. I am not sure what went wrong here.
    you may be aware of this again.. Like our sir says" first 30 years they don't see much success that includes marriage. sorry if this is a bit lengthy. .i am just a rookie. still long way to go..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com