மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.2.15

Quiz.no.76 Answer: படிப்பு வருது படிப்பு வருது படிக்கப் படிக்க படிப்பு வருது!


Quiz.no.76 Answer: படிப்பு வருது படிப்பு வருது படிக்கப் படிக்க படிப்பு வருது!

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம் 

பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.


புதிர் எண் 76 ற்கான விடை

10.2.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி  ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து 4 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:
1. ஜாதகி படு கோபக்காரர். சட்டென்று யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டைக்குப்போய் விடுவார். அதிரடியாகப் பேசி அனுப்பிவிடுவார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
2. ஜாதகி படித்தாரா அல்லது படிக்கவில்லையா? படித்தார் என்றால் எதுவரை படித்தார்? படிக்கவில்லை என்றால் ஜாதகப்படி ஏன் படிக்கவில்லை?
3. அவளுடைய பெற்றோர்கள் அவள் படித்து வேலைக்குப் போக வேண்டும் என்று கனவு கண்டார்கள். அவர்களுடைய கனவு நிறைவேறியதா அல்லது இல்லையா?
4. வேலைக்குப் போனார் என்றால் என்ன வேலைக்குப் போனார்? போகவில்லை என்றால் ஜாதகப்படி ஏன் போகவில்லை?

சரியான பதில்:

1. மனகாரகன் சந்திரன் கெட்டிருப்பதுதான் காரணம்.
2. மேல்நிலைப் படிப்பு வரை படித்தார். (Post Graduate)
3. பெற்றோர்களின் கனவு நிறைவேறியது.
4. ஜாதகி ஆசிரியை வேலைக்குப் போனார்

ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!

1. மீன லக்கினம். லக்கினாதிபதி குரு உச்சம் பெற்றுள்ளார். அதுவும் ஒரு திரிகோண வீட்டில் அமர்ந்திருக்கிறார். மிகவும் சிறப்பான அமைப்பு
2. நான்காம் அதிபதியும், கல்விக்குக் காரகனுமான புதன் லக்கினத்தில் இருக்கிறார். அத்துடன் நீசபங்க ராஜயோகத்துடன் இருக்கிறார்.
3. பாக்கியாதிபதி (Lord for Luck) செவ்வாயும் லக்கினத்தில் இருக்கிறார்.
4. மேலே குறிப்பிட்டுள்ள அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து லக்கினத்தை வலிமைப் படுத்தின. (They made the lagna very strong)
5. மனகாரகன் சந்திரனுடன் (Karaga for mind) கேது சேர்ந்துள்ளார்.அத்துடன் சனியின் பார்வையும், ராகுவின் பார்வையும் சந்திரன் மேல். அதனால் ஜாதகி குணக்கேடாக இருந்தார் (சின்ன வயதில்)
6.முதல் பதினேழு ஆண்டுகள் நடந்த ராகு திசையால், ஜாதகி படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தார். வகுப்பறையில் கடைசி பெஞ்ச் மாணவி
7. அதற்குப் பிறகு வந்த குரு மகா திசை அவருக்கு மன மாற்றத்தை ஏற்படுத்தியது. படிப்பிலும் நாட்டத்தை உண்டாக்கியது. அதிரடியாகப் படித்து, இளங்கலைப் பட்டம் வாங்கிஅய்துடன், மேலும் படித்து கல்வி போதிக்கும் படிப்பிலும் தேர்ச்சி பெற்று அதிலும் பட்டம் பெற்றார்.
8.பத்தாம் அதிபதி குருவின் பார்வை, லக்கினத்தின் மேல் விழுகிறது. (9th aspect) அத்துடன் லக்கினத்தில் உள்ள 3 கிரகங்களும் குருவின் பார்வையைப் பெறுகின்றன. ஆகவே ஜாதகிக்கு வேலை கிடைத்தது.
9. என்ன வேலை? வாத்தியாரம்மா வேலைதான். குரு திசை சுக்கிரபுத்தியில் அது கிடைத்தது.
10. ஜாதகியின் 26வது வயதில் கிடைத்தது. தசாபுத்திகளை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். (25 வருடங்கள் 4 மாதங்கள் என்ற கணக்கு வரும்)

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 25. பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில்  4 பேர்கள் மட்டுமே சரியான பதிலை  எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

வாத்தியார் வேலை (Teaching profession) என்பது தான் முக்கியமான பதில்! (key answer)  அதைக் குறிப்பிட்டு எழுதி 100% மதிப்பெண்கள் பெற்ற நான்கு பேர்களின் பெயரும் கீழே உள்ளது!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
******/////Blogger KJ said...    Sir,
    Please find my answers below.
    1. Short temper - Sevvai in Lagnam basically mention native is short temper.Also Second house owner Sevvai sits in Lagnam which is 12th for second house.
    Arguments - Suriyan ucham in second house who is sixth house owner. Second house owner with 3rd and 8th house owner Sukran.
    2. Education - Native is Post graduated. 4th house owner sits in Lagnam with strong Lagnathypathy's 9th aspect even though he is neesam (neesa - bangam here).
    3. Job - Native got good job. 10th house owner Guru ucham (also he is lagnathypaty) he helps native to get good job.
    4. Native got successful teaching profession bcz 10th house owner guru sits in 5th house and aspects Budhan.
    Additionally, Sukran and Sevvai in Lagnam - Native is beautiful, height and colorful. May be unmarried or troubles in married life. combination of Sevvai + sukran in lagnam is not good for native.
    Thanks,
    Sathishkumar GS
    Monday, February 09, 2015 12:44:00 PM/////
-------------------------------------------------
2
******/////OpenID guest2015 said...
    1. ஜாதகி படு கோபக்காரர். சட்டென்று யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டைக்குப்போய் விடுவார். அதிரடியாகப் பேசி அனுப்பிவிடுவார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
    sixth lord sun in 2nd house. so she will involve in heated arguments with others. Moon is the karaka for temperament. it is in association with ketu. Adding to that 7th aspect from rahu and saturn in sun's home (inimical house). so she will lose her temperament for no reason. also 2nd lord mars in 1st house under paapakartari yoga.
    . ஜாதகி படித்தாரா அல்லது படிக்கவில்லையா? படித்தார் என்றால் எதுவரை படித்தார்? படிக்கவில்லை என்றால் ஜாதகப்படி ஏன் படிக்கவில்லை
    lagna lord sun and venus got exalted Mercury got neechbhang raj yoga through venus and all these 4 planets are positioned strongly with 6,7 ashtavarga rekas.so she would have studied something related to law, finance, maths or even medicine.
    3. அவளுடைய பெற்றோர்கள் அவள் படித்து வேலைக்குப் போக வேண்டும் என்று கனவு கண்டார்கள். அவர்களுடைய கனவு நிறைவேறியதா அல்லது இல்லையா?
    yes. maandhi in 10th house will give good results too.
    4. வேலைக்குப் போனார் என்றால் என்ன வேலைக்குப் போனார்? போகவில்லை என்றால் ஜாதகப்படி ஏன் போகவில்லை?
    Again lagnalord and 10th lord got exalted. during jupiter mahadasha she would have definitely got placed well. mars in 1st house. jupiter and sun's exaltation. my 1st guess professor/teacher/- govt executive
    2nd guess high profile job in law and finance
    3rd- doctor.
    Monday, February 09, 2015 4:19:00 PM////////
-----------------------------------
3
******//////Blogger kmr.krishnan said...
    1.வாக்கு ஸ்தானதிபதி செவ்வாயாக இருந்து அவ‌ர் லக்கின பாவத்தில் தன் வீட்டுக்கு 12ல் அமர்ந்ததும்,லக்கினாதிபதி குரு 5ல் அமர்ந்து உச்சம் பெற்றதும்,பகை ஸ்தானதிபதி சூரியன் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து உச்சம் பெற்றதும் ஜாதகியை தன் அதிகாரத்தினை(அகங்காரத்தினை)நிலை நாட்ட வைக்கும்.அது கோபமாக அவரைப்பேசவைக்கும்.ராகுவின் தசை 17 1/2 வயதுவரை இருந்ததும் கோபத்திற்கான காரணம்.
    2.ஜாதகி படித்தவர்தான்.பட்ட மேற்படிப்பு கணக்கு/அறிவியல் ஆய்வாளராக பரிமளித்தார்.குரு சுக்கிரன் புதனின் தொடர்பு, சுக்கிரன், குரு உச்சம் ஆகியவை இவரை சரஸ்வதி யோகம் உடையவராக் ஆக்குகிறது.புதன் செவ்வாய் இணைப்பு இவரை அறிவியல் ஆய்வாளர் அளவுக்கு உயர்த்தியது.
    3.வேலைக்குச் சென்றார். கல்லூரி வ்ரிவுரையாளராக அரசாங்க சம்பளம் பெற்று இருப்பார்.10ம் அதிபன் குரு 5ல் உச்சம் பெற்றது, அவர் 9 பாக்கிய ஸ்தானத்தைப் பார்த்தது பத்தாம் இடத்திற்கு 38 பரலும்,பத்தாம் அதிபனுக்கு 6 பரலும் அஷ்டவர்கத்தில் உள்ளது.எனவே வேலை நிச்சயம்.
    4.கல்லூரி வ்ரிவுரையாளராக அரசாங்க சம்பளம் பெற்று இருப்பார்.6ம் அதிப்னையும் வேலைக்கானவராக எடுத்துக்கொள்ள வேண்டும்=அவர் சூரியன். புதன் நீசபங்கம் அடைந்ததும் 2ல் அமர்ந்து உச்சம் பெற்றது அரசாங்க வேலையையும் வாக்கு ஸ்தானதிபதி செவ்வாய் புத்திகாரகன் புதனுடன் அமர்ந்ததும்,குருவின் பார்வை புதன் செவ்வாய்க்கு கிடைத்ததும் இவரை அறிவுரை கூறி வழி நடத்தும் பொறுப்பில் வைத்திருக்கும். எனவே கல்லூரி ஆசிரியர்வேலை.
    எனது இரண்டாம் மகள் பிறந்தது இதே சித்திரை மாதம் ஹஸ்தத்தில் இந்த ஜாதகி சதயம். 22 ஏப்ரல் 1979 விடியற்காலை 5 மணி 19 நிமிடம் 15 வினாடிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
    Monday, February 09, 2015 4:45:00 PM//////
--------------------------------------------
4
******///Blogger Chandrasekharan said...
    Madhippirkuriya Aiya Vanakkam,
    1.) 6-m adhipathy Sooriyan uccham petru, Vakku sthanathil amarvu and chevvai lagnathil. Adhanal kobakarar.
    2.) 4-m adhibathy budhan neesam petralum, Sukranal Neesabangham adaindhullar and Guru paarvai 4-m adhibathy(Budhan). 9-m adhibathy chevai paarvai 4-m veedu. Degree Mudithavarey.
    3.)Petrorgaladhu kanavu niraiveriyadhu.
    4.) 10-m adhibathy Guru Uccham and 6-m adhibathy Sooriyan uccham and Sooriyanukku, Kendhirathil Guru. Government Employee.. May be Teacher or Banking Professional.
    Thank You.
    Monday, February 09, 2015 5:13:00 PM/////
--------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11 comments:

 1. நன்றி வாத்தியாரே!!!

  இன்றைய பதிலில் புதிதாக சில ஜாதக அலசல் விசயங்களை கற்றுக்கொண்டேன்... அரசாங்க வேலை மற்றும் ஆசிரியர் வேலைக்கான அமைப்புகளையும் வெற்றி பெற்றோரின் பதில்கள் தெளிவு படுத்துகின்றன...  அன்புள்ள மாணவன்,
  பா. லக்ஷ்மி நாராயணன்.
  தூத்துக்குடி.

  ReplyDelete
 2. மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றோரின் பட்டியலில் எனது பெயரினைக் காண மகிழ்ச்சி ஐயா!
  ஜாதகி கடைசி 'பெஞ்ச்' மாணவியாக விளங்கினார் என்பது ஒரு செய்திதான்.குரு தசாவில் 'ஃப்ராக் ஜம்ப்'செய்து படிக்கத் துவங்கினார் என்பதும் ஓர் ஆச்சரியம்தான்.தசா புக்தியின் முக்கியத்துவம் இதில் இருந்து தெரிகிறது.

  நமது காலத்தில்தான் படிக்காதவர்கள் கடைசி பெஞ்ச். இப்போதெல்லாம் படிப்பவர்கள் தான் கடைசி பெஞ்ச். படிப்பாற்றல் குறைவாக இருப்பவர்களை முன் வரிசையில் அம்ர்த்தி அவர்களை ஆசிரியரின் நேரடிப்பார்வையில் வைத்திருப்பது இக்காலத்திய நடைமுறை.

  நாள் தோறும் மின் அஞ்சலில் வரும் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த வரையில் பலன் கூறிவருகிறேன்.பதில் இலவசம்தான். தகுதியிருப்பவர்கள் என்று நான் அனுமானிப்பவர்களிடம் பதிலைக் கூறிவிட்டு, நான் இணைந்துள்ள தஞ்சை 'அருள் ஒளி அன்னதான அறக்கட்டளை'சார்பாக நன்கொடைக்கு துண்டு ஏந்துகிறேன் .10ல் ஓரிருவர் விசாரிக்கின்றனர். அதில் பாதியினர்
  நன்கொடை அளிக்கின்றனர்.

  நமது வேப்பிலை சுவாமிகள் இந்த அறக்கட்டளை மீது மிகுநத அக்கறை காட்டுகிறார்.அடிக்கடி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி உற்சாகம் ஊட்டுகிறார்.
  தனது நண்பர்கள்/சீடர்கள் மூலம் நன்கொடை பெற்றுத் தருகிறார்.நானும் அவரும் இந்த வகுப்பறையில் செய்து வந்த (போலி)சச்சரவுகளை அறிந்த
  நண்பர் ஆனந்த் போன்ற‌வர்களுக்கு இது ஆச்சரியம் அளிக்கலாம்.நேரில் சந்திக்காத ஒருவர் மற்றொருவர் மீது வைக்கும் நம்பிக்கை வியப்பான செய்தியே."முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அக நக நட்பது நட்பு" என்பதற்கு எங்கள் இருவரின் நட்பே ஓர் இலக்கணம்.

  மீண்டும் நன்றி ஐயா!
  கே.முத்துராமக்ரிஷ்ணன்(ஆங்கரை‍=லால்குடி)
  kmrk1949@gmail.com

  ReplyDelete
 3. வெற்றி பெற்ற அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்...

  குறிப்பாக திரு. KMR. கிருஷ்ணன் அவர்களின் துல்லியமான கணிப்புகள் மற்றும் அவருடைய ஜோதிட அனுபவத்தை இவ்விடத்தில் பாராட்டி பெருமை அடைந்து கொள்கிறேன்.


  வாத்தியாரின் அன்புள்ள மாணவன்,
  பா. லக்ஷ்மி நாராயணன்.
  தூத்துக்குடி.

  ReplyDelete
 4. dear sir


  உச்சனை உச்சன் பார்வைக்கும்
  நீச்சனை நீச்சன் பார்வைக்கும் பலன் என்ன?

  நன்றி

  ReplyDelete
 5. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
  நன்றி வாத்தியாரே!!!
  இன்றைய பதிலில் புதிதாக சில ஜாதக அலசல் விசயங்களை கற்றுக்கொண்டேன்... அரசாங்க வேலை மற்றும் ஆசிரியர் வேலைக்கான அமைப்புகளையும் வெற்றி பெற்றோரின் பதில்கள் தெளிவு படுத்துகின்றன...
  அன்புள்ள மாணவன்,
  பா. லக்ஷ்மி நாராயணன்.
  தூத்துக்குடி.//////

  நல்லது. தொடர்ந்து படியுங்கள். இன்னும் மேலான தெளிவைப் பெற அது உதவும்!

  ReplyDelete
 6. ///Blogger kmr.krishnan said...
  மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றோரின் பட்டியலில் எனது பெயரினைக் காண மகிழ்ச்சி ஐயா!
  ஜாதகி கடைசி 'பெஞ்ச்' மாணவியாக விளங்கினார் என்பது ஒரு செய்திதான்.குரு தசாவில் 'ஃப்ராக் ஜம்ப்'செய்து படிக்கத் துவங்கினார் என்பதும் ஓர் ஆச்சரியம்தான்.தசா புக்தியின் முக்கியத்துவம் இதில் இருந்து தெரிகிறது.
  நமது காலத்தில்தான் படிக்காதவர்கள் கடைசி பெஞ்ச். இப்போதெல்லாம் படிப்பவர்கள் தான் கடைசி பெஞ்ச். படிப்பாற்றல் குறைவாக இருப்பவர்களை முன் வரிசையில் அம்ர்த்தி அவர்களை ஆசிரியரின் நேரடிப்பார்வையில் வைத்திருப்பது இக்காலத்திய நடைமுறை.
  நாள் தோறும் மின் அஞ்சலில் வரும் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த வரையில் பலன் கூறிவருகிறேன்.பதில் இலவசம்தான். தகுதியிருப்பவர்கள் என்று நான் அனுமானிப்பவர்களிடம் பதிலைக் கூறிவிட்டு, நான் இணைந்துள்ள தஞ்சை 'அருள் ஒளி அன்னதான அறக்கட்டளை'சார்பாக நன்கொடைக்கு துண்டு ஏந்துகிறேன் .10ல் ஓரிருவர் விசாரிக்கின்றனர். அதில் பாதியினர் நன்கொடை அளிக்கின்றனர்.
  நமது வேப்பிலை சுவாமிகள் இந்த அறக்கட்டளை மீது மிகுநத அக்கறை காட்டுகிறார்.அடிக்கடி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி உற்சாகம் ஊட்டுகிறார்.
  தனது நண்பர்கள்/சீடர்கள் மூலம் நன்கொடை பெற்றுத் தருகிறார்.நானும் அவரும் இந்த வகுப்பறையில் செய்து வந்த (போலி)சச்சரவுகளை அறிந்த நண்பர் ஆனந்த் போன்ற‌வர்களுக்கு இது ஆச்சரியம் அளிக்கலாம்.நேரில் சந்திக்காத ஒருவர் மற்றொருவர் மீது வைக்கும் நம்பிக்கை வியப்பான செய்தியே."முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அக நக நட்பது நட்பு" என்பதற்கு எங்கள் இருவரின் நட்பே ஓர் இலக்கணம்.
  மீண்டும் நன்றி ஐயா!
  கே.முத்துராமக்ரிஷ்ணன்(ஆங்கரை‍=லால்குடி)
  kmrk1949@gmail.com///////

  நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 7. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
  வெற்றி பெற்ற அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்...
  குறிப்பாக திரு. KMR. கிருஷ்ணன் அவர்களின் துல்லியமான கணிப்புகள் மற்றும் அவருடைய ஜோதிட அனுபவத்தை இவ்விடத்தில் பாராட்டி பெருமை அடைந்து கொள்கிறேன்.
  வாத்தியாரின் அன்புள்ள மாணவன்,
  பா. லக்ஷ்மி நாராயணன்.
  தூத்துக்குடி.//////

  நல்லது நன்றி தூத்துக்குடிக்காரரே!

  ReplyDelete
 8. /////Blogger ashokdiyan said...
  dear sir
  உச்சனை உச்சன் பார்வைக்கும்
  நீச்சனை நீச்சன் பார்வைக்கும் பலன் என்ன?
  நன்றி/////

  அதைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களைப் படியுங்கள்!

  ReplyDelete
 9. ஐயா வணக்கம்
  புதிர்கள் படிக்க படிக்க புதிய கோணம் பிறக்கின்றன .
  நன்றி ஐயா .
  கண்ணன் .

  ReplyDelete
 10. //நானும் அவரும் இந்த வகுப்பறையில் செய்து வந்த (போலி)சச்சரவுகளை அறிந்த
  நண்பர் ஆனந்த் போன்ற‌வர்களுக்கு இது ஆச்சரியம் அளிக்கலாம்.//

  ஆச்சரியம் அளிக்கவில்லை. இது சர்ச்சைதானே தவிர சண்டையல்லவே. இது போக இருவருக்கும் எந்த முன் விரோதமும் இருக்க முடியாது. அவர் மீது எனக்கும் எந்த சிறு வருத்தமும் இல்லை. ஒன்றைச் சரியில்லை என்று சொல்வார். ஆனால் எது சரியென்று சொல்லமாட்டார். (இதற்கான காரணமும் எனக்குப் புரியாமல் இல்லை). சில வேளைகளில் இன்னொருவர் வந்து சொல்வார் என்பார். (அவருக்கு இவர் எப்போதிலிருந்து spokesperson ஆனார் என்று தெரியாது). வீண் விவாதங்களுக்கு எனக்கு நேரமில்லை என்பது போக யார் ஒருவருடைய (வி)வாதத்திற்கு பதில் இருக்கும். பிடிவாதத்த்திற்கு நீங்கள் உட்பட யாரிடமும் பதில் இருக்காது, இருக்கவும் முடியாது.

  ReplyDelete
 11. sir

  so happy to see that my prediction turned correct. Thanks for your encouragement.

  sree

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com