மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

19.2.15

Quiz.no.77 Answer: பேச்சு வந்தது. பேச்சு வந்தது. பேசப் பேசப் பேச்சு வந்தது!


Quiz.no.77 Answer: பேச்சு வந்தது. பேச்சு வந்தது. பேசப் பேசப் பேச்சு வந்தது!

புதிர் எண் 77 ற்கான விடை

19.2.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், குழந்தை ஒன்றின் ஜாதகத்தைக் கொடுத்து 2 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1`. குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
2. ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?

சரியான பதில்:

1. பேச்சுக்குரிய இரண்டாம் வீடு மற்றும் அதன் அதிபதி கெட்டிருந்ததால் 
பேச்சு வரவில்லை.
2. அது துவக்க நிலை. பின்னால் ரிஷப லக்கினத்திற்கு உரிய யோகாரகன் சனீஷ்வரனின் அதீதப் பார்வையால் மெல்ல மெல்ல பேச்சு வந்தது!

ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!


ரிஷப லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திற்கு எட்டில். அதுவும் பாப கர்த்தாரி யோகத்தில்
துவக்க திசையாக ராகு மகா திசை.
இரண்டாம் வீடுதான் பேச்சிற்கு உரிய வீடு. House of speech. ஜாதகத்தில்
2ம் வீடு பாப கர்த்தாரி யோகத்தில் சிக்கி இருக்கிறது. ஒரு பக்கம் கேது.
மறுபக்கம் செவ்வாய்.
அத்துடன் 2ம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு 6ல். அத்துடன் சூரியனோடு அஸ்தனமானதுடன், ராகுவுடன் சேர்க்கை.
அதனால் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை.

Small correction
(சந்திர ராசிக்கு இரண்டாம் இடத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள
வேண்டும். அந்த வீட்டிற்கு உரிய செவ்வாய் அந்த வீட்டிற்கு 
திரிகோணத்தில் இருப்பதுடன், யோககாரகன் சனியின் பார்வையையும் பெறுவது சிறப்பான அம்சமாகும்)

சிக்கல்களுக்கு சந்திர லக்கினத்தையும் பார்க்க வேண்டும். இங்கே
சந்திரன் நின்ற இடத்திற்கு இரண்டாம் அதிபதி செவ்வாய் அந்த
வீட்டிற்கு ஒன்பதில் முக்கியமான திரிகோணத்தில்
-----------------------------------------------------------------------
அத்துடன் ரிஷப லக்கினத்திற்கு யோககாரகனான சனியின்
நேரடிப் பார்வையில், குரு பகவான் ஐந்தில் அத்துடன் 9ம்
பார்வையாக லக்கினத்தைப் பார்க்கின்றார்.
லக்னாதிபதி சுக்கிரன் பார்வை வாக்கு ஸ்தானத்தின் மேல்.
யோககாரகன் சனீஷ்வரனும் லக்கினாதிபதி சுக்கிரனும் கை கோர்த்துக் குழந்தைக்குப் பின்னாளில் பேச்சை வரவைத்தார்கள்.
குழந்தை ராகு திசை சந்திரன் மற்றும் செவ்வாய் புத்தியில் மெல்ல 
மெல்லப் பேசத்துவங்கியவன், தனது பத்தாவது வயதில் குரு மகா 
திசை துவங்கியவுடன் நன்றாகப் பேசினான்.

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 29. பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில்  17 பேர்கள் மட்டுமே
சரியான  பதிலை  எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும்
பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

பேச வரும் என்பது தான் முக்கியமான பதில்! (key answer)  அதைக்
குறிப்பிட்டு எழுதி 100% மதிப்பெண்கள் பெற்ற 17  பேர்களின் பெயரும்
கீழே உள்ளது!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
/////Blogger amuthavel murugesan said...
Vanakam iyya,
Answer to Quiz:77
2nd lord is the owner of speech.
Here Budhan is in with Ragu & Suryan.
2nd place & langathipathi is in Pabakarthari yago.
She will speak with help of Guru.
M.Santhi
Wednesday, February 18, 2015 10:38:00 AM/////
--------------------------------------------------------
2
//////Blogger Kamban said...
1. குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
2ஆம் இடத்தின் அதிபதி புதன் பரிபூரணமாய் ராகு சூரியனுடம் சேர்ந்து
கெட்டு இருக்கிறார் அதனால் பேச்சு வராது.
2. ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?
லக்னாதிபதி சுக்கிரன் பார்வை வாக்கு ஸ்தானத்தின் மேல், பின்னால் 
பேச்சு வரும்.
Wednesday, February 18, 2015 11:34:00 AM /////
-----------------------------------------------
3
/////Blogger Govindasamy said...
1. வாக்குஸ்தானாதிபதி புதன் லக்கினத்திற்கு ஏழில் இரண்டாமிடத்திற்கு ஆறில் ராகுவுடனும் சூரியனுடனும் இருப்பதால் ராகுதிசையில் பாதிப்பு.
மேலும் இரண்டாமிட அதிபதி சுக்கிரன் குருவினது வீட்டில் - பகை வீட்டில்.
2. குழந்தைக்கு குருதிசையில் பேச்சு வந்திருக்கும். குரு திரிகோணத்தில் இருப்பதால் குருபார்வை லக்கினத்தில். நன்மை செய்யும்.
Wednesday, February 18, 2015 11:55:00 AM /////
-----------------------------------------------
4
/////Blogger bala said...
வணக்கம் ஐயா,
2ம் வீடு வாக்கு ஸ்தானம்
1)2ம் வீடு பாப கர்த்தாரி யோகத்தில்.
இரண்டாம் வீட்டு அதிபதி(வாக்கு ஸ்தானதிபதி) புதன், 7ல் உடன் சூரியன்+ உச்சம் பெற்ற ராகு கூட்டு.
இரண்டாம் அதிபன் அந்த வீட்டில் இருந்து 6ல் மறைந்து விட்டார். அதனால் பேச்சு திறன் வரவே இல்லை.
காது சம்பந்தமுடைய மூன்றாம் இடத்தில் செவ்வாய்+மாந்தி. .ஆகவே பிறவியிலேயே கேட்கும் திறன் குறைந்ததால் பேச்சு வரவில்லை.
2)
லக்னாதிபதி 8ல். ஆனால் சுக்கிரன் 8ல் மறைவு இல்லை என்பது விதி.
2ம் வீட்டிற்கு லக்னாதிபதி சுக்கிரன் பார்வை. சுக்கிர திசை/புத்தி நேரத்தில் பேச்சு திறன் வரும்.
Wednesday, February 18, 2015 12:01:00 PM /////
-----------------------------------------------
5
/////Blogger murali krishna g said...
அய்யா,
குழந்தையின் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானாதிபதி புதன் அந்த வீட்டிற்கு
ஆறாம் வீட்டில் இருக்கிறார். வாக்கு ஸ்தானமான மிதுனமும் பாப கத்திரி
யோகத்தில் மாட்டி கொண்டிருக்கிறது.
ராகு தசை முடிந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் குரு தசையில் பேச்சு வந்திருக்கும். குரு பாக்ய ஸ்தானத்தையும் முக்கியமாக
லக்னத்தையும் நோக்குகிறார்.
சரியா அய்யா ?.
Wednesday, February 18, 2015 12:13:00 PM /////
-----------------------------------------------
6
/////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 22 நவெம்பெர் 1992 அன்று மாலை 6மணி 4 நிமிடம் 30 வினாடிகளுக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துகோண்டேன்
1.இரண்டாம் இடம்,இரண்டாம் இடத்து அதிபதி,பேச்சுக்கான காரகன் ஆகியவர்கள் கெட்டுவிட்டதால் பேச்சு வரவில்லை.
2.பின்னாலும் பேச்சு வராது
விளக்கம்:
1.ரிஷபம் தான் கழுத்து தொண்டைக்கான பாவம். அது லக்கினமாகி
அதிலேயே கேது அமர்ந்தது.புதன் இரண்டாம் இடத்திற்கானவர்,
பேச்சுக்கான காரகர், இவர் 7ல் சென்று அமர்ந்து, தன் விட்டுக்கு ஆறில், சூரியனால் எரிக்கப்பட்டு பலவீனமடைந்தார். மேலும் ராகுவாலும் பாதிக்கப்பட்டார்.
கேது,செவ்வாய்,மாந்தியால் சூழப்பட்டு இரண்டாம் இடத்தினை பாபகர்த்தாரியில் வைத்துவிட்டது.எனவே பேச்சு வரவில்லை.லக்கினாதிபதி 8ல் மறைந்தது.சந்திரன் லக்கினத்திற்கு ஆறில் மறைந்தது. இவையும் காரணம்.
2.மூன்றாம் இடம் காது சம்பந்தமுடையது. அந்த இடத்தில் செவ்வாயும் மாந்தியும் அமர்ந்து காது கேளாமல் செய்தது.மூன்றாம் இடத்திற்கும்
அங்கே அமர்ந்த செவ்வாயுக்கும் சனியின் பார்வை.எனவே செவிப்புலன் மிகவும் அதிகமாகப் பாதிப்புக்கு உள்ளானதால்தான் பேச்சு வரவில்லை.
நவாம்சத்திலும்
இரண்டாம் இடம் சனியால் பாதிப்பு.இரண்டாம் இடத்துக்கார‌ன் 4ல்
அமர்ந்து பரம எதிரியான செவ்வாயாலும், மாந்தியாலும் பாதிப்பு.குரு 
பார்வை லக்கினத்திகு, ராசி சக்கரத்திலும் நவமசத்திலும் இருப்பதால்
இவர் செவிப்புலன் வாய் பேசாதவர் பள்ளியில் சேர்க்கப்பட்டு ஓரளவு மழலையாகப் பேச அறிந்திருப்பார். ஆனாலும் சகஜமான பேச்சு வரவில்லை.
Wednesday, February 18, 2015 1:21:00 PM /////
----------------------------------------------------
7
/////Blogger venkatesh r said...
திர் எண் : 77 க்கான அலசல்.
குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
1. லக்னாதிபதி 8ல் மறைந்து பாபகர்த்தாரியின் பிடியில் வலுவிழந்துள்ளார்.
2. 2ம் அதிபதி புதன் 7ல் வக்கிரமடைந்து ராகுவுடன் கூட்டணி வைத்துள்ளார்.
3. 2மிடமான வாக்கு ஸ்தானம் பாபகர்த்தாரியின் பிடியில் உள்ளது.
4. உடல் காரகன் சூரியனும் ராகுவின் பிடியில்.
5. பிறக்கும் போது இருந்த‌ ராகு தசை.
மேற்கண்ட காரணங்களால் பேச்சு வரவில்லை.
ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?
குரு தசா ஆரம்பித்த பிறகு, பேச்சு வந்திருக்கும்.
1. 2ம் அதிபதி புதன் லக்ன கேந்திரத்தில் 7ல் அமர்வு மற்றும் சுபகர்த்தாரியில் உள்ளார்.
2. லக்னாதிபதி சுக்கிரனின் பார்வை 2மிடத்திற்கு உள்ளது.
குருவின் சுய‌ புக்தியின் முடிவில், கிட்டத்தட்ட 12 வயதில் பேச ஆரம்பத்திருப்பார்.
Wednesday, February 18, 2015 2:06:00 PM /////
-------------------------------------------------
8
Blogger Anantha Kumar said...
வணக்கம் சார் இத்தனை நாட்களாக வகுப்பறைக்கு வெளிய நின்று
பாடங்களை படித்து வந்தேன் இது தான் வகுப்பறைக்கு உள்ளே வந்து
எழுதும் முதல் தேர்வு தவுறுகள் இருந்தால் மன்னிக்கவும் சார்
குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
1.பேச்சுக்கு உரிய இடம் ஆனா 2ம் இடம் பவகர்த்தியோகத்தில் உள்ளது
2.லக்கனத்தில் நீசமான கேது அமர்ந்து ஜாதகருக்கு தடுமாற்றத்தை
கொடுக்கிறார்
3.2ம் இடத்துக்கும், பேச்சுக்கு உரிய கிரகமான புதன் 7ல் கேந்திரத்தில்
இருந்தாலும் உச்சம் பெற்ற ராகு மற்றும் சூரியனுடன் இணைந்து
அவரும் பாபகிரகம் மாகி தன சுயத்தை இழந்து உள்ளார்
4.மனதுக்கு காரகன் சந்திரன் 6ல் சனிபகவான் பார்வை வாங்கி மறைந்து ஜாதகருக்கு மனதை ஒரு நிலை படுத்த விடாமல் தடுக்கிறார்
5.புதனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 3ல் நீசம் பெற்று சனிபகவானின்
பார்வை பெற்று மேலும் மாந்தி உடன் கூட்டாக அமைந்து அவரும் தன்னுடைய பலத்தை இழந்துள்ளார்
6.ராசிக்கு இரண்டில் மூன்று பாப கிரகங்கள்( பொதுவாக இரண்டிற்கு
மேற்பட்ட கிரங்கள் ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடத்தை பாதிக்கவே
செய்யும் ஆனால் இந்த விதி வெற்றி ஸ்தனமான 11ம் இடத்திருக்கு பொருந்தாது
7.மேலும் உச்சம் ராகு பாப கிரங்களுடன் சேர்ந்து திசையை நடத்துவதால் ஜாதகருக்கு பேச்சு வரவில்லை
பேச்சு வரும் ஆனால் சரளமாக வராது திக்கி திக்கி தான் பேசுவார்
காரணங்கள்
1.லக்னத்திற்கு 2ம் வீட்டு அதிபதி 7ல் சுபகர்த்தியோகத்தில் கேந்திரத்தில் இருப்பது (8ம் வீட்டில் சுக்கிரன், 6ம் வீட்டில் சந்திரன்)
2.ராசிக்கு 2ம் வீடும் சுபகர்த்தியோகத்தில் உள்ளது சார் (3ம் வீட்டில் சுக்கிரன், 1ம் வீட்டில் சந்திரன்)
சார் எனக்கு தெரிந்த அளவு எக்ஸாம் எழுதிருக்கேன் பேப்பரா திருத்தி மார்க் எவ்வோளோனு சொல்லுங்க சார் :-)
Wednesday, February 18, 2015 2:48:00 PM ////
-----------------------------------------------
9
////Blogger anand tamil said...
1. குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
காரணம் :
2ம் வீட்டிற்க்கு அதிபதி புதன் 2ம் வீட்டிற்க்கு 6இல் மறைந்தது .
சுக்கிரன் லக்கினாதிபதி மற்றும் 6ம் வீட்டு அதிபதி. சுக்கிரன் 8இல் மறைந்து 2ம் வீட்டை பார்த்தார்
2. ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?
பேச்சு வரும் . காரணம் புதன் பூர்வ புண்ணிய அதிபதி . புதன், 4ம் வீட்டு அதிபதி சூரியன் மற்றும் குருவின் பார்வை லக்கினத்தில் பதிவதாலும் .
சுக்கிரன் லக்கினாதிபதியாகவும் இருந்து 2ம் வீட்டை பார்ப்பதாலும்
Wednesday, February 18, 2015 5:48:00 PM /////
------------------------------------------------
10
//////Blogger Raja Sekaran said...
லக்னத்தில் கேதுவும் ஏழாமிடத்தில் ராகுவும் உள்ளது. வாக்கு ஸ்தானாதிபதியான புதன் ஏழாமிடத்தில் ராகு மற்றும் சுகஸ்தான அதிபதியான சூரியனுடன் உள்ளார். நடப்பது ராகு திசை. லகனாதிபதியான சுக்கிரன் எட்டாமிடத்தில் மறைந்து உள்ளார். எனவே பேச்சு வரவில்லை. ஆனால் லக்னத்தை குரு பார்ப்பதால், அடுத்து வரக்கூடிய குரு திசையில் கண்டிப்பாக பேச்சு வரும்.
Wednesday, February 18, 2015 6:38:00 PM /////
------------------------------------------------
11
////Blogger Regunathan Srinivasan said...
அன்புள்ள அய்யா ,
லக்னம் ரிஷபம்.லக்னாதிபதி 8 இல் மறைவு.வாக்கு ஸ்தானம் என்பது 2 ஆம் இடம்.2 மற்றும் 5 ஆம் அதிபதி புதன் 7 ஆம் இடத்தில உள்ளார்.பிறப்பில்
பேச்சு இல்லை என்றாலும் பின்னாளில் பேச்சு வந்திருக்க வேண்டும்.
குரு திசையில் புதன் புத்தியில் பேச்சு வந்திருக்க வேண்டும் . மேற்கொண்டு
என்ன எழுதுவது என்று தெரியவில்லை...மற்றவர்களின் பதிலுக்காக மேலும் உங்களின் முடிவுக்காக காத்திருக்கிறேன்
S . ரகுநாதன்
Wednesday, February 18, 2015 7:00:00 PM /////
---------------------------------------------------------
12
/////Blogger Kirupanandan A said...
இதற்கு 2ம் இடம் (வாக்குஸ்தானம்) மற்றும் புதன் இவர்கள் கெடக்கூடாது. இந்த ஜாதகத்தில் 2ம் அதிபதியுமான புதன் பாப கிரகங்களுக்கிடையில்
இருப்பதுதான் காரணம். இது தவிர 2ம் இடம் பாப கர்த்தாரி யோகத்தில் இருப்பதும் ஒரு காரணம்.
புதன் சுபகர்த்தாரி யோகத்தில் இருப்பதால் பின்னாளில் பேச்சு வர வாய்ப்புள்ளது.
Wednesday, February 18, 2015 7:15:00 PM ///////
-----------------------------------------------------------
13
/////Blogger vignesh.t Kumar said...
VIGNESH : 2 am idam pavakarthi yogathil, oru pakam kethu matroru pakam sevvai 
lagnathipathi and rasi adhipathi 8 l maraivu , idhu ellam serthu vai pesa mudiyadha
 padi seidhadhu , may be SUKIRAN ( lagnadhipathi) arulal , 
pesa vaipundu
Wednesday, February 18, 2015 8:25:00 PM /////
-------------------------------------------------
14
/////Blogger Chandrasekharan said...
Respected Sir Vanakkam,
1.) 2-m adhibathy Budhan 7-il irundhalum, Avar veetirku 6-il ullar. Idhudhan pechuvaradhadarkku migaperiya karanamaga enakku thondrugiradhu. 
Kethuvin paarvaiyaiveru petrullar.
Budhanukku idam alitha Chevvai neesam. 
Lagnadhipathy 8-il amarvu.
Astamadhipathy Guru 5-il amarndhu 9-m paarvayaga lagnathai parkiraar.
Pechu kandippaga varum aanal 100% fluencyyaga varuvadhu kadinam.
Ennudaya lagnamum rishabam, sukran 8-il and budhan 8-il.. Bhavathil budhan 7-il ullar.. adhanaldhan naan pala nerangalil Fluencyyaga pesuvadhu 
illai. stammeringaga pesugiraen. 
Pechu sariyaga illai endral velai kidaikkadhu, mana sangadangal endru ellam nadakkum. Stammering irukkuravanukkudhan andha vedhanai 
puriyum...
Kuzhandhaiku Nandraga pesa varavendum endru Iraivanai Manamaara Vendugiraen.
Thank You.
Wednesday, February 18, 2015 9:20:00 PM /////
------------------------------------------------
15
//////Blogger Ravichandran said...
Ayya,
1. The reason for not getting speech is Second house owner(Bhudhan) in 6th house 
from 2nd house. Moreover is joined with Neecha Rahu and 
Combust with Sun as well
2. He will get speech after his Rahu Desa completes. After completing Neecha Rahu 
Dasa, he will get speech.
Your Student,
Trichy Ravi
Wednesday, February 18, 2015 9:58:00 PM /////
---------------------------------------------
16
//////Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
ஜாதகர் ரிஷப லக்கனம்
துலாம் ராசி
லக்கன அதிபதி சுக்கிரன்
1. 2ஆம் வீடான வாக்கு ஸ்தான அதிபதி பூரனமாக கெட்டுள்ளார்
2. ஜாதகருக்கு பேச்சு வரும்
1. 2ஆம் வீடான வாக்குஸ்தான அதிபதி புதன் சூரியன் மற்றும் ராகுவுடன் சேர்ந்து கிரக யுத்ததில் உள்ளார்
புதன் தன் வீட்டிற்கு 6ம் வீட்டில் உள்ளார் அதுவும் சாதகமாக இல்லை
வாக்குஸ்யான அதிபதி புதனிற்கு சுப கிரக பார்வைகள் இல்லை இதுவும்
ஒரு கரனம்
வாக்குஷ்தான அதிபதி புதனிற்கு நிச்சமான கேதுவின் பார்வையும்
விழுவதும் ஒரு குறை 2ஆம் வீட்டிற்கு லக்கின அதிபதி பார்வை
பெருவதால் பேச்சு வரும்.
Wednesday, February 18, 2015 10:17:00 PM /////
-----------------------------------------------
17
/////Blogger KJ said...
Sir,
1. Second house in paaba karthari yogam. Also this house owner sits 6th from second house with Ragu and Suriyan. So he cannot talk.
2. He will be able to speak in future. Second house owner in Suba karthari yogam. 
In upcoming Guru dasa he will able to speak. Also Lagnathypathy aspects second house. 
Thanks,
Sathishkumar GS
Wednesday, February 18, 2015 10:44:00 PM //////
-------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

kmr.krishnan said...

சந்திரன் நின்றது துலாத்தில் அல்லவா? துலாத்திற்கு அதிபதி சுக்கிரன் அல்லவா?செவ்வாய் என்று குறிப்பிட்டுள்ளீர்களே!! ஆனைக்கும் அடி சருக்கும் என்பது சரியாகத்தான் இருக்கிறது போலும்.

சரியான பதில் என்பதில் என் பெயர் வந்தது மகிழ்ச்சி அளித்தாலும், முழு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. ஏனெனில் குழந்தைக்கு முழுமையாகப் பேச்சு வந்தது என்பதை கணிக்கத் தவறிவிட்டேனே!

இதுபோல நீண்ட காலம் பேசாமல் இருந்த என் அண்ணனின் பேரன் இந்த ஆண்டு சென்னை ஐ ஐ டியில் இன்ஜினியரிங் சேர்ந்துள்ளான்.அவனுக்கு காது கேட்கவில்லை என்பதைக் கண்டு பிடித்து, சிறிய அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து அவனுக்குக் காது கேட்க ஆரம்பித்தவுடனேயே பேசத் துவங்கிவிட்டான். ஆனாலும் இப்போதும் வேகமாகப் பேசமாட்டான். ஒவ்வொரு சொல்லாக அழுத்தி உச்சரித்துப் பேசுவான்.

இங்கே ஆர்வமுடன் புதிரில் கலந்துகொள்ளும் துபாய் சாந்தி பிரசன்னா ஜாதகங்களை நன்றாக அடித்து துவைத்து அலசிக் காயப் போடுபவர்கள்.
சோதிடம் நன்கு அறிந்தவர்கள். அவர்கள் நடத்தும்
http://devarshivedicastrology.freeforums.org. என்ற இலவச தளத்தில் சோதிட பலன்கள் கூறப்படுகிறது.அங்கே பதிவு செய்து கொண்டு கேள்விகளைக் கேட்கலாம்.பல சோதிடர்கள் கருத்துக் கூறுவார்கள்.

kmr.krishnan said...

Quiz is being conducted in the following website also. Interested may answer there also.

http://www.astrosage.com/quiz/astrologyquiz23.asp

Regunathan Srinivasan said...

அன்புள்ள அய்யா ,

நீங்கள் எழுதியது // இங்கே சந்திரன் நின்ற இடத்திற்கு அதிபதி செவ்வாய் அந்த வீட்டிற்குப் பத்தில் முக்கியமான கேந்திரத்தில் //.சந்திரன் நின்ற இடம் துலா ராசி அல்லவா ? துலா ராசியின் அதிபதி சுக்ரன் அல்லவா? செவ்வாய் எங்கிருந்து வந்தார்?

உங்கள் மாணவன் ,
S .ரகுநாதன்

Kirupanandan A said...

என்னைப் பொறுத்தவரை இது மிகவும் சுலபமான புதிர்தான். சுக்கிரனின் பார்வை 2ம் இடத்திற்கு இருப்பதும் ஒரு காரணம் என்று சொல்ல நினைத்தேன். அவசரத்தில் விடுபட்டு விட்டது.

//இங்கே சந்திரன் நின்ற இடத்திற்கு அதிபதி செவ்வாய்//

சந்திரன் துலாம் ராசியில் இருப்பதாகக் கொடுத்திருக்கிறீர்கள். அவர் எப்படி செவ்வாயாக இருக்க முடியும். இதனால் இதை ஒட்டி சொன்ன சில விஷயங்களும் தவறாக இருக்கிறது.

ponnusamy gowda said...

அய்யா அவகளுக்கு வணக்கங்கள்.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.

hamaragana said...

Anbudan vathiyar ayyavukku vanakkam

Arumaiyaana allays all.
nanri!,!!!

Subbiah Veerappan said...

Small correction

சந்திர ராசிக்கு இரண்டாம் இடத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வீட்டிற்கு உரிய செவ்வாய் அந்த வீட்டிற்கு திரிகோணத்தில் இருப்பதுடன், யோககாரகன் சனியின் பார்வையையும் பெறுவது சிறப்பான அம்சமாகும். என்று எழுத வந்தவன் அவசரத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதி என்று தவறாக எழுதிவிட்டேன். கவனப்பிழைக்கு வருந்துகிறேன். நேரமின்மையும் ஒரு காரணம். அனைவரும் பொறுத்துக்கொள்ளுங்கள். சுட்டிக்காட்டிய கே.முத்துராமகிருஷ்ணன, கிருபானந்தன், ரகுநாதன் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பதிவிலும் திருத்தத்தை மேற்கொண்டு விட்டேன்
அன்புடன்
வாத்தியார்
------------------------------

Subbiah Veerappan said...

Small correction

சந்திர ராசிக்கு இரண்டாம் இடத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வீட்டிற்கு உரிய செவ்வாய் அந்த வீட்டிற்கு திரிகோணத்தில் இருப்பதுடன், யோககாரகன் சனியின் பார்வையையும் பெறுவது சிறப்பான அம்சமாகும். என்று எழுத வந்தவன் அவசரத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதி என்று தவறாக எழுதிவிட்டேன். கவனப்பிழைக்கு வருந்துகிறேன். நேரமின்மையும் ஒரு காரணம். அனைவரும் பொறுத்துக்கொள்ளுங்கள். சுட்டிக்காட்டிய கே.முத்துராமகிருஷ்ணன, கிருபானந்தன், ரகுநாதன் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பதிவிலும் திருத்தத்தை மேற்கொண்டு விட்டேன்
அன்புடன்
வாத்தியார்
------------------------------

Subbiah Veerappan said...

அதுபோல பின்னூட்ட மிட்ட பொன்னுசாமி மற்றும் கணபதியாருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!

ponnusamy gowda said...

அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
தகவல் அளித்த மூத்த அறிஞர் திரு.லால்குடியார் அவர்களுக்கு மிக்க நன்றிகள் சமர்ப்பணம்.
ஆங்கிலத்தில் ஒரு இலக்கனம் உண்டு.அது இதோ:
there are two rules strictly be followed.
1. Boss is always right.
2. If, any wrong, please refer rule no 1.
குறிப்பிட்டது சும்மா ஒரு வேடிக்கைக்காக மட்டுமே.சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பது வேண்டுகோள்.
நன்றியுடன்,
=பொன்னுசாமி.