மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

3.2.15

துன்பங்கள் மேகங்களைப் போல நகரக் கூடியவை! விலகிச் செல்லக் கூடியவை!


துன்பங்கள் மேகங்களைப் போல நகரக் கூடியவை! விலகிச் 
செல்லக் கூடியவை!

மனவளக் கட்டுரை
-----------------------------------------------------------
துன்பங்கள் நிலையானவை அல்ல! மேகங்களைப் போல நகரக்
கூடியவை! விலகிச் செல்லக் கூடியவை!

முதலில் இன்பம் என்றால் என்ன என்று பார்ப்போம்:

ஐம்புலன்களுக்கும், மனதிற்கும் இனிமை அளிக்கும் உணர்வுதான்
இன்பம் எனப்படும். மகிழ்ச்சி என்று வைத்துக்கொள்ளுங்கள். joy, pleasure

பூத்துக்குலுங்கும் மலர்கள் கண்ணுக்கு இன்பம்
குழந்தைகளின் மழலைப் பேச்சு பெற்றோர்க்கு இன்பம்.
32-24-32 அளவில் அழகாக இருக்கும் ஒரு சிட்டுவைத் தொடரும்
வாய்ப்பு ஒரு இளைஞனுக்கு இன்பம்.
நிற்கும் தொகுதியில், அதிக அளவு வித்தியாசத்தில் வெற்றி
பெறுவது வேட்பாளருக்கு இன்பம்.
ஒரு குவாட்டர், ஒரு சிக்கன் பிரியாணி பொட்டலம் ப்ளஸ் கையில்
ஐநூறு ரூபாய் பணம் கிடைத்தால் கட்சித் தொண்டனுக்கு இன்பம்.
சாப்பிடும் மருந்துகளை நிறுத்தி விடுங்கள். இப்போது நீங்கள்
நலமாக உள்ளீர்கள் என்ற மருத்துவர் சொன்னால், அதைக்
கேட்கும் பெரியவருக்கு இன்பம்.
உடலுறவில் கிடைப்பது சிற்றின்பம்.
இறையுணர்வில் கிடைப்பது பேரின்பம்
இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.

ஆனால் உண்மையான இன்பம் எது? அதில் ஒருமித்த கருத்து
இருப்பதற்கு வாய்ப்பில்லை!

ஒரு கவிஞன் எது இன்பமானது, எது இன்பமில்லாதது என்பதைப்
பொட்டில் அடித்த மாதிரி நான்கே வரிகளில் எழுதினான். பாடலைக் கொடுத்துள்ளேன். பாருங்கள்

“கனிரசமாம் மதுவருந்தி களிப்பதல்ல இன்பம்      
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்   
இணை இல்லா மனையாளின் வாய் மொழியே இன்பம்      
அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்”

அதோடு விடவில்லை, அதற்கு மேலும் ஒரு போடு போட்டுத்தான்
கவிஞன் பாடலை நிறைவு செய்தான். அந்த வரிகளையும்
கொடுத்துள்ளேன். பாருங்கள்

“மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்      
வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்   
மழலை மொழி வாய் அமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்     
உன் மார்மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்”

”இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு” 
என்று துவங்கும் பாடலைக் கவிஞர் அ மருதகாசி அவர்கள்
மனமுள்ள மறுதாரம் என்ற திரைப்படத்திற்காக எழுதினார்.
அன்பர் சீர்காழி  கோவிந்தராஜன் அவர்கள்  தனது கணீர்க் குரலால்
பாடி அந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்தார். அந்தக் காலத்தில்
மிகவும் பிரபலமான பாடல் இது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

இன்பத்தைத் தேடாத அல்லது நாடாத அல்லது விரும்பாத மனிதனே
இருக்க முடியாது. ஆனால் அந்த இன்பம் முறையாக எல்லா
வழிகளிலும், எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும்,
எல்லோருக்கும் கிடைக்குமா? என்றால், நோ சான்ஸ்.

ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் ஓரளவு கிடைக்கும்.

நன்றாக இருப்பது என்றால் என்ன? தளபதி படத்தில் வரும் அரவிந்தசாமிபோல இருப்பதா? காதல்கோட்டை படத்தில் வரும் அஜீத்குமாரைப் போல  சுக்கிரன்  இருப்பதா? அல்ல. அது பற்றிப்
பலமுறை சொல்லியிருக்கிறேன். இல்லை. ஜாதகத்தில் சுக்கிரன்
ஆட்சி பெற்றோ அல்லது உச்சம்  பெற்றோ அல்லது கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானங்களில் இருப்பதோ அல்லது அஷ்டகவர்க்கத்தில்
6 அல்லது அதற்கு மேலான பரல்களுடன் இருப்பதோ மட்டுமே நன்றாக உள்ளதைக் குறிக்கும் அதை மனதில் கொள்க.

சரி எப்போது கிடைக்கும்?

சுக்கிரனின் திசை அல்லது புத்தி நடக்கும் காலங்களில் வாழ்க்கை இன்பமயமானதாக இருக்கும்.

இன்பங்கள் எல்லாம் அறுபது வயதில் அல்லது அதற்கு மேலான வயதில் கிடைத்துப் பிரயோஜனம் இல்லை. உரிய காலத்தில் கிடைக்க வேண்டும். இருபதில் இருந்து நாற்பது வயதிற்குள் கிடைக்க வேண்டும். அனுஷ்கா சர்மாவைப் போல பெண் இருந்தாலும் உரிய காலத்தில் திருமணம்
செய்தால்  அல்லவா அவள் இன்பமாக இருக்க முடியும். ஐம்பது
வயதில் திருமணம் செய்வதால் யாருக்கு என்ன பயன்?

ஆகவே கவலைப் படாதீர்கள். உங்களுக்கு சுக்கிர திசை இந்த
வயதிற்குள் வராவிட்டாலும், வேறு கிரகங்களின் திசைகளில்
உள்ள தனது  புத்திகளில் (Sub-periods)

சுக்கிரன் தனது பணியைச் செவ்வனே செய்துவிடுவார். ஆகவே அனைவருக்கும் கிடைக்கும் வாய்ப்புக்கள் உண்டு. கிடைக்கும்
ஏரியாக்களும், அளவுகளும் மட்டும் மாறுபடும். சிலருக்கு சொத்து
சுகங்களால் கிடைக்கும். சிலருக்கு மனைவி மக்களால் கிடைக்கும்.
சிலருக்கு வேறு வழிகளில் கிடைக்கும். எல்லாம் வாங்கி வந்த வரம்!

அதை இன்னொரு நாள் விரிவாகப் பார்ப்போம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பணம்தான் பொதுவாக எல்லோருக்கும் இன்பம் கொடுக்கும்
காரணியாக அமைந்திருக்கிறது. இன்றைய காலகட்டச் சூழ்நிலை
அப்படி! இருப்பது  போதும் என்ற மனநிலை இல்லை. தேவைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. எளிமையான வாழ்க்கை
இல்லை. எல்லோருமே ஆடம்பரத்தை விரும்புகிறார்கள். ஆகவே பணத்தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. யாரும் திருப்தியாக
இல்லை. நிம்மதியாகவும் இல்லை.

இரண்டு சக்கர வாகனம் வைத்திருப்பவன் காருக்கு ஆசைப்படுகிறான்.
கார் வைத்திருப்பவன், தனக்கு ஒரு கார், தன் குடும்பத்திற்கு ஒரு கார்
என்று  இரண்டாவது  காருக்கு ஆசைப்படுகிறான். பிறகு அவற்றைத்
தெருவில் நிறுத்தாமல் வீட்டுக்குள் நிறுத்துவதற்குப் பெரிய வீட்டிற்கு
ஆசைப் படுகிறான்.

இது நடுத்தர மக்களின் நிலைமை. பெரிய செல்வந்தர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களும் பணத்திற்கு, பணத்தைச் சம்பாதிப்பதற்கு  அலைகிறார்கள். அதிகமான பணம்தான் சமூகத்தில் தனக்கு ஒரு அந்தஸ்த்தைக் கொடுக்கும் என்னும் தவறான எண்ணமே அதற்குக்
காரணம்.

அதிகமான பணம் இருக்கும்போது அல்லது வந்து கொண்டிருக்கும்
போது, மனம் அடுத்ததாகப் புகழுக்கு ஆசைப்படும். நான்கு பேர்கள்
தன்னைப் புகழ  வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள். சரி, புகழும் கிடைத்துவிட்டால், சும்மா இருப்பார்களா என்றால், அதுதான் இல்லை!

அடுத்ததாகப் பதவிக்கு ஆசைப்படுவார்கள்.

பதவிகள் இரண்டு வகைப்படும். அரசியல் செல்வாக்கில் கிடைக்கும்
பதவிகள். சமூகப் பொறுப்புக்களில் கிடைக்கும் பதவிகள் என்று
அவைகள் மாறுபடும்.

அரசியலில், வட்டச் செயலாளர், மாவட்டச் செயலாளர், கட்சியின்
நிர்வாகக் குழு உறுப்பினர், அமைச்சர் என்று அதன் எல்லை
விரிவடைந்து  கொண்டே போகும்.

அது அரசியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும்.

சமூகத்தில் அந்தஸ்த்து வேண்டும் என்று பாடுபடுபவர்கள்,
சுழற்கோப்பை, அரிமா போன்ற சங்கங்களில் போட்டி போட்டுக்
கொண்டு பதவிகளைத் தேடுவதைப்  போலவே, சமூகங்களில்,
பொது அமைப்புக்களிலும், தங்கள் இனம் சார்ந்த அமைப்புக்களிலும் பதவிக்காக அல்லாடுகிறார்கள். தலைவர், துணைத் தலைவர்,
செயலாளர், பொருளாளர் என்று வரிசையாகப் பதவிக்கு
ஆசைப்படுகிறார்கள்!

சரி, அவை எல்லாம் நிரந்தரமானவையா? இல்லை! அந்தந்த
அமைப்புக்களின் விதிமுறைகள் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப, பதவிக்
காலமும்  மாறுபடும். ஒரு பதவியில்

அமர்ந்து பெருமை பெற்றவர்கள், அதே அமைப்பில் வேறு ஒரு
பதவிக்காகப் பிறகு அலைவார்கள்.

பதவிகளில் உயர்ந்த பதவி எது?

’சிவபதவி’தான் உயர்ந்த பதவி!

அதீத இறையுணர்வும், நன்றிகெட்ட மாந்தரடா, நானறிந்த பாடமடா!’
என்று சக மனிதர்களை உணர்ந்து தெளிந்தவர்களும், பந்த பாசங்களை
நீங்கி  பற்றற்ற நிலைமைக்கு வந்தவர்களும், நிலையாமைத்
தத்துவத்தை உணர்ந்து, ஞானம் பெற்றவர்களும் சிவபதவிக்கு
ஆசைப் படுவார்கள். மொத்த மனிதர்களில் ஒரு பத்து
சதவிகதப் பேர்கள்தான் அப்படிப்பட்ட நிலையில் இருப்பார்கள்.

மற்றவர்கள் எல்லாம் தாங்கள் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள்
இருக்கப் போவதாக நினைத்துக் கொண்டு, மரணத்தையே நினைத்துப்
பார்க்க மாட்டார்கள். மரணத்தை அறிந்தால் அல்லவா சிவபதவி
நினைவிற்கு வரும்.

சிவபதவி எல்லோருக்கும் கிடைக்குமா? கிடைக்காது! அது கேட்டு
வாங்கக் கூடியதும் அல்ல, போட்டி போட்டுப் பெறக் கூடியதும் அல்ல! இறையருளால் கிடைக்ககூடியது அது!

இறையருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

1. முதலில் ஆசைகளை விட்டொழியுங்கள். எல்லாத் துன்பங்களுக்கும் ஆசைதான் காரணம். இறைவன் தேவைகளுக்கு உதவுவார்.
ஆசைகளுக்கு உதவ மாட்டார்.
2. யாரையும் ஏமாற்றாதீர்கள். யாருக்கும் துரோகம் செய்யாதீர்கள்.
3. என்ன நஷ்டம் ஏற்பட்டாலும் தர்மத்தை மீறாதீர்கள்.
4. யாருக்கும் இடையூறு செய்யாதீர்கள்.
5. யாருடைய உழைப்பையும் இலவசமாகப் பெறாதீர்கள்.
6. உடலால் அல்லது கையிலிருக்கும் பணத்தால் முடிந்த அறச்
செயல்களைச் செய்யுங்கள், சமூக சேவைகளைச் செய்யுங்கள்.
7. ஓம் நமசிவாய ‘ என்று 108 முறைகள் தினமும் சொல்லிப் பிரார்த்தனை செய்யுங்கள். நேரம் இல்லையா? 3 முறை சொல்லிப் பிரார்த்தனை செய்யுங்கள்.

இப்படி செய்தால், உங்கள் மரணம் வலியில்லாமல் இருக்கும்.
அத்துடன் உங்களுக்கு ”சிவபதவியும்’ கிடைக்கும்

உலகின் சிறந்த செயல் இறைவழிபாடு மட்டும்தான். அதை
ஒவ்வொரு நாளும் ஒருமுறையாவது செய்யுங்கள். உலகின்
உயந்த, ஈடு இணையில்லாத  பதவியான சிவபதவி, உங்களைத்
தேடிவரும். அலைந்து, அவதிப்பட்டுத் தேடிப் பிடிக்கும் வேலை
யெல்லாம் அதில் அதில் கிடையாது. அத்துடன்  கிடைத்ததைத்
தக்க வைத்துக் கொள்ள வேண்டிய சிரமமும் அதில் இருக்காது.
அதையும் மனதில் வையுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

selvam velusamy said...

வணக்கம் குரு,

உங்கள் பதிவிற்கு நன்றி. எனக்கு 7இல் சுக்கிரன் உச்சமாக உள்ளார். ஆனால் கேதுவும் செவ்வாயும் சேர்க்கை பெற்றதால் யோகம் அடிபட்டுவிட்டது.

நன்றி
செல்வம்

kmr.krishnan said...

அருமையான கருத்துக்கள் ஐயா!

ஆசையை விட்டொழிக்க வேண்டியதுதான். அதாவது பேராசையை விட்டு விடவேண்டும். நியாயமான‌ ஆசைகள் இருக்கத்தான் வேண்டும். உதாரணமாக ஒரு 23 வயது கம்ப்யூட்டர் இஞ்சினியர் 30000/‍= சமபள‌த்திற்கு ஆசைப்படலாம். 300000/‍=சமபளத்திற்கு ஆசைப்பட்டால் அது பேராசை.

trmprakaash@gmail.com said...

Ayya, arumaiyaana padhivu. Kurippaaga 1-7 varai super master.

Thanks,

TRM.Prakaash

ravichandran said...

Respected Sir,

Happy morning... Today is kathirvenlan's day. Have a holy day.

With kind regards,
Ravichandran M.

eswari sekar said...

vanakam sir manavala gatturai mugavum super

Pathrachalam Chalam said...

OM NAMASIVAYA...ayya...valkaiyai pattri...yavarum puriyum padiyana oru pakuthi...climax katchiyai koduthu vittirgal...thavira matra..love,comedy, action,ivai anaithum..hero ana avar ravar parthu kollaventiyathu than....sirappana pathivu....

venkatesh r said...

வணக்கம். முதல் பகுதி "பழைய பாடம்" தான். ஆனாலும் புதிதாக படித்தது போல் ஒரு உணர்வு. பிற்பகுதியில் "பதவிகளில் உயர்ந்த பதவி எது?" தனிப் பதிவாகவே போடலாம். "இப்படி செய்தால், உங்கள் மரணம் வலியில்லாமல் இருக்கும்". அருமையான கருத்து.

உடனே வரக்கூடிய மரணத்தையும், எப்போதும் யாரிடத்தும் யாசிக்காத நிலையையும், உன்னிடத்தில் நிலையான, சஞ்சலமில்லாத பக்தியையும் கொடு என்று கடவுளிடம் நாம் வரமாக கேட்டுப் பெற வேண்டுமாம். முற்பிறவியில் தவம் செய்தவர்களுக்கும், இந்தப் பிறவியில் ஞானம் பெற்றவர்களுக்கும்தான் அநாயாசமான மரணம் (அனாயாசேன மரணம்) நிகழும் என்பார்கள்.

"அனாயாசேன மரணம்
வினாதைன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபயா சம்போ
த்வை பக்திம் அசஞ்சலாம்"

நன்றி.

sundari said...

vannakkam sir,

வேப்பிலை said...

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது
எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது
இன்பம் துன்பம் என்னும் எண்ணம் ஏன் வந்தது
இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதனின் கொள்கை தெரியவில்லை
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
பள்ளி கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றாராம்
பச்சை பிள்ளை மழலை மொழியில் தன்னை கண்டாராம்
உள்ளம் எங்கும் செல்லம் பொங்கும் அன்பை தந்தாராம்
உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றாராம்