மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

17.2.15

Health Tips: ஆரோக்கியத்துக்கான யோசனைகள். அவசியம் படியுங்கள்!Health Tips: ஆரோக்கியத்துக்கான யோசனைகள். அவசியம் படியுங்கள்!

காய்கறிகள் என்பது மிகவும் சத்தானது என்பது நம் அனைவருக்குமே
தெரிந்த ஒன்றே. நம் உடலில் உள்ள கூடுதலான கலோரிகளை
அது எரிக்கும்.

அதனால் நாம் உண்ணும் உணவுகள் எல்லாம் ஆற்றல் திறன்களாக
மாறும். நாம் உண்ணும் உணவு ஆற்றல் திறனாக மாறுவதே
மெட்டபாலிசம்.

மெட்டபாலிசத்தை அதிகரிக்க வைக்க பல சைவ உணவுகள்
உள்ளது. மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் ஆரோக்கியமான
உணவுகள் உடல் எடையை குறைக்கவும் உதவும். எவ்வளவுக்கு
எவ்வளவு காய்கறிக் உண்ணுவதை அதிகரிக்கிறீர்களோ அந்தளவுக்கு ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திடலாம்.

பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில்
கிடைக்கும் இந்திய உணவுகள்!!!

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் சைவ உணவுகளை சாலட் அல்லது சூப்புகளாக பயன்படுத்தலாம். உங்கள் மெட்டபாலிசத்தை அதிகரிக்க
உதவும்

முதன்மையான அந்த 10 உணவுகள் எவை என உங்களுக்கு தெரியுமா? - அஸ்பாரகஸ், பீன்ஸ், ப்ராக்கோலி, செலரி, வெள்ளரிக்காய், பூண்டு,
காரமான மிளகு, கீரை மற்றும் தக்காளி. மெட்டபாலிசத்தை அதிகரிக்க
உதவும் இந்த சைவ உணவுகள் அதிகமான கால்சியத்தையும்
குறைவான கொலஸ்ட்ரால் அளவையும் கொண்டுள்ளது.

மேலும் இரத்த கொதிப்பு மற்றும் இதய நோய்களுக்கு எதிராக போராடி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி,
சரும பாதிப்புக்களை சீர் செய்யவும் உதவுகிறது. இதுப்போக கிரீன் டீ
மற்றும் ஆளி விதைகளும் கூட மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும்
முக்கியமான உணவுகளாகும்.

வெங்காயத்தாள் மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாகும்
மற்றும் அவைகள் வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு உட்பட பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் மிகுந்த
சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நீண்ட காலமாக வெங்காயத்தாள்

சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெங்காயம்
போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தகச்சத்து அதிகமாக உள்ளது.
அதிக  அளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன.

மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2 மற்றும்
தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவைகளில் வைட்டமின் ஏ  மற்றும் வைட்டமின் கே கூட நிறைந்துள்ளன. இது
தவிர, இவைகளில் காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக
உள்ளன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், புற்றுநோயை
குணப்படுத்தும். வெங்காயத்தாள் க்யூயர்சிடின்

போன்ற பிளேவோனாய்டுகளுக்கு ஒரு வலுவான ஆதாரமாக
இருக்கின்றது.

வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.இந்த காய்கறி
களிலுள்ள  வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து,
உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது. வெங்காயத்தாளில் உள்ள
பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போ
ஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான
வாய்ப்பைக் குறைக்கிறது. வெங்காயத்தாள்’ கண் நோய் மற்றும்
மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.

வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள்
உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால்
உண்டாகும் இதய  நோய் அபாயத்தைக் குறைக்கும்��

எப்படியாச்சும் வெயிட்டை குறைக்கணும்!’ என்று பலரும்
புலம்பினாலும், அதற்காக அவர்கள் எதுவுமே மெனக் கெடுவதில்லை என்பதுதான் உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு, உடலையோ,
மனதையோ, நேரத்தையோ வருத்திச் செய்யாமல், எடையைக் குறைப்பதற்கான எளிய டிப்ஸ் கிடைத்தால்..?!

ட்ரை இட்!

* உணவைச் சுருக்காதீர்கள், பெருக்குங்கள்

எடுத்துக்கொள்ளும் டயட்டில், உணவுகளைச் சுருக்குவதற்குப் பதிலாக, சத்தான உணவுகளைப் பெருக்குங்கள். ஏனெனில், ‘ரெண்டே இட்லிதான்
சாப்பிட்டேன்’ என்று ஏக்கம் வந்தால், அதை விரட்டுவது கடினம். மாறாக, பழத்துண்டுகள், வெஜிடபிள் ஜூஸ், லோ காலரி உணவுகள் என்று கைவசம்
வைத்துக்கொண்டு, சாப்பிடத் தோன்றும் போதெல்லாம் இவற்றைச் சாப்பிடுங்கள். ‘ரெண்டே இட்லிதான் சாப்பிட்டேன்’ என்ற பசி உணர்வு
விரட்டப்படும்... மனதில் இருந்தும்!

* எக்ஸர்சைஸ் வேண்டாம்

ட்ரெட் மில், அப்டமன், ஜிம், ஏரோபிக்ஸ் எதையும் கட்டாயத்தின் பேரில் செய்தால், நீண்ட நாள் தொடர முடியாது. ‘வொர்க் அவுட்’ என்பது
அலுப்பாக இருந்தால், செய்ய வேண்டாம். அப்படியென்றால் சேர்ந்துள்ள கலோரிகளை எப்படிக் கரைப்பது..? சைக்ளிங் செல்லலாம், காரைக்
கழுவலாம், தோட்ட வேலை பார்க்கலாம், ஃபிரிஸ்பீ விளையாடலாம், குழந்தைகளின் காஸ்ட்லி உடைகளை மட்டும் கையால் துவைக்கலாம்... இப்படி ஏதாவது ஒன்றை சுவீகரித்துக்கொள்ளுங்கள். 10 நிமிடங்கள்
செய்தால் போதும்!

* ‘வாக்’ செல்லலாம் ஜாலியாக

எதுவுமே செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு ‘வாக்’ செல்லச் சொன்னால் எப்படி என்கிறீர்களா..?! இப்படிச் செய்து பாருங்கள்..!
அலுவலகத்திற்கு பேருந்தில் செல்பவர்கள், முந்தைய நிறுத்தத்தில்
இறங்கி நடந்து செல்வதோடு, வீடும் திரும்பும்போதும் அப்படியே
செய்யலாம்;

அலுவலகத்தில் காரை கடைசியாக பார்க் செய்துவிட்டு, நடந்து போகும் தூரத்தை அதிகரித்தால் போதும்.


👍 பழைய 🍚 சாதத்துல இவ்வளவு      விஷயமா?

🍴உணவே மருந்து 💊
💊 மருந்தே உணவு

💻 திரைப்படங்களில் 🌇 கிராமத்து சீன் 🔄

👸 கதாநாயகி பித்தளைத் தூக்கில் 🍚 பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் 👨 கதாநாயகனுக்குத்தருவாள்.

💦 நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான்.

👉 இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது. 😨

☝ஆனால் முதல் நாள் 🍚 சோற்றில் 🚰 நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் ☝ இந்த பழைய சாதத்தில் தான் வைட்டமின் பி6 வைட்டமின் பி12 ✅ ஏராளமாக இருக்கிறது என்கிறது புது ஆய்வு ✳

☝ தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 👍
'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள் : 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக
வைத்திருக்கிறதாம்!

⏩ கூடவே இரண்டு சிறிய 🌰 வெங்காயம் சேரும்போது, 😨 நோய்
எதிர்ப்பு சக்தி 💪 அபரிமிதமாக பெருகுகிறதாம்.

👉 அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது !

👉 பழைய சாதத்தின் நன்மைகள் சில 👍

1. ⛅ "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால்,
உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. 😃😀😄

2. 🌚 இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. 😄😀😃

3. ☀ மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு
குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும். 😄😀😃

4. ☝ அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, 😡 மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. 😄😃😀

5. ☝ இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டால் 😱 இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும்,  உடல்
எடையும்  குறையும். 😄😃😀

6. ✅ மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு
அதிகமான 💪 சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை
செய்ய உதவியாக  இருக்கிறது.
😀😃😄

7. 😩 அலர்ஜி, 😫 அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். 😄😃😀

8. 🔥 அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ❗ ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. ✅ எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. 💪 ஆரோக்கியமாக அதே சமயம் 👸 👨 இளமையாகவும் இருக்கலாம்.
                         
🅰 🅱 🆎 🅾 பொது நலம் கருதி  வெளியிடுவோர்
இயற்கை மருத்துவ நலம் விரும்புவர் சங்கம்.
=======================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

துரை செல்வராஜூ said...

தமிழனின் தலையாய உணவு - முதல் நாள் செய்த கேழ்வரகு மற்றும் கம்பங்கூழ், பழைய சோறு என்பவை தான்!..

அதை, தானும் தின்னாமல் - என்னடா பழய சோறு!.. என்று தின்பவனையும் கேவலப்படுத்தியவன் தமிழனே!..

இப்போது, அங்கே சொன்னார்கள்.. இங்கே சொன்னார்கள் - என்று பழைய சோறு கேழ்வரகுக் கூழ் இவற்றைத் தேடி ஓட்டம்!..

நாடுவோர்க்கு நன்மை!..

வேப்பிலை said...

10வதாக ஒன்று சொன்னீர்களே
அது தான் டாப்பு...

பழைய சாதத்தை
டிபார்ட்மென்ட் ஸ்டோரில்

விற்க தொடங்கிடலாமா?
ரெடிமேட்டுன்னு சொன்ன

வாங்க நம்ம மக்கள் தயார்
வாழ வைப்போமே இப்படி சொல்லி

kanna said...

வாத்தியாருக்கு வணக்கம்.

siva kumar said...

மிகவும் பயனுள்ள தகவள் ஐயா.
மிக்க நண்றி ஐயா

பரிவை சே.குமார் said...

பயனுள்ள பகிர்வு ஐயா....

Subbiah Veerappan said...

/////Blogger துரை செல்வராஜூ said...
தமிழனின் தலையாய உணவு - முதல் நாள் செய்த கேழ்வரகு மற்றும் கம்பங்கூழ், பழைய சோறு என்பவை தான்!..
அதை, தானும் தின்னாமல் - என்னடா பழய சோறு!.. என்று தின்பவனையும் கேவலப்படுத்தியவன் தமிழனே!..
இப்போது, அங்கே சொன்னார்கள்.. இங்கே சொன்னார்கள் - என்று பழைய சோறு கேழ்வரகுக் கூழ் இவற்றைத் தேடி ஓட்டம்!..
நாடுவோர்க்கு நன்மை!..///////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
10வதாக ஒன்று சொன்னீர்களே
அது தான் டாப்பு...
பழைய சாதத்தை
டிபார்ட்மென்ட் ஸ்டோரில்
விற்க தொடங்கிடலாமா?
ரெடிமேட்டுன்னு சொன்ன
வாங்க நம்ம மக்கள் தயார்
வாழ வைப்போமே இப்படி சொல்லி/////

டாப்பு என்று சொன்னவரைக்கும் நன்றி வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

////Blogger kanna said...
வாத்தியாருக்கு வணக்கம்.///

உங்களின் காலை வணக்கத்திற்கு நன்றி!

Subbiah Veerappan said...
This comment has been removed by the author.
Subbiah Veerappan said...

////Blogger siva kumar said...
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா.
மிக்க நன்றி ஐயா/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger siva kumar said...
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா.
மிக்க நன்றி ஐயா/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger பரிவை சே.குமார் said...
பயனுள்ள பகிர்வு ஐயா..../////

பயனளிக்க வேண்டும். எழுதும் நோக்கமும் அதுதான். நன்றி நண்பரே!