மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

13.2.15

மாறுவதும் சேருவதும்


மாறுவதும் சேருவதும்

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் பாடிய அற்புதமான பாடல் ஒன்று நிறைவு செய்கிறது. கவியரசர் கண்ணதாசன் அவர்களின்
சொற்களில் தமிழக மக்களின் மனதில் என்றும் நடைபோடும் பாடல் அது. அனைவரும் அதைக் கேட்டு மகிழுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------
ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது
என்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...

முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
நல்லகுரு நாதன் நீ உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால்
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
சக்தி வடிவேல் வடிவேல் வேல்...
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ?
முருகா உனக்குக் குறையுமுளதோ?
வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா
உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ?

ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்?
முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்
என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன் தருவையரு பழனி மலையில்
சந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி
தண்டபாணித் தெய்வமே

பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா

கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு
கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்
கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
தாயுண்டு மனம் உண்டு
தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு

ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ
ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ

திரைப்படம்: திருவிளையாடல்
பாடியவர்: k.b. சுந்தராம்பாள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: k.v. மஹாதேவன்Our sincere thanks to the person who uploaded this song in the net
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

Chandrasekaran Suryanarayana said...

சந்ததம் குடி கொண்ட
சங்கரன் கும்பிடும்
என் தெய்வமே.....

ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:

B. Lakshmi Narayanan, Tuticorin said...

இத்தனை நாட்கள் பாடல் வரிகள் புரியாமலேயே ரசித்த பாடல் வரிகளை எங்களுக்கு அறியத் தந்த வாத்தியாருக்கு நன்றி.அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

வேப்பிலை said...

முருகா..
முருகா..

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ஈடு இணையற்ற பாடகி அம்மா KP சுந்தாரம்பாள் அவர்கள்.அவர்களின் கணீர என்ற 8 கட்டை சுருதி பாடல் .ஆக ...!!!
அவ்வையார் இப்படித்தான் இருப்பார் என் உதாரணமாக எண்ணுமளவு
பாடியவர்கள் ..
நன்றி..!!!

kmr.krishnan said...

மூத்த வயதிலும் 'தம்' கட்டி அற்புதமாகப் பாடினார் சுந்தராம்பாள். பகிர்வுக்கு நன்றி ஐயா!

பரிவை சே.குமார் said...

நல்ல பாடல்...