மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

20.2.15

தேடி வந்தோர் இல்லம் எல்லாம் செழிக்கும் இடம்!தேடி வந்தோர் இல்லம் எல்லாம் செழிக்கும் இடம்! 

 பக்தி மலர்

 இன்றைய பக்தி மலரை மதுரை எஸ்.சோமு அவர்கள் பாடிப் பரவசப் படுத்திய மருதமலை மாமணியே என்ற பாடல் நிறைக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

 அன்புடன் 
வாத்தியார் 
-----------------------------------------------
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை ?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை ?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை ?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை!!!

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா!

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உனது மங்கல மந்திரமே!
(மருதமலை)

தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா!
(மருதமலை)

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழு பிறப்பிலும் உன்னை எட்டு வேன்..ஆ..
(மருதமலை)

சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றிப் பெருகிட வருவேன் - நான் வருவேன்

பரமனின் திருமகனே... அழகிய தமிழ்மகனே...
காண்பதெல்லாம் - உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் - எனதுமனம் உறு முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா....

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம்காக்கும் வேலய்யா அய்யா
---------------------
திரைப்படம்: தெய்வம்
பாடியவர் : மதுரை சோமு 
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசையமைத்தவர்: குன்னக்குடி வைத்தியநாதன்Our sincere thanks to the person who uploaded the song in the net

வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
=============================================

9 comments:

kmr.krishnan said...

அருமையான பாடல். நாத‌ஸ்வரம் போன்ற குரல் மதுரை சோமு ஐயாவுக்கு.

'தேவரின் குலம் காக்கும்'என்பதில் இரண்டு பொருள். வானுல‌கத் தேவரையும் குறிக்கும்.சாண்டோ சின்னப்பத் தேவரையும் குறிக்கும்.

வேப்பிலை said...

முருகா..
முருகா..

siva kumar said...

வணக்கம் ஐயா
இனிமையான வரிகள் ஐயா

பரிவை சே.குமார் said...

மருதமலை மாமணியே முருகையா அருமையான பாடல் ஐயா...

Subbiah Veerappan said...

//////Blogger kmr.krishnan said...
அருமையான பாடல். நாத‌ஸ்வரம் போன்ற குரல் மதுரை சோமு ஐயாவுக்கு.
'தேவரின் குலம் காக்கும்'என்பதில் இரண்டு பொருள். வானுல‌கத் தேவரையும் குறிக்கும்.சாண்டோ சின்னப்பத் தேவரையும் குறிக்கும்.//////

உண்மைதான். கவியரசர் கண்ணதாசன் இரண்டு பொருள் வருமாறுதான் அந்த வரியை எழுதினார். நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

//////Blogger வேப்பிலை said...
முருகா..
முருகா../////

கந்தா
கடம்பா
கார்த்திகேயா
கதிர்வேலா!

Subbiah Veerappan said...

/////Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
இனிமையான வரிகள் ஐயா////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger பரிவை சே.குமார் said...
மருதமலை மாமணியே முருகையா அருமையான பாடல் ஐயா...////

ஆமாம். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...
This comment has been removed by the author.