கவிநயம்: துள்ளாத மனமும் துள்ளும்;
சொல்லாத கதைகளைச் சொல்லும்!
கவியரசர் கண்ணதாசன் பாடல்கள்
துள்ளல் பாட்டு!
துள்ளாத மனமும் துள்ளும், சொல்லாத கதைகள் சொல்லும் என்று
மனதைச் சொக்கவைப்பது நல்ல பாடலுக்கு உள்ள இலக்கணம்.
சில பாடல்கள் மனதை மட்டுமின்றி நம் உடம்பையும் நடமிட
வைக்கும் வேகத்தில் இருக்கும். அப்படி ஒரு துள்ளல் அந்தப்
பாட்டில் அமைந்திருக்கும்.
பாட்டின் வரிகளும், அதற்குச் சேர்க்கப்பட்ட இசையும், பாடியவரின்
குரல் இனிமை - வளம் - பாவம் ஆகிய மூன்றும் - இப்படி எல்லாமுமாக ஒருசேர அமைந்து விட்டால் - ஆஹா.. அந்தப் பாடல் கொடுக்கும்
இன்பம்தான் என்னே!
அப்படி அமைந்த துள்ளல் பாடல்கள் இரண்டை இன்று பதிவிட்டுள்ளேன். படத்தின் நாயகன் திரு.M.G.R அவர்கள். நாயகி - சொல்லவும் வேண்டுமா? அந்தக் காலத்தின் கனவுக் கன்னி B.சரோஜா தேவி...! பாடலைப்
பாருங்கள்!
-------------------------------------------------
"அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறந்தாரா?
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?
முத்து முத்துப் பேச்சு, கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா?
முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க
பெண்னழகை விடுவாரா?
முத்திரையை போட்டு சித்திரத்தை வாட்டி
நித்திரையைக் கெடுப்பாரா?
மூவாசை வெறுத்து ஊராரை மறந்து
முனிவரும் ஆவாரா?
கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி
தொட்டுவிட மனமில்லையா?
கட்டிலுக்குப் பாதி தொட்டிலுக்குப் பாதி
கருணை வரவில்லையா?
விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும்
கட்டாமல் விடுவேனா?
மேடைகளில் நின்று தோழர்களைக் கண்டு
சொல்லாமல் விடுவேனா?"
படம்: பணக்காரக் குடும்பம் - வருடம் 1964
பாடலில் துள்ளல் இசைக்கேற்ப என்னதொரு சொல் விளையாட்டுப் பார்த்தீர்களா?
முத்து முத்துப் பேச்சு, கத்தி விழி வீச்சு இரண்டையும் மறந்தவர்
முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க பெண்ணழகை விடுவாரா என்று
கேட்டதும் --முத்திரையை போட்டு சித்திரத்தை வாட்டி நித்திரையைக் கெடுப்பாரா என்றதோடு மூவாசை வெறுத்து ஊராரை மறந்து
முனிவரும் ஆவாரா என்று கேட்டு,கொட்டு முழக்கோடு கட்டழகு
மேனி தொட்டுவிட மனமில்லையா என்று மேலும் கேட்டு
கட்டிலுக்குப் பாதி தொட்டிலுக்குப் பாதி கருணை வரவில்லையா
என்று சோழவரம் பந்தயக்கார் மாதிரி என்னதொரு ஓட்டத்தில்
பாட்டைக் கொண்டு போனார் பார்த்தீர்களா?
அதோடு விட்டாளா அந்தக் காதல் நாயகி ரத்தினம்?
'விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவேனா?
மேடைகளில் நின்று தோழர்களைக் கண்டு சொல்லாமல் விடுவேனா?'
என்று வேறு மிரட்டும் தொனியில் செல்லமாகக் கேட்பது போல
பாட்டை முடித்தார் பாருங்கள் அதுதான் முத்தாய்ப்பு!
-------------------------------------------------------------------------------------
மற்றுமொரு பாடல்
ஆனால் இது வேறு மாதிரியான துள்ளல். நாயகனின் சகோதரி
துள்ளிப் பாடும் பாடல் படத்தில் துள்ளியவர் அந்தக் காலத்துப்
புன்னகை அரசி என்று பெயர் பெற்ற K.R. விஜயா அவர்கள்
"மங்கல மேளம் பொங்கி முழங்க
மணமகள் வந்தாள் தங்கத் தேரிலே
மல்லிகைப் பூவிலும் மெல்லிய மாது
மயங்கி விட்டாளே உன் பேரிலே
கல்யாண ஊர்வலம் உல்லாசம் ஆயிரம்
(மங்கல)
அவள் அன்னநடை பின்னலிட வந்தாளாம்
என் - அண்ணனிடம் கண்ணிரண்டைத் தந்தாளாம்
அந்த - அங்கயற் கண்ணியைப் பார்த்து
அண்ணன் சங்கதி சொன்னதைக் கேட்டு
நெஞ்சம் துள்ளி எழுந்தது பாட்டு
அது தொட்டிலிலே தாலாட்டு
(மங்கல)
நல்ல அத்தையிவள் பெண் மகளைப் பெற்றாளாம்
அதை - அண்ணன் மகள் கண்ணனுக்கே விற்றாளாம்
தமிழ் - குமரன் வள்ளியைப் போலே
அவர் குலவிக் கொண்டதனாலே
அங்கு தழைத்து வந்தது குழலி
அதைத் தழுவிக் கொண்டாள் கிழவி
(மங்கல)"
படம்: கை கொடுத்த தெய்வம் - வருடம் 1964
பாடலின் முத்தாய்ப்பான வரிகள்:
குமரன் வள்ளியைப் போலே
அவர் குலவிக் கொண்டதனாலே
அங்கு தழைத்து வந்தது குழலி
இந்த இரண்டு பாடல்களையுமே பாடியவர் இன்னிசைக் குயில்
பி.சுசிலா அவர்கள் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று!
-------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
நல்ல சொல்வளம் மிக்க சிறப்பான பாடல்களைப் பதிவில் கண்டு மகிழ்ச்சி!..
ReplyDeleteபாட்டு பாடவா..என
ReplyDeleteபாடலை பாட வைத்தது சிறப்பு
நல்ல பகிர்வு.
ReplyDelete////Blogger துரை செல்வராஜூ said...
ReplyDeleteநல்ல சொல்வளம் மிக்க சிறப்பான பாடல்களைப் பதிவில் கண்டு மகிழ்ச்சி!..////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteபாட்டு பாடவா..என
பாடலை பாட வைத்தது சிறப்பு/////
நல்லது. நன்றி வேப்பிலையாரே!
////Blogger பரிவை சே.குமார் said...
ReplyDeleteநல்ல பகிர்வு.////
நல்லது. நன்றி நண்பரே!