மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

31.12.14

Quiz.no.72 Answer: கிடைத்ததை வைத்துக் கொண்டாடுவோம்: கிடைக்காததைக் கிடப்பில் போடுவோம்!


Quiz.no.72 Answer: கிடைத்ததை வைத்துக் கொண்டாடுவோம்: கிடைக்காததைக் கிடப்பில் போடுவோம்!

புதிர் எண் 72ற்கான விடை

கிடைத்ததை வைத்துக் கொண்டாடுவோம்: கிடைக்காததைக் கிடப்பில் போடுவோம்! அதாவது அறவே மறந்து விடுவோம்!

31.12.2014
--------------------------------------
நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து ஒரு கேள்வியைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்வி:

ஜாதகரின் கல்வி நிலைப்பாட்டைப் பற்றி எழுதுங்கள். அதாவது ஜாதகர் படித்தவரா? பட்டம் பெற்றவரா? அல்லது படிக்காதவரா? என்பது பற்றி அலசி உங்கள் பதிலை எழுதுங்கள். ஜாதகப்படி அதற்கு உரிய காரணத்தையும்
எழுதுங்கள்” என்று கேட்டிருந்தேன்

சரியான பதில்:

ஜாதகருக்குப் படிப்பு ஏறவில்லை. படிப்பைப் பாதியில் விட்டவர் (School drop out)

என்ன காரணம்?

1.மிதுன லக்கினம். 4ஆம் வீடான கன்னிக்கு அதிபதியான புதன் அந்த வீட்டிற்கு எட்டில்.அதுவும் சனியுடன் கூட்டணி.
2.கூட்டணி சேர்ந்துள்ள சனி ஜாதகத்தில் எட்டாம் வீட்டிற்கு உரியவன்.
3.ஆறாம் அதிபதியின் பார்வை கேடானது. ஜாதகத்தில் ஆறாம் அதிபதியான செவ்வாய் எட்டில் அமர்ந்து,  தனது நான்காம் பார்வையால் புதனைத் தன் பார்வையில் வைத்திருப்பதைக் கவனிக்கவும்.
4.நான்காம் அதிபதி பூரணமாகக் கெட்டிருக்கிறார். அதனால்தான் ஜாதகனுக்குப் படிப்பு ஏறவில்லை.
5.ஆறாம் அதிபதியின் சேர்க்கை அல்லது பார்வை மிகவும் தீங்கானது.
எதையும் அலசும்போது அதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்!
6.அத்துடன் இந்த ஜாதகத்திற்கு 4ஆம் அதிபதியும், கல்விகாரகனுமான புதன் கல்வி ஸ்தானத்திற்கு எட்டில் அமர்ந்தது மிகவும் கேடானது.
ஆகவே ஜாதகனுக்கு படிப்பு ஏறவில்லை. ஜாதகன் School drop out
-----------------------------------------------------------
சின்ன வயதில் சிலருக்கு படிப்பு வராது. படிக்கும் சூழ்நிலை இருந்தாலும் படிப்பு ஏறாது. எட்டாம் வகுப்பைக்கூடத் தாண்ட மாட்டார்கள். வீட்டில் பெற்றோர்கள் கண்டித்து, அடித்தால் பையன் வீட்டை விட்டு ஓடி
விடுவான். பிறகு பல சிரமங்களுக்கிடையே தேடிப்பிடித்துக் கூட்டிக்
கொண்டு வருவார்கள். வந்தாலும் திரும்பவும் படிக்கச் சொல்லி
வற்புறுத்த மாட்டார்கள். ஒரு ஸ்கூட்டர் ஒர்க் ஷாப்பிலோ அல்லது
ஒரு மளிகை/ ஜவுளிக்கடையிலோ அல்லது ஒரு அச்சகத்திலோ
அல்லது அதுபோன்ற சிறு தொழில் செய்பவர்களிடம் வேலைக்குச் சேர்த்துவிடுவார்கள்.

அதில் ஒரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பயிற்சி பெற்றதும், தங்கள் சொத்தில் எதையாவது விற்று அல்லது எங்காவது பணத்தைப் புரட்டி சம்பந்தப்பட்டவனுக்கு ஒரு சொந்தத் தொழிலை வைத்துக்
கொடுப்பார்கள். அவன் தன்னுடைய பிழைப்பை அதன் மூலம் செய்ய வேண்டியதாயிருக்கும்

அவனுடன் ஒன்றாகப் படித்தவன், பின்னால் சிரத்தையாகப் படித்துப் பொறியியல் பட்டம் பெற்று எங்காவது பெரிய தொழிற்சாலையில்
மாதம் ரூபாய் முப்பதாயிரம் சம்பாதித்துக்கொண்டிருப்பான். நம்மாளும் பின்னால் பெரிய மெக்கானிக்காகி கார் அல்லது மோட்டார்
சைக்கிள்களைப் பழுது பார்க்கும் தொழிலைச் செய்து, பலரையும்
வேலைக்கு வைத்துத் தன் நண்பனைவிட அதிகமாகச் சம்பாதிப்பான்.
 2, 10, & 11ஆம் வீடுகளைவைத்து  அவையெல்லாம் அவனுக்கு ஒரு
உயர்வைக் கொடுக்கும். ஆனால் படிப்பு போனது போனதுதான்.

என்ன காரணம்? எல்லாம் ஜாதகக் கோளாறுதான்!

அது போன்ற ஜாதகம்தான் இது
--------------------------------
போட்டில் 25 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

அவர்களில் 11 பேர்கள் மட்டுமே சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
**********//////Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணக்கம்.
    இந்த கேள்வி எற்கனவே கேள்வி பகுதி 33ல் 31‍/12/2013 அன்று கேட்கபட்டுள்ளது.
    பழைய பாடம். நினைவு படுத்தினதற்க்கு மிக்க நன்றி.
    கேள்வி பகுதி 72க்கு ஆன பதில்.
    1.ஜாதகர் படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை. கல்வி மறுக்கப்பெற்ற ஜாதகம்.
    2.4ம் அதிபதி பூரணமாக கெட்டு இருக்கிறார்.
    3.4ஆம் வீடான கன்னிக்கு அதிபதியான புதன் அந்த வீட்டிற்கு எட்டில். அதுவும் சனியுடன் கூட்டணி.
    4. கூட்டணி சேர்ந்துள்ள சனி ஜாதகத்தில் எட்டாம் வீட்டிற்கு அதிபதி.
    5. ஆறாம் அதிபதியின் பார்வை கேடு ஆனது.
    6. ஜாதகத்தில் ஆறாம் அதிபதியான செவ்வாய் எட்டில் அமர்ந்து,
    தனது நான்காம் பார்வையால் புதனைத் தன் பார்வையில் வைத்திருக்கிறார்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்.
    Tuesday, December 30, 2014 6:54:00 AM///////
--------------------------------------------------------
2
**********//////Blogger trmprakaash@gmail.com said...
    ayya, midhuna lagna jathagam. Lagnathipathy lagnathirkku 11-il neesabangam adaindha sani matrum suriyanudan. Aanal, 4m veettirkku 8m veettil 4m adhipathy Budhan 6-8 positionil. 2il kethu. Andhaveettu adhipathy chandiran neesabangam adaindhu guruvudan ullar. Idhu nalla amaippu (kaja kesariyogam) endralum lagnathirkku 6-m veedu enbadhal muzhu palanai adaiya vaippu kuraivu. 4m adhipathy budhan 4m veettirkku 8il 6m adhipathyana ucha sevvayin parvayil. 4m veetin athypathikku subar parvai illai. Aanal,4m veettirkku poorvapunniyadhiayana ucha sukkiranin paarvai irundhalum 4m adhipathiyum ucha sukkiranum 12-1 positionil.
    Aadhalal, ivar 10m vaguppu thandiyirukka maattaar.
    Anbudan,
    Mu.Prakaash.
    Tuesday, December 30, 2014 11:00:00 AM////////
----------------------------------------------------------
3
***********//////Blogger sundari said...
    வணக்கம் சார்.
    ஜாதகர் படிக்காதவர் காரணம் 2ல் கேது 4ஆம் அதிபதி புதன் அந்த வீட்டிற்கு 8ல்3ஆமஅதிபதிசூரியன் 8ஆம் அதிபதி சனியோடு கூட்டாயிருகிறார் அப்புறம் 2ஆமதிபதி சந்திரன் நீசம் பெற்று 6ல் இருக்கிறார் 5ஆமதிபதி
சுக்கிரன் உச்சம் ெற்று 5ஆம் வீட்டிற்கு 6ல் இருக்கிறார்.6ஆமதிபதி செவ்வாயின் பார்வையை வேற புதன் பெற்றுவிட்டார்.
    Tuesday, December 30, 2014 11:21:00 AM/////
------------------------------------------------
4
//////Blogger Govindasamy said...
    5க்கு உரிய சுக்கிரன் 10ல் குருவின் வீட்டில் 10க்கு உரிய குரு 6ல் நீச சந்திரனுடன். ஜாதகர் பள்ளிக் கல்வியை முடித்திருக்கமாட்டார்.
    9க்கு உரிய சனி 11ல் செவ்வாயின் வீட்டில். 11க்கு உரிய செவ்வாய் 8ல் சனியின் வீட்டில். பரிவர்த்தனை யோகம். கூடவே சூரியனும் புதனும் 11ல் புத ஆதித்ய யோகம்.
    ஜாதகர் தன் சொந்த புத்தியில் சற்று தெளிந்தவராக காணப்பட்டாலும்,இரண்டில் கேது இருப்பதால் தன்
எண்ணத்தை தெளிவாக வெளிப்படுத்த இயலாதவராகவோ அல்லது சற்று திக்கும் இடர் கொண்டவராகவோ இருப்பார்.
    Tuesday, December 30, 2014 12:45:00 PM//////
---------------------------------------------------
5
**********//////Blogger venkatesh r said...
    மிதுன லக்னம், விருச்சிக ராசி ஜாதகர். அவர் பள்ளி இறுதி வரை மட்டும் படித்து இருப்பார்.
    காரணங்கள் :
    லக்னாதிபதி 11ல். ல‌க்னத்திற்கு 2ல் கேது கல்விக்கு தடை. தவிர 2ம் அதிபதி 6ல் மறைவு, நீசம். 2மிடத்திற்கு குரு பார்வை இருந்தாலும், வில்லன் செவ்வாயின் நேர் பார்வை. ஆரம்பக் கல்வியை கஷ்டப்பட்டு படித்து இருப்பார். 
உயர் கல்விக்கான 4மிட அதிபதி புதன் அதற்கு 8மிடமான 11ல். கூடவே 8ம் அதிபதி சனி. என்னதான் நீசம் பங்கமானாலும் ஜாதகருக்கு கல்வியில் உதவியிருக்க மாட்டார்.
    Tuesday, December 30, 2014 2:58:00 PM//////
--------------------------------------------------
6
///////Blogger Chandrasekharan said...
    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்,
    1.) 4-ம் அதிபதி புதன் 11-இல் அமர்வு, உடன் 3-ம் அதிபதி சூரியன் உச்சம் பெற்று 11-இல் அமர்வு.
    2.) 8-ம் அதிபதி சனி நீசபங்கம் அடைந்து 11-இல் அமர்ந்து 3-ம் பார்வையாக லக்னத்தை பார்கிறார்.
    3.) சனி & செவ்வாய் பரிவர்தனை.
    4.) சனி & செவ்வாய் பரஸ்பர பார்வை. 4-ம் அதிபதி முற்றிலும் பலவீனமக உள்ளார்.
    5.) 10-இல் உச்ச சுக்கிரன் 4-ம் வீட்டை பார்கிறார் ஆனால் சுக்ரனை 6-இல் அமர்ந்த குரு 5-ம் பார்வையாக பார்த்து பலவீனப்படுத்துகிறார். இந்த காரணத்தினால் படிப்பு சொல்லும்படியக இல்லை. 10-ம் வகுப்பு 
படித்திருந்தாலே பெரிய விஷயம்.
    நன்றி.
    Tuesday, December 30, 2014 5:06:00 PM//////
------------------------------------------------
7
//////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    புதிர் எண் .72,
    1.கொடுக்கப்பட்ட ஜாதகம்.மிதுன இலக்கணம் .லக்னாதிபதிபுதன் 11 ல் உடன் உச்சம் பெற்ற சூரியன் +சனி ..
    2.கல்விகதிபதியான புதன் 11 ல் இருந்தாலும் மனகாரகன் சந்திர 6ல் நீசமாக போனான் உடன் குரு இருந்தாலும் வீடு 6ம வீடு .ஆகவே மன நோயாளி போன்று
    3.வசதி வாய்ப்புகள் உண்டு சுக்கிரன் உச்சம் செவ்வாய் உச்சம் உடன் ராகு இவர்கள் இருவரும் 2 மிடத்தை
பார்வை வாக்குஸ்தானம் .2ல் கேது .
    4.சூரியனுடன் புதன் சேர்ந்தாலும் உடன் சனியின் கூட்டு .மிகவும் டெண்ஷான ஜதாகர்.
    5.*** படிப்பு பள்ளி தாண்டி இருக்க மாட்டார். ....****???
    Tuesday, December 30, 2014 6:06:00 PM/////
------------------------------------------------
8
/////Blogger Prasanna said...
    Dear Sir,
    NAMASTHEY,
    ANS: Native is not a formally educated person (Padikadhavar)
    Vidya is seen from the fourth house in the horoscope.The natural käraka of the fourth house is the Moon and rightly its the first knowledge that comes is the mother tongue, or the language of ones parents. The fourth house is responsible for our attainment of knowledge.It’s apparent that the formal education revolves around the principles of the fourth house and Moon, and from these we can derive some principles to approach the charts.
    The nature of the education is seen from the planets in the particular house, the lord and the aspects (Graha

DRUSHTI).
    The first formal education is seen from the fourth house - this is the primary education encompassing

primary school and high school. The ninth, second and seventh houses are the
    following three stages of College/Bachelors,Masters and Doctorate respectively.
    Fourth – primary
    Ninth – college/bachelors/diploma
    Second – masters
    Seventh – doctorate/Ph.D
    The placement of the lord of the fourth house will show the aspiration of the native in their education. If it is

badly placed then education may not be important to the native, whilst if the
    fourth lord is placed in the second house, then the aspiration is to attain a master’s degree..
    The GIVEN NATIVITY BELONGS TO MITHUNA LAGNA. We see , LAGNA LORD PLUS 4TH LORD MERCURY IS

PLACED IN 11 TH HOUSE WITH 3RD LORD SUN and the 8TH LORD SHANI HERE. So his 4th house is corrupted

and 4th lord is corrupted which says , there is no formal education possible.
    Moon and Guru co-joined and placed in 6th house which tells karakas of vidya and sukha) (4th house karaka as well as vidya karaka ) , Moon and Guru are afflicted which strengthens my point telling he is not formally educated.
    Second house kethu indicates there is no master degree and it is also aspect ed by both the high rated malefic s , Rahu and Mars (samasapthama) over second house which confirms there is no scope for Masters degree.
    9th lord, the lord of Bhagya is placed in 11 th, (shani here is 8th lord too for Mithuna Lagna native which should be kept in mind always ) and so , though there seems Budha adhitya yoga, co joining of shani there as well as the exalted malefic aspect of Mars over these planets spoiled the Budha Adhithya yoga which substantiates my answer telling he is not formally educated. He can be intelligent, that doesn't mean he must be educated or a degree holder.
    One more important point to be noted here is, venus. For the Gemini Ascendant Venus will be lord of the 5th and the 12th house. Being the lord of the 5th, a trine, Venus is an auspicious planet for this ascendant,

Moreover, Venus is a friend of Mercury- the lord of this ascendant.( Consequently wearing of a Diamond in the major and sub-periods of Venus will bless the native with children, happiness, intelligence, name, fame and good fortunes). 12 TH LORD SHOULD NOT BE WELL PLACED IS THE GROUND RULE . ASPECT OF SUCH LORD OVER

4 TH HOUSE . spoiled the goodness of 4th house, simply put. Due to the .ownership of 12 th house, Venus has become functional malefic and her aspect over 4th house corrupted the fourth house matters , which we must understand here. Hence he could not have even had basic education too , which I am sure . .
    Last but not the least if we see 7th house , 7th lord guru is in 6th house, with has neecha moon, so there is no possibility for him to be a doctorate. (guru chandra yogam nullified) .
    So my conclusion here is the native is not a formally educated person.
    P.S.
    In this given chart we see many good yogas like Gaja keasari , Budh Adhithya, exalted venus( malavya
Yoga) one of the Puncha Mahapurusha yoga.Exalted mars too. WHEN THE BENEFICE GURU GOES TO 6TH HOUSE THE TOTAL CHART BECOMES WEAK IS MY VIEW POINT. Moreover, all used ignore the placement of yoga where its occurring Aspect of Shani over Rahu tells me that Pithru dosha in this chart is also high. Seeing guru's placement co joining neecha Moon, in the 6th house.
    Thanks and Regards,
    Prasanna
    Tuesday, December 30, 2014 6:15:00 PM//////
------------------------------------------------
9  
***********//////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our Quiz No.72:
    1. The Native of the horoscope not completed his schooling.
    Reasons:
    1. Second house lord is debilitated and Kedhu is sitting in second house and Mars aspecting.
    2. Fourth house lord is sitting 8th place from his own house along with sun and saturn. It's worst.
    3. Twelfth house lord is aspecting 4th house.
    4. Dasa's are also not supported.
    5. Vidyakaraga is sitting in Mars house and aspected by Mars also.As per rule, It's not good sign for education.
    Hence, he dropped out from school.
    He may engaged in art field.
    With kind regards,
    Ravichandran M.
    Tuesday, December 30, 2014 6:32:00 PM/////
-------------------------------------------------
10
/////Blogger Ariyaputhiran Natarajan said...
    ஐயா,
    மிதுன லக்னம். 6ல் குரு. அதுவும் சந்திரனுடன். ஆனால் குரு மிதுன லக்னத்துக்கு
    என்ன நன்மையைச் செய்து விடுவார். அதெல்லாம் சரி. செவ்வாய் எட்டில். அதுவும் உச்சம்.
    இந்த செவ்வாய் உச்சமாய் தன் வீட்டில் உச்சமாய் இருக்கும் சூரியனைப் பார்க்கிரார்.
    புதனும் சனியும் அஸ்தங்கதம் அடைந்துள்ளதால் கல்விக்கும், செல்வத்துக்கும் தடையாய்
    இருக்கிறார்கள்.
    ஜாதகர் பள்ளி இறுதி வரை மட்டுமே படித்தவர்.
    அ.நடராஜன்
    Tuesday, December 30, 2014 8:47:00 PM//////
------------------------------------------------
11
***********/////Blogger Venkat Lakshmi said...
    உயர்திரு ஐயா,வணக்கம்.
    புதிர் 72க்கு எனது பதில்;லக்கணாதிபதி,4ம் வீட்டு அதிபதி,மற்றும் கல்விக்கு அதிபதி மூவரும் ஒருவரே,4ம் வீட்டு அதிபதி அந்த வீட்டீற்க்கு 8ல் அதனால் 8ம் வகுப்பு வரை படித்திருப்பார்.
    Tuesday, December 30, 2014 11:41:00 PM/////
------------------------------------------------
/////Blogger Kirupanandan A said...
    //திருமணத்தை வைத்தே கேள்விகள் எதற்கு? என்று மாணவர் ஒருவர் கேட்டுக்கொண்டே இருந்தார்.//
    அது சரி. இதைக் கேட்ட அவர் இதில் கலந்துக் கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கிறாரா என்று சொல்லவில்லையே.
    Tuesday, December 30, 2014 8:11:00 PM/////

இல்லை. அவர் கலந்து கொள்வதில்லை!
----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

venkatesh r said...

ஜாதக விளக்கம் அருமை. இது நம்ம "தல" அஜித் வாழ்க்கைக்கு ஏறக்குறைய‌ ஒத்து வருவது போல் தெரிகிறதே? ஜாதகம் அவருடையதா?

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யா வுக்கு வணக்கம்

25 பேர்களில் 11 பேர் அதில் நானும் ஒருவன் என்ற மகிழ்ச்சி இருந்தாலும் 4 மிடதிற்கு 8 மிடம் புதன் அமர்ந்திருக்கிறான் என்ற சரியான ..அலசல் என்னிடம் இல்லை. .
இருந்தாலும் பாஸ் போட்டதற்கு நன்றி.

lrk said...

ஐயா வணக்கம் .
ஜாதக அலசலை நன்கு தெரிந்து கொண்டேன் .
நன்றி ஐயா .

selvam velusamy said...

வணக்கம் குரு,

லக்னத்திற்கு பதினொன்றில் உள்ள நவ நாயகர்கள் நன்மை செய்வார்கள் என்பதும் சம்பந்தபட்ட பாவம் நன்மையடையும் என்பதும் இந்த ஜாதகத்தில் பொய்த்துவிட்டதே.

நன்றி
செல்வம்

kmr.krishnan said...

30,31 இரண்டு நாட்க‌ளும் சென்னையில் இருந்தேன் ஒரு 80 சதாபிஷேகம். ஆகவே வகுப்பறை பக்கம் வரவில்லை. இரண்டாவது முறையாக புதிர் போட்டியில் க்லந்துகொள்ளவில்லை.

-'பரிவை' சே.குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா...

Kirupanandan A said...

லக்கினத்திற்கு 2ம் இடம் இடைநிலைக் கல்வி வரை உள்ள நிலையைக் குறிப்பதாகவும், 4ம் இடம் பட்டப் படிப்பபைக் குறிப்பதாகவும் ஓரிரு புத்தகங்களில் படித்த ஞாபகம். 2ல் கேது இருக்கும் நிலையை வைத்து ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

kulsrasasingam ragulankrishna said...

1991.07.28 am9.08 jAthagam kanikka mudiyuma vaththiyar iya

kulsrasasingam ragulankrishna said...

1991.07.28 am9.08 jAthagam kanikka mudiyuma vatahthiyar iya

kulsrasasingam ragulankrishna said...

1991.07.28 am9.08 jAthagam kanikka mudiyuma vaththiyar iya