மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

3.12.14

Humour: நகைச்சுவை: நகைச்சுவை மட்டுமே!


Humour: நகைச்சுவை: நகைச்சுவை மட்டுமே!

இந்தப் பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே பதிவிடப்பெறுகிறது.
நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் மட்டும் தொடரவும். உம்மண்ணா
மூஞ்சி அன்பர்கள் வெளியேறிவிடலாம்.

அதுபோல யாரும் படித்த பிறகு சீரியசாகிவிடாமல், புன்சிரிப்போடு
மட்டும் செல்லவும். வேறு விவகாரம் எதுவும் வேண்டாம்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------
1.கொஞ்சம் சிரிங்க கண்ணுங்களா,ஆப்படியே கொஞ்சம் யோசிங்க
சாமிகளா!

1 ... ஆண்களுக்கு ....
உங்க மனைவியை ஒரு அறையிலும், உங்கள் வீட்டு நாயை ஒரு அறையிலும் 2-3 மணி நேரத்துக்கு பூட்டி வையுங்கள்...
கதவைத் திறந்ததும் யார் உங்களைப் பார்த்து சந்தோஷப்படுறாங்க,
யார் கடிக்குறாங்கனு தெரியும்...

2 ... பெண்களுக்கு...
உங்க கணவனை ஒரு அறையிலும், உங்கள் வீட்டு நாயை ஒரு
அறையிலும் 2-3 மணி நேரம் பூட்டி வையுங்கள்...
கதவைத் திறந்தால், நாய் சந்தோஷத்தில் ஓடி வரும். ஆனா உங்கள்
கணவர், நிம்மதியாக உறங்கிக்கொண்டிருப்பார்.

3 ... வாழ்க்கையின் மிக முக்கியமான ஊக்கம்...
உங்கள் மனைவியின் படத்தை ஸ்க்ரீன் சேவராக வையுங்கள்...
உங்களுக்கு பிரச்சனை வரும் போது அதைப் பார்த்து கூறுங்கள்...
"இதை நான் கையாளும் போது, என்னால் எதையும் கையாள
முடியும்"...மனதுக்கு புது உற்சாகம் கிடைக்கும்...

4 ... மனைவியின் மீது கணவன் கவனம் செலுத்த வேண்டுமென்றால்,
அவள் சோகமாக இருந்தால் போதும்...
கணவன் மீது மனைவி கவனம் செலுத்த வேண்டுமென்றால், அவன் சந்தோஷமாக இருந்தாலே போதும்...

5 ... எந்த ஒரு மனிதனும் தன்னை ஒரு முறை ஏமாற்றிய இடத்துக்கு
மீண்டும் போக மாட்டான்...ஆனால் இன்னும் பல மனிதர்கள், தங்கள்
மாமியார் வீட்டுக்குச் செல்கின்றனர்...

6 ... மகன் : அப்பா, நான் மாறுவேட போட்டியில் கலந்து கொண்டேன்...
அப்பா : என்ன வேடம்?
மகன் : கணவன் வேடம்...
அப்பா : முட்டாள், வசனங்கள் பேசக்கூடிய வேடத்தை தேர்ந்தெடு..
.
பின்குறிப்பு : இது நிபுனர்களால் மட்டுமே செய்யக்கூடியது.
வகுப்பறைக் கண்மணிகள் இதை வீட்டில் செய்துபார்க்க வேண்டாம்
என்று எச்சரிக்கப்படுகிறார்கள்... விபரீதங்களுக்கு வாத்தியார்
பொறுப்பேற்கமாட்டார்!
--------------------------------------------------------
2
If you follow the right woman, you become... Robert Vadra
If you follow the wrong woman, you become... Vijay Mallya
If you follow many woman, you remain... Salmaan Khan (Bachelor)
If you don't follow woman, you become... Narendra Modi
Choose your type...
Hang on..
Do not follow woman blindly.. Else you become... Manmohan Singh !!
*Issued in men's interest*
Note: if you keep thinking who to follow then you remain a kid like Rahul Gandhi
-------------------------------------------------------------------------
3
ஒருவரிடம்  தெருவில்  சென்ற  பிச்சைக்காரன்  சாப்பிட , இரண்டு ரூபாய் கேட்டான்.அவர் அவனை விசாரித்தார்,
''குடிப்பாயா?''
'இல்லை,சார்,'
''சிகரெட் பிடிப்பாயா?''
'இல்லை,சார்.'
''ரேசுக்கு போவாயா?''
'இல்லை,சார்.'
''சூதாட்டம்?''
'கிடையாது,சார்.'
''பெண் சிநேகிதம்?''
'சத்தியமா இல்லை,சார்.'
''உனக்கு இருபது ரூபாய் தருகிறேன்.என் வீட்டுக்கு வா.என்
மனைவியிடம் உன்னைக் காட்ட வேண்டும். எந்த கெட்டபழக்கமும்
இல்லாத ஒரு மனிதனின் நிலைமையை பார்த்தாயா என்று காட்ட
 வேண்டும்.''
---------------------------------------------------
எல்லாம் வாட்ஸப்ப்'பில் வந்தவை. நன்றாக இருந்ததால் உங்களுக்கு
அறியத் தந்துள்ளேன்!

இந்த 3ல் எது மிகவும் நன்றாக உள்ளது?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

துரை செல்வராஜூ said...

ஒரேயடியாக முக்கனிகளைப் பரிமாறி விட்டீர்கள்!.. மகிழ்ச்சி..

வேப்பிலை said...

அந்த 20 ருபா தரும் ஆசாமியை
அடையாளம் காட்டுங்க

எனக்கு எந்த கெட்டபழக்கமுமில்லை
எப்படியாவது அவரிடமிருந்து

தினமும் பணம் வாங்குகிறேன் நல்ல
திட்டங்களுக்கு செலவு செய்வதற்கு

வேப்பிலை said...

கணவன் மனைவி நகைச்சுவை
கடந்த காலத்திற்கானது

இன்றைய காலத்தில்
இவை எதுவும் ஒத்துவராது

யாரும் யாரையும் நம்பி இல்லை
யாருக்கும் யாரும் சுமையில்லை

இன்னமும் சரியாக சொன்னால்
இது சரியில்லை என்றால்

நீதி மன்றத்தில் தான் கையை
நீட்டுகின்றனர் விவாகரத்து கோரி

இத்தனை நாள்
இவ(ளோ)ரோடு என

திருமண நாள் விழா வைத்தால்
திருதிரு என விழித்தபடி

இன்னமுமா
இவரோ(ளோ)டு வாழ்கின்றீர் என

வித்தியாசமாக பார்க்கின்றனர்..
விவரமாக நகைச்சுவை என்றதால்

வால் உள்ள ஒன்றை நாலு
கால் உள்ள ஒன்றோடு ஒப்பிட்டது

யோசிக்க வைக்கிறது.. முதலில்
போய் நாயை வாங்க வேண்டும்

Regunathan Srinivasan said...

அய்யா,
வணக்கம்.எனக்கு பிடித்தது No 2 .

என்றும் பணிவுடன்,
S . ரகுநாதன்

Sakthivel K said...

வணக்கம் சார்.......
3வது நகைசுவை சூப்பர்!!

சில மிடில்கிளாஸ் ஆசாமிகள் !!!
பெரும் சொத்து இருக்காது!
நிரந்தர வருவாய் இருக்காது!
உழைக்காமல்வரும் பணம் இருக்காது
இவர்கள்....
குடிப்பது, சூதாட்டம்,ரேஸ்,
மயக்கும்சுந்தரிகள் தொடுப்பு !!
இதில்ஈடுபட்டு
பிச்சைக்காரன் ஆனபர்கள் பலபேர்...
ஜாதகத்தில்.....
1,3,4,11 இந்தயிடம் வலுபெறவேண்டும்
சுக்கிரன் சூப்பராக,அசத்தலாக
இருக்கவேண்டும்.....
கொடுப்பினை வேண்டும்....
வாங்கிவந்த வரம்வேண்டும்.....

GOWDA PONNUSAMY said...

வணக்கம்.
இரண்டாவதாக கூறப்பட்டுள்ள நகைச்சுவை அதிகளவில் ரசிக்கப் படும்படியாக உள்ளது.
விளக்கம் திரு.அய்யர் அவர்கள் தெளிவுறித்தியுள்ளார்.நன்றிகள்.
-பொன்னுசாமி.

lrk said...

ஐயா வணக்கம் .

3 வது காமடி நன்றாக உள்ளது . நல்ல நகைச்சுவை .

நன்றி .

Kirupanandan A said...

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நன்றாகவே இருக்கிறது. ஆங்கிலத்தில் உள்ளது, அதை எப்படி சொன்னாலும் அனைவருமே ஒவ்வொரு விதத்தில் நன்றாகதானே இருக்கிறார்கள்.