மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.12.14

வேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா?



வேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா?

கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்!

வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா?
ஏன் அப்படிச்செய்யவில்லை பகவானே? என்று கேட்கப்பெற்ற
போது கிடைத்த பதில் -. அதிரவைக்கும் பதில்
---------------------------------------------
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர்
உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ
வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர்

என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.
ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள்,
தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,
எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,சிறு வயது முதலே கண்ணனின்செயல்களைக்கவனித்து வந்த உத்தவருக்கு,
சொல் ஒன்றும்,செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின்லீலைகள்,
புரியாத புதிராக இ ருந்தன.அவற்றுக்கானகாரண, காரியங்களைத்
தெரிந்து கொள்ள விரும்பினார்.

"பெருமானே! நீ வாழச் சொன்னவழி வேறு; நீ வாழ்ந்து காட்டியவழி
வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்றபாத்திரத்தில்,
நீ புரிந்த செயல்களில்,எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு.அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக
இருக்கிறேன்.நிறைவேற்றுவாயா?"என்றார் உத்தவர்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில் எனக்கு ஒரு
விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன்.
உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த
ஞானியான நீ, 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த
விளக்கத்தின் படி, முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம்
இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்
அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும்,
தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,வஞ்சகர்களுக்கு
நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன்
செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள்
நுழைந்து தடுத்திருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.'
திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்வைத்து ஆடு.
இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால்
விட்டான் - துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால்,
அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக
விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை
ஏற்பட்ட போதுதான் சென்று, ';துகில்தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன்,
குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர்சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய
மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்
படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்?
இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'
என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்து
விட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.நமக்காக
இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க
வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த
விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்"
என்றான் கண்ணன்.

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்.

"துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது.ஆனால், பணயம் வைக்க
அவனிடம் பணமும்,ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம்
நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச்
சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும்
அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,' நானும் பணயம்
வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
பகடைக்காயை உருட்டுவான்' என்று சொல்லியிருக்கலாமே?
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்?
நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,அவன் கேட்கும் எண்ணிக்கைளை
என்னால்தான் போடமுடியாதா? போகட்டும். தருமன் என்னை
ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது
மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். 'ஐயோ! விதி வசத்தால் சூதாட
ஒப்புக் கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்னுக்கு
மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன்மட்டும் சூதாட்ட
மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக்
கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு
அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது
பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று
மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன்.
 பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,
தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர,
என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே! அண்ணன் ஆணையை
நிறைவேற்ற  துச்சாதனன்சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.
அவளும் தனது  பலத்தையே நம்பி, சபையில் வந்து வாதங்கள்
செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!
நல்லவேளை..துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி...ஹரி...அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள். பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற
அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும்
சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச்
சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.

"அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால்,
ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?"
என்றார் உத்தவர்.

"கேள்" என்றான் கண்ணன்.

"அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை
நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ
வரமாட்டாயா?"

புன்னகைத்தான் கண்ணன். "உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;

அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!
அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.

"நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று,
நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய்.
நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து
பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே
இருக்க  வேண்டும். அப்படித்தானே?" என்றார் உத்தவர்.

"உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக
உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை
நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை
களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து
விடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து
விடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும்
சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல்
சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது
அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும்
இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக  முடிந்திருக்கும் அல்லவா?" என்றான்
 ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா!
எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!
பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும், அவனை
உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! "அவனின்றி ஓர்
அணுவும் அசையாது" என்ற நம்பிக்கை வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?

இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.

அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர,
அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை

அதுதான் பகவானின் மேன்மை!
---------------------------------------------
இணையத்தில் படித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்,

அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

36 comments:

  1. Good morning sir,
    Nice message thank your

    ReplyDelete
  2. ///"உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
    கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;

    அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!
    அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.///

    இதனை ஜோக் என்று
    இப்போதும் சொல்ல வில்லை

    காரணம் தெய்வதர்மம் என்றதால்
    கடவுள் வேறு தெய்வம் வேறு

    என அன்றே சொல்லி வைத்தது
    எல்லோருக்கும் நினைவிருக்கும்..

    பிறப்பதற்கே தொழிலாகி
    இறக்கின்றாரே என்பது அப்பர் வாக்கு

    பத்து முறை பிறந்து இறந்ததாக
    திருக்குறள் கூறுகிறது...

    வீட்டில் இறந்தவர்களை
    விவராமாக இப்படி சொல்வார்கள்

    "தெய்வமாகிவிட்டார்"

    தெய்வம் பொருள் புரிகிறது தானே
    தெளிவாக விளக்க வேண்டாம் தானே

    ReplyDelete
  3. அய்யா,
    நான் உங்கள் பக்கங்களை கடந்த ஒரு வருடமாக படித்து கொண்டு இருக்கின்றேன் .என்னை மிகவும் சிந்திக்க வைத்த பாடம் இன்று நீங்கள் சொன்னதுதான்.
    நிஜமாகவே நமது மதம் " அர்த்தமுள்ள இந்து மதம் தான்".
    மிகவும் நன்றி அய்யா.
    என்றும் பணிவுடன் ,
    S . ரகுநாதன்

    ReplyDelete
  4. வணக்கம் சார்.......

    துரியோதனன் மாமன் சகுனியை
    பகடையை உருட்டவைத்தான்!!

    தருமன் மைத்துனன் ஸ்ரீகண்ணன்
    பகடை உருட்டுவான்
    என சொல்லவில்லை!!!

    கிராமத்தில் ஒரு பலமொழி சொல்வார்கள்...
    செரைப்பவன் செரைக்கவேண்டும்!
    வெழுப்பவன் வெழுக்கவேண்டும்!

    ReplyDelete
  5. வணக்கம் குரு,

    இந்த பதிவை நானும் வேறு ஒரு வலைதளத்தில் படித்தேன் இருப்பினும் நமது வகுப்பறையில் உங்கள் மூலம் படிப்பதும் ஒரு மகிழ்ச்சிதான்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  6. இது ஏற்கனவே படித்ததுதான். என் முகநூல் முகவரிக்கு என் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.

    விநாச கால விபரீத புத்தி என்பது தருமருக்கு பொருந்தும். கெட்ட நேரம் வந்தால் புத்தி சரியாக வேலை செய்யாது.

    பகவான் கிருஷ்ணரின் அவதார நோக்கமே போர் நடந்து, பெரும் அழிவு ஏற்பட்டு, பூமியின் பாரம் குறைய வேண்டும் என்பதுதான். சூதாட்டத்தில் தருமர் ஈடுபடாமலோ தோற்காமலோ இருந்திருந்தால் பாரதப் போர் ஏற்பட்டிருக்காதே. இறைவன் நம்மை ஆட்டி வைக்கிறார். (அல்லது இந்தக் கதையில் சொன்னது போல் நம் கர்ம வினைகள் நம்மை ஆட்டி வைக்கின்றன). நாம் ஆடுகிறோம்.

    ReplyDelete
  7. வாத்தியார் ஐயா வணக்கம்.

    இன்றைய வகுப்பறை மிகவும் மங்களகரமாக இருந்தது.

    இன்றைய வகுப்பறையை எவர் மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்து கொண்டு இருந்தார்களோ அவர்களுக்கு பாடத்தின் இடையில் ஒரு கேள்வி கண்டிப்பாக தோன்றி இருக்கும் .

    அதுதான் நீங்களே கூறி உள்ளீர்களே

    ( "அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை
    நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ
    வரமாட்டாயா?"

    என்பது ஆகும். )

    இந்த நேரத்தில் என்னையும் அறியாமல் கண்களில் ஆனந்த கண்ணீர் வர வைத்து விட்டீர்கள் நன்றி ஐயனே.

    நன்றாக சிந்தித்து பார்த்தல் நமக்கு என்ன இறைவன் எதிரியா ? நமக்கு மட்டும் கஷ்டத்தினை தர நாம வாங்கி வந்த வரத்தின் பலாபலனை அனுபவிக்கின்றோம் அவ்வளவு தான் வேறு என்னத்த சொல்ல
    நன்று ஆசானே!
    நன்றி .

    ReplyDelete
  8. ஐயா வணக்கம் .

    இறைவனை மனம்உருகி அழைத்தால் தான் வருவார் என்பதை இதை விட தெரிவு படுத்த முடியாது .

    நன்றி ஐயா

    கண்ணன் .

    ReplyDelete
  9. ////Blogger Prakash Kumar said...
    Good morning sir,
    Nice message thank your////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ////Blogger வேப்பிலை said...
    ///"உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
    கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;
    அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!
    அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.///
    இதனை ஜோக் என்று
    இப்போதும் சொல்ல வில்லை
    காரணம் தெய்வதர்மம் என்றதால்
    கடவுள் வேறு தெய்வம் வேறு
    என அன்றே சொல்லி வைத்தது
    எல்லோருக்கும் நினைவிருக்கும்..
    பிறப்பதற்கே தொழிலாகி
    இறக்கின்றாரே என்பது அப்பர் வாக்கு
    பத்து முறை பிறந்து இறந்ததாக
    திருக்குறள் கூறுகிறது...
    வீட்டில் இறந்தவர்களை
    விவராமாக இப்படி சொல்வார்கள்
    "தெய்வமாகிவிட்டார்"
    தெய்வம் பொருள் புரிகிறது தானே
    தெளிவாக விளக்க வேண்டாம் தானே/////

    வீட்டில் இறந்தவர்களை "தெய்வமாகிவிட்டார்" என்று சொன்னால் தெய்வத்தோடு சேர்ந்துவிட்டார் என்றுதான் பொருள். மனிதன் எந்த நிலையிலும் தெய்வமாக முடியாது. கடவுளுக்கும், தெய்வத்திற்கும் நீங்கள் கூறும் விளக்கம் என்ன? எங்களுக்கு, எங்களைப் போன்ற பாமரர்களுக்கு இரண்டும் ஒன்றுதான். நீங்கள் உங்கள் விளக்கத்தைப் புரியும்படியாக எழுதுங்கள் வேப்பிலையாரே!

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. ////Blogger Regunathan Srinivasan said...
    அய்யா,
    நான் உங்கள் பக்கங்களை கடந்த ஒரு வருடமாக படித்து கொண்டு இருக்கின்றேன் .என்னை மிகவும் சிந்திக்க வைத்த பாடம் இன்று நீங்கள் சொன்னதுதான். நிஜமாகவே நமது மதம் " அர்த்தமுள்ள இந்து மதம் தான்".
    மிகவும் நன்றி அய்யா.
    என்றும் பணிவுடன் ,
    S . ரகுநாதன்/////

    நல்லது. தொடர்ந்து படியுங்கள் நண்பரே!

    ReplyDelete
  13. ////Blogger Regunathan Srinivasan said...
    அய்யா,
    நான் உங்கள் பக்கங்களை கடந்த ஒரு வருடமாக படித்து கொண்டு இருக்கின்றேன் .என்னை மிகவும் சிந்திக்க வைத்த பாடம் இன்று நீங்கள் சொன்னதுதான். நிஜமாகவே நமது மதம் " அர்த்தமுள்ள இந்து மதம் தான்".
    மிகவும் நன்றி அய்யா.
    என்றும் பணிவுடன் ,
    S . ரகுநாதன்/////

    நல்லது. தொடர்ந்து படியுங்கள் நண்பரே!

    ReplyDelete
  14. ////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்.......
    துரியோதனன் மாமன் சகுனியை
    பகடையை உருட்டவைத்தான்!!
    தருமன் மைத்துனன் ஸ்ரீகண்ணன்
    பகடை உருட்டுவான்
    என சொல்லவில்லை!!!
    கிராமத்தில் ஒரு பலமொழி சொல்வார்கள்...
    செரைப்பவன் செரைக்கவேண்டும்!
    வெளுப்பவன் வெளுக்கவேண்டும்!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சக்திவேல்!

    ReplyDelete
  15. ////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்.......
    துரியோதனன் மாமன் சகுனியை
    பகடையை உருட்டவைத்தான்!!
    தருமன் மைத்துனன் ஸ்ரீகண்ணன்
    பகடை உருட்டுவான்
    என சொல்லவில்லை!!!
    கிராமத்தில் ஒரு பலமொழி சொல்வார்கள்...
    செரைப்பவன் செரைக்கவேண்டும்!
    வெளுப்பவன் வெளுக்கவேண்டும்!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சக்திவேல்!

    ReplyDelete
  16. /////Blogger selvam velusamy said...
    வணக்கம் குரு,
    இந்த பதிவை நானும் வேறு ஒரு வலைதளத்தில் படித்தேன் இருப்பினும் நமது வகுப்பறையில் உங்கள் மூலம் படிப்பதும் ஒரு மகிழ்ச்சிதான்.
    நன்றி
    செல்வம்////

    நல்லது. உங்களின் அன்பிற்கு நன்றி!

    ReplyDelete
  17. ////Kirupanandan A said...
    இது ஏற்கனவே படித்ததுதான். என் முகநூல் முகவரிக்கு என் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.
    விநாச கால விபரீத புத்தி என்பது தருமருக்கு பொருந்தும். கெட்ட நேரம் வந்தால் புத்தி சரியாக வேலை செய்யாது.
    பகவான் கிருஷ்ணரின் அவதார நோக்கமே போர் நடந்து, பெரும் அழிவு ஏற்பட்டு, பூமியின் பாரம் குறைய வேண்டும் என்பதுதான். சூதாட்டத்தில் தருமர் ஈடுபடாமலோ தோற்காமலோ இருந்திருந்தால் பாரதப் போர் ஏற்பட்டிருக்காதே. இறைவன் நம்மை ஆட்டி வைக்கிறார். (அல்லது இந்தக் கதையில் சொன்னது போல் நம் கர்ம வினைகள் நம்மை ஆட்டி வைக்கின்றன). நாம் ஆடுகிறோம்./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  18. ////Blogger Maaya kanna said...
    வாத்தியார் ஐயா வணக்கம்.
    இன்றைய வகுப்பறை மிகவும் மங்களகரமாக இருந்தது.
    இன்றைய வகுப்பறையை எவர் மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்து கொண்டு இருந்தார்களோ அவர்களுக்கு பாடத்தின் இடையில் ஒரு கேள்வி கண்டிப்பாக தோன்றி இருக்கும் .
    அதுதான் நீங்களே கூறி உள்ளீர்களே
    ( "அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ
    வரமாட்டாயா?" என்பது ஆகும். )
    இந்த நேரத்தில் என்னையும் அறியாமல் கண்களில் ஆனந்த கண்ணீர் வர வைத்து விட்டீர்கள் நன்றி ஐயனே.
    நன்றாக சிந்தித்து பார்த்தல் நமக்கு என்ன இறைவன் எதிரியா ? நமக்கு மட்டும் கஷ்டத்தினை தர நாம வாங்கி வந்த வரத்தின் பலாபலனை அனுபவிக்கின்றோம் அவ்வளவு தான் வேறு என்னத்த சொல்ல
    நன்று ஆசானே!
    நன்றி .//////

    கண்ணனின் கதை என்பதால் கண்ணீர் வந்துவிட்டதா?:-))))

    ReplyDelete
  19. ////Blogger Maaya kanna said...
    வாத்தியார் ஐயா வணக்கம்.
    இன்றைய வகுப்பறை மிகவும் மங்களகரமாக இருந்தது.
    இன்றைய வகுப்பறையை எவர் மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்து கொண்டு இருந்தார்களோ அவர்களுக்கு பாடத்தின் இடையில் ஒரு கேள்வி கண்டிப்பாக தோன்றி இருக்கும் .
    அதுதான் நீங்களே கூறி உள்ளீர்களே
    ( "அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ
    வரமாட்டாயா?" என்பது ஆகும். )
    இந்த நேரத்தில் என்னையும் அறியாமல் கண்களில் ஆனந்த கண்ணீர் வர வைத்து விட்டீர்கள் நன்றி ஐயனே.
    நன்றாக சிந்தித்து பார்த்தல் நமக்கு என்ன இறைவன் எதிரியா ? நமக்கு மட்டும் கஷ்டத்தினை தர நாம வாங்கி வந்த வரத்தின் பலாபலனை அனுபவிக்கின்றோம் அவ்வளவு தான் வேறு என்னத்த சொல்ல
    நன்று ஆசானே!
    நன்றி .//////

    கண்ணனின் கதை என்பதால் கண்ணீர் வந்துவிட்டதா?:-))))

    ReplyDelete
  20. ///Blogger lrk said...
    ஐயா வணக்கம் .
    இறைவனை மனம்உருகி அழைத்தால் தான் வருவார் என்பதை இதை விட தெரிவு படுத்த முடியாது .
    நன்றி ஐயா
    கண்ணன் ./////

    உண்மைதான். அதை உணர்ந்தால் போதும். அனைவரும் நலம் பெறுவர்!

    ReplyDelete
  21. ///Blogger lrk said...
    ஐயா வணக்கம் .
    இறைவனை மனம்உருகி அழைத்தால் தான் வருவார் என்பதை இதை விட தெரிவு படுத்த முடியாது .
    நன்றி ஐயா
    கண்ணன் ./////

    உண்மைதான். அதை உணர்ந்தால் போதும். அனைவரும் நலம் பெறுவர்!

    ReplyDelete
  22. ////வீட்டில் இறந்தவர்களை "தெய்வமாகிவிட்டார்" என்று சொன்னால் தெய்வத்தோடு சேர்ந்துவிட்டார் என்றுதான் பொருள். மனிதன் எந்த நிலையிலும் தெய்வமாக முடியாது. ////

    தெய்வத்தோடு சேர்ந்து விட்டால்அது
    தெய்வமா? மனிதனா?

    அங்கிருந்து வந்தால் தானே
    அங்கு போய் சேர்வதற்கு...

    தெய்வம் என்பதன் etimology
    தெரியும் தானே.. அதன் பொருள்

    அங்கேயே விளங்கிவிடும்
    அதை அய்யர் வேறு விளக்கனுமா

    உங்கள் 2வரிகளிலேயே
    உள்ள தகவல் முரண்படுகிறதே

    முதலில் சேர்ந்து விட்டார் என்றீர்
    முடிந்ததும் ஆக முடியாது என்றீர்

    "அஹம் பிம்மாஸ்மி" என விளக்கம்
    அளிக்க லால்குடியில் இருந்து

    வந்துவிடுவார் நம் தோழர்
    வாழ்த்துக்களுடன் அவரை

    வரவேற்ப்போம்
    வணக்கங்களுடன்

    ReplyDelete
  23. I have learnt from your message Excellent Sir

    ReplyDelete
  24. மாவீரர் பீஷ்மர் மார்பில் துளைத்தது அம்பையின்/ அர்ஜுனன் அம்பு, சூத்திரதாரி மாதவண் வென்றான் சூழ்சியால்,
    மாணிடர்க்கு ஒரு தர்மம் மாதவனுக்கு ஒரு தர்மமா???

    ReplyDelete
  25. வணக்கம். மிகவும் அருமையான பதிவு... பாராட்டுகள் பல...

    எனக்கு ஒரு சில வினாக்களுக்கு பதில் தெரியவில்லை. அவற்றுக்கு விளக்கம் தர வேண்டுகிறேன்.
    கூற்று: விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி-- என்று கண்ணன் சொல்கிறார்.
    கேள்வி 1:படித்த விவேகமுள்ள ஒருவர், விவேக மற்ற வேறு ஒருவரை விவேகத்துடன் ஏமாற்றி ஜெயித்தல் (அ) வெற்றி பெறுவது, வலியவன் எளியவனை விவேகத்துடன் ஏமாற்றி வெற்றி பெறுவது. விவேகம் என்று சொன்னால் அற்வுகூர்மை,தந்திரம்,சூழ்ச்சி,
    வஞ்சகம் இதில் எது சரியானது? உலக தர்ம நியதி என்பது சரியா?

    கூற்று: கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை
    நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ
    வரமாட்டாயா?"

    புன்னகைத்தான் கண்ணன். "உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
    கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;

    அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!
    அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.

    கேள்வி 2: இயற்கையாக நீதி, தர்மம் என்று மக்கள் நம்பி இறைவனை வணங்குவது, நீயாக(இறைவன்), நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவி கிடைக்கும் என்று தானே.இந்த நிலை இல்லை என்று சொன்னால் துன்பமே மிகுதியான வாழ்க்கையில் மனிதன் எப்படி வாழ முடியும்?
    மனித வாழ்க்கை அவரவர்

    கூற்று:கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;

    அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’

    மனிதன் தவறு செய்தால், தண்டனை தந்து திருந்தி வாழ பாடம் புகட்டலாமே.

    கேள்வி 3:கர்ம வினை என்று சொல்லி வாழ்நாள் முலுவதும் துன்பக் கடலில் ஆழ்த்துவானேன். ஏன்?

    ReplyDelete
  26. sattai kuchiyai keele vaithuvittu elunthu nintru asthirathai nenjil vaangikondadhu.. therin chakarathai satru keel eranga cheidhu naagasthiram thalai pakaiyodhu poga cheidhadhu...

    ReplyDelete
  27. Ayya arputhamana pathivu....Hare Ram...Hare Krishna....

    ReplyDelete
  28. உங்கள் எழுத்தில் இன்னும் கூர்மையாக்கப்பட்டிருகின்றது !

    ReplyDelete
  29. please post the story in English if possible

    ReplyDelete
  30. கர்மம் என்றால் என்ன - சஞ்சிதம், ப்ராப்தம், ஆகாமியம் என்று அதில் மூன்று உண்டு. அறிய இந்த லிங்கை பார்க்கவும். ஆழ்ந்து படிக்கவும்.

    http://tamil.vallalyaar.com/?p=2582

    ReplyDelete
  31. பாரத போரில் தீயவர்கள் மட்டும் தானே அழிந்திருக்க வேண்டும், தவிர ஏனைய அப்பாவி மக்கள் பலி ஆனதின் காரணம் என்ன ? குறிப்பாக , அபிமன்யு மற்றும் அவன் சகோதரர்கள் என்ன பாவம் செய்தார்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதுதானே பழமொழி , அனால் இங்கு அதற்கு எதிராக இருபதற்கு கரணம் என்னவோ ?

    ReplyDelete
  32. Intha arcticle kumudham jodhidathil 2 varudam munadi vanthathu athai inga solvathu nalathuthan aanal courtesy:kumudham jothidam nu potirkalam thangal maranthu vitirkal pola

    ReplyDelete
  33. ///மனிதன் எந்த நிலையிலும் தெய்வமாக முடியாது/// என்று கூறும் நீங்கள், அனால் சுவாமி விவேகனந்தர் கருத்து இவ்வாறாக உள்ளதே ///உலகத்தில் வணங்கக்கூடிய ஒரே கடவுள் மனிதனே/// கடவுளுக்கும், மனிதனுக்கும் நீங்கள் கூறும் விளக்கம் என்ன? இதில் இந்த பாமரனுக்கு ஒன்றும் புரியவில்லை தாங்கள் எங்களுக்கு, உங்கள் விளக்கத்தைப் புரியும்படியாக எழுதுங்கள் சுப்பையா வீரப்பன் அவர்களே ???

    ReplyDelete
  34. நினைவுகள் எப்படி உருவாகின்றன அதற்கு காரணம் யார் பழைய வினைகளா அல்லது செயல்களா ஒரு முடவன் கூட தான் ராஜாவாக மாறலாம் என்று நினைப்பதுண்டு நான் என்ற எண்ணம் இந்த உடம்பிலிருந்து எப்படி வெளியேறும். நான் என்ற எண் ணத்துக்கு வயது கிடையாது உடம்புக்கு தான் வயது விளக்கம் தாருங்கள் ப்ளீஸ்

    ReplyDelete
  35. பள்ளியில் நல்லா பாடம் நடத்தும் வாத்தியார்கள், மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பார்கள்...

    பிற்காலத்தில், மாணவர்கள் சமூகத்தில் மிக உயர்ந்த நிலைக்குச் செல்லும் போது, நல் ஆசிரியரை நினைவு கூறவேண்டும்...

    வகுப்பறையில் பதிவாகும் அனைத்துமே, மனதில் இடம்பெறும் அளவிற்கு நிலைத்த நிலையில் இருந்து வருகிறது....

    தற்போது, வகுப்பறையில் பதிவாகும் ஆன்மீக விஷயங்களை நகல் எடுத்து, அனேகர் வாட்ஸ் அப்பில் விடுவதால், சமூகத்தில் *வாத்தியாரின்* புகழ் ஓங்கக் காரணமாணவர்களுக்கு நன்றி....

    நல்ல விஷயங்களை நட்புடன் சொல்லும் மதிப்பிற்குரிய திரு *சுப்பையா* அவர்களுக்கும் நன்றி...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com