மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

16.12.14

நகைச்சுவை: வெறுப்படைந்த கணவனின் வேண்டுகோள்!நகைச்சுவை: வெறுப்படைந்த கணவனின் வேண்டுகோள்!

எல்லாம் நகைச்சுவைதான். நகைச்சுவை இல்லாவிட்டால் வாழ்க்கை மாம்பழமாக இல்லாமல் பாகற்காயாகிவிடும். அதற்காகத்தான் இந்தப் பதிவு.

உம்மன்னா மூஞ்சி ஆசாமிகள் எல்லாம் வெளியேறி விடலாம்!
நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் மட்டும் தொடரவும்!

அன்புடன் 
வாத்தியார்
------------------------------------------------------
1
வெறுப்படைந்த கணவனின் வேண்டுகோள்:  அன்பான கூகுள் ஆண்டவரே! என் மனைவியைப்போல நடந்து கொள்ளாதீர்: நான் ஒரு வாக்கியத்தை
முடிக்கும் முன்பாகவே ஏன் பதில் சொல்கிறீர்? ஒரு வாக்கியத்தை முழுதாக முடிக்கவிடுங்கள். அதற்குப் பிறகு உங்கள் பரிந்துரையைச் சொல்லுங்கள்

(A frustrated husband in front of his laptop:
dear google, please do not behave like my wife...
Please allow me to complete my sentence before
you start guessing & suggesting)

------------------------------------------------------
2
உங்கள் மனைவி இரண்டு சிம் கார்டுகள் வசதி கொண்ட தொலைபேசி வைத்திருக்கிறாரா? அந்த இரண்டு எண்களையும் உங்கள் போனில் பதிவு
செய்து வைக்கும்போது மனைவி 1, மற்றும் மனைவி 2 என்று எக்காலத்திலும் மறந்தும்கூட பதிவு செய்து வைக்காதீர்கள்.
- அப்படி வைத்ததினால், அடி வாங்கி மருத்துவமனையில் படுத்திருக்கும் கணவனின் வேண்டுகோள்

(if your wife uses dual sim phone, save both the number under 
one name : "WIFE" ...... Never save it as "wife 1" and "wife 2"... 
: from a  Hospitalised Husband...)
------------------------------------------------------
3
திருமணமான மனிதன் கடவுளிடம் பிரார்த்தனை செய்தான்:

"கடவுளே, எனக்குக் குழந்தைப் பிராயத்தைக் கொடுத்தீர்கள். பிறகு அதை எடுத்துக் கொண்டீர்கள். வாலிபத்தைக் கொடுத்தீர்கள். அதையும் எடுத்துக்
கொண்டுவிட்டீர்கள். மனையாளைக் கொடுத்தீர்கள்.  ஆண்டுகள் பலவாகிவிட்டனவே. உங்களுக்கு நினைவூட்ட இதைச் சொல்கிறேன்."

(A married man's prayer; 
Dear God, u gave me childhood, u took it away. 
U gave me youth, u took it away. 
U gave me a wife.......... 
Its been years now, 
just reminding u.....)
-------------------------------------------------------
4
பரிசு பெறக்கூடிய பதில்!

இரவு நேரத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் நடைபெற்ற உரையாடல்:

மனைவி: 2003ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் பந்தயத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் அடித்த ரன்கள் எத்தனை?

கணவன் சட்டென்று: 98 ரன்கள், சரி இதை எதற்குக் கேட்கிறாய்?

மனைவி: இன்று காலையில் இருந்து பார்க்கிறேன். எனக்கு ஏன் நீங்கள் பிரந்த நாள் வாழ்த்துச் சொல்லவில்லை?

கணவன்: ".................."
எனக்கு அதிகமான மறதி என்று சொல்லித் தப்பிக்க முடியவில்லை. மனைவி கிரிக்கெட்டை வைத்து அவனை மடக்கி வைத்திருக்கிறாளே!

அடுத்தது:

வயதான மனிதரிடம் ஒரு இளைஞன் கேட்டான்: "உங்களுக்கு எழுபது வயதாகிறது. ஆனால் இன்றும் உங்கள் மனைவியை, டார்லிங், ஸ்வீட்டி, ஹனி  என்று அழைக்கிறீர்களே. இந்தக் காதல் ரகசியம் என்ன?"
பதில் சொன்னார் அந்தப் பெரியவர்: "ரகசியம் என்று ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. அவள் பெயரி மறந்து பல வருடங்களாகிவிட்டது. அவள்
பெயரை அவ்ளிடமே கேட்கவும் பயம், தப்பாகச் சொல்லவும் பயம்!
----------------------------------------------------------
5.
எண்ணங்கள், விருப்பங்கள்

1. இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும், ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட
நாடு...

2. தோசை கல்லு உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல்..
வெளியே இருந்தால் சாதா ஹோட்டல்..

3. வாக்கிங் போறது எளிதானது தான்...வாக்கிங் போக எந்திரிக்கிறது தான்
கஷ்டமானது..

4. உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல
வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மளைத் தவிர யாருக்கும் வராது..

5. கீழே விழுந்ததும் அடிபடவில்லை என்பதை விட,
யாரும் பார்க்கவில்லை என்பதே நிம்மதி..

6. மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால்
உண்மையில் அவர் கடவுள் இல்லை, கட்சித் தலைவர்..

7. ப்யூட்டி பார்லர் போன மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல
ஃபீல் பன்னுவாங்க பெண்கள்..ஜிம்முக்கு போன அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல் பன்னுவாங்க ஆண்கள்..

8. இந்த ஜெனரேஷன்ல ஆல்கஹாலுக்கு அடிமையானவன
விட ஆன்ட்ராய்டுக்கு அடிமையானவன்தான் ஜாஸ்தி.

9. பால்விலை கூடுனது கூட கவலயா தெரில...டீக்கடைல டீ
விலைய எப்ப கூட்ட போறாங்கேனுதான் திக் திக்குனு இருக்கு ...
#  டெய்லி நாலு டீ குடிப்போர் சங்கம்

10. ஃபேஸ்புக் டுவிட்டர் பக்கமெல்லாம் வராதவர்கள் தன் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்

11. இப்பொழுதெல்லாம் ஏ.டி.எம்-இல் பணம் எடுத்தவுடன் பணத்தை எண்ணுவதற்கு முன்பு, இது எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம்
என்றுதான் எண்ணுகிறோம்
ATM - Anju Time Mattum (அஞ்சு டைம் மட்டும்)

12. குழந்தைங்க நம்மகிட்ட கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்..
இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க் செய்யல?'னு கேட்டா அதுங்களே கதைகதையா  சொல்லுதுங்க..

13. காய்கறி விலை மளமளவென உயர்ந்துவரும் நிலையில்,
கீரை விலை ஏறாமல் சில்லறயில் கிடைப்பது, நம் உடல்
ஆரோக்கியத்துக்குக்கொடுக்கப்பட்டிருக்கும் கடைசி வாய்ப்பு..

14. ஆபிஸ் போற அன்னைக்குலாம் 9 மணி வரைக்கும் தூக்கம் வரும்
சண்டே மட்டும் ஏழு மணிக்கு மேல வராது # விதி

15. பியூட்டி பார்லர்க்கும் ஃபுல்லா மேக்அப் போட்டு தான் போகனுமா?
என்னம்மா இப்படி பண்றிங்களேமா

16. தூய்மை இந்தியாதிட்டம்!!
தேவையான பொருட்கள்: வெளக்கமாறு 1 கேமரா 4

17. மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவு. # அப்டியே நெட் கட்டணத்தயும் உயர்த்தகூடாதுன்னு உத்தரவு
போட்ருங்கயா.....

=====================================
மேலே உள்ளவற்றில் மிகவும் நன்றாக உள்ளது எது?


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16 comments:

kmr.krishnan said...

no.3, is the best

Regunathan Srinivasan said...

/// மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால்
உண்மையில் அவர் கடவுள் இல்லை, கட்சித் தலைவர் ////

மேலை நாடுகளுக்கும் ,அரபு நாடுகளுக்கும் கணக்கு காட்ட வேண்டும் அல்லவா வாத்தியாரே....அப்போதுதானே பணம் வரும்..

வேப்பிலை said...

:)

ponnusamy gowda said...

தூய்மை இந்தியா திட்டம்.

venkatesh r said...

எல்லாமே நன்றாக இருந்தது. இதையும் படித்து பதிவிடுங்க அய்யா! நன்றி.

Angry Wife

An angry wife was complaining about her husband
spending all his free time in a bar,
so one night he took her along with him.

"What'll you have?" he asked. "Oh, I don't know.
The same as you I suppose," she replied.
So, the husband ordered a couple of Jack Daniel's
and threw his down in one shot.

His wife watched him, then took a sip from
her glass and immediately spat it out.

"Yuck, that's TERRIBLE!" she spluttered.
"I don't know how you can drink this stuff !"

"Well, there you go," cried the husband.
"And you think I'm out enjoying myself every night!"

bhagwan said...

நகைச்சுவையில் எண் 3 சிறந்தது.

-'பரிவை' சே.குமார் said...

ரசிக்க வைத்தன.

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
no.3, is the best////

உங்களின் தெரிவைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger Regunathan Srinivasan said...
/// மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால்
உண்மையில் அவர் கடவுள் இல்லை, கட்சித் தலைவர் ////
மேலை நாடுகளுக்கும் ,அரபு நாடுகளுக்கும் கணக்கு காட்ட வேண்டும் அல்லவா வாத்தியாரே....அப்போதுதானே பணம் வரும்../////

அப்படியா! அதெல்லாம் எனக்குத் தெரியாத மேட்டர்கள் சாமி!

Subbiah Veerappan said...

///Blogger வேப்பிலை said...
:)/////

Thanks Veppilaiyare!

Subbiah Veerappan said...

///Blogger ponnusamy gowda said...
தூய்மை இந்தியா திட்டம்.////

என்ன சொல்ல வர்றீங்க சாமி?

Subbiah Veerappan said...
This comment has been removed by the author.
Subbiah Veerappan said...

/////Blogger venkatesh r said...
எல்லாமே நன்றாக இருந்தது. இதையும் படித்து பதிவிடுங்க அய்யா! நன்றி.

Angry Wife
An angry wife was complaining about her husband
spending all his free time in a bar,
so one night he took her along with him.
"What'll you have?" he asked. "Oh, I don't know.
The same as you I suppose," she replied.
So, the husband ordered a couple of Jack Daniel's
and threw his down in one shot.
His wife watched him, then took a sip from
her glass and immediately spat it out.
"Yuck, that's TERRIBLE!" she spluttered.
"I don't know how you can drink this stuff !"
"Well, there you go," cried the husband.
"And you think I'm out enjoying myself every night!"/////

ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். பழகி விட்டால் கணவன் சொல்வது பொய் என்பது அம்மணிக்கும் புரிந்துவிடும்!:-))))

Subbiah Veerappan said...

////Blogger bhagwan said...
நகைச்சுவையில் எண் 3 சிறந்தது./////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger -'பரிவை' சே.குமார் said...
ரசிக்க வைத்தன./////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

lrk said...

13- ஆம் எண் நகைச்சுவை அருமை ஐயா .