மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

6.12.14

குறை தீர்க்கும் குமரன்!

லண்டனில் உள்ள முருகன் கோவில் தேரோட்டம்

குறை தீர்க்கும் குமரன்!

பக்தி மலர்

நேற்று அகண்டவரிசை இணைய இணைப்பின் கோளாறு காரணமாக இணையத்தில் நுழைய முடியவில்லை. அதானால் நேற்று ஏறியிருக்க வேண்டிய பக்தி மலர் இன்று வலையேறுகிறது. அனைவரும் பொருத்தருளவும்! இன்றைய பக்திமலரை 'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன் பாடிய   -  'வேண்டும் பொழுதிலெல்லாம்' என்ற முருகப் பெருமானின் பாடல் அலங்கரிக்கின்றது!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------
பழமைக்குப் பழமையாய் ... புதுமைக்கு புதுமையாய்
நின்றிடும் கந்தவேளே
பழுதிலா நின் புகழ் ... பாடியே போற்றினால்
நாளெல்லாம் நல்ல நாளே

உருகிடும் பக்தரின் ... குலமதைக் காத்திடும்
சக்தியின் செல்வ மகனே
திருவல்லிக்கேணியில் ... செங்குந்த கோட்டம் வாழ்
மன்னனே சிவசுப்ரமண்யனே

வேண்டும் பொழுதில் எல்லாம் ... துணையாய் வேலும் வருகுதப்பா
தோணும் திருவடிகள் ... தொழுதால் நிம்மதி பெருகுதப்பா
மனதில் ...
(வேண்டும் ... )

மனதில் ... வேண்டும் பொழுதில் எல்லாம்

மயிலேறும் முருகா என் மனமேறுவாய்
என் மனதோடு இதமாகத் தமிழ் கூறுவாய் 
அலைபாயும் மனதோடு மலை மீதிலே
வந்து நிலையான மனதாகி சிலையாகவே 
பழம் வெறுத்து ... அதனால் இடை மறைத்து
தனியாய் பழநிமலை அமர்ந்தவனே எழிலானனே
உன்னை ...
(வேண்டும் ... )

மனதில் ... வேண்டும் பொழுதில் எல்லாம்

குறவள்ளி மனம் நாடும் கிழமாறனே
என் குறைதீர்த்துக் குலம் காக்கும் உமை பாலனே 
புவி மீது பொருளின்றி அலை பாய்கிறேன்
உன் பெயர் சொல்லிச் சொல்லி தினம் உயிர் வாழ்கிறேன் 
அறுபடையில் ... உந்தன் திருவருளை
வேண்டிக் காவடியும் பால் குடமும் படியேறுது
நெஞ்சில் ...
(வேண்டும் ... )

மனதில் ...
(வேண்டும் ... )
மனதில் ... வேண்டும் பொழுதில் எல்லாம்.

பாடலைப் பாடியவர்: 'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன்.
================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

1 comment:

Regunathan Srinivasan said...

முருகனே
செந்தில் முதல்வனே
மாயோன் மருமனே
ஈசன் மகனே
ஒரு கை முகன் தம்பி
உன் தண்டை கால் பற்றி என்றும் கைதொழுவேன் நான்.