மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.12.14

இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி!


இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம்
சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக,
சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம்
அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம்.

இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்?

காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச்
செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக
நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை
அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர்
அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா
கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக்
ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து
சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை
இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்து
விடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண்,
சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த
சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி
மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ
சல்பேட்டும் சேர்க்க  படிகநிலைக்கு சீனியாக வருகிறது.
சல்பர் டை  ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன்
என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும்  அதிகமான
சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை
ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி
வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்
தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி,
இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும்
இதுதான் பிரதான காரணியாக  அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்தி
விட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை
எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால்
உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை
வியாதியோ வராது.

This is true so Can we  avoid
நண்பர்களே இன்றய ஊடகங்களால்
மறைக்கப்பட்ட சதி எனவும் கூறலாம்
பணத்திற்காக நம் பாமர
மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.........!

மேலதிக விபரங்களுக்கு இந்த சுட்டியைக் கிளிக் செய்து படியுங்கள்: http://askville.amazon.com/refined-sugar-made-white-added-
make/AnswerViewer.do?requestId=8464011
----------------------------------------------
இணையத்தில் படித்ததை உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்\
===========================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11 comments:

  1. வெள்ளை விஷம் எனும்
    "உப்பு", "சர்க்கரை" மற்றும்

    "பால்" நாம் சாப்பிடுவதில்லை
    பதினைந்து வருடமாக இப்பழக்கம்

    'அரிசியும் வெள்ளை தானே
    அதை சாப்பிடுவீர்களா?' என

    'சிவப்பு கோபுர'த்திலிருந்து நமது
    சிறந்த நண்பர் கேட்பது கேட்கிறது

    பிரவுன் அரிசி என்று
    பின்நாளில் சொல்லப்படும்

    கைகுத்தல் அரிசி நமக்கு
    கையில் இடும் உணவு..

    அது சரி..
    அப்படியே சொல்லும் நீங்கள்

    முன்னாளில் சர்க்கரை ஆலையில்
    முதல்வராக பணியாற்றினீர்களோ

    ReplyDelete
  2. பாராட்டுகள்.. அய்யா.. தெரியாத ஒரு செய்தி.. நன்றி..

    ReplyDelete
  3. வணக்கம் வாத்தியார் ஐயா.

    நீண்ட கால பிரச்சனை ஒன்றுக்கு இன்று தீர்வு கிடைத்து உள்ளது நன்றி வாத்தியார் ஐயா.

    ReplyDelete
  4. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
    இந்த வெள்ளை சீனி தயாரீப்பின் ரசாயனங்கள் சேர்க்கு முன் பிரவுன் கலரில் சீனி வரும் அது பேக்கரி க்கு தேவை அந்த சீனிய்ல் ஓரளவு ரச்யன்ன்கள் குறைவு ..ஆனாலும் கெடுதல் ...நீங்கள் கூஒரியது போல் நட்டு வெல்லம் கருப்பட்டி ..சரியான தேர்வு...

    ReplyDelete
  5. ////Blogger வேப்பிலை said...
    வெள்ளை விஷம் எனும்
    "உப்பு", "சர்க்கரை" மற்றும்
    "பால்" நாம் சாப்பிடுவதில்லை
    பதினைந்து வருடமாக இப்பழக்கம்
    'அரிசியும் வெள்ளை தானே
    அதை சாப்பிடுவீர்களா?' என
    'சிவப்பு கோபுர'த்திலிருந்து நமது
    சிறந்த நண்பர் கேட்பது கேட்கிறது
    பிரவுன் அரிசி என்று
    பின்நாளில் சொல்லப்படும்
    கைகுத்தல் அரிசி நமக்கு
    கையில் இடும் உணவு..
    அது சரி..
    அப்படியே சொல்லும் நீங்கள்
    முன்னாளில் சர்க்கரை ஆலையில்
    முதல்வராக பணியாற்றினீர்களோ/////

    இல்லை. இணையத்தில் கிடைத்ததை எடுத்து வழங்கியிருக்கிறேன். கைக்குத்தல் அரிசி எல்லாம் நகரங்களில் எங்கே கிடைக்கிறது?நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  6. ////Blogger C.P. Venkat said...
    பாராட்டுகள்.. அய்யா.. தெரியாத ஒரு செய்தி.. நன்றி..////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. /////Blogger Maaya kanna said...
    வணக்கம் வாத்தியார் ஐயா.
    நீண்ட கால பிரச்சனை ஒன்றுக்கு இன்று தீர்வு கிடைத்து உள்ளது நன்றி வாத்தியார் ஐயா.////

    என்ன பிரச்சினை? என்ன தீர்வு என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே கண்ணன்!

    ReplyDelete
  8. //Blogger -'பரிவை' சே.குமார் said...
    நல்ல பகிர்வு ஐயா.../////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
    இந்த வெள்ளை சீனி தயாரிப்பில் ரசாயனங்கள் சேர்க்கு முன் பிரவுன் கலரில் சீனி வரும் அது பேக்கரி க்கு தேவை அந்த சீனியில் ஓரளவு ரசாயனங்கள் குறைவு ..ஆனாலும் கெடுதல் ...நீங்கள் கூறியது போல் நாட்டு வெல்லம் கருப்பட்டி ..சரியான தேர்வு...////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ///கைக்குத்தல் அரிசி எல்லாம் நகரங்களில் எங்கே கிடைக்கிறது?///

    கைகுத்தல் அரிசி
    கிடைக்கிறது ஆனால்

    விலையை பார்த்ததும் மக்கள்
    வியக்கின்றனர்..

    ஆயிரம் ருபா
    ஆனாலும் மருந்து வாங்கும்

    நம்மவர்கள் இந்த
    நலம் பயக்கும் உணவுகளை

    வாங்க தயங்குகின்றனர் என்பது
    வழக்கமாகி போச்சு...

    ReplyDelete
  11. சட்டைக் காலரில் இருக்கும் அழுக்கைப் போக்க இப்படியும் ஒரு வழி இருப்பதைச் சொன்ன தங்களுக்கு நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com