குறைகள் எப்போது நீங்கும்?
பக்தி மலர்
இன்றையப் பக்தி மலரை 'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன் அவர்கள் பாடிய பாடல் ஒன்று நிறைக்கிறது. அனைவரும் பாடித்து/பாடி மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------
வேல் வேல் வெற்றிவேல் ... வேல் வேல் ஞான வேல்
வேல் வேல் வெற்றிவேல் ... வேல் வேல் சக்தி வேல்
ஊரப்பா பழநியப்பா கந்தப்பா
அங்கு பக்தர் கூட்டம் பெருகுதப்பா வேலப்பா
(ஊரப்பா ... )
உன் பேரப்பா பழநியப்பா ... காவடிகள் கூடுதப்பா
பாரப்பா பழநியப்பா ... கண்திறந்து பாருமப்பா
ஆண்டியாய் வந்தவா ... ஆறுமுக வேலவா
வேல் வேல் வெற்றிவேல் ... வேல் வேல் ஞான வேல்
வேல் வேல் வெற்றிவேல் ... வேல் வேல் சக்தி வேல்
வேல் வேல் வெற்றிவேல் ... வேல் வேல் ஞான வேல்
வேல் வேல் வீரவேல் ... வெற்றி வேல் சக்தி வேல்
பங்குனி உத்திரக் காவடிகள் ஆடியே கூடுதப்பா
பொங்கிவரும் பாலுடன் உன் சேவடி சேருதப்பா
பழநிமலை சன்னிதியில் தங்கத் தேரய்யா - உன்னைப்
பாடி வரும் பக்தருக்கு வினைகள் தீருதய்யா
(ஊரப்பா ... )
கந்தனுக்கு அரோகரா ... வேலனுக்கு அரோகரா
வேல் வேல் வெற்றிவேல் ... வேல் வேல் ஞான வேல்
வேல் வேல் வீரவேல் ... வேல் வேல் சக்தி வேல்
வெற்றிவேல் ... வீரவேல்
பால் காவடி பன்னீர்க் காவடி புஷ்பக் காவடி
சேவற் காவடி மச்சக் காவடி வேல் காவடி
முருகனுக்கு ... அரோகரா
தாங்கிவரும் அடியார்கள் ஆயிரம் கோடியப்பா
சேர்ந்து வரும் காவடிகள் சன்னிதி சேருதப்பா
வேண்டிவரும் அன்பர்களின் குறைகள் நீங்குமே
நம்மை நாடிவரும் துன்பங்கள் வேலும் தாங்குமே
வடிவேலும் தாங்குமே
(ஊரப்பா ... )
கந்தனுக்கு அரோகரா ... வேலனுக்கு அரோகரா
நவலோக மாமணியே சிவனாரின் கண்மணியே
அவனியும் போற்றுதடா ஆதி சக்தி மைந்தன் உனை
பாலும் தேனும் பஞ்சாமிர்தம் குடம் குடமாய் கோயிலில்
நாளும் இங்கே வழியுதடா உந்தன் தங்க மேனியில்
என்றும் உந்தன் சன்னிதியில் கோடி சரண தோஷமே
அல்லல் நீங்குதே ... முருகா ஆசை பெருகுதே
கந்தனுக்கு அரோகரா ... வேலனுக்கு அரோகரா
வேல் வேல் வெற்றிவேல் ... வேல் வேல் ஞான வேல்
வேல் வேல் வீரவேல் ... வேல் வேல் சக்தி வேல் (2)
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
பாடலைப் பாடியவர்: 'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன்
---------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
அருமையான பாடல் ஐயா
ReplyDeleteபலமுறை கேட்டு மகிழ்ந்திருக்கின்றேன்
முருகா...
ReplyDeleteமுருகா...
good afternoon sir.
ReplyDeletegood posting
நல்ல பாடல் ஐயா...
ReplyDeleteஐயா வணக்கம்.
ReplyDeleteமுருகா!
எல்லாம் உன்செயல் உனது அருள் இன்றி அடியேன் இங்கு கிடையாது . தாய் தந்தை தான் உலகம் என்று உணர்த்திய தெய்வம் அல்லவா நீ . உனது அருளோ அருள்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
தண்டாயுத பாணி தெய்வத்திற்கு அரோகரா!!
ஆரோகரோகரா !!!
எங்கள் குல தெய்வத்திற்கு அரகரோகரா!
அரகரோகரா!!
அரகரோகரா!!!
////Blogger கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDeleteஅருமையான பாடல் ஐயா
பலமுறை கேட்டு மகிழ்ந்திருக்கின்றேன்////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
///Blogger வேப்பிலை said...
ReplyDeleteமுருகா...
முருகா.../////
வேலுண்டு வினையில்லை!
மயிலுண்டு பயமில்லை!
////Blogger sundari said...
ReplyDeletegood afternoon sir.
good posting/////
நல்லது. நன்றி சகோதரி!
Blogger -'பரிவை' சே.குமார் said...
ReplyDeleteநல்ல பாடல் ஐயா...
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger Maaya kanna said...
ReplyDeleteஐயா வணக்கம்.
முருகா!
எல்லாம் உன்செயல் உனது அருள் இன்றி அடியேன் இங்கு கிடையாது . தாய் தந்தை தான் உலகம் என்று உணர்த்திய தெய்வம் அல்லவா நீ . உனது அருளோ அருள்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
தண்டாயுத பாணி தெய்வத்திற்கு அரோகரா!!
ஆரோகரோகரா !!!
எங்கள் குல தெய்வத்திற்கு அரகரோகரா!
அரகரோகரா!!
அரகரோகரா!!!////
உங்களுக்கு மட்டுமல்ல மாயக் கண்ணன், எல்லாத் தமிழர்களுக்குமே அவர்தான் குல தெய்வம். அவருக்குத் தமிழ்க்கடவுள் என்ற பெயர் உண்டு தெரியுமல்லவா?
சார் வணக்கம்
ReplyDeleteஎன்னைக்கு சார் ஏகாதசி விரதமிருப்பங்க சார் என்னைக்கு காலையில் சாதம் படைப்பங்க கிருத்திகை குழப்புது கொஞ்சம் சொல்லுங்க சிக்கிரம்மா சார்
////Blogger sundari said...
ReplyDeleteசார் வணக்கம்
என்னைக்கு சார் ஏகாதசி விரதமிருப்பங்க சார் என்னைக்கு காலையில் சாதம் படைப்பங்க கிருத்திகை குழப்புது கொஞ்சம் சொல்லுங்க சிக்கிரம்மா சார்/////
ஜனவரி ஒன்றாம் தேதி வியாழக்கிழமையன்று ஏகாதசி. அதற்கு அடுத்த நாள் காலை துவாதசி. அதாவது அன்று காலையில் நீங்கள் சொல்லும் சாதம் படைப்பது.