மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.12.14

மலை இருக்கும் இடமெல்லாம் குடி கொண்டவன் அவன்!

குன்றக்குடி முருகன் கோயில்
மலை இருக்கும் இடமெல்லாம் குடி கொண்டவன் அவன்!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பக்திப் பாடல் ஒன்று நிறைவு செய்கிறது. படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------------
ஒருமுகமாய் நின்று ... பலமுகம் பார்த்தாலும்
திருமுகம் போலாகுமா ... முருகா உன்
அறுமுகம் போலாகுமா
(ஒருமுகமாய் ... )

இனிக்கும் மதுவை வைத்த விழிகளிலே -  அன்பு ... 
இன்பமெல்லாம் உதிக்கும் கருணையிலே
இனிக்கும் மதுவை வைத்த விழிகளிலே -  அன்பு ... 
இன்பமெல்லாம் உதிக்கும் கருணையிலே

பனிக்குக் கதிரவன்போல் இருக்கும் கந்தனே 
பாதம் தொட்டால் மணக்கும்
படைப்பு அதில் சிரிக்கும் 
திருமுகம் போலாகுமா ... முருகா  - உன்
அறுமுகம் போலாகுமா

கருவாகி உருவாகி ... காக்கும் அருளாகி
பொதுவாகி நலமாகி ... போற்றும் பொருளாகி 
மலைகண்ட இடமெல்லாம் குடிகொண்ட வேலவனே 
வணக்கம் என்றால் இரங்கி
வரங்கொடுக்கும் சீலனே 

உன் திருமுகம் போலாகுமா ... முருகா  - உன்
அறுமுகம் போலாகுமா
(ஒருமுகமாய் ... ).

பாடியவர்கள் - 'சூலமங்கலம்' சகோதரிகள்
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

  1. முருகா!

    முருகா உனக்கு புகழ் மாலை
    சூட்டுவதே தினம் முதல் வேலை!

    கந்தா உன் திரு வடிவேலை
    வணங்கிடத் தானே அதிகாலை!

    ReplyDelete
  2. குன்றக்குடி திருக்கோவில் எனக்கு மிகவும் பிடித்தமான கோவில்களில் ஒன்று. இரு மாதங்களுக்கு முன்னரே இங்கு சென்றேன். குன்றின் மேல் குடிகொண்டிருக்கும் முருகனை படிகளில் ஏறி தரிசிக்கும் போது ஏற்படும் பரவசம் அலாதியானது. அதற்கு நிகரே இல்லை. கோவிலையும் மிகவும் சுத்தமாக வைத்து பராமரித்து வருகின்றனர். அடிகளார் பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர் என்று கேள்விப்பட்டேன். முருகனை தரிசித்து விட்டு கீழே இறங்கி வரும்போது அடிகளார் மேலே சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் அவரை பற்றி கேள்விப்பட்டேன். படித்து முடித்தவுடன் திருத்தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்று. முகத்தில் ஒரு அமைதி, அருள். எம்பெருமானை உளமாற வணங்கினால் அந்த அக அழகு முகத்தில் பிரதிபலிக்குமோ. என்னை போல் சாதாரன மனிதனுக்கு அந்த பரவசம் எல்லாம் சற்று நேரத்திற்கு தான். அதன் பின்னர் பொருள் தேடும் உலகில் என்னை தொலைத்து விட்டாலும் அந்த பரவசம் அவ்வப்போது ஏற்படுவதாலேயே நான் மனிதனாக உணர்கிறேன்.

    ReplyDelete
  3. வாத்தியார் ஐயா வணக்கம்.

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    வீரவேல் முருகனுக்கு அரோகரா
    தண்டாயுதபாணிக்கு அரோகரா
    தகப்பன் சுவாமிக்கு அரோகரா
    அரோகரா அரகரோகரா

    ReplyDelete
  4. ////Blogger venkatesh r said...
    முருகா!
    முருகா உனக்கு புகழ் மாலை
    சூட்டுவதே தினம் முதல் வேலை!
    கந்தா உன் திரு வடிவேலை
    வணங்கிடத் தானே அதிகாலை!////

    ஆகா! அதிகாலை எத்ற்கு என்பதைப் பற்றிய சிறப்பான வரி! நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. ////Blogger sundari said...
    Good afternoon sir,////

    உங்களின் நல்வணக்கத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  6. ///Blogger Yoga.S. said...
    அருமை!////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. ////Blogger thozhar pandian said...
    குன்றக்குடி திருக்கோவில் எனக்கு மிகவும் பிடித்தமான கோவில்களில் ஒன்று. இரு மாதங்களுக்கு முன்னரே இங்கு சென்றேன். குன்றின் மேல் குடிகொண்டிருக்கும் முருகனை படிகளில் ஏறி தரிசிக்கும் போது ஏற்படும் பரவசம் அலாதியானது. அதற்கு நிகரே இல்லை. கோவிலையும் மிகவும் சுத்தமாக வைத்து பராமரித்து வருகின்றனர். அடிகளார் பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர் என்று கேள்விப்பட்டேன். முருகனை தரிசித்து விட்டு கீழே இறங்கி வரும்போது அடிகளார் மேலே சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் அவரை பற்றி கேள்விப்பட்டேன். படித்து முடித்தவுடன் திருத்தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்று. முகத்தில் ஒரு அமைதி, அருள். எம்பெருமானை உளமாற வணங்கினால் அந்த அக அழகு முகத்தில் பிரதிபலிக்குமோ. என்னை போல் சாதாரன மனிதனுக்கு அந்த பரவசம் எல்லாம் சற்று நேரத்திற்கு தான். அதன் பின்னர் பொருள் தேடும் உலகில் என்னை தொலைத்து விட்டாலும் அந்த பரவசம் அவ்வப்போது ஏற்படுவதாலேயே நான் மனிதனாக உணர்கிறேன்./////

    உண்மைதான். இறையுணர்வு எப்போதும் பரவசத்தையே கொடுக்கும். அதுதான் அதன் மகிமை. நன்றி தோழரே!

    ReplyDelete
  9. ////Blogger -'பரிவை' சே.குமார் said...
    அருமையான பாடல்./////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. /////Blogger Maaya kanna said...
    வாத்தியார் ஐயா வணக்கம்.

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    வீரவேல் முருகனுக்கு அரோகரா
    தண்டாயுதபாணிக்கு அரோகரா
    தகப்பன் சுவாமிக்கு அரோகரா
    அரோகரா அரகரோகரா/////

    வாழ்க வளமுடன். அப்பன் அருள் செய்வான்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com