மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.9.14

Mini Story குட்டிக்கதை: குருவும், குதிரைக்காரனும்!



Mini Story குட்டிக்கதை: குருவும், குதிரைக்காரனும்!

ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரைப் பிரசங்கம் செய்ய ஒரு இடத்தில் கூப்பிட்டிருந்தார்கள். பத்தாயிரம் பேர் வருவார்கள் என்றும் சொல்லியிருந்தார்கள்.

அவரை அழைத்துண்டு செல்ல  ஒரு குதிரைக்காரன் சென்றிருந்தான். அன்றைக்கு என்று பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி விட்டது. எல்லோரும் கலைந்து சென்றுவிட்டார்கள்.

குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை.

பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.'என்னப்பா பண்ணலாம்?’னு கேட்டார்.

‘அய்யா! நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.

செவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுவிட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியாச் சொல்லிப்  பிரமாதப் படுத்திட்டார் குரு.

பிரசங்கம் முடிந்தது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையாகக் கேட்டார் குரு.

‘அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான்.

அவ்வளவுதான்... மறுபடியும் செவிட்டில் அறைந்ததைப் போன்றிருந்தது குருவிற்கு!!

நீதி : மற்றவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எதைச் சொன்னால் புரியுமோ அதை மட்டும் சொன்னால் போதும். புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்வது நம்மைத்தான் முட்டாளாக்கும் !!!
-------------------------------------------------------
வாட்ஸ் அப்பில் வந்தது. எனது நடையில் எழுதி, உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்.
---------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21 comments:

  1. முற்றும் துறந்த குரு என
    முதலிலேயே பெரிதாக காட்டும் போதே

    தெரியும் இப்படி அடிப்படை சில
    தெரியாதவர்களை குரு என அழைப்பது

    இவர் முற்றும் துறக்காதவர் என
    இவர் அணுகுமுறையில் தெரிகிறது


    ReplyDelete
  2. Respected Sir
    Real nice... Brought smile to my face...Not sure who is Guru here :)

    ReplyDelete
  3. அருமை வாத்தியாரே!

    ReplyDelete
  4. அய்யா,
    அருமையான கதை.நம் வாழ்கையில் பல சமயங்களில் இந்த மாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கும்.எனக்கும் அனுபவங்கள் உண்டு .

    பணிவுடன்,
    S .ரகுநாதன்

    ReplyDelete
  5. nice story sir!
    subbiah sir, i am having interest in astrology, based on your classroom blogspot. i have learnt all your lessons. i am having some good knoweledge in astagavarga just because of you. i came to know that you have started new astrology based blogspot. i need to learn more about it. if you suggest me to join in that blogspot. that will be good to enhance my knoweledge in this astrology.
    Thank you,
    Hari Haran

    ReplyDelete
  6. வணக்கம் சார்...
    நீங்களூம் எனக்கு குருதான் !
    அனைவருக்கும் எல்லாம் சொல்கிறீர்கள்.
    எனக்குதேவை.
    13/12/1970 (02.05 AM)
    dharapuram
    என்ன சொல்லுது என்ஜாதகம் !!!
    மாணவனுக்கு உதவலாமே சார்....

    ReplyDelete
  7. வணக்கம் குரு,

    ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போடணும்ன்னு பெரியோர்கள் கூறியது உபதேசத்திற்கும் பொருந்தும் போலிருக்கிறது.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  8. /////Blogger வேப்பிலை said...
    முற்றும் துறந்த குரு என
    முதலிலேயே பெரிதாக காட்டும் போதே
    தெரியும் இப்படி அடிப்படை சில
    தெரியாதவர்களை குரு என அழைப்பது
    இவர் முற்றும் துறக்காதவர் என
    இவர் அணுகுமுறையில் தெரிகிறது/////

    யாராலும் முற்றிலுமாக அனைத்தையும் துறக்க முடியாது.
    பசியை’ என்ன செய்வீர்கள்?
    எத்தனை பெரிய மகானா இருந்தாலும் பசியை எப்படித் துறக்க முடியும்?

    ReplyDelete
  9. /////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    Real nice... Brought smile to my face...Not sure who is Guru here :)////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  10. ////Blogger BLAKNAR said...
    அருமை வாத்தியாரே!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  11. ////Blogger lrk said...
    Good morning sir
    very nice story.////

    உங்களின் காலை வணக்கத்திற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Blogger Regunathan Srinivasan said...
    அய்யா,
    அருமையான கதை.நம் வாழ்கையில் பல சமயங்களில் இந்த மாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கும்.எனக்கும் அனுபவங்கள் உண்டு .
    பணிவுடன்,
    S .ரகுநாதன்/////

    உண்மைதான். எனக்கும் அது போன்ற அனுபவங்கள் உண்டு. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////Blogger Hari Haran said...
    nice story sir!
    subbiah sir, i am having interest in astrology, based on your classroom blogspot. i have learnt all your lessons. i am having some good knoweledge in astagavarga just because of you. i came to know that you have started new astrology based blogspot. i need to learn more about it. if you suggest me to join in that blogspot. that will be good to enhance my knoweledge in this astrology.
    Thank you,
    Hari Haran////

    Please write to me
    my mail ID: classroom2007@gmail.com

    ReplyDelete
  14. ///Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்...
    நீங்களூம் எனக்கு குருதான் !
    அனைவருக்கும் எல்லாம் சொல்கிறீர்கள்.
    எனக்குதேவை.
    13/12/1970 (02.05 AM)
    dharapuram
    என்ன சொல்லுது என்ஜாதகம் !!!
    மாணவனுக்கு உதவலாமே சார்..../////

    ஜாதகம் எப்படி சொல்லும்? நடத்திக் காட்டும்!
    சராசரியாக சுமார் 4,000 பேர்கள் தினமும் வகுப்பறைக்கு வந்து சொல்கிறார்கள். அனைவருக்கும் பலன் சொல்ல ஆரம்பித்தால் எத்தனை கேள்விகள் எத்தனை பதில்கள். என் தொழில் மாறிவிடாதா? அதற்கான நேரத்திற்கு நான் எங்கே போவது? நீங்களே அதைச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  15. ///Blogger Kamala said...
    அருமையான கதை.////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  16. ///Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு,
    ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போடணும்ன்னு பெரியோர்கள் கூறியது உபதேசத்திற்கும் பொருந்தும் போலிருக்கிறது.
    நன்றி
    செல்வம்/////

    உண்மைதான். பழமொழிகள் எல்லாம் அனுபவத்தில் சொல்லப்பட்டவைகள்தானே!

    ReplyDelete
  17. நல்ல கதைதான். பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!

    பெரும்பாலான குட்டிக்கதைகள் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகளின் தழுவலாகவே இருப்பதைக் காண்கிறேன். அவருடைய குட்டிக்கதைகள் நமது புராணங்கள், உபனிஷத்துகளின் தழுவலே.

    ReplyDelete
  18. ///Blogger kmr.krishnan said...
    நல்ல கதைதான். பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!
    பெரும்பாலான குட்டிக்கதைகள் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகளின் தழுவலாகவே இருப்பதைக் காண்கிறேன். அவருடைய குட்டிக்கதைகள் நமது புராணங்கள், உபனிஷத்துகளின் தழுவலே.////

    உண்மைதான் நமது புராணங்களில் நிறையக் கதைகள் உள்ளன. தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  19. very good and useful story you are the king of small stories

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com