மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.9.14

Astrology: Popcorn Post: சகல நன்மைகளையும் தரும் சந்திர மகா திசை!


Astrology: Popcorn Post: சகல நன்மைகளையும் தரும் சந்திர மகா திசை!

Popcorn Post 55

29.9.2014

குருவைப் போலவே சந்திரனும் சுபக் கிரகம். அத்துடன் நம் நட்சத்திரம்
மற்றும் ராசிக்கு அதிபதி சந்திரன். அவருடைய மகா திசை பல
விதங்களிலும் நன்மையானதாக இருக்கும்.

உடனே உங்களில் சிலர், என்னடா, நமக்கு சில நன்மைகள்தானே
கிடைத்தது - சகல விதங்களிலும் நன்மைகள் எல்லாம் கிடைக்க
வில்லையே என்று நினைக்க வேண்டாம். கேட்க வேண்டாம்.
அவரவருடைய ஜாதகத்தைப் பொறுத்து அந்த நன்மைகளின்
அளவு மாறுபடும். ஜாதகத்தில் சந்திர பகவான் ஆட்சி அல்லது
உச்சம் பெற்று இருக்கும் நிலைமையில் அத்துடன் அவர் கேந்திர திரிகோணங்களில் இருக்கும் நிலைமையில், அவருடைய தசா
புத்தி நடக்கும் காலங்கள் அந்த நன்மைகள் உண்டாகும்.  அனுபவித்தவர்களுக்குத்தான் அது தெரியும்.

இன்று சந்திர மகாதிசையின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்!

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில்
பிறந்தவர்களுக்கு சந்திர மகாதிசை அநேகமாக வராது. சுமார்
100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் வருத்தப்பட வேண்டாம். ஒவ்வொரு மகாதிசையிலும்
சந்திர புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம்  3,600 நாட்கள் (10 ஆண்டுகள்) வரும். அப்போது சந்திரன்
உரிய பலன்களைத் தருவார். மொத்தக் கணக்கு சரியாக இருக்கும்.

சரி சந்திர மகா திசையில் எல்லா ஆண்டுகளுமே சுகமாக இருக்குமா
என்றால், அதில் வரும்  சுயபுத்தி, குரு புத்தி, புதன் புத்தி, சுக்கிர புத்தி,  ஆகியவைகள் (சுமார் 5 ஆண்டு காலம்) நன்றாக இருக்கும். எப்போது
நன்றாக இருக்கும்? அந்த 4 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும்.
அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தாலோ அல்லது குருபகவானுக்கு 6, 8 12ல் அமர்ந்திருந்தாலோ, அதவது அஷ்ட சஷ்டம நிலைமை போன்ற அமைப்பில் இருந்தாலோ முழுமையான பலன்கள் இருக்காது.

சந்திர மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம்
கீழே கொடுத்துள்ளேன்!


உதாரணத்திற்கு சந்திர மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய
புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

சொல்லவே சந்திர திசை வருஷம் பத்தில்
    சுகமுடைய சந்திர புத்தி மாதம்பத்து
நில்லவே யதனுடைய பலனைச் சொல்வோம்
    நிகரில்லா மன்னருடன் மகிழ்ச்சியாகும்
சொல்லவே சுயம்வரங்கள் நாட்டிவைத்து
    சுகமான கல்யாணம் ஆகும்பாரு
வெல்லவோ சத்துருவை ஜெயிக்கலாகும்
    வேணபடி நிதிசேரும் விபரந்தானே!

நிதி சேரும் என்றிருக்கிறதே - அது போதாதா நமக்கு!  எல்லா
வகையிலும் பயன் உண்டாகும் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

உடன் தெய்வ வழிபாட்டையும் செய்தீர்கள் என்றால் கிடைக்கும்
பலன்கள் நிலைக்கும் தன்மை உடையதாக ஆகிவிடும்!

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதையும்
மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

  1. "நிதி" சேரும் என்பது சரி அந்த
    "நிதி" பெயருக்கு பின்னால் சேருமா

    அவருக்கு சேர்ந்தது
    அப்படித்தானோ...


    ReplyDelete
  2. மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு 104 வயதில்தான் சந்திர தசை வரும். அதாவது அது வரை உயிருடன் இருந்தால். 11ம் அதிபதியான சந்திர புத்தி (மற்ற கிரக தசைகளில்) நன்மையே செய்திருக்கிறது. நன்மையா தீமையா என்பது நம் கர்வினைகளைப் பொறுத்துதானே நடக்கும். நான் முன்பே சொன்னதுபோல் திருமணம் குரு தசை சந்திர புத்தியில் நடந்தது.

    ReplyDelete
  3. அய்யா , எனக்கு சந்திரன் திரிகோணத்தில் (9-ல்) இருக்கிறது !, கடக லக்னம், இருப்பினும் சந்திர தசை சந்திர புக்தியில் படு குழியில் விழுந்தேன் !. காரணம், அஷ்டம சானி , சந்திர தசை சந்திர புக்தி சந்திப்பு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படுத்தும் !.

    ReplyDelete
  4. அய்யா,
    உங்கள் பாடத்திற்கு நன்றி.
    ஒரு சந்தேகம்.தீர்க்க வேண்டுகிறேன்.
    எனது ஜாதகத்தில் உள்ள சந்திரன் 3ஆம் இடத்தில உள்ளார்.மகர லக்னம் ,7 ஆம் அதிபதி சந்திரன் ஆவார்.தனித்தே 3 ஆம் வீட்டில் உள்ளார்.9 ஆம் இடத்தில கன்னி ராசியில் தனித்து உள்ள நீச்ச சுக்ரனின் பார்வை 3ஆம் வீட்டின் மீது.சந்திரனின் பார்வை 9 ஆம் வீட்டின் மீது மற்றும் சந்திரன் சுயவர்க்கம் 8.இந்த மாதிரி அமைப்பு இருந்தால் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை முன்னேறும் என்று சொல்கிறார்களே.உங்கள் கருத்து என்ன அய்யா?

    என்றும் பணிவுடன்,
    S .ரகுநாதன்

    ReplyDelete
  5. வணக்கம் சார்.....

    சந்திர திசை...
    சந்திரன் என்றால்- இனிமை !
    சந்திரன் என்றால்- அழகு !

    என் தம்பிக்கு சந்திரதிசை
    மிதுனலக்னம். 10ல் சந்திரன்
    ரேவதி 4ல்.வர்க்கோத்தமம்

    1 ல் சனி(வ) கேது
    5 ல் சூரியன்+புதன்(வ)
    7 ல் சுக்கிரன்+ராகு
    8 ல் குரு
    10 ல் சந்திரன்
    11 ல் செவ்வாய்(வ)
    சந்திரன் திசை எப்படியிருக்கும் சார்..
    K.சக்திவேல்

    ReplyDelete
  6. அறியத் தந்தீர்கள் ஐயா...

    ReplyDelete
  7. Moon in 2 nd place in kanni she is 12.m veetukarar.kanni is 30 paral moon is 5 then puthan kethu in4 place virutshaka .is it good sir

    ReplyDelete
  8. vanakkam sir,
    I want horoscope book sir.

    ReplyDelete
  9. இந்த எட்டில் இருக்கும் கிரகங்களை பற்றி ஒரு கேள்வி. இது மட்டும் எனக்கு சுத்தமாக புரியவே இல்லை. கிட்டத்தட்ட அனைத்து கிரகங்களும் 8ம் இடத்தில் நன்மை செய்வதில்லை. வாத்தியார் அய்யா ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டபடி, சுக்கிரனுக்கு மட்டும் 8ம் இடம் உகந்த இடம். அந்த சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் இலக்கினத்திற்கு 8ல் இருந்தால், அந்த ஜாதகருக்கு சுக்கிர தசா புக்திகள் நன்மையை தருமா அல்லது தீமையை தருமா? அதிலும் துலா இலக்கினத்திற்கு 8ம் அதிபதியும் சுக்கிரனே. வாத்தியார் அய்யா விளக்கம் தர வேண்டுகிறேன்.

    அது போல சந்திரனுக்கும் சூரியனுக்கும் அஷ்டமாதிபத்திய தோஷம் இல்லை என்று படித்திருக்கிறேன். அப்போது தனுசு மற்றும் மகர இலக்கினக்காரர்களுக்கு முறையே சந்திர மற்றும் சூரிய தசா புக்திகள் 8ம் இடத்து பலனை தவிர்த்து நற்பலன்களையே தரும் என்று கொள்ளலாமா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com