மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

17.9.14

Astrology: Popcorn Post: சள்ளையான சனி மகா திசை!

Astrology: Popcorn Post: சள்ளையான சனி மகா திசை!

Popcorn Post 53

17.9.2014

சள்ளை என்றால் தொல்லை என்று பொருள்படும். ஆகவே தொல்லைகள் நிறைந்த சனி திசை என்று நீங்கள் வைத்துக்கொள்ளலாம். தொல்லைகளுக்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். உங்களுக்குத் தெரியாத தொல்லைகளா? ஆகவே சொல்லவில்லை!

அதீத தீய கிரகங்கள் மூன்றில், சென்ற பாப்கார்ன் பதிவில் (28.8.2014) கேது மகா திசையைப் பற்றியும், நேற்றையப் பதிவில் ராகு மகா திசையைப் பற்றியும் பார்த்தோம். அந்த வரிசையில் இன்று சனி திசையைப் பற்றிப் பார்ப்போம்.

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனி மகாதிசை அநேகமாக வராது. சுமார் 100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்துவிட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும் சனி புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 6840 நாட்கள் (18 ஆண்டுகள்) வரும். அப்போது சனி திசை தன்னுடைய வேலையைக் காட்டும். கணக்கு சரியாக இருக்கும்.

சரி சனி திசையில் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா என்றால், அதில் வரும் புதன் புத்தி, சுக்கிர புத்தி,குரு புத்தி, (மொத்தம் 8 ஆண்டுகள், 8 மாதங்கள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது ஊற்றிக் கொண்டு விடும்!

சனி மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்!

உதாரணத்திற்கு சனி மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

கேளப்பா சனிதிசையில் மார்க்கங்கேளு
    கெடியான வருஷமது பத்தொன்பதாகும்
கேளப்பா சனிபுத்தி வருஷம் மூன்று 
    கேடான நாளதுவும் மூன்றதாகும்
பாளப்பா பாவையரும் பாலன்தானும்
    பாங்கான வருஷம் மூன்றில் சாவதாகும்
ஆளப்பா அலைச்சது மெத்தவுண்டாம்
   அளவில்லா தனச் சேதமாகுந்தானே

சாவதாகும் என்றால் பயப்படவேண்டாம். சில சமயங்களில் ’செத்துப் பிழைத்தேன்’ என்று சொல்வீர்கள் இல்லையா? அது போன்ற செயல்தான் இதுவும்!

தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27 comments:

Dallas Kannan said...

Respected Sir
Sani Maha Disa just stared for me. I am working till 12:00 AM and start work again 6:00 AM... Some time did not even have time to come check your lessions (but did not miss it so far :))

My lagnam is Dhanusu and Sani is in Mesam. I have read that Sani will do good in this case. Waiting for it :)

வேப்பிலை said...

சனி..அவர் தான் நமக்கு குரு
சரியாக சொன்னீர்கள்..

KJ said...

Sir,
Thanks for the lesson.

In your old lesson, you mentioned, if Paaba grahas like Sanibagavan, Ragu, and kethu sits in 6, 8, 12th houses, then they will do huge benefits for native. Eg. Sri Ramar horo, Ragu and kethu sits in 6 and 12 house. I guess its based on other aspects also. Like lagna, Star, Signs etc. Its like we cannot assure that all paaba grahas do not harm for native and not all suba grahas do benefits. Is it right Sir ?

KJ said...

Also for Kumbam and Magara Lagna, Sanibagavan do favour whereever he sits. For those lagnas, He may not consider as Paabagraha.

Another rule, If a planet do benefits in his own budhi, then upcoming budhis will no do much favour for native. This is also from your previous lessons. Over all, Sanibagavan dasa will not be bad for all lagnas. Its based on his placement and authorities for that particular horo/lagna. I am just comparing the different rules and trying to get some conclusion. Thank you very much for your lesson Sir.

venkatesh r said...

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே!
என்று அருணகிரியாரும்,

பரிதிமதி சேய் அரி பொன் பளிங்கு சனி பாம்புகளும்
விரிதலை நாள் வேளைகளும் மிகைஅடு நின் அடியவர்கட்கு
உரிய நலம் புரியுமன்றி ஒரு போதும் படர்புரியா
தெரியலரும் தொண்டிழைப்பார் சிவலோக சுந்தரனே !.
என்று பாம்பன் சுவாமிகளும் வழி காட்டிய பின்

நான் இருக்கும் போது பயமேன்? என்ற அந்த கந்தவேளின் அடி பற்றினால் போதுமே!
துன்பங்கள் எல்லாம் பொடிப்பொடியாகிப் போகுமே!
நன்றி!

Muthukrishnan Prakash said...

sir,

if sani gets 5 marks in sarvashtakavargam and sits in 11th position with 34 marks for kataga lagnam, shall we assume that he will do good(mostly good) during his maha dasa.

with kind regards.

Mu.Prakaash

Sakthivel K said...

வணக்கம் சார்....
எனக்கும் தொல்லையான சனிதிசைதான்
கன்னி லக்னம்
ரிசபம் ராசி, மிருகசீரிசம் 2ம் பாதம்
பௌர்ணமி திதி
13/12/1970
(02.05 am)
2ல் சுக்ரன்+செவ்வாய்
3ல் சூரியன்+குரு
4ல் புதன்
6ல் ராகு
8ல் சனி(வ)
9ல் சந்திரன்
12ல் கேது
சனி திசையில் புதன்புத்தி நடக்கிறது
வண்டி பேட்டைக்கு போய்விடுமோ!!

Regunathan Srinivasan said...

அய்யா,
எனக்கு மகர லக்னம்.சனி 10 ஆம் இடம் துலா ராசியில் உச்சம் .எனக்கு 12-13 வயது வரை சனி தசை தான் இருந்தது.நன்றாக படித்தேன்.நல்ல பெயர் எடுத்தேன்.ஆனால் typhoid ,jaundice ,chicken pox ,cholera என்று எல்லா வியாதிகளும் ஒவ்வொரு வருடமும் உக்கரமாக வந்தன.பத்தாம் இடம் 33 பரல்கள்.பத்தாம் இட அதிபதி சுக்ரன் கன்னி ராசியில் (9 ஆம் இடத்தில் )நீசம்.ஒரு கேள்வி அய்யா ?குரு 12 ஆம் இடத்தில் உள்ளார்.சந்திரன் 3ஆம் இடத்தில் உள்ளார்.அப்படியென்றால் சுக்ரன் உச்சமான மீன ராசியின் அதிபதி குரு சந்திரனிடம் இருந்து கேந்திரத்தில் (10 ஆம் இடத்தில் ) உள்ளார்.நீச்ச பங்கம் உள்ளதா அல்லது நீச்ச பங்க ராஜ யோகம் உள்ளதா ?மேதகு BV ராமன் அவர்கள் இதுவும் ஒரு நீச்ச பங்கதின் அடையாளம் என்று சொல்வதாக படித்ததுண்டு.நான் உங்களுடன் விவாதம் செய்வதாக தயவு செய்து நினைத்து கொள்ள வேண்டாம்.தலைப்புக்கு சம்பந்தபடாத கேள்வியை கேட்கிறானே என்றும் தயவு செய்து நினைத்து கொள்ள வேண்டாம்.உங்கள் கருத்து இது பற்றி என்ன அய்யா ?அடியேனுடைய சந்தேகத்தை தீர்த்து அருளுங்கள் அய்யா.

என்றும் பணிவுடன் ,
S . ரகுநாதன்

Kirupanandan A said...

//தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.//

அதாவது வலிக்கு pain killer சாப்பிடுவதைப் போன்றது. நோய் தீராது. அந்தந்த நேரத்திற்கு வலி குறையும் அவ்வளவுதான்.

சனி தசை சுய புத்தி என் வாழ்க்கையிலேயெ மறக்க முடியாதது. சனி பகவான் என்னை நன்றாகத் துவைத்து காயப் போட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தன் சுய புத்தியில் குரு அந்தரம் வரும் வரை.

அதன் பின் வந்த புதன், கேது, இப்போது நடக்கும் சுக்கிர புத்தி இவற்றிலெல்லாம் வீடு, வண்டி, வாகனம், புத்திர பாக்கியம் எல்லாம் கொடுத்தார். எல்லாமே கடனில்லா சொத்துகள்.

தீமை செய்யக்கூடிய சனி தசையில் சுக்கிர புத்தி நன்றாக போட்டு தள்ளி விட்டுதான் அடுத்த வேலையைப் பார்க்கும் என்று ஒரு பழைய ஜோதிட மாத இதழில் படித்தேன். காரணம் சுக்கிரனும் சனியும் ஒன்றுக்கொன்று நட்புக் கிரகங்கள். சனி முன்மொழிவதை சுக்கிரன் நன்றாகவே வழிமொழிவார் என்று.

Kirupanandan A said...

இன்னொரு விஷயத்தையும் இங்கு பகிர்ந்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். என் குடும்பத்தில் இருப்பதோ மூன்று பேர்தான். இருவருக்கு சனி தசையும் ஒருவருக்கு ராகு தசையும் நடக்கிறது.

Selvam Velusamy said...

வணக்கம் குரு,

பாப் கார்ன் போஸ்ட் நன்றாக இருந்தது. ஆனாலும் ஒரு குறை **இது பொது பலன். பார்த்த, சேர்ந்த கிரகங்களால் மேற்சொன்ன பலன் கூடலாம் அல்லது குறையலாம்** என்ற வாசகம் விடுபட்டுவிட்டது. இதனால் எத்தனை கேள்விகனைகள் வரபோகிறதோ. :-)

நன்றி
செல்வம்

Subbiah Veerappan said...

/////Blogger Dallas Kannan said...
Respected Sir
Sani Maha Disa just stared for me. I am working till 12:00 AM and start work again 6:00 AM... Some time did not even have time to come check your lessions (but did not miss it so far :))
My lagnam is Dhanusu and Sani is in Mesam. I have read that Sani will do good in this case. Waiting for it :)/////

உங்கள் நம்பிக்கை வீண்போகாது! செய்வார். பொறுத்திருங்கள்!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
சனி..அவர் தான் நமக்கு குரு
சரியாக சொன்னீர்கள்../////

He is the authority for work. So, he is the mentor for all

Subbiah Veerappan said...

/////Blogger KJ said...
Sir,
Thanks for the lesson.
In your old lesson, you mentioned, if Paaba grahas like Sanibagavan, Ragu, and kethu sits in 6, 8, 12th houses, then they will do huge benefits for native. Eg. Sri Ramar horo, Ragu and kethu sits in 6 and 12 house. I guess its based on other aspects also. Like lagna, Star, Signs etc. Its like we cannot assure that all paaba grahas do not harm for native and not all suba grahas do benefits. Is it right Sir ?////

ஆமாம். மற்ற கிரகங்களின் அமைப்பு, பார்வை ஆகியவற்றை வைத்து எல்லாம் மாறுபடும்! நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger KJ said...
Also for Kumbam and Magara Lagna, Sanibagavan do favour whereever he sits. For those lagnas, He may not consider as Paabagraha.
Another rule, If a planet do benefits in his own budhi, then upcoming budhis will no do much favour for native. This is also from your previous lessons. Over all, Sanibagavan dasa will not be bad for all lagnas. Its based on his placement and authorities for that particular horo/lagna. I am just comparing the different rules and trying to get some conclusion. Thank you very much for your lesson Sir.////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger venkatesh r said...
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே!
என்று அருணகிரியாரும்,
பரிதிமதி சேய் அரி பொன் பளிங்கு சனி பாம்புகளும்
விரிதலை நாள் வேளைகளும் மிகைஅடு நின் அடியவர்கட்கு
உரிய நலம் புரியுமன்றி ஒரு போதும் படர்புரியா
தெரியலரும் தொண்டிழைப்பார் சிவலோக சுந்தரனே !.
என்று பாம்பன் சுவாமிகளும் வழி காட்டிய பின்
நான் இருக்கும் போது பயமேன்? என்ற அந்த கந்தவேளின் அடி பற்றினால் போதுமே!
துன்பங்கள் எல்லாம் பொடிப்பொடியாகிப் போகுமே!
நன்றி!/////

கந்தவேளின் அடி பற்றினால் போதும்! துன்பங்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் விலகிவிடும்!

Subbiah Veerappan said...

/////Blogger Muthukrishnan Prakash said...
sir,
if sani gets 5 marks in sarvashtakavargam and sits in 11th position with 34 marks for kataga lagnam, shall we assume that he will do good(mostly good) during his maha dasa.
with kind regards.
Mu.Prakaash//////

சனி தன்னுடைய சுயவர்க்கத்தில் 5 பரல்கள் பெற்றதற்கு நீங்கள் சொல்வதுதான் பலன். நல்லதே நடக்கும். நன்றி!

Subbiah Veerappan said...

//////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்....
எனக்கும் தொல்லையான சனிதிசைதான்
கன்னி லக்னம்
ரிசபம் ராசி, மிருகசீரிசம் 2ம் பாதம்
பௌர்ணமி திதி
13/12/1970
(02.05 am)
2ல் சுக்ரன்+செவ்வாய்
3ல் சூரியன்+குரு
4ல் புதன்
6ல் ராகு
8ல் சனி(வ)
9ல் சந்திரன்
12ல் கேது
சனி திசையில் புதன்புத்தி நடக்கிறது
வண்டி பேட்டைக்கு போய்விடுமோ!!/////

எந்தப் பேட்டை? அதைச் சொல்லவில்லையே நீங்கள்?

Subbiah Veerappan said...

////Blogger Regunathan Srinivasan said...
அய்யா,
எனக்கு மகர லக்னம்.சனி 10 ஆம் இடம் துலா ராசியில் உச்சம் .எனக்கு 12-13 வயது வரை சனி தசை தான் இருந்தது.நன்றாக படித்தேன்.நல்ல பெயர் எடுத்தேன்.ஆனால் typhoid ,jaundice ,chicken pox ,cholera என்று எல்லா வியாதிகளும் ஒவ்வொரு வருடமும் உக்கரமாக வந்தன.பத்தாம் இடம் 33 பரல்கள்.பத்தாம் இட அதிபதி சுக்ரன் கன்னி ராசியில் (9 ஆம் இடத்தில் )நீசம்.ஒரு கேள்வி அய்யா ?குரு 12 ஆம் இடத்தில் உள்ளார்.சந்திரன் 3ஆம் இடத்தில் உள்ளார்.அப்படியென்றால் சுக்ரன் உச்சமான மீன ராசியின் அதிபதி குரு சந்திரனிடம் இருந்து கேந்திரத்தில் (10 ஆம் இடத்தில் ) உள்ளார்.நீச்ச பங்கம் உள்ளதா அல்லது நீச்ச பங்க ராஜ யோகம் உள்ளதா ?மேதகு BV ராமன் அவர்கள் இதுவும் ஒரு நீச்ச பங்கதின் அடையாளம் என்று சொல்வதாக படித்ததுண்டு.நான் உங்களுடன் விவாதம் செய்வதாக தயவு செய்து நினைத்து கொள்ள வேண்டாம்.தலைப்புக்கு சம்பந்தபடாத கேள்வியை கேட்கிறானே என்றும் தயவு செய்து நினைத்து கொள்ள வேண்டாம்.உங்கள் கருத்து இது பற்றி என்ன அய்யா ?அடியேனுடைய சந்தேகத்தை தீர்த்து அருளுங்கள் அய்யா.
என்றும் பணிவுடன் ,
S . ரகுநாதன்//////

குழப்புகிறீர்களே சுவாமி. முதலில் முன்பதிவுகளில் உள்ள நீசபங்க ராஜ யோகப் பாடத்தை முழுமையாகப் படித்து விட்டு வாருங்கள்!

Subbiah Veerappan said...

///Blogger Kirupanandan A said...
//தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.//
அதாவது வலிக்கு pain killer சாப்பிடுவதைப் போன்றது. நோய் தீராது. அந்தந்த நேரத்திற்கு வலி குறையும் அவ்வளவுதான்.
சனி தசை சுய புத்தி என் வாழ்க்கையிலேயெ மறக்க முடியாதது. சனி பகவான் என்னை நன்றாகத் துவைத்து காயப் போட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தன் சுய புத்தியில் குரு அந்தரம் வரும் வரை.
அதன் பின் வந்த புதன், கேது, இப்போது நடக்கும் சுக்கிர புத்தி இவற்றிலெல்லாம் வீடு, வண்டி, வாகனம், புத்திர பாக்கியம் எல்லாம் கொடுத்தார். எல்லாமே கடனில்லா சொத்துகள்.
தீமை செய்யக்கூடிய சனி தசையில் சுக்கிர புத்தி நன்றாக போட்டு தள்ளி விட்டுதான் அடுத்த வேலையைப் பார்க்கும் என்று ஒரு பழைய ஜோதிட மாத இதழில் படித்தேன். காரணம் சுக்கிரனும் சனியும் ஒன்றுக்கொன்று நட்புக் கிரகங்கள். சனி முன்மொழிவதை சுக்கிரன் நன்றாகவே வழிமொழிவார் என்று./////

உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

Subbiah Veerappan said...

////Blogger Kirupanandan A said...
இன்னொரு விஷயத்தையும் இங்கு பகிர்ந்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். என் குடும்பத்தில் இருப்பதோ மூன்று பேர்தான். இருவருக்கு சனி தசையும் ஒருவருக்கு ராகு தசையும் நடக்கிறது./////

அதனாலென்ன? நல்ல திசை வரும்போது இப்படியொரு அமைப்போடு வரும் அல்லவா? அதாவது மூவருக்கும் ஒன்றாக!

Subbiah Veerappan said...

/////Blogger Selvam Velusamy said...
வணக்கம் குரு,
பாப் கார்ன் போஸ்ட் நன்றாக இருந்தது. ஆனாலும் ஒரு குறை **இது பொது பலன். பார்த்த, சேர்ந்த கிரகங்களால் மேற்சொன்ன பலன் கூடலாம் அல்லது குறையலாம்** என்ற வாசகம் விடுபட்டுவிட்டது. இதனால் எத்தனை கேள்விகனைகள் வரபோகிறதோ. :-)
நன்றி
செல்வம் /////

பல ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதுவதெல்லாம் பொதுப் பலன்கள் என்று அனைவருக்கும் தெரியும். It is understood!

Kirupanandan A said...

//அதனாலென்ன? நல்ல திசை வரும்போது இப்படியொரு அமைப்போடு வரும் அல்லவா? அதாவது மூவருக்கும் ஒன்றாக!//

புயலுக்கு பின் அமைதி திரும்பிதான் ஆக வேண்டும். But have to deal with aftermath. இறைவன் விருப்பம் எதுவோ அதன்படி நடக்கட்டும்.

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Subbiah Veerappan said...

///Blogger Kirupanandan A said...
//அதனாலென்ன? நல்ல திசை வரும்போது இப்படியொரு அமைப்போடு வரும் அல்லவா? அதாவது மூவருக்கும் ஒன்றாக!//
புயலுக்கு பின் அமைதி திரும்பிதான் ஆக வேண்டும். But have to deal with aftermath. இறைவன் விருப்பம் எதுவோ அதன்படி நடக்கட்டும்.////

கரெக்ட். அந்த மனநிலைக்கு வந்து விட்டால், எதுவும் நம்மைக் கவலைக்கு ஆளாக்காது. அச்சுறுத்தாது! நன்றி ஆனந்த்!

Subbiah Veerappan said...

////Blogger Yarlpavanan Kasirajalingam said...
சிறந்த பகிர்வு
தொடருங்கள்////

நல்லது. நன்றி!

DR.SGM said...

Dear sir,I am sorry that i asked a clarification reg neesabanga rajayogam,by citing Mr.Ragunathan's question which is devoid of facts about the BHUTHA,as you have mentioned.thank you for ur response.The core point i like to know is that,if a lord of a house,[where a graga is in neesam],is in chandira kendhira,neesabangam is considered.i read it from a reliable astro book.if you have time give a view about it.thank you.