Astrology: Popcorn Post: ரகளையான ராகு மகா திசை!
Popcorn Post 51
16.9.2014
ரகளை என்றால் தகராறு, கலாட்டா என்று பொருள்படும். ஆகவே
தகராறான ராகு திசை என்று நீங்கள் வைத்துக்கொள்ளலாம். நீங்கள்
நீண்ட பயணம் செல்லும்போது பயணிக்கும் வாகனம் வழியில்
தகராறு செய்தால் பயணம் எப்படி இருக்கும்? நினைத்துப்பாருங்கள்!
சென்ற பாப்கார்ன் பதிவில் (28.8.2014) கேது மகா திசையைப் பற்றிப் பார்த்தோம்
ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.
மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு
ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம்
ஒன்றும் ஆகாது.
இன்று ராகு மகா திசையைப் பற்றிப் பார்ப்போம்!
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில்
பிறந்தவர்களுக்கு ராகு மகாதிசை அநேகமாக வராது. சுமார்
100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.
அவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்து
விட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும்
ராகு புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள்.
மொத்தம் 6480 நாட்கள் (18 ஆண்டுகள்) வரும். அப்போது ராகு திசை தன்னுடைய வேலையைக் காட்டும். கணக்கு சரியாக இருக்கும்.
சரி ராகு திசையிலும் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா
என்றால், அதில் வரும் குரு புத்தி, புதன் புத்தி, சுக்கிர புத்தி (மொத்தம்
8 ஆண்டுகள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக
இருக்கும்? அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது
திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும்.
அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது
ஊற்றிக் கொண்டு விடும்!
ராகு மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்!
உதாரணத்திற்கு ராகு மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்
காணவே ராகுதிசை வருஷம்பதினெட்டு
கனதையுள்ள ராகுவினில் ராகுபுத்தி
தோணவே மாதமது முப்பத்திரெண்டு
துகையான நாளதுவும் பனிரெண்டாகும்
யேனவே சத்துருவால் நிபந்தனையோடும்
யெண்ணமுள்ள மனைவியரும் யிருந்தவிடம்பாழாம்
போனவே பழம்பொருளும் சேதமாகும்
பெலமான நோயதுவும் கூடிக்கொல்லும்
கொல்லும் என்றால் பயப்படவேண்டாம். உங்களைத் துன்பப் படுத்து
பவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, சாகடிக்கிறான்டா’ என்று
சொல்வீர்கள் இல்லையா? அது போன்ற செயல்தான் இதுவும்!
தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.
நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
அய்யா,ஜாதகத்தில் ராகு இருக்கும் இடத்தின் அதிபதி 10ம் இடத்தில் இருந்து 7 பரல் பெற்றிருந்தால் ராகுவால் ராகு திசையில் அந்த ஜாதகருக்கு தீங்கு நேராது அல்லவா?
ReplyDeleteவணக்கம் குரு,
ReplyDeleteரகு மகா திசையை நான் அனுபவத்திருக்கிறேன். ரகு எனக்கு லக்னத்தில் இருந்தாலும் அட்டமாதிபதி செவ்வாயின் பதசாரம் மற்றும் லக்னாதிபதி எட்டாமிடத்தில் ஆகவே ரகு திசையில் மிகவும் துன்பபட்டேன். ஒரு சமையம் சனி புக்தியில் மருத்துவமனையில் படுக்க வைத்துவிட்டார்கள்.
நன்றி
செல்வம்
நான் பிறக்கும்போது செவ்வாய் தசை இருப்பு 11 மாதம் 14 நாட்கள்தான். அதன் பிறகு ராகு தசை 19 வயது வரை. ராகு பகவான் நிறைய ஆன்மீக சிந்தனைகள் ஏற்பட செய்தார். பக்தி நூல்கள், புராணக் கதைகள் இவற்றைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஜோதிடத்தில் ஆர்வம் இந்தக் காலக் கட்டத்தில்தான் ஏற்பட்டது. அடுத்து வந்த குரு தசையில் எல்லாமே தலைக்கீழ் மாற்றம் கண்டு விட்டது. மீண்டும் குரு தசை ராகு புத்தியில்தான் அதிகமாக கோயிலுக்கு செல்ல ஆரம்பித்தேன். ஒரு கோயிலில் முக்கிய நிர்வாகப் பொறுப்பெல்லாம் கிடைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இருந்தாலும் கஷ்ட காலம். அதனால்தான் கோயிலிக்கு போக ஆரம்பித்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. சிந்தனையில் மாற்றம் என்று சொல்லலாம்.
ReplyDeleteஅய்யா,
ReplyDelete6,8,12-ஆம் இடம் என்று தாங்கள் குறுபிட்டுல்லீர்கள் அது ராஹு இருக்கும் இடத்திற்கு 6,8,12-ஆ? அல்லது லக்னதிர்க்கு 6,8,12-ஆம் இடமா?
arumai sir
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteஎனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்.எனக்கு மகர லக்னம்.புதன் தசை ராகு புத்தியில் 23ஆம் வயதில் (2007-2009) முதன் முதலில் வெளிநாடு செல்லும் யோகம் வந்தது.புதன்+சூரியன் 8 ஆம் இடம் மற்றும் ராகு 5 ஆம் இடம்.எனக்கு நல்ல சம்பளம்,அதிகாரம் உள்ள அதிகம் பளு இல்லாத வேலை,உதவி செய்ய பணியாட்கள் என எல்லாம் கிடைத்தது.ஆனால் என்னமோ தெரியவில்லை மனம் அந்த வேலையில் மனம் லயிக்கவில்லை.ஒரு contract period முடிந்தவுடன், ராகு புத்தி முடியும் தருவாயில் நம் நாட்டிற்கே மேல்படிப்பிற்கு திரும்பி விட்டேன்.அப்போது எனக்கு ஜோசியத்தில் பெரிய ஈடுபாடு கிடையாது.இப்போது திரும்பி பார்த்தால் 'புதன் (8 ஆம் இடம் சூரியனுடன் ) திசையில்-ராகு (5 ஆம் இடம் )புத்தியில் ' எனக்கு பெரும்பாலும் நன்மைகளே நடந்தன.உங்கள் கருத்து என்ன அய்யா ?
பணிவுடன் ,
S .ரகுநாதன்
வணக்கம் சார்....
ReplyDeleteராகு திசையில் 100 க்கு 10 பேர்
ராஜவாழ்க்கை வாழ்வார்கள்!!
உழைக்காமல் பணம்வரும் !!!!!
இவர்கள் புண்ணீயசாலிகள்....
ஆனால் 90 பேருக்கு????
கோவனம் உருவபடும்.
சொத்து,சுகம் பாழ்படும்.
சமூகமதிப்பும் இருக்காது.
ஆர்தோசெண்டரில் படுக்கவேண்டும்.
இல்லையெனில்
அச்சடிச்ச சோறூ,
அவுன்ஸ் குழம்பு,
வெண்னையெடுக்கா மோரு,
வேப்பமர நிழலு என பல100போலீஸ்
பாதுகாப்புடன் இருக்கலாம் !!
சிரிது யோகமிருந்தால்
விபச்சாரவிடுதியிலும்,
சூதாட்டவிடுதியிலும்,
காலத்தையோட்டலாம்.......
K.சக்திவேல்
For me this is a revision lesson.
ReplyDeleteThank you Sir.
kmrk
Respected sir,
ReplyDeleteRagu dasa started to me at the age of 15 and it is in 10th house in my chart and i faced sudden changes in my life.I fallen very low in studies after that.lots of breaks in studies. lots of problems related with mind and i completed my degree at the age of 27.I never had financial problems for my breaks.Now i am age 30 with pg degree ,searching for job which is really hard to crack.
so i know how it feels to be in rahu dasa,if it is in bad position.
hoping for better life in upcoming guru dasa.
my Dob:7.9.84, Time:6.30 am, arcot
thanks ,
krishna..
ReplyDelete//C.Senthil said...
அய்யா,
6,8,12-ஆம் இடம் என்று தாங்கள் குறுபிட்டுல்லீர்கள் அது ராஹு இருக்கும் இடத்திற்கு 6,8,12-ஆ? அல்லது லக்னதிர்க்கு 6,8,12-ஆம் இடமா? //
திரு.வாத்தியர் அவர்கள் குறிப்பிட்டது லக்கனத்தில் இருந்து 6,8,12 - ஆம் இடங்கள் நான் கூறுவது சரி தான ஐயா.... தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்...
திருசிற்றம்பலம் !!!
//////Blogger bala subramani said...
ReplyDeleteஅய்யா,ஜாதகத்தில் ராகு இருக்கும் இடத்தின் அதிபதி 10ம் இடத்தில் இருந்து 7 பரல் பெற்றிருந்தால் ராகுவால் ராகு திசையில் அந்த ஜாதகருக்கு தீங்கு நேராது அல்லவா?//////
அதிபதி எப்படி இருந்தால் என்ன? ராகு எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்! அதைவைத்துத்தான் அவருடைய திசைப் பலன்கள்!
//////Blogger Selvam Velusamy said...
ReplyDeleteவணக்கம் குரு,
ரகு மகா திசையை நான் அனுபவத்திருக்கிறேன். ராகு எனக்கு லக்னத்தில் இருந்தாலும் அட்டமாதிபதி செவ்வாயின் பதசாரம் மற்றும் லக்னாதிபதி எட்டாமிடத்தில் ஆகவே ராகு திசையில் மிகவும் துன்பபட்டேன். ஒரு சமயம் சனி புக்தியில் மருத்துவமனையில் படுக்க வைத்துவிட்டார்கள்.
நன்றி
செல்வம்//////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
/////Blogger Kirupanandan A said...
ReplyDeleteநான் பிறக்கும்போது செவ்வாய் தசை இருப்பு 11 மாதம் 14 நாட்கள்தான். அதன் பிறகு ராகு தசை 19 வயது வரை. ராகு பகவான் நிறைய ஆன்மீக சிந்தனைகள் ஏற்பட செய்தார். பக்தி நூல்கள், புராணக் கதைகள் இவற்றைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஜோதிடத்தில் ஆர்வம் இந்தக் காலக் கட்டத்தில்தான் ஏற்பட்டது. அடுத்து வந்த குரு தசையில் எல்லாமே தலைக்கீழ் மாற்றம் கண்டு விட்டது. மீண்டும் குரு தசை ராகு புத்தியில்தான் அதிகமாக கோயிலுக்கு செல்ல ஆரம்பித்தேன். ஒரு கோயிலில் முக்கிய நிர்வாகப் பொறுப்பெல்லாம் கிடைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இருந்தாலும் கஷ்ட காலம். அதனால்தான் கோயிலுக்குப் போக ஆரம்பித்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. சிந்தனையில் மாற்றம் என்று சொல்லலாம்.///////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!
/////Blogger C.Senthil said...
ReplyDeleteஅய்யா,
6,8,12-ஆம் இடம் என்று தாங்கள் குறுபிட்டுள்ளீர்கள் அது ராஹு இருக்கும் இடத்திற்கு 6,8,12-ஆ? அல்லது லக்னதிர்க்கு 6,8,12-ஆம் இடமா?////
லக்கினத்திற்கு!
/////Blogger Healthcare Raja Nellai said...
ReplyDeletearumai sir////
நல்லது. நன்றி! இரண்டு மாதங்களாக உங்கள் இதழ் வரவில்லையே சுவாமி?
//////Blogger Regunathan Srinivasan said...
ReplyDeleteஅய்யா,
எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்.எனக்கு மகர லக்னம்.புதன் தசை ராகு புத்தியில் 23ஆம் வயதில் (2007-2009) முதன் முதலில் வெளிநாடு செல்லும் யோகம் வந்தது.புதன்+சூரியன் 8 ஆம் இடம் மற்றும் ராகு 5 ஆம் இடம்.எனக்கு நல்ல சம்பளம்,அதிகாரம் உள்ள அதிகம் பளு இல்லாத வேலை,உதவி செய்ய பணியாட்கள் என எல்லாம் கிடைத்தது.ஆனால் என்னமோ தெரியவில்லை மனம் அந்த வேலையில் மனம் லயிக்கவில்லை.ஒரு contract period முடிந்தவுடன், ராகு புத்தி முடியும் தருவாயில் நம் நாட்டிற்கே மேல்படிப்பிற்கு திரும்பி விட்டேன்.அப்போது எனக்கு ஜோசியத்தில் பெரிய ஈடுபாடு கிடையாது.இப்போது திரும்பி பார்த்தால் 'புதன் (8 ஆம் இடம் சூரியனுடன் ) திசையில்-ராகு (5 ஆம் இடம் )புத்தியில் ' எனக்கு பெரும்பாலும் நன்மைகளே நடந்தன.உங்கள் கருத்து என்ன அய்யா ?
பணிவுடன் ,
S .ரகுநாதன்/////
10 சதவிகிதம் பேர்களுக்கு நன்மைகள் உண்டாகலாம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ராகு திசை மொத்தமும் நன்மையான பலன்களை அடைந்தார்!
/////Blogger Sakthivel K said...
ReplyDeleteவணக்கம் சார்....
ராகு திசையில் 100 க்கு 10 பேர்
ராஜவாழ்க்கை வாழ்வார்கள்!!
உழைக்காமல் பணம்வரும் !!!!!
இவர்கள் புண்ணீயசாலிகள்....
ஆனால் 90 பேருக்கு????
கோவனம் உருவபடும்.
சொத்து,சுகம் பாழ்படும்.
சமூகமதிப்பும் இருக்காது.
ஆர்தோசெண்டரில் படுக்கவேண்டும்.
இல்லையெனில்
அச்சடிச்ச சோறூ,
அவுன்ஸ் குழம்பு,
வெண்னையெடுக்கா மோரு,
வேப்பமர நிழலு என பல100போலீஸ்
பாதுகாப்புடன் இருக்கலாம் !!
சிறிது யோகமிருந்தால்
விபச்சாரவிடுதியிலும்,
சூதாட்டவிடுதியிலும்,
காலத்தையோட்டலாம்.......
K.சக்திவேல்/////
வி.விடுதியில் காலத்தை ஓட்டுவது யோகமா? உதைக்கிறதே சுவாமி!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteFor me this is a revision lesson.
Thank you Sir.
kmrk////
நீங்கள் சுமார் 6 ஆண்டுகாலமாக வகுப்பறைக்கு வருகிறீர்கள். எதைப் படித்தாலும் உங்களுக்கு ரிவிசன் பாடமாகத் தோன்றுவதில் வியப்பில்லை. இது புதிதாக எழுதப்பெற்றதுதான். மேட்டர்கள் வேண்டுமென்றால் பழசாக இருக்கலாம். இதில் புதிய செய்திகள் உள்ளன. அதையும் பாருங்கள் கிருஷ்ணன் சார்!
/////Blogger Krishna Kumar said...
ReplyDeleteRespected sir,
Ragu dasa started to me at the age of 15 and it is in 10th house in my chart and i faced sudden changes in my life.I fallen very low in studies after that.lots of breaks in studies. lots of problems related with mind and i completed my degree at the age of 27.I never had financial problems for my breaks.Now i am age 30 with pg degree ,searching for job which is really hard to crack.
so i know how it feels to be in rahu dasa,if it is in bad position.
hoping for better life in upcoming guru dasa.
my Dob:7.9.84, Time:6.30 am, arcot
thanks ,
krishna../////
அடுத்த குரு திசை நன்மை உடையதாக இருக்கும். பொறுமையாக இருங்கள் நண்பரே!
/////Blogger Sundaravadivel K said...
ReplyDelete//C.Senthil said...
அய்யா,
6,8,12-ஆம் இடம் என்று தாங்கள் குறுபிட்டுள்ளீர்கள் அது ராஹு இருக்கும் இடத்திற்கு 6,8,12-ஆ? அல்லது லக்னதிர்க்கு 6,8,12-ஆம் இடமா? //
திரு.வாத்தியர் அவர்கள் குறிப்பிட்டது லக்கனத்தில் இருந்து 6,8,12 - ஆம் இடங்கள் நான் கூறுவது சரி தான ஐயா.... தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்...
திருசிற்றம்பலம் !!!/////
சரிதான்! சரிதான்!
நன்றி! நன்றி!