மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

23.9.14

ஒரு அரசியல்வாதியின் உருக்கமான கடிதம்!


ஒரு அரசியல்வாதியின் உருக்கமான கடிதம்!

மனைவியிடம் பேசுங்கள் தோழர்களே!
written by Trichy Siva ... மனைவியிடம் பேசுங்கள் !
             
திருச்சி சிவா:

பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு,
பதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டுகள் வாழ்ந்து,
49 வயது முடியும் நேரத்தில் என்னை தனி மனிதனாக தத்தளிக்க
விட்டு என் மனைவி போய் விட்டாள்.
   
அவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய
போராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி
இன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுபடாத நோய்
ஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு
போய் விட்டது.
   
இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த,
அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை.
காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான்.
   
ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை
வாட்டி வதைக்கிறது. வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த
நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள்.
       
பொன் நகைகளை கழட்டிக் கொடுத்து விட்டு, புன்னகையோடு
மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு. அரசியல் வெப்பம் தகித்த
போதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும், என்
அருகே ஆறுதலாய், ஆதரவாய் இருந்தவள்.
       
எந்த நிலையிலும் தலை தாழ்ந்து வாழ்ந்திட கூடாது என்கின்ற
என் குணத்திற்கு இயைந்து, இணைந்து நடந்தவள். சுயமரியாதையை காப்பதில் என்னையும் தாண்டி நின்றவள்.
         
மூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைதேர்தல் பனி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல்
சுற்றி கொண்டுஇருந்தபொது சிறிதும் முகம் சுளிகாதவள்.
         
1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன '
என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்
தேர்தலுக்கு அனுப்பிவிட்டு செப்17 குழந்தை பிறந்து, இரண்டு
நாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது ஒரு சிறிதும்
முகம் சுழிக்காமல் ஒருமணி நேரத்திலயே என்னை மீண்டும்
தேர்தல் களம் அனுப்பி வைத்த கற்பனை செய்ய முடியாத குணம்
கொண்ட குலமகள்.

இரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக
அப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ்
நிலையத்தில் காவலில் இருந்த இடத்தில் பிள்ளையை காட்டி
விட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன
இலட்சியவாதியின் சரியான துணை.

 விருந்தோம்பல் , உபசரிப்பு, இன்முகம், எண்ணைக்கான  வருவோர்
அதனை பேருக்கும் அன்னபூரணி.

இரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி புதிதாக அரைத்து
பசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம், தாய் போன
துயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும்,
எதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம்
கொண்ட உத்தமி; பொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல்
நடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய்,
இருந்தவள்.
           
பண்டிகைகளும், திருநாட்களும், கோலாகலமாய், கூட்டம்
கூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள்எடுத்துக் கொள்ளும்
முயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை.
இத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்தன
ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை.
ஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை. இருந்திருந்தால்
இந்த உறுத்தல் வந்துருக்காது.

நேரம்இல்லை என்பார்கள், பொய் 32 ஆண்டுகளில் பத்து நிமிடம்
கூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து
கொள்வார்கள் என்பார்கள். என்றால் மொழி எதற்கு? மொழியின்
வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு? பேசுவதற்குதானே? உணர்துவதற்குதானே? ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே.
   
காலம் கடந்து பயன்படுத்தினால் பயனத்துப்போவது பதார்த்தங்கள்
மட்டுமா? வார்த்தைகளும் தானே. சரியான நேரத்தில் வெளிபடுத்தா
விட்டால், 'மன்னிப்பு', 'நன்றி' , ' காதல் ' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது.விளையும் இருக்காது.
     
இத்தனை கற்றும் கடமை தவறியதாகவே கருதுகிறேன். ஒருநாள்
ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு
பெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது,
உன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை
பகிர்ந்து கொண்டு என்னை இலேசாக்கினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாள். கோடிரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருப்பாள்.
       
ஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின்
உடல் நலம் மோசமடைததாக செய்தி கிடைத்தது வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்துஇருந்ததைஎல்லாம் கொட்டிவிட
வேண்டும் என்று வந்து பார்த்தல் முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.
         
நினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை'
ஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகா
ராணியை 'தேவி' என  அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் இரண்டும்
மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் 'என்ன' என்று
கேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி
கண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்.
           
பேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது,
இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிறவரிட மெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன். ஒரே
ஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசிஇருந்தால்...........இவர் நம்மை முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று
நாளும் துடிக்கிறேன்.
       
எனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், "வருத்தப்படதீர்கள் இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே
புரிந்திருக்கும் " என்று சமாதானப் படுத்தினார். நான் அவரிடம்
கேட்டேன் , " நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிற
பொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ,
என்பதை கூடத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குறிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனாலும்,
நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன் உடன் பயனிபவர்கள் அந்த
உரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல்
கூட வருபவர்கள் அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன்?
அது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்
களுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை
அன்பாக , கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால்
மகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமேஇல்லையே என
சொன்னேன்.
           
ஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிற
போதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோj ஒன்று கிளம்பி
கண்களில் நீராய் முட்டுகிறது.காலங்கடந்து நான் உணர்கிறேன்.
           
தோழர்களே! தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை,
பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள்.
என் மனைவிக்கு என்னை உணர்தாமலே, என் உள்ளதை
திறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழவைகாமலேயே அனுப்பி வாய்த்த கொடுமை இனி
வேறெங்கும் நிகழவேண்டாம்.. வேண்டி கேட்கிறேன்
உங்களுக்காகவே உங்கள் பிள்ளைகளை, உங்கள் பிரச்சனைகளை,
உங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி
நாம் வெளியே சுற்றுகிறபோதேல்லாம், காவல் தெய்வமாய்
குடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம்
என்பதன் அடையாளமாய், அங்கிகரமாய் நாலு வார்த்தைகள்
தயவு செய்து பேசுங்கள்!
           
நான் சந்தித்து கேட்டவர்களில் 95 விழுக்காட்டினர் என்னைப்
போலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள். இது மாறட்டும்...
என் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல்
தரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம்
சிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன்.

சில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும். என்
வேதனை, நான்படும் துயரம் வேறெவர்க்கும் எதிர்காலத்தில்
வேண்டாம் அவளோடு வாழ்ந்த நாட்களின் இனிமையான
தருணங்களின் நினைவுகளே துணையாக அந்த நினைவுகளே
சுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.............

இதனை இப்போது சொல்லும் நான் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள்
கூட  வாய்விட்டு வார்த்தைகளில் ஒருமுறை கூட சொன்னதில்லை
என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று!

திருச்சி சிவா
===========================================================
இணையத்தில் படித்தது. உருக்கமாக இருந்ததால், உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்.

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28 comments:

வேப்பிலை said...

ok

kmr.krishnan said...

ஏற்கனவே தினமலரில் வாசித்தேன்.

பலவற்றையும் ஆலோசிக்க வேண்டியுள்ளது.நான் பொது வாழ்வில் மனைவி குழந்தைகளையும் ஈடுபட வைத்தேன். அவர்களும் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். எங்கு சென்றாலும் குழந்தைகளுடனும் மனைவியுடனும் செல்வேன். இதனால் கிடைத்த பெயர் 'பெண்டாட்டி தாசன்','மனைவியே மந்திரி', 'மனைவியின் கைப்பாவை'

உணர்வா, அறிவா என்னும் போது திராவிட இயக்கத்தவரும்,பொதுவுடமை வாதிகளும், அறிவையே முன்னிலைப்படுத்துவர்.திரு சிவா ஒரு மறைவுக்குப் பின்னர் அறிவைவிட உணர்வுதான் முக்கியமானது என்பதை புரிந்து கொண்டிருகிறார்.

மகான் வேதாத்ரி மகரிஷியின் இயக்கத்தில் 'மனைவி வேட்டல்'(இந்தப் பெயர் சரிதானா என்று ஐய‌ம் உள்ளது)என்ற‌ ஒரு நிகழ்ச்சி உண்டு. அன்று கணவன்மார்கள் மனைவியின் முன் நின்று அவர்களிடம்
நன்றி தெரிவிப்பது போல அமைத்திருபார்கள்.

எந்த சமூகம் உய‌ர்வானது என்னும் போது பெண்களை உயர்வாக நினைக்கும் ச‌மூகமே உயர்வானது.

நல்ல சிந்தனை ஐயா!நன்றி உங்களுக்கும் திரு.சிவாவுக்கும்.

துரை செல்வராஜூ said...

ஐயா.. இந்த கடிதம் Facebook - ல் சென்ற மாதம் எனக்குக் கிடைத்தது. இந்தக் கடிதம் எழுப்பிய அதிர்வுகளில் இருந்து சில நாட்கள் வரை என்னால் மீள இயலவில்லை.

bg said...

super.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..உண்மையில் உருக்கமான சோக வெளிப்பாடு .....தம்பதியரில் .நம்மில் ஆண்கள் பெரும்பாலோனோர் ..தேவை இல்லாத ஒன்றுக்கு சொல்லும் வார்த்தை அவளுக்கு பிடிக்காது .. இந்த வார்த்தை சொல்லும்போது அருகில் உடமை பட்டவர் இருந்தால் அவர்கள் முகத்தில் பொங்கும் ஒரு மகிழ்ச்சி ஒரு கீற்று புன்னைகை..அதற்கு இணை அதுதான் ////..உங்கள் துணை .உங்கள் சுக துக்கங்களின் பங்குதாரர். நீங்கள் அவர்களை மதித்து நடங்கள் ...(இரு பாலருமே.)உங்கள் வாழ்வு சொர்கமாக இருக்கும். ..

venkatesh r said...

வணக்கம் ஐயா!

வலைத்தமிழில் நானும் படித்தேன். மீள்பதிவாக வகுப்பறையில் படிப்பது மகிழ்ச்சி.

"தாயோடு அறுசுவை போம்.
தந்தையோடு கல்வி போம்.
சேயோடு தான் பெற்ற செல்வம் போம்.
உறவொடு வாழ்வு உற்றார் உடன் போம்.
உடன் பிறப்பால் தோள்வலி போம்.
மனைவியோடு எவையும் போம்."
‍‍‍‍‍‍‍‍‍‍‍
வாழ்க்கைத் துணை இல்லேன்னா வாழ்க்கையே இல்லைன்னு நம்ப ஔவைப் பாட்டியே சொல்லிட்டாங்க.இளமையில் துணை இல்லாமல் இருந்துவிடலாம். முதுமையில்தான் துணையின் பிரிவைத் தாங்க இயலாது.

அதனால்,

விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.

நன்றி.

sundari said...

Good morning sir,

ravichandran said...

Respected Sir,

Hope all is well at your side. This article touched more.

It teached us that share our feelings with friends and relatives honestly.

Great salute for you to share on this great day.

With kind regards,
Ravichandran M.

Sakthivel K said...

வணக்கம் சார்......
விஐபி.யின் கடிதம்
மனம் உருகியது...
மனைவியுடன் பேசுங்கள்!!!
ஏழ்மை& மிடில்கிளாஸ் குடும்பத்தில்
இந்தபிரச்சனை இல்லை...

கோடீஸ்வர குடும்பம்
விஐபி.குடும்பத்தில்தான் மனைவியுடன் பேசமுடியாதநிலை
ஏற்படுகிறது!
வீட்டில் வேலைக்காரர்கள் பலபேர்
இருப்பார்கள்.
வீடு எந்நாளூம் கல்யாணவீடு
போலவேயிருக்கும்.
பெரியமனிதர்கள்,விஐபிகள் வருவார்கள். அவர்களூடன்
பேசுவார்.மனைவியிடம் பேசமுடியாது.
வேலைக்காறர்களூடன் பேசுவார்
மனைவியுடன் முடியாது !!
மனைவி செய்யும்வேலையை
வேலைக்காரிகள் செய்கிறார்கள்!!!
இதுவும் ஒருகாரணம்.
பலநாள்கள் வீட்டில் இருப்பதில்லை.
செல்போன்மனி ஒலித்துக்கொண்டே
இருக்கிறது.அதில்பேசியே நேரம்
போவது தெரியவில்லை.
நம் மனைவி,நம்மக்கள் ஒன்றாகவே
இருப்பதால் அவர்கள்அருமை
தெரிவதில்லை !!!

Raja Murugan said...

அய்யா, வணக்கம்,அருமையான கடிதம், ஆனால் காலம் கடந்த மன்னிப்புகள், வேண்டுகோள்கள்,பிறருக்கு உபதேசங்கள் இவைகள் எனக்கு பிடிப்பதில்லை. இவைகளை பற்றியே இந்துமதத்தில்,இந்துக்களின் வாழ்க்கை முறையில் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்றன. "பிறருக்கு துன்பம்,இன்னல் விளைவிக்காது வாழும் வாழ்க்கையே சிறந்தது".தன்னை சார்ந்த மனைவி,மக்கள்,பெற்றோர்,உற்றார் ஆகியோர்களை மனம் நோக செய்து நாம் அடையும் வெற்றி வெற்றி அல்ல.

ravanan s said...

இது நான் படிக்கும் இரண்டாவது உருக்கமான கடிதம் முதலாவது முகுந்த் வரதராஜன் அவர்களின் மனைவி எழுதியது.

சே. குமார் said...

முகநூலில் படித்தேன் ஐயா...
உணர்ச்சிப் பூர்வமான பகிர்வு...

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
ok////

Double Okay!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
ஏற்கனவே தினமலரில் வாசித்தேன்.
பலவற்றையும் ஆலோசிக்க வேண்டியுள்ளது.நான் பொது வாழ்வில் மனைவி குழந்தைகளையும் ஈடுபட வைத்தேன். அவர்களும் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். எங்கு சென்றாலும் குழந்தைகளுடனும் மனைவியுடனும் செல்வேன். இதனால் கிடைத்த பெயர் 'பெண்டாட்டி தாசன்','மனைவியே மந்திரி', 'மனைவியின் கைப்பாவை'
உணர்வா, அறிவா என்னும் போது திராவிட இயக்கத்தவரும்,பொதுவுடமை வாதிகளும், அறிவையே முன்னிலைப்படுத்துவர்.திரு சிவா ஒரு மறைவுக்குப் பின்னர் அறிவைவிட உணர்வுதான் முக்கியமானது என்பதை புரிந்து கொண்டிருகிறார்.
மகான் வேதாத்ரி மகரிஷியின் இயக்கத்தில் 'மனைவி வேட்டல்'(இந்தப் பெயர் சரிதானா என்று ஐய‌ம் உள்ளது)என்ற‌ ஒரு நிகழ்ச்சி உண்டு. அன்று கணவன்மார்கள் மனைவியின் முன் நின்று அவர்களிடம்
நன்றி தெரிவிப்பது போல அமைத்திருபார்கள்.
எந்த சமூகம் உய‌ர்வானது என்னும் போது பெண்களை உயர்வாக நினைக்கும் ச‌மூகமே உயர்வானது.
நல்ல சிந்தனை ஐயா!நன்றி உங்களுக்கும் திரு.சிவாவுக்கும்./////

உங்களுடைய கருத்துப் பகிர்விற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger துரை செல்வராஜூ said...
ஐயா.. இந்த கடிதம் Facebook - ல் சென்ற மாதம் எனக்குக் கிடைத்தது. இந்தக் கடிதம் எழுப்பிய அதிர்வுகளில் இருந்து சில நாட்கள் வரை என்னால் மீள இயலவில்லை./////

அது உங்களுடைய இரக்க குணத்தைக் காட்டுகிறது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger bg said...
super./////

நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..உண்மையில் உருக்கமான சோக வெளிப்பாடு .....தம்பதியரில் .நம்மில் ஆண்கள் பெரும்பாலோனோர் ..தேவை இல்லாத ஒன்றுக்கு சொல்லும் வார்த்தை அவளுக்கு பிடிக்காது .. இந்த வார்த்தை சொல்லும்போது அருகில் உடமை பட்டவர் இருந்தால் அவர்கள் முகத்தில் பொங்கும் ஒரு மகிழ்ச்சி ஒரு கீற்று புன்னைகை..அதற்கு இணை அதுதான் ..உங்கள் துணை .உங்கள் சுக துக்கங்களின் பங்குதாரர். நீங்கள் அவர்களை மதித்து நடங்கள் ...(இரு பாலருமே.)உங்கள் வாழ்வு சொர்கமாக இருக்கும். ../////

உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!

Subbiah Veerappan said...

Blogger venkatesh r said...
வணக்கம் ஐயா!
வலைத்தமிழில் நானும் படித்தேன். மீள்பதிவாக வகுப்பறையில் படிப்பது மகிழ்ச்சி.
"தாயோடு அறுசுவை போம்.
தந்தையோடு கல்வி போம்.
சேயோடு தான் பெற்ற செல்வம் போம்.
உறவொடு வாழ்வு உற்றார் உடன் போம்.
உடன் பிறப்பால் தோள்வலி போம்.
மனைவியோடு எவையும் போம்." ‍‍‍‍‍‍‍‍‍‍‍
வாழ்க்கைத் துணை இல்லேன்னா வாழ்க்கையே இல்லைன்னு நம்ப ஔவைப் பாட்டியே சொல்லிட்டாங்க.இளமையில் துணை இல்லாமல் இருந்துவிடலாம். முதுமையில்தான் துணையின் பிரிவைத் தாங்க இயலாது.
அதனால்,
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
நன்றி.///////

உங்களுடைய பின்னூட்டத்திற்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger sundari said...
Good morning sir,/////

உங்களின் காலை வணக்கத்திற்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Hope all is well at your side. This article touched more.
It teached us that share our feelings with friends and relatives honestly.
Great salute for you to share on this great day.
With kind regards,
Ravichandran M.//////

உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்......
விஐபி.யின் கடிதம்
மனம் உருகியது...
மனைவியுடன் பேசுங்கள்!!!
ஏழ்மை& மிடில்கிளாஸ் குடும்பத்தில்
இந்தபிரச்சனை இல்லை...
கோடீஸ்வர குடும்பம்
விஐபி.குடும்பத்தில்தான் மனைவியுடன் பேசமுடியாதநிலை
ஏற்படுகிறது!
வீட்டில் வேலைக்காரர்கள் பலபேர்
இருப்பார்கள்.
வீடு எந்நாளூம் கல்யாணவீடு
போலவேயிருக்கும்.
பெரியமனிதர்கள்,விஐபிகள் வருவார்கள். அவர்களூடன்
பேசுவார்.மனைவியிடம் பேசமுடியாது.
வேலைக்காறர்களூடன் பேசுவார்
மனைவியுடன் முடியாது !!
மனைவி செய்யும்வேலையை
வேலைக்காரிகள் செய்கிறார்கள்!!!
இதுவும் ஒருகாரணம்.
பலநாள்கள் வீட்டில் இருப்பதில்லை.
செல்போன்மனி ஒலித்துக்கொண்டே
இருக்கிறது.அதில்பேசியே நேரம்
போவது தெரியவில்லை.
நம் மனைவி,நம்மக்கள் ஒன்றாகவே
இருப்பதால் அவர்கள்அருமை
தெரிவதில்லை !!!/////

உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger Raja Murugan said...
அய்யா, வணக்கம்,அருமையான கடிதம், ஆனால் காலம் கடந்த மன்னிப்புகள், வேண்டுகோள்கள்,பிறருக்கு உபதேசங்கள் இவைகள் எனக்கு பிடிப்பதில்லை. இவைகளை பற்றியே இந்துமதத்தில்,இந்துக்களின் வாழ்க்கை முறையில் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்றன. "பிறருக்கு துன்பம்,இன்னல் விளைவிக்காது வாழும் வாழ்க்கையே சிறந்தது".தன்னை சார்ந்த மனைவி,மக்கள்,பெற்றோர்,உற்றார் ஆகியோர்களை மனம் நோக செய்து நாம் அடையும் வெற்றி வெற்றி அல்ல.////

உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ராஜா முருகன்!

Subbiah Veerappan said...

/////Blogger ravanan s said...
இது நான் படிக்கும் இரண்டாவது உருக்கமான கடிதம் முதலாவது முகுந்த் வரதராஜன் அவர்களின் மனைவி எழுதியது./////

அப்படியா! நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger சே. குமார் said...
முகநூலில் படித்தேன் ஐயா...
உணர்ச்சிப் பூர்வமான பகிர்வு.../////

நம் வகுப்பறைக் கண்மணிகள் படிக்கட்டும் என்றுதான் இங்கே பதிவிட்டேன். நன்றி!

Kirupanandan A said...

சிலர் விஷயத்தில் ஏதுவுமே அருகில் அல்லது உடன் இருக்கும் வரை அதன் அருமை தெரிவதில்லை. காலம் கடந்த ஞானம் எதற்கும் உதவாது. என்னைக் பொறுத்தவரை முதலில் குடும்பம், பிறகுதான் மற்றவை.

Kannan.S said...

பகிர்வுக்கு நன்றி ஐயா..

JAYARAMAN panchanathan said...

today is my wifes second death aniversory.no doubt she left us on this day in 2012 we all cherish her memoriesand continu to fulfill her dreams and desires. when she died she was just 44.

j panchanathan

நடராஜன் said...

மனமே என்னுள் அடங்கி விடு
மெய்யாக தோன்றும் வாழ்வனைத்தும்
பொய்யாக தோன்றாத போது