மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

22.9.14

Astrology: Popcorn Post: கோடி நன்மை தரும் குரு மகா திசை!


Astrology: Popcorn Post: கோடி நன்மை தரும் குரு மகா திசை!

Popcorn Post 54

22.9.2014

குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். கிரகங்களில்
முதல்நிலை சுபக்கிரகம் குரு. அதனால் ஜாதகத்தில் அவருடைய
பார்வை பலவிதத்திலும் நன்மைகளைத் தரும். அதை உயர்த்திச் சொல்வதற்காகக் கோடி நன்மைகள் என்று சொல்வார்கள்.
அவருடைய பார்வைக்கே அத்தனை வலிமை என்றால்,
அவருடைய மகாதிசையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

உடனே உங்களில் சிலர், என்னடா, நமக்கு சில நன்மைகள்தானே
கிடைத்தது - கோடிகள் எல்லாம் கிடைக்கவில்லையே என்று
நினைக்க வேண்டாம். கேட்க வேண்டாம். அவரவருடைய
ஜாதகத்தைப் பொறுத்து அந்த நன்மைகளின் அளவு மாறுபடும்.
ஜாதகத்தில் குரு பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருக்கும் நிலைமையில் அத்துடன் அவர் கேந்திர திரிகோணங்களில் இருக்கும் நிலைமையில், அவருடைய தசா புத்தி நடக்கும் காலங்கள் அந்த
நன்மைகள் உண்டாகும்.  அனுபவித்தவர்களுக்குத்தான் அது தெரியும்.

இன்று குரு பகவானின் மகாதிசையின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்!

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்
தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம்
என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான்
நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு
ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம்
ஒன்றும் ஆகாது.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்
களுக்கு குரு மகாதிசை அநேகமாக வராது. சுமார் 100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்
களுக்கும் வராது.

அவர்கள் வருத்தப்பட வேண்டாம். ஒவ்வொரு மகாதிசையிலும்
குரு புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள்.
மொத்தம் 5,760  நாட்கள் (16 ஆண்டுகள்) வரும். அப்போது குரு
பகவான் உரிய பலன்களைத் தருவார். மொத்தக் கணக்கு
சரியாக இருக்கும்.

சரி குரு மகா திசையில் எல்லா ஆண்டுகளுமே சுகமாக இருக்குமா
என்றால், அதில் வரும்  குருவின் சுயபுத்தி, சனி புத்தி, புதன் புத்தி,
சுக்கிர புத்தி, சந்திர புத்தி ஆகியவைகள் (சுமார் 11 ஆண்டுகள்)
நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 5 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து
நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தாலோ அல்லது குருபகவானுக்கு 6, 8 12ல் அமர்ந்திருந்தாலோ, அதவது அஷ்ட சஷ்டம நிலைமை போன்ற
அமைப்பில் இருந்தாலோ முழுமையான பலன்கள் இருக்காது.

குரு மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்!

உதாரணத்திற்கு குரு மகாதிசையின் துவக்க புத்தியான அதன்
சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

தானென்ற வியாழதிசை ஒருபத்தாறு
    தன்மையுடன் அதன் புத்தி வருஷம் ரெண்டு
நானென்ற நாளதுவும் நாற்பத்தெட்டு
    நன்றாக அதன் பலனை நவிலக் கேளு
கோனென்ற ராசாவும் குருவருளுமுண்டு
    குறைவில்லா திரவியங்கள் வெகு லாபமுண்டாம்
ஆனென்ற பெண்கொடியாள் மனமகிழ்ச்சியுண்டாம்
    மங்களமும் சோபனமும் வளருங்கலியாணம்

லாபமுண்டாம் என்றால் எல்லா வகையிலும் பயன் உண்டாகும்
என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

உடன் தெய்வ வழிபாட்டையும் செய்தீர்கள் என்றால் கிடைக்கும்
பலன்கள் நிலைக்கும் தன்மை உடையதாக ஆகிவிடும்!

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதையும்
மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=============================================================

23 comments:

sundari said...

Good morning sir,

Thanks for ur nice posting

வேப்பிலை said...

பாப்கார்ன் பதிவுகள்
எதிர்காலத்தை பற்றியும்

அலசல் பகுதிகள்
கடந்த காலத்தை பற்றியும் சொல்கிறது

நிகழ்காலத்தை பற்றி சொல்ல
ஏதாவது பதிவிடுங்களேன்

Sakthivel K said...

வணக்கம் சார்...
குருதிசை!!!
நான் கன்னிலக்னம்..
அப்பனே கன்னியிலேயுதித்தபேர்க்கு
குட்றம்வந்துசேருமடா குருவினாலே!!!

3ல்.குரு விசாகம்4ல் 1ம் பாகையில்
சூரியனுடன் சேர்ந்திருந்தான் !!!
16 வருடமும்...
வழியில்போகும் ஆசாரியைகூப்பிட்டு
எனக்கொரு ஆப்புவை என்றூசொன்னதப்போலவே இருந்தது
தற்போது சனிதிசை
இது என்னசெய்யும் என தெரியவில்லை???
பலமுரை கேட்டும் பதில் இல்லை !!
உன்னைசொல்லி குட்றமில்லை!
என்னைசொல்லி குட்றமில்லை!
காலம்செய்த கோலமடி!
கடவுள்செய்த குற்றமடி!!!

kmr.krishnan said...

ஆம் ஐயா!பூசம் நட்சத்திரக்காரனான எனக்கு குரு மகா தசா வரவே வராது.
ராகு தசாவே 7வது தசா என்னும்போது அதைத் தாண்டுவோமா என்பதே சந்தேகம் என்னும் போது குரு மகாதசா வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?
அப்படியே வந்தாலும் 100 வயதில் எதை அனுபவிக்க முடியும்?

7ல் கேந்திரம் ஏறினாலும் மகரத்தில் நீச்சம்.வகரம் வேறு.நீசத்திலும் வர்கோத்தமம்.ஒரு விதிப்படி வகரம்,வர்கோதமம் என்றால் நீச பங்கமாம். நீச பங்கமான குரு லக்கினம்,ராசியைப் பார்த்து பல நன்மை செய்தார்.

நன்றிஐயா!

Uma said...

nice lesson

eswari sekar said...

vanakam sir my son rku kumba lakanam.. fourth place .. ill guru ...B.E PADDIKKUM POUTHU... KASTAPATTAN .EPPOTHU PARAVAILLAI....GURU.DASAI PUTHUAN PUTUILL VALAI KIDATHTHU......

Regunathan Srinivasan said...

அய்யா,

நன்றாக இருந்தது அய்யா இன்றைய பாடம்.quiz எப்போது அய்யா ?ஒரு பத்து நாட்கள் தொடர்ந்து தேர்வு கொடுங்கள் அய்யா.

உங்கள் மாணவன் ,
S .ரகுநாதன்

Kirupanandan A said...

சக்திவேல் அவர்களுக்கு இருப்பது போல் எனக்கும் கன்னி லக்கினம். 3ல் குரு. ஆனால் குரு தசையில் ஓஹோவென்றுதான் இருந்தேன். சுய புத்தி சாதாரணமாகதான் இருந்தது. சனி புத்தியில் ஆரம்பித்து சுக்கிர புத்தி முடிய ஒரு பெரிய நிறுவனத்தில் (multinational company) கணக்கர் வேலையில் இருந்தேன். என் பதவிக்கு ஒரு தனி மவுசே இருந்தது. ராஜ வாழ்க்கை என்று சொல்லலாம். (குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா
குறையொன்றும் இல்லை கோவிந்தா) திருமணம் சந்திர புத்தியில் நடந்தது. சூரிய புத்தி தொடங்கி ராகு புத்தி வரையில் இன்னொரு நிறுவனத்தில் தலைமைக் கணக்கராக இருந்தேன். ஒரே குறை. பிறந்தை ஊரை விட்டு வெகு தொலைவில் உள்ள ஊரில்தான் பணி அமைந்தது. குரு தசை முடியும் வரை இதுதான் நிலைமை. சனி தசை ஆரம்பித்து ஓரிரு மாதங்களிலேயே பிறந்த ஊருக்கு அருகில் பணி அமைந்தது. அவ்வப்போது நன்மைகள் செய்த சனி பகவான் என்னை நன்றாக ஆட்டிப்படைக்கவும் தவறவில்லை. I had to dance to his tune. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா (நாங்களும் ஒரு பாட்டை சொல்லி முடிப்போம்ல)

sundari said...

Sakthivel K said...

வணக்கம் சார்...
குருதிசை!!!
நான் கன்னிலக்னம்..
அப்பனே கன்னியிலேயுதித்தபேர்க்கு
குட்றம்வந்துசேருமடா குருவினாலே!!!

3ல்.குரு விசாகம்4ல் 1ம் பாகையில்
சூரியனுடன் சேர்ந்திருந்தான் !!!
16 வருடமும்...
வழியில்போகும் ஆசாரியைகூப்பிட்டு
எனக்கொரு ஆப்புவை என்றூசொன்னதப்போலவே இருந்தது
தற்போது சனிதிசை
இது என்னசெய்யும் என தெரியவில்லை???
பலமுரை கேட்டும் பதில் இல்லை !!
உன்னைசொல்லி குட்றமில்லை!
என்னைசொல்லி குட்றமில்லை!
காலம்செய்த கோலமடி!
கடவுள்செய்த குற்றமடி!!!//

அன்புள்ள சக்திவேல் கவலை படவேண்டாம் ரொமபசிரிப்பு வந்தது அதேநேரம் ரொம்பகஷ்டமாயிருந்தது என்னதா குரு நல்ல இடத்திலிருந்தாலுமஅவர் யாருக்கும் தொந்தரவு தரமாட்டார் என்று சொன்னாலும் அவரு கன்னி மிதுன லக்கனதிற்கு நல்லாதை செய்யமாட்டார் சனி எங்கிருந்தாலும் லகனதிபதி புதனுக்கு நண்பர் என்ற்முறையில் நல்லாது நடக்கும் அடுத்துவரும் திசையும் நல்லாயிருக்கும் சுக்கிரதிசையும் நல்லாயிருக்கும் கேது நல்லாயிருக்காது பாடம் கற்பிக்கும்.

Subbiah Veerappan said...

/////Blogger sundari said...
Good morning sir,
Thanks for ur nice posting/////

உங்களின் காலை வணக்கத்திற்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
பாப்கார்ன் பதிவுகள்
எதிர்காலத்தை பற்றியும்
அலசல் பகுதிகள்
கடந்த காலத்தை பற்றியும் சொல்கிறது
நிகழ்காலத்தை பற்றி சொல்ல
ஏதாவது பதிவிடுங்களேன்/////

செய்தித்தாள்களைப் படியுங்கள் வேப்பிலையாரே! நிகழ்காலத்தை அவர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள்:-))))

Subbiah Veerappan said...

/////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்...
குருதிசை!!!
நான் கன்னிலக்னம்..
அப்பனே கன்னியிலேயுதித்தபேர்க்கு
குட்றம்வந்துசேருமடா குருவினாலே!!!
3ல்.குரு விசாகம்4ல் 1ம் பாகையில்
சூரியனுடன் சேர்ந்திருந்தான் !!!
16 வருடமும்...
வழியில்போகும் ஆசாரியைகூப்பிட்டு
எனக்கொரு ஆப்புவை என்றூசொன்னதப்போலவே இருந்தது
தற்போது சனிதிசை
இது என்னசெய்யும் என தெரியவில்லை???
பலமுரை கேட்டும் பதில் இல்லை !!
உன்னைசொல்லி குட்றமில்லை!
என்னைசொல்லி குட்றமில்லை!
காலம்செய்த கோலமடி!
கடவுள்செய்த குற்றமடி!!!/////

என்ன திசை வந்து என்ன செய்தால் என்ன?
பாரதியின் பாடலைப் படியுங்கள்:
”அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!”

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
ஆம் ஐயா!பூசம் நட்சத்திரக்காரனான எனக்கு குரு மகா தசா வரவே வராது.
ராகு தசாவே 7வது தசா என்னும்போது அதைத் தாண்டுவோமா என்பதே சந்தேகம் என்னும் போது குரு மகாதசா வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?
அப்படியே வந்தாலும் 100 வயதில் எதை அனுபவிக்க முடியும்?
7ல் கேந்திரம் ஏறினாலும் மகரத்தில் நீச்சம்.வகரம் வேறு.நீசத்திலும் வர்கோத்தமம்.ஒரு விதிப்படி வகரம்,வர்கோதமம் என்றால் நீச பங்கமாம். நீச பங்கமான குரு லக்கினம்,ராசியைப் பார்த்து பல நன்மை செய்தார்.
நன்றிஐயா!/////

உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger Uma said...
nice lesson/////

வாங்க உமா அக்கா! அத்தி பூத்த மாத்ரி வந்திருக்கிறீர்கள்!
உங்கள் வரவு நல்வரவாகட்டும்! நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger eswari sekar said...
vanakam sir my son rku kumba lakanam.. fourth place .. ill guru ...B.E PADDIKKUM POUTHU... KASTAPATTAN .EPPOTHU PARAVAILLAI....GURU.DASAI PUTHUAN PUTUILL VALAI KIDATHTHU....../////

நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

////Blogger Regunathan Srinivasan said...
அய்யா,
நன்றாக இருந்தது அய்யா இன்றைய பாடம்.quiz எப்போது அய்யா ?ஒரு பத்து நாட்கள் தொடர்ந்து தேர்வு கொடுங்கள் அய்யா.
உங்கள் மாணவன் ,
S .ரகுநாதன்/////

பொறுத்திருங்கள் நண்பரே! செய்யலாம்!

Subbiah Veerappan said...

/////Blogger Kirupanandan A said...
சக்திவேல் அவர்களுக்கு இருப்பது போல் எனக்கும் கன்னி லக்கினம். 3ல் குரு. ஆனால் குரு தசையில் ஓஹோவென்றுதான் இருந்தேன். சுய புத்தி சாதாரணமாகதான் இருந்தது. சனி புத்தியில் ஆரம்பித்து சுக்கிர புத்தி முடிய ஒரு பெரிய நிறுவனத்தில் (multinational company) கணக்கர் வேலையில் இருந்தேன். என் பதவிக்கு ஒரு தனி மவுசே இருந்தது. ராஜ வாழ்க்கை என்று சொல்லலாம். (குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா
குறையொன்றும் இல்லை கோவிந்தா) திருமணம் சந்திர புத்தியில் நடந்தது. சூரிய புத்தி தொடங்கி ராகு புத்தி வரையில் இன்னொரு நிறுவனத்தில் தலைமைக் கணக்கராக இருந்தேன். ஒரே குறை. பிறந்த ஊரை விட்டு வெகு தொலைவில் உள்ள ஊரில்தான் பணி அமைந்தது. குரு தசை முடியும் வரை இதுதான் நிலைமை. சனி தசை ஆரம்பித்து ஓரிரு மாதங்களிலேயே பிறந்த ஊருக்கு அருகில் பணி அமைந்தது. அவ்வப்போது நன்மைகள் செய்த சனி பகவான் என்னை நன்றாக ஆட்டிப்படைக்கவும் தவறவில்லை. I had to dance to his tune. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா (நாங்களும் ஒரு பாட்டை சொல்லி முடிப்போம்ல)/////

ஆஹா பாட்டைச் சொல்லியே முடியுங்கள் ஆனந்த்! எனக்கும் பாடல்களை மிகவும் பிடிக்கும்!
“ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழைவரும்
தேடிவரும் காலம் வந்தால் செல்வமெல்லாம் ஓடிவரும்!”

Subbiah Veerappan said...

/////Blogger sundari said...
Sakthivel K said...
வணக்கம் சார்...
குருதிசை!!!
நான் கன்னிலக்னம்..
அப்பனே கன்னியிலேயுதித்தபேர்க்கு
குட்றம்வந்துசேருமடா குருவினாலே!!!
3ல்.குரு விசாகம்4ல் 1ம் பாகையில்
சூரியனுடன் சேர்ந்திருந்தான் !!!
16 வருடமும்...
வழியில்போகும் ஆசாரியைகூப்பிட்டு
எனக்கொரு ஆப்புவை என்றூசொன்னதப்போலவே இருந்தது
தற்போது சனிதிசை
இது என்னசெய்யும் என தெரியவில்லை???
பலமுரை கேட்டும் பதில் இல்லை !!
உன்னைசொல்லி குட்றமில்லை!
என்னைசொல்லி குட்றமில்லை!
காலம்செய்த கோலமடி!
கடவுள்செய்த குற்றமடி!!!//
அன்புள்ள சக்திவேல் கவலை படவேண்டாம் ரொமபசிரிப்பு வந்தது அதேநேரம் ரொம்பகஷ்டமாயிருந்தது என்னதா குரு நல்ல இடத்திலிருந்தாலுமஅவர் யாருக்கும் தொந்தரவு தரமாட்டார் என்று சொன்னாலும் அவரு கன்னி மிதுன லக்கனதிற்கு நல்லாதை செய்யமாட்டார் சனி எங்கிருந்தாலும் லகனதிபதி புதனுக்கு நண்பர் என்ற்முறையில் நல்லாது நடக்கும் அடுத்துவரும் திசையும் நல்லாயிருக்கும் சுக்கிரதிசையும் நல்லாயிருக்கும் கேது நல்லாயிருக்காது பாடம் கற்பிக்கும்.//////

வாழ்க உங்கள் தொண்டுள்ளம் சகோதரி!

Kirupanandan A said...

குரு இன்ன லக்கினத்தாருக்கு மட்டும்தான் நன்மை செய்வார். பிறருக்கு தீமை செய்வார் என்று பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. பிறகு எதற்கு ஷட் பலம், இஷ்ட/கஷ்ட பலம், அஷ்டக வர்கம், சுய பரல் இவையெல்லாம் இருக்கின்றன. வாத்தியார் வலையேறும் பாடங்களை நன்றாக கருத்துன்றி படித்தாலே பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். மிதுன/கன்னி லக்கினத்தாருக்கு இரு கேந்திரங்களுக்கு உரிய குரு பகவான் ஒரு கோணாதிபதியின் பார்வை பெற்றாலே நன்மைதான் செய்வார்.

Krishna Kumar said...

Respected sir,
I ve a doubt,
"ஜோதிடத்தில் "காரகோ பாவனாசாய" என்னும் கருத்தின்படி,குரு புத்திர காரகன்,புத்திரத்தைக் குறிக்கும் 5-ம் வீட்டில் குரு இருந்தால் புத்திர நாசம் உண்டாகும்"-- is this true sir?

Subbiah Veerappan said...

/////Blogger Kirupanandan A said...
குரு இன்ன லக்கினத்தாருக்கு மட்டும்தான் நன்மை செய்வார். பிறருக்கு தீமை செய்வார் என்று பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. பிறகு எதற்கு ஷட் பலம், இஷ்ட/கஷ்ட பலம், அஷ்டக வர்கம், சுய பரல் இவையெல்லாம் இருக்கின்றன. வாத்தியார் வலையேறும் பாடங்களை நன்றாக கருத்துன்றி படித்தாலே பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். மிதுன/கன்னி லக்கினத்தாருக்கு இரு கேந்திரங்களுக்கு உரிய குரு பகவான் ஒரு கோணாதிபதியின் பார்வை பெற்றாலே நன்மைதான் செய்வார்.//////

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி! நன்றி ஆனந்த்!

Subbiah Veerappan said...

////Blogger Krishna Kumar said...
Respected sir,
I ve a doubt,
"ஜோதிடத்தில் "காரகோ பாவனாசாய" என்னும் கருத்தின்படி,குரு புத்திர காரகன்,புத்திரத்தைக் குறிக்கும் 5-ம் வீட்டில் குரு இருந்தால் புத்திர நாசம் உண்டாகும்"-- is this true sir?/////

அது பொது விதி. விதிவிலக்குகள் சில உள்ளன. அவற்ரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்!

lrk said...

தனுசு லக்னம். 12 ல் குரு . அம்சத்தில் 8 ல். குரு வர்கோத்தம்ம் . குரு பலன் எப்படி இருக்கும் ஐயா
நன்றி