கவிதை: அழகு எப்போது பேரழகாகும்?
ஆதிகாலப் பாடல்!
இதில் கவியரசரின் பெருமை சொல்லும் ஆதிகாலப் பாடல் ஒன்றை,
அதுவும் ஆதிகாலப் பாடகர் பாடியதாக ஒன்றைப் பதிய வேண்டும்
என்று அடியவன் நினைத்தபோது, மனதில் சட்டென்று வந்து
நின்ற பாடல்:
"செந்தமிழ் தேன்மொழியாள் – நிலாவெனச்
சிரிக்கும் மலர்க் கொடியாள்"
ஆமாம், கதை, வசனம், பாடல்கள் மற்றும் தயாரிப்பாளர் என்று
முழுமையாக முன்நின்று கவியரசர் கொடுத்த படமான
'மாலையிட்ட மங்கை' என்ற படத்தில் வரும் பாடல்தான்
அந்தப் பாடல்.
அந்தப் படத்தில் இன்னும் ஒரு குறிப்பபிடத்தக்க விஷயம்,
நகைச்சுவை நடிகை மனோரமா அவர்கள் திரையுலகிற்கு
அறிமுகமானதும் அந்தப் படத்தின் மூலம்தான்.
பள்ளத்தூரைச் சேர்ந்தவரான நடிகை மனோரமா அவர்கள்
அந்தக் காலகட்டத்தில் அங்கே நாடகங்களில் நடித்துக்
கொண்டிருந்தார். அவரது திறமையை உணர்ந்த கண்ணதாசன்
அவர்கள், 'மனோரமா' அவர்களைப் பிடித்து இழுத்துவந்து தன்
படத்தில் வாய்ப்புக்கொடுத்து நடிக்க வைத்தார். அதுவும்
நகைச்சுவைப் பாத்திரத்தில்!
படத்தில் நாயகனாக நடித்தவரைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை!
ஆதிகாலத்தில் தமிழில் பின்னணிக் குரல் இன்றிச் சுயமாகவே பாடி நடித்துவந்த P.U.சின்னப்பா M.K.தியாகராஜ பாகவதர் வரிசையில்
T.R. மகாலிங்கம் அவர்களும் பிரபலமானவர்.
அப்படியொரு அசத்தலான குரல் அவருக்கு. அவர் மதுரைக்கு
அருகில் வைகை நதியைத் தொட்டாற்போல் இருக்கும்
சோழவந்தான் என்ற ஊரைச் சேர்ந்தவர்
மாலையிட்ட மங்கை கவியரசரின் சொந்தப் படமென்ற
காரணத்தாலும், கதை, வசனமும் அவரே எழுதினார் என்பதாலும், பாடல்களை சிறப்பாக எழுதி, உரிய இடத்தில் அவரே சேர்க்க
வைத்திருந்தார்.
படம் வெளிவந்த ஆண்டு 1958
படத்தில் வந்த அத்தனை பாட்டுக்களுமே பிரபலமாகித்
தமிழகமெங்கும் படம் வந்த காலத்தில் ஒலித்து, மக்களைப்
பரவசப்படுத்தின!
அவைகளில் மிகவும் சிறந்த பாடலான
"செந்தமிழ் தேன் மொழியாள் - நிலாவெனச்சிரிக்கும் மலர்க்
கொடியாள்" என்ற பாடலை உங்களுக்காக இன்று
பதிவிட்டுள்ளேன். படித்து மகிழுங்கள்!
--------------------------------------------
"விருத்தம்:
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்திவழி போனாளே
நின்றதுபோல் நின்றாள்; நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி; நிலைக்குமோ நெஞ்சம்?
மணம் பெறுமோ வாழ்வே.........
பாட்டு
செந்தமிழ் தேன்மொழியாள் - நிலாவெனச்
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலைகுனிவாள்
(செந்தமிழ்)
காற்றினில் பிறந்தவளோ - புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் பிறந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ - அவள்.....
(செந்தமிழ்)
மேகத்தைக் கூந்தலில் முடித்தவளோ - விண்
மீன்களை மலராய் அணிந்தவளோ
மோகத்திலே இந்த உலகம் யாவையும்
மூழ்கிடச் செய்யும் மோகினியோ - அவள்....
(செந்தமிழ்)
கண்களில் நீலம் விளைத்தவளோ - அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழ கெல்லாம் படைததவளோ - அவள்...
(செந்தமிழ்)"
படம்: மாலையிட்ட மங்கை - வருடம் 1958
பாடல் வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
பாடி நடித்தவர்: T.R மகாலிங்கம் (நாயகி–மைனாவதி)
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் - பி.ராமமூர்த்தி
இயக்கம்: G.R.நாதன்
பாடல் எளிமையாக, பாமரனுக்கும் புரியும் வண்ணம் எழுதப் பெற்றுள்ளது. ஆகவே இதற்கு விளக்கம் எழுதுவது அறிவீனம். எழுதவில்லை.
முத்தாய்ப்பான வரிகள்:
”பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழ கெல்லாம் படைத்தவளோ”
என்று எழுதினார் பாருங்கள், அதுதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரிகளாகும்!
ஒரு பெண்ணே பேராசை கொள்ளும் அழகு ஒருத்திக்கு இருக்கும்போதுதான் அது பேரழகாகும். அதை மனதில் வையுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்!வாத்தியார்
=====================================================
வளர்க நலமுடன்!
இனிய பாடல்களுள் ஒன்று..
ReplyDeleteகாலத்தை வென்றூ நிற்பது அதன் பெருமை!..
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ReplyDeleteதிரு T.R.மகாலிங்கம் என சொன்னாலே இந்த பாடல் வரிகள்தாம் ....!!!எண்ணங்களை பிரதிபலிதமைக்கு நன்றி.
வணக்கம் சார்....
ReplyDeleteஇப்படியொரு பெண்!!!
ஒயிப் ஆவதற்கும்!
வைப் ஆவதற்கும்!
கொடுப்பினை வேண்டும்.
வாங்கிவந்த வரம் வேண்டும்!!!
K.சக்திவேல்
அந்தக் காலத்தில் பாமரனையும் பாட வைத்தவர்கள் பாகவதரும், டி ஆர் மகாலிங்கமும்தான். அதுவும் இப்பாடலைப் பாடாத வண்டியோட்டி கிடையாது.
ReplyDeleteதிருவிளையாடலில் 'இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை...'பாடலும் டி ஆர்
மகாலிங்கத்தின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
நன்றி ஐயா!
ஐயா வணக்கம்!
ReplyDeleteஎன்ன திடீரென்று மங்கையரின் அழகின் பக்கம்?
எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே!
எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா..
இலக்கணம் மாறுதோ?
இலக்கியமானதோ?
இதுவரை நடித்தது அது என்ன வேடம்?
இது என்ன பாடம்????
ஹி!ஹி!ஹி!சும்மா.... ஒரு கலப்பட பாடல். நன்றி!
வணக்கம் குரு
ReplyDeleteகண்ணதாசன் அய்யா பற்றிய பதிவுகளில் நீங்கள் கொடுக்கும் வர்ணனையும் ஒரு பேரழுகுதான்.
நன்றி
செல்வம்
அய்யா,
ReplyDeleteஅருமை ...அருமை...அருமை...பாடலை பற்றி சொல்ல தேவையில்லை ...உங்கள் விளக்கம் மற்றும் இதர தகவல்கள் அருமையோ அருமை ....ஒரு ஐந்து நிமிடங்கள் தமிழ் கடலில் நீந்தி மகிழ்ந்தேன்.நன்றி.
தாழ்மையுடன்
S .ரகுநாதன்
////Blogger துரை செல்வராஜூ said...
ReplyDeleteஇனிய பாடல்களுள் ஒன்று..
காலத்தை வென்று நிற்பது அதன் பெருமை!..////
அத்துடன் அந்தக் காலத்தில் பல தரப்பு மக்களையும் ஈர்த்த பெருமையும் இப்பாடலுக்கு உண்டு!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteok////
இரண்டே எழுதுக்களில் முடித்துக்கொண்டு விட்டீர்களே வேப்பிலை சுவாமி.
நாளையப் பதிவிற்கு நீங்கள் இரண்டு சொற்களைத்தான் போடுவீர்கள். அதை இப்போதே சொல்லி விடுகிறேன்!
////Blogger hamaragana said...
ReplyDeleteஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
திரு T.R.மகாலிங்கம் என சொன்னாலே இந்த பாடல் வரிகள்தாம் ....!!!எண்ணங்களை பிரதிபலிதமைக்கு நன்றி. ////
அவரின் குரலால், இந்தப் பாடல் மென்மேலும் பிரபலம் அடைந்தது!
////Blogger Sakthivel K said...
ReplyDeleteவணக்கம் சார்....
இப்படியொரு பெண்!!!
ஒயிப் ஆவதற்கும்!
வைப் ஆவதற்கும்!
கொடுப்பினை வேண்டும்.
வாங்கிவந்த வரம் வேண்டும்!!!
K.சக்திவேல்/////
ஒயிப்போடு நிறுத்திக் கொண்டிருக்கக்கூடாதா?
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஅந்தக் காலத்தில் பாமரனையும் பாட வைத்தவர்கள் பாகவதரும், டி ஆர் மகாலிங்கமும்தான். அதுவும் இப்பாடலைப் பாடாத வண்டியோட்டி கிடையாது.
திருவிளையாடலில் 'இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை...'பாடலும் டி ஆர்
மகாலிங்கத்தின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
நன்றி ஐயா!/////
உண்மைதான். உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
Blogger venkatesh r said...
ReplyDeleteஐயா வணக்கம்!
என்ன திடீரென்று மங்கையரின் அழகின் பக்கம்?
எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே!
எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா..
இலக்கணம் மாறுதோ?
இலக்கியமானதோ?
இதுவரை நடித்தது அது என்ன வேடம்?
இது என்ன பாடம்????
ஹி!ஹி!ஹி!சும்மா.... ஒரு கலப்பட பாடல். நன்றி!//////
இந்த வாரம் முதல் நாள் சிறுகதை
அடுத்த 2 நாட்கள் கட்டுரை
தொடர்ந்து ஒரு கவிதையையும் பதிவிட்டேன்.
கவிதை என்றால் அழகுதானே! அது யார் பக்கம் இருந்தாலும் அழகு குறையவா போகிறது?
//Blogger Selvam Velusamy said...
ReplyDeleteவணக்கம் குரு
கண்ணதாசன் அய்யா பற்றிய பதிவுகளில் நீங்கள் கொடுக்கும் வர்ணனையும் ஒரு பேரழுகுதான்.
நன்றி
செல்வம்////
அவர் பெயரில் கண்ணன் இருப்பதால் அப்படி அமைந்துவிடுகிறது என்று நினைக்கிறேன்! அத்துடன் அடியவன் கவியரசரின் தீவிர ரசிகன். அவரைப் பற்றி எழுதும்போது உண்டாகும் அதிகப்படியான உற்சாகமும் அதற்கு ஒரு காரணம்!
உங்களுடைய பாராட்டிற்கு நன்றி!
/////Blogger Regunathan Srinivasan said...
ReplyDeleteஅய்யா,
அருமை ...அருமை...அருமை...பாடலை பற்றி சொல்ல தேவையில்லை ...உங்கள் விளக்கம் மற்றும் இதர தகவல்கள் அருமையோ அருமை ....ஒரு ஐந்து நிமிடங்கள் தமிழ் கடலில் நீந்தி மகிழ்ந்தேன்.நன்றி.
தாழ்மையுடன்
S .ரகுநாதன்////
எதற்குத் தாழ்மை? நீங்கள் நீந்தியதைப் பெருமையாகவே சொல்லலாம்! நன்றி!
அருமையான பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
/////Blogger Yarlpavanan Kasirajalingam said...
ReplyDeleteஅருமையான பகிர்வு
தொடருங்கள்////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!