மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

18.9.14

Humour: நகைச்சுவை: சிறந்த வாழ்க்கைக்கு சிரிப்பே துணை!


Humour: நகைச்சுவை: சிறந்த வாழ்க்கைக்கு சிரிப்பே துணை!

ஆமாம். கவலையில்லாத சிறந்த வாழ்க்கைக்கு சிரிப்பே சிறந்த துணை!
===============================================
1
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.

அவருக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிந்துகொள்ள ஆசையா இருந்தது.

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனார். நடுவழியிலே தண்ணிக்குள்ளே
தற்செயலாக விழுந்தது போல விழ, மருமகன் பாய்ந்து காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது..

" மாமியாரின் அன்புப் பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி....... வரை........ காப்பாற்றவே ......இல்ல.

மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' விட்டபோது சொன்னான்.. "போய்த் தொலை..பண்டாரம் ...எனக்கு காரே.... வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா..... வளர்த்து வச்சிருக்க..நீயி.... ?"

மாமியார் இறந்துவிட்டார்.

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் ஃபாரின் கார் நின்றது
" மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோடு!!
--------------------------------------------
2
நட்பும் காதலும்:

முன்னொரு நாள் ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25 வது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடன் கொண்டாடினார்கள்.

அந்த ஊரில் 25 வருட திருமண வாழ்வில் ஒரு நாள் கூட அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் இருந்ததில்லை என்ற புகழுடன் அந்த நகரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள்.

‘அப்படி அவர்கள் ‘மகிழ்வுடன் செல்லும் வாழ்க்கை’ வாழ என்ன ரகசியம் அவர்களுக்கிடையே பொதிந்துள்ளது’ என அறியும் ஆவலுடன் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் வீட்டில் குழுமினர்.

ஒரு பத்திரிக்கை ஆசிரியர்,” சார்.இது ஆச்சர்யமாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கிறது.. நீங்கள் இதனை எப்படி சாதித்தீர்கள்...அதன் ரகசியம் என்ன.” என்று கேட்டார்.

அந்தக் கணவர் தங்களது தேன்நிலவு நாளை நினைத்துவிட்டு,”திருமணம் முடிந்தவுடன், நாங்கள் தேன்நிலவுக்கு சிம்லா சென்றோம். பல இடங்களைப் பார்த்துவிட்டு, இறுதியாக குதிரைச் சவாரி செல்லலாம் என்று தீர்மானித்தோம்.ஆளுக்கொரு குதிரையின் மீதேறி சவாரி கிளம்பினோம். நான் அமர்ந்த குதிரை அருமையானது.அழகாகவும், மெதுவாகவும் ஓடியது. ஆனால், என் மனைவி அமர்திருந்த குதிரை கொஞ்சம் கோளாறான ஒன்று போலிருக்கிறது..அப்படி சென்று கொண்டிருக்கும்போது, மனைவியின் குதிரை திடீரென்று குதித்து என் மனைவியை கீழ விழச் செய்தது.எழுந்த அவள், அந்தக் குதிரையை தட்டிக் கொடுத்து, “இது உனக்கு முதல் தடவை!!!.” என்றாள்.மறுபடியும் அவள் குதிரை மீது ஏறி அமர்ந்தாள்.. மெதுவே சென்ற குதிரை, மனைவியை மறுபடியும் கீழே விழச் செய்தது. அமைதியாக எழுந்த என் மனைவி, “இது உனக்கு இரண்டாவது தடவை!!!” என்று சொல்லி, மறுபடியும் ஏறி அமர்ந்தாள்...அந்த குதிரை மூன்றாவது முறை அவளை கீழே விழச் செய்தபோது, அவள் அமைதியாக கைத்துப்பாக்கியை எடுத்து குதிரையைச் சுட்டுக் கொன்றாள்.நான் உடனே பதற்றமாய் என் மனைவிப் பார்த்து,”அந்த பாவப்பட்ட குதிரையை கொன்றுவிட்டாயே.ஏன் இந்த கொலைவெறி” என்று உரக்கக் கத்தினேன்.

உடனே, அவள் அமைதியாக, “இது உனக்கு முதல் முறை!!! என்றாள்…
அவ்வளோ தான்..................அன்றிலிருந்து நாங்கள் மகிழ்ச்சியாக இன்று வரை வாழ்கிறோம்..” என்றார்.
------------------------------------------------------------
உதிரி நகைச்சுவைகள்:

No : 1

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!

* * * * * * * * * * * * * * * * * *
No: 2

உன் பேரு என்ன..?

" சௌமியா "

உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

* * * * * * * * * * * * * * * * * **
No : 3
( இன்ட்டர்வியூவில் )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "

* * * * * * * * * * * * * * * * * **                                                                                                              No : 4
( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா
வாங்க கடைக்குச் சென்றான்)

கடைக்காரர் : சார் உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா..

* * * * * * * * * * * * * * * * * **
No : 5
நடிகர்  : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு
மக்களுக்கு பொதுசேவை
பண்ணலாம்னு    இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே
அது மக்களுக்கு பண்ற
பொதுசேவை
தானே சார்..!!
* * * * * * * * * * * * * * * * * **

No : 6
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு
ரொம்ப முக்கியம்.,
இந்தாங்க தூக்க மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை
கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..

* * * * * * * * * * * * * * * * * *

No : 7 ( கல்யாண மண்டபம்.. )

"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை
வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? "

" ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!"
* * * * * * * * * * * * * * * *
No: 8

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?

அவர் : தெரியுது...

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

* * * * * * * * * * * * * *
No : 9
( கட்சி ஆபீஸ்.. )

தொண்டர் 1 : நம்ம தலைவர் தன்னோட
எல்லா சொத்தையும்
கட்சிக்கே எழுதி
வெச்சிட்டாரு..!

தொண்டர் 2 : சந்தோஷமான விஷயம்
தானே..!

தொண்டர் 1 : அட போப்பா..,
கட்சியை அவரோட மகனுக்கு
எழுதி வெச்சிட்டாரு..!!
* * * * * * * * * * * * * *

No : 10
( Exam ஆரம்பிக்கும் முன்... )
மாணவன் : டீச்சர் ஒர் Doubt...

டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும்
அரை மணி நேரம்தான் இருக்கு..,

இப்ப போயி என்னடா Doubt..?

மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?
* * * * * * * * * * * * * *
No: 11
மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..

அப்பா : Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்..,
எந்த துறையைல சாதிக்க போற..

மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு
பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்..


=================================================================
வாட்ஸ்அப்பில் வந்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்!
எது நன்றாக உள்ளது? சொல்லிவிட்டுச் செல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28 comments:

GANAMURUGU said...

Respected Sir,
Natpum Kathalum is super. GMurugan

Ram said...

Nandri ayya.

Thirumurthy yogaamurthy said...

நல்ல நகைசுவை

lrk said...

நட்பும் காதலும் - வாய் விட்டு சத்தமாக சிரித்து விட்டேன் . அருமை !!!

வேப்பிலை said...

உம்மனா மூஞ்சியை ஒரு ஓரமா
உட்கார சொல்லுவீங்களே

அதை ஏன் சொல்லலை
அந்த வாக்கியமே ஜோக்கு தான்..

so me ya என வரும்
தொலைபேசி அழைப்பை சேர்க்கலாமா

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
எல்லா சிரிப்புகலுமே நல்ல இருக்கு..!!!
ஒற்றுமை தம்பதிகளின் கணவனின் .. சோக சிரிப்பு இருக்கே அதுக்குதான் முதல் மார்க்

ravichandran said...

Respected Sir,

Hope all is well especially your health.

All are good. Have a pleasant day.

With kind regards,
Ravichandran M.

துரை செல்வராஜூ said...

பாவம்.. அந்த மாமியாரைக் காப்பாத்தியிருக்கலாம்.

மற்றபடி அனைத்தும் அருமை.

Chellappa Yagyaswamy said...

அன்புடையீர்,
வணக்கம். நலமா?

இன்றைய ‘செல்லப்பா தமிழ் டயரி’ யில் புதிய பதிவு ‘அபுசி-தொபசி-45’ வெளிவந்துள்ளது. அதில் தங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அன்புகூர்ந்து படிக்க வேண்டுகிறேன்.

கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்:
http://chellappatamildiary.blogspot.com/2014/09/107-45.html

படித்து, கருத்துரை வழங்கினால் மகிழ்ச்சியடைவேன்.

அன்புடன்,
இராய செல்லப்பா
(Y.Chellappa) சென்னை.

Regunathan Srinivasan said...

அய்யா,

நான் அனைத்து நகைச்சுவையும் படித்தேன்...எல்லாமே நன்றாகத்தான் இருந்தன.

உங்கள் மாணவன்,
S . ரகுநாதன்

Kirupanandan A said...

இன்றைக்கு எல்லாமே அருமையாக இருக்கின்றன. Simply superb.

sundari said...

good evening sir,
\

kmr.krishnan said...

எல்லா நகைச்சுவைகளுமே அருமை. என்ன, எல்லாமே ஏற்கனவே அறிந்துள்ளதால் புன்னகையுடன் வாசித்தேன். வெடிச் சிரிப்பாக வரவில்லை.

சுஜாதா மெக்சிகோ சலவைக்காரி ஜோக் என்று இறக்கும் வரை சொல்லிவிட்டு
சொல்லாமலே போய்விட்டார். உங்களுக்குத்தெரிந்தால் சொல்லுங்க ஐயா!

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Subbiah Veerappan said...

////Blogger GANAMURUGU said...
Respected Sir,
Natpum Kathalum is super. GMurugan/////

உங்களூடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger Ram said...
Nandri ayya./////

நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger Thirumurthy yogaamurthy said...
நல்ல நகைசுவை/////

நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

///Blogger lrk said...
நட்பும் காதலும் - வாய் விட்டு சத்தமாக சிரித்து விட்டேன் . அருமை !!!////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
உம்மனா மூஞ்சியை ஒரு ஓரமா
உட்கார சொல்லுவீங்களே
அதை ஏன் சொல்லலை
அந்த வாக்கியமே ஜோக்கு தான்..
so me ya என வரும்
தொலைபேசி அழைப்பை சேர்க்கலாமா/////

அடிக்கடி சொல்லவேண்டாமென்று இன்று அதைச் சொல்லவில்லை வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

/////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
எல்லா சிரிப்புகலுமே நல்ல இருக்கு..!!!
ஒற்றுமை தம்பதிகளின் கணவனின் .. சோக சிரிப்பு இருக்கே அதுக்குதான் முதல் மார்க்////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Hope all is well especially your health.
All are good. Have a pleasant day.
With kind regards,
Ravichandran M./////

நல்லது. உங்களின் மேலான அன்பிற்கு நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger துரை செல்வராஜூ said...
பாவம்.. அந்த மாமியாரைக் காப்பாத்தியிருக்கலாம்.
மற்றபடி அனைத்தும் அருமை.////

அதெப்படி? நகைச்சுவைக்கு இடமில்லாமல் போயிருக்குமே:-)))

Subbiah Veerappan said...

////Blogger Chellappa Yagyaswamy said...
அன்புடையீர்,
வணக்கம். நலமா?
இன்றைய ‘செல்லப்பா தமிழ் டயரி’ யில் புதிய பதிவு ‘அபுசி-தொபசி-45’ வெளிவந்துள்ளது. அதில் தங்களுக்கு

ஒரு நல்ல செய்தி உள்ளது. அன்புகூர்ந்து படிக்க வேண்டுகிறேன்.
கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்:
http://chellappatamildiary.blogspot.com/2014/09/107-45.html
படித்து, கருத்துரை வழங்கினால் மகிழ்ச்சியடைவேன்.
அன்புடன்,
இராய செல்லப்பா
(Y.Chellappa) சென்னை.//////

படித்துப் பார்த்து, கருத்துரை வழங்கியுள்ளேன். நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger Regunathan Srinivasan said...
அய்யா,
நான் அனைத்து நகைச்சுவையும் படித்தேன்...எல்லாமே நன்றாகத்தான் இருந்தன.
உங்கள் மாணவன்,
S . ரகுநாதன்/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

///Blogger Kirupanandan A said...
இன்றைக்கு எல்லாமே அருமையாக இருக்கின்றன. Simply superb./////

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நன்றி ஆனந்த்!

Subbiah Veerappan said...

/////Blogger sundari said...
good evening sir,/////

உங்களின் மாலை வணக்கத்திற்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
எல்லா நகைச்சுவைகளுமே அருமை. என்ன, எல்லாமே ஏற்கனவே அறிந்துள்ளதால் புன்னகையுடன்

வாசித்தேன். வெடிச் சிரிப்பாக வரவில்லை.
சுஜாதா மெக்சிகோ சலவைக்காரி ஜோக் என்று இறக்கும் வரை சொல்லிவிட்டு
சொல்லாமலே போய்விட்டார். உங்களுக்குத்தெரிந்தால் சொல்லுங்க ஐயா!//////

சலவைக்காரி ஜோக்கைவிட நல்ல ஜோக்குகள் எல்லாம் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் அசைவம். நம்

பதிவில் ஏற்ற முடியாது சுவாமி!

Subbiah Veerappan said...

///Blogger Yarlpavanan Kasirajalingam said...
சிறந்த பகிர்வு
தொடருங்கள்////

நல்லது நன்றி!