Mini Story குட்டிக்கதை: குருவும், குதிரைக்காரனும்!
ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரைப் பிரசங்கம் செய்ய ஒரு இடத்தில் கூப்பிட்டிருந்தார்கள். பத்தாயிரம் பேர் வருவார்கள் என்றும் சொல்லியிருந்தார்கள்.
அவரை அழைத்துண்டு செல்ல ஒரு குதிரைக்காரன் சென்றிருந்தான். அன்றைக்கு என்று பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி விட்டது. எல்லோரும் கலைந்து சென்றுவிட்டார்கள்.
குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை.
பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.'என்னப்பா பண்ணலாம்?’னு கேட்டார்.
‘அய்யா! நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.
செவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுவிட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியாச் சொல்லிப் பிரமாதப் படுத்திட்டார் குரு.
பிரசங்கம் முடிந்தது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையாகக் கேட்டார் குரு.
‘அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான்.
அவ்வளவுதான்... மறுபடியும் செவிட்டில் அறைந்ததைப் போன்றிருந்தது குருவிற்கு!!
நீதி : மற்றவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எதைச் சொன்னால் புரியுமோ அதை மட்டும் சொன்னால் போதும். புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்வது நம்மைத்தான் முட்டாளாக்கும் !!!
-------------------------------------------------------
வாட்ஸ் அப்பில் வந்தது. எனது நடையில் எழுதி, உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்!
அன்புடன்
வாத்தியார்.
---------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
முற்றும் துறந்த குரு என
ReplyDeleteமுதலிலேயே பெரிதாக காட்டும் போதே
தெரியும் இப்படி அடிப்படை சில
தெரியாதவர்களை குரு என அழைப்பது
இவர் முற்றும் துறக்காதவர் என
இவர் அணுகுமுறையில் தெரிகிறது
Respected Sir
ReplyDeleteReal nice... Brought smile to my face...Not sure who is Guru here :)
அருமை வாத்தியாரே!
ReplyDeleteGood morning sir
ReplyDeletevery nice story.
அய்யா,
ReplyDeleteஅருமையான கதை.நம் வாழ்கையில் பல சமயங்களில் இந்த மாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கும்.எனக்கும் அனுபவங்கள் உண்டு .
பணிவுடன்,
S .ரகுநாதன்
nice story sir!
ReplyDeletesubbiah sir, i am having interest in astrology, based on your classroom blogspot. i have learnt all your lessons. i am having some good knoweledge in astagavarga just because of you. i came to know that you have started new astrology based blogspot. i need to learn more about it. if you suggest me to join in that blogspot. that will be good to enhance my knoweledge in this astrology.
Thank you,
Hari Haran
வணக்கம் சார்...
ReplyDeleteநீங்களூம் எனக்கு குருதான் !
அனைவருக்கும் எல்லாம் சொல்கிறீர்கள்.
எனக்குதேவை.
13/12/1970 (02.05 AM)
dharapuram
என்ன சொல்லுது என்ஜாதகம் !!!
மாணவனுக்கு உதவலாமே சார்....
அருமையான கதை.
ReplyDeleteவணக்கம் குரு,
ReplyDeleteஆற்றில் போட்டாலும் அளந்துதான் போடணும்ன்னு பெரியோர்கள் கூறியது உபதேசத்திற்கும் பொருந்தும் போலிருக்கிறது.
நன்றி
செல்வம்
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteமுற்றும் துறந்த குரு என
முதலிலேயே பெரிதாக காட்டும் போதே
தெரியும் இப்படி அடிப்படை சில
தெரியாதவர்களை குரு என அழைப்பது
இவர் முற்றும் துறக்காதவர் என
இவர் அணுகுமுறையில் தெரிகிறது/////
யாராலும் முற்றிலுமாக அனைத்தையும் துறக்க முடியாது.
பசியை’ என்ன செய்வீர்கள்?
எத்தனை பெரிய மகானா இருந்தாலும் பசியை எப்படித் துறக்க முடியும்?
/////Blogger Dallas Kannan said...
ReplyDeleteRespected Sir
Real nice... Brought smile to my face...Not sure who is Guru here :)////
நல்லது. நன்றி!
////Blogger BLAKNAR said...
ReplyDeleteஅருமை வாத்தியாரே!/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
////Blogger lrk said...
ReplyDeleteGood morning sir
very nice story.////
உங்களின் காலை வணக்கத்திற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!
/////Blogger Regunathan Srinivasan said...
ReplyDeleteஅய்யா,
அருமையான கதை.நம் வாழ்கையில் பல சமயங்களில் இந்த மாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கும்.எனக்கும் அனுபவங்கள் உண்டு .
பணிவுடன்,
S .ரகுநாதன்/////
உண்மைதான். எனக்கும் அது போன்ற அனுபவங்கள் உண்டு. நன்றி நண்பரே!
/////Blogger Hari Haran said...
ReplyDeletenice story sir!
subbiah sir, i am having interest in astrology, based on your classroom blogspot. i have learnt all your lessons. i am having some good knoweledge in astagavarga just because of you. i came to know that you have started new astrology based blogspot. i need to learn more about it. if you suggest me to join in that blogspot. that will be good to enhance my knoweledge in this astrology.
Thank you,
Hari Haran////
Please write to me
my mail ID: classroom2007@gmail.com
///Blogger Sakthivel K said...
ReplyDeleteவணக்கம் சார்...
நீங்களூம் எனக்கு குருதான் !
அனைவருக்கும் எல்லாம் சொல்கிறீர்கள்.
எனக்குதேவை.
13/12/1970 (02.05 AM)
dharapuram
என்ன சொல்லுது என்ஜாதகம் !!!
மாணவனுக்கு உதவலாமே சார்..../////
ஜாதகம் எப்படி சொல்லும்? நடத்திக் காட்டும்!
சராசரியாக சுமார் 4,000 பேர்கள் தினமும் வகுப்பறைக்கு வந்து சொல்கிறார்கள். அனைவருக்கும் பலன் சொல்ல ஆரம்பித்தால் எத்தனை கேள்விகள் எத்தனை பதில்கள். என் தொழில் மாறிவிடாதா? அதற்கான நேரத்திற்கு நான் எங்கே போவது? நீங்களே அதைச் சொல்லுங்கள்!
///Blogger Kamala said...
ReplyDeleteஅருமையான கதை.////
நல்லது. நன்றி!
///Blogger Selvam Velusamy said...
ReplyDeleteவணக்கம் குரு,
ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போடணும்ன்னு பெரியோர்கள் கூறியது உபதேசத்திற்கும் பொருந்தும் போலிருக்கிறது.
நன்றி
செல்வம்/////
உண்மைதான். பழமொழிகள் எல்லாம் அனுபவத்தில் சொல்லப்பட்டவைகள்தானே!
நல்ல கதைதான். பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!
ReplyDeleteபெரும்பாலான குட்டிக்கதைகள் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகளின் தழுவலாகவே இருப்பதைக் காண்கிறேன். அவருடைய குட்டிக்கதைகள் நமது புராணங்கள், உபனிஷத்துகளின் தழுவலே.
///Blogger kmr.krishnan said...
ReplyDeleteநல்ல கதைதான். பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!
பெரும்பாலான குட்டிக்கதைகள் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகளின் தழுவலாகவே இருப்பதைக் காண்கிறேன். அவருடைய குட்டிக்கதைகள் நமது புராணங்கள், உபனிஷத்துகளின் தழுவலே.////
உண்மைதான் நமது புராணங்களில் நிறையக் கதைகள் உள்ளன. தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
very good and useful story you are the king of small stories
ReplyDelete