மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.9.14

நகைச்சுவை: நல்ல கணக்கை மாத்து, கள்ளக் கணக்கை ஏத்து!



நகைச்சுவை: நல்ல கணக்கை மாத்து, கள்ளக் கணக்கை ஏத்து!

சிரிப்புப் பாடல்!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் திரைக்காகப் பல நகைச்சுவைப் பாடல்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் ஒரு பாடலை இன்று உங்களுக்காகப் பதிவிடுகிறேன்.

நகைச்சுவைப் பாடல் என்றாலும் அவருடைய சொல், மற்றும் கருத்து ஆட்சி கொஞ்சமும் குறையாது அதுதான் அவருடைய மிகப்பெரும் சிறப்பு!

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------------------------------------
தமிழகம் மறக்க முடியாத நடிகர்களில் ஜே.பி.சந்திரபாபுவும் ஒருவர்.

1932ம் ஆண்டில் தூத்துக்குடியில் பிறந்த அவர் 1974ம் ஆண்டில் காலமாகி விட்டார்

42 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவர், அற்புதமான நகைச்சுவை நடிப்பு, குரல், நடனம் என்று தன்னுடைய பன்முகத்திறமை மூலம் லெட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்.

அவர் கைக்குழந்தையாக இருக்கும்போது நோய்வாய்ப் பட்டு மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பியவர்

மருத்துவர்களெல்லாம் கைவிட்டும்கூட அவருடைய தாய் தன்னுடைய ஆறு மாதக் குழந்தையை இழக்க மனமின்றி, தான் வழக்கமாகச் செல்லும் கிறிஸ்துவ ஆலயத்திற்குப்போய், யேசுபெருமகனாரின் உருவச்சிலை முன் உருக்கமாக வேண்டிக் குழந்தையை, இறைவன் அருளால் மீட்டவர்.

அந்த நன்றிக்கடனைத் தீர்ப்பதற்காகத் தன்னுடைய அந்தக் குழந்தைக்கு யேசுநாதர் தனக்களித்த பிச்சை என்னும் சொல் வரும்படி குழந்தைக்கு
'ஜோசப் பிச்சை' என்று பெயரிட்டார். ஆமாம் சின்ன வயதில் சந்திரபாபுவின் பெயர் 'ஜோசப் பிச்சைதான்!

திரைக்கு வந்த பிறகு இயக்குனர் ஒருவர்தான் அவருக்குச் சந்திரபாபு என்னும் பெயரைச் சூட்டினார்.

ஆனாலும் அவர் தன் அன்னை வைத்த பெயரை விடாமல் சுருக்கி Joseph Picchai' என்பதை J.P என்று தன் திரைப் பெயருக்கு முன்னால் வரும்படி
வைத்துக் கொண்டார்

கவியரசர் எழுதிய "சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது' என்ற பாடலுக்குத் தன்னுடைய வசீகரக் குரலாலும், நடிப்பாலும்
உயிரூட்டியவர் அவர்!

சரி, வாருங்கள் பாடலைப் பார்ப்போம்!
----------------------------------
"சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது

(சிரிப்பு)

லாரடி லாரடி லாரடி பாரடி
மேடை ஏறிப் பேசும்போது
ஆறு போல பேச்சு
கீழே இறங்கிப் போகும்போது
சொன்னதெல்லாம் போச்சு

காசை எடுத்து நீட்டு
கழுதை பாடும் பாட்டு
ஆசை வார்த்தை காட்டு
உனக்குங் கூட ஓட்டு

(சிரிப்பு)

உள்ள பணத்தைப் பூட்டி வச்சு
வள்ளல் வேஷம் போடு
ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு
உத்தமன் போல் பேசு

நல்ல கணக்கை மாத்து,
கள்ளக் கணக்கை ஏத்து
நல்ல நேரம் பாத்து
நண்பனயே மாத்து

(சிரிப்பு)"

படம்: ஆண்டவன் கட்டளை - வருடம் 1969
நடிப்பு: சிவாஜி, தேவிகா, சந்திரபாபு
பாடல்: J.P.சந்திர பாபு
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - பி.ராமமூர்த்தி
பாடல் வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
இயக்கம்: கே.சங்கர்

சமுதாயத்தில் உள்ள அவலத்தை நகைsசுவைப் பாட்டில் ஏற்றிக் கொடுத்துள்ளார் கவியரசர்.

சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது'
என்று பாடலைத் துவங்கியவர், மேடை ஏறிப் பேசும்போது
ஆறு போல பேசியவர்களின் பேச்செல்லாம் கீழே இறங்கிப் போகும்
போது போய்விடும் என்று சிறப்பாகச் சொல்லியிருக்கின்றார்

காசை எடுத்து நீட்டினால், கழுதை பாடும் பாட்டைக் கேட்கக்கூட
கூட்டம் சேரும் என்றும் ஆசை வார்த்தை காட்டினால் உனக்குங்கூட
ஓட்டு விழுகும் என்றும் அருமையாகச் சொல்லியிருக்கிறார்

'நல்ல நேரம் பாத்து - நண்பனையே மாத்து' என்று சொல்லி
வருத்தப்படும் நிகழ்வுகளைப் பாட்டில் வைத்து முடித்ததுதான்
முத்தாய்ப்பான வரிகளாகும்!
-----------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=====================================================

14 comments:

  1. கவியரசர் எழுதிய இந்தப் பாடல் - கருத்துக் களஞ்சியம். மனதுக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் இதுவும் ஒன்று..

    ReplyDelete
  2. வணக்கம் சார்...
    கண்ணதாசன்!!!
    தெய்வீகபிறவி...

    பாலும்பழமும் கைகளீளேந்தி
    பவளவாயில் புண்ணகைசிந்தி
    கோலமயில்போல் நீவருவாயே
    கொஞ்சும்கிளீயே அமைதிகொள்வாயே.

    ReplyDelete
  3. ருசிக்கவா இல்லை இது
    ரசிக்கவா..

    ReplyDelete
  4. அய்யா,

    உங்களுக்கும் நமது வகுப்புக்கு உள்ள மற்ற மாணவர்களுக்கும் முதற்கண் 'மங்கல்யான்' வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.நமது நாடும் நீங்கள் சொன்னபடி 2020 இல் ஒரு பெரிய சக்தி வாய்ந்த நாடாக வாய்ப்புள்ளது என்று நம்புவோமாக.

    சந்திர பாபு அவர்களை பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.நன்றி அய்யா.

    என்றும் பணிவுடன் ,
    S .Ragunathan

    ReplyDelete
  5. வணக்கம் குரு

    கண்ணதாசன் ஐயாவின் பாடல் வரிகளோடு J P சந்திரபாபு அவர்களின் வாழ்க்கையைபற்றி கூறியவை நன்றாக உள்ளது.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  6. நல்ல கணக்கை மாத்து
    கள்ள கணக்கை ஏத்து .
    - இது இன்று வரை நடக்கும் கூத்து .
    காலத்தால் அழியாது .

    ReplyDelete
  7. //////Blogger துரை செல்வராஜூ said...
    கவியரசர் எழுதிய இந்தப் பாடல் - கருத்துக் களஞ்சியம். மனதுக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் இதுவும் ஒன்று../////

    உங்களுடைய விருப்பத்தைத் தெரிவித்த மேன்மைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. /////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்...
    கண்ணதாசன்!!!
    தெய்வீகபிறவி...
    பாலும்பழமும் கைகளீளேந்தி
    பவளவாயில் புண்ணகைசிந்தி
    கோலமயில்போல் நீவருவாயே
    கொஞ்சும்கிளீயே அமைதிகொள்வாயே.////

    ஆமாம். இறையருள் பெற்ற கவிஞர் அவர். அதனால்தான் அவரால் அத்தனை பாடல்களை எழுத முடிந்தது. நன்றி!

    ReplyDelete
  9. ////Blogger வேப்பிலை said...
    ருசிக்கவா இல்லை இது
    ரசிக்கவா..////

    உங்களின் விருப்பப்படி செய்யுங்கள் வேப்பிலையாரே!

    ReplyDelete
  10. ////Blogger Regunathan Srinivasan said...
    அய்யா,
    உங்களுக்கும் நமது வகுப்புக்கு உள்ள மற்ற மாணவர்களுக்கும் முதற்கண் 'மங்கல்யான்' வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.நமது நாடும் நீங்கள் சொன்னபடி 2020 இல் ஒரு பெரிய சக்தி வாய்ந்த நாடாக வாய்ப்புள்ளது என்று நம்புவோமாக.
    சந்திர பாபு அவர்களை பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.நன்றி அய்யா.
    என்றும் பணிவுடன் ,
    S .Ragunathan////

    சில பழைய, சுவையான செய்திகளைச் சொன்னால்தான் தெரியும். அதனால்தான் அதையும் எழுதினேன்! உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. Blogger sundari said...
    Good afternoon sir,

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. ////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு
    கண்ணதாசன் ஐயாவின் பாடல் வரிகளோடு J P சந்திரபாபு அவர்களின் வாழ்க்கையைபற்றி கூறியவை நன்றாக உள்ளது.
    நன்றி
    செல்வம்/////

    சில பழைய, சுவையான செய்திகளைச் சொன்னால்தான் தெரியும். அதனால்தான் அதையும் எழுதினேன்!

    ReplyDelete
  13. /Blogger lrk said...
    நல்ல கணக்கை மாத்து
    கள்ள கணக்கை ஏத்து .
    - இது இன்று வரை நடக்கும் கூத்து .
    காலத்தால் அழியாது .////

    உண்மைதான். காலத்தால் அது என்றும் அழியாமல் இருக்கும். மனிதர்களின் குணம் அப்படி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com