மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.9.14

இதல்லவா பதில்!



இதல்லவா பதில்!

மகான்கள் எப்போதும் தன்னிகரில்லாதவர்கள். பல சமயங்களின் அவர்களுடைய செயல்களும் பேச்சுக்களும் நம் நெஞ்சை நெகிழ வைத்துவிடும். அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்றை உங்களுக்காக இன்று பதிவிட்டிருக்கிறேன்!

கடவுளைப் பார்த்திருந்தால் காட்டுங்களேன்!’ என்று கேட்டவருக்கு
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன பதில்
----------------------------------------------

ஒரு நாள் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பார்க்க டாக்டர் ஒருவர் வந்தார்.

வந்தவர் கேட்டார்:

“ஐயா நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?”

பரமஹம்ஸர் சட்டென்று பதில் சொன்னார்:

“ஓ! பார்த்திருக்கிறேனே!! காலையில் கூட அவரோடு பேசினேன்”

“நீங்கள் பார்த்தது உண்மை என்றால் எனக்குக் காட்டுங்கள்”
 என்று டாக்டர் பதிலுக்குக் கேட்டவுடன் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் பரமஹம்ஸர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தனர்.

பரமஹம்சர் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் கேள்வி எழுப்பிய
டாக்டரிடம், “நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அவர் சொன்னார்: “நான் டாக்டர் வேலை செய்கிறேன்”

“டாக்டர் தொழில் உங்களுக்கு நன்றாகத் தெரியும் தானே?”

“நன்றாகத் தெரியும்”

“அப்படியானால் என்னை ஒரு டாக்டர் ஆக்குங்கள்”

“அது எப்படி? நீங்கள் டாக்டருக்குப் படிக்க வேண்டுமே?”

“டாக்டராவதற்கே ஒரு படிப்பு வேண்டும் என்றால்,கடவுளைப் பார்க்க
ஒரு படிப்பு வேண்டாமா? நான் அதைப்படித்திருக்கிறேன்.நீங்களும்
அதைப் படித்தால் கடவுளைக் காணலாம்” என்று பரமஹம்சர்
நெத்தியில் அடிப்பது போல அவருக்குப் பதில் சொன்னார்.

டாக்டர் அதிர்ந்துபோய் விட்டார். மற்றவர்கள் வியந்து மகிழ்ந்தனர்.
====================================================================
அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29 comments:

  1. Good morning sir,
    Thanks for ur nice posting

    ReplyDelete
  2. ஸ்ரீ பரமஹம்ஸர் பாத மலர் போற்றி!..

    பல ஆண்டுகளாக ராமகிருஷ்ண விஜயம் வாசித்து வரும் எனக்கு தங்கள் பதிவில் ஸ்வாமிகளைப் பற்றிய செய்தியைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி..

    ReplyDelete
  3. இவர்தான் உண்மையிலேயெ பரமஹம்ஸர் அழைக்கத் தகுதியானவர். இன்றைய காலகட்டத்தில் இவரது கால் தூசிக்கு பெறாதவர்களெல்லாம் தன்னை பரமஹம்ஸர் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

    ReplyDelete
  4. நாத்திகர்களுக்கு அருமையான பாடம்...

    நன்றி வாத்தியாரே....

    ReplyDelete
  5. Respected Sir,

    Happy morning... Nice post...

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  6. அய்யா,
    இதை படித்தவுடன் எனக்கு வேறொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.ஒரு முறை சுவாமி விவேகானந்தரிடம் ஒருவர் இவ்வாறு கேட்டார் " கடவுள் மனிதனுடைய மனதில் இருக்கும் போது கோவிலுக்கு எதற்காக போக வேண்டும் ?".சற்று நேரம் அமைதியாக இருந்த விவேகானந்தர் அவரை தண்ணீர் கொண்டு வர சொன்னார்.அவரும் ஒரு கிளாஸ் இல் தண்ணீர் கொண்டு வந்தார்.அதற்கு சுவாமி " நான் உன்னை தண்ணீர் அல்லவா கேட்டேன்.நீ கிளாஸ் ஐயும் சேர்த்து எதற்கு கொண்டு வந்தாய் "என்று கேட்டார் ."அது எப்படி சுவாமி தண்ணீரை மட்டும் கொண்டு வர முடியும்;கிளாஸ் உம் அவசியம் அல்லவா ?" என்று பதில் அளித்தார்."இதே போல் தான் கோவில்களும் .கடவுளை தரிசிக்க கோவில்தான் சரியான இடம்" என்று கூறி அவரது சந்தேகத்திற்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தார்.

    என்றும் பணிவுடன் ,
    S .ரகுநாதன்

    ReplyDelete
  7. ஆன்மீகம் என்றுமே
    அதிசயம் தான் . அருமை

    ReplyDelete
  8. வெள்ளிக்கிழமை பக்திமலரில் அடியேன் பலமுறை ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி எழுதியுள்ளேன்.தாங்களும் அன்புடன் வெளியிட்டுள்ளீர்கள்.

    'ஒருவனுக்கு பித்தநாடி எது, கப நாடி எது என்று அறிய வேண்டுமானால் அவன் வைத்தியருடன் மூலிகைப் பெட்டியை தூக்கிக் கொண்டு பின்னாலேயே அலைய வேண்டும்.அது போல இறைவனைபற்றி அறிய அனுபூதிமான்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்' என்பார்.இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ண‌ம்
    பதிவு உள்ளது.

    ReplyDelete
  9. முடித் திருத்தும் நிலையம்.

    முடி திருத்துபவர் - கடவுள் இல்லை என்பதே என்கருத்து.

    வாடிக்கையாளர் - ஏன்?

    முடி திருத்துபவர் -ஏன் கடவுள் மக்கள் படும் துயரங்களையும் வேதனைகளையும் பார்த்து சும்மா இருக்கார்.

    வாடிக்கையாளர் - மௌனம்.

    முடி திருத்துபவர் - உங்கள் மௌனமே கடவும் இல்லை என்பதை நிருபிக்கிறது.

    சிறுது நேரம் கழித்து வாடிக்கையாளர் அடர்ந்த முடி மற்றும் தாடியுடன் கூடிய ஒருவருடன் வருகிறார்

    வாடிக்கையாளர் - நான் ஒன்று கேட்கட்டுமா?

    முடி திருத்துபவர் - சரி.

    வாடிக்கையாளர் - இந்த ஊரில் முடி திருத்துபவரே இல்லை என நினைக்கிறேன்.

    முடி திருத்துபவர் - எப்படி அதான் நான் இருக்கிறேனே.

    வாடிக்கையாளர் - அப்படி எனில் ஏன் பல பேர் அடர்ந்த முடியோடும், தாடியோடும் அலைகிறார்கள்.

    முடி திருத்துபவர் - அவர்கள் என்னிடம் வருவது இல்லை

    வாடிக்கையாளர் - அது போலவே கடவுளிடம் சரணங்களை பற்றுபவர்களுக்கு அவரின் அருள் கிடைக்கும்

    ReplyDelete
  10. வணக்கம்சார்...
    பரமஹம்சர்......
    டைமிங் பதில்!!
    சமயோசித புத்தி!!
    டாக்டருங்களூக்கே அவஅவன்
    உடம்புல என்னநோய் இருக்கிறது
    என தெரியாது!!
    காளீயைபார்த்து என்னசெய்கிறாராம்?
    டாக்டர்களூக்கு நம்மை சனிபகவான்
    பார்த்துக்கொண்டு இருப்பார்
    என்ற நினைப்பே வருவதில்லை!!
    டாக்டருக்கும் போர்டிங்பாஸ் உண்டு..

    ReplyDelete
  11. ஐயா, அருமையான பதிவு. கடவுளைக் கண்டுபிடிக்க அவரவர்தான் முயலவேண்டும்.யாராலும் காட்ட முடியாது.

    ReplyDelete
  12. வணக்கம் குரு

    அருமை. உங்கள் எழுத்துகள் அப்படியே கண் முன்னே நடந்ததுபோல் உள்ளது. வாரத்தில் ஒரு நாள் இதுபோன்று மகான்கள் அல்லது கடவுளை பற்றிய பதிவு தருமாறு வேண்டுகிறேன்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  13. /////Blogger sundari said...
    Good morning sir,
    Thanks for ur nice posting/////

    நல்லது. உங்களுடைய காலை வணக்கத்திற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. ///Blogger துரை செல்வராஜூ said...
    ஸ்ரீ பரமஹம்ஸர் பாத மலர் போற்றி!..
    பல ஆண்டுகளாக ராமகிருஷ்ண விஜயம் வாசித்து வரும் எனக்கு தங்கள் பதிவில் ஸ்வாமிகளைப் பற்றிய செய்தியைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி..////

    நீங்கள் மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. ////Blogger வேப்பிலை said...
    டாக்டர் வாழ்க////

    வேப்பிலையார் வாழ்க!

    ReplyDelete
  16. /////Blogger Kirupanandan A said...
    இவர்தான் உண்மையிலேயெ பரமஹம்ஸர் அழைக்கத் தகுதியானவர். இன்றைய காலகட்டத்தில் இவரது கால் தூசிக்கு பெறாதவர்களெல்லாம் தன்னை பரமஹம்ஸர் என்று அழைத்துக் கொள்கிறார்கள்./////

    எல்லாம் காலத்தின் கோளாறு. எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற மக்களின் மயக்கம்! நீங்கள் சொல்வது உண்மைதான்!
    நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  17. ////Blogger BLAKNAR said...
    நாத்திகர்களுக்கு அருமையான பாடம்...
    நன்றி வாத்தியாரே..../////

    நாம் யாருக்கும் பாடம் சொல்ல முடியாது. அவரவர்களாக உணர்ந்து அறிந்தால்தான் உண்டு!

    ReplyDelete
  18. ////Blogger ravanan s said...
    அருமை...!////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  19. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice post...
    With kind regards,
    Ravichandran M./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. ////Blogger Regunathan Srinivasan said...
    அய்யா,
    இதை படித்தவுடன் எனக்கு வேறொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.ஒரு முறை சுவாமி விவேகானந்தரிடம் ஒருவர் இவ்வாறு கேட்டார் " கடவுள் மனிதனுடைய மனதில் இருக்கும் போது கோவிலுக்கு எதற்காக போக வேண்டும் ?".சற்று நேரம் அமைதியாக இருந்த விவேகானந்தர் அவரை தண்ணீர் கொண்டு வர சொன்னார்.அவரும் ஒரு கிளாஸ் இல் தண்ணீர் கொண்டு வந்தார்.அதற்கு சுவாமி " நான் உன்னை தண்ணீர் அல்லவா கேட்டேன்.நீ கிளாஸ் ஐயும் சேர்த்து எதற்கு கொண்டு வந்தாய் "என்று கேட்டார் ."அது எப்படி சுவாமி தண்ணீரை மட்டும் கொண்டு வர முடியும்;கிளாஸ் உம் அவசியம் அல்லவா ?" என்று பதில் அளித்தார்."இதே போல் தான் கோவில்களும் .கடவுளை தரிசிக்க கோவில்தான் சரியான இடம்" என்று கூறி அவரது சந்தேகத்திற்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தார்.
    என்றும் பணிவுடன் ,
    S .ரகுநாதன்/////

    பதிவிற்கு மேன்மை சேர்க்கும் விதமாக பின்னூட்டம் மூலம், நீங்கள் ஒரு நல்ல செய்தியைப் பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. ////Blogger lrk said...
    ஆன்மீகம் என்றுமே
    அதிசயம் தான் . அருமை////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. ////Blogger kmr.krishnan said...
    வெள்ளிக்கிழமை பக்திமலரில் அடியேன் பலமுறை ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி எழுதியுள்ளேன்.தாங்களும் அன்புடன் வெளியிட்டுள்ளீர்கள்.
    'ஒருவனுக்கு பித்தநாடி எது, கப நாடி எது என்று அறிய வேண்டுமானால் அவன் வைத்தியருடன் மூலிகைப் பெட்டியை தூக்கிக் கொண்டு பின்னாலேயே அலைய வேண்டும்.அது போல இறைவனைபற்றி அறிய அனுபூதிமான்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்' என்பார்.இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ண‌ம் பதிவு உள்ளது.////

    உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  23. ////Blogger Sundaravadivel K said...
    முடித் திருத்தும் நிலையம்.
    முடி திருத்துபவர் - கடவுள் இல்லை என்பதே என்கருத்து.
    வாடிக்கையாளர் - ஏன்?
    முடி திருத்துபவர் -ஏன் கடவுள் மக்கள் படும் துயரங்களையும் வேதனைகளையும் பார்த்து சும்மா இருக்கார்.
    வாடிக்கையாளர் - மௌனம்.
    முடி திருத்துபவர் - உங்கள் மௌனமே கடவும் இல்லை என்பதை நிருபிக்கிறது.
    சிறுது நேரம் கழித்து வாடிக்கையாளர் அடர்ந்த முடி மற்றும் தாடியுடன் கூடிய ஒருவருடன் வருகிறார்
    வாடிக்கையாளர் - நான் ஒன்று கேட்கட்டுமா?
    முடி திருத்துபவர் - சரி.
    வாடிக்கையாளர் - இந்த ஊரில் முடி திருத்துபவரே இல்லை என நினைக்கிறேன்.
    முடி திருத்துபவர் - எப்படி அதான் நான் இருக்கிறேனே.
    வாடிக்கையாளர் - அப்படி எனில் ஏன் பல பேர் அடர்ந்த முடியோடும், தாடியோடும் அலைகிறார்கள்.
    முடி திருத்துபவர் - அவர்கள் என்னிடம் வருவது இல்லை
    வாடிக்கையாளர் - அது போலவே கடவுளிடம் சரணங்களை பற்றுபவர்களுக்கு அவரின் அருள் கிடைக்கும்/////

    உண்மைதான் இது இணையத்தில் வலம் வந்த பிரபலமான கதை. இங்கே வந்து சொன்ன மேன்மைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. /////Blogger Sakthivel K said...
    வணக்கம்சார்...
    பரமஹம்சர்......
    டைமிங் பதில்!!
    சமயோசித புத்தி!!
    டாக்டருங்களூக்கே அவனவன்
    உடம்புல என்னநோய் இருக்கிறது
    என தெரியாது!!
    காளீயைபார்த்து என்னசெய்கிறாராம்?
    டாக்டர்களூக்கு நம்மை சனிபகவான்
    பார்த்துக்கொண்டு இருப்பார்
    என்ற நினைப்பே வருவதில்லை!!
    டாக்டருக்கும் போர்டிங்பாஸ் உண்டு../////

    ஆமாம் உண்டு. அது கிடைத்தால், அடுத்த நொடியே டேக் ஆஃப்!

    ReplyDelete
  25. Blogger Kamala said...
    ஐயா, அருமையான பதிவு. கடவுளைக் கண்டுபிடிக்க அவரவர்தான் முயலவேண்டும்.யாராலும் காட்ட முடியாது.

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  26. /////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு
    அருமை. உங்கள் எழுத்துகள் அப்படியே கண் முன்னே நடந்ததுபோல் உள்ளது. வாரத்தில் ஒரு நாள் இதுபோன்று மகான்கள் அல்லது கடவுளை பற்றிய பதிவு தருமாறு வேண்டுகிறேன்.
    நன்றி
    செல்வம்/////

    உங்களின் விருப்பம் நிறைவேறும். பொறுத்திருந்து படியுங்கள். நன்றி!

    ReplyDelete
  27. //////Blogger Thirumurthy yogaamurthy said...
    ஒரு வகுப்பறை ஒரே ஆசிரியர் பலமாணவர்கள் அனைவருமா ஆசிரியர் பாடத்தை அப்படியே அவரது எண்ணப்படியே புரிந்து கொள்கின்றனர் முதல்மாணவனாகின்றனர் பலர் ஆசிரியருக்கே புரியாத விடையல்லவா தருகின்றனர் இதுபோல கடவுளின் பிள்ளைகளே அனைவரும் எனினும் வினையின் தகுதிக்கே இறையுணர்வு புலப்படும் டாக்டராக மருத்துவபடிப்புபோல் இறைவனையடையும் வினையே பலபிறவி படிப்பாக தொடரும் அறியும்////

    என்றாவது ஒரு நாள் புலப்பட்டால் சரிதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com