மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.9.14

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்!


வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்

மனவளக் கட்டுரை

11.9.2014

இனிய காலை வணக்கம் நண்பர்களே!

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்!

1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்

2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.

3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.

4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.

6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.

7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.

8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.

9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.

10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.

11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக
அறிவு பெற்று விட்டான் என்பதே.

12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதைக் கசப்பாக்கி விடாதீர்கள்.

13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.

14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன்.

15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.

16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.

17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.

19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும்  பணக்காரன் ஆக மாட்டாய்.

20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.

சொந்த சரக்கல்ல. இணையத்தில் படித்தது. நன்றாக இருந்ததால், உங்களுக்கு அதை இன்று அறியத் தந்திருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
இரண்டு நாட்களாக எந்த அறிவிப்பும் இன்றி வகுப்பறை வெரிச் சோடிக் கிடந்தது. சென்ற ஞாயிறு & திங்கட்கிழமை (7.9.2014 & 8.9.20114ம் 
தேதிகளில்) வெளியூர் சென்றிருந்தேன். திங்கட்கிழமை இரவு திரும்பிவிடுவத்ற்குத் திட்டமிட்டிருந்தேன். வேலையின் காரணமாக நினைத்திருந்தபடி அவ்வாறு திரும்ப முடியவில்லை. அது சிற்றூர். 
கையில் மடிக் கணினியை எடுத்துச் செல்லவில்லை. ஆகவே வகுப்பறையுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. உங்களை 
இரண்டு நாட்கள் காக்க வைத்ததற்காக என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=======================================================

30 comments:

  1. பதிவு வெளிவராததற்கு இதுதான் காரணமா? நான் கூட அந்த கதையில் வந்தது போல் யாரோ வாத்தியாரின் நெற்றிப் பொட்டில் துப்பாய்க்கியை வைத்து பதிவு எழுத கூடாது என்று மிரட்டி விட்டார்களோ என்று நினைத்தேன்.

    ReplyDelete
  2. அனைத்தும் நன்றாக உள்ளது...பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. அய்யா,

    காலை பொழுதில் நல்ல கருத்துகளை கேட்பது நன்மையை தரும் என்பது எனது நம்பிக்கை.இன்று எனது பிறந்தநாள் என்பதும் ,நீங்கள் நல்ல கருத்தக்களை சொல்வதும் எனக்கு சந்தோஷத்தை கொடுகிறது.

    பணிவுடன்,
    S . ரகுநாதன்

    ReplyDelete
  4. வணக்கம் சார்...
    வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்
    அற்புதம் !!!
    ஆனால் நான் வளமாக இல்லை !
    நான் 13/12/1970 - 02.05(am)
    தாராபுரம்.
    இதை வகுப்பரையில் பதிவிட்டு
    இந்த அன்பரின்...
    1.பொருளாதார நிலை என்ன?
    2.தொழில் நிலை என்ன?
    3.திருமணவாழ்கை எப்படியிருக்கும்?
    என கேள்வி கேட்கவும்.
    எனக்கு இந்த 3ம் உருப்படவில்லை!
    என் ஜாதகம்பார்க்க உங்களால் முடியாவிட்டால். வாசகர்கள் இடம்
    கேட்கவும்.
    ksakthivel_india@yahoo.com
    bye.......

    ReplyDelete
  5. அருமையான குறிப்பு. இரண்டு நாள் வாத்தியார் விடுப்பில் சென்றது, கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலை பார்த்திருந்தேன் போல ஆகி விட்டது.

    நாளை வாத்தியாரின் பாடத்தை எதிர்பார்க்கிறோம்.


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி

    ReplyDelete
  6. தேன் துளிகளின் தொகுப்பு தித்திக்கிறது.

    பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  7. Dear subbiah sir,
    As you said" all the two legs can walk,but not all the two hands are ready to write"........THEN AND THERE ALL WHO HAVING TWO EYES CAN READ SOME INTERESTING WRITINGS FROM THE PERSON LIKE YOU.........GOOD MORNING

    ReplyDelete
  8. அருமையான 'பஞ்ச் டயாலாக்' எல்லாமே நன்றாக உள்ளன.

    அதிலும் 13 உங்களை அருகில் இருந்து பார்த்த யாரோ ஒருவர் கூறியதாக இருக்க வேண்டும்.

    அனுபவப் பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  9. சிந்தனை துளிகள் அருமை .6 வது சிந்தனை துளி மிக அருமை .

    ReplyDelete
  10. அருமையான குறிப்புகள்

    ReplyDelete
  11. அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்
    அய்யாவும் மனிதர்தானே ..அவருக்கும் சொந்த வேலைகள் உண்டுதானே என் போன்ற மாணவர்களின் தொல்லையில் இருந்து ஒரு ரெண்டு நாள் விடுதலை .. இருக்கட்டுமே.. !!

    ReplyDelete
  12. /////Blogger Kirupanandan A said...
    பதிவு வெளிவராததற்கு இதுதான் காரணமா? நான் கூட அந்த கதையில் வந்தது போல் யாரோ வாத்தியாரின் நெற்றிப் பொட்டில் துப்பாய்க்கியை வைத்து பதிவு எழுத கூடாது என்று மிரட்டி விட்டார்களோ என்று நினைத்தேன்./////

    உங்களின் கற்பனையான நினைப்பு வாழ்க! நானும் அதுபோன்ற நபர் ஒருத்தர் வந்தால் பரவாயில்லை என்று காத்துக்கொண்டிருக்கிறேன்!:)-

    ReplyDelete
  13. /////Blogger மதி said...
    அனைத்தும் நன்றாக உள்ளது...பகிர்வுக்கு நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger Regunathan Srinivasan said...
    அய்யா,
    காலை பொழுதில் நல்ல கருத்துகளை கேட்பது நன்மையை தரும் என்பது எனது நம்பிக்கை.இன்று எனது பிறந்தநாள் என்பதும் ,நீங்கள் நல்ல கருத்தக்களை சொல்வதும் எனக்கு சந்தோஷத்தை கொடுகிறது.
    பணிவுடன்,
    S . ரகுநாதன்/////

    அப்படியா? உங்களுக்கு எங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    எண்பதும் நூறும் கண்டு இனிதாக வாழ்க!

    ReplyDelete
  15. /////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்...
    வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்
    அற்புதம் !!!
    ஆனால் நான் வளமாக இல்லை !
    நான் 13/12/1970 - 02.05(am)
    தாராபுரம்.
    இதை வகுப்பறையில் பதிவிட்டு
    இந்த அன்பரின்...
    1.பொருளாதார நிலை என்ன?
    2.தொழில் நிலை என்ன?
    3.திருமணவாழ்கை எப்படியிருக்கும்?
    என கேள்வி கேட்கவும்.
    எனக்கு இந்த 3ம் உருப்படவில்லை!
    என் ஜாதகம்பார்க்க உங்களால் முடியாவிட்டால். வாசகர்கள் இடம்
    கேட்கவும்.
    ksakthivel_india@yahoo.com
    bye.......////

    மாணவர்களின் ஜாதகங்களைப் பார்த்துப் பதில் சொல்ல ஆரம்பித்தால் என்ன ஆகும் என்று உங்களுக்குத் தெரியாதா? எத்தனை நூறு மின்னஞ்சல்கள் வரும் தெரியுமா? ஆகவே இறைவனை வழிபடுங்கள். நல்ல தசா புத்திகள் வரும்போது உங்கள் துன்பங்கள் மறைந்துவிடும். பொறுத்திருப்பது ஒன்றுதான் நீங்கள் செய்ய வேண்டியது!

    ReplyDelete
  16. ////Blogger BLAKNAR said...
    அருமையான குறிப்பு. இரண்டு நாள் வாத்தியார் விடுப்பில் சென்றது, கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலை பார்த்திருந்தேன் போல ஆகி விட்டது.
    நாளை வாத்தியாரின் பாடத்தை எதிர்பார்க்கிறோம்.
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி////

    அப்படியா? பாடல் வரிகளால் நெஞ்சைத் தொட்டுவிட்டு விட்டீர்கள்! நன்றி!

    ReplyDelete
  17. ////Blogger இராஜராஜேஸ்வரி said...
    தேன் துளிகளின் தொகுப்பு தித்திக்கிறது.
    பாராட்டுக்கள்.!/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  18. /////Blogger Hari Haran said...
    Dear subbiah sir,
    As you said" all the two legs can walk,but not all the two hands are ready to write"........THEN AND THERE ALL WHO HAVING TWO EYES CAN READ SOME INTERESTING WRITINGS FROM THE PERSON LIKE YOU.........GOOD MORNING/////

    அதுவும் உண்மைதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /////Blogger kmr.krishnan said...
    அருமையான 'பஞ்ச் டயாலாக்' எல்லாமே நன்றாக உள்ளன.
    அதிலும் 13 உங்களை அருகில் இருந்து பார்த்த யாரோ ஒருவர் கூறியதாக இருக்க வேண்டும்.
    அனுபவப் பகிர்வுக்கு நன்றி ஐயா!/////

    என்னைப்போல இன்னும் சிலர் இருக்கலாம். ஆகவே அதைப் பொதுக் கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  20. ////Blogger lrk said...
    சிந்தனை துளிகள் அருமை .6 வது சிந்தனை துளி மிக அருமை .////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. ////Blogger Senthil Nathan said...
    அருமையான குறிப்புகள்////

    நல்லது. நன்றி செந்தில்நாதன்!!

    ReplyDelete
  22. ////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்
    அய்யாவும் மனிதர்தானே ..அவருக்கும் சொந்த வேலைகள் உண்டுதானே என் போன்ற மாணவர்களின் தொல்லையில் இருந்து ஒரு ரெண்டு நாள் விடுதலை .. இருக்கட்டுமே.. !!////

    தொல்லை என்று எதையும் நான் நினைப்பதில்லை. அன்புத் தொல்லை என்று வேண்டுமென்றால் சொல்லலாம். நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  23. ////Blogger Yarlpavanan Kasirajalingam said...
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. நல்ல கருத்துக்கள்..
    தொடருங்கள்.

    ReplyDelete
  25. அருமையான பகிர்வு.இந்த நாள் நல்ல நாள்.

    ReplyDelete
  26. wow... மிகவும் அருமை... அனைத்தும் அறநேறியை சார்ந்தே உள்ளது. மிக்க நன்றி

    ReplyDelete
  27. Blogger Chandrasekaran Suryanarayana said...
    நல்ல கருத்துக்கள்..
    தொடருங்கள்./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. ////Blogger Kamala said...
    அருமையான பகிர்வு.இந்த நாள் நல்ல நாள்./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  29. /////Blogger Remanthi said...
    wow... மிகவும் அருமை... அனைத்தும் அறநேறியை சார்ந்தே உள்ளது. மிக்க நன்றி/////

    ஆமாம். அறம் இன்றி நல்ல வாழ்க்கை ஏது? அதனால் தான் அவ்வையார் அறம் செய்ய விரும்பு என்ற முதல் வரியில் தன்னுடைய அறிவுரைகளைத் துவங்கினார்! நன்றி நன்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com