மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.8.13

Short Story: சிறுகதை: நகரங்களுக்கு நுழைவாயில் மட்டுமே உண்டு!

 

Short Story: சிறுகதை: நகரங்களுக்கு நுழைவாயில் மட்டுமே உண்டு!

ஆமாம்! நகரங்களுக்கு நுழைவாயில் மட்டுமே உண்டு! உள்ளே நுழைந்து வீட்டை வாங்கிக் குடியேறியவர்களுக்கு வெளிவாயில் கிடையாது. அதாவது
அந்த ஊரை விட்டு அவர்களால் வெளியே வரமுடியாது! இதை ஒரு கதை மூலம் விளக்குகிறார் நமது வேப்பிலை சுவாமி! அனைவரும் படித்துப்
பாருங்கள். அவர் சொல்வது சரிதானா என்று உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------------------
அடுக்கு மாடிகளாகும் மனைகள்

சரவணன் .. சென்னையில் வேலை பார்க்கும்  இளைஞன். தன் கிராமத்திற்குச் சென்று  ”நான் சென்னையில் ஒரு வீடு வாங்கப்போகிறேன். 5 லட்சம் பணம் வேண்டும்” என்று” தன் தந்தையிடம் கேட்டான்.

அதற்கு அவர்,”இன்னும் உனக்குத் திருமணமே ஆகவில்லை அதற்குள் என்ன அவசரம்?” என்றார்.

இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கிவிடலாம் பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும். தினம் தினம் விலை ஏறி கொண்டே போகிறது என்றான்.

யோசித்த அப்பா,” சரியான முடிவு தான். ஆனால் நான் ஒரு விவசாயி உன்னை படிக்க வைக்க வாங்கிய கடனை உன் சம்பளத்தில்தான் அடைக்க ஆரம்பித்து இருகின்றோம்.திடிரென்று 5 லட்சம் கேட்டால் எப்படி? என்றார்.

நமது விவாசய நிலத்தில் ஒரு பகுதியை விற்றுவிட்டு இங்கு வாங்கிய கடனை அடைத்துவிட்டு மீதம் உள்ள பணத்தில் சென்னையில் வீடு வாங்கலாம்
என்றான் அவன்

”5 லட்சம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள தொகைக்கு என்ன பண்ணுவாய்?” என்று கேட்க, மகன், அதற்கு வங்கிகள் கடன் தரும். அந்தக் கடனை
மாதத் தவனை முறையில் 20 வருடத்திற்குள் செலுத்தி விடலாம்” என்றான்.

வீடு எப்படி இருக்கும் என்று அவர் கேட்க, 300 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு.சகல வசிதிகளும் இருக்கும். அடுக்குமாடி என்றான்

அவன். அவர் முகம் மாறியது. ஆனால் மகன் ஆசைக்கேற்ப ஒரு பகுதி விவசாய நிலத்தை விற்று, வீடு வாங்கப் பணம் கொடுத்தார்.

வீடு வாங்கிய பின்பு அப்பாவைச் சென்னைக்கு வாருங்கள் என்றான். அவரும் புதிய வீட்டைப் பார்க்க மிகுந்த ஆசையோடு வந்து சேந்தார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் நல்ல இடைவெளி விட்டே பார்த்துப் பழகிய மனிதர், இப்படி ஒரு வீட்டைப் பார்த்து அசந்து நின்றார்.

உள்ளே சென்று, 900 சதுர அடி அளவுள்ள வீட்டைப் பார்த்து, ”இதை வாங்கவா நமக்குச் சோறு போட்ட நிலத்தை விற்கச் சொன்னாய்?” என்றார்
”இது எல்லாம் உங்களுக்கு புரியாது இங்கே அப்படித்தான். என்னோட லைப் சென்னையில்தான். இனிமேல் நம்ம ஊருக்கு விசேசத்துக்கு மட்டும்
தான் வர போறேன். இங்கே தனி வீடு எல்லாம் வாங்க முடியாது. அதுக்கு கோடிக் கணக்கில் பணம் வேண்டும். பேசாம தூங்குங்க! வந்தது அசதியா
இருக்கும்” என்றான். மனம் கேட்காமல், மனதில் வருத்தத்துடன் அவரும் அன்று உறங்கிவிட்டார்.
]
                                  &&&&&&&&&&&&&&&&&&&&&&

மாலை வேளை வீட்டை விட்டு வெளியே வந்தார். மற்ற வீடுகள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தன. கீழ இறங்கி வந்தவர், சில பெற்றோர்கள் தங்கள்
சிறு குழந்தைகளைப் பூங்காவில் விளயாட வைத்து கொண்டு இருந்ததைப் பார்த்தார்.

அவருக்கு மனதில் ஒரு சந்தோஷம். அதைப் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார். பக்கத்தில் வந்த செக்யூரிட்டி,” அய்யா நீங்க சரவணன் சார்
அப்பாவா?” என்றான்.

ஆமாம் என்றார்.

”சார் சொல்லிட்டுத்தான் போனாரு. வாங்க சார் டி சாப்பிடலாம்” என்றான்.

சரி என்று நகரும் போது, “ஏனப்பா இங்கே யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொள்ள மாட்டார்களா? எல்லாம் வீடும் பூட்டியிருக்கு? சில
வீடுகளின் கதவு அடைத்திருக்கு?”

அது எல்லாம் அப்படிதான் அய்யா. எல்லோருக்கும் நிறைய வேலை. காலையில ஆரம்பிச்சு நைட் வரைக்கும். பல வீட்ல கணவன் மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க. அவுங்க சின்னப் பசங்களை பக்கதுல இருக்க ஹோம்ல விட்ருவாங்க. நைட்ல யாரு முதல வராங்களோ அவுங்க
கூட்டிட்டு வருவாங்க. பெத்த புள்ளையை யாருகிட்டயோ விட்டு விட்டுப் போவார்கள்!”

”ஏன் அவுங்க அப்பா அம்மா எல்லாம் இங்க வந்து உடன் தங்கியிருக்க மாட்டார்களா?”

”அதுவா இவங்க இருக்கிற பிஸியில, பெத்தவுங்களப் பார்த்துக் கொள்ள முடியுமா? அதனால ஒன்னு அவங்க சொந்த ஊர்லயே இருப்பாங்க! அல்லது இவங்க அவங்களை முதியோர் இல்லத்தில சேர்த்து விட்டுருவாங்க!”

இதைக் கேட்ட ஆச்சிரியத்தில் பெரியவர் நின்று கொண்டு இருக்க அவன் தொடர்ந்து சொன்னான், “ இதோ போறாரே சேகர்சார், அவர் உங்க
வீட்டுக்கு எதிர்த்த வீடுதான். இப்போ கூட இவர் தன் பையனை சைல்ட் கேர் ஹோமிலிருந்துதான் கூட்டிகிட்டு வர்றாரு!.

திகைத்துப் போனார் பெரியவர்.

தான் மகனிடம் எதுவும் கேட்காமல் ஒரு வாரம் பல்லை கடித்து கொண்டு இருந்தவர், ஒரு நாள் மாலை, கீழே நின்று கொண்டு இருக்கும் போது ..
பக்கத்தில் வந்த சேகரைப் பார்த்தார்.

”என்ன தம்பி ஆச்சரியமா இருக்கே? இன்னக்கி வேலை இல்லையா?”

“இல்லை அய்யா. லீவ் போட்டுட்டேன்.. எதுவுமே பிடிக்கலே. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு!”

”ஓஹோ, சரி சரி! எங்கே உங்கள் மனைவி?”

”அவளுக்கு செகன்ட் ஷிபிட். வர நைட் 12 மணி ஆகும். அதுவரைக்கும் நான் பையனைப் பார்த்துக்குவேன். அப்புறம் காலையில நான் வேலைக்கு
போயிருவேன். அவ வீட்டு வேலையையெல்லாம் முடிச்சுட்டு பையனைப் பக்கத்துக்கு ஹோம்ல விட்டுட்டு வேலைக்கு போய்விடுவா”

”அப்போ நீங்க ரெண்டு பேரும் பேசிக்கவே மாட்டிங்களா?”

”சண்டே மட்டும்தான் பேச முடியும் அதுவம் அவளுக்கு முன்றாவது ஷிபிட் நைட் 10 மணிக்கு போய் கலையில் 6 மணிக்கு வருவா. அப்போ ஒரே
தூக்கம் தான். அன்று சாய்ந்திரம் எதாவது ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வருவோம்”

”எதற்குத் தம்பி இப்படிக் கஷ்டப்படனும்?”

”அப்படி இருந்தாத்தான் இங்கே வாழமுடியும்” அவன் முத்தாய்ப்பாய் இதைச் சொன்னான்

அதற்கு அந்த பெரியவர், “நீங்க சொல்றது தப்பு. இப்படி இருந்தாத்தான் வசதியா வாழ முடியும் அப்படீன்னு சொல்லுங்க!” என்றார்.

அதை கேட்டவுடன் அவனுக்கு செவிட்டில் அறைந்தது போல இருந்தது.

                                     &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அடுத்த நாள் தான் மகனிடம் நான் ஊருக்கு போறேன் என்றார் பெரியவர். ”என்ன அப்பா இவ்வளவு அவசரம்? என்று கேட்டவனுக்கு அவர் பதில்
உரைத்தார்:

”ஒன்னும் இல்லை. படிச்சா நல்லா இருக்கலாம்  என்ற எண்ணத்தில்தான் கடன் வாங்கி உன்னை நான் படிக்க வச்சேன். ஆனா நீ இன்னும் உன்
வாழ்கையையே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள அடுத்த 20 வருஷத்துக்கு கடன்காரன் ஆயிட்டியே!. இனிமே உனக்கு கல்யாணம் பண்ண,
அவளுக்கும் அப்புறம் உன் குழந்தைக்கும் சேர்த்து உன் மனைவியும் வேலைக்கு போகணும். கடைசியா படிப்பு உன்னை ஒரு கடன் காரனாகத்தான்
ஆக்கும். இது தெருந்திருந்தால் உன்னை நான் படிக்க வைத்திருக்க மாட்டேன். விவசாயம் செஞ்சாலும் நான் யார்கிட்டயும் உன் படிப்பைத் தவிர
வேறு எதற்கும் கடன் வாங்கவில்லை. இனிமே உன் வாழ்கைக்கையில் நிம்மதியே இருக்காது என்பதை நினைக்கும்போது கஷ்டமா இருக்கு! மீண்டும்
திரும்பி வருவாய் என்று நம்பிகையுடன் கிளம்புகிறேன்”  என்று தனது கிராமத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்  அவர்.

அவருக்கு எப்படித் தெரியும் இந்த சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும்தான் உள்ளது. எக்ஸிட் கிடையாது என்று!!!!!!!!!!!!
-----------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கதையை அறியத்தந்தவர் விசு அய்யர், சென்னை.

சில இடங்களில் திருத்தங்களை மட்டும் நான் செய்துள்ளேன்.

”சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும்தான் உள்ளது. எக்ஸிட் கிடையாது என்று!!!!!!!!!!!!” என்ற அருமையான வரியுடன் கதை முடிந்ததால், அழுத்தமாக
மனதில் வந்து அமர்ந்து கொண்டு விட்டது. தனிச் சிறப்பையும் அது பெற்று விட்டது. அதன் மேன்மை கருதி, இன்று ஏற்றவிருந்த ஜோதிடப் பாடத்தை
சற்று நிறுத்தி வைத்துள்ளேன். எங்கே போய்விடப் போகிறது அது? நாளை அது வெளியாகும். பொறுத்திருங்கள்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==

25 comments:

  1. Ayya
    story tells the true life of city

    ReplyDelete
  2. நேற்று ஒரு பாட்டுக் கேட்டேன்... என்னடா இது இந்தனை அப சுரத்திலே இருக்கிறது இதையும் ரசிக்கவும் ஆள் இருக்கிறதே என்ற விரக்தியிலே இருக்கும் போது கூடவே இந்த உணர்வும் வந்தது...

    இன்னொன்னக் கவனிச்சாயா அந்தப் பாடலில் வரும் கருத்துக்கு ஒப்பவே அந்த மெட்டு இசை அமைந்திருக்கிறது என்று....

    அப்படித்தான் பலரும் அலைகிறார்கள்! என்றும் தோன்றிய போது சரி தான் அந்தப் பாட்டின் மெட்டும் சரியாகவே இருப்பதாகவே தோன்றியது... அந்தப் பாடல் இது தான்....

    காசு, பணம், துட்டு, மணி, மணி, மணி...
    காசு............... பணம்.............. துட்டு................. மணி..............

    என்பது தான் அந்தப் பாடல்.

    இன்று அலுவலகம் வரும் போது (பள்ளிக்குச் செல்லும் எனது பெண்ணும் என்னோடு இருந்தாள் !) வானொலியில் திருவாளர் சுகி சிவம் அவர்களின் சிறு சொற்பொழிவு ஒலிபரப்பக் கேட்டோம்...

    அவர் கூறினார் " நான் சில பல நேரங்களில் புரட்சி கரமானக் கருத்துக்களை வானொலி, தொ.கா. யில் பேசி விடுவதுண்டு பேசி விட்டு வீட்டிற்கு வந்த உடன் தொலைப் பேசி மணி அடிக்கும், எதிர் முனையில் என்னுடன்; நான் பேசியக்கருத்தை எதிர்த்து வாதிட்டு தர்க்கம் செய்ய முயல்வார்கள்..

    நானும் அவர்களுக்கு நான் கூறிய உட்கருத்தை சொல்லி அவர்களை விளங்கச் செய்ய முயல்வேன்..... நாளடைவில் அதை நான் உணர்ந்துக் கொண்டேன் அது நேர வீணடிப்பு என்று ... இப்போதெல்லாம் அது உங்கள் கருத்து, அபிப்ராயம் அதையே தாராளமாக தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கலாம். நன்றி என்று சொல்லி விடுவதுண்டு...

    சிலநேரங்களில் அவர்களின் கருத்து சரியாகவும் இருக்கலாம்.... இருந்தும் நான் கூறும் கருத்தை அவர்கள் புரிந்துக் கொள்ள கூடிய நிலையில் அவர்களின் புத்தி பலமும், ஆத்ம (அறிவு) பலமும் இல்லாமல் இருக்கும்.. ஒவ்வொருவரும் தனித்த தனி அதனால் யாரும் யாரையும் திருத்த முடியாது ....." என்று

    எனது பெண்ணிடம் இதை சமீப காலமாக என்னோடு காரில் அவள் தனித்துப் பயணம் செய்யும் போதெல்லாம் பல நேரங்களில் நான் சொல்லிக் கொண்டே வரும் இந்தக் கருத்தை அவளும் செவிமடுத்த அந்நேரம்...

    அவளைப் பார்த்தேன் அவள் புன்முறுவதை கண்டு சரி அவள் எதை நினைக்கிறாள் என்பதை உணர முடிந்தது....

    -- தொடரும்.....

    ReplyDelete
  3. அய்யரின் கருத்து பொதிந்தக் கதை அருமை!
    இங்கே வெளிப்படையாக ஒன்றை நானும் ஒத்துக் கொள்கிறேன்.. இது போன்ற ஒரு சூழலை சில அற்ப வருடங்கள் நானும் அனுபவித்து இருக்கிறேன் இல்லை தொலைத்து இருக்கிறேன் என்பதே உண்மை.. மிக விரைவில் சுதாரித்தும் கொண்டும் விட்டேன்.

    நல்ல வேலை எனது மனைவியை நான் வேலைக்கு போகச் சொல்லவில்லை... அவள் அதை எதையோ (எதையோ, என்ன நாலு காசு நாமும் சம்பாதித்தால் இன்னும் பெருமையாக இருக்குமோ என்றக் கனவு தான் அது) இழந்ததைப் போல் வருத்தமுறும் நேரமெல்லாம்.. வீட்டில் இருந்து குடும்பத்தை கவனிப்பது எத்தனைப் புண்ணியம் அது எல்லோருக்கும் வைப்பதில்லை என்று ஆறுதல் கூறுவதுண்டு... சுய புராணம் என்றாலும் அய்யரின் கதைக்கு பொருத்தமானது என்பதாலே... சரி!...
    *******************************************************************************
    உண்மை தான், அத்தனையும் உண்மை தான்... என்ன செய்வது, உலகம் போற போக்குல அந்த வயசுல ஆயிரத்தில் ஒருத்தன தான் இப்படி யோசிப்பாணுக... அப்படி இல்லையினா.. அது எதற்காக பணம் வேண்டுமென்று கஷ்டப் பட்டார்களோ அதை தொலைத்து விட்டுப் பணத்தை மட்டும் கையில் வைத்துக் கொண்டு இருப்பார்கள் பாவம்..

    அதுக்கு தான் நம்ம வாத்தியார் அழகாச் சொல்லுவார்... அதை அனுபவிக்கத் தான் மகன் இருக்கான் இல்லைன்னா.. இருக்கிறதே இருக்கு மருமகன் வருவான் என்று...

    வேப்பிலையாகக் கசந்தாலும் அய்யரின் கருத்து பொதிந்தக் கதை (கதை யல்ல நிஜம்) நல் மருந்தே!

    பகிர்விற்கு நன்றிகள் ஐயாக்களே!

    ReplyDelete

  4. ”சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும்தான் உள்ளது. எக்ஸிட் கிடையாது என்று!!!!!!!!!!!!

    சென்னை வாழ்விற்கு மட்டுமல்ல

    வெளிநாட்டு வாழ்விற்கும் தான் ...!

    ReplyDelete
  5. குருவிற்கு வணக்கங்கள்,
    கதை அருமை. நன்றி. தங்கள் மாணவன், ரெங்கா

    ReplyDelete
  6. இரட்டை வரி புதிர்க் 'கிறளி'ல் இருந்து உரைநடைக்கு,( பெயரை மாற்றிக் கொண்டதைப் போல),மாறிய மேன்மைக்கு விசு ஐயர் என்ற வேப்பிலை சுவாமிகளுக்கு நன்றிகள்.

    ("இப்படி விவரமாச் சொன்னாத்தானே புரியுது"‍‍=வடிவேலு)

    பாடல் எதையும் சுழல விடாததும் புதுமைதான்.

    நாங்கள் எல்லாம் வாரந்தோறும் எழுதி, வகுப்பறை என்ற வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது, கரையில் உட்கார்ந்து பல்குத்திக் கொண்டிருந்த சுவாமிகள் எல்லோரும் கரைக்கு வந்து தலை துவட்டும் போது, 'தொபக்கடீர்' என்று வகுப்பறை வெள்ளத்தில் குதித்துள்ளார்.'பத்தோட‌ பதினொண்ணு, அத்தோட‌ இது ஒண்ணு'என்று அப்போது இருக்க விரும்பாத சுவாமிகள் தற்போது தனிப்பாதை
    தனக்கென வகுத்துள்ளார்.நிறைந்த மனதுடன் வரவேற்கிறேன்.

    பல விஷயங்களில் வேப்பிலை சுவாமிகளுக்கு அழுத்தமான கருத்துக்கள் உண்டு.எனவே அவர் தொடர்ந்து எழுதினால் எல்லோருக்கும் நன்மையாக இருக்கும். அவருடைய கருத்துக்களின் மீதுநடை பெறும் சம்வாதம்(சச்சரவில்லாத கருத்துப் பறிமாற்றம்)அறிவு வளர்ச்சிக்கு உதவும்.
    எனவே வேப்பிலை சுவாமிகள் தொடர்ந்து எழுதவும், அதனை வாத்தியார் ஐயா அவர்கள் தொடர்ந்து வெளியிடவும் அன்புடனும் பணிவுடனும் கேட்டுக்கொள்கிறேன்.





    ReplyDelete
  7. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே"

    'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு?' என்று ஒருகாலத்தில் கூறினார்கள்.
    அதுமாறவில்லையா?

    கருங்கடலைத் தாண்டுவது பாவம்;தாண்டினால் பரிகாரம் செய்துதான் ஊருக்குள் வரவேண்டும் என்று ஒரு காலம். அது மாறவில்லையா?

    பாடுவதும், ஆடுவதும் தாசிகளின் வேலை என்று இருந்தது போக,கலை அனைவருக்கும் பொது என்று மாறவில்லையா?

    தொழில்முறை சாதி அமைப்பு மாறி, யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலும் செய்யலாம் என்ற நிலைக்கு மாற்றம் வரவில்லையா?

    இதுபோல இன்னும் நூறு சொல்லலாம்.

    இந்த மாற்றங்களைப் போலத்தான்,

    நகர்புறத்தை நோக்கி நகர்தல் ('மைக்கிரேஷன்') என்பதும். 'கெட்டும் பட்டணம் சேர்' என்பதும் இங்கே உன்னற்பாலது.

    கதையில் வரும் மைந்தன் நகர்புறத்திற்கு நகர்கிறார்.அங்குள்ள யதார்த்ததிற்கு
    தன்னை சரி(அட்ஜெஸ்ட்)செய்து கொள்கிறார்.கிராமப்புறத்தை விட்டு மனத்தால் நகராத தந்தை யதார்த்ததை பார்க்க மறுக்கிறார். காலம் மாறிய சூழலில் அவருக்கு அந்த அஜெஸ்ட்மெண்ட் வரவில்லை.

    'அந்தக்காலத்திலே....'என்ற பெரிசுகளின் குரலே கதையில் ஒலிக்கிறது.
    இந்தக் காலத்து யதார்த்ததைப் புரிந்து கொள்ளாத முதியோர்களின் அங்கலாய்ப்புதான் இந்தக் கதை அல்லது கட்டுரை.

    கட்டுரையின் கட்டமைப்பையும், தெளிவான நடையையும் பாராட்டுகிறேன்.
    கருத்துக்கள் மேல் சம்வாததிற்கு உரியவை.

    ReplyDelete
  8. மிகச்சரியான கருத்துதான் ஐயா. நகர வாழ்வு என்பது நரக வாழ்வாக மாறி பல காலம் ஆயிற்று.

    ReplyDelete
  9. /////Blogger Kalai Rajan said...
    Ayya
    story tells the true life of city/////

    உண்மைதான். நன்றி கலைராஜன்!

    ReplyDelete
  10. ////Blogger G Alasiam said...
    நேற்று ஒரு பாட்டுக் கேட்டேன்... என்னடா இது இந்தனை அப சுரத்திலே இருக்கிறது இதையும் ரசிக்கவும் ஆள் இருக்கிறதே என்ற விரக்தியிலே இருக்கும் போது கூடவே இந்த உணர்வும் வந்தது...
    இன்னொன்னக் கவனிச்சாயா அந்தப் பாடலில் வரும் கருத்துக்கு ஒப்பவே அந்த மெட்டு இசை அமைந்திருக்கிறது என்று....
    அப்படித்தான் பலரும் அலைகிறார்கள்! என்றும் தோன்றிய போது சரி தான் அந்தப் பாட்டின் மெட்டும் சரியாகவே இருப்பதாகவே தோன்றியது... அந்தப் பாடல் இது தான்....
    காசு, பணம், துட்டு, மணி, மணி, மணி...
    காசு............... பணம்.............. துட்டு................. மணி..............
    என்பது தான் அந்தப் பாடல்.
    இன்று அலுவலகம் வரும் போது (பள்ளிக்குச் செல்லும் எனது பெண்ணும் என்னோடு இருந்தாள் !) வானொலியில் திருவாளர் சுகி சிவம் அவர்களின் சிறு சொற்பொழிவு ஒலிபரப்பக் கேட்டோம்...
    அவர் கூறினார் " நான் சில பல நேரங்களில் புரட்சி கரமானக் கருத்துக்களை வானொலி, தொ.கா. யில் பேசி விடுவதுண்டு பேசி விட்டு வீட்டிற்கு வந்த உடன் தொலைப் பேசி மணி அடிக்கும், எதிர் முனையில் என்னுடன்; நான் பேசியக்கருத்தை எதிர்த்து வாதிட்டு தர்க்கம் செய்ய முயல்வார்கள்..
    நானும் அவர்களுக்கு நான் கூறிய உட்கருத்தை சொல்லி அவர்களை விளங்கச் செய்ய முயல்வேன்..... நாளடைவில் அதை நான் உணர்ந்துக் கொண்டேன் அது நேர வீணடிப்பு என்று ... இப்போதெல்லாம் அது உங்கள் கருத்து, அபிப்ராயம் அதையே தாராளமாக தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கலாம். நன்றி என்று சொல்லி விடுவதுண்டு...
    சிலநேரங்களில் அவர்களின் கருத்து சரியாகவும் இருக்கலாம்.... இருந்தும் நான் கூறும் கருத்தை அவர்கள் புரிந்துக் கொள்ள கூடிய நிலையில் அவர்களின் புத்தி பலமும், ஆத்ம (அறிவு) பலமும் இல்லாமல் இருக்கும்.. ஒவ்வொருவரும் தனித்த தனி அதனால் யாரும் யாரையும் திருத்த முடியாது ....." என்று
    எனது பெண்ணிடம் இதை சமீப காலமாக என்னோடு காரில் அவள் தனித்துப் பயணம் செய்யும் போதெல்லாம் பல நேரங்களில் நான் சொல்லிக் கொண்டே வரும் இந்தக் கருத்தை அவளும் செவிமடுத்த அந்நேரம்...
    அவளைப் பார்த்தேன் அவள் புன்முறுவதை கண்டு சரி அவள் எதை நினைக்கிறாள் என்பதை உணர முடிந்தது....
    -- தொடரும்...../////

    கதை, கட்டுரைகளுக்குதான் தொடரும் என்று போடுவது வழக்கம். நீங்கள் என்ன ஆலாசியம் பின்னூட்டத்திற்கு தொடரும் என்று போட்டிருக்கிறீர்கள்?

    ReplyDelete
  11. /////Blogger G Alasiam said...
    அய்யரின் கருத்து பொதிந்தக் கதை அருமை!
    இங்கே வெளிப்படையாக ஒன்றை நானும் ஒத்துக் கொள்கிறேன்.. இது போன்ற ஒரு சூழலை சில அற்ப வருடங்கள் நானும் அனுபவித்து இருக்கிறேன் இல்லை தொலைத்து இருக்கிறேன் என்பதே உண்மை.. மிக விரைவில் சுதாரித்தும் கொண்டும் விட்டேன்.
    நல்ல வேலை எனது மனைவியை நான் வேலைக்கு போகச் சொல்லவில்லை... அவள் அதை எதையோ (எதையோ, என்ன நாலு காசு நாமும் சம்பாதித்தால் இன்னும் பெருமையாக இருக்குமோ என்றக் கனவு தான் அது) இழந்ததைப் போல் வருத்தமுறும் நேரமெல்லாம்.. வீட்டில் இருந்து குடும்பத்தை கவனிப்பது எத்தனைப் புண்ணியம் அது எல்லோருக்கும் வைப்பதில்லை என்று ஆறுதல் கூறுவதுண்டு... சுய புராணம் என்றாலும் அய்யரின் கதைக்கு பொருத்தமானது என்பதாலே... சரி!...
    *******************************************************************************
    உண்மை தான், அத்தனையும் உண்மை தான்... என்ன செய்வது, உலகம் போற போக்குல அந்த வயசுல ஆயிரத்தில் ஒருத்தன தான் இப்படி யோசிப்பாணுக... அப்படி இல்லையினா.. அது எதற்காக பணம் வேண்டுமென்று கஷ்டப் பட்டார்களோ அதை தொலைத்து விட்டுப் பணத்தை மட்டும் கையில் வைத்துக் கொண்டு இருப்பார்கள் பாவம்.. அதுக்கு தான் நம்ம வாத்தியார் அழகாச் சொல்லுவார்... அதை அனுபவிக்கத் தான் மகன் இருக்கான் இல்லைன்னா.. இருக்கிறதே இருக்கு மருமகன் வருவான் என்று... வேப்பிலையாகக் கசந்தாலும் அய்யரின் கருத்து பொதிந்தக் கதை (கதை யல்ல நிஜம்) நல் மருந்தே! பகிர்விற்கு நன்றிகள் ஐயாக்களே!/////

    இந்த முறை வேப்பிலையைப் பொடித்துத் தேனில் கலந்து கொடுத்திருக்கிறார் அய்யர்.

    ReplyDelete
  12. ////Blogger இராஜராஜேஸ்வரி said...
    ”சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும்தான் உள்ளது. எக்ஸிட் கிடையாது என்று!!!!!!!!!!!!
    சென்னை வாழ்விற்கு மட்டுமல்ல
    வெளிநாட்டு வாழ்விற்கும் தான் ...!/////

    ஆமாம். ஆமாம். உண்மை! உண்மை. நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. Blogger renga said...
    குருவிற்கு வணக்கங்கள்,
    கதை அருமை. நன்றி. தங்கள் மாணவன், ரெங்கா////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ரெங்கா!

    ReplyDelete
  14. /////Blogger kmr.krishnan said...
    இரட்டை வரி புதிர்க் 'கிறளி'ல் இருந்து உரைநடைக்கு,( பெயரை மாற்றிக் கொண்டதைப் போல),மாறிய மேன்மைக்கு விசு ஐயர் என்ற வேப்பிலை சுவாமிகளுக்கு நன்றிகள்.
    ("இப்படி விவரமாச் சொன்னாத்தானே புரியுது"‍‍=வடிவேலு)
    பாடல் எதையும் சுழல விடாததும் புதுமைதான்.
    நாங்கள் எல்லாம் வாரந்தோறும் எழுதி, வகுப்பறை என்ற வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது, கரையில் உட்கார்ந்து பல்குத்திக் கொண்டிருந்த சுவாமிகள் எல்லோரும் கரைக்கு வந்து தலை துவட்டும் போது, 'தொபக்கடீர்' என்று வகுப்பறை வெள்ளத்தில் குதித்துள்ளார்.'பத்தோட‌ பதினொண்ணு, அத்தோட‌ இது ஒண்ணு'என்று அப்போது இருக்க விரும்பாத சுவாமிகள் தற்போது தனிப்பாதை தனக்கென வகுத்துள்ளார்.நிறைந்த மனதுடன் வரவேற்கிறேன்.
    பல விஷயங்களில் வேப்பிலை சுவாமிகளுக்கு அழுத்தமான கருத்துக்கள் உண்டு.எனவே அவர் தொடர்ந்து எழுதினால் எல்லோருக்கும் நன்மையாக இருக்கும். அவருடைய கருத்துக்களின் மீதுநடை பெறும் சம்வாதம்(சச்சரவில்லாத கருத்துப் பறிமாற்றம்)அறிவு வளர்ச்சிக்கு உதவும்.
    எனவே வேப்பிலை சுவாமிகள் தொடர்ந்து எழுதவும், அதனை வாத்தியார் ஐயா அவர்கள் தொடர்ந்து வெளியிடவும் அன்புடனும் பணிவுடனும் கேட்டுக்கொள்கிறேன்.////

    உங்களின் பெருந்தன்மையான பரிந்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  15. ////Blogger kmr.krishnan said...
    "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே"
    'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு?' என்று ஒருகாலத்தில் கூறினார்கள்.
    அதுமாறவில்லையா?
    கருங்கடலைத் தாண்டுவது பாவம்;தாண்டினால் பரிகாரம் செய்துதான் ஊருக்குள் வரவேண்டும் என்று ஒரு காலம். அது மாறவில்லையா?
    பாடுவதும், ஆடுவதும் தாசிகளின் வேலை என்று இருந்தது போக,கலை அனைவருக்கும் பொது என்று மாறவில்லையா?
    தொழில்முறை சாதி அமைப்பு மாறி, யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலும் செய்யலாம் என்ற நிலைக்கு மாற்றம் வரவில்லையா?
    இதுபோல இன்னும் நூறு சொல்லலாம்.
    இந்த மாற்றங்களைப் போலத்தான்,
    நகர்புறத்தை நோக்கி நகர்தல் ('மைக்கிரேஷன்') என்பதும். 'கெட்டும் பட்டணம் சேர்' என்பதும் இங்கே உன்னற்பாலது.
    கதையில் வரும் மைந்தன் நகர்புறத்திற்கு நகர்கிறார்.அங்குள்ள யதார்த்ததிற்கு
    தன்னை சரி(அட்ஜெஸ்ட்)செய்து கொள்கிறார்.கிராமப்புறத்தை விட்டு மனத்தால் நகராத தந்தை யதார்த்ததை பார்க்க மறுக்கிறார். காலம் மாறிய சூழலில் அவருக்கு அந்த அஜெஸ்ட்மெண்ட் வரவில்லை.
    'அந்தக்காலத்திலே....'என்ற பெரிசுகளின் குரலே கதையில் ஒலிக்கிறது.
    இந்தக் காலத்து யதார்த்ததைப் புரிந்து கொள்ளாத முதியோர்களின் அங்கலாய்ப்புதான் இந்தக் கதை அல்லது கட்டுரை.
    கட்டுரையின் கட்டமைப்பையும், தெளிவான நடையையும் பாராட்டுகிறேன்.
    கருத்துக்கள் மேல் சம்வாததிற்கு உரியவை./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  16. /////Blogger சரண் said...
    மிகச்சரியான கருத்துதான் ஐயா. நகர வாழ்வு என்பது நரக வாழ்வாக மாறி பல காலம் ஆயிற்று./////

    உண்மைதான். நன்றி சரண்!

    ReplyDelete
  17. வருகை பதிவு
    வழக்கம் போல்

    ReplyDelete
  18. இதை ஒரு கதையாக மட்டும் நான் பார்க்கவில்லை. இன்றைய எதார்த்தம் இது. சாதாரண ஊர்களில் பணியாற்றிவிட்டு, பணி நிறைவு பெற்றவர்கள் பலர் இங்குள்ள வீடு வாசல்களை விற்றுவிட்டு என் பிள்ளைகளிடம் போகிறேன் என்று சென்னைக்குப் போகிறார்கள். அங்கு பலமாடிக் கட்டடத்தில் ஒரு குடியிருப்பில் உங்கள் கதையில் உள்ளது போல கடனுக்கு வாங்கி எலிப்பொந்து போன்ற அங்கு வாழத் துவங்குகிறார்கள். முதலில் சில நாட்கள் வாழ்க்கை சுவையாகத்தான் போகும். பிறகு அடடா, சொந்த ஊரில் தனி வீடு, தோட்டம், அக்கம்பக்கத்தில் நல்லுறவு, குசலம் விசாரித்தல், உலாவச் செல்லுதல், கோயிலுக்குப் போதல், நண்பர்களுடன் உரையாடுதல் என்று இருந்த வாழ்க்கை இன்று இந்த எட்டடி குச்சுக்குள் மாட்டிக் கொண்டதே என்று மனம் வெம்பி, சொந்த ஊர் வீட்டை விற்றிருக்க வேண்டாம் என்று மனவேதனையோடு என்னிடம் சொன்னவர்கள் அதிகம். போதாதற்கு போன இடத்தில் மகனோ, மருமகளோ ஏதாவது சொல்லி விட்டால் தன்மானம் வேலை செய்யத் தொடங்குகிறது. என்னதான் இருந்தாலும் பழைய நாட்களைப் போல உறவுகளை இந்த நாளில் நகர வாழக்கை வாழும் மருமகளோ, மகனோ நம்மை அங்கு ஏற்றுக் கொள்வது அரிது. இதையெல்லாம் இன்றைய மாறுபட்ட சூழலில் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டியது நல்லது. ஐயர் எழுதிய கதை, ஆசிரியர் ஐயா திருத்தம் செய்திருந்தாலும், அரிய செய்திகளைக் கொண்ட அறிவார்ந்த கதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  19. என் நண்பர் ஒருவர் தஞ்சாவூர் மாவட்ட கிராமத்தில் பிறந்து தஞ்சையில் பணிபுரிந்தவர். கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போய் சம்பாதித்து தஞ்சையில் பெரிய வீடொன்றைக் கட்டி மாடியில் வாடகைக்கு வைத்துவிட்டு தான் கீழ் வீட்டில் செளக்கியமாக இருந்தார். ஒரு மகன், ஒரு மகள். இருவருக்கும் திருமணம் ஆயிற்று. மகன் சென்னையில் வேலை. இவர் பேசாமல் இங்கே இருந்திருக்க வேண்டியதுதானே. மகனோடு போகிறேன் என்று போனார். அவன் அங்கு கடன் வாங்கி 80 லட்சத்துக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்கினான். அப்பாவிடம் கணிசமான தொகையைக் கேட்டு வாங்கி முன் தொகையாகக் கட்டிவிட்டான். மீதியை இருபது ஆண்டுகளில் செலுத்த வேண்டும். நண்பர் கையில் இருந்த பணத்தையெல்லாம் கொட்டி மகனிடம் கொடுத்துவிட்டு தவிக்கிறார். இந்த வீட்டை கீழும் மேலும் வாடகைக்கு விட்டிருந்தாலும், மகன் வீட்டில் கணவன் மனைவியும் உட்கார்ந்திருப்பதில் வருந்துகிறார். இந்த நிலையில் மகன் மட்டும் சில காலம் வெளிநாடு பயணம் செல்கிறான். இவருக்கு ஓய்வு கிடைத்தும் மீண்டும் குடும்ப வாழ்க்கை, பிக்கல் பிடுங்கல். ஒரு நிலையில் விட்டுவிடுதலையாகி நிற்க வேண்டியது போக மீண்டும் கிரஹஸ்தாஸ்ரமம். என்றுதான் வானப்பிரஸ்த வாழ்க்கையை சொந்த ஊரில், தெரிந்த இடத்தில், தெரிந்த மனிதர்களுடன் அனுபவிப்பது?

    ReplyDelete
  20. வெளிநாட்டில் வாழும் எனக்கு இந்த கதையை மிகவும் பொருத்தி பார்க்க முடிகிறது.

    ReplyDelete
  21. ////Blogger வேப்பிலை said...
    வருகை பதிவு
    வழக்கம் போல்////

    வழக்கம்போல நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  22. ///Blogger Thanjavooraan said...
    இதை ஒரு கதையாக மட்டும் நான் பார்க்கவில்லை. இன்றைய எதார்த்தம் இது. சாதாரண ஊர்களில் பணியாற்றிவிட்டு, பணி நிறைவு பெற்றவர்கள் பலர் இங்குள்ள வீடு வாசல்களை விற்றுவிட்டு என் பிள்ளைகளிடம் போகிறேன் என்று சென்னைக்குப் போகிறார்கள். அங்கு பலமாடிக் கட்டடத்தில் ஒரு குடியிருப்பில் உங்கள் கதையில் உள்ளது போல கடனுக்கு வாங்கி எலிப்பொந்து போன்ற அங்கு வாழத் துவங்குகிறார்கள். முதலில் சில நாட்கள் வாழ்க்கை சுவையாகத்தான் போகும். பிறகு அடடா, சொந்த ஊரில் தனி வீடு, தோட்டம், அக்கம்பக்கத்தில் நல்லுறவு, குசலம் விசாரித்தல், உலாவச் செல்லுதல், கோயிலுக்குப் போதல், நண்பர்களுடன் உரையாடுதல் என்று இருந்த வாழ்க்கை இன்று இந்த எட்டடி குச்சுக்குள் மாட்டிக் கொண்டதே என்று மனம் வெம்பி, சொந்த ஊர் வீட்டை விற்றிருக்க வேண்டாம் என்று மனவேதனையோடு என்னிடம் சொன்னவர்கள் அதிகம். போதாதற்கு போன இடத்தில் மகனோ, மருமகளோ ஏதாவது சொல்லி விட்டால் தன்மானம் வேலை செய்யத் தொடங்குகிறது. என்னதான் இருந்தாலும் பழைய நாட்களைப் போல உறவுகளை இந்த நாளில் நகர வாழக்கை வாழும் மருமகளோ, மகனோ நம்மை அங்கு ஏற்றுக் கொள்வது அரிது. இதையெல்லாம் இன்றைய மாறுபட்ட சூழலில் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டியது நல்லது. ஐயர் எழுதிய கதை, ஆசிரியர் ஐயா திருத்தம் செய்திருந்தாலும், அரிய செய்திகளைக் கொண்ட அறிவார்ந்த கதை. பாராட்டுக்கள்./////

    உங்களுடன் சேர்ந்து நானும் விசு அய்யரைப் பாராட்டுகிறேன். நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  23. /////Blogger Thanjavooraan said...
    என் நண்பர் ஒருவர் தஞ்சாவூர் மாவட்ட கிராமத்தில் பிறந்து தஞ்சையில் பணிபுரிந்தவர். கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போய் சம்பாதித்து தஞ்சையில் பெரிய வீடொன்றைக் கட்டி மாடியில் வாடகைக்கு வைத்துவிட்டு தான் கீழ் வீட்டில் செளக்கியமாக இருந்தார். ஒரு மகன், ஒரு மகள். இருவருக்கும் திருமணம் ஆயிற்று. மகன் சென்னையில் வேலை. இவர் பேசாமல் இங்கே இருந்திருக்க வேண்டியதுதானே. மகனோடு போகிறேன் என்று போனார். அவன் அங்கு கடன் வாங்கி 80 லட்சத்துக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்கினான். அப்பாவிடம் கணிசமான தொகையைக் கேட்டு வாங்கி முன் தொகையாகக் கட்டிவிட்டான். மீதியை இருபது ஆண்டுகளில் செலுத்த வேண்டும். நண்பர் கையில் இருந்த பணத்தையெல்லாம் கொட்டி மகனிடம் கொடுத்துவிட்டு தவிக்கிறார். இந்த வீட்டை கீழும் மேலும் வாடகைக்கு விட்டிருந்தாலும், மகன் வீட்டில் கணவன் மனைவியும் உட்கார்ந்திருப்பதில் வருந்துகிறார். இந்த நிலையில் மகன் மட்டும் சில காலம் வெளிநாடு பயணம் செல்கிறான். இவருக்கு ஓய்வு கிடைத்தும் மீண்டும் குடும்ப வாழ்க்கை, பிக்கல் பிடுங்கல். ஒரு நிலையில் விட்டுவிடுதலையாகி நிற்க வேண்டியது போக மீண்டும் கிரஹஸ்தாஸ்ரமம். என்றுதான் வானப்பிரஸ்த வாழ்க்கையை சொந்த ஊரில், தெரிந்த இடத்தில், தெரிந்த மனிதர்களுடன் அனுபவிப்பது?/////

    ஆமாம் கோபாலன் சார். அருமையாகச் சொன்னீர்கள். அந்த நிலையில் பல வயதான மனிதர்கள் உள்ளார்கள். உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  24. ////Blogger கலையரசி said...
    வெளிநாட்டில் வாழும் எனக்கு இந்த கதையை மிகவும் பொருத்தி பார்க்க முடிகிறது.//////

    வெளிநாட்டில் சென்று குடியேறுபவர்கள் எத்தனை முயன்றாலும் அங்கே வளர்ந்து நிற்கும் தங்கள் மக்கட் செல்வங்களால் அவர்கள் தங்கள் தாய் மண்ணிற்குத் திரும்ப முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதை நான் சில குடும்பங்களில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கும் நோ எக்ஸிட் தான்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com