மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.8.13

Astrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்!

 
--------------------------------------------------------------------------------------------
Astrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்!

புதிய தொடர் - பகுதி 1

ஜோதிடத்தைக் கணித்த அல்லது வகுத்த முனிவர்கள் தாங்கள் எழுதியதை எல்லாம் பாடலாக அல்லது வடமொழியில் இரண்டு வரி  ஸ்லோகங்களாக எழுதிவைத்துள்ளார்கள். காகிதம், பேனா போன்ற எழுது சாதனங்கள் இல்லாத காலம். பனை ஓலைகளில், எழுத்தாணிகளைக் கொண்டு எழுதிவைத்துள் ளார்கள். சிறிய பனை ஓலைகளில் எழுதியதால் உரை நடையில் எழுதாமல் பாட்டாகவே எழுதிவைத்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் வாழ்ந்த காலத்துத் தமிழ். அல்லது அவர்களுடைய வடமொழி

அவற்றில் நிறைய ஜோதிட விதிகள் மற்றும் ஜோதிடச் செய்திகள் நறுக்குத் தெரித்தாற்போல உள்ளன.

அவற்றை சம்பந்தப் பட்ட பாடல், அதற்கான விளக்கம் ஆகியவற்றுடன் தருவதுதான் இத்தொடரின் நோக்கம். உங்கள் ஜோதிட அறிவு மேம்பட இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துக் கொண்டு வாருங்கள். வாரம் ஒருமுறை பதிவாகும்
----------------------------------------------------------------------------------------------------
கிராமத்தில் ஒரு நல்லவன் கெட்டவனுடன் சேர்ந்து சுற்றினால் இப்படிச் சொல்வார்கள். “பன்றியோடு பசுவும் சேர்ந்து சுத்துதுடா. எல்லாம் கேடுதான்”

அதனால் நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை என்றாலும், நல்ல விஷயங்கள் எப்போதும் கெட்டவற்றுடன் கலக்கக்கூடாது.

ஐந்தாம் அதிபதி திரிகோண வீட்டிற்குச் சொந்தக்காரன். பூர்வ புண்ணியாதிபதி, குழந்தை பாக்கியத்திற்குச் சொந்தக்காரன். அவன் வில்லனான ஆறாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்தால் என்ன ஆகும்?

பாடலைப் பாருங்கள்

“ஆரப்பா அயன்விதியை அறையக் கேளு
      அப்பனே ஐந்துள்ளோன் ஆறோன் கூடில்
சீரப்பா ஜென்மனுக்கு புத்திர தோஷம்
      சிவாசிவ்வா யிது மூன்றில் சேர்ந்து நிற்க
கூறப்பா கொடியோர்கள் கண்ணுற்றாலும்
      கொற்றவனே கொள்ளிக்குப் பிள்ளையில்லை
பாரப்பா பரமகுரு கண்ணுற்றாலும்
      பலனுண்டு பல தீர்த்தமாடச் சொல்லே!

.....................புலிப்பாணி முனிவர்

ஆமாம். அவர்கள் இருவரின் சேர்க்கையால் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குக் குழந்தை பிறப்பது தள்ளிக்கொண்டு போகும். அதாவது தாமதமாகும். அத்துடன் அவர்கள் ஒரு தீய கிரகத்தின் பார்வையைப் பெற்று மூன்றாம் வீட்டில் குடியிருந்தால், குழந்தை இல்லாமல் போகும் அபாயம் உண்டு.

தோஷத்தைப் போக்க என்ன வழி?

புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தீர்த்தமாடி, அங்கே உறையும் இறைவனை வணங்கிவிட்டு வருவதுதான் பரிகாரமாகும்!

இராமேஸ்வரம்தான் சிறந்த பரிகார ஸ்தலம்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25 comments:

  1. கடக லக்கினக்காரர். ஐந்தாம் இடம் செவ்வாயின் இடம். ஆறாம் இடம் குருவின் இடம். இருவரும் சேர்ந்து சிம்மத்தில் இரண்டில், சூரியனின் இடத்தில்.மூவருமே ஒரே குழுவைச்சேர்ந்தவர்கள். குரு தன் ஆறாம் இடத்தையும், செவ்வாய் தன் ஐந்தாம் இடத்தயும் தங்கள் பார்வையில் வைத்துள்ளார்கள்.இந்த அமைப்புக்குமா புத்திர தோஷம் உண்டு?

    புதியவர்களுக்கு நல்ல உபயோகமான பாடம்.நன்றி

    ReplyDelete
  2. ஐந்தாம் அதிபதியுடன் ஆறாமதிபதி சேர்ந்தால் என்ன ஆகும் என்று தெரிகிறது. கன்னி லக்கினத்திற்கு ஐந்தாம் அதிபதி ஆறாம் அதிபதி இருவரும் ஒருவரே. இவர்கள் விஷயத்தில் என்ன ஆகும் என்று பாடலில் சொல்லவில்லையே.

    ReplyDelete
  3. அய்யா,கடக லக்னத்திற்கு 6,மற்றும் 9ம் அதிபதி குருவே.அவர் லக்னத்திற்கு 3ல் சனியுடன் இருந்து செவ்வாய் 5ல் இருந்தால் புத்திர பாக்கியம் உண்டா?.ஏனென்றால் செவ்வாய் சனியின் பார்வையில் அதான் கேட்க்கிறேன்.

    ReplyDelete
  4. **ஐந்துக்குரியன் ஆறுக்குரியனோடு கூடினால் புத்திர தோஷம்!

    அப்படி இருக்க குழந்தையதுவும் பிறந்தாலும்....

    ***செவ்வாய் அது மூன்றில் இந்த அமைப்புகளோடு சேர்ந்து நிற்க! (அது ஆறாம் இடத்தை அங்கே கூடி இருக்கும் ஐந்தாம் அதிபதியோடு ஆறுக்குரியவனையும் பார்க்கிறான்)

    கொல்லிப் போட ஒரு ஆண் குழந்தை இருக்காது!

    (இருந்தாலும் அது கொல்லி போட வரையியலாதொ!?)

    ****பாரப்பா இங்கே இந்த அமைப்பை தேவகுரு பார்ப்பானாயின் நல்ல பலன் இருக்கும் .. இருந்தும் கேட்டுப் போன பூர்வ புண்ணிய ஸ்தானத்தை வலுப்படுத்த போவாய் ஒன்றல்ல.. இரண்டல்ல.. பலதீர்த்த ஸ்தலங்களை நோக்கியே

    என்பதாகவே எனக்குப் புரிகிறது...

    ReplyDelete
  5. ///கன்னி லக்கினத்திற்கு ஐந்தாம் அதிபதி ஆறாம் அதிபதி இருவரும் ஒருவரே.///

    நண்பர் ஆனந்த் அவர்களின் கேள்வியும் யோசிக்க வேண்டியதே..

    கன்னியை எண்ணுகையில் அந்தந்த வீட்டின் பரல்களையும்... அந்த சனி பகவானின் ஷட் பலன்களையும் (கஷ்ட மற்றும் இஷ்டப் பலத்தோடு.... அவனின் சுயவர்க்கப் பரல்களையும்) கணக்கில் கொள்ளலாமோ என்றும் தோன்றுகிறது.

    ReplyDelete
  6. ஐயா , திரு ஆனந்தன் அவர்களின் கேள்வி தான் என்னுடயதும்.
    விளக்கம் தருமாறு வேண்டுறேன்.
    ஆயினும், சனிக்கு எந்த வீட்டில் ஆஶ்சவார்கம் அதிகமாக உள்ளதோ அந்த பலன் கொடுக்கும். சரியா ஐயா ?

    ReplyDelete
  7. துலா லக்கினருக்கு ஐந்தாம் அதிபதி சனி (யோகக்காரன் ) ஆறாம் அதிபதி குரு (குழந்தை பாக்கியத்திற்குச் சொந்தக்காரன்) 11அம வீடான சிம்மத்தில் சேர்ந்து ஐந்தாம் வீட்டை சைட் அடித்தாலும் தோஷமா ?

    ReplyDelete
  8. கொல்லி அல்ல கொள்ளி ...
    வரையியலாது=>கொள்ளி போடுவதற்கு வர இயலாத தூர தேசத்தில் இருப்பது...
    கேட்டு அல்ல கெட்டுப் போன...
    நிறைய எழுத்துப் பிழைகள்!!??

    ReplyDelete
  9. அய்யா ,

    கன்னி லக்கினத்திற்கு ஐந்தாம் அதிபதி ஆறாம் அதிபதி இருவரும் ஒருவரே, அவர் மூன்றாம் இடத்தில இருந்தால் என ஆகும்?

    ReplyDelete
  10. ////Blogger kmr.krishnan said...
    கடக லக்கினக்காரர். ஐந்தாம் இடம் செவ்வாயின் இடம். ஆறாம் இடம் குருவின் இடம். இருவரும் சேர்ந்து சிம்மத்தில் இரண்டில், சூரியனின் இடத்தில்.மூவருமே ஒரே குழுவைச்சேர்ந்தவர்கள். குரு தன் ஆறாம் இடத்தையும், செவ்வாய் தன் ஐந்தாம் இடத்தயும் தங்கள் பார்வையில் வைத்துள்ளார்கள்.இந்த அமைப்புக்குமா புத்திர தோஷம் உண்டு?/////

    உங்கள் லக்கினத்திற்கு குரு பகவான் ஒன்பதாம் இடமான பாக்கியத்திற்கும் சொந்தக்காரன். அதை மறந்து விட்டீர்களே சுவாமி!

    ReplyDelete
  11. ///Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா////

    உங்களின் வருகைப்பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. ////Blogger Ak Ananth said...
    ஐந்தாம் அதிபதியுடன் ஆறாமதிபதி சேர்ந்தால் என்ன ஆகும் என்று தெரிகிறது. கன்னி லக்கினத்திற்கு ஐந்தாம் அதிபதி ஆறாம் அதிபதி இருவரும் ஒருவரே. இவர்கள் விஷயத்தில் என்ன ஆகும் என்று பாடலில் சொல்லவில்லையே./////

    கும்ப லக்கினத்திற்கு லக்கினாதிபதியும் சனி.விரையாதிபதியும் சனி ( 12th Lord) என்ன பலன் என்று கேட்டால் சனி கேந்திரம் அல்லது திரிகோண ஆதிபத்யம் பெற்றிருந்தால் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். இல்லையென்றால் தோல்வி மயமாக இருக்கும். அதே விதிதான் இதற்கும் (Rule)

    ReplyDelete
  13. ////Blogger paulsam said...
    அய்யா,கடக லக்னத்திற்கு 6,மற்றும் 9ம் அதிபதி குருவே.அவர் லக்னத்திற்கு 3ல் சனியுடன் இருந்து செவ்வாய் 5ல் இருந்தால் புத்திர பாக்கியம் உண்டா?.ஏனென்றால் செவ்வாய் சனியின் பார்வையில் அதான் கேட்கிறேன்./////

    குருவுடன் சனி சேரும்போது, சனியின் வீரியம் குறைந்துவிடும். கடக லக்கினத்திற்கு குரு பாக்கியாதிபதியும் ஆவார். ஆகவே பாக்கியத்திற்கு ஒரு குறையும் இல்லாமல் அவர் பார்த்துக்கொள்வார்!

    ReplyDelete
  14. ////Blogger Sattur Karthi said...
    வணக்கம் ஐயா////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  15. ///Blogger G Alasiam said...
    **ஐந்துக்குரியன் ஆறுக்குரியனோடு கூடினால் புத்திர தோஷம்!
    அப்படி இருக்க குழந்தையதுவும் பிறந்தாலும்....
    ***செவ்வாய் அது மூன்றில் இந்த அமைப்புகளோடு சேர்ந்து நிற்க! (அது ஆறாம் இடத்தை அங்கே கூடி இருக்கும் ஐந்தாம் அதிபதியோடு ஆறுக்குரியவனையும் பார்க்கிறான்)
    கொள்ளி போட ஒரு ஆண் குழந்தை இருக்காது!
    (இருந்தாலும் அது கொள்ளி போட வரையியலாதொ!?)
    ****பாரப்பா இங்கே இந்த அமைப்பை தேவகுரு பார்ப்பானாயின் நல்ல பலன் இருக்கும் .. இருந்தும் கேட்டுப் போன பூர்வ புண்ணிய ஸ்தானத்தை வலுப்படுத்த போவாய் ஒன்றல்ல.. இரண்டல்ல.. பலதீர்த்த ஸ்தலங்களை நோக்கியே
    என்பதாகவே எனக்குப் புரிகிறது../////

    ஆமாம் அந்தப் பாடல் அதைத்தான் வலியுறுத்திச் சொல்கிறது !

    ReplyDelete
  16. ////Blogger G Alasiam said...
    ///கன்னி லக்கினத்திற்கு ஐந்தாம் அதிபதி ஆறாம் அதிபதி இருவரும் ஒருவரே.///
    நண்பர் ஆனந்த் அவர்களின் கேள்வியும் யோசிக்க வேண்டியதே..
    கன்னியை எண்ணுகையில் அந்தந்த வீட்டின் பரல்களையும்... அந்த சனி பகவானின் ஷட் பலன்களையும் (கஷ்ட மற்றும் இஷ்டப் பலத்தோடு.... அவனின் சுயவர்க்கப் பரல்களையும்) கணக்கில் கொள்ளலாமோ என்றும் தோன்றுகிறது./////

    கும்ப லக்கினத்திற்கு லக்கினாதிபதியும் சனி.விரையாதிபதியும் சனி ( 12th Lord) என்ன பலன் என்று கேட்டால் சனி கேந்திரம் அல்லது திரிகோண ஆதிபத்யம் பெற்றிருந்தால் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். இல்லையென்றால் தோல்வி மயமாக இருக்கும். அதே விதிதான் இதற்கும் (Rule)

    ReplyDelete
  17. ////Blogger கலையரசி said...
    Attendance ayya...!////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  18. ////Blogger DevikaArul said...
    ஐயா , திரு ஆனந்தன் அவர்களின் கேள்வி தான் என்னுடயதும்.
    விளக்கம் தருமாறு வேண்டுறேன்.
    ஆயினும், சனிக்கு எந்த வீட்டில் அஷ்டகவர்க்கம் அதிகமாக உள்ளதோ அந்த பலன் கொடுக்கும். சரியா ஐயா ?/////

    இல்லை! சனி கேந்திரம் அல்லது திரிகோண வீடுகளில் வலிமையோடு அமர்ந்திருப்பது நன்மை பயக்கும்!

    ReplyDelete
  19. ////Blogger Mohan Balasundaram said...
    துலா லக்கினருக்கு ஐந்தாம் அதிபதி சனி (யோகக்காரன் ) ஆறாம் அதிபதி குரு (குழந்தை பாக்கியத்திற்குச் சொந்தக்காரன்) 11அம வீடான சிம்மத்தில் சேர்ந்து ஐந்தாம் வீட்டை சைட் அடித்தாலும் தோஷமா?/////

    யோககாரகன் சம்பந்தப்படும்போது சில விதிகள் மாறுபட்டுவிடும்! உங்கள் மொழியில் சொன்னால் போலீஸ்காரரே சைட் அடிப்பதுபோல் என்று வைத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  20. ////Blogger G Alasiam said...
    கொல்லி அல்ல கொள்ளி ...
    வரையியலாது=>கொள்ளி போடுவதற்கு வர இயலாத தூர தேசத்தில் இருப்பது...
    கேட்டு அல்ல கெட்டுப் போன...
    நிறைய எழுத்துப் பிழைகள்!!??////

    நேரமின்மை காரணமாக தட்டச்சிட்டவைகளைச் சரிபார்க்காமல் பதிவிடுவதால் ஏற்படும் பிழைகள் அவைகள். ஒரு நிமிடம் மீண்டும் படித்துப் பார்த்துவிட்டுப் பதிவிட்டால் பிழைகளைத் தவிர்க்கலாம் ஆலாசியம்!

    ReplyDelete
  21. //////OpenID Keerthana said...
    அய்யா ,
    கன்னி லக்கினத்திற்கு ஐந்தாம் அதிபதி ஆறாம் அதிபதி இருவரும் ஒருவரே, அவர் மூன்றாம் இடத்தில இருந்தால் என ஆகும்?/////

    கும்ப லக்கினத்திற்கு லக்கினாதிபதியும் சனி.விரையாதிபதியும் சனி ( 12th Lord) என்ன பலன் என்று கேட்டால் சனி கேந்திரம் அல்லது திரிகோண ஆதிபத்யம் பெற்றிருந்தால் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். இல்லையென்றால் தோல்வி மயமாக இருக்கும். அதே விதிமுறைகள்தான் இதற்கும் (Rule)

    ReplyDelete
  22. Sir, i think your explanation for that pulippaani Muni song was a little contrary..I think he was telling if the 5th lord and 6th lord sits in third house, there won't be any children to do the last rights and if Jupiter aspects it from anywhere else, there will be yogas for theerthaadanam and Punya kshetra vijayam...
    "Paramaguru kannutraal, means if jupiter aspects right??"
    Pls, forgive me if I'm wrong sir..Just curious to kknow from you..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com