மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.5.13

Short Story: சிறுகதை: தண்ணீரில் வந்த பணம் எப்படிப் போயிற்று?

 
Short Story: சிறுகதை: தண்ணீரில் வந்த பணம் எப்படிப் போயிற்று?

மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதிய சிறுகதை இது. இன்று மாதத்தின் முதல் நாள். அதை ஒரு நல்ல கதையுடன் துவங்குவோம் என்று உங்களுக்காக அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன். அனைவரும் படித்து மகிழுங்கள். கதையைப் பற்றிப் பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை சொல்லுங்கள். எழுதுபவர்களுக்கு அதுதான் ஊக்க மருந்து!

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கோமதிக்கு வயது 24. வாட்டசாட்டமானவள். உயரமானவள்.  பார்த்தவர்களைத் திரும்பப் பார்க்க வைக்கும் அழகு மிகுந்தவள்.

காலம்  எழுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். பொதிகைத் தென்றல் வருடிக்கொடுக்கும் ஒரு பசுமையான கிராமத்தில் அவளுடைய வீடு  இருந்தது. கோமதி நான்கு  பசுமாடுகளை வைத்துப் பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள்.

அவளுடைய கணவன் சுகவாசி! இருந்த நான்கு வேலி நிலத்தையும் குத்தகைக்குக் கொடுத்து விட்டு, குத்தகைப் பணத்தில் சுகஜீவனம் நடத்தி வந்தான்.

கோமதி சுறுசுறுப்பானவள். சுயமாக எதாவது செய்ய வேண்டும். என்பதற்காக மாடுகள், மாட்டுத் தொழுவம், அதைச் சுத்தப் படுத்துதல், மாட்டுத் தீவனம், பால் கரத்தல், இத்யாதி  போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந் தாள்.

அதேபோல காலையில் இருபது லிட்டர் பால் - மாலையில்  இருபது லிட்டர் பால் எனப் பால்வியாபாரத்தையும் அவள்தான் செய்து வந்தாள். இரண்டு
பாத்திரங்களில் பால்.அதை  வைத்துத்தூக்க வசதியாக ஒரு கூடை.அந்தக் கூடையைத் தலைமேல் வைத்துப் பிடித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள நகரத்திற்குக் கொண்டுபோய் வாடிக்கையாளர்கள்  வீடுகளில் அவள்தான் விற்றுவிட்டு வரவேண்டும். அதோடு அவள் செல்லும் வழியில் குறுக்கிடும் காட்டாற்றையும் கடந்து  சென்று வரவேண்டும்.

காட்டாற்றில் வருடம் முழுவதும் கணுக்கால் அளவு அல்லது முழங்கால் அளவிற்குத் தண்ணீர் ஓடும். .மழைக்காலங்களில் மட்டும் வெள்ளப் பெருக்கெடுக்கும்.

அப்போது  ஆற்றைக்  கடக்க நினைப்பது முடியாத காரியம்.

கோமதியும் அந்தக் காட்டாற்றில் தனது சிவந்த பாதங்களை முழுமையாக நனைத்துக் கொண்டே போய்வருவதில் ஒரு அலாதியான மகிழ்வு கொள்வாள்.

ஆரம்ப காலங்களில் அந்த வியாபரத்தை மிகவும் நாணயமாக செய்து வந்த கோமதி, பின்னாட்களில் காசின் மேல் கொண்ட ஆசையால், சம அளவு தண்ணீர் கலந்து விற்க  ஆரம்பித்தாள்.

அவள் புறப்படும் முன்பு, தங்கள் கிணற்று நீரைத் துணியால் வடிகட்டி, பாலில் சேர்ப்பதைப் பார்த்த, பக்கத்து வீட்டு ஆவுடையா பிள்ளை, அவளைக் கடிந்து
கொண்டார்.

"தாயீ, பாலில் எதையும் கலக்காதே! அது பாவச் செயல். எத்தனை பேர் உன்னை நம்பி தங்கள் குழந்தை குட்டிகளுக்கு இந்தப் பாலைக் கொடுக்கி றார்கள். எதாவது நீர்த் தொற்று நோய் ஏற்பட்டால் அந்தப்பாவம் உன்னைத்தான் வந்து சேரும்"

கோமதி அதைக் கண்டு கொள்ளவில்லை!

எப்போது முன்னேறுவதாம்?

தண்ணீர் ஊற்றி விற்க ஆரம்பித்தவுடன் அவள் கையில் அபரிதமாகப் பணம் சேர ஆரம்பித்தது. அந்தக் காலத்தில் ஏது வங்கிச் சேமிப்புக் கணக்கு?

கோமதி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நெல்லைக்குச் சென்று, அந்தப் பணத்தை நகையாக மாற்றிக் கொண்டு வந்து விடுவாள். வாங்கிய நகைகளை
வீட்டில் வைக்க  பயந்து  தானே அணிந்து கொண்டு திரிவாள். ஒற்றை வடம், இரட்டை வடம் என்று சங்கிலிகள். கையைக் கலகலக்கச் செய்யும் வளையல்கள் என்று ஒரு நகைக்  கடைப் பதுமை போல் ஆகிவிட்டாள். அவள் மேனியில் ஐம்பது பவுன்களுக்கு மேல் தங்கம் நகை வடிவில் குடி கொண்டது.

ஒரு நாள், நகருக்குச் சென்று பாலை விற்றுவிட்டு வந்தவள், ஆற்றின் அருகே வந்த பின்தான் கவனித்தாள். ஆற்றில்  அரை முழங்கால் அளவு நீர், சுர்'ரென்று
சத்தத்துடன்  ஓடிக்கொண்டிருந்தது. அவள் உணர்ந்து விட்டாள், இன்னும்  சில மணித்துளிகளில் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கான  அடையாளம்   அது!.

வெள்ளம் வருவதற்குள் ஆற்றைக் கடந்து விடலாம் என்று பரபரப்பாக ஆற்றைக் கடக்க முனைந்தாள். ஆனால் எதிர்பாராதவிதமாக,  பாதி ஆற்றை  கடக்கும்  முன்பே, இடுப்பளவு உயர்ந்து வந்த   ஆற்று நீர் புரட்டிப் போட்டு விட்டது.  அவள் சுதாகரிக்கும் முன்பே, அடுத்தடுத்தடுத்த நொடிகளில் வந்த பெரு வெள்ளம் அவளோடு முழுமையாக விளையாட ஆரம்பித்தது.  ஈடு கொடுத்து அவளால் நீந்த முடியவில்லை. அதோடு பயத்தில் மயங்கி விட்டாள்

                 *******************************************************

இரண்டு மணி நேரம் சென்றிருக்கும். ஆற்றின் ஒரு பக்கக் கரையில் மயங்கிக் கிடந்த கோமதி நினைவு  திரும்பிவர கண் விழித்துப் பார்த்தாள். ஆற்றில்
வெள்ளம்  வடிந்திருந்தது.

தான் எங்கே கிடக்கிறோம் என்று பார்த்தாள். தான் செல்ல வேண்டிய பாதையில் இருந்து ஒரு மைல் தூரம் தள்ளி செட்டியார் தோப்பு அருகே இருப்பதை  உணர்ந்தாள்.

ஆற்று நீர் தன்னை உருட்டி கொண்டு வந்து அங்கே தள்ளிவிட்டுப் போயிருக்கிறது என்று எண்ணினாள். அதோடு தன்னை உயிரோடு விட்டு விட்டுப் போன ஆற்றை  நோக்கிக் கை எடுத்துக் கும்பிட்டாள்.

அதற்குப் பிறகுதான் அவள் கவனித்தாள். அடுத்த நொடி தீயை மிதித்தவள் போலாகிவிட்டாள்.

என்ன ஆகிவிட்டிருந்தது?

அவள் உடலை அலங்கரித்துக் கொண்டிருந்த நகைகளில் ஒன்று கூட இல்லை. எல்லாம் எங்கே போயிருக்கும்? அவள் மயங்கிக் கிடந்தபோது அந்த வழியாகச்

சென்ற  எவனோ  அத்தனை நகைகளையும் அடித்துக் கொண்டு போயிருந்தான்.

ஈரத்தில் உடலோடு உடலாக ஒட்டிக் கொண்டிருந்த தன்னுடைய ஆடைகளைக்கூடச் சரி செய்யும்  சிந்தை இன்றி அவள் 'ஓ' வென்று குரல் கொடுத்துத் துக்கத்தோடு கதறி  அழுக ஆரம்பித்தாள்.

பின்னே அழுகை வராதா என்ன?

இழந்தது, ஒரு பவுனா அல்லது இரண்டு பவுனா? மொத்தமாக ஐம்பது பவுன்களாயிற்றே!

அப்படியே உட்கார்ந்து ஒரு பத்து நிமிடமாவது அழுதிருப்பாள். அப்போதுதான் அது நடந்தது. யாரோ தன்னை நோக்கி நடந்து வரும் ஓசை  கேட்டு.
அழுகையுடனேயே  திரும்பிப் பார்த்தாள்.

அவளுடைய பக்கத்துவீட்டு மனிதர் ஆவுடையாபிள்ளை அவர்கள்தான் வந்து கொண்டிருந்தார். கையில் காலிக்கூடை. தன்னுடைய  தோட்டத்துக் காய்கறிகளை  விற்றுவிட்டுத் திரும்புகிறார் போலும்.

வந்தவர் கோமதியைப் பார்த்துக் கேட்டார்," என்ன தாயி, இங்கின உக்கார்ந்து அழுதுக்கிட்டிருக்கே?"

கோமதி நடந்ததைச் சொன்னாள்.

ஒரு குறுகுறுப்புடன், அவள் தன்னுடைய பெரிய விழிகளை ஏற்றி இறக்கி நகை பறிபோன கதையை விவரித்ததைக் கேட்டபின் ஆவுடையா பிள்ளை சொன்னார்:

"சரி, விடுதாயி! போன நகைகள் திரும்ப வரவா போகுது? வா, வீட்டுக்குப் போகலாம்"

"எப்படியண்ணே, உங்களால் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது? என் துக்கம் தெரியவில்லையா?"

"நீ விசனப்பட்டு என்ன பயன். எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு இருக்கிறது. நீ பாலில் தண்ணீர் கலந்து விற்றபோது, அப்படி விற்காதே, அது பாவச் செயல் என்று சொன்னேன். நீ கேட்கவில்லை. பாவச் செயல் எல்லாமே தர்மத்திற்கு எதிரானது. தர்மதேவன் கண்டிப்பாகக் கணக்கைத் தீர்க்காமல் விடமாட்டான். உன் கணக்கை இப்போது  அவன் தீர்த்திருக்கிறான். தண்ணீரில் வந்த காசு தண்ணீரிலேயே போய்விட்டது. நீ உழைத்த உழைப்பிற்கு உன் உயிர் மிஞ்சியிருக்கிறது. வா போகலாம்!"

கோமதிக்கு செவிட்டில் அறைந்ததைப் போன்றிருந்தது.

தர்மத்தின் மேன்மையை உணர்ந்த அவள், அன்றிலிருந்து, அநியாயமாகப் பொருள் ஈட்டும் ஆசையை விட்டொழித்தாள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++

32 comments:

  1. குருவிற்கு வணக்கங்கள்,
    அருமையான நீதிக்கதை. மிக்க நன்றி, தங்கள் மாணவன், ரெங்கா

    ReplyDelete
  2. எப்படியோ திருந்தி விட்டார்கள்... நல்லதொரு கதைக்கு நன்றிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. குருவிற்கு வணக்கம்
    தன் வினை தன்னை சுடும் என்ற சொல்லிற்கு ஏற்ப தங்களின் கதைகரு அமைந்துள்ளது அருமை.
    செய்யும் தொழிலே தெய்வம் என்ற கருத்தும் இங்கே அளிக்க பட்டுள்ளது அருமை மிக்க கதை
    நன்றி

    ReplyDelete
  4. ஒன் மேன் ஆர்மி போல் ஒரே கேரக்டர் கொண்டு படிக்க வைத்த கதை. ஐயா அவர்களின் கதைகளில் பெண் தான் பிரதானம். இங்கும் அது தான் ஆனால் வில்லி டைப்
    .கதையின் நடையும் கதையின் நீதியும் அருமை.


    ReplyDelete
  5. Respected Sir,

    Happy morning. Very good moral story.

    we have to earn good things in good manner.

    With kind regards,
    Ravi

    ReplyDelete
  6. காலை வணக்கம் !

    நன்றாக இருக்கிறது உங்களுடைய சிறு கதை !

    இப்படி அடுத்தவரிடம் இருந்து சுரண்டி சம்பாதிப்பது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது, தங்கள் கருத்து என்ன ?

    ReplyDelete
  7. காலை வணக்கம் ஐயா!

    ஒரு வார்த்தையில் பின்னூட்டம் வேண்டுமா ஐயா? சரி.

    "மீள்பதிவுக்கதை" :)))))))))))))))

    காலகாலதாசன்
    புவனேஷ்

    ReplyDelete
  8. நீதிக் கதைகளைத் தொடர்ந்து எழுதி வரும் ஐயாவுக்குப் பாராட்டுக்கள்.இப்போதைய நவீன பாணியில் நீதியை வெளிப்படையாக வைப்பது இல்லை. வாசகனின் புரிதலுக்கு விட்டு விடுகிறார்கள்.

    50 பவுன் சேரும் வரை கோமதியை இந்தப் பொல்லாத உலகம் விட்டு வைத்ததே
    பெரிய விஷயம்தான். அந்த அளவு நல்லவர்களும் இருக்கிறார்களே என்று பெருமைப்படலாம்.

    தங்கத்திற்கு ஆட்கொல்லி என்ற ஒரு பெயரும் உண்டு. நல்ல நீதிக்கதை.நன்றி ஐயா!

    ReplyDelete
  9. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.இது மீள் பதிவு.ஆயினும் சிந்தனையை கட்டுக்குள் வைக்க உணர்த்தப் பட்டது.
    உண்மைதான்.அநியாயமாக சம்பாதித்தது வந்த வழியிலேயே போய்விட்டது.
    நன்றியுடன்,
    -Peeyes

    ReplyDelete
  10. உண்மையாய் உழைப்பவர்க்கான கூலியைத் தர இறைவன் தாமதித்தாலும் எத்திப் பிழைப்பவர்க்கான கூலியை ஒருநாளும் தாமதிப்பதேயில்லை...

    ReplyDelete
  11. இன்றைய இளைஞனின்
    இப்படி ஒரு சிந்தனை..

    கதையை எப்படி சொல்கிறார்
    கவனிப்போமா..?

    "கோமதியை பார்த்து கேட்கும் ஆவுடையபிள்ளையாரிடம்..

    அவனவன் பாலிலே மருந்தை கலந்து விக்கிறாங்க..
    நான் கொஞ்சமா தானே தண்ணி கலந்தேன்..

    அது சரி..

    கொஞ்சமா தண்ணி கலந்துவிற்றதாலே
    கொஞ்ச நகைகங்க போயிட்டுது..

    அதிகமாக தண்ணி கலந்து விற்று இருந்தா 200 பவுனுக்கு மேலே நகை வாங்கியிருப்பேன் 50 சவரன் போனாலும் 150 சவரன் மீதமிருக்குமே.."

    மாற்றுக் கருத்துள்ளவர்கள்
    மனம் கலங்க வேண்டாம்..

    இன்றைய இளசுகளின் சிந்தனையை
    இப்படி படம் பிடித்து காட்டுகிறோம்

    அவ்வளவு தான்..

    வழக்கமான பாணியில்
    வலமாக சுழன்று வரும் பாடல்

    தர்மம் தலை காக்கும்
    தக்க சமயத்தில் உயிர் காக்கும்

    மலை போலே வரும்
    சோதனை யாவும்
    பனி போல் நீங்கி விடும்

    நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
    வணங்கிட வைத்து விடும்

    அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
    ஆனந்த பூந்தோப்பு

    வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது
    நான்குமறை தீர்ப்பு,..

    ReplyDelete
  12. ஆசிரியருக்கு அன்பான வணக்கம்,
    மிகவும் இலகுவான புரிதல் கதை மிக அருமை,
    ஏற்கெனவே படித்து அனுபவித்திருக்கிறேன்.திகட்டாத தெளிவு.
    மென்மேலும் பதிவிடுங்கள்.
    நன்றி.

    ReplyDelete

  13. பேராசை பெரு நஷ்ட்டம்! தண்ணீர் கலந்து விற்றவருக்கு
    அருமையான பாடம்!!

    கதையினை ஆரம்பம் முதல் இறுதி வரையில் விரைந்து படிக்க தூண்டும் ஆர்வத்தினை மேம்படுத்தி, அடுத்து என்ன? என்பது போன்ற விறு விருப்பினை ஏற்படுத்தும் வகையில் ,
    தங்களுக்கே யுள்ள சிறந்த சொல் நயத்துடன்,.வாத்தியார் மாணவர்களுக்கு
    அளித்துள்ள அருமையான பாடம்!!

    மிக்க நன்றி !!

    ReplyDelete
  14. வணக்கம் ஐயா, கோமதியின் கணவனால் அவளுக்கு எந்த உதவியும் இல்லை.மேலும் அவ்ள் முதலில் நல்ல குணமுடையவளாகவே காட்டப்பட்டுள்ளாள்,அவளின் வேண்டாத ஆசைக்கு நகையை பறிகொடுத்தும், நல்ல பண்புக்கு கடவுள் உயிரை திருப்பிக்கொடுத்திருக்கிறார் என்ற கருத்து மிகவும் அருமை. ந‌ன்றி ஐயா

    ReplyDelete
  15. ////Blogger renga said...
    குருவிற்கு வணக்கங்கள்,
    அருமையான நீதிக்கதை. மிக்க நன்றி, தங்கள் மாணவன், ரெங்கா////

    உங்களின் பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ரெங்கா!

    ReplyDelete
  16. /////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    எப்படியோ திருந்தி விட்டார்கள்... நல்லதொரு கதைக்கு நன்றிகள்... வாழ்த்துக்கள்./////..

    உங்களின் பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தனபாலன்!

    ReplyDelete
  17. ////Blogger arul said...
    superb moral story/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி அருள்!

    ReplyDelete
  18. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    தன் வினை தன்னை சுடும் என்ற சொல்லிற்கு ஏற்ப தங்களின் கதைகரு அமைந்துள்ளது அருமை.
    செய்யும் தொழிலே தெய்வம் என்ற கருத்தும் இங்கே அளிக்க பட்டுள்ளது அருமை மிக்க கதை
    நன்றி/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  19. ///Blogger thanusu said...
    ஒன் மேன் ஆர்மி போல் ஒரே கேரக்டர் கொண்டு படிக்க வைத்த கதை. ஐயா அவர்களின் கதைகளில் பெண் தான் பிரதானம். இங்கும் அது தான் ஆனால் வில்லி டைப். .கதையின் நடையும் கதையின் நீதியும் அருமை.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி தனுசு!

    ReplyDelete
  20. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning. Very good moral story.
    we have to earn good things in good manner.
    With kind regards,
    Ravi/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ரவி!

    ReplyDelete
  21. //////Blogger Sattur Karthi said...
    காலை வணக்கம் !
    நன்றாக இருக்கிறது உங்களுடைய சிறு கதை !
    இப்படி அடுத்தவரிடம் இருந்து சுரண்டி சம்பாதிப்பது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது, தங்கள் கருத்து என்ன ?/////

    சுரண்டிச் சம்பாதிப்பவர்களுக்கும் ஒரு நாள் இதே நிலைமைதான்! மருத்துவமனையில் அந்தப் பணத்தைச் செலவிட நேரிடும்!

    ReplyDelete
  22. ////Blogger Bhuvaneshwar said...
    காலை வணக்கம் ஐயா!
    ஒரு வார்த்தையில் பின்னூட்டம் வேண்டுமா ஐயா? சரி.
    "மீள்பதிவுக்கதை" :)))))))))))))))
    காலகாலதாசன்
    புவனேஷ்/////

    நல்லது. நன்றி புவனேஷ்!

    ReplyDelete
  23. ////Blogger kmr.krishnan said...
    நீதிக் கதைகளைத் தொடர்ந்து எழுதி வரும் ஐயாவுக்குப் பாராட்டுக்கள்.இப்போதைய நவீன பாணியில் நீதியை வெளிப்படையாக வைப்பது இல்லை. வாசகனின் புரிதலுக்கு விட்டு விடுகிறார்கள்.
    50 பவுன் சேரும் வரை கோமதியை இந்தப் பொல்லாத உலகம் விட்டு வைத்ததே
    பெரிய விஷயம்தான். அந்த அளவு நல்லவர்களும் இருக்கிறார்களே என்று பெருமைப்படலாம்.
    தங்கத்திற்கு ஆட்கொல்லி என்ற ஒரு பெயரும் உண்டு. நல்ல நீதிக்கதை.நன்றி ஐயா!/////

    உங்களின் பின்னூட்டத்திற்கும், கருத்துப்பகிர்விற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete

  24. ////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.இது மீள் பதிவு.ஆயினும் சிந்தனையை கட்டுக்குள் வைக்க உணர்த்தப் பட்டது.
    உண்மைதான்.அநியாயமாக சம்பாதித்தது வந்த வழியிலேயே போய்விட்டது.
    நன்றியுடன்,
    -Peeyes/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  25. //////Blogger துரை செல்வராஜூ said...
    உண்மையாய் உழைப்பவர்க்கான கூலியைத் தர இறைவன் தாமதித்தாலும் எத்திப் பிழைப்பவர்க்கான கூலியை ஒருநாளும் தாமதிப்பதேயில்லை/////

    அதனால்தான் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று பலர் சமாதானமாக இருந்துவிடுகிறார்கள்!...

    ReplyDelete
  26. ////Blogger அய்யர் said...
    இன்றைய இளைஞனின்
    இப்படி ஒரு சிந்தனை..
    கதையை எப்படி சொல்கிறார்
    கவனிப்போமா..?
    "கோமதியை பார்த்து கேட்கும் ஆவுடையபிள்ளையாரிடம்..
    அவனவன் பாலிலே மருந்தை கலந்து விக்கிறாங்க..
    நான் கொஞ்சமா தானே தண்ணி கலந்தேன்..
    அது சரி..
    கொஞ்சமா தண்ணி கலந்துவிற்றதாலே
    கொஞ்ச நகைகங்க போயிட்டுது..
    அதிகமாக தண்ணி கலந்து விற்று இருந்தா 200 பவுனுக்கு மேலே நகை வாங்கியிருப்பேன் 50 சவரன் போனாலும் 150 சவரன் மீதமிருக்குமே.."
    மாற்றுக் கருத்துள்ளவர்கள்
    மனம் கலங்க வேண்டாம்..
    இன்றைய இளசுகளின் சிந்தனையை
    இப்படி படம் பிடித்து காட்டுகிறோம்
    அவ்வளவு தான்/////..

    மக்களின் இன்றைய சிந்தனை எல்லாம் நாட்டு நடப்புக்களை வைத்துக் கெட்டுவிட்டது என்னவோ உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  27. /////Blogger சர்மா said...
    ஆசிரியருக்கு அன்பான வணக்கம்,
    மிகவும் இலகுவான புரிதல் கதை மிக அருமை,
    ஏற்கெனவே படித்து அனுபவித்திருக்கிறேன்.திகட்டாத தெளிவு.
    மென்மேலும் பதிவிடுங்கள்.
    நன்றி.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சர்மா!

    ReplyDelete
  28. ////Blogger V Dhakshanamoorthy said...
    பேராசை பெரு நஷ்ட்டம்! தண்ணீர் கலந்து விற்றவருக்கு அருமையான பாடம்!!
    கதையினை ஆரம்பம் முதல் இறுதி வரையில் விரைந்து படிக்க தூண்டும் ஆர்வத்தினை மேம்படுத்தி, அடுத்து என்ன? என்பது போன்ற விறு விருப்பினை ஏற்படுத்தும் வகையில் ,தங்களுக்கேயுள்ள சிறந்த சொல் நயத்துடன்,.வாத்தியார் மாணவர்களுக்கு
    அளித்துள்ள அருமையான பாடம்!!
    மிக்க நன்றி !!//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி தட்சணாமூர்த்தி!!!

    ReplyDelete
  29. /////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா, கோமதியின் கணவனால் அவளுக்கு எந்த உதவியும் இல்லை.மேலும் அவ்ள் முதலில் நல்ல குணமுடையவளாகவே காட்டப்பட்டுள்ளாள்,அவளின் வேண்டாத ஆசைக்கு நகையை பறிகொடுத்தும், நல்ல பண்புக்கு கடவுள் உயிரை திருப்பிக்கொடுத்திருக்கிறார் என்ற கருத்து மிகவும் அருமை. ந‌ன்றி ஐயா/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  30. Sir

    Very good story Sir

    Regards

    A.Ramakrishnan

    ReplyDelete
  31. ////Blogger A.Ramakrishnan said...
    Sir
    Very good story Sir
    Regards
    A.Ramakrishnan////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com