மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

9.5.13

Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா?


Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா?

Serial write up.தொடர் எழுத்தாக்கம் - பகுதி ஒன்று

இன்று உலகில் உள்ள மனிதர்களை இரண்டு பிரிவாக வகைப் படுத்தலாம். ஒன்று பணத்தை வைத்துக் கொண்டு என்ன்ன செய்வது என்று மலைத்துப் போய் நிற்கும் மனிதர்கள். அதாவது சேர்ந்த பணத்தை, குவிந்து கொண்டி ருக்கும் பணத்தை அல்லது கொட்டிக்கொண்டிருக்கும் பணத்தை எங்கே முதலீடு செய்யலாம் அல்லது பதுக்கலாம் அல்லது என்ன செய்தால் பாதுகாக்கலாம் என்று மண்டையைப் பியத்துக் கொண்டிருப்பவர்கள் முதல் வகை.

பணத்திற்கு, அதாவது தேவைப்படும் பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப்போய் அல்லது கிறுகிறுத்துப்போய் செயலற்று நிற்கும் மனிதர்கள் மற்றொரு வகை.

இருவருக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்.

இரு பிரிவினருக்கும் ஜாதகப்படி என்ன வித்தியாசம்?

அதீத பணக்காரர் (Enormously Rich) பெரிய பணக்காரர் (Very rich) பணக்காரர் (rich) செள்கரியமானவர் (well to do) மேல்தட்டு மக்கள் (upper Middle class) நடுத்தர வர்க்கத்தினர் (Middle class) ஏழை (Poor) மிகவும் ஏழ்மையானவர் (Very poor) மற்றும் பரம ஏழை (extremely poor) என்று சற்று விரிவாக வகைப் படுத்தலாம்.

ஜாதகப்படி வகைப்படுத்தலாமா?

படுத்தலாம். முடிந்தவரை விவரித்துக் காட்டுகிறேன். சற்று நீண்ட கட்டுரை. ஒரே ஸ்ட்ரோக்கில் எழுதினால் திகட்டிவிடும். ஆகவே சுவாரசியம் குறையாமல் தொடர்ந்து எழுத உள்ளேன். அவைகள் வாரம் ஒரு பகுதியாக சில வாரங்களுக்கு வரும். பொறுமையுடன் படிக்க வேண்டுகிறேன். பிறகு அடுத்த தலைப்பில் வேறு ஒரு மாரத்தான் பதிவு வரும்
-------------------------------------------------------------------------
“வாத்தி (யார்), அது என்ன மாரத்தான் போஸ்ட் என்ற பெயர்?”

“பாப்கார்ன் பதிவுகளைப்போல, இதுவும் ஒருவகைப் பதிவு என்று வைத்துக்கொள் ராசா!. பொட்டலம் சிறிதாக இருக்கிறதே என்ற பேச்சிற்கெல்லாம் இதில் இடமிருகக்காது. செட்டிநாட்டு விருந்தைப்போல முழுச் சாப்பாடாக இருக்கும். சுவைத்துச் சாப்பிடு ராசா!:-)))
-------------------------------------------------------------------------
1
நான் தொழில்முறை எழுத்தாளன் அல்ல! முதலில் பத்திரிக்கை ஆசிரியர் ஒருவரின் வற்புறுத்தலுக்காக எழுதத் துவங்கினேன். அதை நான் விபத்து என்று வேடிக்கையாகச் சொல்வேன்.. அது நடந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது. அவருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, தொடர்ந்து பல குட்டிக்கதைகளைச் சொல்லிச் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தேன். வியந்து பாராட்டிய அவர், இத்தனை சுவாரசியமாகப் பேசுகிறீர்களே - எழுதுவீர்களா? என்றார். எழுதினால் இன்னும் அதிகமான சுவாரசியத்துடன் எழுதலாம் என்றேன்.

“இதுவரை ஏன் எழுதவில்லை?” என்றார்

“எழுதினால் அதைப் பிரசுரிப்பதற்கு ஆள் வேண்டுமே? குமுதம் விகடன் போன்ற பத்திரிக்கைகளில் எல்லாம், ஸ்டார் எழுத்தாளர்களின் ஆக்கங்களை மட்டும்தான் பிரசுரிப்பார்கள். (இது அன்றைய நிலை) ஸ்டார் எழுத்தாளர் ஆவதற்குள் தாவு தீர்ந்துவிடும். ஆகவே எழுதவில்லை!” என்றேன்

“நாங்கள் குறும் பத்திரிக்கைக்காரர்கள்தான். எங்களுக்கு எழுதிக்கொடுங்கள். நாங்கள் பிரசுரிக்கிறோம்” என்று வாக்களித்தார். அப்படித்தான் துவங்கியது எனது எழுத்துப் பயணம். அந்தப் பத்திரிக்கையில் தொடர்ந்து இதுவரை 100ற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், குட்டிக்கதைகளையும், இரண்டு தொடர் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். ஏராளமான வாச்கர்களின் ஆதரவு இருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அந்த இதழின் ஆத்மார்ந்த வாசகரும், காரைக்குடியின் மூத்த குடிமக்களில் ஒருவருமான திரு.வேங்கடாசலம் செட்டியார் என்பவர் நேரில் வந்து என்னைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கடைசியில் வேண்டுகோள் ஒன்றை முன் வைத்தார்.

“உங்கள் கதைகளில் ஒரு இருபது கதைகளைப் பிரதி எடுத்துக் கொடுங்கள்” என்றார்

“என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்டேன்.

“எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் முத்து விழா (எண்பதாம் ஆண்டு நிறைவு விழா) வரவுள்ளது. அந்த விழாவிற்கு வரும் விருந்தினர்களுக்கு, உங்கள் கதைகளை ஒரு புத்தகமாக்கிப் பரிசாகக் கொடுக்கலாம் என்றுள்ளேன்”

“நல்லது. அப்படியே செய்யுங்கள். ஆனால் நான் ஒரு புத்தக ரசிகன். என் புத்தகம் எப்படி வரவேண்டும் என்பதில் எனக்கு ஒரு கனவு உள்ளது. ஆகவே நானே ஏற்பாடு செய்து, அச்சிட்டுப் புத்தகமாகத் தருகிறேன். உங்களுக்கு எத்தனை பிரதிகள் வேண்டும்?” என்று கேட்டேன்

“650 பிரதிகளை வாங்கிக் கொள்கிறேன்” என்றார்

அது நல்ல எண்ணிக்கை. உள்ளம் உவகை கொண்டது. சரி தருகிறேன் என்று என் சம்மதத்தைத் தெரிவித்தேன்.

அடுத்த நொடியே இரண்டு நூறு ரூபாய்க் கட்டுகளை எடுத்து என் மேஜை மேல்வைத்தார்.

“இது எதற்கு?” என்றேன்

“தமிழில் எழுதி எல்லாம் சம்பாதிக்க முடியாது. புத்தகங்களை அச்சிடும் வேலையை உங்கள் கைக்காசை வைத்துச் செய்து நீங்கள் சிரமப்பட வேண்டாம் இதை  முன்பணமாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தகம் அச்சாகி வந்தவுடன் மீதம் எவ்வளவு தரவேண்டும் என்று சொல்லுங்கள். தந்துவிடுகிறேன்”

என் கைகளைப் பிடித்துக் குலுக்கி விட்டு, ஆசி வழங்கிவிட்டு, அவர் புறப்பட்டுச் சென்று விட்டார்.

இளையராஜா அவர்களின் பின்னணி இசையுடன் அந்தக் கணம் நான் காற்றில் பறந்ததென்னவோ உண்மைதான்.

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் வேறு. அதைத்தான் விதி என்போம்!

என்ன நடந்தது?

அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன். பொறுத்திருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

30 comments:

ஜோதிஜி திருப்பூர் said...

அற்புதம். குறிப்பாக பணக்காரர் குறித்து, அதன் வகைகள் குறித்து சொன்ன விதம் வெகு அற்புதம்.

அய்யர் said...

(தொண்டையை கனைத்துக் கொண்டு)
ம்...

ஜி ஆலாசியம் said...

இதன் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்!
நன்றிகள் ஐயா!

arul said...

nice post

rajanblogs said...

Good morning sir,
Very interesting post,
Eagerly waiting for the next class.

ravichandran said...

Respected Sir,

Happy morning.As you told, we have to say thank to that writer. He insisted you to write and we are learning from you now.

Thanks for that writer as well as you.

With kind regards,
Ravi

சர்மா said...

வணக்கம் ஐயா,
முற்றிப் பழுத்த தங்க நிற எலுமிச்சம் பழத்தை வெட்டும்போது நாவு சிலிர்ப்பது போல்
இன்றைய பதிவு விறுவிறுப்பாக ஆரம்பித்து விட்டது.
ஆவலுடம் எதிர்பார்க்கிறோம்.

manikandan said...

ஆவலுடன்,வழி மேல் விழி வைத்து காத்திருக்கிரோம் அய்யா

C Jeevanantham said...

Very interesting sir.

jeeva

Arul said...

I am waiting for next week...

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா, கஷ்ட்டப்பட்டு சம்பாரிப்பவர்களுக்குத்தான் பணத்தின் அருமை தெரியும், நம் வாழ்க்கையில் வந்த தடத்தை திரும்பி பார்க்கிறபோது நமக்கே வியப்பாக இருக்கும், நாமா இத்தனை தடைகளை கடந்து வந்தோம் என்று நினைத்து பார்க்கும் போது அந்த நினைவுகளே ஒரு சந்தோசம் ஐயா, நம் வாழ்க்கை அனுபவம் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு சிறிய வெளிச்சத்தை உண்டுபண்ணும் எனும்போது நம் வாழ்க்கையை ப்ற்றி கூறுவதில் பெறுமையே ஐயா,அடுத்த வகுப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா. நன்றி ஐயா.

GOWDA PONNUSAMY said...

அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.நன்றியுடன்.

பார்வதி இராமச்சந்திரன். said...

ஆரம்பமே அதிக எதிர்ப்பார்ப்பைத் தூண்டுகிறது. தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக்க நன்றி.

renga said...

குருவிற்கு வணக்கங்கள்,
ஆரம்பத்திலேயே பரபரப்பு தொற்றிக்கொண்டது. மாரத்தனிற்கு ஆர்வமாயுள்ளேன்.
நன்றியுடன் தங்கள் மாணவன், ரெங்கா.

kmr.krishnan said...

புதுமைகளைப் புகுத்தி வாசகர்களைத் தக்க வைத்துக்கொள்வதில் நீங்கள் முதலிடம் பெறுகிறீர்கள். ஜோதிடம் + அனுபவப்பகிர்வு என்னும் போது சுவை கூடும். அனைவரும் ஆவலுடன் எதிர் பார்ப்பர்.நன்றி ஐயா!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ஜோதிஜி திருப்பூர் said...
அற்புதம். குறிப்பாக பணக்காரர் குறித்து, அதன் வகைகள் குறித்து சொன்ன விதம் வெகு அற்புதம்./////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
(தொண்டையை கனைத்துக் கொண்டு)
ம்.../////

ம்.. ம்...ம்....!!!!!
(தொண்டையைக் கனைக்காமல்!)

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ஜி ஆலாசியம் said...
இதன் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்!
நன்றிகள் ஐயா!/////

உங்களைப் போன்றவர்களின் ஆவல்தான் ஒருவித உற்சாகத்துடன் என்னை மேலும் மேலும் எழுதப் பணிக்கின்றது!நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger arul said...
nice post/////

நல்லது. நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger rajanblogs said...
Good morning sir,
Very interesting post,
Eagerly waiting for the next class./////

உங்கள் ஆர்வம் வீண் போகாது. பொறுத்திருங்கள். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning.As you told, we have to say thank to that writer. He insisted you to write and we are learning from you now.
Thanks for that writer as well as you.
With kind regards,
Ravi/////

உண்மைதான்.என்னதான் எழுதுவதற்கு ஆர்வம் இருந்தாலும் அதை ஊக்கப்படுத்துவதற்கு சிலர் வேண்டும். முதலில் அவர். இப்போது என்னுடைய வகுப்பறைக் கண்மணிகள்!

SP.VR. SUBBAIYA said...

///Blogger சர்மா said...
வணக்கம் ஐயா,
முற்றிப் பழுத்த தங்க நிற எலுமிச்சம் பழத்தை வெட்டும்போது நாவு சிலிர்ப்பது போல்
இன்றைய பதிவு விறுவிறுப்பாக ஆரம்பித்து விட்டது.
ஆவலுடம் எதிர்பார்க்கிறோம்.////

உங்கள் ஆர்வம் வீண் போகாது. பொறுத்திருங்கள். தொடர் சுவையாகவும், பல உபயோகமான செய்திகளுடனும் இருக்கும். அதற்கு நான் உத்திரவாதம் தருகிறேன்! நன்றி சர்மா அவர்களே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger manikandan said...
ஆவலுடன்,வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறோம் அய்யா/////

ஆகா, இது போன்ற ஆர்வங்கள்தான் என்னைத் தொடர்ந்து எழுதவைக்கின்றது. நன்றி மணிகண்டன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger C Jeevanantham said...
Very interesting sir.
jeeva////

நல்லது. உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஜீவா!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Geetha Lakshmi A said...
வணக்கம் ஐயா, கஷ்ட்டப்பட்டு சம்பாரிப்பவர்களுக்குத்தான் பணத்தின் அருமை தெரியும், நம் வாழ்க்கையில் வந்த தடத்தை திரும்பி பார்க்கிறபோது நமக்கே வியப்பாக இருக்கும், நாமா இத்தனை தடைகளை கடந்து வந்தோம் என்று நினைத்து பார்க்கும் போது அந்த நினைவுகளே ஒரு சந்தோசம் ஐயா, நம் வாழ்க்கை அனுபவம் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு சிறிய வெளிச்சத்தை உண்டுபண்ணும் எனும்போது நம் வாழ்க்கையை ப்ற்றி கூறுவதில் பெருமையே ஐயா, அடுத்த வகுப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா. நன்றி ஐயா./////

உங்களின் ஆர்வமும், பொறுமையும் வாழ்க! வளர்க! தொடர்ந்து படியுங்கள்! நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger GOWDA PONNUSAMY said...
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.நன்றியுடன்./////

உங்களின் ஆர்வத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger பார்வதி இராமச்சந்திரன். said...
ஆரம்பமே அதிக எதிர்ப்பார்ப்பைத் தூண்டுகிறது. தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக்க நன்றி.////

நல்லது. தொடர்ந்து படித்து, உங்களின் கருத்துக்களைப் பின்னூட்டத்தில் தாருங்கள் சகோதரி. நன்றி உரித்தாகுக!

SP.VR. SUBBAIYA said...

////Blogger renga said...
குருவிற்கு வணக்கங்கள்,
ஆரம்பத்திலேயே பரபரப்பு தொற்றிக்கொண்டது. மாரத்தனிற்கு ஆர்வமாயுள்ளேன்.
நன்றியுடன் தங்கள் மாணவன், ரெங்கா.////

நல்லது. நன்றி ரெங்கா! தொடர்ந்து படித்துக்கொண்டு வாருங்கள்.!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kmr.krishnan said...
புதுமைகளைப் புகுத்தி வாசகர்களைத் தக்க வைத்துக்கொள்வதில் நீங்கள் முதலிடம் பெறுகிறீர்கள். ஜோதிடம் + அனுபவப்பகிர்வு என்னும் போது சுவை கூடும். அனைவரும் ஆவலுடன் எதிர் பார்ப்பர்.நன்றி ஐயா!/////

உங்களின் பாராட்டிற்கும், கருத்துப் பகிர்விற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

Sattur Karthi said...

அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்