மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.5.13

கவிதை நயம்: நாளைய பெண்!

இன்றைய கவிதை நயம் பகுதியை நம் மதிப்பிற்கு உரிய கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய புதுக் கவிதை ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து  மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------
கவிதை நயம்: நாளைய பெண்!

முதல்முறை கேட்டவன் நீ
பலமுறை கேட்டவள் நான்

காதல் என்ற பொட்டலம் பிரித்து
ஹார்மோன் விருந்துண்டோம்

பிழைபோல ஒரு சரி
சரிபோல ஒரு பிழை
பரஸ்பரம் உடன்பட்டோம்!

அரையிருளில் சகிக்கலாம்
என்பதன்றி
அழகில்லை நீயும் நானும்
பாத்திரத்தின் அழகு பார்ப்பதில்லை தாகம்
என் நினைவில்
உன் முகம் அழிந்து போகலாம்

இரண்டை மறவேன்;
குழி பறிக்கும் எலி போலும் உன் சுறுசுறூப்பையும்
ஒவ்வொரு பரவசத்தின் உயரத்திலும்
கெட்ட வார்த்தையில் என்னைத் திட்டியதையும்

மற்றப்டி
பகலில் உடன்படாது உனக்கும் எனக்கும்

பிரசவச் செலவை நீ ஏற்பின்
பெற்றுத் தருவேன் உன் சதைப் பிம்பம்

சுமக்கவோ....
கலைக்கவோ.....
இ மெயில் அனுப்பு!

         - கவிஞர் வைரமுத்து 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26 comments:

  1. கவிதைக்கு நன்றி ஐயா...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_8.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. பணம் பார்த்தபின்புதான் பிள்ளையை கூட பெற்றுக்கொள்ள முடியுமா? அவலம்.

    ReplyDelete
  3. ஐயா காலை வணக்கம் !

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. புதுக்கவிதைப் பித்துப் பலரையும் பிடித்து ஆட்டுகிறது. நல்ல திறமைசாலிகள் கூட தத்துப்பித்து என்று உளறுகின்றனர்.

    'குழி பறிக்கும் எலி போலும் உன் சுறு சுறுப்பு....'
    முகம் சுளிக்க வைக்கும் வரிகள். கண்ராவிக் கற்பனை.
    என்ன செய்வது புதுக் கவிதையல்லவா? பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

    இந்தக்கவிஞர் பாடும் நரஸ்துதிக் கவிதைகளைவிட இது எவ்வளவோ தேவலாம்.

    ReplyDelete
  8. நாளைக்கு பெண் இப்படித்தானா?. இன்றே இவைகள் நடக்கிறதே.கட்டிலின் கசமுசாவை கசக்கி வந்த கவிதை கசக்கும் கரு.

    ReplyDelete
  9. ஆசான் இருக்கிறார்
    வகுப்பறை யில் வேண்டாம் வாதவிவாதங்கள்
    தகிக்கும் வார்த்தைகளை த்த‌ள்ளி வையுங்க்ள

    பணம் பழத்தோலுக்கும் சேர்த்துக் கொடுத்தாலும்!
    ப்ழத்தை உண்ணும் போது தோலை வீசுங்கள்

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. பதிவிற்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டங்களுக்கும், அடுத்தவர்களின் பின்னூட்டங்களைக் குறிப்பிட்டு அதற்கு விமர்சனம் அல்லது எதிர்வாதம் செய்து வரும் பின்னூட்டட்ங்களுக்கும் அனுமதி இல்லை. அனைவரும் ஒத்துழைப்பை நல்க வேண்டுகிறேன்
    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  13. அதனால் தான் இவர் கவிப் பேரரசோ?!

    எப்படி சார் இப்படி எல்லாம் கற்பனை செய்ய முடிகிறது.

    என்னமோ சார் இந்தக் குப்பைகளை எல்லாம் தமிழிலே எழுத???
    நல்ல வேலை தமிழன்னை மேகலையை மிகவும் இறுக்கமாக போட்டிருக்கிறாள்!

    எத்தனை ஆழமாக இருப்பினும் சங்க இலக்கியத்தில் கூட...
    ஏன்? சீவக சிந்தாமணியில் கூட அதை வாசிக்கும் போது....
    இப்படியும் காமத்தை சொல்ல முடியுமா என்று கூட எண்ணத் தோன்றும்..

    ஆனால், தான் படித்த தமிழ் தமிழ் என்று மார் தட்டும் சிலர் இப்படியும் கலாச்சார கேட்டையும், எதிர் கால பெண்ணை இவர்களின் கொள்ளுப் பேத்திகளைப் பற்றி இத்தனைக் கேவலமாக எண்ணிக் கொள்ளவும் முடிகிறதா?

    எத்தனை நம்பிக்கை... என்னே இவரின் தூரப் பார்வை....

    பாம்பா! கயிறா! பார்வை பிழை கருத்தைப் பொருத்தே (எண்ணத்தைப் பொருத்தே) அமைகிறது... இதை விட பெண்ணைக் கேவலமாக சிந்திக்க முடியாத ஒரு அவசியமான அற்புதமான காலத்தால் இனி கவி என்று சொல்லிக் கொண்டு வருவோனெல்லாம் நின்று தொழும் அளவிற்கு ஒரு அற்புதக் கவிதையை படைத்திருக்கிறார் போலும்..

    இத்தனை நேர்மரையானப் பார்வை தான் எங்கிருந்துக் கிடைத்தது... ஓ! அது அவரின் பணியிட அனுபவம் போலிருக்கிறது!

    நம்ம வகுப்பறை பின்னூடக் கவிஞர் கூட அந்தப் புறம் தானே இருக்கிறார்... இருந்தும் நம்மவர் அந்தப்புரம் போக மாட்டார் இல்லையா! :)

    புதுக் கவிதை என்பது இலக்கணத் எதிர் பார்த்து காத்திராமல் எண்ணத்தில் உதித்த அழகு உணர்ச்சியை ஒரு உயர் மானுட, சமூக பிரஞ்ஞையோடு வெளிப் படுத்தும் உத்தி தான்....

    ஆனால் இப்படியும் எழுதுகிறார்கள் என்றால் இவர்களின் தொலை தூரப் பார்வையை என்னவென்பது??

    ஆமாம், எங்கு கிடைத்தது இந்தக் கன்றாவியும் கடைக்கு வந்து காசாகிருச்கா!

    சார், இப்படி எல்லாம் உயர்திரு பட்டம் தந்து கவுத்திட்டீங்களே பாவம்!
    யார் நாம் தான்!

    ReplyDelete
  14. நல்ல கவிதைப் பகிர்வு
    "ஒவ்வொரு பரவசத்தின் உயரத்திலும்
    கெட்ட வார்த்தையில் என்னைத் திட்டியதையும்.." ரசித்தேன்.

    ReplyDelete
  15. /////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    கவிதைக்கு நன்றி ஐயா...
    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_8.html) சென்று பார்க்கவும்... நன்றி...////

    நல்லது. பார்த்தேன். உங்களின் தகவலுக்கு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  16. /////Blogger கவியாழி கண்ணதாசன் said...
    பணம் பார்த்தபின்புதான் பிள்ளையை கூட பெற்றுக்கொள்ள முடியுமா? அவலம்.////

    உள்ளதைத்தான் உரைத்திருக்கிறார் கவிஞர். சமூக அவலங்களை ஒதுக்க முடிய்மா என்ன? உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. ///Blogger GOWDA PONNUSAMY said...
    நன்றிகள்.////

    நல்லது பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  18. ////Blogger Sattur Karthi said...
    ஐயா காலை வணக்கம் !/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  19. /////Blogger kmr.krishnan said...
    புதுக்கவிதைப் பித்துப் பலரையும் பிடித்து ஆட்டுகிறது. நல்ல திறமைசாலிகள் கூட தத்துப்பித்து என்று உளறுகின்றனர்.
    'குழி பறிக்கும் எலி போலும் உன் சுறு சுறுப்பு....'
    முகம் சுளிக்க வைக்கும் வரிகள். கண்ராவிக் கற்பனை.
    என்ன செய்வது புதுக் கவிதையல்லவா? பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
    இந்தக்கவிஞர் பாடும் நரஸ்துதிக் கவிதைகளைவிட இது எவ்வளவோ தேவலாம்./////

    சமூகத்தின் அவலங்களை ஒதுக்க முடிய்மா என்ன? உள்ளதைத்தான் எழுதியிருக்கிறார். சில உதாரணங்களை அவர் தவிர்த்திருக்கலாம். பரவாயில்லை. பொறுத்துக்கொள்வோம். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  20. ////Blogger thanusu said...
    நாளைக்கு பெண் இப்படித்தானா?. இன்றே இவைகள் நடக்கிறதே.கட்டிலின் கசமுசாவை கசக்கி வந்த கவிதை கசக்கும் கரு.///

    அறுசுவையில் கசப்பும் ஒன்று அல்லவா? ஏற்றுக்கொள்ளுங்கள்!

    ReplyDelete

  21. Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  22. ///Blogger சர்மா said...
    ஆசான் இருக்கிறார்
    வகுப்பறை யில் வேண்டாம் வாதவிவாதங்கள்
    தகிக்கும் வார்த்தைகளை த்த‌ள்ளி வையுங்க்ள
    பணம் பழத்தோலுக்கும் சேர்த்துக் கொடுத்தாலும்!
    ப்ழத்தை உண்ணும் போது தோலை வீசுங்கள்////

    உண்மையைச் சொன்ன மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete
  23. Blogger ஜி ஆலாசியம் said...
    அதனால் தான் இவர் கவிப் பேரரசோ?!
    எப்படி சார் இப்படி எல்லாம் கற்பனை செய்ய முடிகிறது.
    என்னமோ சார் இந்தக் குப்பைகளை எல்லாம் தமிழிலே எழுத???
    நல்ல வேலை தமிழன்னை மேகலையை மிகவும் இறுக்கமாக போட்டிருக்கிறாள்!
    எத்தனை ஆழமாக இருப்பினும் சங்க இலக்கியத்தில் கூட...
    ஏன்? சீவக சிந்தாமணியில் கூட அதை வாசிக்கும் போது....
    இப்படியும் காமத்தை சொல்ல முடியுமா என்று கூட எண்ணத் தோன்றும்..
    ஆனால், தான் படித்த தமிழ் தமிழ் என்று மார் தட்டும் சிலர் இப்படியும் கலாச்சார கேட்டையும், எதிர் கால பெண்ணை இவர்களின் கொள்ளுப் பேத்திகளைப் பற்றி இத்தனைக் கேவலமாக எண்ணிக் கொள்ளவும் முடிகிறதா?
    எத்தனை நம்பிக்கை... என்னே இவரின் தூரப் பார்வை....
    பாம்பா! கயிறா! பார்வை பிழை கருத்தைப் பொருத்தே (எண்ணத்தைப் பொருத்தே) அமைகிறது... இதை விட பெண்ணைக் கேவலமாக சிந்திக்க முடியாத ஒரு அவசியமான அற்புதமான காலத்தால் இனி கவி என்று சொல்லிக் கொண்டு வருவோனெல்லாம் நின்று தொழும் அளவிற்கு ஒரு அற்புதக் கவிதையை படைத்திருக்கிறார் போலும்..
    இத்தனை நேர்மரையானப் பார்வை தான் எங்கிருந்துக் கிடைத்தது... ஓ! அது அவரின் பணியிட அனுபவம் போலிருக்கிறது!
    நம்ம வகுப்பறை பின்னூடக் கவிஞர் கூட அந்தப் புறம் தானே இருக்கிறார்... இருந்தும் நம்மவர் அந்தப்புரம் போக மாட்டார் இல்லையா! :)
    புதுக் கவிதை என்பது இலக்கணத் எதிர் பார்த்து காத்திராமல் எண்ணத்தில் உதித்த அழகு உணர்ச்சியை ஒரு உயர் மானுட, சமூக பிரஞ்ஞையோடு வெளிப் படுத்தும் உத்தி தான்....
    ஆனால் இப்படியும் எழுதுகிறார்கள் என்றால் இவர்களின் தொலை தூரப் பார்வையை என்னவென்பது??
    ஆமாம், எங்கு கிடைத்தது இந்தக் கன்றாவியும் கடைக்கு வந்து காசாகிருச்கா!
    சார், இப்படி எல்லாம் உயர்திரு பட்டம் தந்து கவுத்திட்டீங்களே பாவம்!
    யார் நாம் தான்!//////

    உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  24. /////Blogger Muruganandan M.K. said...
    நல்ல கவிதைப் பகிர்வு
    "ஒவ்வொரு பரவசத்தின் உயரத்திலும்
    கெட்ட வார்த்தையில் என்னைத் திட்டியதையும்.." ரசித்தேன்./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com