மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

30.5.13

கவிதை நயம்: பக்கத்து வீட்டு சீதாவும் பாரத மாதாவும்!

 இன்றைய கவிதை நயம் பகுதியை நம் மதிப்பிற்கு உரிய கவிஞர் வாலி அவர்கள் எழுதிய புதுக் கவிதை ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து  மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------
கவிதை நயம்: பக்கத்து வீட்டு சீதாவும் பாரத மாதாவும்!

பத்தும்
பெண் குழந்தைகளாகப்
பெற்றெடுத்து
விட்ட -
பக்கத்து வீட்டு
சீதா.....
குடும்பக்
கட்டுப் பாட்டைத்
தீவிர மாக
அனுஷ்டிக்கிறாள்.....
இனியொரு -
ஆண் குழந்தை
பிறக்க
வாய்ப்பே
இல்லையென்று!

சீதாவும்
பாரத
மாதாவும்
ஒன்றுதான்!

அறுபத்தைஞ்சு கோடி
மக்களைப்
பெற்றெடுத்து
விட்டு......

பாரத மாதாவும்....
இப்போது
குடும்பக் கட்டுப்பாட்டைத்
தீவிரமாக
அனுஷ்டிக்கிறாள்.....

இனியொரு -
காந்தி
பிறக்க
வாய்ப்பே
இல்லையென்று!

                 -கவிஞர் வாலி

(கவிஞர் வாலி அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை இது. அப்போதைய இந்திய ஜனத்தொகை அறுபத்தைந்து கோடிதான்)


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

arul said...

superb post

திண்டுக்கல் தனபாலன் said...

வாய்ப்பே இல்லை தான்...

நன்றி ஐயா...

வேப்பிலை said...

அப்படியா..
அந்த சீதா யார்..?

அவளுக்கு சொல்லுங்கள்
ஆண் மகவு வேண்டுமெனில்

வங்கியில் கிடைக்கிறது பல
வளமான ஆண் அணுக்கள்

இன்னும் சில காந்தி
இங்கே இருப்பதை

இப்போ அவரைப் போலவே
இன்று நாமும் தெரிந்து கொள்வதில்

மகிழ்ச்சி அவருக்கா..இல்லை
மனதை வருத்தும் நமக்கா?

கவிதை என்ற வகையில் ரசிக்க சரி
கவணித்துப் பார்த்தால் மாற்றங்கள்

எழுத்திலும் பல
எண்ணத்திலும் பல பல..

மாற்றுக் கருத்துடையவர்
மனதை அமைதி படுத்திகொள்ளுங்கள்

கண்களை மூடியபடி
கவனத்தை திருப்புங்கள்

அய்யர் சொல்வது
அத்தனையும் புரியும்


Vinoth Kumar said...

ஒரு காந்தி ஊரை எமாற்றிதும் ஆட்சியளர்களுக்கு சொம்படித்ததும் பத்தாதா?

இன்னம் காந்தி வேண்டுமா ?

வேண்டும்னாலும்
அதான் இன்னம் சோனியா காந்தியில் ராகுல் காந்தி ... பிரியாங்கா காந்தி வரை இருக்கே..

இந்த காந்தி போதுமா?

இன்னம் கொஞ்சம் வேணுமா ?
www.vinavu.com/2012/10/02/mk-gandhi/

ஜி ஆலாசியம் said...

ஐயா காவிரிக் கரையோரே
கன்னித் தமிழ்ப் பெரியோரே!
விரக்தி வேண்டாமையா
வீண் கவலை வேண்டாமையா!

ஜகத்தில் சாந்தி மொத்தமும் போனால்
நிஜத்தில் காந்தி வருவார் - அப்போது
பயத்தில் அநீதிச்சாகும் காரணம் அப்போதவர்
அவதாரப் புருஷ னாவார்.

துரை செல்வராஜூ said...

என்ன இப்படியாகி விட்டது!?... மறுபடியும் காந்தி பிறப்பார் என்றல்லவா இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன்!.

Ak Ananth said...

பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று என்று நல்லவேளையாக இன்னொன்றுக்கு போகவில்லை. மஹாத்மா காந்தி சரி. மற்ற காந்திகள் பற்றிய சர்ச்சைக்குள் போகாமல் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

thanusu said...

அன்று 65 இன்று 90 எத்தனை கோடி பிறந்தாலும் அத்தனை கோடியிலும் பிறந்தது ஒரே ஒரு ஆண். அது காந்தி மட்டும் தான். வாலி வாலி தான்.


Dallas Kannan said...

Respected Sir
Not to hurt anyone and it my own opinion. After seeing Gandhi's grandson's interview about his grandfather and the newspaper clip on what Gandhi said on the African people, somehow I lost respect for him. I think that book is banned in India. Not sure all of them or true, but when his grandson agrees for some of the allegations (not all of them) I see him as a good person (good humans makes mistakes too) rather than a maha-athma.