மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

22.5.13

Astrology மாதா பிதா குரு சனி!
Astrology மாதா பிதா குரு சனி!

“என்ன சார் குழப்பம்? மாதா, பிதா, குரு, தெய்வம் என்றுதானே சொல்லுவார்கள்?”

“ஜோதிடம் கற்றுக்கொள்ளும் நமக்கு மாதா பிதா குரு சனி என்பதுதான் பாடம்”

“எப்படி?”

“நமக்கு மாதா என்பது சந்திரனையும், பிதா என்பது சூரியனையும் குறிக்கும். சந்திரன் மனகாரகன், சூரியன் உடல் காரகன். இருவரும் நமக்குப் பிரதானம். அடுத்து நம்பர் ஒன் சுபக்கிரகமான குருவும், ஆயுள் மற்றும் கர்மகாரகனான சனியும் முக்கியம். மற்ற கிரகங்கள் எல்லாம் அதற்கு அடுத்துத்தான். புத்தியே பிரதானம் என்பவர்கள் புதனையும், இல்லை சுகமே முக்கியமானது என்பவர்கள் சுக்கிரனையும் அடுத்து சேர்த்துக்கொள்ளலாம்!
--------------------------------------------------------------------------------------------------
வாக்கியப் பஞ்சாங்கப்படி குரு பகவான் 28.5.2013ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9:00 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவேசிக்கின்றார். அடுத்து வரும் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கு அவர் அங்கே இருப்பார். அதாவது 12.6 2014 வரை அங்கே இருப்பார்

இதனால் நன்மை பெறும் ராசிக்காரர்கள். (ராசி என்பது உங்கள் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை வைத்துப் பார்க்க வேண்டும். இதைப் புது முகங்களுக்காகச் சொல்கிறேன்)

1. ரிஷபம்
2. சிம்மம்
3. துலாம்
4. தனுசு
5. கும்பம்

ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் நன்மைகளைத் தரும்.

1. ரிஷப ராசிக்காரர்கள் இதுவரை ஒன்றாம் இடத்துக் குருவால் அவதிப்பட்டவர்கள், அந்த அவதிகளில் இருந்து விலகி நன்மை பெறுவார்கள்
2. சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை பத்தாம் இடத்தில் இருந்த குரு இப்போது பதினொன்றாம் இடத்திற்குப் போகிறார். அது கோள்சாரப்படி அதிகமான லாபத்தைத் தரும் இடம். அவர்களுக்குப் பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.
3. துலாம் ராசிக்காரர்களுக்கு இதுவரை எட்டாம் இடத்தில் இருந்து காரியங்களை முடக்கி வைத்தவர் ஒன்பதாம் இடத்திற்கு, பாக்கிய ஸ்தானத்திற்குச் செல்கிறார். அது மிகவும் நன்மையானது.
4. தனுசு ராசிக்காரர்களுக்கு இதுவரை ஆறில் இருந்த குரு இப்போது ஏழாம் இடத்திற்கு இடம் மாறி ராசிக்காரர்களைத் தன் நேரடிப் பார்வைக்குக் கொண்டு வந்து ஏராளமான நன்மைகளைச் செய்வார்.
5. கும்ப ராசிக்காரர்களுக்கு இதுவரை 4ல் இருந்த குரு ஐந்தாம் இடமான புண்ணிய ஸ்தானத்திற்கு இடம் மாறுகிறார். அதுவும் நன்மையானதே
-------------------------------------------
கீழ்க்கண்ட ராசிக்காரர்களுக்கு சராசரியான (average) பலன்கள் கிடைக்கும்.

1. மேஷம்
2 கடகம்
3. மகரம்
-------------------------------------------------------
கீழ்க்கண்ட ராசிக்காரர்களுக்கு நன்மைகள் எதுவும் இருக்காது

1. மிதுனம் (ஒன்றாம் இடத்துக் குரு)
2.கன்னி (பத்தாம் இடத்துக் குரு)
3. விருச்சிகம் (எட்டாம் இடத்துகு குரு)
4.மீனம் (நான்காம் இடத்துக் குரு)
----------------------------------------
சரி நன்மைகள் என்றால் என்ன?

உங்களுக்குத் தெரியாதா என்ன?

இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். எல்லோருக்குமா? அதெப்படி எல்லோருக்கும்? திருமணத்தை நடத்திவைக்கக்கூடிய களத்திரகாரகன், ஏழாம் இடத்துக்காரன் அல்லது லக்கினாதிபதி அல்லது இரண்டாம் இடத்துக்காரனின் திசைகளில் ஒன்றும் நடந்து கொண்டிருக்க வேண்டுமே! அப்போதுதான் திருமணம் கூடி வரும்.

கோள்சாரத்தைவிட தசா புத்திப் பலன்கள் மிகவும் முக்கியமானது. நல்ல தசா புத்திகள் நடந்து கொண்டிருந்தால் கோள்சாரப் பலன்கள் பெரிய பாதிப்பை உண்டாக்காது.

நல்ல தசா புத்தியும் நடந்து கொண்டிருந்து இப்போது குருவும் நன்மையான இடத்திற்கு இடம் மாறுகிறார் என்றால் உங்களுக்கு இரண்டு மடங்கு நன்மைகள் கிடைக்கும். பழம் நழுவிப் பாலில் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாய்க்குள் விழுந்ததைப் போல இருக்கும்.

அதுபோல, மோசமான தசாபுத்தியும் நடந்து, குருவும் கோச்சாரப்படி மோசமான இடத்திற்கு மாறுகிறார் என்றால், அவதிகள், கஷ்டங்கள் இரண்டு மடங்காகிவிடும்.

இந்தியாவின் ஜனத்தொகை 120 கோடி. சராசரியாக  பத்துக் கோடிப்பேர்களுக்கு ஒரு ராசி என்ற கணக்கு இருக்கும். இந்தக் குருப் பெயர்ச்சி பத்துக் கோடிப்பேர்களுக்கும் (ஒரு ராசியை வைத்து) ஒரே மாதிரியான பலனைத் தரும் என்று எப்படிச் சொல்ல முடியும்?

ஒருவருடைய சொந்த ஜாதகம், நடப்பு தசா புத்தி, அத்துடன் இந்தக் கோள்சாரம் ஆகிய மூன்றையும் வைத்துத்தான் பலன்கள். அதாவது நன்மை தீமைகள்.

நான் எப்போதும் சொல்வது போலவே, இப்போதும் சொல்கிறேன். ஜாதகம் என்பது கார். தசாபுத்தி என்பது சாலை, கோள்சாரம் என்பது ஓட்டுனர். இம்மூன்றும் நன்றாக இருந்தால் பயணம் அருமையாக இருக்கும். அதி சுகமாக இருக்கும். இன்னோவா ஏ.ஸி.கார். ஆறுவழி தேசிய நெடுஞ்சாலை, எக்ஸ்பர்ட் டிரைவர் என்று மூன்றுமே அமைந்தால் பயணம் சுகமாகத்தானே இருக்கும். பழைய மிலிசெண்ட்டோ பியட் கார், குண்டும் குழியுமான கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி சாலை போன்ற பாடாவதி சாலை, ஒரு எல் போர்டு ஓட்டுனர் போன்று மூன்றுமே இடக்காக இருந்தால் பயணம் எப்படி சுகப்படும்? அட்லீஸ்ட் 3ல் இரண்டாவது நன்றாக இருக்க வேண்டாமா?

ஆகவே குருப் பெயர்ச்சியை மட்டும் கணக்கில் கொள்ளாமல், நடப்பு தசா புத்தியையும் பாருங்கள்.

அத்துடன் இறைவனையும் அன்றாடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் நம்மைப் பார்த்துக்கொள்வார். நடக்க வேண்டியதெல்லாம் நல்லதாகவே நடக்கும். பிரார்த்தனையில் நம்பிக்கைதான் முக்கியம். அதை மனதில் வையுங்கள்.

என்னதான் பெயர்ச்சி நடக்கட்டுமே
இருட்டினில் கிரகம் மறையட்டுமே
தசாபுத்தி துணைசெய்யும் தயங்காதே (லக்கின)
காரகன் இருக்கிறான் மயங்காதே


என்ற வரிகளை மனதிற்குள் சொல்லிக் கொண்டு அடுத்த வேலையைப் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

37 comments:

Sattur Karthi said...

காலை வணக்கம் , தங்கள் பதிவிற்கு நன்றி !

சர்மா said...

வணக்கம் ஐயா
குருபெயர்ச்சி மனதுஅளிக்கிறது க்கு ஆறுதல் அளிக்கிறது.201312.6.பதிவாகியுள்ளது
ரிஷபராசி
அச்சு 2014க்குபதிலாக12.6.2013என பதிவாகி யுள்ளது
நன்றி

k.umapathy said...

Beautiful style of writing is the style of Guru. Excellent in teaching.Thanks a lot.
Yours sincerely,
k.umapathy

eswari sekar said...

vanakamsir

சர்மா said...

வணக்கம் ஐயா
ரிஷபராசிக்கான
குருப்பெயர்ச்சிப்பதிவு மகிழ்ச்சி யாக .இருக்கிறது
தங்கள் உடல் நிலை இப்போது தேவலையா ?
நன்றி

thanusu said...

குருப்பெயர்சி பலன்கள் தந்தமைக்கு நன்றிகள் ஐயா.

manikandan said...

அய்யா, கும்ப ராசி நடப்பு தசா புத்தி, புதன் தசா, புதன் புத்தி, நல்லது நடக்குமா...

manikandan said...

அய்யா, சர்மா அவர்கள் உங்கள் உடல் நிலை குறீத்து கேட்டிருக்கிறார்,உங்களூக்கு என்ன ஆய்ற்றூ.... அய்யா

இராஜராஜேஸ்வரி said...

என்னதான் பெயர்ச்சி நடக்கட்டுமே
இருட்டினில் கிரகம் மறையட்டுமே
தசாபுத்தி துணைசெய்யும் தயங்காதே (லக்கின)
காரகன் இருக்கிறான் மயங்காதே

குருவருள் தரும் வரிகள் அருமை..!

Gk.Murugan said...

ஐயா, ஜனன குருவும் கோட்சார குருவும் ஒன்று சேர்ந்தால் என்ன பலன் ?

Advocate P.R.Jayarajan said...

மிகத் தெளிவான விளக்கங்கள். அத்துடன் குருப் பெயர்ச்சி பலன்கள், பாப்கானாக, தன்னம்பிக்கை பாடல் வரிகள். மிக்க நன்றி..

Kannan said...

Good Morning Sir.
Great Lesson.

அய்யர் said...

புரிந்தது..
புரிந்தது..

புதியன பிறந்தது
புதியதாய் பிறந்தது

இடைவெளிகள் இனி
இரு(நெரு)க்கத்தை ஏற்படுத்தட்டும்

அன்புடன்
அய்யர்(இனிவேப்பிலை)

Sakthi Ganesh said...

Iyya migavum arumai. athilum kadeisiyaga ungal paattu - anga thaan vathiyar nirkirar.
Ungal irai pani - iniya pani thodara valthukkal.
Nandri.
Sakthi Ganesh

Sakthi Ganesh said...

Excellent sir, May God Bless you to continue your writings.
Thanks
Sakthi Ganesh

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Sattur Karthi said...
காலை வணக்கம் , தங்கள் பதிவிற்கு நன்றி !/////

உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சாத்தூராரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger சர்மா said...
வணக்கம் ஐயா
குருபெயர்ச்சி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது.2013 12.6.பதிவாகியுள்ளது
ரிஷபராசி
அச்சு 2014க்குபதிலாக12.6.2013என பதிவாகி யுள்ளது
நன்றி/////

திருத்தம் செய்து விட்டேன். சுட்டிக் காட்டிய மேன்மைக்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger k.umapathy said...
Beautiful style of writing is the style of Guru. Excellent in teaching.Thanks a lot.
Yours sincerely,
k.umapathy/////

எல்லாம் பழநி அப்பனின் அருள்! அவன்தான் என்னை எழுத வைக்கின்றான். உங்களின் பாராட்டுக்கள் அவனையே சேரும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger eswari sekar said...
vanakamsir/////

உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger சர்மா said...
வணக்கம் ஐயா
ரிஷபராசிக்கான
குருப்பெயர்ச்சிப்பதிவு மகிழ்ச்சி யாக .இருக்கிறது
தங்கள் உடல் நிலை இப்போது தேவலையா ?
நன்றி///////

இப்போது தேவலாம். உங்களின் அன்பிற்கும் பரிவிற்கும் நன்றி சர்மா!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger thanusu said...
குருப்பெயர்ச்சி பலன்கள் தந்தமைக்கு நன்றிகள் ஐயா./////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger manikandan said...
அய்யா, கும்ப ராசி நடப்பு தசா புத்தி, புதன் தசா, புதன் புத்தி, நல்லது நடக்குமா...//////

கும்பராசி நல்ல ராசி. அதனால்தான் பூரண கும்பத்தை அடையாளச் சின்னமாக அதற்குக் கொடுத்துள்ளார்கள். நல்லது நடக்கும். அத்துடன் நடப்பதை நல்லது என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இந்த ராசிக்காரர்களுக்கு இருக்கும்!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger manikandan said...
அய்யா, சர்மா அவர்கள் உங்கள் உடல் நிலை குறீத்து கேட்டிருக்கிறார்,உங்களூக்கு என்ன ஆய்ற்றூ.... அய்யா/////

ஒன்றும் இல்லை. பணக்கார வியாதி வந்துவிட்டது. (Blood Pressure & Sugar) மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது தேவலாம். கவலைப் படும்படி ஒன்றும் இல்லை!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger இராஜராஜேஸ்வரி said...
என்னதான் பெயர்ச்சி நடக்கட்டுமே
இருட்டினில் கிரகம் மறையட்டுமே
தசாபுத்தி துணைசெய்யும் தயங்காதே (லக்கின)
காரகன் இருக்கிறான் மயங்காதே
குருவருள் தரும் வரிகள் அருமை..!//////

உங்களின் ரசணை உணர்விற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Gk.Murugan said...
ஐயா, ஜனன குருவும் கோட்சார குருவும் ஒன்று சேர்ந்தால் என்ன பலன் ?//////

சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேல் பரல்கள் உள்ள இடங்களில் பயணிக்கும் போது கோள்சார குரு தன்னுடைய கோள்சார நிலைமையையும் தாண்டி நன்மைகளைச் செய்வார். இப்படித்தான் பார்க்க வேண்டும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Advocate P.R.Jayarajan said...
மிகத் தெளிவான விளக்கங்கள். அத்துடன் குருப் பெயர்ச்சி பலன்கள், பாப்கானாக, தன்னம்பிக்கை பாடல் வரிகள். மிக்க நன்றி../////

நல்லது உங்களுடைய பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி லாயர் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Kannan said...
Good Morning Sir.
Great Lesson./////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
புரிந்தது..
புரிந்தது..
புதியன பிறந்தது
புதியதாய் பிறந்தது
இடைவெளிகள் இனி
இரு(நெரு)க்கத்தை ஏற்படுத்தட்டும்
அன்புடன்
அய்யர்(இனிவேப்பிலை)///////

நல்லது. மருத்துவக் குணம் மிக்க வேப்பிலையை எனக்கு மிகவும் பிடிக்கும். அதைவிட வேப்பமரக் காற்று தரும் சுகமும் அலாதியாக இருக்கும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Sakthi Ganesh said...
Iyya migavum arumai. athilum kadeisiyaga ungal paattu - anga thaan vathiyar nirkirar.
Ungal irai pani - iniya pani thodara valthukkal.
Nandri.
Sakthi Ganesh/////

நல்லது சக்தி கணேஷ். வெகு நாட்களுக்குப் பிறகு உங்களுடைய பின்னூட்டத்தைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி கொண்டேன். நன்றி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Sakthi Ganesh said...
Excellent sir, May God Bless you to continue your writings.
Thanks
Sakthi Ganesh/////

ஆமாம். அவர் அருள் வேண்டும். உங்களுடைய பிரார்த்தனைகளூக்கு நன்றி நண்பரே!

arul said...

arumayana pathivu

Ak Ananth said...

எனக்கு கடந்த ஜன்ம குருவின் போதுதான் திருமணம் நடந்தது. ஒரு மாமாங்கம் கடக்கப் போகிறது. காலம்தான் எவ்வளவு வேகமாக நகர்கிறது பாருங்கள்.

அதிக வேலை பளுவின் காரணமாக வகுப்பறைக்கு அடிக்கடி கட் அடிக்க வேண்டியதாகி விடுகிறது.

SP.VR. SUBBAIYA said...

////Blogger arul said...
arumayana pathivu////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Ak Ananth said...
எனக்கு கடந்த ஜன்ம குருவின் போதுதான் திருமணம் நடந்தது. ஒரு மாமாங்கம் கடக்கப் போகிறது. காலம்தான் எவ்வளவு வேகமாக நகர்கிறது பாருங்கள்.
அதிக வேலை பளுவின் காரணமாக வகுப்பறைக்கு அடிக்கடி கட் அடிக்க வேண்டியதாகி விடுகிறது.///////

ஓஹோ நீங்கள் மிதுன ராசிக்காரரா? அதுதான் புதனின் ஆதிக்கம். புத்திசாலித்தனத்தைக் கொடுத்திருக்கிறது. கணக்காய்வாளராய் உங்களை அமர்த்தியுள்ளது. கணக்காய்வாளர் கட் அடிக்கலாமா? இனிமேல் கட் அடிக்காதீர்கள். வேலைகளுக்கு நடுவே coffee Machineக்குப் போகும் முன்பு வகுப்பறைக்குள் எட்டிப் பாருங்கள். மல்ட்டி நேஷனல் நிறுவனங்களில் வேலை செய்யும் நம் வகுப்பறைக் கண்மணிகள் அப்படித்தான் செய்கிறார்கள்!

Ak Ananth said...

எனக்கு மிதுன ராசிதான், 10ம் வீடும் அதுவே. ஆகையால் புதனுக்குரிய தொழில் அமைந்து விட்டது. நான் வேலை செய்ய ஆரம்பித்து இரண்டு மாமாங்கள் முடிய போகின்றன. இந்த காலகட்டத்தில் நான் பணி செய்யும் நிறுவனங்கள் மாறினவே தவிர தொழில் அதே கணக்காய்வாளர் தொழில்தான். லக்கினம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Ak Ananth said...
எனக்கு மிதுன ராசிதான், 10ம் வீடும் அதுவே. ஆகையால் புதனுக்குரிய தொழில் அமைந்து விட்டது. நான் வேலை செய்ய ஆரம்பித்து இரண்டு மாமாங்கள் முடிய போகின்றன. இந்த காலகட்டத்தில் நான் பணி செய்யும் நிறுவனங்கள் மாறினவே தவிர தொழில் அதே கணக்காய்வாளர் தொழில்தான். லக்கினம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்./////

மேலதிகத் தகவல்களுக்கு நன்றி ஆனந்த்!

kannan Seetha Raman said...

வணக்கம் வாத்தியார் ஐயா.

இங்கு கடைசியில் தாங்கள் கூறி உள்ளது போல தான் ஜாதக பலன் ஆனது நடை முறை வாழ்க்கையிலும் ஒத்து வருகின்றது. நன்றி வணக்கம்.