மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

28.5.13

Astrology.Popcorn Post கைக்காசு எப்போது கரையும்?Astrology.Popcorn Post கைக்காசு எப்போது கரையும்?
 
Popcorn Post No.45


முதலில் கரை என்றால் என்னவென்று பார்ப்போம். கரை என்ற தமிழ்ச்சொல்லிற்குப் பல அர்த்தங்கள் உண்டு

1. காகம் கரைவதும் கரைதான். அதாவது காகம் 'காகா’ என்று ஒலி எழுப்புவதைக் காகம் கரைகிறது என்று சொல்லுவார்கள்

2, நீரைத் தேக்கிப் பிடித்து நிறுத்தும் மேடான மண் பகுதிக்கு (ஏரி, குளங்களில்) கரை என்றுதான் சொல்லுவார்கள். ஏரிக்கரை

3. ஒரு திடப்பொருளை நீரில் கரைத்து திரவ நிலைக்குக் கொண்டு வருவதையும் (சோப்பை இப்படிக் கரைத்து விட்டாயே) கரைத்தல் என்று சொல்லுவார்கள்

4. வீணாகக் காசைச் செல்வழிப்பதையும், இப்படிக் காசைக் கரைக்கிறாயே என்றுதான் சொல்லுவார்கள்

5. உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை நீக்கம் செய்வதற்கு மேற்கொள்ளும் சிகிச்சைக்கும் கரைத்தல் என்றுதான் பெயர். இந்தக் கட்டியைக் கரைப்பதற்கு எவ்வளவோ செலவு செய்துவிட்டேன்; ஆனால் கட்டி கரைந்த பாடாக இல்லை என்று சிலர் அங்கலாய்ப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுவும் கரைத்தலில்தான் வரும்.

6. கற்பூரம் போன்ற பொருட்கள் காற்றில் ஆவியாகி ஒன்றுமில்லாமல் போகும் நிலைக்கும் கரைந்துபோய்விட்டது என்ற சொல்தான் பயன்படுத்தப்பெறும்

7. இருப்பில் உள்ள சேமிப்புப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக செலவழிந்து கொண்டிருந்தாலும்’ கைக்காசு கரைந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லுவார்கள்

சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். ஜாதப்படி இப்படிக் கரைக்கும் பணி ஒருவனுக்கு எப்போது அமுலுக்கு வரும்? அதாவது எப்போது நடக்கும்?

பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கும் கிரகத்தின் மகாதிசையில் அது நடக்கும். அது எந்தவிதமான கிரகமாக இருந்தாலும் அதை நடத்திவைக்கும்.
சனி, ராகு அல்லது கேது போன்ற கிரகங்களின் மகாதிசை என்றால் இந்தக் கரைக்கும் பணி ஜரூராக நடக்கும். சுபக்கிரகங்களின் மகாதிசை என்றால் சற்று மெதுவாக நடக்கும். ஆனால் முடிவு ஒன்றாகத்தான் இருக்கும். மொத்தத்தில் கரைத்துவிட்டுப் போய்விடும்!

Any planet in the 12th house would make its dasa expense oriented!

அடடே, பணம் மட்டும்தான் கரையுமா?

இல்லை. கை இருப்பை, சேமிப்பைக் காலி செய்துவிட்டுப் போவதோடு, வீடு வாசல் இருப்பவர்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தி அவற்றை விற்க வைத்து, விற்று வரும் பணத்தையும், வைத்துக்கொள்ளவிடாமல் காலி செய்து விட்டுப் போய்விடும்

அதேபோல, அந்தத் தசாநாதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் மிகவும் குறைந்த பரல்களுடன் இருந்தால், ஜாதகனின் ஆரோக்கியத்தைக் கரைத்துப் படுக்க வைத்துவிடும். ஜாதகன் வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருக்க நேரிடும்.

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகளை மட்டும் கூறியுள்ளேன். மற்றவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

இதற்குப் பரிகாரம் உண்டா? பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

33 comments:

Ambal adiyal said...

கரைக்குக் கொடுக்கப்பட்ட விளக்கமும் பின் கிரகனிலைப்படி எப்படியும் காசு கரைந்தேயாகும் என்று உறுதியாக சொன்ன விதமும் மனதில் படிந்து கொண்டது .தொடர வாழ்த்துக்கள் ஐயா .

Ak Ananth said...

எனக்கு 12ல் எந்த கிரகமும் இல்லை என்று மகிழ்ச்சியடையவும் முடியாது. 12ல் இருக்கும் கிரகம் செய்ய வேண்டியதை 12ம் அதிபதியும் அவருடன் சேர்ந்த கிரகமும் செய்வார்களே. No way to escape.

Prasanna Venkatesh said...

வணக்கம் ஐயா,
மிகவும் அருமையான பாடம்...
அனுபவ உண்மை...

Sattur Karthi said...

காலை வணக்கம் எத்தனை விதமான கரைப்பு

8 வதாக உங்கள் வகுப்றை எங்கள் மனம் கரைந்து போவது

பொட்டலம் நன்றாக இருந்தது அய்யா !

வேப்பிலை said...

கறை பற்றி நினைப்பவருக்கும்
கரை என்றதும் நிழலாடுவது நதிக்கரையே

"வைகை கரை காற்றே நில்லு" என
வலம் வந்த பாடல் நினைவே

கரைப்பது எதற்காக என
கரைந்தால் சுகம் தானே வரும் தானே

சுவையை வழக்கம் போல்
சுவைபட கரைத்துவிட்டீர் பார்கார்னிலும்

Kannan said...

Good Morning Sir.

For Dhanur and Muthuna Lagna 5th lord and 12th lord are same. You have already mentioned that they will do both duty. Is there any way we can find out which karahathuvam will dominate? Or both will be equal?

Dallas Kannan

சர்மா said...

வணக்கம்

eswari sekar said...

vanakam sir..

arumuga nainar said...

ஐயா வணக்கம்,

12 வீட்டில் 4 கிரகம் இருந்தால், 4 கிரக மகா திசையிலும் பணம் கரையுமா ?

arul said...

good post

rajanblogs said...

காலை வணக்கம் அய்யா ,
12 ம் வீட்டை பற்றிய அருமையான பதிவிற்கு நன்றிகள் பல பல.

"அந்தத் தசாநாதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் மிகவும் குறைந்த பரல்களுடன் இருந்தால், ஜாதகனின் ஆரோக்கியத்தைக் கரைத்துப் படுக்க வைத்துவிடும். ஜாதகன் வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருக்க நேரிடும்."

லக்ன அதிபதியும்( கும்பம் )12 ம் அதிபதியும் (மகரம் )ஒருவராக இருந்து , சனி திசை ஆரம்பித்திருக்கும் சமயம் என்றால் , சனி புக்தியில் பிற்பகுதி திசையில் மட்டும் மேற்கூறி படி
இருக்குமா அல்லது சனி திசை 18 வருடத்தில் பிற்பகுதி 9 வருடத்தில் இருக்குமா ?

12ம் வீட்டை( சனியின் சுய பரல் 2) 7 ம் அதிபதியாகிய சூரியன் (சுயபரல்கள் ஏழு )6 ம் வீட்டிலிருந்து ,7ம் பார்வையாக பார்கிறது. இதனால் நன்மை உண்டாகுமா?

லக்ன அதிபதி தனது உச்ச வீட்டில்( 9ம் இடம் ) 2 பர‌ல்கள் மட்டுமே கொண்டுள்ளது.
சனி அம்சத்தில் சொந்த வீட்டிலும் (கும்பம் ), ராசியில் உச்ச வீட்டிலும் இருந்தாலும்
பரல்களுக்குத்தான் வலிமை அதிகமா?

தயை கூர்ந்து என் கேள்விக்கு மன்னிக்கவும்.

GOWDA PONNUSAMY said...

ஐய்யா!வனக்கங்கள்.
”கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” என்பது முதுமொழி.அதிலும் 12ம் வீட்டில் நின்ற கிரகம் மட்டும் கரைக்குமா அல்லது 12ம் வீட்டு அதிபதியின் தசாவிலும் கரையுமா?
ஒரு சுபகிரகம் அதுவும் தனகாரகனான குரு பகவான் 12ம் வீட்டில் அமர்ந்து இருந்தாலும் அதே பலன்தானா? உ-ம் கும்ப லக்னத்திற்கு 2/11ம் வீட்டதிபதியான குரு 12ம் வீடான மகரத்தில் அமர்ந்தால்?
நன்றியுடன்
-Peeyes

C Jeevanantham said...

Dear Sir,

பரிகாரம் உண்டா? பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம்!

Good.

Ananthamurugan said...

நல்லவேளை எனது வயித்தில் "புளியை கரைக்கபார்தீர்களே?".நமக்கு 12 ஆம் கிரகத்தின் தசா முடிந்தது.நன்றி.

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Ambal adiyal said...
கரைக்குக் கொடுக்கப்பட்ட விளக்கமும் பின் கிரகனிலைப்படி எப்படியும் காசு கரைந்தேயாகும் என்று உறுதியாக சொன்ன விதமும் மனதில் படிந்து கொண்டது .தொடர வாழ்த்துக்கள் ஐயா//// .

மனம் நிறைந்த பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Ak Ananth said...
எனக்கு 12ல் எந்த கிரகமும் இல்லை என்று மகிழ்ச்சியடையவும் முடியாது. 12ல் இருக்கும் கிரகம் செய்ய வேண்டியதை 12ம் அதிபதியும் அவருடன் சேர்ந்த கிரகமும் செய்வார்களே. No way to escape.////

ஆமாம். அதுதான் இன்னும் கஷ்டம்! உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Prasanna Venkatesh said...
வணக்கம் ஐயா,
மிகவும் அருமையான பாடம்...
அனுபவ உண்மை.../////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Sattur Karthi said...
காலை வணக்கம் எத்தனை விதமான கரைப்பு
8 வதாக உங்கள் வகுப்பறை எங்கள் மனம் கரைந்து போவது
பொட்டலம் நன்றாக இருந்தது அய்யா !////

கரையும் மனம் மகிழ்ச்சியைக் கொடுக்குமே ராஜா! அதை எப்படி 12ல் சேர்ப்பது?

SP.VR. SUBBAIYA said...

////Blogger வேப்பிலை said...
கறை பற்றி நினைப்பவருக்கும்
கரை என்றதும் நிழலாடுவது நதிக்கரையே
"வைகை கரை காற்றே நில்லு" என
வலம் வந்த பாடல் நினைவே
கரைப்பது எதற்காக என
கரைந்தால் சுகம் தானே வரும் தானே
சுவையை வழக்கம் போல்
சுவைபட கரைத்துவிட்டீர் பார்கார்னிலும்/////

நல்லது. சுவையாக இருந்தால் சரிதான்! எழுதிய எனக்கும் அதில் ஒரு திருப்தி! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Kannan said...
Good Morning Sir.
For Dhanur and Muthuna Lagna 5th lord and 12th lord are same. You have already mentioned that they will do both duty. Is there any way we can find out which karahathuvam will dominate? Or both will be equal?
Dallas Kannan/////

சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு உரிய காரகர்கள், பார்வையில் வைத்திருக்கும் கிரகங்கள், (அந்த வீடுகளுக்கு) பாபகர்த்தாரி யோகம் போன்ற அமைப்புக்களை வைத்துப் பலன்கள் வித்தியாசமாக இருக்கும். There is no fixed rule

SP.VR. SUBBAIYA said...

////Blogger சர்மா said...
வணக்கம்////

உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சர்மாஜி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger eswari sekar said...
vanakam sir../////

உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

///Blogger arumuga nainar said...
ஐயா வணக்கம்,
12 வீட்டில் 4 கிரகம் இருந்தால், 4 கிரக மகா திசையிலும் பணம் கரையுமா ?/////

அது கிரக யுத்தக் கணக்கில் வருமே சுவாமி! அங்கே யார் வெற்றிக்கொடியுடன் இருக்கிறாரோ அவரிடம் (அவருடைய மகா திசையில்) மட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

SP.VR. SUBBAIYA said...

////Blogger arul said...
good post/////

நல்லது. நன்றி நண்பரே1

SP.VR. SUBBAIYA said...

/////Blogger rajanblogs said...
காலை வணக்கம் அய்யா ,
12 ம் வீட்டை பற்றிய அருமையான பதிவிற்கு நன்றிகள் பல பல.
"அந்தத் தசாநாதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் மிகவும் குறைந்த பரல்களுடன் இருந்தால், ஜாதகனின் ஆரோக்கியத்தைக் கரைத்துப் படுக்க வைத்துவிடும். ஜாதகன் வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருக்க நேரிடும்."
லக்ன அதிபதியும்( கும்பம் )12 ம் அதிபதியும் (மகரம் )ஒருவராக இருந்து , சனி திசை ஆரம்பித்திருக்கும் சமயம் என்றால் , சனி புக்தியில் பிற்பகுதி திசையில் மட்டும் மேற்கூறி படி இருக்குமா அல்லது சனி திசை 18 வருடத்தில் பிற்பகுதி 9 வருடத்தில் இருக்குமா?
12ம் வீட்டை( சனியின் சுய பரல் 2) 7 ம் அதிபதியாகிய சூரியன் (சுயபரல்கள் ஏழு )6 ம் வீட்டிலிருந்து ,7ம் பார்வையாக பார்கிறது. இதனால் நன்மை உண்டாகுமா?
லக்ன அதிபதி தனது உச்ச வீட்டில்( 9ம் இடம் ) 2 பர‌ல்கள் மட்டுமே கொண்டுள்ளது.
சனி அம்சத்தில் சொந்த வீட்டிலும் (கும்பம் ), ராசியில் உச்ச வீட்டிலும் இருந்தாலும்
பரல்களுக்குத்தான் வலிமை அதிகமா?
தயை கூர்ந்து என் கேள்விக்கு மன்னிக்கவும்./////

சொந்த ஜாதகத்தை வைத்துக் கேட்கப்படும் இதுபோன்ற கேள்விகளுக்கு, முழு ஜாதகத்தையும் சோப்புப் போட்டு அலசாமல் பதில் சொல்வது தவறாகிவிடும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger GOWDA PONNUSAMY said...
ஐய்யா!வணக்கங்கள்.
”கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” என்பது முதுமொழி.அதிலும் 12ம் வீட்டில் நின்ற கிரகம் மட்டும் கரைக்குமா அல்லது 12ம் வீட்டு அதிபதியின் தசாவிலும் கரையுமா?
ஒரு சுபகிரகம் அதுவும் தனகாரகனான குரு பகவான் 12ம் வீட்டில் அமர்ந்து இருந்தாலும் அதே பலன்தானா? உ-ம் கும்ப லக்னத்திற்கு 2/11ம் வீட்டதிபதியான குரு 12ம் வீடான மகரத்தில் அமர்ந்தால்?
நன்றியுடன்
-Peeyes/////

குடியிருப்பவரைப் பத்தித்தான் பேச்சு. வீட்டுக்காரரை ஏன் வம்பிற்கு இழுக்கிறீர்கள்?

SP.VR. SUBBAIYA said...

////Blogger C Jeevanantham said...
Dear Sir,
பரிகாரம் உண்டா? பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம்!
Good./////

நல்லது. நன்றி நண்பரே1

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Ananthamurugan said...
நல்லவேளை எனது வயித்தில் "புளியை கரைக்கபார்தீர்களே?".நமக்கு 12 ஆம் கிரகத்தின் தசா முடிந்தது.நன்றி./////

எனக்கும் மகிழ்ச்சிதான்!

Sattur Karthi said...

காகம் கரைவதும் போன்று, மனம் கரைவது பற்றி கூறினேன் -
மன்னிக்கவும் நானும் 12ல் சேர்க்கவீில்லை

சர்மா said...


12ம் வீட்டில் மறைவான எட்டாம் அதிபர் புதன் 1//12 குரிய சனி பகவான் எட்டாம் வீட்டில் மறைவு மற்றும் பரிவர்த்தனையில் இருநதாலும் புதன்மகாதசையில் படத்துவாரா ?

Kannan said...

குடியிருப்பவரைப் பத்தித்தான் பேச்சு. வீட்டுக்காரரை ஏன் வம்பிற்கு இழுக்கிறீர்கள்?
IF that is the case, It does not happen during the 12 lord Dasa? Only the dasa of the planet stay there?

நல்லவேளை எனது வயித்தில் "புளியை கரைக்கபார்தீர்களே?".நமக்கு 12 ஆம் கிரகத்தின் தசா முடிந்தது.நன்றி./////

எனக்கும் மகிழ்ச்சிதான்!
It can happen during the planet's Budhi of other dasas, right?

Kalai Rajan said...

ayya
12th house lesson is very good

karthik kumar said...

ayya enakku 12 house il 30 paral ullathu...so virayam epdi irukkum sir