மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

13.5.13

Astrology.Popcorn Post அவள் ஏன் பறந்து போனாள்? அல்லது பிரிந்து போனாள்?

 Astrology.Popcorn Post அவள் ஏன் பறந்து போனாள்? அல்லது பிரிந்து போனாள்?

Popcorn Post.45

வாழ்க்கை வாழ்வதற்கே. திருமணம் மகிழ்ச்சிக்கே! அவதிக்கல்ல. சில திருமணங்கள் அவதியில் முடிந்துவிடுகின்றன. இப்போதெல்லாம் திருமணம் முறிந்து போய், தமபதிகள் குடும்பநல நீதி மன்றத்தை நாடி விவாகரத்துப் பெறுவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கேட்பதற்கே வருத்தமாக இருக்கும். நமக்கு இல்லாவிட்டாலும், சம்பந்தப் பட்டவர்களின் பெற்றோர்களுக்கு, உடன் பிறப்புக்களுக்கு இருக்குமா? இருக்காதா?

அதற்கு மன ரீதியாகப் பல காரணங்கள் இருந்தாலும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பில்லாமல் இருப்பதும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததுமே முக்கிய காரணமாகும். காதல் திருமணங்கள்கூட பிரிவில் முடிந்து விடுவதைப் பார்க்கிறோம். அவர்களிடம் முன்பிருந்த அன்பு (Love) திருமணத்திற்குப் பிறகு எங்கே போய் விட்டது?

எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம் கிரகக்கோளாறுகள்தான்!

திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரத்தை வைத்து வெறும் பத்துப் பொருத்தங்களைப் பார்ப்பதுடன் ஏழாம் வீட்டின் அமைப்பையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்
-----------------------------------------------------
ஏழாம் வீட்டுக்காரன் (நன்றாகக் கவனிக்கவும் ஏழாம் வீட்டுக்காரன்) பகை வீட்டில் போய் அமர்ந்திருந்தாலும், அல்லது நீசமடைந்திருந்தாலும், அல்லது தீயகிரகத்தின் நேரடிப் பார்வையில் இருந்தாலும் அல்லது அஸ்தமனம் பெற்றிருந்தாலும் தம்பதிகளுக்குள் பிரிவு ஏற்படும்!

அதுபோல எழாம் வீட்டுக்காரன், 6ஆம் இடம், 8ஆம் இடம், 12ஆம் இடம் ஆகிய இடங்களில் அமர்ந்திருப்பதோடு கெட்டுப்போய் இருந்தாலும் தமபதிகளுக்குள் பிரிவு ஏற்படும். இங்கே கெட்டுப்போவது என்பது தீய கிரகத்துடன் சேர்க்கை பெற்றிருப்பது என்று வைத்துக்கொள்ளுங்கள்

ஏழாம் வீட்டில் தீய கிரகம் அமர்ந்திருந்தாலும் அல்லது ஏழாம் வீட்டைத் தீய கிரகம் பார்த்தாலும் திருமணம் பிரிவில்தான் முடியும்!

இருவருக்குள் ஒருவருக்கு புனர்பூ தோஷம் இருந்தாலும் பிரிவில்தான் முடியும்

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகளை மட்டும் கூறியுள்ளேன். மற்றவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

இது பாப்கார்ன் பொட்டலம். சுவை கருதி இதன் அளவு அவ்வளவுதான்!!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

31 comments:

Kannan said...

Thanks Sir.
Can we say if planet is in a "Pagai" sthanam then its benefits will only be reduced. It will not be considered as "bad" or "Kettu poivittathu".

Kannan said...

Respected Sir,
I was not sure my old post is published. So tried few times. Please forgive me if there many posts with same content.

kmr.krishnan said...

தேவுடா!தேவுடா! 'ரிபீட்டு'தேவுடா! இருந்தாலும் மீள் பார்வையும் சுவையாக உள்ளது.நன்றி ஐயா!

புனர்பூ தோஷம் என்று வாத்தியார் சொல்லியுள்ளாரே, அது என்ன?

சனைச்சரனும்(சனி பகவான்), திங்களும்(சந்திரன்) சம்பந்தப்பட்டிருந்தால் புனர்பூதோஷம். அவர்கள் இருவரும் கூட்டணி போட்டு ஒரே வீட்டில் இருப்பது,
இருவரும் வெவ்வேறு வீடுகளில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளுதல், இருவரும் பாத சாரத்தில் ஒரே நட்சத்திரத்தில் நிற்பது ஆகியவை புனர்பூ தோஷம். புதியவர்கள் அறிக. சந்திரனுக்கு குரு பார்வை கிடைத்தால்
திருமணத்தடை அவ்வளவாக இருக்காது.

Kannan said...

அன்புள்ளம் கொண்ட ஐயா
வணக்கம்
வாழ்த்த வயதில்லை ஆதலால் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

உஙகளின் இந்த அறிய பணி தொடற இறைவணை பிரார்திக்கின்றேன்

அன்புடன்
உங்கள் மாணவன்
கண்ணன்♥க சென்னை 17

Sattur Karthi said...

காலை வணக்கம் ! ஏழாம் வீட்டுக்காரன் பகை வீட்டில் போய் அமர்ந்து, ஏழாம் வீட்டில் தீய கிரகம்அமர்ந்து,ஏழாம் வீட்டை தீயகிரகத்தின் நேரடிப்பார்வை மற்றும் சுபர்களின் (புதன், சுக்கிரன்) நேரடிப்பார்வை இருந்தால் - பலன் எப்படி ஐயா இருக்கும் ?

sundari said...

Good morning sir,
present sir.

துரை செல்வராஜூ said...

அனைவருக்கும் அக்ஷய திரிதியை நல்வாழ்த்துக்கள்!... மங்கலகரமான நன்னாளில் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் திருவருள் எல்லாருக்கும் கிடைக்கட்டும்!

DevikaArul said...

Dear sir , Would like to add in If the seventh house is viewed by Saturn ,that is , if Saturn is in lagna , it tends to stabilize the marriage - even though there might not be lot of affection , there will be mutual respect for each other in the relationship - but no separation. Saturn is a planet who tends to stabilize things - no improvement or no deterioration.

eswari sekar said...

vanakam sir.

சர்மா said...

வணக்கம் ஐயா,
பாப்கார்ன் பதிவு நன்று

சர்மா said...

ஜோதிடர் உறுதியாக அனுமதித்த பின் திருமணமாகி ப்பிரிந்தார்களாயின்,ஜோதிடர் மீது தவறா அல்லது விதியின் பிடியா தயவு செய்து விளக்கவும்.

GOWDA PONNUSAMY said...

பதிவிற்க்கு நன்றிகள் ஐய்யா!.
ஏழாம் வீட்டதிபதி கெட்டிருந்தாலும்,தீய கிரகத்தின் பார்வை பெற்றிருந்தாலும் பிரிவு தான் என கொண்டாலும் பல ஜாதகங்களில் துன்பங்கள் நிறைந்திருந்தாலும் பிரிவு ஏற்ப்படவில்லை, எனக்குத் தெரிந்த சில குடும்பங்களில்.
நன்றியுடன்,
-peeyes

பெரியவாதாசன் said...

ஏழாம் அதிபதி அஸ்தமனம் அடைந்தாலும் கூட குரு இருந்தாலோ அல்லது குரு பார்வை இருந்தாலோ தீமைகள் விலகி விடும் அல்லவா? அதே போல, தீய கிரகத்தின் பார்வை ஏழாம் வீட்டு அதிபதி மேலே இருப்பினும், ஏழாம் அதிபன் அமர்ந்த வீட்டின் அதிபதியாக அந்த தீய கிரகம் இருப்பின் பாதகம் இல்லை என தாங்கள் கூறியதாக நினைவு. தெளிவிக்கவும்.

பாப்கார்ன் மீது மிளகாய்ப்பொடி மற்றும் உப்பு தூவும் முயற்சியில், சோடா புட்டி மாணவன்,

காலகாலதாசன்

பெரியவாதாசன் said...

அந்தக்காலத்தில் பிரிவு எனபது நினைத்துக்கூட பார்க்க இயலாத ஒரு விஷயமாக இருந்தது. இப்போது தான் காலம் கெட்டுப்போய் இப்படி அலைகிறார்கள். அந்தக்காலத்தில், இந்த மாதிரியான அமைப்புக்கு என்ன பலன் இருந்திருக்கும்?

முகத்தை தூக்கிக்கொண்டு நாட்கணக்கில் பேசாமல் ஊடி இருந்திருப்பார்களோ? ஏனெனில் பிரிய முடியாதே?

paulsam said...

பாப்கார்ன் நன்றாக உள்ளது.அய்யா கடக லக்னத்திற்கு 6 ம் வீட்டுக்காரனுடன்(குரு 6,9), 7 ம் வீட்டதிபதி(சனி 7,8) 3 ல் இருந்தால் என்ன பலன் அய்யா?.ஏனென்றால் குரு 5 ம் பார்வையாக 7 ம் இடத்தை பார்ப்பதனால் கேட்கிறேன்.

kmr.krishnan said...

அந்தக் காலத்தில் பெண்களால் பிரிவு ஏற்படவில்லை. ஆண்கள் முதல் மனைவிக்குத் தெரியாமல் இரணடாம் திருமணம் செய்துகொள்வது,முதல் மனைவியைத் தள்ளிவைப்பது, ஆண் குழந்தை பெற்றுத்தரவில்லை என்று மனைவியை ஒதுக்குவது,சேர்ப்பு, தாசி வீடு என்று அட்டகாசம் செய்தார்கள்.
ஜாதக அமைப்பு எப்படி இருந்திருக்கும்?

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Kannan said...
Thanks Sir.
Can we say if planet is in a "Pagai" sthanam then its benefits will only be reduced. It will not be considered as "bad" or "Kettu poivittathu"./////

சொல்லலாம்! சொல்லலாம்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Kannan said...
Respected Sir,
I was not sure my old post is published. So tried few times. Please forgive me if there many posts with same content.////

நல்லது. நன்றி நண்பரே1

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
தேவுடா!தேவுடா! 'ரிபீட்டு'தேவுடா! இருந்தாலும் மீள் பார்வையும் சுவையாக உள்ளது.நன்றி ஐயா!
புனர்பூ தோஷம் என்று வாத்தியார் சொல்லியுள்ளாரே, அது என்ன?
சனைச்சரனும்(சனி பகவான்), திங்களும்(சந்திரன்) சம்பந்தப்பட்டிருந்தால் புனர்பூதோஷம். அவர்கள் இருவரும் கூட்டணி போட்டு ஒரே வீட்டில் இருப்பது,
இருவரும் வெவ்வேறு வீடுகளில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளுதல், இருவரும் பாத சாரத்தில் ஒரே நட்சத்திரத்தில் நிற்பது ஆகியவை புனர்பூ தோஷம். புதியவர்கள் அறிக. சந்திரனுக்கு குரு பார்வை கிடைத்தால்
திருமணத்தடை அவ்வளவாக இருக்காது./////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Kannan said...
அன்புள்ளம் கொண்ட ஐயா
வணக்கம்
வாழ்த்த வயதில்லை ஆதலால் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
உஙகளின் இந்த அறிய பணி தொடர இறைவணை பிரார்திக்கின்றேன்
அன்புடன்
உங்கள் மாணவன்
கண்ணன்♥க சென்னை 17////

நல்லது. உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி நண்பரே1

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Sattur Karthi said...
காலை வணக்கம் ! ஏழாம் வீட்டுக்காரன் பகை வீட்டில் போய் அமர்ந்து, ஏழாம் வீட்டில் தீய கிரகம் அமர்ந்து,ஏழாம் வீட்டை தீயகிரகத்தின் நேரடிப்பார்வை மற்றும் சுபர்களின் (புதன், சுக்கிரன்) நேரடிப்பார்வை இருந்தால் - பலன் எப்படி ஐயா இருக்கும் ?/////

உதிரியான கிரக நிலைகளும் உங்கள் கேள்விகளும்
உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும். நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்! எனக்கு தற்சமயம் அதற்கு நேரமில்லை.

SP.VR. SUBBAIYA said...

//////Blogger sundari said...
Good morning sir,
present sir./////

உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger துரை செல்வராஜூ said...
அனைவருக்கும் அக்ஷய திரிதியை நல்வாழ்த்துக்கள்!... மங்கலகரமான நன்னாளில் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் திருவருள் எல்லாருக்கும் கிடைக்கட்டும்!/////

உங்களின் அன்பிற்கும், பொது நோக்கோடு கூடிய வாழ்த்திற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger DevikaArul said...
Dear sir , Would like to add in If the seventh house is viewed by Saturn ,that is , if Saturn is in lagna , it tends to stabilize the marriage - even though there might not be lot of affection , there will be mutual respect for each other in the relationship - but no separation. Saturn is a planet who tends to stabilize things - no improvement or no deterioration./////

அது எல்லா லக்கினங்களுக்கும் பொருந்தாது!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger eswari sekar said...
vanakam sir.////

உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger சர்மா said...
வணக்கம் ஐயா,
பாப்கார்ன் பதிவு நன்று/////

நல்லது. நன்றி!

SP.VR. SUBBAIYA said...

Blogger சர்மா said...
ஜோதிடர் உறுதியாக அனுமதித்த பின் திருமணமாகி ப்பிரிந்தார்களாயின்,ஜோதிடர் மீது தவறா அல்லது விதியின் பிடியா தயவு செய்து விளக்கவும்.

விதியின் பிடிதான்.ஜோதிடரையும் சேர்த்து அது சாய்த்துவிடும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger GOWDA PONNUSAMY said...
பதிவிற்க்கு நன்றிகள் ஐய்யா!.
ஏழாம் வீட்டதிபதி கெட்டிருந்தாலும்,தீய கிரகத்தின் பார்வை பெற்றிருந்தாலும் பிரிவு தான் என கொண்டாலும் பல ஜாதகங்களில் துன்பங்கள் நிறைந்திருந்தாலும் பிரிவு ஏற்ப்படவில்லை, எனக்குத் தெரிந்த சில குடும்பங்களில்.
நன்றியுடன்,
-peeyes//////

சகிப்புத்தன்மை இருக்கும்போது, அந்த நிலைமை உண்டாகும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger பெரியவாதாசன் said...
ஏழாம் அதிபதி அஸ்தமனம் அடைந்தாலும் கூட குரு இருந்தாலோ அல்லது குரு பார்வை இருந்தாலோ தீமைகள் விலகி விடும் அல்லவா? அதே போல, தீய கிரகத்தின் பார்வை ஏழாம் வீட்டு அதிபதி மேலே இருப்பினும், ஏழாம் அதிபன் அமர்ந்த வீட்டின் அதிபதியாக அந்த தீய கிரகம் இருப்பின் பாதகம் இல்லை என தாங்கள் கூறியதாக நினைவு. தெளிவிக்கவும்.
பாப்கார்ன் மீது மிளகாய்ப்பொடி மற்றும் உப்பு தூவும் முயற்சியில், சோடா புட்டி மாணவன்,
காலகாலதாசன்////

பெரியவர்தாசன் என்றால் எந்தப் பெரியவர்? காஞ்சிப்பெரியவரா?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger பெரியவாதாசன் said...
அந்தக்காலத்தில் பிரிவு எனபது நினைத்துக்கூட பார்க்க இயலாத ஒரு விஷயமாக இருந்தது. இப்போது தான் காலம் கெட்டுப்போய் இப்படி அலைகிறார்கள். அந்தக்காலத்தில், இந்த மாதிரியான அமைப்புக்கு என்ன பலன் இருந்திருக்கும்?
முகத்தை தூக்கிக்கொண்டு நாட்கணக்கில் பேசாமல் ஊடி இருந்திருப்பார்களோ? ஏனெனில் பிரிய முடியாதே?////

அந்தக் காலத்தில் இருந்த சமூக அமைப்புக்கள், கட்டுப்பாடுகள் இப்போது எங்கே இருக்கிறது?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger paulsam said...
பாப்கார்ன் நன்றாக உள்ளது.அய்யா கடக லக்னத்திற்கு 6 ம் வீட்டுக்காரனுடன்(குரு 6,9), 7 ம் வீட்டதிபதி(சனி 7,8) 3 ல் இருந்தால் என்ன பலன் அய்யா?.ஏனென்றால் குரு 5 ம் பார்வையாக 7 ம் இடத்தை பார்ப்பதனால் கேட்கிறேன்./////